Wednesday, 18 November 2020

அதிக நேரம் கணினியில் பணி செய்பவர்கள் முதுகு வலியில் இருந்து தப்பிக்க சில வழிகள்!!

 



இன்றைய இளைய தலைமுறையினர் முதல் வயதான முதியவர்கள் வரை இன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியால் அவதிப் படுபவர்கள் ஏராளம். இந்த இடுப்பு வலிக்கு அவர்கள் செய்யும் வேலை கூட ஒரு காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி உண்டாகிறது. அதிலும் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்களுக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப் படுவதால் அவர்கள் தொடர்ச்சியான இடுப்பு வலியால் அவதிப் படுகிறார்கள். முறையான உடற்பயிற்சி இல்லாத காரணத்தாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது.


👉🏻இதற்கு தீர்வு என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.


நீங்கள் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்கள் என்றால்,

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் அடிக்கடி இருக்கையை விட்டு எழுந்து செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட கணினி மேஜைகளை பயன்படுத்த வேண்டும்.கணினி மேஜையின் உயரத்தை ஏற்றி இறக்கி பயன்படுத்துவது போல் வடிவமைத்துக் கொண்டால் நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் உயரத்திற்கு ஏற்ப மேஜையின் உயரத்தை மாற்றிக் கொள்ள எளிதாக இருக்கும்.  தினமும் வேலை முடிந்ததும் உடற் பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். 


கணினி முன் அமர்ந்து பணியாற்றும் போது நாற்காலியில் நன்றாக நிமிர்ந்த நிலையில் அமர்ந்து பணியாற்ற வேண்டும். 

தொடர்ந்து ஒரே மாதிரி அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்பு பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு முதுகுத் தண்டின் ஜவ்வில் தேய்மானம் ஏற்படுவதாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது.


நீங்கள் ஹை ஹீல்ஸ் அணியும் பழக்கம் உள்ளவர்கள் எனில் அதனால் கூட உங்களுக்கு இடுப்பு வலி முதுகு வலி ஏற்படலாம். உயரமான குதிகால் கொண்ட  செருப்புகளை அணிந்து நீண்ட நேரம் நடக்கும் பொழுது உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்துவதால் முதுகு வலி, இடுப்பு வலி ஏற்படுகிறது. அதனால் உயரமான குதிகால் கொண்ட செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.


  • 👉இதற்கான எளிய தீர்வுகள் என்ன?
  • ✍️கொள்ளை ரசம் வைத்துக் குடித்தால் இடுப்பு வலி குணமாகும். கொள்ளு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.
  • ✍️மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் வயிற்று வலி நீங்க வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
  • ✍️வெள்ளைப் பூண்டு மற்றும் கருப்பட்டி இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.
  • ✍️மிளகை வறுத்து அதில் எள் எண்ணெய் கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.
  • ✍️உணவில் உளுந்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் இடுப்பு வலி சரியாகும். உளுந்தை களி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.
  • ✍️தளுதாளி இலையுடன் பூண்டு நல்லெண்ணெய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.

No comments:

Post a Comment