Friday, 17 August 2007

What is Drawing and Types...

The term drawing is applied to works that vary greatly in technique. It has been understood in different ways at different times and is difficult to define. During the Renaissance the term 'disegno' implied drawing both as a technique to be distinguished from coloring and also as the creative idea made visible in the preliminary sketch.


The Shorter Oxford Dictionary defines drawing as:
'the formation of a line by drawing some tracing instrument from point to point of a surface; representation by lines; delineation as distinguished from painting...the arrangement of lines which determine form.'
Despite this insistence on the formation of line and the implied lack of color  few would deny that a work formed by dots or shading or wholly in line but in a range of colors is a drawing.
The following drawings, made in different ways, have been selected to help define and also to stretch the boundaries of what drawing is. They vary in the medium used, which includes metal-point, graphite, charcoal, ink, and chalk. Some fulfill the strict dictionary definition of drawing, others do not.
Thus, a drawing can comprise of a sketch, plan, design, graphic representation, etc. with the help of pens, pencils, or crayons, depending upon its nature and purpose. Given here are different kinds of drawings that one can take up and excel in. Check them out in the lines herein.
Different Kinds Of Drawings..
Life Drawing
Drawings that result from direct or real observations are life drawings. Life drawing, also known as still-life drawing or figure drawing, portrays all the expressions that are viewed by the artist and captured in the picture. The human figure forms one of the most enduring themes in life drawing that is applied to portraiture, sculpture, medical illustration, cartooning and comic book illustration, and other fields.
Emotive Drawing
Similar to painting, emotive drawing emphasizes on exploring and expressing different emotions, feelings, moods, self, time, etc. These are generally depicted in the form of a personality.
Sketching
Sketching is a kind of drawing that puts forward the instant thoughts of an artist. Thus, it is a rough freehand and loose drawing which is not considered to be a finished piece of work. Sketching, usually, results out of visualizing and immediately capturing them onto paper.
Analytic Drawing
Sketches that are created for clear understanding and representation of observations made by an artist are called analytic drawings. In simple words, analytic drawing is undertaken to divide observations into small parts for a better perspective.
Perspective Drawing
Perspective drawing is used by artists to create three-dimensional images on a two-dimensional picture plane, such as paper. It represents space, distance, volume, light, surface planes, and scale, all viewed from a particular eye-level.
Diagrammatic Drawing
When concepts and ideas are explored and investigated, these are documented on paper through diagrammatic drawing. Diagrams are created to depict adjacency and happenstance that are likely to take place in the immediate future. Thus, diagrammatic drawings serve as active design process for the instant ideas so conceived.
Illustration Drawing
Drawings that are created to represent the lay out of a particular document are illustration drawings. They include all the basic details of the project so concerned clearly stating its purpose, style, size, color, character, effect, and others.

Geometric Drawing
Geometric drawing is used, particularly, in construction fields that demand specific dimensions. Measured scales, true sides, sections, and various other descriptive views are represented through geometric drawing. 

Engineering Drawing
This drawings are typically used as visual tools in the creation of homes, bridges, and other buildings for Cilvil related works. While these drawings can be quite straightforward to individuals who are skilled in the each discipline field of engineering or architecture, they can be quite difficult to interpret for laypeople. Knowing how to read engineering drawings will help provide you with a better idea of your discipline field.
Prepared by M.Ajmal Khan.

Thursday, 9 August 2007

ரமளான் நோன்பு உடலை சுத்தபடுத்துகிறதா ?

ரமலான் மாதத்தை அற்புதமாக்கிய இறைவன் பாவமன்னிப்பை மட்டும் வழங்க வில்லை மருத்துவ ரீதியாகவும் உடலுக்கு அற்புத மருந்தாகும்

ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான இப்புனித ரமலான் மாதத்தில் ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களாக வீண்விவாதம், தேவையற்ற சச்சரவுகள் இவைகளை விட்டும் தவிர்ந்தவர்களாக இறைவழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தி இறையருளை பெறவேண்டும் என்பது தான் நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்என வானவர் தலைவர் ஜீப்ரயீல் (அலை) அவர்களே துஆ, செய்து நபி (ஸல்) அவர்களும் ஆமீன்என்று கூறியிருக்கிறார்கள் என்றால் இந்த மாதத்தின் சிறப்பையும் இந்த மாதம் நமக்கு பாவமன்னிப்புகள் வழங்கப்படுகின்ற ஒரு அற்புத மாதமாக இருக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி) ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன (புகாரி) லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது (புகாரி)


நோன்பை முறிக்கக் கூடியவைகள்

உடலுறவு கொள்ளுதல், சுய விருப்பத்துடன் விந்து வெளியாகுதல், உண்பதும், பருகுவதும், நோன்பாளியின் உடலில் இரத்தம் செலுத்துவது, ஊட்டச் சத்துக்கான ஊசி போட்டுக் கொள்ளுதல், இரத்தம் குத்தி வெளியாக்குதல், வேண்டுமென்றே வாந்தி எடுப்பது, மாதவிடாய் அல்லது பிரசவத்தின் உதிரம் வெளிப்படுதல் ஆகியவைகளாகும்.


நோன்பு நோற்காவிடில்


ரமளான் நோன்பு கடமை என்பதன் மீது முஸ்லிம்கள் அனைவரும் உறுதியான, ஏகோபித்த கருத்து கொண்டுள்ளார்கள்! அது இஸ்லாமிய மார்க்க நடைமுறைகளில் தெளிவாக அறியப்பட்டள்ள விஷயமாகவும் உள்ளது. எனவே, யார் இதன் கடமையை மறுக்கிறாரோ, அவர் நிராகரிப்பவராகி விடுகின்றார். அதிலிருந்து பாவமன்னிப்புக் கோரி திருந்தி விடுமாறு அவரிடம் சொல்லப்பட வேண்டும். அப்படிப் பாவமன்னிப்புத் தேடி அதன் கடமையை ஒப்புக் கொண்டாரெனில் சரி! இல்லையெனில், இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றவர் - நம்பிக்கை கொண்ட பின் நிராகரித்தவர் எனும் முறையில் அவரைக் கொன்று விட வேண்டும். பிறகு அவரைக் குளிப்பாட்டவோ கஃபன் - துணி அணிவித்து மைய்யித்து தொழுகை நடத்தவோ கூடாது! இறைவனிடம் அருள் வேண்டி அவருக்காகப் பிரார்த்தனையும் செய்யக் கூடாது! முஸ்லிம்களின் கப்றுஸ்தானில் அவரை அடக்கம் செய்யவும் கூடாது! காரணம்! அவரது துர்வாடையினால் மக்களுக்குத் துன்பம் ஏற்படக் கூடாது. அவரைப் பார்த்து அவருடைய குடும்பத்தினர் சிரமப்படக் கூடாது என்பதற்காக!  ஒருவர் இயலாமையின் காரணமாக ரமளான் மாதம் நோன்பு நோற்காமல் இருந்தால், அந்த மாத நோன்பு 29 எனில், 29 ஆகவும், 30 எனில் 30 ஆகவும் கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டும். மரணம் வரை இயலாமை நீடித்தால் அதனால் குற்றமில்லை.

 நோன்பு திறத்தல்

  • நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
  • நோன்பு திறக்கும் நேரம்:'பின்னர் இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187) '....நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்' என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக் காட்டி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃப் (ரலி), நூல்: புகாரி 1956) 'பகல் பின்னோக்கிச் சென்று, இரவு முன்னோக்கி வந்து சூரியனும் மறைந்து விட்டால் நீ நோன்பு திறப்பாய்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி), திர்மிதி 634) சூரியன் மறைந்து இரவின் இருள் படர ஆரம்பமாவது தான் நோன்பு திறக்கும் நேரமாகும். அதாவது மஃரிப் நேரத்தின் ஆரம்பம் தான் நோன்பு திறக்கும் நேரமாகும்.
  • விரைவாக நோன்பு திறப்பது: 'விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), புகாரி 1957, முஸ்லிம், திர்மிதி 635, இப்னுமாஜா 1697) மற்றொரு அறிவிப்பில், 'யூதர்கள் தான் நோன்பு திறப்பதை தாமதிப்பார்கள்' என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா 1698) நோன்பு திறப்பதற்கான நேரத்தை அடைந்து விட்டால் உடனே நோன்பை திறந்து விட வேண்டும், தாமதிக்கக் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும்.
  • நோன்பு திறக்கும் உணவு: 'உங்களில் ஒருவர் நோன்பு திறக்கும் போது பேரீத்தம் பழத்தால் நோன்பு திறக்கட்டும்! அது கிடைக்கா விட்டால் தண்ணீரால் நோன்பு திறக்கட்டும்! ஏனெனில் அது தூய்மையானதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி), நூற்கள்: திர்மிதி 631, இப்னுமாஜா 1699)
  • துஆ ஏற்றக்கொள்ளப்படும் நேரம்: 'மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. நோன்பாளி தனது நோன்பை திறக்கும் போது, நேர்மையான அரசர், பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள். ...' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668) நோன்பாளி தனது நோன்பை திறக்குமுன் செய்யப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்பது இதன் விளக்கம்.
  • நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ: நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது, ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ  'தஹபள் ளமவு, வப்தல்லதில் உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்' என்று ஓதுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூது 2350) பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும். 'அல்லாஹும்ம லக சும்து....' என்ற துஆ முஆத் பின் ஸஹ்ரா என்பவரால் அறிவிக்கப்பட்டு அபூதாவூதில் இடம் பெற்றிருக்கிறது. இது முர்ஸல் வகையைச் சேர்ந்ததாகும். இதே துஆ தப்ரானி, தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இவை பலவீனமான ஹதீஸ்களாகும். அதனால் இந்த துஆவை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • நோன்பு திறக்க உதவுவதன் சிறப்பு: 'யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி), நூல்: திர்மிதி 735) நோன்பிற்கான நன்மையை இரட்டிப்பாக்கிக் கொள்ள மற்றவரை நோன்பு திறக்கச் செய்வது ஓர் அரிய வாய்ப்பாகும்.
  • நோன்பு திறத்தலின் போது ஏற்படும் மகிழ்ச்சி: நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி) நோன்பு திறத்தலின் போது நபி (ஸல்) அவர்களின் நடைமுறையைப் பேணி நடந்து கொள்வோமாக


நாம் கடமையாக கடைபிடிக்கும் நோன்பு இன்று மருத்துவ ரீதியாக எப்படி எல்லாம் நம் உடலுக்கு நன்மை தரக்கூடியவை என்பதை பாருங்கள்


  1. நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
  2. நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.
  3. இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.
  4. காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.
  5. இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.
  6. ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
  7. குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும். ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.
  8. பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.
  9. நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.
  10. நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.
  11. எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.
  12. ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.
  13. இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.
  14. மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.

Wednesday, 8 August 2007

நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியுமா?

"ஒரு மூமின் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு ரக்அத் தொழுது அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு... சூராவை 25 தடவை ஓதிவிட்டு, பின்பு ஸலாம் கொடுத்து விட்டு 'ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி' என்று ஆயிரம் தடவை கூறினால் அன்றைய இரவில் கனவில் என்னை நிச்சயமாக காண்பான். மறுவாரம் வெள்ளி வரும் முன் கனவில் என்னைக் காண்பான். என்னை ஒரு வாரம் பார்த்துவிட்டால் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்."

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஒரு செய்தியை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தனது 'அல்மவ்ளூஆத்' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரென்றே அறியப்படாதவர்கள் அறிமுகமற்ற பலர் இடம் பெறுவதிலிருந்தே இது பலவீனமான செய்தி தான் என்பது புலனாகும்.

நபி(ஸல்) அவர்களை கனவில் நாம் காண முடியுமா? காண முடியும் என்பதற்கு சிலர் கீழ்க்கண்ட ஹதீஸ்களை ஆதாரமாக வைக்கின்றனர்.

"யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

யார் என்னைக் காண்கிறானோ அவன் உண்மையையே கண்டான் என்று நபி(ஸல்) கூறியதாக அபூகதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத்.

இந்த ஹதீஸ்கள் மேலெழுந்த வாயாகப் பார்க்கும் போது நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியும் என்று தெரிந்தாலும், உண்மையில் நபி(ஸல்) அவர்களை கனவில் காண வேண்டுமானால் அவர்கள் உயிருடன் இருக்கும் போது கனவில் காண்பவர் நபி(ஸல்) அவர்களைத் தான் கண்டு கொண்டார் என்றும் அல்லது இதுவரை நேரில் காணாதவர், கனவின் மூலம் கண்டால் இனி நேரிலும் காண்பார் என்றும் தான் முடிவுக்கு வரவேண்டும். "இந்த முடிவு தான் மேற்கொள்ள வேண்டும்" என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

'யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் (நேரிலும்) விழிப்பிலும் என்னைக் காண்பார். ஏனென்றால் ஷைத்தான் என் வடிவத்தில் வரமாட்டான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

கனவில் கண்டால் நேரிலும் காண்பார் என்றால், நேரில் காண்பது அவர்கள் உயிருடன் உள்ள காலத்திலேயே பொருந்தும். தெளிவான ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மூலம் அவர்கள் உயிருடன் வசிக்காத காலத்தில் உள்ள நம்மைப் போன்றவர்களால் நபி(ஸல்) அவர்களைக் காண முடியாது என்பது தெளிவாகிறது.

நன்றி: ஏ1.ரியலிசம்.காம்
தொகுப்பு ; மு.அஜ்மல் கான்.

Discover Islam Blog for your Information......

Islam Promote Peace

Dear All,
               This is  my  Blog. Please spent  some time for me.

Allah means by literal definition, 'The only absolute that which is worshiped'.
Prophet Muhammad (Peace Be Upon Him)
as a mercy to mankind, his mission was for the whole world. He was sent to perfect morals and character.
Islam by definition means surrender and submission only to the one true creator.
A Muslim by definition means one who surrenders and submits to the laws of God. Allah says about
Ibrahim (Abraham) Peace Be Upon Him, "When his Lord said to him, "Surrender" (be a Muslim), submitted he, 'I surrendered to Him (as a Muslim), Who is the Lord of all the worlds'. Surah Al-Baqara:Ayat 131
Islam described by the Divine Book Quran, it is the most comprehensive book available to mankind for guidance and nothing has been omitted from it.

Good Muslim, Good Human Being.

For many non-Muslims, the word Muslim is synonymous with angry mobs and suicidal bombers. Such stereotyping of Muslims is patently wrong. Most Muslims are ordinary, peace-loving people with their own set of dreams and problems and should be treated with the same respect we give to any other fellow human being.

Islam is the monotheistic and revealed religion. Islam is a natural religion, Islam is not associated with any person, people, short period, or limited place.
Hence, it is not a new religion that Prophet Muhammad (Peace Be Upon Him) brought but it is re-expressed and a final form of same true religion that Allah (God) revealed through all His prophets. 
So Islam is the same religion which was given to Adam (Peace Be Upon Him), the first man and the first prophet of Allah, and it was the religion of all the prophets sent by Allah to mankind.
The name of Allah's religion lslam was not decided upon by later generations of man. It was chosen by Allah Himself and clearly mentioned in His final revelation to man.

Islam gives a complete way of life. Islam governs a Muslim’s life in all its aspects. This is the reason why it is not only a religion but also a way of life. It widen the aim of life, showing us how to conduct all human activities in a sound and wholesome manner. It does not allow a hierarchy of priests or intermediaries between Allah and human beings, no far-fetched abstractions and no complicated rites and rituals.

Islam tells us to build a society, which consist on civility, courtesy, compassion and consideration for others.  And link these attributes the matter of faith.
Islam aims to bring about prosperity to all mankind. Peace in every aspect no violence in any form. Islam teaches peace, justice, harmony, tolerance and love.
Islam has laid down some universal fundamental rights for humanity, which are to be observed and respected under all circumstances. 
By reading of the Quran or the Prophetic traditions, we find instructions regarding all matters of life like political, social, economic, material, ethical, national and international. These teachings are detailed and gives complete instructions to follow each and every act.
image source

The Blessings of Islam:

According to Islam life and religion are same thing, there is no separation. Islam encourages Muslims to adopt certain qualities and characteristics so that they are able to cope with the problems of life and conduct their social relations in the best way. 
There are some universal truths, such as honesty, generosity, altruism, truthfulness, helpfulness, and compassion. Every person naturally has an innate inclination toward these virtues.

Humanity:
One of Islam’s most important characteristics is its humanity; this is highly evident in Islamic legislation and other facets of the religion.
Islam promotes the concept of a human brotherhood and the equality of all humans. It maintains that all humans are the children of one man (Adam) and one woman (Eve) and we all share the same lineage, as stated in the Quran:
'O people! Fear your Lord Who created you from a single soul and made its mate from within it, and from that pair spread many men and women and fear Allah in Whose name you ask for (your rights) and pay attention to the ties of relationship. Undoubtedly. Allah is watching you all time." 
Surah An-Nisaa : Ayat 1
Regardless of race, sex, class status or color we are all one, according to Islam. No superiority on account of class, color, origin or wealth.
Humanity represents one family springing from one and the same father and mother. The unity of humanity is not only in its origin but also in its ultimate aims. Man has a common origin, human status and aim. Other people's interests and rights to life, honor and property are respected as long as the rights of Muslims are intact. Transgression is forbidden.

Prophet Muhammad Peace Be Upon Him..

Justice:
Justice as a basic objective of Islam and a moral virtue, and the standard of justice envisaged by the Quran.
In Islam, justice is also a moral virtue and an attribute of human personality, as it is in the Western tradition.  
Allah spoke to His Messenger in this manner:
“O My slaves, I have forbidden injustice for Myself and forbade it also for you.  So avoid being unjust to one another.” (Saheeh Muslim)
The Quranic standards of justice transcend considerations of race, religion, color, and creed, as Muslims are commanded to be just to their friends and foes alike, and to be just at all levels.
According to another Quranic passage:
'O believers! Stand-up firmly by the Commandments of Allah, bearing witness with justice and let not the enmity of any people incite you that you should not do justice. Do justice that is nearer to piety and fear Allah, undoubtedly, Allah is aware of your doings. Surah Al-Maidah :Ayat 8

Truthfulness:
Truthfulness is a command of Allah , part of faith, and a quality of must for all prophets and is mentioned in 100 places in the Noble Qur'an. 
The spirit of Islam is in speaking the truth. 
Speaking Truth is another important part of Islam about which Quran and Hadith has guided us several times.
Prophet Muhammad Peace Be Upon Him said "Truth takes you towards the Virtue and Virtue takes you towards Heaven."
Lying is against human nature and physiology. Like any disease, it has its own signs and symptoms.
Lying not only can create problems in your life but is considered a big sin in Islam. Islam rejects lying in all forms.
Prophet Mohamed (Peace Be Upon Him) said: "Surely those who are most frequent in believing people are most frequent in telling the truth and those who mostly doubt people are the most frequent liars."
A man may keep on telling lies till he is written before God, as a liar”. (Saheeh Al-Bukhari)

Honesty:
"When honesty is lost, then wait for the Hour (the Day of Judgement)."  These are the words of Prophet Muhammad.  
Allah commands that a Muslim be honest in every dealing, honest dealing in trading, buying selling, and even when it comes to giving advise one should give fair or honest advise.
Honesty is an essential attribute of the Muslim character, includes being truthful towards God by worshipping Him sincerely; being truthful to oneself, by adhering to God’s laws; and being truthful with others by speaking the truth and being honest in all dealings, such as buying, selling and marriage.  

Rules Of War:
War is only justified if the state security is endangered. During war, destruction of crops, animals and homes, killing non-fighting women, children, and aged people are forbidden.

image source
 Islam is the absolute answer to those who seek a perfect religion and a complete way of life. It guides us to a well-balanced life, one that makes us happy and contented in this world and in the life Hereafter.

By : Your's M.Ajmal Khan.

Friday, 3 August 2007

தமிழ் நாட்டின் 25 வகை சிறப்புகள் !! ஒரு தவகல் ..


1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்.
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் (ராமேஸ்வரம்)
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்) 
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைகளின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி).


தொகுப்பு : அ.தையுபா அஜ்மல் .

Thursday, 2 August 2007

தக்காளி சாறு அருந்தினால் கொழுப்பு குறையும்: ஆய்வில் தகவல்

 

சமைக்கப்பட்ட தக்காளி அல்லது தக்காளிச் சாறில் காணப்படும் இரசாயனம் இரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கும், உயர் குருதி அழுத்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் சிறந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பிரச்சினை உள்ளவர்களுக்கு பொதுவாக statins மருந்து வகைகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. இந்த மருந்துகளில் காணப்படும் இரத்தக் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு இரசாயனத்தை போலவே சமைக்கப்பட்ட தக்காளியும், தக்காளிச் சாறும் பயன்தரக் கூடியவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டுமே இதயத்தில் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியவை. இத்தகைய நோயாளிகள் தினசரி இரண்டு அவுன்ஸ் தக்காளிச் சட்னி அல்லது ஒரு பைன்ட் தக்காளிச் சாறை உட்கொள்வதன் மூலம் பெரும் பயனை அடைய முடியும்.
நன்கு பழுத்த தக்காளியில் சிவப்பு நிற பளபளப்பு ஏற்படக் காரணமாக இருப்பது அதில் பொதிந்துள்ள lycopene என்ற இரசாயனமாகும். இந்த சக்தி மிக்க இரசாயனம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது.
அத்தோடு மாரடைப்பு, பக்கவாதம் என்பனவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Lycopene என்ற இந்த இரசாயனம் பற்றி நடத்தப்பட்டுள்ள 14 சர்வதேச ஆய்வுகளை கடந்த 55 வருடங்களாக நன்கு ஆராய்ந்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
உடம்பிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரோலுக்கு இது இயற்கையான பாதுகாப்பை வழங்கக் கூடியது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். பிரிட்டனில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொலஸ்ட்ரோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு statins மருந்து வகைகளே வழங்கப்படுகின்றன.

சர்க்கரை நோயை கட்டப்படுத்த உதவும் 15 வகையான சிறந்த உணவுகள் !!

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். 

ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 

சர்க்கரை நோய் இல்லையென்றாலும் சரி அல்லது சர்க்கரையின் அளவு எல்லையில் இருந்தாலும் சரி அல்லது பரம்பரை வியாதி என்றாலும் சரி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதோடு தவிர்க்கவும் செய்யலாம். 

இந்தியர்களுக்கு அதற்கான உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும். இப்போது சர்க்கரை நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகளை பற்றி பார்ப்போம்.

1.வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும். 

2.தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் 

3.பாதாம்: தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும். 

4.தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள் ளவும். 

5.பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது. 

6.காய்கறிகள்: அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். 

7.பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது. 

8.ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும். 


9.பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது. 

10.உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். 

11.முக்கியமான உணவுகள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும். 

12.இயற்கை இனிப்பு: சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம். 

13.தண்ணீர் மற்றும் மதுபானம்: நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச்சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.  

14.அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும். 

15.உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும். 

மேற்காணும் உணவுப் பழக்கத்தை தொடர்ந்து கையாண்டு வந்தாலே சர்க்கரை நோயின் பிடியில் இருந்து 100 சதவீதம் தப்பலாம். சர்க்கரை நோய் கண்டவர்கள் தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்து முறையான சிகிச்சையினை டாக்டரிடம் மட்டுமே எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது. சர்க்கரை நோயற்ற வாழ்வை பெற முயன்ற அளவு முயற்சிப்போம். 


தொகுப்பு : அ .தையுப அஜ்மல் .

Monday, 23 July 2007

மறுகாலனிய எதிர்ப்புப் போரில் நமது வரலாற்றுக் கடமையை உணர்வோம்!



23/03/2011 - ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தோழர்கள் தூக்கிலிடப்பட்ட 80வது நினைவு தினம். காந்தி தன்னுடைய போலியான அகிம்சை முகத்தை, ஏகாதிபத்திய - முதலாளித்துவ அடிவருடித்தனத்தைத் தக்க வைத்து கொள்வதற்காக, மாவீரன் பகத்சிங் உள்ளிட்ட தோழர்களை "இவர்கள் சாக விரும்புகிறார்கள்" என்று சொல்லி வஞ்சம் தீர்த்து கொண்ட நாள்.

நமது விடுதலைப் போராட்ட மரபில், கட்டபொம்மன், திப்பு, மருது சகோதரர்கள் என்று நீளும் வீரத்திற்கான நீண்ட பட்டியலில் பகத்சிங் வரை, தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறும் போது அந்தந்த காலகட்டத்தின் துரோகிகளையும் நினைவு கூற் வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எட்டப்பனை இகழாமல் கட்டபொம்மனை மட்டும் தனியே புகழ முடியாது. ஏனெனில் துரோகத்தால் தான் தியாகத்தின் இன்றியமையாத தன்மை வெளிப்படுத்தப்படுகிறது. காந்தியின் துரோக அரசியலிலிருந்து புரட்சிகர தோழர்களின் போராட்டங்களை, தியாகங்களைத் தனியே பிரிக்கமுடியாது. மாவீரன் பகத்சிங்கின் வாரிசுகளாக களம் காணவிருக்கும் நமக்கு எதிராக எட்டப்பன் முதல் காந்தி வரையிலான துரோகிகளின் வாரிசுகளும் அணிவகுத்து நிற்கிறார்கள். குறிப்பாக காங்கிரசு - பா.ஜ.க - போலி கம்யூனிஸ்டுகள் துரோகத்தின் வாரிசுகளாக, நமக்குச் சவாலாக களத்தில் நிற்கின்றனர். தியாகத்தையும் துரோகத்தையும் "இரண்டும் ஒன்று தான்" என்பதாக உருவகப்படுத்துகிறார்கள். பகத்சிங்கும் காந்தியும் வெவ்வேறு வழியில் நம் தேச விடுதலைக்காக போராடியவர்கள் தான் என்று மோசடியான சித்திரத்தை உருவாக்கத் துடிக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.

தியாகத்தையும் துரோகத்தையும் சமமாக மதிப்பிடுவதன் மூலம் உண்மையான தியாகிகளை கீழ்மைப்படுத்தியும் துரோகிகளை மேன்மைப்படுத்தியும் பேசுவதன் மூலம் வரலாற்றைத்
திருத்திவிடலாம் என்று துடிக்கிறார்கள். கம்யூனிசத் திருத்தல்வாதிகளான போலி கம்யூனிஸ்டுகள் தான் நம்முடைய வாலாற்றில் துரோகிகளின் பங்களிப்பையும் திருத்திவிடத் தவிக்கிறார்கள். இதன் மூலம் பெயரில் மட்டும் 'கம்யூனிசத்தை'க் கொண்டிருக்கும் அவர்கள் துரோகத்தின் வாரிசுகளாகத் தம்மை வெளிப்படையாக அடையாளப்படுத்து கொள்கிறார்கள்.

சேகுவேராவையும் பகத்சிங்கையும் காட்சிப்படுத்துவது இளைஞர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும்தான். தக்கவைக்கப்பட்ட அணிகள் காந்தியின் வாரிசாக வார்த்தெடுக்கப்படுகிறார்கள். பகத்சிங்கின் மீது நேசம் கொண்டவர்கள், புரட்சியை நேசிப்பவர்கள் போலிக்கம்யூனிச அரசியலிலிருந்து விலகி புரட்சிகர அணிகளுடன் கரம் கோர்த்துக்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்தை படைப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த போலிகள், இப்போதைய இழிந்த சமூக நிலைமைகளை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை, தேவை ஆட்சிமாற்றம் மட்டும் தான் என்று அதுதான் தமது இறுதி இலக்கு என்றும் சொல்லிவருகின்றனர்.

போலிச் சுதந்திரத்திற்கு முந்தைய காலனிய இந்தியாவில், தேவை சமூகப் பொருளாதார மாற்றம், அரசியல் அதிகாரம் மட்டும் போதாது என்றும் சொல்லி புரட்சிக்கான அவசியத்தை
வலியுறுத்துகிறார் பகத்சிங். ஆனால், காந்தி புரட்சியெல்லாம் தேவையில்லை ஆட்சி மாற்றம் நமது தேசத்தை மறுகாலனிய நாடாக்குவதற்குத்தான் வழி செய்திருக்கிறது. போலி சுதந்திரத்துக்கு முந்தைய காந்தியின் "ஆட்சி மாற்றம் போதும்" என்கிற கோரிக்கை இன்றைய மறுகாலனிய சூழலில் போலி கம்யூனிஸ்டுகளின் கோரிக்கையாக மாறியிருக்கிறாது. காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக தமது தலைமையிலான ஆட்சி மட்டும் தான் இலக்கு. தமது தலைமையில் ஆட்சியமைவதே "மக்கள் ஜனநாயகப் புரட்சி"யாகும் என்றும் பிதற்றிவருகிறார்கள்.

1920-ல் கம்யூனிசத்தின் பெயரால் கட்சி தொடங்கி காந்தி காங்கிரசுக்கு வால்பிடித்துக் கொண்டிருந்தனர் போலி கம்யூனிசத்தின் முன்னோடிகள். ஆனால், தோழர் பகத்சிங், தனது சொந்த புரிதலின் மூலம் மார்க்சிய - லெனினியத்தை உள்வாங்கி கொண்டு கம்யூனிசப் பண்புகளில் படிப்படியாக வளர்ந்து, சோஷலிசம் குறித்தும், சமூக முழுமைக்குமான விடுதலை குறித்தும், சமதர்மம் தழைக்க வேண்டும் என்றும் பேசுகிறார். அப்படிப்பட்ட சமூகத்தைப் படைக்க ரஷ்யாவைப் போன்ற புரட்சி ஒன்றை விடுதலை போராட்டத்தினுடாக நமது நாட்டிலும் நடத்த வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்திகிறார். 'புரட்சி ஓங்குக!' என்ற விண்ணதிரும் முழக்கத்தை விடுதலைப் போர்க்களத்தில் ஒலிக்கச் செய்த பெருமைக்குரியவராக பகத்சிங் திகழ்ந்தார்.

சீக்கிய மதப் பழமைவாத குடும்ப பின்னணியிலிருந்து வந்த பகத்சிங், ஒரு கம்யூனிச புரட்சியாளனாக வளர்ந்து கொண்டிருந்த அதே நாட்களில், நம்ம 'காம்ரேடுகள்' கம்யூனிசத்தின் பெயரால் கட்சி தொடங்கி காந்தி - காங்கிரசின் ஏகாதிபத்திய எடுபிடி அரசியலுக்கு துணைபோயினர். காந்தியின் பார்ப்பனிய பிற்போக்கு வாதங்களில் கிறங்கிப் போய்க்கிடந்தது அன்றைய போலிக்கம்யூனிசத்தலைமை. அதற்கு இப்போதைய போலிகம்யூனிஸ்டுகள் சொல்லும் அருமையான விளக்கத்தையும் கொஞ்சம் கேளுங்கள். பெரும்பான்மையான இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் காந்தியை விமர்சித்தால், தமது கட்சி மக்களிடமிருந்து தனிமைபட்டுவிடும் என்று அஞ்சியே வேறு வழியின்றி காந்திக்கு வால்பிடித்தார்களாம். இது போன்ற மொன்னைத்தனமான காரணங்களைச் சிறிதும் கூசாமல் சொல்வதற்கு போலிகள் தயங்குவதேயில்லை.

'பெரும்பான்மையான இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட' காந்தியை, தீண்டாமைச் சவடால்களையும் போலியான மதச்சார்பின்மையையும் பேசித் திரிந்த காந்தியை, ஒரு வருணாசிரம வெறியன் தான் காந்தி என்று பண்பாட்டுத்தளத்தில் திரைகிழித்து அம்பலப்படுத்தினாரே அண்ணல் அம்பேத்கர், அவர் என்ன தனிமைப்பட்டுவிட்டாரா?

பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கர் காந்தியை அம்பலப்படுத்தியதைப்போல, விடுதலை போராட்ட அரசியல் களத்தில் பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் 'மகாத்மா'வின் போலி அகிம்சையை, ஏகாதிப்பத்திய எடுபிடித்தனத்தை, பிர்லாவின் மாளிகையில் படுத்துக்கொண்டு எளிமையை போதிப்பதை அடுக்கடுக்காக அம்பலப்படுத்தினார்கள். காந்தியை துணிந்து அம்பலப்படுத்தியதற்காக பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் யாரும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படவில்லை. மாறாக காந்தியின் போலிபிம்பம் தான் மக்கள் மத்தியில் அம்பலமானது. அதனால் தான் காந்தி பகத்சிங் உள்ளிட்ட தோழர்களின் மரண தண்டனைக்கு துணை போனதோடு, "அவர்கள் சாக விரும்புகிறார்கள்" என்றும் சொன்னார்.

இவ்வாறாக புரட்சிகர தோழர்களால் அம்பலப்படுத்தப்பட்ட காந்திக்கு முன்வாயும் பின்வாயுமாக இருந்துகொண்டு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருந்தார்கள் போலிகள். இந்தியாவின் போலி கம்யூனிச வரலாறு தொடக்க காலம் முதல் இன்றைய மறுகாலனியச் சூழல் வரை காந்தி - காங்கிரசோடு கூட்டணி கட்டிக்கொண்டு தொடர்ந்து துரோகமிழைத்து வருகிறது. தேர்தலுக்குத் தேர்தல் நடைபெறும் அணிமாற்ற நாடகமெல்லாம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இல்லாமல் ஒரே அணியாக, துரோக அணியாக காங்கிரசோடு தம்மை போலிகள் நிலைப்படுத்தி வருகிறார்கள்.

துரோகி காந்தியையும் தியாகத்தோழன் பகத்சிங்கையும் தேச விடுதலைப் போராளிகள் என்று சமமாக மதிப்பிடும் போலிகள், அகிம்சையா? ஆயுதமா? என்ற ஒன்றில் மட்டும்தான் இவர்கள் வேறுபடுவதாகச் சித்தரிக்கிறார்கள். இதே முறையைத்தான் தமது போலி கம்யூனிச அரசியலுக்கும் புரட்சிகர அரசியலுக்கும் இடையிலுள்ள வேறுபாடாகவும் சித்தரிக்க முயலுகிறார்கள். இந்தியாவின் 'அக்மார்க்' இடதுசாரிகளான தமக்கும் மார்க்சிய - லெனினிய புரட்சியாளர்களுக்கும் இடையிலான முரண்பாடும் ஆயுதப்பாதையா? அமைதிப்பாதையா? என்பது மட்டும் தான் என்பதாகச் சொல்லி, போலி கம்யூனிஸ்டு கட்சியின் பெரும்பாலான அணிகள் நம்பவைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக முழுமைக்கான விடுதலையையும் வலியுறுத்துகிற புரட்சிகர அரசியலுக்கும், வெறும் ஆட்சிமாற்றம் மட்டும் போதுமானது என்ற காந்திய - காங்கிரசு அரசியலுக்கும் இருந்த பாரதூரமான வேறுபாடுதான் இன்றைய புரட்சிகர சக்திகளுக்கும் போலிகளுக்குமான வேறுபாடாக இருக்கிறது. ஏகாதிபத்தியத்துடன் கரம் கோர்த்துக் கொண்டு செயல்படும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அங்கமான போலி கம்யூனிஸ்டு கட்சிக்கும், ஏகாதிபத்தியத்தை இந்த மண்ணை விட்டு துரத்தியடிக்கும் மறுகாலனிய எதிர்ப்புப் போராளிகளுக்கும் அடிப்படையிலேயே எதிரெதிரான கருத்துக்கள் இருப்பதை போலி கம்யூனிச அணிகளுக்கு நாம் புரியவைக்க வேண்டியிருக்கிறது.

சிபிஎம் கட்சியின் ஈ.எம்.எஸ். என்கிற சங்கரன் நம்பூதிரி முதற்கொண்டு பி. ராமமூர்த்தி வரையிலான தலைவர்களின் பார்ப்பனிய - காந்திய - காங்கிரசு பாணியில் தமது கட்சியை வழி நடத்தியிருப்பது தத்துவார்த்த ரீதியில் 'புதிய ஜனநாயகம்' இதழால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய மறுகாலனிய சூழலில், மறுகாலனிய திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏனைய ஓட்டுக்கட்சிகளுக்கு சற்றும் சளையாதவர்களாக களத்தில் நிற்கிறார்கள் போலிகள். ப. சிதம்பரம் ஏகாதிபத்திய நிறுவனங்கள் நமது நாட்டைக் கொள்ளையடிப்பதற்காக உள்நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள "காட்டு வேட்டை" எனும் உள்நாட்டுப் போரில் போலி கம்யூனிஸ்டுகள் காங்கிரசு அரசுக்கும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் தோளோடு தோள் நின்று, அந்த பன்னாட்டு பகாசூர நிறுவனங்கள் நமது நாட்டைக் கொள்ளையிட வழிவகை செய்துகொடுக்கிறார்கள்.

இன்றைய மறுகாலனியத்திற்கு எதிரான சமர்க் களத்தில் பகத்சிங்கின் உண்மையான அரசியல் வாரிசுகளான புரட்சிகர சக்திகள் இதர ஓட்டுப்பொறுக்கி கும்பலை நேரதிராகச் சந்திக்க வேண்டிய சூழலை வரலாற்று ரீதியான தொடர் நிகழ்வுகள் நமக்கு வழங்கியுள்ளன. எதிரிகளையும் துரோகிகளையும் சந்திக்கின்ற வாய்ப்பை நமக்கு வரலாறு வழங்கியிருக்கிறாது. பகத்சிங்கின் வாரிசுகளான நமக்கு வரலாற்றுக் கடமை குறித்து சொல்லியா கொடுக்க வேண்டும்!

Tuesday, 10 July 2007

மஹ்தீ என்பவர் யார்?



மஹ்தீ என்பவர் யார் எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

மஹ்தீ குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சில போலிகள் முஸ்லிம் சமுதாயத்தை ஒவ்வொரு காலத்திலும் வழி கெடுத்து வருகின்றனர்.
முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் மஹ்தீ என்பவருக்கு மார்க்க அடிப்படையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர் ஆன்மீக குருவாகவோ மார்க்கச் சட்ட நிபுணராகவோ திகழ்வார் என்றோ ஆதாரப்பூர்வமான எந்த முன்னறிவிப்பும் இல்லை. அவர் வலிமை மிக்க மன்னராக இருப்பார் என்பது தான் முன்னறிவிப்பின் முக்கிய சாரம். அவரது ஆட்சி பரந்து விரிந்து இருக்கும். அவரது ஆட்சியில் செல்வம் செழித்து ஓடும். நீதியும் நேர்மையும் கோலோச்சும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பாகும்.
4284 - حدثنا أحمد بن إبراهيم ثنا عبد الله بن جعفر الرقي ثنا أبو المليح الحسن بن عمر عن زياد بن بيان عن علي بن نفيل عن سعيد بن المسيب عن أم سلمة قالت : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول " المهدي من عترتي من ولد فاطمة " ت / 6 م قال عبد الله بن جعفر وسمعت أبا المليح يثني على علي بن نفيل ويذكر منه صلاحا . قال الشيخ الألباني : صحيح سنن أبي داود [2 /509]

மஹ்தீ என்பவர் என் வழித்தோன்றலில் – ஃபாத்திமாவின் வழியில் வருவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்
நூல் அபூதாவூத்
4282 - حدثنا مسدد أن عمر بن عبيد حدثهم ح وثنا محمد بن العلاء ثنا أبو بكر يعني ابن عياش ح وثنا مسدد قال ثنا يحيى عن سفيان ح وثنا أحمد بن إبراهيم قال ثنا عبيد الله بن موسى أخبرنا زائدة ح وثنا أحمد بن إبراهيم قال حدثني عبيد الله بن موسى عن فطر المعنى واحد كلهم عن عاصم عن زر عن عبد الله : عن النبي صلى الله عليه و سلم قال " لو لم يبق من الدنيا إلا يوم " قال زائدة في حديثه " لطول الله ذلك اليوم " ثم اتفقوا " حتى يبعث [ الله ] فيه رجلا مني " أو " من أهل بيتي يواطىء اسمه اسمي واسم أبيه اسم أبي " زاد في حديث فطر " يملأ الأرض قسطا وعدلا كما ملئت ظلما وجورا " وقال في حديث سفيان " لا تذهب أو لاتنقضي الدنيا حتى يملك العرب رجل من أهل بيتي يواطىء اسمه اسمي " ت / 4 م قال أبو داود لفظ عمر وأبي بكر بمعنى سفيان . قال الشيخ الألباني : حسن صحيح سنن أبي داود [2 /508]

பூமியின் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் மீதமாக இருந்தால் கூட அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான். அதில் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அல்லாஹ் அனுப்புவான். அவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருக்கும். அவரது தந்தையின் பெயரும் என் தந்தையின் பெயரும் ஒன்றாக இருக்கும். அநீதியால் நிரப்பப்பட்டுள்ள பூமி முழுவதும் நீதியால் நிரப்புவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் அபூதாவூத்

2230 - حدثنا عبيد بن أسباط بن محمد القرشي الكوفي قال حدثني أبي حدثنا سفيان الثوري عن عاصم بن بهدلة عن زر عن عبد الله قال : قال رسول الله صلى الله عليه و سلم لا تذهب الدنيا حتى يملك العرب رجل من أهل بيتي يواطئ اسمه اسمي قال أبو عيسى وفي الباب عن علي و أبي سعيد و أم سلمة و أبي هريرة وهذا حديث حسن صحيح هذا حديث حسن صحيح قال الشيخ الألباني : حسن صحيح سنن الترمذي [4 /505]
அரபு தேசத்தை என் பெயருடையை என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் திர்மிதி

மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மஹ்தீ என்ற பெயரில் ஒரு மன்னர் வருவார் என்று முன்னறிவிப்புச் செய்கின்றன. இந்த முன்னறிவிப்பில் நாம் செயல்படுத்துவதற்கு ஒரு விஷயமும் இல்லை. நமது காலத்தில் அப்படி ஒருவர் வந்தால் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் முன்னறிவிபு நிறைவேறி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அப்படி வராவிட்டால் எதிர்காலத்தில் அவர் வருவார் என்று கருதிக் கொள்ள வேண்டும். இதைத் தவிர மார்கக் ரீதியாக மஹ்திக்கு எந்த முக்கியத்துவமும் இல்ல.

மிர்சா குலாம் காதியானி என்பவன் தன்னை மஹ்தீ என்று சொல்லிக் கொண்டான். வாக்களிக்கப்பட்ட மஹ்தீ என்று வாதிட்டான். அவன் பொய்யன் என்பதற்கு மேறகண்ட நபி மொழிகள் போதுமான ஆதாரமாகும்.
அவனுடைய பெயர் முஹம்மத் அல்ல. அஹ்மதும் அல்ல. அவனுடைய பெயர் குலாம் அஹ்மத் (அதாவது அஹ்மதின் அடிமை.) நபிகள் நாயகத்தின் அடிமை என்பது தான் இவனது பெயர் என்பதால் இவன் நிச்சயம் மஹ்தீ அல்ல. மேலும் இவனது தந்தையின் பெயர் அப்துல்லாஹ் அல்ல. எனவே இவன் மஹ்தீ கிடையாது என்பது தெளிவாகி விட்டது. மேலும் இவன் அரபு நாட்டை ஆளவும் இல்லை. நீதியால் பூமியை நிரப்பவும் இல்லை. இவன் பாகிஸ்தானில் கூட ஆளவில்லை. முஸ்லிமல்லாத சிறுபான்மை பிரிவாகத் தான் இவனும் இவனைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். எனவே இவன் மஹ்தீ அல்ல என்பது நூறு சதவீதம் உண்மை.
இது போல் ஷியாக்கள் முஹம்மத் பின் அல்ஹசன் அலஸ்கரீ என்பவர் தான் மஹ்தீ என்று கூறுகின்றனர். இவர் அல்காயின் எனவும் குறிப்பிடப்படுவார். இவரது பெயர் நபிகள் நாய்கத்தின் பெயராக இருந்தாலும் இவரது தந்தை பெயர் ஹசன் என்பதாகும். அப்துல்லாஹ் அல்ல. எனவே இவர் மஹ்தீ அல்ல என்பது உறுதி. மேலும் அவர் பூமியை ஆளவுமில்லை; நீதியால் நிரப்பவுமில்லை.
இது போல் நம் தமிழகத்தில் கூட கிருஷ்னகிரி மாவட்டம் பாலக்கோட்டிலும் ஈரோட்டிலும் மஹ்தியாக்கள் என்று ஒரு பிரிவினர் உள்ளனர். யாரோ ஒருவர் ஒரு காலத்தில் தன்னை மஹ்தீ எனக் கூற அதை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் இதுவும் கட்டுக்கதையாகும் இவர் ஃபாத்திமாவின் வழித்தோன்றல் என்பதற்கு ஆதாரம் இல்லை. இவரும் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது அல்ல.மேலும் இவர் பாலக்கோட்டைக் கூட ஆட்சி செய்யவில்லை.

மஹ்தீ என்பவர் ஆட்சி அதிகாரம் செய்யும் ஒரு மன்னரே தவிர முரீது கொடுத்து மக்களை வழி கெடுப்பவர் அல்ல. இந்த உண்மை விளங்காத மக்களிடம் ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் தான் மஹ்தீ என்று வாதிட்டு மக்களை வழிகெடுத்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.


மஹ்தி பற்றிய உண்மை நிலை என்ன?

ஷீஆக்களிடையே மஹ்தி பற்றி பல வகையான நம்பிக்கைகள் உள்ளன. 

முஹம்மத் இப்னு அல்ஹனபிய்யா என்பவர்தான் மஹ்தி என்று கைஸானிய்யாக்களும், முஹம்மத் இப்னு அல் ஹஸன் அல் அஸ்கரி தான் மஹ்தி என்று இமாமிய்யாக்களும், இன்னும் பலர் உண்டு என்று மற்ற பிரிவினர்களும்; நம்புகிறார்கள்.

உண்மையில் மஹ்தியைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மஹ்தியைப் பற்றி நபி(ஸல்)அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.மஹ்தி பற்றிய உண்மைச் செய்திகளை விட அதிகமாக பொய்யும், புரட்டும், கட்டுக்கதைகளும்தான் உள்ளன.

இந்தக் கட்டுக்கதைகள் மூலமாகத்தான் போலிகள் பன்னெடுங் காலமாக முஸ்லீம் சமுதாயத்தை ஏமாற்றி வருகிறார்கள்.இந்த ஏமாற்றுப் பேர்வழிகளில் மிக முக்கிய இடம் வகிப்பவர்கள் ஷீயாக்கள் தான்.

மஹ்தீ'யை பின்பற்ற ஆதாரமா? 'அறிவீனமா?


மஹதீ'யாக்களுக்கு விவாத அறைகூவல் விடுத்துள்ள அண்ணன் ஜமாஅத், ''நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்த மஹதீ அவர்கள் இன்னும் வரவில்லை. மஹதீ என்பவர் உண்மையில் வந்துவிட்டார் என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக இவர்கள் நிரூபித்து விடுவார்களேயானால் நாம் அனைவரும் அந்த மஹதீயை பின்பற்றத் தயாராக உள்ளோம் என்று கூறியது. 
அப்போது நாம் மஹதீ வந்துவிட்டார் என்று ஒருவேளை மஹதி'யாக்கள் நிரூபித்து விட்டால் அந்த மஹதியை பின்பற்றத் தயார் என்று அண்ணன் ஜமாஅத் சொன்னது எந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்? எந்த ஹதீஸின் அடிப்படையில் என்று அண்ணன் ஜமாஅத் சொல்லத் தயாரா? மஹதி அவர்களை முஸ்லிம்கள் பின்பற்றலாம் என்பதற்கு  என்ன ஆதாரம்? என்று கேட்டோம்.
அதோடு, மஹ்தீ என்பவர்  வந்து விட்டார் என்று மஹதி'யாக்களால் ஒரு போதும் நிரூபிக்க முடியாது என்பதால் ஒரு பேச்சுக்கு அவரை பின்பற்றத் தயார் என்று சவால் விட்டோம் என்று அண்ணனின் தம்பிகள் ஜகா வாங்கக் கூடாது.ஏனெனில் மஹதீ அவர்கள் இன்றல்ல என்றாவது கண்டிப்பாக வரக் கூடியவரே! அப்படி வந்தால் அண்ணன் ஜமாஅத் அவரை பின்பற்றுவோம்  என்று சொல்வது எந்த ஆதாரத்தின்  அடிப்படையில் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் நாம் கூறியிருந்தோம்.


இதற்கு வழக்கம் போல துள்ளி வந்த பொய்ஜேயின் பினாமி, ஆதாரம்  என்ற பெயரில் பல விதண்டாவாதங்களை  வைத்துவிட்டு,  மஹதியை பின்பற்ற ஆதாரம் என்று ஒரே ஒரு குர்'ஆன் வசனத்தையும் வைத்துள்ளது. அந்த  வசனம் இதுதான்;



قُلْ إِن كَانَ لِلرَّحْمَنِ وَلَدٌ فَأَنَا أَوَّلُ الْعَابِدِينَ

(நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!"[அல்-குர்'ஆன்43:81 ]


இந்த வசனத்தை எழுதிவிட்டு 'இப்ப என்னடா செய்யப்போற' என்று தனது தலைவனின் பாணியில் 'மரியாதையான' வார்த்தையில்  கேட்டுள்ளது பொய்யன் தளம். இந்த வசனத்தின் மூலம் பொய்ஜேயின் பினாமி சொல்ல வருவது என்னவென்றால், 'அல்லாஹ்விற்கு சந்ததியிருந்தால் நான் வணங்கத் தயார் என்று நபியவர்கள் எப்படி சொன்னார்களோ, அதே பாணியில் மஹ்தீ வந்து விட்டார் என்று நிரூபித்து விட்டால் அவரை பின்பற்றத்  தயார் என்று நாங்களும் சொன்னோம் என்று சொல்ல வருகிறது இந்த பினாமி. இதன் மூலம் தனது தலைவனைப் போல   மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடப் பார்க்கிறது  இந்த பினாமி. 

நன்றாக சிந்திக்கக் வேண்டும். அல்லாஹ்விற்கு சந்ததியுண்டு என்று கியாமநாள் வரைக்கும் எவராலும் நிரூபிக்க முடியாது என்பதால் தான், நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன் என்று கூறுமாறு தனது தூதருக்கு கட்டளையிடுகின்றான் இறைவன். 

ஆனால் மஹ்தீ நிலை அவ்வாறல்லவே! அவர் இன்றல்ல என்றாவது நிச்சயமாக வரக்கூடியவராயிற்றே! கியாமநாள் வரை வரவே செய்யாத  அல்லாஹ்வின் சந்ததிக்கு சொன்ன வசனத்தை இன்றோ நாளையோ அல்லது உலகம் அழிவதற்குள் நிச்சயமாக வரவிருக்கிற மஹ்தீ அவர்களுக்கு பொருத்துவது இவர்களுக்கு மண்டையில் எதுவுமில்லை என்று காட்டுகிறதல்லவா?


இன்னும் தெளிவாக இந்த மூளையை அடகு வைத்த கூட்டம் விளங்கிக் கொள்ளும் வகையில் சொல்வதாக இருந்தால், 'குழந்தைப் பேறு அறவே சாத்தியமில்லை என்ற நிலையில் உள்ள மலடியிடம், 'நீ பிள்ளை பெற்றுக் காட்டி விட்டால் நீ மலடியில்லை என்று நான் ஒப்புக் கொள்கிறேன் என்று சவால் விடுவது அறிவுடமை. அதே சவாலை கருவுற்று நிறை மாசமாக இன்றோ நாளையோ பிள்ளை பெறும் நிலையில் இருக்கும் பெண்ணிடம் விட்டால் இது அறிவாளியின் செயலா? அடி முட்டாளின் செயலா? என்பதை அண்ணனும் அவரை பின்பற்றுபவர்களும் விளங்கிக் கொள்வார்களா?   

அண்ணனுக்கும், அவரை பின்பற்றும் தம்பிகளுக்கும் நேர்வழி கிடைத்திட இந்த புனித ரமலானில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை தவிர வேறு ஒன்றும் நம்மால் செய்ய இயலாது.


இலங்கையில் ஷீஆக்கள் தங்கள் மதத்தைப் பரப்ப எடுக்கும் முயற்சிகள் தொடர்பாக நாம் எழுதி வருகிறோம்.அதில் முதல் கட்டமாக ஷீஆக்களின் வழிகேடுகள் தொடர்பான செய்திகளை தருகிறோம்.தொடர்ந்து இலங்கையில் இவா்கள் செய்யும் அட்டகாசங்கள் தொடர்பாக ஆதாரத்துடன் விளக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

அன்பின் சகோதரர்களே ! இலங்கையில் ஷீயாக்களின் நடவடிக்கைகளின் உச்சகட்டமாக இலங்கையில் பல இணையதளங்கள் அவா்கள் மூலம் நடத்தப் படுவதும் , அதில் இஸ்லாத்திற்கு மாற்றமான ஷீயாக்களின் மதப் பிரச்சாரங்கள் வேகமாக முன்னெடுக்கப் படுவதும் தெரிய வந்துள்ளது. அதே போல் இலங்கை ஈரானிய தூதுவராலயத்தின் மூலம் செய்யப் படும் மதப் பிரச்சாரம் ,இஸ்லாமிய ஜமாஅத் என்ற பெயரில் நடக்கும் ஷீயாப் பிரச்சாரம் ஆகியவையும் நமக்குத் தெரிய வந்துள்ளது. இன்ஷா அல்லாஹ் இதன் தொடரில் அது தொடர்பாக நாம் ஆதாரத்துடன் எழுதுவோம்.

Wednesday, 4 July 2007

சகோதரத்துவத்தின் உன்னதம் - ரக்க்ஷா பந்தன்...

உறவுகளில் உள்ள உன்னத உறவான சகோதர உறவை கொண்டாடும் ஒரு பண்டிகை இது.

ஒரே கருவறையில் உறங்கி, ஒரே தொப்புள் கொடியில் இணைந்து, ஒரே மார்பில் அமுதுண்டு, ஒரே தொட்டிலில் உறங்கி, ஒரே தட்டில் உணவுண்டு, ஒரே பாயில் தூங்கி என இணைந்திருப்பதற்காகவே பிறந்தது போல் இருக்கும் சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள பாசப் பிணைப்பை புனிதமாக மதித்து, அதை கொண்டாடும் ஒரு நன்னாள்.

இந்த பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதைக் குறித்த பல அனுமானங்கள் இருக்கிறது.

மகாபலி என்னும் அசுரன் விஷ்ணுவின் தீவிர பக்தனாயிருந்ததால், அவரும் வந்து "பக்தா என்ன வரம் வேண்டும் கேள்" என்று சொன்னதும், அவன் "என் நாட்டுக்கு காவல் காரனாயிரு" என்று சொன்னவுடன், அவர் வைகுண்டத்தை விட்டுவிட்டு, மகாபலியின் நாட்டுக்கு வாட்ச்மேன் வேலைக்கு போய்விட்டார். எத்தனை நாள்தான் லக்ஷ்மி தேவியும் தனிமையில் நாட்களை கழிப்பது. ஒரு நாள் "எங்கே போனாய் என் நாதா" என தேடிக்கொண்டே வந்து மகாபலியின் நாட்டில் நாதனைக் கண்டதும், அவர் இருந்த கோலத்தைப் பார்த்து, வேதனைப்பட்டு, ஒரு துன்புறும் பிராமிணப் பெண்ணாக வேடம் போட்டு, மகாபலியின் அரண்மனையில் ஐக்கியமாகிவிட்டார்.

இந்த ஆடி மாதத்து (ஹிந்தியில் ஷ்ராவண மாதம்) பௌர்ணமி தினத்தன்று, மகாபலியின் கையில் ஒரு சிறு கயிறைக் கட்டி, தான் யாரென்று வெளிப்படுத்தி, னது நாதனை தன்னோடு அனுப்ப வேண்டுமென கேட்கவே, மகாபலியும் சரி, விஷ்ணு, இனி நீ போகலாம் என சொல்லிவிட்டாராம். விஷ்ணுவும் தனது மனைவியுடன் வைகுண்டத்துக்கு சென்று விட்டாராம்.

இங்கு லக்ஷ்மி தேவி மகாபலியின் கையில் கட்டினாரே ஒரு கயிறு, அது தான் இன்றளவும் ராக்கி என்று எல்லோராலும் கட்டப்படுகிறதாம். ஆனால் இன்னொரு சுவையான கதையும் உண்டு.

டெல்லியை ஹுமாயூன் ஆண்ட காலமது. சித்தூர்கட் மகாராஜாவின் விதவை மனைவி ராணி கர்ணாவதி ஹுமாயூனுக்கு ஒரு ராக்கி அனுப்பி அத்துடன் ஒரு செய்தியும் அனுப்பினார். குஜராத்தின் ராஜாவான பகதூர் ஷா என்னை அதிகம் சீண்டிப்பார்க்கிறான், நீங்க எனக்கு அண்ணன் மாதிரித்தானே, கொஞ்சம் என்னன்னு கேளுங்களேன் என்று சொன்னதும், ஒரு இஸ்லாமியனான தனக்கு, ஒரு இந்து அரசப் பெண்ணிடமிருந்து வந்த சகோதர பாசத்திற்கான அழைப்பிற்கு மதிப்பளித்து, ஹுமாயூன் பகதூர்ஷாவை ஒரு தட்டு தட்டி வைத்தாராம். அன்றிலிருந்து ராக்கி என்பது சகோதர, சகோதரி உறவின் ஒரு உன்னத அடையாள சின்னமாகிவிட்டது.

இன்னும் கிருஷ்ணனுக்கும் திரௌபதிக்கும் இருந்த சகோதர பந்தம் போன்ற நிறைய கதைகள் இருந்தாலும், இன்றுவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு உறவு இந்த சகோதர சகோதரி உறவு தான்.

இந்த நாளில் சகோதரி தனது சகோதரனின் தீர்க்காயுளுக்காக இறைவனை வேண்டுகிறாள். சகோதரனுக்கென தனது கையால் இனிப்புகள் செய்து, சகோதரனை ஆரத்தி எடுத்து முத்தம் செய்து வாழ்த்தி, அவனுக்கு இனிப்பூட்டுகிறாள். அவனது கையில் தனது அன்பின் கயிறாகிய ராக்கியை கட்டி, நீ எனது சகோதரன், எனது அன்பிற்குரியவன், என்னை நேசிப்பவன், எனது பாதுகாவலன் என்பதை உணர்த்துகிறாள். சகோதரனும், தனது சகோதரியை கட்டியணைத்து, முத்தம் செய்து, என் வாழ்நாள் முழுக்க நான் உனக்கு பாதுகாவலனாயிருப்பேன் என உறுதியளிக்கிறான். சகோதரி அவனுக்கு இனிப்பு ஊட்டுகிறாள். சகோதரன் அவளுக்கு அன்பளிப்புகளை கொடுக்கிறான்.

நினைத்துப் பாருங்கள். எவ்வளவு அற்புதமான உறவு இது. இதுவரை எனக்கும் எத்தனையோ பெண்கள் ராக்கி கட்டியிருக்கிறார்கள் என்றாலும், எனது நெஞ்சைத் தொட்டவள் மறைந்த என்  மாற்றுமத சகோ தரி  சங்கீதாதான். கர்நாடகாவில் நான்  பெங்களூரில் வேலை செய்யும் போது போன் பூத்தில் பகுதி நேர  பணியாளரான  அவளை, நான் கர்நாடகா மாநிலத்தில் சந்தித்தேன். எப்படி அவளுக்கு அண்ணனானேன் என இன்று வரை புரியவில்லை. இன்றும் போன் பூத்இல் வேலை செய்யும்   ஒவ்வொரு  பெண்ணிலும் என் தங்கையை காண்கிறேன். அவளுக்கு இந்த ரக்க்ஷா பந்தன் பதிவு சமர்ப்பணம்.

இந்த பதிவை வாசிக்கும் நீங்களும் இந்த வருட ரக்க்ஷா பந்தன் நாளில் (ஆகஸ்ட் 5 ம் தேதி) உங்கள் சகோதரிகளிடம் உங்கள் அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்துங்களேன். ஐடியாக்கள் பின்னூட்டத்தில வரவேற்கப்படுகின்றன.