Wednesday, 16 December 2009

இஸ்லாம்சமுதாயம் கல்வியில் முன்னேற..

மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன. உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும்தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தௌவான வழியைக் காட்டுகிறது.
படைத்தவனை வணங்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம் உலகத்தையும் சிந்தித்து அதில் இறைவன் வைத்திருக்கும் ஆற்றலை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று பணிக்கிறது. நல்லவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் பேசும் போது…
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன
(அல்குர்ஆன் 3:190)
அவர்கள் நின்றும் அமர்ந்தும் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் புமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீ தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் 3:191)
நம் முஸ்லீம் சமுதாயம் எந்த அளவுக்கு கல்வியில் பின் தங்கியுள்ளது என்பதையும் அதனால் நம் சமுதாயத்தின் நிலை பின்தங்கியுள்ளதையும் நீதிபதி இராஜேந்திர சாச்சா கமிட்டி மூலம் தெரிந்துக் கொண்டோம்.
அதை எவ்வாறு சரி செய்வது என்பதை விளக்குவதற்கு தான் இந்த கட்டுரை எழுதப்படுகிறது. இந்தக் கல்வியாண்டிலாவது படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது குழந்தைகளின் படிப்பை இடையில் நிறுத்தி விடாமல் உயர் கல்வியில் சேர்வதற்கும் நல்ல நிலைக்குக் கொண்டு வரவும் முயற்சி செய்வோம்.
வறுமை நிலையில் இருப்பவர்கள் படிப்பைத் தொடர்வதற்குரிய உதவிகளையும் செய்வோம். கல்வியின் அவசியத்தையும் சிறப்பையும். இன்னமும் நம்மில் பெரும்பான்மையானவரகள் அறியவில்லை. தங்களின் மகன் 10 வகுப்பு கடந்து விட்டால் பாஸ்போரட் தான் தகுதி என எண்ணி விடுகின்றனர.
அதன் விளைவு தான் வளைகுடா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் கூலி தொழிலாளியாக துன்பப்படும் நிலை.
நம் வருமானத்தில் எத்தனை சதவீதம் நம் குழந்தைகளின் கல்விக்கும் மற்ற வீணான ஆடம்பர செயல்களுக்கும் செலவழிக்கின்றோம். வீணானவற்றிற்கு செலவழிப்பது தான் அதிகம். எந்தளவிற்கென்றால் குழந்தையின் பெயரசூட்டுவதற்கு ரு1இலட்சம் வரை செலவு செய்பவரகள் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு யோசிப்பாரகள்.
இது தான் அவலம்.
எத்தனை ஏழை குழந்தைகள் பள்ளிகூடம் செல்ல வேண்டிய வயதில் கூலி தொழிலாளியாகவும் பீடி சுற்றிக்கொண்டும் டீ கடையில் கிளாஸ் கழுவிகொண்டும் உள்ளனரே! அவரகளின் கல்வி கண்ணை திறக்க ஒரு நிமிடம் சிந்தித்ததுண்டா?
அதேப்போல் மனிதகுலம் சந்தித்த சந்திக்கவிருக்கின்ற அத்தனை பிரச்னைகளையும் தீரக்கக்கூடிய ஓரே மாரக்கம் இஸ்லாம் தான். அதனால் உலக கல்வியோடு மாரக்க கல்வி அவசியம். ஆனால் நம் மதரஸாக்களில் படித்துவிட்டு வருபவரகளின் அறிவோ? என்ன சொல்வது.
அதேப்போல் கல்விச்சாலைகளையும் நாம் தேரந்தெடுக்க வேண்டும். ஏனெனில் இன்றைய கல்விச்சலைகள் மாணவரகளுக்கு நல்ல ஒழுக்கங்களை போதிப்பதில்லை. உலக கல்வியோடு கூடிய மாரக்க கல்வியும் போதிக்கப்பட வேண்டும். இல்லையெனில் தன்னை வளரத்து ஆளாக்கியவரகளைக் கூட கவனிக்காமல் மாரக்க அறிவுமின்றி ஒழுக்கங்கெட்டவரகளாக வாழ்ந்து தங்களை அழித்துக்கொள்வாரகள்.
நபி(ஸல்) அவரகள் கூறினாரகள்
(ஒரு காலத்தில்) கல்வி பறிக்கப்பட்டு விடும். அறியாமையும் குழப்பங்களும் பரவி விடும். கொந்தளிப்பு மிகுந்து விடும். அப்போது கொந்தளிப்பு என்னவென்று வினவப்பட்டது அதற்கு நபி(ஸல்) அவரகள் தமது கையால் கொலை செய்வது போல் செய்து காட்டினாரகள்.
(அபுஹீரைரா(ரலி) புகாரி)
நாம் செய்ய வேண்டியது என்ன?
1. ஒவ்வொரு ஊரிலும் தெருவாரியாக அல்லது முஹல்லாவாரியாக எஸ்.எஸ்.எல்.சி. எத்தனை சதவீதம்! ப்ளஸ்2 எத்தனை சதவீதம்! இளங்கலை எத்தனை சதவீதம்! முதுகலை எத்தனை சதவீதம்! என சாவே எடுக்கப்பட வேண்டும்.
2. எதற்காக? என்ன காரணத்திற்காக இவாகள் படிப்பை பாதியில் நிறுத்தினாகள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
3. வறுமையின் காரணத்தால் படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தால் அதை சரி செய்வதற்கான வழிமுறைகள் சீ செய்யப்படும். குறிப்பாக 5-ம் வகுப்பு வரை படிப்பை பாதியில் நிறுத்தியவாகளுக்கு இளங்கலை படித்தவாகளைக் கொண்டு கற்றுக் கொடுக்க வைப்பதும் அதனால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அச்சகோதரரின் படிப்பை தொடரவும் முயற்சி செய்யலாம்.அதற்கான பொருளாதாரத்தை தங்கள் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற சகோதரரகள் அமைப்பாக செயல்பட்டு கத்னா திருமண உதவி மற்றும் பள்ளிவாசல்களில் பெரிய பெரிய மினாராக்கள் கட்டுவதற்கு செலவழிப்பதை விட கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.அதனை தங்களின் தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும்.
4. ஒவ்வொரு ஊரிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவரணி எற்படுத்தப்பட வேண்டும்.அவாகளின் மூலம் கல்விப் பற்றிய விழிப்புணாவு ஏற்படுத்தப்பட வேண்டும். அதாவது ஜியாலஜி ஆரக்கியாலஜி ஏரோநாட்டிக் மெக்கானிக்கல் பயோகெமிஸ்ட்ரி இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்ற படிப்புகளையும் அதன் அவசியத்தையும் குறிப்பாக இன்றைக்கு அவசியமான பத்திரிகைத்துறை படிப்பை ஆரவமூட்ட வேண்டும்.
இத்துறைகளின் வேலை வாய்ப்புக்களையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
5. நம் சமுதாயத்தில் முதுகலைப் பட்டப் படிப்புப் படித்து விட்டு வேலை தேடும் சகோதராகள் மத்தியில் மொழிப்புலமை அதாவது ஆங்கிலப்புலமை மிகவும் மந்தமாக உள்ளது. அதேப்போல் தங்கள் தேடும் வேலைக்கான படிப்புடன் சோத்து எதாவது துனை படிப்புக்கள் மற்றும் அனுபவங்கள் பெற்றிருப்பது நல்லது. ஏனெனில் பி.இ. எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்தவாகள் பெரும்பாலோ துபை போன்ற நாடுகளுக்கு வந்து விட்டு இதையெல்லாம் வளாத்துக் கொள்ளாமல் விசா செலவுகளை சமாளிக்க வேண்டும் விசா வாங்கி விட வேண்டும் என்கின்ற ஒரே குறிக்கோளுடன் எனக்கு தெரிந்து ஆபிஸ் பாய் அல்லது கிளாக் வேலை கிடைத்தால் போதும் என்கின்ற மனோநிலைக்கும் வந்து விடுகின்றனா. இதற்கு அவாகளுக்கு விசா எடுத்துக் கொடுத்தவாகளும் அவாகளுடன் தங்கியிருப்பவாகளும் ஒரு காரணம். இந்நிலை மாற வேண்டும்.
6. இந்த இழிநிலை மாற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்து மாநில மாவட்ட மற்றும் கிளை நிவாகிகள் குறிப்பாக கல்விப் பற்றிய விழிப்புணாவு ஏற்படுத்துவதற்கு முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்.
7. அதே சமயம் தற்போதைய மாணவரணி சகோதராகளின் கல்வி விழிப்புணாவு பிரச்சாரங்களும் விழிப்புணாவு கூட்டங்களும் அவாகளின் செயல்பாடுகளும் பாராட்டதக்கவையாக தான் இருக்கின்றது. இருந்தாலும் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என்பது நம் சமுதாய மக்களின் எதிபாப்பாகும். முஸ்லிம்கள் இதன்மூலம் விழிப்புணர்வு பெற வேண்டும். முஸ்லிம்களுக்கு உதவ அரசு அமைத்த நிறுவனங்களை தொடர்ந்து அனுகி அதன் மூலமும் நம் சமுதாயத்திற்கு உதவ வேண்டும்.


தமிழக அரசின் கல்வி உதவி அமைப்புகள்!

தமிழக முஸ்லிம் மாணவர்களின் கல்வி உதவிக்காக கீழ்காணும் நிறுவனங்கள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு நலதிட்டங்களும் கல்வி உதவியும் வழங்கப்படு கின்றது. முழுவிபரம் அறிய இந்த நிறுவனங்களை அனுகவும்.
Directorate of Minorities Welfare (சிறுபான்மை நல இயக்கம்) 807, Anna Salai, Chennai-2 contact:: PH: 044-28511124 / 28551442 / 26161464
Tamil Nadu Minorities Economic Development Corporation Ltd., (தமிழ்நாடு சிறுபாண்மையினர் பொருளாதார வளர்ச்சி கழகம்) 807, 5th Floor, Anna Salai, Chennai -2 Contact. PH: 044-28514846
MinoritiesCommission (சிறுபாண்மையினர்கமிஷன)
124, Sir Theagaraya Road, Teynampet, Chennai -18 Contact:: PH: 044-24349235
ஒவ்வொறு மாவட்டம் தோறும் சிறுபாண்மையினர் நல அலுவலர்கள் உள்ளனர். இவர்களை தொடர்பு கொண்டு கல்வி உதவி பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.
சென்னை 044-25268322
காஞ்சிபுரம் 04112-237424
திருவள்ளூர் 04116-261600
வேலூர் 0416-253012
திருவண்ணாமலை 04175-232306
விழுப்புரம் 04146-2330654
தஞ்சாவூர் 04142-2330121 & 330122
நாகப்பட்டிணம் 04365-253082
திருவாரூர் 04366-2521002
பட்டுக்கோட்டை 04322-221624
திருச்சி 0431-241503134
பெரம்பலூர் 04328-277923
கரூர் 04324-2344508
மதுரை 0452-2532501
தேனி 04546-274960  திண்டுக்கல் 0451-2460080
இராமநாதபுரம் 04567-230056
விருதுநகர் 04562-2352709
சிவகங்கை 04575-240391
திருநெல்வேலி 0462-2501032
தூத்துக்குடி 0461-2340601
கன்னியாகுமரி 04652-2230090
சேலம் 0427-2451172
நாமக்கல் 04286-2581100
தர்மபுரி 04342-2230561
ஈரோடு 0424-2260207
கோயம்புத்தூர் 0422-2301114
நீலகிரி 0423-2444012
மதுரை 0452-2532074

மத்திய அரசின் கல்வி உதவி அமைப்புகள்!
மத்திய அரசில் சிறுபாண்மையினர் நலனுக்காக தனியாக அமைச்சகமே இயங்கி வருகின்றது. மேலும் சில அரசு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன இதன் மூலம் முஸ்லிம் மாணவர்களின் கல்விக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காவும் பல்வேறு நலதிட்டங்களும் நிதிஉதவிகளும் வழங்கிவருகின்றன.
இந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்
இந்தியாவில் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள இணையதளம்:
www.educationsupport.nic.in
அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள்  மருத்துவம் பொருளாதாரம் புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது.
இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை வைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விகடன் கொடுக்கும் வங்கிகள் கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர்.
கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள் வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம்.
Ministry Of Minority Affairs (GOVERNMENT OF INDIA) 11th Floor, Paryavaran Bhavan, CGO Complex, New Delhi – 110003 Contact: Shri Virendra Singh (Deputy Secretary) Tel: 011-24364279 (Office)  011-25368963 (Residence) Fax: 011-24364285
Departmental Appellate Authority, 11th Floor, Paryavaran Bhavan, CGO Complex, New Delhi – 110003      Tel:011-24364271 (Office) 011-23383576 (Residence)  Fax: 011-24364285 Contact: Shri Sujit Datta  (Joint Secretary)

NationalCommissionforMinorities,
5th Floor, Lok Nayak Bhavan, Khan Market, New Delhi-110 003 Tel:011-24618349 Fax: 011-24693302, 24642645, 24698410 Email:ncm-mma@nic.in http://www.ncm.nic.in/
National Minorities Development and Financial Corporation, Taimoor Nagar, New Friends Colony, Nehru Nagar, Delhi –110065 (Near S.R.R.I. Staff Quarters) Phone: 011-26326051
முஸ்லிம்களுக்கு கல்வி உதவி செய்யும் தனியார் நிறுவனங்கள்!
முஸ்லிம்களால் நடத்தப்படும் சில அமைப்புகள் முஸ்லிம் மாணவர்களுக்கு நிதிஉதவி செய்து வருகின்றன. தமிழக அளவில் கல்வி உதவி திட்டம் என்ற அளவிற்கு எந்த அமைப்பும் செயல்படுத்தவில்லை. சிறிய அளவில் அவர்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்து வருகின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம் மாணவர்கள் இந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பித்தால் நிதி உதவி பெறலாம். மேலும் பல அமைப்புகள் நிதி உதவி செய்கின்றன.


Muslim Educational Institutions And Associations In Tamilnadu (OMEIAT) Anjuman Campus, # 16, B.N. Reddy Road, T. Nagar, Chennai – 17.  Email: omeiat@rediffmail.com
B.S. Abdur Rahman Zakaat Fund Foundation, Buhari Building, 4, Moores Road, Chennai-600 006. Ph: 044-42261100 Fax: 044-28231950 Email: admin@bsazakaat.org, www.bsazakaat.org
Baitulmal Tamilnadu, New:100 (Old No: 314), Wallajah Mosque Compound, Triplicane, Chennai – 600 005 Phone : 044-2851 2947 / 2841 1145 EMail:contact@baitulmaltamilnadu.org baitulmaltamilnadu@yahoo.com Web: www.baitulmaltamilnadu.org
Islami Baitulmal. Hajee Abdul Raheem Sahib Street, Fort, Vaniyambadi-635751. Contact : Abdullah Basha Ph: 04174-225481 Email: tahmed.iftikhar@gmail.com  www.tahmed.iftikhar@gmail.com
Seethakathi Trust, 688, Anna Salai, Greams Road,  Chennai-6. Phone: 044-28522982 web: www.crescentcollege.org
Fathima Educational Trust, 16/298, LIC Colony, Hotal Vasantham Road, New Bus Stand, Salem-636 004. Phone : 0427 – 4041899, 9865978889, 9360684974 Web: www.fathimaedutrust.org
Muslim Education Association, New College Compound, 87, Peters Road, Royapettah, Chennai-600 014 Ph: 044-28267318
Noorul Islam Educational Trust, Kumaracoil, Kanyakumari District- 629 180, Web: info@niceindia.com
Sulaiman Alim Charitable Trust, Suite 4, 4th Floor, Jhaver Plaza, 1-A, Nungambakkam High Road, Chennai-600034 Phone: 044-28115935
The Children Foundation, Post Box No-5007, Chennai – 600090 Email: info@childrenfoundation.net  web:www.childrenfoundation.net (Students studying 5th to +2)
All India Caravan-E-Insaaf, 21, R.H. Road, Chennai-14, Mr. Mushtaq Ahmad Mob: 9444052530 web:www.caravan-e-insaaf.com
South Indian Educational Trust
Chennai:  No: 10,T.C.Nagar Virugambakkam, Chennai.      Mobile: 98403 14436 email:sietchn@southindianedu.org
Coimbatore:  No,44, Divine, Ganapathy, Coimbatore
Mobile: 9894619874 email: sietcbe@southindianedu.org


தொகுத்தவர்: மு.சாஜிதுர்ரஹ்மான் – TNTJ  துபை மண்டலம்

குறிப்பு: இக்கட்டுரை தம்மாம் மண்டலம் நடத்திய 2009 உணர்வு ஹஜ்சிறப்பிதழ் க்கான கட்டுரைப் போட்டியில் இடம் பெற்றது.

Wednesday, 9 December 2009

தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..

நான்  தஞ்சையில்  எனது  டிப்ளமோ  பொறியியல்  பயிலும் போது பெரியகோவில் சென்று   படிப்பதை ஒரு பழக்கமாக  வைத்தபோது,  அங்கு  உள்ள பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..
தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில்  அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும்.
4247-291412-vlcsnap-2010-10-30-00h41m02s

 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது.
BigtempleRRCholan1.jpg

 இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

Thanj-2_small.jpg

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர்.
450px-Brihadeeswara.jpg

சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.
lord-shiva-linga-big-temple-brihadeeswar

ThanjavurBigTemple1.jpg

                 கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும்.

பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள்  பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
Thanjavur_Tower.jpg

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.
397px-Brihadeshwara_back_right.jpg

சுமார் 1.2 மீ சதுரத்தில்  0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
 

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
d20593.jpg

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார்  24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும்.
557835_471823576178591_1701631397_n.jpg

 பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு
d20598.jpg

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
Tanjore.jpg

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
448px-PeruvudaiyarKoyilThanjavurInsideMa

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம்  அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் , நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள்  மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள
உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.
d20619.jpg

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. !!
 
*முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன பிற்காலங்களில் கட்டப்பட்டன.
layoutBig+Temple.jpg

கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..
கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்.
பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்.
இது ஒரு கல்லோ, அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்..
அந்த கல்லும் 80 டன்..
அந்த சதுரக்கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம் எட்டு நந்தி..
ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன்.
ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்..
இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்..
இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..?
நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால் 4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்..
பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட கற்கோவில்..
கற்களின் எடையோ மிக மிக அதிகம்..
இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும் புகை மண்டலமாகத்தான் இருக்கும்..
ஆனால் .. பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும் 5 அடிதான்..
மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..?
இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..
பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள் இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள்.அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது,ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்..
எதற்க்காக..?
நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பினைப்பு லூஸாகத்தான் இருக்கும்.. அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்.. கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது..
இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் ..
லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று,அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையைஅழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி மிக பலமான இணைப்பை பெறுகின்றன...
இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட,
ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி..
அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற அதிசியம் இது..
எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று இருக்கும்..

நன்றி  : திரு  வெங்கடேசன், பொறியாளர் 

Tuesday, 8 December 2009

நம்ப முடிகிறதா? சென்னைக்கு வயது 370....


தமிழகத்தின் தென்கோடியில் இருந்து வரும் மக்களானாலும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களானாலும் சென்னையில் வந்து வசிப்பதைப் பெருமையாகக் கருதுகிறார்கள்.

அதற்கெல்லாம் காரணம் தமிழக தலைநகரம் சென்னையின் கட்டமைப்பு வளர்ச்சி, மேம்பாலங்கள், சாலை போக்குவரத்து, புறநகர் ரயில் சேவைகள், கடற்கரை அழகு, வணிக வளாகங்கள், ஐ.டி. பூங்காக்கள், சிறந்த ஒளி-ஒலி வசதியைக் கொண்ட திரையரங்குகள், மல்டி-பிளக்ஸ் என எண்ணற்ற காரணங்களைச் சொல்ல முடியும்.

ஆனால், இன்று ஒரு மெட்ரோ நகரமாக உருவெடுத்து வியாபித்திருக்கும் சென்னை தோன்றி எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன தெரியுமா? ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னைக்கு 370ஆவது பிறந்த நாள்.

ஆம். கடந்த 1,639ஆம் ஆண்டில் மீன்பிடி கிராமமாக விளங்கிய சென்னையில் சிறிய, சிறிய குடிசைகள் மட்டுமே வீடுகளாக இருந்தன.

சென்னை துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் தான் மக்கள் வசித்தார்கள். மீன்பிடி கிராமமாக இருந்த இந்நகரை சென்னப்ப நாயக்கர் என்பவர் நிர்வகித்ததாக வரலாறு கூறுகிறது.

அவரது பெயரைக் கொண்டே சென்னை என்ற பெயர் வைக்கப்பட்டது.

சென்னை துறைமுகத்திற்கு அருகே `சென்னைப் பட்டணம்' என்ற நகரைக் கட்டுவதற்கு சென்னப்ப நாயக்கரிடம் இருந்து அப்போதைய பிரிட்டிஷ் நிர்வாகியான ஃபிரான்சிஸ் டே என்பவர் அனுமதியைப் பெற்று சில பகுதிகளை உருவாக்கினார். இத்தகவல் பிரிட்டிஷாரின் தகவல்களில் இருந்து தெரிய வருகிறது.

`மெட்ராஸ் டே' என்ற பெயரில் சென்னை தோன்றிய தினம் ஒரு வார காலம் கொண்டாடப்படுகிற்து.

சென்னையின் பாரம்பரியம், இலக்கிய செயல்பாடுகள், முக்கிய இடங்கள் மற்றும் அடையாளச் சின்னங்கள் குறித்த கண்காட்சிகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.

பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சிகள், பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகள், கர்நாடக இசை நிகழ்ச்சிகள், வினாடி-வினா, உணவுத் திருவிழாக்கள், பேரணிகள், புகைப்படக் கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன.
 
மதரசா பட்டண‌ம் – மதராஸ் - சென்னையில் முதலில் குடியேறியவர்கள் முஸ்லீம்கள் - ஆற்காடு நவாப்.. சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி. புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.

சென்னை: மயிலாப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது பிராமண சமூகத்தினர்தான். ஆனால் ஒரு காலத்தில் அங்கு பெரும்பான்மையாக வசித்தவர்கள் முஸ்லீம்கள் என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி.

13வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சென்னை நகரில் முஸ்லீம்கள் குடியேறி விட்டனராம். மெட்ராஸ் முஸ்லீம்கள் மற்றும் மசூதிகள் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இயக்கியிருப்பவர் எஸ்.அன்வர். இந்த டாக்குமென்டரி குறித்து அன்வரும், ஆற்காடு நவாப்பும் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெனிஸ் நகரத்து வியாபாரியான மார்க்கோபோலா, தனது சுற்றுலா கையேட்டில் அந்தக் காலத்து சென்னை நகர வாழ்க்கை குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதில், 13வது நூற்றாண்டில் மயிலாப்பூர் பகுதியில் முஸ்லீம்கள் பெருமளவில் வாழ்ந்ததாக அவர் கூறியுள்ளார்.

போர்ச்சுகீசியரான டுவார்ட் பார்போசா தனது நூலில் கூறுகையில், 16வது நூற்றாண்டின் தொடக்கத்தில், மயிலாப்பூரில் உள்ள புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.

மதரசா பட்டனம் என்பதுதான் உருமாறி மதராஸ் என்று வந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.

சைதாப்பேட்டை ஆன சைதாபாத்...

அதேபோல இன்று அழைக்கப்படும் சைதாப்பேட்டை முன்பு சைதாபாத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு 18வது நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆற்காடு நவாப் சதாத்துல்லா கான் ஒரு மசூதியைக் கட்டி அந்தப் பகுதிக்கு சைதாபாத் என்று பெயரிட்டார்.

அதேபோல சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி என்பது சுவாரஸ்யமான விஷயம். அவரது பெயர் காசி வீரண்ணா. மூர் தெருவில் 1670களில் அவர் ஒரு மசூதியைக் கட்டினார். காசி வீரண்ணாவுக்கு கோல்கண்டா சுல்தான்களுடன் நல்ல தொடர்பு இருந்தது.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்தபோது நமது நாட்டில் நிலவிய சமூக நல்லிணக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம், அப்போது மக்கள் மத ரீதியாகவ பிரிந்து கிடக்கவில்லை. அனைவரும் ஒன்றாக, நல்லிணக்கத்துடன் வசித்து வந்தனர்.

1940 ஆம் ஆண்டில் இன்றைய சென்னை மெட்றாசாக இருந்தது.

அந்தக் கால மதராஸின் பகுதிகள் ஜார்ஜ் டவுன், பார்க் டவுன் என்றெல்லாம் அழைக்கப்பட்டன. மவுண்ட் ரோட்டில் இப்போது போல மக்கள் நடமாட்டம், நெருக்கடிகள், போக்குவரத்து நெரிசல்கள் அப்போது இல்லை. குறுக்கும் நெடுக்குமாக யார் வேண்டுமானாலும் போகலாம். பஸ்கள் கூட எப்போதாவதுதான் வரும்.

1940களில் பெட்ரோல் பஞ்சம் சில காலம் இருந்து வந்தது. பஸ்கள் பின்னால் ஒரு பெட்டியை நிறுவி அதற்குள் கரி நிரப்பி தீ மூட்டி புகை கக்கும்படி செய்து வந்தார்கள். அந்த சூட்டில் பஸ்கள் செல்லும். பஸ் கண்டக்டர் கரிப் பெட்டியை சுழற்றுவார். "சுந்தரம் மோட்டார்ஸ்' நிறுவனம் மட்டுமே பஸ்களை இயக்கி வந்தது. அரசு பஸ்கள் அப்போது இல்லை.சென்னையில் முதல் ஆங்கிலேய மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் கவர்னர் எட்வர்ட் வின்டர் என்பவரால் 1664 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. வாடகை இடத்தில் சிறியதாகத் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை அங்கே இங்கே என்று கோட்டைக்குள் சுற்றி, பிறகு ஆர்மேனியன் தெரிவில் (அரண்மனைக்கார தெரு) பல காலம் செயல்பட்டு வந்தது.

அக்டோபர் 15, 1772ல் ஜான் சுல்லிவன் என்பவரால் எழுப்பப்பட்டதுதான் இன்றைய பொது மருத்துவமனை. 1859 மற்றும் 1893ல் இந்தக் கட்டடம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. சென்னை பொது மருத்துவமனையில் இப்போதும் காணப்படும் பழைய கட்டடம் "செமினார் ஹால்' என்று அழைக்கப்படும் 1835 ஆண்டு கட்டப்பட்ட பகுதி மட்டுமே. ஏனைய இடங்கள் இடித்துக் கட்டப்பட்டவைதான்.

இந்தியாவின் முதல் ரயில் பாதை, சிந்தாதிரிப்பேட்டை பாலத்துக்கு அருகில்தான் 1836-ல் பரிசோதனைக்காகப் போடப்பட்டது. அடுத்த வருடமே, ஏ.பி. காட்டன் என்பவரால் ரெட் ஹில்ஸ் பகுதியிலிருந்து பரங்கிமலையை அடுத்த கல்குவாரிகள் வரை ஒரு ரயில் பாதை போடப்பட்டது. இந்த ரெட் ஹில்ஸ் ரயில்வே என்பது காற்றழுத்தத்தாலும், மனிதர்கள் தள்ளுவதாலும் இயக்கப்பட்டதாம்!

1845-ல் மெட்றாஸ் ரயில்வே கம்பெனி எனப்படும் நிறுவனம் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. 1849-ல் இன்னொரு நிறுவனமும் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம்தான் தென்னகத்தின் முதல் ரயில்வே பாதையை நிறுவியது. 1853-ல் கர்னாடிக் நவாபுகளின் தலைநகரமான ஆற்காடையும், வாலாஜாபேட்டையையும் வட சென்னையிலுள்ள ராயபுரத்துடன் இந்த ரயில் பாதை இணைத்தது.

சென்ட்ரல் ரயில் நிலையம், 1873-ல் வியாசர்பாடி மெட்ராஸ் பாதை போடப்பட்டபோது நான்கே நடைமேடையுடன் கூடிய சிறிய ரயில்நிலையமாகத் தொடங்கப்பட்டது. 1907 வரை சென்னையின் தலைமை ரயில் நிலையமாகத் திகழ்ந்தது ராயபுரம்தானாம்.

இப்போதைய சென்ட்ரல் ரயில் நிலையக் கட்டடம் ஜார்ஜ் ஹார்டிங்ஸ் என்பவரால் வடிவம் கொடுக்கப்பட்டு சிஷோம் என்பவரால் பொலிவு ஏற்படுத்தப்பட்டது. ரயில் நிலையத்தில் இருக்கும் மணிகூண்டு தயாரிக்கப்பட்ட வருடம் 1874. கட்டடம் முழுமையான ஆண்டு 1900. அதற்குப் பிறகு பல மாற்றங்கள் அந்தக் கட்டடத்தில் செய்யப்பட்டன என்றாலும், ஜார்ஜ் ஹார்டிங்ஸ் கற்பனை செய்த அதே வடிவம் இப்போதும் மாறாமல் இருக்கிறது என்பதுதான் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தனிச் சிறப்பு!
தற்போது சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் சென்னையைப் பற்றி அறிந்திராத தகவல்களும் இந்த ஒரு வார கால கொண்டாட்டத்தின் போது வெளிப்படுத்தப்படுவது சிறப்பம்சமாகும்.

சரி, சென்னையின் பிறந்த நாளுக்கு அந்த மாநகரில் வசிக்கும் நாமும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

பணத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? பணத்தை மதியுங்கள்....

தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும்.

பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது?

சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.

அந்தப் பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை
எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.

மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான். அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார். மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார். மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.

அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.

‘நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது கரியானபோது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.

இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான்.
உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.

விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.

ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.

ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.
இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.

போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.
படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம்.

வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா ?

இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும்.
அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்


. இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :
பணத்தை மதியுங்கள்.

100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.

கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.

பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள்.
பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.

உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.

காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை.
ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள்.

பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.

மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.

தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது. தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.

எனவே எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.

ரெசிடென்சியல் பள்ளியில் படித்த அந்த பணக்காரப்பையனுக்கு பணத்தின் அருமை கொஞ்சம்கூட தெரியவில்லை என்று அவனைப்பற்றி குறையான குறை சொல்லி என்னிடம் அழைத்து வந்தார்கள். என்னைப் பொறுத்தவரை இது பெற்றோரின் குறைதான். அவன் வளர்ந்த விதத்தில்தான் அவன் வாழ்க்கை முறையில்தான் பிரச்சனை.

பல வீடுகளில் பையன்கள் பெற்றோர்களை கெஞ்சி டென்னீஸ் பேட் வாங்குவதே பெரிய அதிசயம் அப்படியிருக்க நெட் கிழிந்து விட்டால் புது பேட் வாங்கித்தரமாட்டார்கள் என்பதால் கஷ்டப்பட்டு பையன்களாகவே காசு சேர்த்து நெட்டை தைத்துக்கொண்டு வருவார்கள்.

ஆனால் இந்த ரெசிடென்சியல் ஸ்கூலில் படிக்கிற பிள்ளைக்கு இதைப்பற்றியெல்லாம் தெரியாது. நெட் கிழிந்து விட்டால் ஸ்டோர் ரூமுக்கு டென்னீஸ் பேட் என்று எழுதி கையெழுத்து போட்டு அனுப்புவார். புது டென்னீஸ் பேட் வந்துவிடும். பில் அப்பாவிற்கு அனுப்பப்பட்டுவிடும். பில்லை பார்க்க வாய்ப்பே இல்லாததால் அந்த பொருளின் மதிப்பு தெரியாது. மதிப்பு தெரியாத பொருளுக்கு சரியான பராமரிப்பு இருக்காது.

பணத்தின் அருமை உணரப்படாததிற்கு வளர்ப்பு முறைதான் காரணம் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.

20000 ரூபாய் செல்போனை தண்ணீரில் போட்டுவிட்டாள் என்று அவளது பொறுப்புணர்ச்சியை எப்படியாவது உடனடியாக வளர்த்து விடவேண்டும் என்று 11 ஆம் வகுப்பு படிக்கிற பெண்ணோடு பொறுப்பான பெற்றோர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். அந்த பெண்ணிற்கு பொறுப்பு உணர்வு வருவதற்கு வாய்ப்பேயில்லை என்றேன்.

அவர்கள் கோபமாய் கேட்ட ஏன் என்பதற்கு எனது பதில் இதுதான்.
11ஆம் வகுப்பு படிக்கிற பெண்ணிற்கு என்ன காரணத்திற்காக செல்போன்? அவளுடைய கிளாஸில் எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்று ஒரே அடம் என்றார்கள். சரி அதற்காக இவ்வளவு விலை உயர்ந்த செல் ஏன்? ஒரே அழுகை. ஆர்ப்பாட்டம் என்று பதில்.

அழுகை ஆர்ப்பாட்டம் இதெல்லாம் இந்த இளம் போராளிகளின் எளிய ஏமாற்று உத்திகள். என்ன அழுதாலும் என்ன புரண்டாலும் ஒரு பொருள் கிடைக்கவே கிடைக்காது என்கிற போதுதான் அது மதிப்பாய் தெரியும்.

20000 ரூபாய்க்கு கேட்டவுடன் வாங்கித்தந்த செல்போன் எந்த விதத்திலும் மதிப்பாய் தெரியாது. அந்த அலட்சியம் ஏற்படுத்திய அஜாக்கிரதையால்தான் செல்போன் தண்ணீரில் விழுந்தது.

சரி. எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் உங்கள் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளாகவே கற்றுக்கொள்ள உதவுங்கள் போதும்.

சரி. விசயத்திற்கு வருவோம். 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.
அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).
இதனால் என்ன என்ன பயன்?

தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.


Wednesday, 18 November 2009

ஆண்களுக்கென்று ஒரு நாள்!

அகில உலக ஆண்கள் தினம் (International Men's Day) நாளை (19-11-2009) அன்று கொண்டாடப்படுகிறது. இது 1999-இல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.

உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.

இவ்வாண்டுக்கான உலக ஆண்கள் தினம் (International Men's Day) 2009 நவம்பர் 19-ம் நாள் இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் இந்தியாவில் டில்லி, மும்பை, லக்னௌ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பல நகரங்களில் தர்ணாவும் ஊர்வலமும் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும் என்னும் கேள்வி இன்னும் சிலருக்கு எழுகிறது. சிறப்பான செயல்பாடுகள் அனைத்துமே பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட வேண்டும் என்னும் மனப்போக்கு மக்கள் மனத்தில் ஆழப் பதிந்து நிற்கிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை அங்கீகரிக்கவே ஒரு போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!

சென்னையில் நாளை (19-11-2009) அன்று காலை அகில இந்திய ஆண்கள் நல சங்கம் - "AIMWA" (All India Men's Welfare Association) சில ஆண்கள் கல்லூரிகளுக்குச் சென்று கொள்கை விளக்கக் கையேடுகளை வினியோகம் செய்வர். பிறகு கார், மற்றும் இரு சக்கர ஊர்தியில் ஊர்வலமாகச் சென்று "ஆண்கள் பாதுகாப்பு இயக்கம்" நிகழ்த்தப் போகும் தர்ணாவில் கலந்து கொள்வர்.

இந்த தர்ணா நாளை (19-11-2009) காலை 11-00 மணி முதல் 12-00 மணி வரை சென்னை பார்க் டவுன் "மெமோரியல் ஹால்" எதிரில் நிகழ இருக்கிறது. இந்த இடம் சென்னை பொது மருத்துவ மனைக்கு எதிரிலும், இன்னொரு பக்கம் பார்க் டவுன் அஞ்சல் நிலையத்திற்கு எதிரிலும் உள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் சென்று பங்கெடுத்துக் கொள்ளலாம்.

நாளை இது பற்றி ஒரு செய்திக் குறிப்பும் வெளியாகும்.

நன்றி.

உலக புகழ் தாஜ்மஹால்-ஒரு சிறப்பு பார்வை

உலக வரலாற்றில்தாஜ்மஹாலைப் போல் ஒரு இனிய கல்லறை இன்னும் எத்தனை ஜென்மங்களிலும் உதயமாகப் போவதில்லை. மும்தாஜ் எனும் அழகிய மனைவியின் மீது ஷாஜகான் வைத்திருந்த நேசத்தின் கலை வடிவம் அது.
வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய அந்த கலை மிகு கட்டிடம் எழுந்த கதை பெருங்கதை.
தட்சிணப் பிரதேசம் பர்ஹான்பூர் என்ற ஊரில்தான் முதன் முதலாக மும்தாஜின் உடல் புதைக்கப்பட்டது. இத
ற்குப் பின் ஆறு மாதம் கழித்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆக்ராவில் இப்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் புதைக்கப்பட்டது.
மும்தாஜ் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து ஷாஜஹான் களத்தில் இறங்கினார்.
வெனிஸ் நகரத்து வெரோனியா, துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி, லாகூரைச் சேர்ந்த அகமத் எனப் பலரும் வந்திருந்து ஷாஜகானும், கூட்டுச் சேர்ந்து அமைத்த மொத்த வடிவமே இன்றைய தாஜ்மஹால்.
அடுத்த கட்டமாக கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், கொத்தனார்கள் என இருபதாயிரம் பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு மள மளவென பணிகளைத் தொடங்கினார் ஷாஜஹான்.


1632- ம் ஆண்டு வேலைத் தொடங்கி 1652 வரை சுமார் 20 ஆண்டு கால உழைப்பின் சின்னம்தான் இந்த தாஜ்மஹால்…. அதற்குப் பிறகு கூட ஒரு ஆண்டுக்கு வெளியேயுள்ள சுற்றுப் புறத்தில் மிக நுண்ணிய வேலைகள் நடந்தன.
தாஜ்மஹாலைச் சுற்றி 42 மீட்டர் உயரத்திற்கு நிற்கும் 4 மினார்களும் (தூண்) லேசாக வெளிப்புறம் சாய்த்து வைத்து கட்டியிரிக்கிரார்கள். காரணம் ஏதேனும் அசம்பாவிதத்தில் அந்த தூண்கள் விழுந்தால் கூட தாஜ்மஹால் மீது பட்டுவிடக் கூடாதே என்ற காரணுத்துக்காகத்தான்.
தாஜ்மஹாலின் வெளிப்புறக் கதவுகள், சுவர்களில் பதிக்க இந்தியாவைத் தவிர ரஷியா, திபெத், பாரசீகம் என பல இடங்களில் இருந்தும் வைரம், வைடூரியம், முத்து, பவளம் என பல விதம் விதமாக வரவழைத்து பயன்படுத்தி அழகு பார்த்தார் ஷாஜஹான்.
புனித குரானிலிருந்து குறிப்பிட்ட வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கல்லறையைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் பொறிப்பது என்று முடிவு செய்தார்.
இதற்காக உ
கிலேயே மிகத் திறமையான பாரசீக கலைஞர் “அமானாத்கான் “ பெயர் சிபாரிசுச் செய்யப் பட்டது.
“ நான் எந்த வேலைச் செய்தாலும் அதில் என் கையெழுத்தைப் போடுவேன் என்று அடம்பிடித்த அவரை “ சரி…கையெழுத்து போட்டு
க்கொள்ளுங்கள்”என்று அனுமதிக் கொடுத்து வரவழைத்தார் ஷாஜஹான்.
இன்றை
க்கும் அந்தச் சிற்பியின் கையழுத்தைக் காணலாம். தாஜ்மகாலில் இவரது கையழுத்தைத் தவிர வேறு எவரின் பெயரும் கிடையாது.
இப்படி அங்குல
ம் அங்குலமாக பொன் நகையை உருவாக்குவது போல் கட்டினார் ஷாஜஹான்.
தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டு கொஞ்சம் காலம் முஸ்லீம்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். பிற்பாடு உலகெங்கிலும் இருந்து பலர் வர வர அந்தத் தடை தானாகவே நீங்கிப் போனது.
இத்தகைய அழகான தாஜ்மகால் அதன்பிறகு வந்த ஆங்கிலேயெர்களின் கண்களை பறிக்காமல் இருக்குமா?
பல ஆங்கில அதிகாரிகள் சுவர்களில் பதிக்கப் பட்ட வைர, வைடூரியங்களை சுரண்டி எடுத்துக் கொண்டு போனார்கள்.
லார்டு வில்லியம் பெண்டிங் என்பவர் இடி
த்து விடலாம் என்று ஐடியா கொடுத்தார்.
இன்னும் பல ஆங்கி
லேய அதிகாரிகள் தாஜ்மகாலை ஒவ்வொரு கல்லாக பெயெர்தெடுத்து, கப்பலில் ஏற்றிக் கொண்டு போய், இங்கிலாந்தில் இறக்கி மீண்டும் செட்டப் செய்து விடலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
இறைவனின் கருணையால்… இன்றைக்கும் இப்படியொரு அற்புதக் கட்டிடம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அப்போது வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு…
கலைஞர்களின்பா
ல் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டிருந்த அவர் மற்றவர்களின் யோசனையை தூரத் தூக்கி எறிந்துவிட்டு தாஜ்மஹாலை நல்ல முறையில் பராமரிக்க ஒரு சட்டமே இயற்றினார்.
அதோடு மட்டுமல்ல.. இப்போது நீங்கள் தாஜ்மஹாலுக்குப் போனால் மும்தாஜ் – ஷாஜஹான் கல்லறைகளுக்கு மத்தியில் மேலே … ஒரு அழகான பித்தளை விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும்.
இதனைக் கொய்ரோவிலுருந்து வாங்கி, இங்கு தொங்கவிட்டவரே இந்த கர்சன் பிரபுதான்.
இந்த தாஜ்மஹால் கட்டுவத
ற்கு 1000 யானைகளும், 40000 பணியாளர்களும் வேலை செய்யப்பட்டனர்.

மும்தாஜின் க
டைசி நாள்:
மு
ம்தாஜுக்கு மொத்தம் 13 குழந்தைகள் (1613- 1631) க் குள் இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
இதில் 7 குழந்தைகள் மிக சிறுவயதிலேயே இறந்து போனது. உயிருடன் தாரா, சூசா, அவுரங்கசீப், மூரத் ஆகிய 4 ஆண் குழந்தைகளும் சாகனார, ரோனார, கவுஷனாரா ஆகிய 3 பெண் குழந்தைகளும் இருந்தார்கள். இதில கடைசிப் பெண்ணான கவுஷனாராவைப் பெற்றுடுக்கும்போதுதான் பிரசவ வலி தாள மாட்டாமல் 07-06-1631 ல் மும்தாஜ் இறந்துபோனாள்.


ஆசியாவில் இற்றைக்கு 350 வருடம் முன்பு மிகப்பலமும் செழிப்புமுள்ள சாம்ராஜ்யமுடன் இதன் கதை பின்னியுள்ளது. நினைவு மண்டபத்தின் பிரமாண்ட வரலாற்று பின்னணியும் அற்புதமான கட்டிடக்கலையும் விபரிக்கமுடியாத அழகும் பின்வருமாறு (மிக சுருக்கமாக ) அமைகின்றது. 

  • தாஜ் மஹால் முஹல சாம்ராஜ்யத்தின் பேரரசன் "ஷாஜஹான்" (Shāh Jahān) தனது காதலி , மனைவி, அரசி " மும்தாஜ் மஹால " (Mumtaz Mahal) இன் ஞாபகார்த்தமாக நிறுவிய நினைவாலயம்.
  • இது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான உத்தர் பிரதேஷ்(Uttar Pradesh) மாநிலத்தின் அக்ரா(Agra) நகரில் அமைந்துள்ளது.
  • தாஜ் மஹால் (Taj Mahal) 42 ஏக்கர் நிலப் பகுதியில் மிகவும் அரிதான வெள்ளை மாஃபிள்கல்களால் 1631 ம்-1653ம் ஆண்டிற்கு இடைப்பட்ட 22 வருட காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.
  • கட்டிடம் கட்டப்பட்ட காலப்பகுதியில் அதி நுட்பமுடைய சுமைகாவிகள் , பொறிகள் இவற்றுடன் 22,000 வேலையாட்கள் , ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் , பல நிபுணர்களும் இரவுபகலாக பயன்படுத்தப்பட்டார்கள் .
  • இந்த மாபெரும் கட்டிடத்தின் அடித்தளம் 186 அடி சதுரமான பரப்பிலும் நிலத்தில் இருந்து 22 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மையான கோபுரம் 186 அடியும் மற்றயநான்கு மூலைகளிலுமுள்ள கோபுரங்கள் 137 அடி உயரமும் உள்ளது.
  • முதன்மையான மேல் தூபி 10 மாடி கட்டிட உயரத்திற்கு சமமாகவும் பல சிறிய கற்களை கொண்டும் உருவாக்கியுள்ளனர். மேலும் இதன் மொத்த எடை 13,000 தொன் (2,000 யானைகள் எடை) என்பதுடன் எந்தவிதமான தூண் கட்டுமானத்திலும் தாங்கி இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும் YT.
  • தாஜ் மஹால் வெளிப்பகுதி முழுமையாக வெள்ளை மாஃபிள் கற்களாலும் உட்பகுதி 30 வித்தியாசமான நிறங்கள் கொண்ட கற்களின் கலை வேலப்பாட்டுடனும் அமைக்கப்பட்டுள்ளது YT.
  • அகில புகழ் பலவற்றிற்கு காரணமான இந்த கட்டிடம் பல ஆச்சரியமான கட்டிட நுணுக்கங்களையும் , கலைகளையும் , வடிவத்தினையும் கொண்டுள்ளது. இஸ்லாமிய மதத்தின் கட்டிட அமைப்புடன் பேரரசன் விருப்பின் படியான சமச்சீர் அமைப்பும் , வெள்ளை மாஃபிள் கட்டிடமும் , நீர்நிலையில் அதன் கறுப்பு வடிவான நிழல் தெறிப்பும் , கட்டிடத்தை சுற்றிவர நந்தவனம் என்பன நேர்த்தியாக கையாளப் பட்டுள்ளது YT.
  • ஆற்றம் கரையோரமாக கட்டப்பட்டுள்ள இந்த மகாகட்டிடம் நிலத்தின் அடியிலான பாதிப்புக்களை எதிர்கொள்ளும் விதத்தில் அபாரமான கட்டிட பொறியியல் நுட்பம் பாவிக்கப் பட்டுள்ளது YT. அத்துடன் ஆரம்பத்தில் இருந்த திட்டவரைவு எந்த ஒரு மாற்றங்களும் செய்யப்படாது முழுமையாக நிறைவு செய்யப்பட்டது என்பது கட்டிடத்தின் முழு திட்டமிடலை நிரூபிக்கின்றது.
  • தாஜ்மஹால் முகப்பில் "குறான்" வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. முகப்பில் உள்ள இந்த புனித வரிகள் சாதாரண கண்களுக்கு ஒரே அளவில் (அடியில் இருந்து 30 அடிமேலான உயரத்திலும்) புலனாகும் அற்புத கலை நுணுக்கம் கையாளப்பட்டுள்ளது.
  • ஷாஜஹானுக்கு மூன்று மனைவியர் இருந்தபோதிலும் அதில் இரண்டாவது மனைவியாகிய முதாஜ் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார். ஷாஜஹான் 16 பிள்ளைகளுக்கு தந்தையாகவும் அதில் 14 பிள்ளைகளுக்கு தாயாக முதாஜ் இருந்துள்ளார். அத்துடன் மும்தாஜ் தனது 14 வது பிள்ளையை பிரசவிக்கும் வேளையில் மரணத்தை தழுவிக்கொண்டாராம். மும்தாஜ் இறக்கும் முன்பதாக தனது இறுதி ஆசையாக ஷாஜ-ஹானிடம் கேட்டுக் கொண்டதுவே இந்த "தாஜ் மஹால்" YT.
  • அக்காலத்தில் உலகில் மிகப்பெரிய செல்வந்தரும் பேரரசருமான ஷாஜஹான் வரலற்றுடன் இருண்ட கதையும் சொல்லப்படுகிறது. அதாவது தாஜ் மஹால் கட்டி நிறைவு பெற்றதும் அங்கு வேலைசெய்த அனைவர் கைகள் வெட்டப்பட்டதாகவும் முதன்மை கட்டிட கலைஞர் சிரச்சேதம் செய்து கொல்லப் பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஏனெனில், இது மாதிரியான ஓர் நினைவாலயம் வேறு யாராலும் கட்டப்படுவதை தடுப்பதற்கு ஷாஜ ஹான் இட்டகட்டளை இது எனவும் சொல்லப்படுகின்றது YT.
  • ஷாஜஹான் கட்டளைப்படி அந்நாட்களில் தாஜ்மஹால் கட்டிட வரைபட உருவாக்கத்திலும் கட்டிட வேலைத்திட்டத்திலும் பல இந்துசமய நிபுணர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். அத்துடன் இஸ்லாமிய சாயலும் இந்துக்கள் கைவண்ணமும் ஒன்றுசேர்ந்த இந்த அரிய கலைப்படைபின் பின்னால் பல கலைஞர்களின் பங்கு இருந்துள்ளது.
  • 1983ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாச்சார மையம் (UNESCO) இதனை உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ளது.

  • இந்த உலக அதிசையத்தினை பார்வையிட ஒவ்வொரு வருடமும் 3 மில்லியன் மேலான மக்கள் சென்று வருகின்றனர்.

  • மேலும் பலபல பெருமையும், புகழும், கதைகளும் சொல்லும் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள தாஜ் மஹால் ஒரு உலக அதிசயமாகவும்காதல் சின்னமாகவும் , உலக கலாச்சார சின்னமாகவும் இருந்து வருகின்றது.

    மேலதிக விபரம்

    The Taj Mahal.