Friday, 11 June 2010

தாவூத் நபி வரலாறு.....

தாவூத் நபிக்கு ஜபூர் வேதம் வழங்கப்பட்டது (இசை)
(கிருத்தவர்கள் பழைய ஏற்பாட்டின் இதற்கு சங்கீதம் என்பார்கள் )
4:163 (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீஅறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம். இன்னும் தாவூதுக்கு ஜபூர்என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
17:55 உம்முடைய இறைவன் வானங்களிலிம் பூமியிலும் உள்ளவாகளைப் பற்றி நன்கு அறிவான் நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத்திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம் இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.

தாவூத் நபிக்கு இனிமையான குரல் ..
புஹாரி எண் 5048
அபூ மூஸா(ரலி) அறிவித்தார் :
நபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) 'அபூ மூஸா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது' என என்னிடம் கூறினார்கள்.


தாவூத் நபிக்கு இறைவேதத்தை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது.
புஹாரி எண் 3417
நபி(ஸல்) அவர்கள் கூறினார்
தாவூத்(அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர் ஆகிய இறைவேதங்களை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது. தம் (குதிரை) வாகனத்தை (சவாரிக்காகத்) தயார் செய்யும் படி உத்திரவிடுவார்கள். உடனே, அதற்குச் சேணம் பூட்டப்படும் வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறைவேதத்தை ஓதி விடுவார். தன் கையினால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்து தான் உண்பார்.அத்தாஉ இப்னு யஸார்(ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
புஹாரி எண் 4713
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தாவூத்(அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் - முழுவதையும் ஓதிவிடுவார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


இப்ராஹிம் இஷ்காக் யாகுப் வழிதோன்றல்
6:84 நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில்செலுத்தினோம் இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன்ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம் இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
புகாரி எண்:3421
முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்
நான், 'ஸாத்' (என்னும் 38-வது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வீர்களா?' என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள், 'மேலும், இப்ராஹீமுடைய வழித் தோன்றல்களான தாவூத், சுலைமான், அய்யூப், மூஸா, ஹாரூன் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். இவ்வாறு... (நபியே!) அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே (நீங்களும்) பின்பற்றுங்கள்" என்னும் (திருக்குர்ஆன் 06:84-90) திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார்கள். பிறகு, 'உங்கள் நபி(ஸல்) அவர்களும் கூட முந்தைய நபிமார்களைப் பின்பற்றும்படி கட்டளையிடப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தாம்" என்று கூறினார்கள்.
புஹாரி எண் 4807
அவ்வாம் இப்னு ஹவ்ஷப் அஷ்ஷைபானீ(ரஹ்) கூறினார்
நான் முஜாஹித்(ரஹ்) அவர்களிடம், 'ஸாத்' அத்தியாயத்தின் (ஓதலுக்குரிய) சஜ்தா (வசனம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'தாங்கள் (ஸாத் அத்தியாயத்தில்) சஜ்தா செய்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது?' என்று கேட்டேன். அதற்கு அன்னார், 'மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களே தாவூதும் சுலைமானும்' என்று தொடங்கி, '(நபியே!) அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழிகாட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே நீங்களும் பின்பற்றுங்கள்...' என்று முடியும் (திருக்குர்ஆன் 06:84-90 ஆகிய) வசனங்களை நீங்கள் ஓதவில்லையா? என்று கேட்டார்கள். பிறகு, 'எவரைப் பின்பற்றுமாறு உங்கள் நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தோ அத்தகையவர்களில் தாவூத்(அலை) அவர்களும் ஒருவராவார். எனவே, (நபி தாவூத்(அலை) அவர்களைப் பின்பற்றி) இறைத்தூதர்(ஸல்) அவர்களும் ('ஸாத்' அத்தியாயத்தில் நன்றிக்காக) சஜ்தா செய்யவேண்டும்) என்று பதிலளித்தார்கள்.

(
திருக்குர்ஆன் 38:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உஜாப்' எனும் சொல்லுக்கு 'வியப்புக்குரியது' என்று பொருள்
.

(
திருக்குர்ஆன் 38:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்கித்து' எனும் சொல்லுக்கு (பொதுவாக) 'ஏடு' என்று பொருள். ஆனால், இங்கு 'நற்செயல்களின் பதிவேடு' என்று பொருள்
.
முஜாஹித்(ரஹ்) கூறினார்
:

(
திருக்குர்ஆன் 38:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஸ்ஸத்' எனும் சொல்லுக்கு 'ஆணவம் கொண்டவர்கள்' என்று பொருள்
.

(
திருக்குர்ஆன் 38:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்மில்லத்துல் ஆம்ரா' (வேறு சமுதாயம்) எனும் சொல், குறையுயர் சமுதாயத்தைக் குறிக்கிறது
.

(
இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'இக்திலாக்' எனும் சொல்லுக்குப் 'பொய்' என்று பொருள்
.

(
திருக்குர்ஆன் 38:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்அஸ்பாப்' எனும் சொல், வானத்தின் வாயில்களுக்குச் செல்லும் வழிகளைக் குறிக்கிறது
.

(
திருக்குர்ஆன் 38:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜுன்த்' (படையினர்) எனும் சொல் குறையுயரைக் குறிக்கிறது
.

(
திருக்குர்ஆன் 38:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உலாயிகல் அஹ்ஸாப்' (அந்தக் கூட்டத்தினர்) என்பது முந்தைய தலைமுறையினரைக் குறிக்கும்
.

(
திருக்குர்ஆன் 38:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபவாக்' (தாமதித்தல்) எனும் சொல்லுக்கு '(உலகின் பால்) திரும்புதல்' என்று பொருள்
.

(
திருக்குர்ஆன் 38:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இத்த கஃத்னாஹும் சிக்ரிய்யா' (நாம் அவர்களைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தோமா? என்பதன் கருத்தாவது: (தாழ்ந்தவர்களாக) அவர்களை நாம் அறிந்திருந்தோமா
?

(
திருக்குர்ஆன் 38:52 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அத்ராப்' எனும் சொல்லுக்கு 'வயதொத்தவர்கள்' என்று பொருள்
.
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
:

(
திருக்குர்ஆன் 38:45 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'அல்அய்த்' எனும் சொல்லுக்கு 'வணக்க வழிபாட்டில் செயலாற்றல்' என்றும், 'அல் அப்ஸார்' எனும் சொல்லுக்கு 'அல்லாஹ்வின் விஷயத்தில் ஆழ்ந்த சிந்தனை' என்றும் பொருள்
.

மூஸா நபிக்கு பிறகு இஸ்ரவேலர்களின் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டவர்
2:246 (நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம் "நாங்கள் அல்லாஹ்வின்பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்" என்று கூறிய பொழுது அவர், "போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?" என்று கேட்டார் அதற்கவர்கள் "எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டுநாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?" எனக் கூறினார்கள். எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக்காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
2:247 அவர்களுடைய நபி அவர்களிடம் "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்" என்று கூறினார்அதற்கு) அவர்கள், "எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம்தகுதியுடையவர்கள் மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே!" என்று கூறினார்கள் அதற்கவர், "நிச்சயமாகஅல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான் இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்குஅதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான் இன்னும் அல்லாஹ் விசாலமானகொடையுடைய)வன் (யாவற்றையும்) நன்கறிபவன்" என்று கூறினார்.
2:248 இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், "நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத்பேழை) வரும் அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும் இன்னும், மூஸாவின்சந்ததியினரும் ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும் அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்துவருவார்கள் நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது" என்று கூறினார்.
2:249 பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் "நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர் தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும்அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்" என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத் தவிரபெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள். பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) "ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்குவலுவில்லை" என்று கூறிவிட்டனர் ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், "எத்தனையோசிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ்பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று கூறினார்கள்.

2:250 மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, "எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள்வெற்றியடைய) உதவி செய்வாயாக!" எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.

தாவூத் நபி ஜாலுதை கொன்றார்
2:251 இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள். தாவூது ஜாலூத்தைக்கொன்றார். அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான். தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக்கற்பித்தான் (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொருகூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீதுபெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
தாவூத் நபியின் மகன் சுலைமான்
38:30 இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம் சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.
27:16 பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார் அவர் கூறினார் "மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம் நிச்சயமாக இதுதெளிவான அருள் கொடையாகும்.
34:13 அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்தமுடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. "தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில்நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே" (என்று கூறினோம்).

அல்லாஹ் இரும்பை வசப்படுத்தி கொடுத்தான்
21:80 இன்னும் நீங்கள் பேரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை, அவருக்கு நாம் கற்றுக்கொடுத்தோம் - எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா?
34:11 "வலுப்பமுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றேன்" (என்றும் சொன்னோம்.)
34:10 இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம் "மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள் பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்) மேலும் நாம் அவருக்குஇரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.

அல்லாஹ் மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்தி கொடுத்தான்
34:10 இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம் "மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள் பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்) மேலும் நாம் அவருக்குஇரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
38:18 நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம் மாலை வேளையிலும், காலை வேளையிலும் அவை அவருடன்சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன.
38:19 மேலும் பறவைகளை ஒன்று திரட்டி (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அனைத்தும் அவனையே நோக்குபவையாக இருந்தன.
21:79 அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம் மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும்நற்)கல்வியையும் கொடுத்தோம் இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அவைதாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.

ஆட்சியை கொடுத்தான்
38:20 மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்திநோம் இன்னும் அவருக்கு ஞாத்தையும், தெளிவான சொல்லாற்றலையும்அளித்தோம்.

அறிவையும் சொல்லாற்றலையும் கொடுத்தான்
38:20 மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்திநோம் இன்னும் அவருக்கு ஞாத்தையும், தெளிவான சொல்லாற்றலையும்அளித்தோம்.
21:79 அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம் மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும்நற்)கல்வியையும் கொடுத்தோம் இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அவைதாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
27:15 தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம் அதற்கு அவ்விருவரும் "புகழ் அனைத்தும்அல்லாஹ்வுக்கே உரியது அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்" என்றுகூறினார்கள்.
தாவூத் நபியின் வீரம்
புஹாரி எண் 1979
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல் ஆஸ்(ரலி) அறிவித்தார்.நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று. இரவெல்லாம் வணங்குகிறீரோ?' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் 'ஆம்!" என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே போய்விடும். (மேலும்) அதனால் உள்ளம் களைந்து (பலவீனமடைந்து) விடும்! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார்! (மாதந்தோறும்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது காமெல்லாம் நோன்பு நோற்பதாகும்!" என்றார்கள். அதற்கு 'நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்" என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அப்படியானால் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒரு நாள்விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள். (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவும் மாட்டார்கள்!" என்று கூறினார்கள்.
புஹாரி எண் 3419
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'நீங்கள் இரவில் நின்று வணங்குவதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே" என்று கேட்டார்கள். நான், 'ஆம் (உண்மைதான்!)" என்றேன். அவர்கள், 'நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும். எனவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்... அல்லது காலமெல்லாம் நோன்பு நோற்றதைப் போன்றதாகும்" என்று கூறினார்கள். நான், 'எனக்கு (இதை வட அதிகமாக நோற்பதற்கு) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்" என்று சொன்னேன். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பை நீங்கள் நோற்பீராக! அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள்விட்டுவிடுவார்கள். (போர்க்காலத்தில் பகைவர்களைச்) சந்திக்கும்போது பின் வாங்கி ஓடமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
புஹாரி எண் 1977
புஹாரி எண் 3419

தாவுத் நபி உழைத்து உண்டார்
புஹாரி எண் 2072
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"
ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்
."என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
புஹாரி எண் 2073
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"
தாவூத் நபி(ஸல்) தம் கையால் உழைத்தே தவிர உண்ண மாட்டார்கள்
."என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புஹாரி எண் 3417
புஹாரி எண் 4713

தாவூத் நபியின் தொழுகை
புஹாரி எண் 1131
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"
அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ் விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்
'.இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
புஹாரி எண் 3420
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள்விட்டுவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள். அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்" என்று கூறினார்கள்.

தாவூது நபியின் நோன்பு
புகாரி எண்:1978
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக!’ என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். இதைவிட நான் அதிகம்சக்தி பெற்றுள்ளேன் என்று கூறியபோது முடிவாக ஒரு நாள் நோன்பு நோற்று ஒருநாள் விட்டு விடுவீராக, என்று கூறினார்கள்.(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
புகாரி எண்:1979
மற்றொரு ஹதீஸில்தாவூது நபியின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒருநாளை விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள்

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)

நபி(ஸல்) அவர்கள் நோன்பை விடவேமாட்டார்கள் எனச் சொல்லுமளவிற்கு அதிகமாக நோன்பும் வைத்துள்ளார்கள். அதைப்போல நோன்புநோற்க மாட்டார்கள் என்று கூறுமளவுக்கு நோன்பை விட்டுமிருக்கிறார்கள். என அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்புகாரி.
புஹாரி எண் 1974
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'உம்முடைய விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன் உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன!" என்றார்கள். 'தாவூத் நபி(ஸல்) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'வருடத்தில் பாதி நாள்கள்!" என்றார்கள்.
புஹாரி எண் 1975
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!" என்று கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!" என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்)விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் மனைவிக்குச் செய் வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!" என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! 'இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!" என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தாவூத் நபி(அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!" என்றார்கள். தாவூத் நபி(அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். 'வருடத்தில் பாதி நாள்கள்!" என்றார்கள்.புஹாரி எண் 1977
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
.நான் தொடர்ந்து நோன்பு வைப்பதாகவும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தது; அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்! (அவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்களா? நானாகச் சென்று அவர்களைச் சந்தித்தேனா என்பது எனக்கு நினைவில்லை!) நபி(ஸல்) அவர்கள் 'நீர் விடாமல் நோன்பு நோற்பதாகவும் தூங்காமல் தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! எனவே, நோன்பு வைப்பீராக! அதைவிட்டுவிடவும் செய்வீராக! (இரவில் எழுந்து நின்று வணங்குவீராக! தூங்கவும் செய்வீராக! ஏனெனில், உம்முடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உமக்கும் உம்முடைய குடும்பத்தினருக்கும் நீர் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன!" என்று கூறினார்கள். நான், 'இதற்கு எனக்கு சக்தி உள்ளது!" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் 'நீர் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக!" என்றார்கள். 'அது எவ்வாறு?' என்று கேட்டேன். 'தாவூத் நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்; ஒரு நாள்விட்டுவிடுவார்! மேலும், (போர்க்களத்தில் எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்க மாட்டார்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்!" என்றேன்.
புஹாரி எண் 1980
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்களிடம் என்னுடைய நோன்பு பற்றிக் கூறப்பட்டது. உடனே அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல்தலையணையை எடுத்துப் போட்டேன். அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. 'ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'இறைத்தூதர் அவர்களே! (இதை விட அதிகமாக நோற்க அனுமதியுங்கள்!)" என்றேன். அவர்கள் 'ஐந்து நாள்கள்!" என்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே!" என்றேன். 'ஒன்பது நாள்கள்!" என்றேன். ஒன்பது நாள்கள்!" என்றார்கள். பிறகு, 'தாவூத் நபி(அலை) அவர்களின் நோன்பும் இல்லை; அது ஆண்டின் பாதி நாள்களாகும்! எனவே, ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக!" என்றார்கள்.
புஹாரி எண் 1131
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"
அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ் விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்
'.இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
புஹாரி எண் 3418
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
"
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவேன்" என்று நான் கூறுகூதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'நீங்கள் தான் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று கேட்டார்கள். 'நான் அப்படிச் சொல்லத் தான் செய்தேன்" என்று நான் பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'உங்களால் அது முடியாது. எனவே, (சில சமயம்) நோன்பு வையுங்கள். (சில சமயம்) நோன்பை விடுங்கள். (இரவில்) நின்று வணங்குங்கள். தூங்கவும் செய்யுங்கள். மாதத்தில் மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள். ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அதைப் போன்று பத்து மடங்கு பிரதிபலன் அளிக்கப்படும். அதுவே காலம் முழுவதும் நோன்பு வைத்ததாகும்" என்று கூறினார்கள். நான், 'இதை விட அதிக நாள் நோற்பதற்கு எனக்கு சக்தியுண்டு இறைத்தூதர் அவர்களே!" என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'அப்படியென்றால் ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாள்கள் நோன்பைவிட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். நான், 'அதை விட அதிகத்திற்கு எனக்கு சக்தியுண்டு, இறைத்தூதர் அவர்களே!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'அப்படியென்றால், ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பைவிட்டு விடுங்கள். அதுதான் (நபி) தாவூதுதின் நோன்பாகும்; அதுதான் நடுநிலையானதாகும்" என்று கூறினார்கள். நான், 'அதை விடச் சிறந்ததற்கு எனக்கு சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'அதை விடச் சிறந்ததேயில்லை" என்று கூறினார்கள்.
புஹாரி எண் 3419
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'நீங்கள் இரவில் நின்று வணங்குவதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே" என்று கேட்டார்கள். நான், 'ஆம் (உண்மைதான்!)" என்றேன். அவர்கள், 'நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும். எனவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்... அல்லது காலமெல்லாம் நோன்பு நோற்றதைப் போன்றதாகும்" என்று கூறினார்கள். நான், 'எனக்கு (இதை வட அதிகமாக நோற்பதற்கு) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்" என்று சொன்னேன். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பை நீங்கள் நோற்பீராக! அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள்விட்டுவிடுவார்கள். (போர்க்காலத்தில் பகைவர்களைச்) சந்திக்கும்போது பின் வாங்கி ஓடமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
புஹாரி எண் 3420
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள்விட்டுவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள். அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்" என்று கூறினார்கள்.
தாவூத் நபி அதிகமாக நோன்பு நோற்பார்கள் என்பதற்குரிய ஆதார ஹதீஸ் எண்கள் :
புஹாரி : 1976, 1979, 5052, 6134, 6277,

தாவூத் நபி பாதி இரவு தூங்குவார்கள்
புஹாரி எண் 1131
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"
அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ் விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்
'.இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
புஹாரி எண் 3420
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள்விட்டுவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள். அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்" என்று கூறினார்கள்.

மூன்றில் ஒரு பங்கு எழுந்து நின்று தொழுவார்கள்
புஹாரி எண் 1131
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"
அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ் விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்
'.இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
புஹாரி எண் 3420
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள்விட்டுவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள். அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்" என்று கூறினார்கள்.

தாவூத் நபியின் தீர்ப்பு
38:26 (நாம் அவரிடம் கூறினோம்) "தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம் ஆகவே மனிதர்களிடையேசத்தியத்தைக் கொண்டு (நீதுமாக)த் தீர்ப்புச் செய்யும் அன்றியும், அனோ இச்சையைப் பின் பற்றாதீர் (ஏனெனில் அது) உம்மைஅல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.
21:78 இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடகள்இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக்கொண்டிருந்தோம்.
21:79 அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம் மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும்நற்)கல்வியையும் கொடுத்தோம் இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அவைதாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
38:21 அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அதை;திருந்த) மிஹ்ராபின் சவரைத்தாண்டி -
38:22 தாவூதிடம் நுழைந்த போது அவர் அவர்களைக் கண்டு திடுக்குற்றார் அப்போது அவர்கள் கூறினார்கள் "பயப்படாதீர்! நாங்களிருவரும்வழக்காளிகள் எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார் எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!"
38:23 (அவர்களில் ஒருவர் கூறினார்) "நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர் இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடகள் இருக்கின்றன்ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெச் சொல்லி, வாதத்தில் என்னைமிகைத்து விட்டார்."
38:24 (அதற்கு தாவூது) "உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர்உம்மீது அநியாயம் செய்து விட்டார் நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர் இத்தகையவர் சிலரே" என்று கூறினார் இதற்குள் "நிச்சயமாக நாமேஅவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனைநோக்கினார்.
38:25 ஆகவே, நாம் அவருக்கு (க் குற்றத்)தை மன்னத்தோம் அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.

இரண்டு பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் குழந்தைகள். அதுவும் ஆண் குழந்தைகள். இந்நிலையில் அங்கே வந்தது ஓநாய் ஒன்று! தாய்மார்கள் அயர்ந்திருந்த வேளையில் ஒரு குழந்தையை அது கவ்விச்சென்று விட்டது. கண் விழித்துப் பார்த்த இருவரும் ஒரு குழந்தையைக் காணாமல் தவித்தபோது தூரத்தில் ஓநாயின் பிடியில் சிக்கி குழந்தை கதறுவதும் சற்று நேரத்தில் அதன் உயிர் பிரிந்து விட்டதும் தெரிகிறது. குழந்தையைப் பறிகொடுத்தவள் உடனே ஒரு தந்திரம் செய்தாள்.
அருகில் கிடந்த மற்றொரு குழந்தையை உடனே கைப்பற்றினாள். ‘உன் குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்று விட்டதே!’ என்று அடுத்தவளைப் பார்த்து சொன்னாள். அவளோ, ‘என்ன கொடுமை இது? உன் குழந்தையைத் தானே அது கொண்டு சென்றது. இது என் பிள்ளையல்லவா?’ என்று குமுறினாள்.
விவகாரம் நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகம் சென்றது. அவர்கள் வழக்கை விசாரித்தார்கள். இரு பெண்களில் வயதால் சற்றுப் பெரியவளாக இருந்தவருக்கே அந்த குழந்தை சொந்தம் என்று தீர்ப்பளித்து விட்டார்கள். அவர்களின் தீர்ப்பால் அழுது புலம்பிய மற்றொரு பெண் வெளியே வந்து அங்கே நின்று கொண்டிருந்த நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டாள்.
வழக்கு மீண்டும் மறு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. விஷயத்தை நன்கு விளங்கிக் கொண்ட ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையான தாயைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு தந்திரம் செய்தார்கள். ‘குழந்தை இருவருக்குமே தேவை. எனவே ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் இக்குழந்தையை இரு கூறுகளாகப்பிளந்து ஆளுக்குப் பாதியாகத் தந்து விடுகின்றேன்என்றார்களே பார்க்கலாம்!
தாவூது அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்ப்பின்படி குழந்தையைத் தன்னிடம் வைத்திருந்த பெரியவள் சற்றும் சலனமின்றி வாய் மூடியிருக்க இளையவள் உடனே சொன்னாள், ‘அல்லாஹ் உங்களுக்கு கருணை புரிவானாக! வேண்டாம், தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள். குழந்தை அவளின் பிள்ளைதான். அதை அவளிடமே கொடுத்துவிடுங்கள்என்றாள். இதைக்கேட்டவுடன் {லைமான் அலைஹி வஸல்லம் அவர்கள்இந்தச் சின்னவளே உண்மையான தாய்!’ எனத் தீர்ப்பு வழங்கினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, நஸாயீ)
தாயன்பு எத்தகையது என்பதற்கு இந்நிகழ்ச்சி தக்கதொரு சான்றாகும். ஆம்! தம் கண் முன்னால் தான் ஈன்றெடுத்த தன் அன்பு மகனை அறுக்கப் போகிறேன் என்று சொன்னவுடனேயே உண்மைத்தாய் பதறுகிறாள். தனக்குத் தன் குழந்தை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவனை கொன்றுவிடக்கூடாது என்பதற்காக குழந்தை தன் மகனல்ல, அவளின் மகன்தான் எனக் கூறிவிடுகிறாள். இதைத்தான் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களும் எதிர்பார்த்தார்கள்.
நீதியைக் கண்டு பிடிப்பதற்கு சில வேளை இது போன்ற தந்திரங்கள் தேவைப்படுகின்றன. இல்லையெனில் நீதி அநீதியாக மாறிவிடும். நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தீர்ப்பு வெளிப்படையான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களோ அல்லாஹ்வினால் அளிக்கப்பட்டிருந்த அறிவின் ஒளியாலும் ஆழிய மதி நுட்பத்தினாலும் பிரச்சனையின் ஆழத்துக்கே சென்று ஒரு நொடியில் நீதியை வழங்கி விட்டார்கள்.
ஹதீஸ் ஆதார நூல்கள் :
சுனன் நசையி 5307, 5308, 5309
முஸ்னத் அஹ்மத் 7931, 8124

புகாரி எண்: 3427
மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(
தாவூத் - அலை - அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், 'உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது" என்று கூற, மற்றொருத்தி அவளிடம், 'உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது" என்று கூறினாள். எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத்(அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (அவர்களின் தீர்ப்பில் கருத்து வேறுபட்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான்(அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், 'என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள) ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது இளையவள், 'அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்" என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் 'அந்தக் குழந்தை (ந்த இளைய)வளுக்கே உரியது' என்று தீர்ப்பளித்தார்கள்
.என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.அபூ ஹுரைரா(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அன்று தான் (கத்திக்கு) 'சிக்கீன்' என்னும் சொல்லைச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) 'முத்யா என்னும் சொல்லைத் தான் நாங்கள் பயன்படுத்தி வந்தோம்" என்று கூறுகிறார்கள்

தாவூத் நபியின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்தான்
38:24 (அதற்கு தாவூது) "உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர்உம்மீது அநியாயம் செய்து விட்டார் நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர் இத்தகையவர் சிலரே" என்று கூறினார் இதற்குள் "நிச்சயமாக நாமேஅவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனைநோக்கினார்.
38:25 ஆகவே, நாம் அவருக்கு (க் குற்றத்)தை மன்னத்தோம் அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.

தாவூத் நபியால் சபிகபட்டவர்கள்
5:78 இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால்சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும்இருந்தார்கள்.
அல்லாஹ்வை நோக்குபவரகா இருந்தார்.
38:17 இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவரகா இருந்தார்.

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்....

உலகில் மனிதர்கள் நேர்வழியிலிருந்து பிறழும் போது அவர்களை தூய்மைப்படுத்துவதற்காக அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் தூதர் தாம் என்பதற்கு அத்தாட்சியாக சில அதிசயங்களை முன்னறிவிப்பு செய்யக் கூடிய ஆற்றல்களையும் வருங்காலத்தில் நடைபெறவிருக்கின்ற சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்ய கூடிய திறனையும் அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அவ்வாறு இறுதி நபியாக வந்த நமது நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்திருக்கின்றார்கள். அவற்றில் சில அவர்களின் வாழ்க்கையிலும் சில இனி வரக்கூடிய காலங்களிலும் நடைபெறவிருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.
நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் தன்னைப் பின்பற்றுவோர் படும் துன்பத்தை தடுக்க கூட முடியாத பலவீனமான நிலையில் இருந்த போது இஸ்லாத்தை ஏற்க தயங்கிக் கொண்டிருந்த கிறித்தவராயிருந்த அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களை நோக்கி சொன்னார்கள் “ஓ! அதீ பின் ஹாத்திமே! ஏன் இஸ்லாத்தை ஏற்கத் தயங்குகிறீர்கள்? இந்த சிறு கூட்டம் உலகில் என்ன ஒரு மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா? அறுதியிட்டு சொல்கிறேன் ஒரு காலம் வரும், ஸன்ஆ-விலிருந்து ஹலரமவத் வரை ஒரு பெண் அல்லாஹ்வின் அச்சத்தை தவிர வேறு எந்த அச்சமும் இல்லாமல் தன்னந்தனியாய் செல்வாள். தங்கத்தையும், வெள்ளியையும் தானம் செய்ய புறப்படுவீர்கள். ஆனால் அதை பெற்றுக் கொள்வோர் யாரும் இருக்க மாட்டார்கள். சீசர், கைசரின் சாம்ராஜ்யங்கள் எல்லாம் என்னை பிற்பற்றுவோரை வந்தடையும்”. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் பின்னாளில் சொல்கிறார்கள் “என் வாழ்நாளிலேயே இவை நிறைவேறியதை கண்டுக் கொண்டேன்.
அது போல் ரசூல் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த போது அவர்களை கொலை செய்ய துரத்தி வந்த சுரகா இன்னு ஜுஷமை நோக்கி “சுரகாவே! ஒரு காலத்தில் ஈரான் மன்னரின் கைகளை அலங்கரித்த ஆபரணங்கள் உங்கள் கைகளை அலங்கரிக்கும்” என்று கூறினார்கள். இது இஸ்லாத்தின் இரண்டாம் கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் காலத்தில் ஈரான் வெற்றி கொள்ளப்பட்ட போது நிறைவேற்றிக் காட்டப்பட்டது.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உஹது மலையடிவாரத்தில் இருந்த போது உஹது சற்றுக் குலுங்கியது. அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் “உஹதே! அமைதியாக இரு. உன்னில் ஒரு தூதர் இருக்கிறார். ஒரு வாய்மையாளர் இருக்கிறார். இரண்டு ஷஹீதுகள் இருக்கிறார்கள்” என்று சொல்லி பின்னாளில் உமரும், உஸ்மானும் ஷஹீதாக்கபடவிருப்பதை அப்போதே முன்னறிவிப்பு செய்தார்கள்.
தன் செல்ல மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் தன் குடும்பத்தில் முதலாவதாக தன்னை வந்து அடைவார்கள் என்று நாயகம் (ஸல்) சொன்னதற்கேற்ப ரசூல் (ஸல்) இறந்த ஆறு மாதங்களுக்குள் ஃபாத்திமா (ரலி) இவ்வுலகை விட்டு பிரிந்ததை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். அதுபோல் தன் பேரரான ஹஸன் (ரலி) அவர்களை நோக்கி இவர் இரு கூட்டத்தினருக்கிடையில் சமாதானம் செய்து வைப்பார் என்று சொன்னது நிறைவேறியதையும் வரலாற்றில் பார்க்கிறோம்.
மறுமை நாளின் அடையாளங்கள் பற்றி குறிப்பிடும் போது “ஒரு பெண் தன் எஜமானியை பெற்றெடுப்பாள்” என்று கூறினார்கள். இன்று எத்தனையோ ஆண்மக்களை பெற்ற போதும் பெண்ணை அண்டி வாழும் நிலையையும், பெண் தன் தாயை வேலைக்காரியை விட மோசமாக நடத்துவதையும் நிதர்சனமாக பார்க்கிறோம். இன்று அரசாங்கங்களே சிவப்பு விளக்கு பகுதிகளை அங்கீகரிக்கும் கொடுமையும் மது அருந்துவது நாகரீகமாக கருதப்படும் அவலத்தையும் பார்க்கிறோம். இதை தான் நாயகம் (ஸல்) அவர்கள் “விபச்சாரம் பெருகும். மது அருந்தும் பழக்கம் பரவலாகும்” என்று முன்னறிவிப்பு செய்தார்கள்.
நாம் இருக்க கூடிய இந்த அமீரக பகுதிக்கு பொருத்தமான ஒரு முன்னறிவிப்பையும் நாயகம் (ஸல்) அவாகள் சொன்னார்கள். “வறுமையின் காரணத்தால் வெறுங்காலுடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் மிகப்பெரும் கட்டிடங்களைக் கட்டுவார்கள்”. இன்று உலகின் மிகப் பெரும் கட்டிடங்கள் எல்லாம் இங்கு கட்டப்படுவதை நாம் கண்கூடாக காணலாம்.
சிறந்த சமுதாயம் என்று அல்லாஹ்வினால் புகழப்டுகின்ற இந்த சிறந்த சமுதாயம் இன்று இறை நிராகரிப்பாளர்களாலும், யூத நஸ்ரானிகளிடத்திலும் சிக்கி தவிக்கும் அவல நிலையை நாயகம் (ஸல்) அவர்கள் அன்றே முன்னறிவிப்பு செய்தார்கள். “ஒரு காலம் வரும். அப்போது பிராணி தன் இரையை தேடி பாய்வது போல் பிற சமுதாயங்கள் உங்கள் மீது பாயும்” என்று சொன்னபோது ஸஹாபாக்கள் கேட்டார்கள், யாரசூலுல்லாஹ் எண்ணிக்கையில் நாங்கள் குறைவாக இருப்போமோ? என்று வினவியபோது இல்லை நீங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பீர்கள். ஆனால் உங்களிடத்தில் வஹ்ன் இருக்கும் என்று சொல்லி விட்டு வஹ்ன் என்றால் மரணத்தை பற்றிய அச்சமும், உலகத்தை குறித்த ஆசையும் என்று சொன்னார்கள்”. இன்று அந்த வஹ்ன் இந்த உம்மத்திடம் இருப்பதற்கு சாட்சிகள் தாம் குஜராத் முதல் பாலஸ்தீன் வரை நடைபெறும் நிகழ்வுகள்.
“காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது” என்று மறுமையை பற்றி குறிப்பிட்டார்கள். “சூரியன் மேற்கிலிருந்து உதித்தல், அதிசயப்பிராணி, தஜ்ஜால் மூன்றும் நிகழ்வதற்கு முன் ஈமான் கொள்ளுங்கள் ஏனென்றால் மூன்றும் நிறைவேறிவிட்ட பிறகு ஈமான் கொள்வது பலனளிக்காது”. என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் பின்னாளில் இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருப்பதையும் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
இப்படி கடந்த, இன்றைய, வருங்காலத்தை பற்றி முன்னறிவிப்பு செய்திருக்கின்றன நமது முஸ்தபா நபி (ஸல்) அவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு முன்னறிவிப்பை செய்தார்கள் “என் உம்மத்தில் ஒரு கூட்டம் மறுமை நாள் வரை இருக்கும். அவர்கள் நன்மை செய்யும்படி தூண்டுவார்கள். தீமை செய்வதிலிருந்து தடுப்பார்கள். இவர்கள் தாம் வெற்றியாளர்கள் என்று கூறினார்கள்”. அவ்வாறு நன்மையை ஏவி, தீமையை தடுக்க கூடிய வெற்றியாளர்களுள் ஒருவராக எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மையும் ஆக்கி அருள்வானாக...

ஆக்கம் : நெல்லிக்குப்பம் நர்கீஸ் ...
 நன்றி : tamilislam.com

வாழைப்பழம் வரலாறு மற்றும் பயன்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை....


நமது   வீட்டில் எந்த விசேசமானலும் நமது இலையில் நிச்சயம் வாழைப்பழம் இருக்கும்.  நமது முன்னோர்கள் கூறிய முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம், பல மருத்துவ குணங்களைக்கொண்டது வாழைப்பழம், நமது சமூகத்தில் வாழைப்பழம் 100ல் 99 பேர் உயயோகப்படுத்துகிறோம். வாழைப்பழத்தின் வகைகள், அதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்களை நான் தெரிந்து கொண்டதை இப்பதிவின் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.



வாழை ஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ, கிளைகளோ கிடையாது. 80 அடி உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம் அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்து விடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள் கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின் விந்தை. வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள், மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க, இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது.

இலைகள் நீண்டு பெரிதாக இருப்பதால் பழங்குடியினர் இதை வீட்டுக்கு கூரையாகவும், குடையாகவும் கூட உபயோகிக்கின்றனர். ஒரு மரம் ஒரு முறைதான் பழம் தரும். ஒரு சீப்பை கை என்றும், தனியாக ஒரு பழத்தை விரல் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். பல அடுக்கு சீப்புகள் கொண்டது ஒரு குலை. வாழைச் சீப்பு எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். வீட்டிலும் அதை அப்படியே வைத்தால்தான் கெடாமல் இருக்கும்.


 வாழைப்பழம் வரலாறு :

கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.
வாழைப் பழ சாகுபடியில் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உங்களுக்கு கூறுவதில் பெருமை அடைகிறேன். நான் மேலே சொன்ன வாழைப் பழ வகைகளை பல பேர் கண்ணால் பார்த்து கூட இருக்க மாட்டார்கள். நான் அனைத்து பழ‌ங்களையும் ஒரே இடத்தில் பார்த்தும் இருக்கிறேன். சாப்பிட்டும் இருக்கிறேன். எனது நண்பன்  வசிக்கும்  கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை என்ற இடத்தை அனைவரும் அறிந்ததே. அதன் அருகில் உள்ள ஒரு சந்தையின் பெயர் "பேட்டை சந்தை". வாழைத் தார்கள் மட்டுமே விற்பதற்க்காக அமைக்கப் பட்ட சந்தை. இங்கு வேறு எந்த பொருட்களும் கிடைக்காது. வாரத்தில் புதன் மற்றும் ஞாயிறு மட்டுமே கூடுகின்றது. இந்த இரண்டு நாட்களும் வாழைத் தார்கள் மலைப் போல் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளையும், ஏற்றுமதியாளர்களையும் அன்றய தினம் பார்க்க முடியும். அனைத்து வாழைப் பழ ரகங்களை ஒரே இடத்தில் சாகுபடி செய்தவரிடமே எந்த வித இடைத்தரகர்கள் இல்லாமல் வாங்க முடிவது இந்த பேட்டை சந்தையின் சிறப்பு. இங்கு இருந்து வெளிநாடுகளுக்கும் வாழைத் தார்கள் ஏற்றுமதிச் செய்யப்படுகின்றன. இப்போது இந்த சந்தையானது “தக்கலை வாழைக்குலை சந்தை” என்று அழைக்கப்பட்டு வருகிறதாம். மேலும் இந்த சந்தையானது காங்கிரிட் தளம் போடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளதாம். வாரத்தின் புதன் மற்றும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காய்கறி சந்தையாகவும் செயல் படுகிறதாம்.





மேலும் நான் எனது  நண்பன்  ஊரில் பார்த்த ஒன்று வாழைத் தார்களின் அளவு. கோவில் திருவிழாக்களில் இதற்காகவே போட்டிகள் நடத்துவார்கள். அதாவது கோவில் திருவிழாக்களின் முதல் நாளில் அவரவர் தோட்ட‌ங்களில் விளைந்த வாழைத் தார்களில் பெரிய தாரை ம‌ரத்துடன் வெட்டி கொண்டு வந்து நட்டு விடுவார்கள். திருவிழா முற்றம் முழுவதும் வாழை மரங்களின் அணிவகுப்பை தான் பார்க்க முடியும். திருவிழாவின் இறுதி நாளில் கோவில் நிர்வாகத்தின் நடுவர்களால் பார்வையிடப் பட்டு மிகப் பெரிய அளவு வாழைத் தாருக்கு பரிசும் பணமும் வழங்கப்படும். இங்கு நான் வாழை மரத்தின் உயரத்திற்கு வாழைத் தாரை பார்த்ததுண்டு. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு என்று ஒவ்வொரு தோட்டத்திலும் வாழை மரங்கள் வளர்ப்பது உண்டு. அந்த வாழைத் தார்களை "பந்தயகுலை" என்று அழைப்பார்கள்.





வாழைப்பழ வகைகள்
 கற்பூரவல்லி வாழைப்பழம் இதனைத் தேன் வாழை என்பார்கள்.

* மலை வாழைப்பழம்

* பேயன் வாழைப்பழம்

* பச்சை வாழைப்பழம் (பச்சை நிறத்தில் இருக்கும்)இதைத்தான் இரதை வாழைப்பழம் என்பதா?

* பெங்களூர் பச்சை வாழைப்பழம் (பெங்களூர் பச்சை என்றாலும் நிறத்தில் மஞ்சளேயாகும்.)

* நேந்திர வாழைப்பழம் (கேரளாவில் உற்பத்தியாகின்றன)

* மொந்தன் வாழைப்பழம்அம்மை நோய் கண்டவர்களுக்கு இதனை உண்ணத் தருவார்கள்.

* பூவன் வாழைப்பழம்

* கப்பல் வாழைப்பழம்

* கதலி வாழைப்பழம்

* ஏலரிசி வாழைப்பழம் அளவில் சிறியதாயினும் இதன் சுவை மிகவும் இனியது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.

* மோரீஸ் வாழைப்பழம்


அனைத்து வாழைப்பழங்களும் பல மருத்துவ குணங்களை கொண்டவை. மேலே கூறப்பட்ட செந்த்துழுவனும், வெள்ளைத்துழுவனும் ஒரே இனத்தை சார்ந்தவை. இவற்றின் சுவை தித்திப்பாக மாவு போன்று இருக்கும்.
பாளையங்கொட்டை(மஞ்சள்)என்று அழைக்கப் படும் இந்த வாழைப்பழமானது சிறிது புளிப்பு சுவையுடையது. மற்ற ரகங்களை பார்க்கும் போது இதன் விலை ச‌ற்று குறைவாக இருக்கும்.
மோரிஸ்(பச்சை) பெரும்பாலும் இந்த ஒரு ரகத்தை தான் நகரங்களில் பார்க்க முடிகிறது. கிராமத்தில் இருந்து வந்தவர்கள் இதன் விலையை கேட்டால் கண்டிப்பாக‌ வாங்க மாட்டார்கள். இதுவும் இனிப்பு தன்மையுடையது.
ஏத்தன்(நேந்திரன்) இது ஏதோ கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள். அதுவல்ல உண்மை. தமிழ் நாட்டிலும் விளைவிக்கப் படுகிறது. மற்ற ரகங்களை விட இதன் சுவைத் தனிச்சிறப்பு. இதில் ஒரு வாழைப் பழத்தை முழுமையாக சாப்பிடுவது என்பது அனைவராலும் முடியாத காரியம். அவ்வளவு பெரிதாக இருக்கும். இதில் இருந்து தாயரிக்கப் படும் சீவல்(Banana Chips) அனைவரும் அறிந்ததே.
இரசகதலி, பூங்கதலி மற்றும் கற்பூரவல்லி இந்த மூன்றும் நல்ல இனிப்புச் சுவையைக் கொண்டவை. இதன் அளவும் பார்பதற்கு சிறிதாக இருக்கும். 
மொந்தன் இது பார்பதற்கு நேந்திரன் போல் தோற்றம் அளித்தாலும் இதன் சுவையில் இனிப்பு தன்மை குறைவாக இருக்கும்.
சிங்கன் இது அரிதாக கிடைக்க கூடியது. இது பல மருத்துவ குணம் கொண்டது. இது பார்ப்பதற்கு பச்சை வாழைப்பழம் போல் இருக்கும். இது தென்பகுதிகளில் சமைக்கப் படும் அவியலில் பச்சை காய்கறியாக சேர்க்கப் படுவது இதன் சிறப்பு.
பேயன் இது தான் நமது ஊரில் பஜ்ஜி போடுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப் படுக்கிறது. இதன் சுவையும் தித்திப்பே. மட்டி இது வாழைப்பழ ரகங்களில் மிக சிறியது. ஆனால் இதன் சுவைப் பல மடங்கு இனிப்பானது. இதில் மாவுத் தன்மை இருப்பதால் குழந்தைகளுக்கு பெரும்பாலும் கொடுக்கப்ப‌டும். இந்த பழத்திலும் ம‌ருத்துவ குணம் அதிகம்.



மலை வாழை இதன் சுவை தனி. இதுவும் எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை.


வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:

வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி  இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. 

அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும்  (Fiber) கொண்டுள்ளது. 


வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்:
* இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும்.
* செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.
* பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும்.
* மலைவாழை சோகையை நீக்கும்.
* பேயன் வாழை குடற்புண் தீர்க்கும்.
* நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

* வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது.

* “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.

* உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும். மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது. 

* வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். மூளைக்கு வலுவூட்டும்.

* தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை நீங்கும்
* பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும்.

* இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும்.
* சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும்.

* கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும்.
*உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.

* தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும்.


* தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.

அன்றாடம் 3 வாழைப்பழங்களை சாப்பிட்டால் பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காலை நேரத்தில் ஒரு வாழைப்பழம், மதியம் ஒரு வாழைப்பழம், இரவு ஒரு வாழைப்பழம் சாப்பிடும் போது போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது. இந்த பொட்டாசிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் ரத்த உறைவை தடுக்க முடியும்.


வாழைப்பழம் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் தினமும் 1600 மி.கி பொட்டாசியத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது பக்கவாத வாய்ப்புகள் 5ல் ஒரு பங்கு குறைகிறது.ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500 மி.கி பொட்டாசியம் உள்ளது.

இந்த பொட்டாசிய அளவு ரத்த அழுத்த அளவைக் குறைப்பதற்கும் உடலில் உள்ள திரவ சம நிலைக்கும் உதவுகிறது


வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டியவர்கள் :

கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும்,நீரழிவு நோய் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும்.
    

விருத்தி தரும் செவ்வாழை!!!

Red Bananaஎளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய்

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும்..

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும்..

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்..

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொற்றுநோய் தடுக்கப்படும்

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

இரத்த விருத்திக்கு உதவும் மொந்தன் வாழை!!!


வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் அணைவரும் விரும்பி சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை. மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும்.

இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.

வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.

இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.

பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

பச்சை வாழைப்பழம்!

சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா…? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்….

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.



முடிவு : குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும்.நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது. எந்த சுபவிழாக்களாக இருந்தாலும், அங்கே முதலிடம் பிடிப்பது வாழைப்பழம்தான்.மேலும்  அநேக வியாதிகளுக்கு தீர்வு தரும். இயற்கை அன்னை நமக்கு வழங்கிய பொக்கிஷமாகும். எனவே அதை உண்டு அதனின் முழு பயனை பெற  வாழ்த்தும்  உங்கள் சகோதரன் !! 


ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

Thursday, 10 June 2010

உலகக் கோப்பை கால்பந்து-ஒரு சிறப்பு பார்வை...




19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை கால்பந்து விளையாட்டு பிரிட்டனில் மட்டுமே ந்டைபெற்று வந்தது;1872ல் தான் இரு நாடுகளுக்கிடையே முதல் சர்வதேச போட்டி ந்டைபெற்றது; பிரிட்டனும் ஸ்காட்லாந்தும் மோதின.
1904ல் FIFA ( FEDERATION OF INTERNATIONAL FOOT BALL ASSOCIATION )உருவானது;1908ல் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்ஸில் கால்பந்து போட்டிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
1930ல் முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. 
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள் இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942,1946ஆம் ஆண்டுகளில் ந்டைபெறவில்லை.
1978 வரை நடந்த போட்டிகளில் 16 அணிகள் கலந்து கொண்டன; 1982ல் இது 24 அணிகளாகவும், 1998ல் 32 அணிகளாகவும் உயர்ந்தது.
ஒரு உலகக் கோப்பை போட்டி முடிந்த அடுத்த வருடமே அடுத்த போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கள் துவங்கி விடுகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு போட்டியில் 198 நாடுகள் கலந்து கொண்டு அதிலிருந்து 32 நாடுகள் தகுதி பெற்றன; 2010ஆம் ஆண்டு போட்டிக்கு 204 நாடுகள் கலந்து கொண்டு அதிலிருந்து 32 நாடுகள் தேர்வாகின.
ஒரு உலகக் கோப்பை போட்டி முடிந்த அடுத்த வருடமே அடுத்த போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கள் துவங்கி விடுகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு போட்டியில் 198 நாடுகள் கலந்து கொண்டு அதிலிருந்து 32 நாடுகள் தகுதி பெற்றன; 2010ஆம் ஆண்டு போட்டிக்கு 204 நாடுகள் கலந்து கொண்டு அதிலிருந்து 32 நாடுகள் தேர்வாகின.
1938 முதல் போட்டியை நடத்து நாடு தகுதிச் சுற்றில் கலந்து கொள்ளாமலேயே நேரடியாக போட்டியில் கலந்து கொள்ளும் என்ற மரபு கொண்டுவரப்பட்டது; அதே போல, கடந்த உலகக் கோப்பை சாம்பியன் அடுத்த உலகக் கோப்பைக்கு தானாகவே தேர்வாகி விடும் என்ற மரபு 2006 முதல் அறிமுகமானது.
முதல் உலகக் கோப்பை போட்டி தென் அமெரிக்காவிலுள்ள உருகுவே நாட்டில் நடைபெற்றது; அதற்கு பிறகு நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் தொடர்ந்து ஐரோப்பாவிலேயே நடைபெற்றதால், அதை எதிர்த்து உருகுவேயும் அர்ஜென்டினாவும் ஒரு உலகக் கோப்பை போட்டியை புறக்கணித்தன. இதையடுத்து 1958 முதல் ஒரு முறை அமெரிக்க நாடுகளிலும் அடுத்த முறை ஐரோப்பிய நாடுகளிலும் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் மரபை கொண்டு வந்தது FIFA
2002ல் விதிவிலக்காக உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பு ஆசிய நாடுகளுக்கு வழங்கப்பட்டது; தென்கொரியா ஜப்பான் இரண்டும் சேர்ந்து போட்டியை நடத்தின. அதே போல் இந்த முறை ஆப்ரிக்க கண்டத்தைச் சார்ந்த தென் ஆப்ரிக்கா போட்டியை நடத்துகிறது.அடுத்த போட்டி (2014) பிரேசிலில் நடக்க இருக்கிறது.
இது வரை நடைபெற்ற 18 உலகக் கோப்பை போட்டிகளில், பிரேசில் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றிருக்கிறது; இத்தாலி 4 முறையும் ஜெர்மனி 3 முறையும் அர்ஜென்டினா உருகுவே நாடுகள் தலா 2 முறையும் பிரிட்டன் ஃபிரான்ஸ் நாடுகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றிருக்கின்றன.
இந்தியா இது வரை ஒரு முறை கூட உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் தகுதி பெற்றதில்லை ; வரும் காலங்களிலாவது கால்பந்து போட்டிகளிலும் இந்தியா சிறப்பாக விளையாடி உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெறும் என்று நம்புவோம்.
உலக முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வெள்ளிக்கிழமை 
தென்னாப்பிரிக்காவில் துவங்குகிறது. கால்பந்து பற்றி உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றாலும் கீழே உள்ள சுட்டியை
 ஒரு முறை கிளிக் செய்துவிடுங்கள்.

http://www.marca.com/deporte/futbol/mundial/sudafrica-2010/calendario-english.html

தொகுப்பு : மு.அஜ்மல்கான்.