Monday, 2 January 2012

இஸ்லாத்தின் பார்வையில் ராசி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள்....

இஸ்லாத்தின் பார்வையில் ராசி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள்..


''யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்''அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஆதாரம் அபூதாவுத். ]
அனைத்துப் புகழும் சூரியன், சந்திரன், கிரகங்கள் நட்சத்திரங்கள் இவைகளை உள்ளடக்கிய அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவப் படுத்தி ஆட்சி செய்யும் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது.
பரந்த விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பற்றி இரு வகையாக ஆராய்கின்றனர்.
அவைகள்:
1) நட்சத்திரங்கள், கிரகங்கள், சந்திரன்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகியவற்றின் அமைப்பு, நகர்வு, அவை இருக்கும் இடங்கள் ஆகியவற்றைப் பற்றிய அறியும் கலைக்கு வானவியல் (Astronomy)என்று பெயர்.
2) கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவைகளின் மூலம் பூமியில் உள்ளவர்களின் மீது ஏற்படும் தாக்கங்கள். (Astrology)

இதில் முதலாவது வகை அறிவியலை எடுத்துக் கொண்டால், இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, திசைகளை அறிந்துக் கொள்வதற்காகவும், பல்வேறு கால நிலைகளை அறிந்துக் கொள்வதற்காவும், இறைவனின் படைப்பின் அற்புதத்தை கண்டு வியந்து அவனை துதி செய்வதற்காகவும் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்கின்றனர்.
அதே நேரத்தில், ஒருவர் இத்தகைய கல்வியின் மூலம், இதனால் தான் மழை வருகிறது அல்லது குளிர் அல்லது வெயில் அடிக்கிறது என்று கூறாதிருக்கும் பட்சத்தில் இதில் தவறில்லை என்கின்றனர். இவ்வாறு கூறுவது ஷிர்க் ஆகும் ஏனென்றால் மழை பெய்ய வைப்பதும், பருவ நிலை மாறி வரச் செய்வதும் இறைவனின் செயலாகும்.
ஜோதிடக் கலை:
இரண்டாவது வகையான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் தாக்கங்கள் என்பது பற்றிய ஆராய்ச்சி இஸ்லாம் முற்றுமுழுதாக தடுக்கும், ஒருவருடைய ஏகத்துவ நம்பிக்கையையே சிதைக்கும் ஒரு கல்வியாகும்.
ஜோதிடக் கலையின் முக்கிய அம்சங்கள்:
1) கிரகங்களும், நட்சத்திரங்களும் ஒருவருடைய வாழ்வில் நன்மை, தீமைகளை ஏற்படுத்துகின்றன என்று நம்புவது.
இது இறைவனால் என்றுமே மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணைவைத்தலாகும். ஏனென்றால் நன்மை தீமைகளை உருவாக்கும் சக்தி அல்லாஹ்வைத் தவிர அவனுடைய படைப்பினங்களுக்கும், உண்டு என்று நம்புபவன் இணைவைத்தவனாவான்.
2) நட்சத்திரங்கள் மற்றும் கிரக நிலை மாற்றத்தினால் ஒருவருடைய வாழ்வில் இன்னின்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதைக் கணித்துக் கூறுவது, அதாவது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் ஏற்பட்ட மாற்றமானது, அந்த நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருடைய வாழ்விலும் இன்னின்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவது.
இத்தகைய நம்பிக்கை, இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான விஷயங்கள் இறைவனல்லாத ஜோதிடர்களுக்கும், குறி சொல்பவர்களுக்கும் தெரியும் என்று நம்புவதாகும். ஒருவர் தமக்கு மறைவான விஷயமாகிய எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஆற்றல் உண்டு என்று கூறுவாராயின் அது குப்ர் என்னும் இறை நிராகரிப்பாகும். அவர் இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவராகிறார்.
இராசிப்பலன்கள்:
ஜோதிடக் கலையின் ஒரு அம்சமே ராசிப்பலன் பார்த்தல் ஆகும்.
படைப்பனங்களிலேயே சிறந்த படைப்பாக இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்-குர்ஆனிலும் மனிதர்களைப் புனிதர்களாக்கி அவர்கள் ஈடேற்றம் பெற்றிட வழிகாட்டியாக வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்களின் வழிமுறைகளிலும் இராசிப்பலன்கள் பார்பதற்குரிய அனுமதி குறித்தோ அல்லது இவர்கள் கற்பனையாக வடிவமைத்திருக்கின்ற ராசி மண்டலங்கள் (Zodiac Signs) குறித்தோ எவ்வித ஆதாரமும் இல்லை. மாறாக அல்-குர்ஆனிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளிலும் இவற்றிற்கு எதிராக ஏராளமான சான்றுகள் உள்ளன.
எந்தவொரு படைப்பினத்திற்கும் கொடுக்கப்படாத இரண்டு சிறப்பங்சங்களை அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்திருக்கின்றான். அவைகளாவன: -
1) நன்மை தீமைகளை பகுத்து ஆராயும் பகுத்தறிவு
2) ஒருவன் தாம் விரும்பும் பாதையை சுயமாக சிந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விருப்பம்.
ஒருவனுடைய பழக்க வழக்கங்கள், குணங்கள், தன்மைகள் ஆகியவை அவனுடைய கல்வியறிவு, அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தே தான் அமைகின்றதே தவிர வேறொன்றுமில்லை. இவற்றிற்கும் நட்சத்திரங்களுக்கும் மற்றும் இராசி மண்டலங்கள் என்று சொல்லப்படக்கூடிய வற்றிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. மேலும் ஒருவனுடைய பிறந்த தேதியோ அல்லது வருடமோ அவனுடைய வாழ்வில் எவ்வித பாதிப்பையோ நலவையோ ஏற்படுத்துவதில்லை.
ஒரு குறிப்பிட்ட கிரகமோ அல்லது நட்சத்திரமோ ஒருவருடைய வாழ்க்கையில் பாதிப்பையோ அல்லது நன்மையையோ ஏற்படுத்துகின்றது என்று நம்புவது மிகப்பெரும் பாவமாகிய ஷிர்க் எனும் இணைவைத்தலைச் சேர்ந்ததாகும்.
ஜோதிடம், ராசி பலன், நல்ல நேரம், இராகு காலம் பார்த்தல், சகுனம் பார்த்தல் இவைகள் அனைத்தும் அறியாமைக்கால மக்களின் மூட நம்பிக்கைகளாகும். இதில் வேதனையான விஷயம் என்ன வென்றால் தாம் உயர் கல்வியைப் பயின்று நாகரிகத்தின் உச்சிக்கு சென்று விட்டதாக இருமாப்புக் கொள்ளும் அறிவு ஜீவிகளும் தமது அறிவை அடகு வைத்துவிட்டு, தம் வயிற்று பிழைப்புக்காக தம் மனப்போன போக்கில் உளறிக் கொண்டிருக்கும் உதவாக்கரைகளிடம், தம் வாழ்வை எதிர்காலத்தை தாமே வணப்படுத்திக் கொள்ள தெரியாதவர்களிடம் போய் மண்டியிட்டு, தங்களின் எதிர் காலத்தைக் கணித்துக் கூறுமாறு கோருகின்றனர். இதை விட வேறு அறிவீனம் உண்டோ?
ஜோதிடம், ராசி பலன் பார்த்தல் போன்றவற்றை இஸ்லாம் தடை செய்ததோடல்லாமல் இதை செய்பவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. இவற்றின் மீது நம்மிக்கை கொள்வது ஒருவருடைய நன்மை தீமைகளைத் தீர்மானிப்பதன் பங்கு அல்லாஹ்வைத் தவிர இந்த கிரகங்கள், நட்சத்திரங்களுக்கும் உண்டு என்று நம்புவதாகும்.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்த உண்மையான முஃமின் இத்தகைய அறியாமைக் (ஜாகிலிய்யாக்) கால மூட நம்பிக்கைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் சந்திரன் மற்றும் அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் முற்று முழுதாக அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றது.
ஈமானின் முக்கியமான நிபந்தனையான விதியை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு முஃமினும் நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்றும் அவனையன்றி ஒரு அணுவும் அசையாது என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
(இன்னும்) நீர் கூறுவீராக: ''அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார். (அல்-குர்ஆன் 27:65)  

ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம். (அல்-குர்ஆன் 3:60)
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம் (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்-குர்ஆன் 10:106-107)
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்-குர்ஆன் 31:34)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி''உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள்''அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்' என்று அல்லாஹ் கூறினான்'' எனக் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் ரளியல்லாஹு அன்ஹுஆதாரம்: புகாரி)
அல்லாஹ் நட்சத்திரங்களை 3 காரணங்களுக்காக படைத்துள்ளான்.
1) வானத்தை அலங்கரிப்பதற்காகவும்
2) சைத்தானை விரட்டுவதற்கான எரி கற்கலாகவும்
3) கப்பலில் வழி காட்டியாகவும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
''யாராவது ஒருவர் ஜோதிடத்தின் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்வாராயின் அவர் சூன்யத்தை (ஸிஹ்ர்) கற்றவன் போலாவான்'' அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், ஆதாரம், அபூதாவுத்.
''யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மதுஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்''(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஆதாரம் அபூதாவுத்.)
''குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்.
எதிர் காலத்தைக் கணித்துக் கூறுவது என்பது மறைவான செய்திகளைக் கூறுவது போலாகும். இறைவனின் திருமறை பல இடங்களில் ''மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே'' என்று வலியுறுத்திக் கூறுகிறது.
எதிர் காலத்தை, நல்ல நேரத்தை ஒருவர் கணித்துக் கூறுதல் என்பது ''இறைவனைத்'' தவிர்த்து தமக்கும் மறைவான விஷயங்கள் தெரியும்'' என கூறுவது போலாகும்.

அறியமையினால் இத்தகைய படுபாதகமான தீய செயல்களாகிய அறியாமைக்கால மூடநம்பிக்கையில் சிக்கி உழன்றுக் கொண்டிருக்கும் நமது முஸ்லீம் சகோதர சகோதரிகள் உடனே இதிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்விடம் மன்றாடி பாவமன்னிப்புக் கோரவேண்டும். தம்முடைய அறியாமையினால் செய்த இத்தகைய அறிவீனமான செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிபூண்டவராக அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அல்லாஹ் இதற்கு அருள்பாலிப்பானாகவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், பாவங்களில்
 சிறியதோ- பெரியதோ அனைத்தையும் த
விர்ந்து நடக்க நமக்கு அருள் புரிவானாக!

வட்டி ஒரு பெரும் பாவமா ? ---ஒரு சிறப்பு பார்வை....

1. வட்டி என்றால் என்ன?:
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும்.
இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)
இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)

2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது.
 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)

 வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.
 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.
 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.
 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்.

 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)

 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை:
1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.
7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.
8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :
1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)

 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)

3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)

4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)

9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.
12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.

 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.

 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.

15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)

16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.

17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக..

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

நல்ல நண்பர்கள் நடமாடும் நூலகம் !

 
பொதுவாக காதலை ‌விடவு‌ம், உறவுகளை ‌விடவு‌ம் ந‌ட்பை பெ‌ரிதாக சொ‌ல்ல பல‌க் காரண‌ங்க‌ள் உ‌ண்டு. தா‌யிடமு‌ம், த‌ந்தை‌யிடமு‌ம், க‌ட்டிய மனை‌வி‌யிடமு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள முடியாத பல ‌விஷய‌ங்களை நா‌ம் ந‌ண்ப‌‌ரிட‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்வோ‌ம்.
உ‌ன் ந‌ண்பனை‌க் கா‌ட்டு.. உ‌ன்னை‌ப் ப‌ற்‌றி‌ச் சொ‌ல்‌கிறே‌ன் எ‌ன்ற பொ‌ன்மொ‌ழி‌யி‌ல் இரு‌ந்தே ந‌ட்‌பி‌ன் வ‌லிமையை நா‌ம் உணரு‌கிறோ‌ம்.
பலரு‌ம் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ல்ல ந‌ட்பு ‌கிடை‌க்காததா‌ல் ம‌கி‌ழ்‌ச்‌சியையு‌ம், து‌ன்ப‌த்தையு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள முடியாம‌ல் வா‌ழ்‌ந்து வருவதை க‌ண்கூடாக கா‌ண்‌கிறோ‌ம். அதே‌ப்போல, ‌தீய ந‌ட்‌பினா‌ல் வா‌ழ்‌க்கையை இழ‌ந்து ப‌ரித‌வி‌க்கு‌ம் ‌நிலையு‌ம் உ‌ண்டு.
ஆனா‌ல் ந‌ட்பு எ‌ன்பது எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று இ‌ஸ்லா‌ம் ‌நிறைய வ‌ழிகா‌ட்டு‌கிறது. ந‌ண்ப‌ர்‌‌க‌ளிட‌ம் நட‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய ‌வித‌ம் ப‌ற்‌றியு‌ம் அது அழகாக‌க் க‌ற்று‌த் த‌ந்து‌ள்ளது.
ந‌பிக‌ள் நாயக‌ம் (ஸ‌ல்) த‌ம் தோழ‌ர்க‌ளிட‌த்‌தி‌ல் அ‌திக அ‌ன்பு செலு‌த்துவா‌ர். தோழ‌ர்க‌ள் ஒ‌வ்வொருவரு‌ம் இறை‌த் தூத‌ர் ந‌ம் ‌மீதுதா‌ன் பேர‌ன்பு கொ‌ண்டு‌ள்ளா‌ர் எ‌ன்று கருது‌ம் வகை‌யி‌ல் அனைவ‌ர் ‌மீது‌ம் அவ‌ர் அ‌ன்பு செலு‌த்துவா‌ர்.
முத‌லி‌ல் ந‌ல்லவ‌ர்களை ந‌ண்ப‌ர்களா‌ய்‌த் தே‌ர்‌ந்தெடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதுதா‌ன் ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ‌உய‌ர்‌ந்த ‌சி‌ந்தனையு‌ம், உ‌ன்னத‌ப் ப‌ண்புகளு‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள் நம‌க்கு ந‌ண்ப‌ர்களா‌ய் வா‌ய்‌த்தா‌ல் அவ‌ர்‌க‌ளிட‌மிரு‌ந்து நம‌க்கு ந‌ன்மையே ‌கிடை‌க்கு‌ம்.
பா‌ர்‌த்தது‌ம் காத‌ல் வரலா‌ம், ஆனா‌ல் ந‌ட்பு கொ‌ள்ள ‌சில ‌விஷய‌ங்களை அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஒரு ‌சில‌ரை‌ப் பா‌ர்‌த்தது‌ம் ‌பிடி‌த்து அவ‌ர்களுட‌ன் ந‌ட்பு கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று மன‌ம் சொ‌ல்லு‌ம். அவை ‌வி‌தி‌வில‌க்கு. அ‌ப்படி இ‌ல்லாம‌ல், ‌விரைவாக துவ‌ங்கு‌ம் ந‌ட்பு ‌விரைவாகவே முடி‌ந்து‌ம் ‌விடு‌ம்.
ந‌ண்ப‌ரி‌ன் பழ‌க்க வழ‌க்க‌ம், குணா‌திசய‌ம் ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனெ‌னி‌ல், நா‌ம் உள ‌ரீ‌தியாக யா‌ர் ‌மீது அ‌திக அ‌ன்பு கொ‌ள்‌கிறோமோ அவருடைய தா‌க்க‌ம் ந‌ம் ‌மீது ‌நி‌ச்சய‌ம் படியு‌ம்.
எனவே ந‌பிக‌ர் நாயக‌ம் (ஸ‌ல்) கூறு‌கிறா‌ர், "ம‌னித‌ன் த‌ன்னுடைய ந‌ண்ப‌னி‌ன் வ‌ழி‌‌யிலேயே செ‌ல்‌கிறா‌ன். ஆகவே யாருட‌ன் ந‌ட்பு கொ‌ண்டிரு‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் கவனமாக இரு‌க்க வே‌ண்டு‌ம்." எ‌ன்று.
இத‌ற்கு ஒரு உதாரணமு‌ம் உ‌ண்டு, அதாவது உ‌ங்களு‌க்கு இர‌ண்டு ந‌ண்ப‌ர்க‌ள் இரு‌க்‌கிறா‌ர்க‌ள், ஒருவ‌ர் உ‌ங்களை படி‌க்க அழை‌க்‌கிறா‌ர், ம‌ற்றொருவ‌ர் எ‌ங்காவது வெ‌ளியே செ‌‌ல்லலா‌ம் எ‌ன்‌கிறா‌ர். இ‌தி‌ல் உ‌ங்க‌‌ளி‌ன் உள ‌ரீ‌தியான தொட‌ர்பு யா‌ரிட‌ம் அ‌திகமாக உ‌ள்ளதோ அவருட‌ன் தா‌ன் ‌நீ‌ங்க‌ள் செ‌ல்‌‌வீ‌ர்க‌ள்.
இதை‌த்தா‌ன் ம‌னித‌ன் த‌ன்னுடை‌ய ந‌ண்ப‌னி‌ன் வ‌ழி‌யிலேயே இரு‌க்‌கிறா‌ன் எ‌ன்பத‌ன் அ‌ர்‌த்தமாகு‌ம்.
மேலு‌ம், ந‌ல்ல ந‌ண்ப‌னி‌ன் உதாரண‌ம் நறுமண‌ப் பொருளை ‌வி‌ற்பவ‌ன் போ‌ன்றதாகு‌ம். ‌தீய ந‌ண்ப‌னி‌ன் உதாரண‌ம் இரு‌ம்பை உரு‌க்கு‌ம் உலை‌யி‌ல் உ‌ள்ள அடு‌ப்பு ஊது‌ம் குழ‌ல் போ‌ன்றதாகு‌ம். நறுமண‌ப் பொருளை ‌வி‌ற்பன‌னி‌ன் தோழமையா‌ல் உ‌ங்களு‌க்கு ‌நி‌ச்சய‌ம் பய‌ன்க‌ள் ‌கி‌ட்டு‌ம். ‌நீ‌ங்க‌ள் நறுமண‌ப் பொரு‌ள்களை வா‌ங்‌கி‌ச் செ‌ல்லலா‌ம். அ‌ல்லது அ‌ந்த நறுமண‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் இ‌னிய மனமாவது உ‌ங்க‌ள் ‌மீது படு‌ம். ஆனா‌ல் அடு‌ப்‌பி‌ல் இரு‌ந்து வெ‌ளி‌ப்படு‌ம் ‌‌தீ‌ப்‌பிழ‌ம்‌பினா‌‌ல் ‌நீ‌ங்க‌ள் வெ‌ப்ப‌த்தை‌த்தா‌ன் பெற முடியு‌ம். அ‌திகமாக நெரு‌ங்‌கினா‌ல் உ‌ங்க‌ள் ஆடையை நெரு‌ப்பு எ‌ரி‌த்து‌விட‌க் கூடு‌ம்.
எனவே யா‌ரிட‌ம் ந‌ட்பு கொ‌ள்‌கிறோ‌ம் எ‌ன்பது தா‌ன் ந‌ட்புற‌வி‌ல் ‌மிக‌வு‌ம் மு‌க்‌கியமாக நோ‌க்க வே‌ண்டியதாகு‌ம்.
ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ம், ந‌ட்பு‌க்கு‌ம் ‌உ‌ரிய ம‌தி‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது இ‌ஸ்லா‌ம் க‌ற்று‌த்தரு‌ம் இ‌னிய ப‌ண்பாகு‌ம்.

சகோதரர்களே! சிந்தித்துப்பாருங்கள் நாம் எங்கே இருக்கின்றோம்!

                                              அல்லாஹ்-சுப்ஹானல்லாஹ்

முஸ்லிமான மற்றும் முஸ்லிமல்லாத (மாற்றுமத) அன்புச் சகோதர, சகோதரிகளே தங்கள் அனைவருக்கும் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்தஹு (தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)

இறை விசுவாசிகளே! நாம் சம்பாதிக்கவேண்டும், உயர்ந்த மாளிகைகளைப் போன்ற வீடுகளை கட்ட வேண்டும் அதில் அழகிய துணைகளுடனும் வாரிசுகளுடனும் குடிபுக வேண்டும் என்று சிந்திப்போம் அதற்கான திட்டங்கள் தீட்டி அதை நடைமுறைப் படுத்துவோம் அதில் சிலருக்கு அல்லாஹ் வெற்றி அளிப்பான் மற்றும் சிலருக்கு தோல்வியளிப்பான்.

தங்கள் எண்ணங்களில் வெற்றிபெற்றவர்கள் அல்லாஹ்வின் கிருபை கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்தமாக இருப்பார்கள் மற்றும் சிலரோ தன் எண்ணங்களில் தோல்வியடைந்தவர்களாக விரக்தியடைந்தும் அல்லாஹ்வின் கிருபை கிடைக்கவில்லை என்று எண்ணி சலிப்படைந்து வாழ்ந்து வருவார்கள்.

சகோதரர்களே! சிந்தித்துப்பாருங்கள் நாம் எங்கே இருக்கின்றோம்! பணம், பொருள், மனைவி மக்கள், வசதிவாய்ப்புகள் இவைகள்தான் நமக்கு அல்லாஹ்விடம் கிடைத்த அருட்கொடைகளா?
அல்லாஹ் நமக்கு ஏதோ ஒன்றை அருளிவிட்டால் உடனே ”அர்ரஹ்மான்! அர்ரஹ்மான்” என்று கூறுகிறோம்! ஆனால் நாம் நினைத்தது நடக்காமல் போகும்பட்சத்தில் சோகமே உருவானதாக எண்ணிக் கொண்டு அல்லாஹ்வைத் தவிர வேறு ஏதாவது ஒரு சக்தி கைகொடுக்குமா? என்று ஏங்கி அதைத் தேடும் பாதைகளில் அமர்ந்துவிடுகிறோம்!

ஏன் நீங்கள் நினைத்ததை அல்லாஹ் நிச்சயம் நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களா? இப்படி நீங்கள் நினைத்து விடாதீர்கள் காரணம் நீங்கள் இப்படி நினைத்துவிட்டால் இது பாவங் களிலேயே மிகப்பெரிய பாவமாக மாறிவிடும் மேலும் ”அல்லாஹ்வுக்கு நாம் அடிமை” என்ற கொள்கை தலைகீழாக மாறிவிடும்! (அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும்).

சகோதரர்களே இந்த உலக வாழ்கை பற்றி அல்லாஹ் கூறும் போது.

இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை” (ஆலஇம்ரான்:185)
 மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடு மேலானதாகும்” (அல்அன்ஆம்: 32)



அல்லாஹ் நம்மை துரத்தி துரத்தி உதவிக் கொண்டிருக்கிறான் நாம் அதை சிந்திப்பதில்லையே!

சகோதரர்களே நீங்கள் இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள் சற்று தங்களைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!

சென்ற வினாடி நாம் எங்கே இருந்தோம்

சென்ற வாரம் நாம் எங்கே இருந்தோம்

சென்ற மாதம் நாம் எங்கே இருந்தோம்

சென்ற வருடம் நாம் எங்கே இருந்தோம்

பிறப்பதற்கு முன் நாம் எங்கே இருந்தோம்

(குழப்பமாக இருக்கிறதா? இதுதான் வாழ்க்கை!)

நம்மை பாலூட்டி, அறிவுட்டி வளர்த்த அருமைத் தாய் கர்ப்பம் தறிக்கும் முன் நாம் அற்பத்திலும் அற்பமான ஒரு கொசுவின் சடலமாக கூட இருக்கவில்லையே! அதைவிட கொடுமை ஒரு சூனியமாக (புஜ்ஜியமாக) கூட இருக்கவில்லையே! இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் நாம் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நம் தாயின் வயிற்றில் ஒரு அற்பமான நீர்த்துளியால் (இந்திரியத்துளியாக) நம்மை செலுத்தி அந்த நீர்த்துளிக்குள் நம் உயிரை ஊதினானே! அவன் ரஹ்மானில்லையா?

தாயின் வயிற்றில் நம்மை ஒப்படைத்து உதவினானே!

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து. (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே, சிந்தித்து விளங்கிக் கொள்ள கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்கள் விவரித்துள்ளோம் (திருக்குர்ஆன் 6:98)

நம் உயிருக்கு உடல் கொடுத்து உதவினானே!

அவன்தான் கர்ப்ப கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவன் யாரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான் (திருக்குர்ஆன் 3:6)
தாயின் கர்ப்பப் பையில் நம் உயிரை கண்காணித்து உதவினானே! ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப் பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.  ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (திருக்குர்ஆன் 13:8)


வளரும் பருவத்தில் நமக்கு கல்வி அறிவைக் கொடுத்தானே!

”(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாத வற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” (திருக்குர்ஆன் 96:5)

நமக்கு வாழ வழிவகை செய்து ஆற்றலை கொடுத்தானே!

நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (திருக்குர்ஆன் 16:14)

நமக்கு ஆற்றல் மட்டும் போதுமா என்று எண்ணி நம் ஆற்றலுக்கு உதவியும் செய்தானே!

அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று)  வெளிப் படுத்தப்படுவீர்கள்.  (திருக்குர்ஆன் 43:11)

மனிதர்களுக்கு குறைகளும் கொடுத்தான் அந்த குறைகளால் நிறைகளும் கொடுத்தானே!

சகோதரர்களே, அல்லாஹ் சிலர் சிலருக்கு உடலளவில் குறைபாடுகள் கொடுத்தான் ஆனால் நாமோ இந்த குறைபாடுகளை கண்டு ஏன் இவர்களை இவ்வாறு இறைவன் படைத்தான் என்று எண்ணிக் கொண்டிருப்போம்! ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறானே! சிந்தித்துப்பாருங்கள்!


கண்பார்வை இல்லாதவர்கள் எதனையும் காண முடியாது இது அவர்களுக்கு உள்ள குறை அதே வேளையில் காதுகளில் நுண்ணறிவோடு கேட்கும் சக்தி அதிகமாக்கித்தந்தானே!

இதைவிட சிறந்த உதவியாக கண்பார்வையற்றவர்கள் கண்களின்
விபச்சாரத்திலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்களே! மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?


காது கேளாதோருக்கு கேட்கும் திறன் குறைவாக இருக்கும் இவ்வாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்குமே! அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல்
இருப்பதானல் மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது செவிக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா? வாய்பேச முடியாத ஊமைகள் இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் வாய்களினால் எதனையும் பேச முடியாது ஆனால் அதே நேரம் அவர்கள் புறம் பேசுதல் போன்ற எந்த கெட்ட வார்த்தைகளையும் பேச முடியாதே அவர்களுக்கு மஹ்ஷரில் அவர்களின் வாய்க்கு விசாரணை

இருக்காதே! இது உதவியல்லவா?


சகோதரர்களே! பிறக்கும் குழந்தைகளிலோ அல்லது ஏதாவது விபத்திலோ சிலருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் பைத்தியமாக இருப்பார்கள் அவர்கள் நிலையைக் கண்டால் நம்மில் சிலருக்கு பைத்தியம் என்று எண்ணி மனதளவில் சிரிப்பு வரும் ஆனால் இவர்களுக்கு உள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்த்தால் நமக்கு வருத்தமளிக்கும் காரணம் இவர்கள் பிறவியிலேயே புத்திசுவாதீனமற்றவர்களாக இருந்தால் கேள்விக்கணக்கே இருக்காதே!  மேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை
அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்குமே!  மேலும் மஹ்ஷரில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா!

இதையே திருமறை இவ்வாறு கூறுகிறது நாம் தான் சிந்திக்க தவறுகிறோம்

‘நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்தும் (மறுமை நாளில்) விசாரிக்கப்படும்.. (திருக்குர்ஆன் 17:36)

சகோதரர்களே! இதை செவி தாழ்த்திக் கேளுங்கள்!


சகோதரர்களே நம்மில் சிலர் நம்மை வீடு தேடி வந்து உலகில் உயர்ந்த பொருள் (அல்லாஹ்வின் பார்வையில் அர்ப்பமான பொருள்) கொடுத்து உதவுவார்கள் அதற்கு பிரதிபலனாக உங்களிடம் உள்ள பொருள், பொன், ஆன்மக்கள், பெண் மக்கள்,
நற்பெயர் போன்ற எதையாவது எதிர்பார்ப்பார்கள் ஆனால் அல்லாஹ் உங்களுக்கு கிடைத்தற்கரிய உயிரை கொடுத்தான், உங்களுக்கு நிலத்திலும் உதவுகிறான்! நிலவிலும் உதவுகிறான்! காற்றில் பயணிக்கும் போதும் உதவுகிறான்! கடலில்
பயணிக்கும் போதும் உதவுகிறான்!


ஏன் உங்களால் முடிந்தால் நீங்கள் பாம்பு பொந்துக்குள் ஓடி
ஒழிந்துக்கொண்டாலும் அங்கும் சுவாசக் காற்றை கொடுத்து உதவுவானே!

நீங்கள் நிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கத்தை வெட்டி எடுக்க முனைந்தாலும் அங்கும் காற்றை, நீர் மற்றும் உணவை கொடுத்து உதவுகிறானே! ஏன் நீங்கள் மரணித்தால் நல்லவராக இருந்தால் கப்ருக்கடியில் சுவனத்தின் கதவை திறந்துவிட்டு என் அடியான் உறங்கட்டும் என்று ஆசைப்படுகிறானே!!!

அல்லாஹ் ரஹ்மானில்லையா?  ரஹ்மத்துல் ஆலமீன் இல்லையா?
ஆனால் மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வின் உதவி கிடைக்காவிட்டால் உடனே விக்ரஹத்தையும் சமாதிகளையும் வணங்குகிறோம் அவைகள் உதவும் என்று எண்ணிக்கொள்கிறோம் இது அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் துரோகமில்லையா? இது படைத்த ரப்புல் ஆலமீனுக்கு எதிராக நாம் செய்யும் பாவமில்லையா? இது முறையா?

சிந்தியுங்கள் சகோதரர்களே!
உங்களுக்கு அளித்த அருட் கொடைகளுக்கு பகரமாக அல்லாஹ் உங்களிடம் என்ன கேட்கிறான்! வாடகையா? கூலியா? உணவா? உடையா? கட்டணமா? ஒன்றுமில்லையே! மாறாக கீழே உள்ள ஒன்றைத்தானே அவன் கேட்கிறான்!

உங்கள் இறைவன் கூறுகிறான்;
”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக் கிறேன்;  எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந் தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.
 ”( திருக்குர்ஆன் 40:60)


(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச்சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (திருக்குர்ஆன் 75:37)

நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (திருக்குர்ஆன் 40:61.)

அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலதாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியடையவன். (திருக்குர்ஆன் 40:64)

அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை – ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் – அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
(திருக்குர்ஆன் 40:65)


(நபியே!) கூறுவீராக ”என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் – அன்றியும் – அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.” (திருக்குர்ஆன் 40:66)

சகோதர, சகோதரரிகளே நாம் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்!


அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் கைமாறு செய்யப்பட முடியாத உதவிகளையும் கொடுத்த அல்லாஹ்விற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா? அல்லது பேசினால் பதிலளிக்காது!. கேட்டால் கொடுக்காத! ஏன் உங்களை திரும்பிக்கூட பார்க்காத ஏதாவது ஒன்றிற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா?

உங்களுக்கு சிறு உதவி இதோ!

அல்லாஹ்வின் அருட்கொடைகளை படித்தீர்கள் அந்த அல்லாஹ்விடம் எனக்கு எது உண்மை எது பொய் என்று புறியவில்லை என் மூதாதையர்களின் வழியில் நான் இருக்கின்றேன் எனக்கு விக்ரஹ மற்றும் தர்கா வழிபாடுகளை விட்டுவிடு என்று கூறுவது புதிதாக உள்ளது மேலும் கஷ்டமாக உள்ளது எனவே எனக்கு எது உண்மை எது போலி என்று இணம் காட்டி நேர்வழி காட்டுவாயா? நான் பின்பற்றுகிறேன் என்று
கண்ணீர்மழ்க கேட்டுப்பாருங்கள்! விந்துத்துளியாக இருந்த உங்களுக்கு உயிரை ஊதிய உங்கள் அல்லாஹ் (இன்ஷா அல்லாஹ்) உங்களுக்கு நேர்வழி காட்டி சுவனத்தைகூட அளிப்பான்!

நீங்கள் வணங்கும் விக்ரஹ்மோ அல்லது கப்ரோ உங்களுக்கு சுவனத்தை அளிக்குமா? யார் யாருக்கோ சிந்திப்பீர்கள் சற்று உங்களுக்காக! சிந்தித்துப்பாருங்கள் நேர்வழி கிடைக்கும்
(இன்ஷா அல்லாஹ்) உங்கள் முடிவு உங்கள் கையில்! ஸலாம்

இறுதியாக அல்லாஹ்வின் வார்த்தை ஒன்றைச் சொல்லிக் கொண்டு இந்த மடலை முடித்துக்கொள்கிறேன்!

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்”  (என்பதைக் கூறுவீராக!) (திருக்குர்ஆன் 2:186)
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே)


நன்றி: Islamic Paradis...

Sunday, 1 January 2012

இரத்த தானம் செய்வீர்! மனிதாபிமானத்தை வளர்ப்பீர்! விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பீர்!


இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.

ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம்.அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ ,சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல; இன்று நம்மில் 20-30 சதவிகிதம் மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தொடர்ச்சியாக தகுந்த இடைவெளியில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையினைச் செய்து வருகின்றனர். இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம். இந்தக் கட்டுரையின் மூலம் இந்த எண்ணிக்கை சிறிதளவாவது கூடுமாயின் இது மேலும் பல உயிர்களைக் காப்பதற்கு உதவும். அதுவே இக்கட்டுரையின் குறிக்கோள் ஆகும்.
இரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.


ரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:

* இரத்த தானம் செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.

* இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 – 16 கிராமிற்குள் இருக்க வேண்டும்.

* இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
இரத்ததானம் செய்யும் ஆண்,பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்:
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது. கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய்முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இரத்த தானம் செய்பவர் பெண் எனில் தேவையான தகுதிகள்:

மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெருபவர்களும் இரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

இரத்த தானம் செய்பவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:

இரத்த தானம் செய்ய விரும்புபவர் மது அருந்தும் பழக்கமுடையவர் எனில், மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம். புகைப்பிடிக்கும் பழக்கமுடையவராக இருப்பின், புகை பிடித்ததன் பின்னர் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது நல்லது. அதே போன்று இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப்பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். சில வங்கிகள் புகை, மது போன்ற பழக்கமுடையவர்களிடமிருந்து இரத்தம் பெற தயக்கம் காட்டும். புகையும் மதுவும் உடலுக்குக் கேடு செய்யக்கூடியவையாக இருப்பதே அவர்களின் தயக்கத்துக்கு காரணம். ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.

இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும். இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பளுவுள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.


ரத்தப்பிரிவு அட்டவணை:




இரத்த வங்கியும் அதன் செயல்பாடுகளும்:
தானம் பெறப்பட்ட இரத்தத்தைச் சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவ மனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4.5 (நான்கரை) முதல் 5.5 (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்ய வருபவரிடமிருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட இரத்தம் இரத்த வங்கிகளில் குளிரூட்டப் பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!
இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!
சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலிருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது.


இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.


தூய இரத்தம் – 35 நாட்கள்

இரத்தச் சிகப்பணு – 42 நாட்கள்

இரத்தத் தட்டுக்கள் – 5 நாட்கள்

பிளாஸ்மா – 1 வருடம்

இரத்ததானம் செய்தவர்களின் இரத்தம் பரிசோதனை செய்தபிறகே நோயாளிக்குச் செலுத்தப் படுகின்றது. இரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் அந்த இரத்தம் நோயாளிக்குப் பொருந்துமா என்று சோதனை செய்தபிறகே வழங்கப்படுகின்றது.

இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்:
இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல; கொடுப்பவரின் தன் நலன் காப்பதற்கு உதவுவதோடு அவர்களின் உடல்நலன் மேம்படுவதற்கும் அது உதவுகிறது. இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தற்போதைய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

ஹிமோகுளோபின் அளவினைக் கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப் படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது. தொடர்ச்சியாக இரத்த தானம் செய்வதன்மூலம் உடலில் புது இரத்தம் உற்பத்தியாவதால், இரத்தத்தில் தேங்கும் அசுத்தங்கள், இறந்த செல்கள் போன்றவை நீக்கப்பட்டு உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவுகிறது.

இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. சிலருக்கு ஏற்படும் மயக்கம் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பதுதான் உண்மை. மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்குத் திரும்பி விடுவர்.

இரத்த தானம் செய்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இரத்த தானம் செய்வது பலவிதமான நன்மைகளை நமக்கும் பிறருக்கும் அளிக்கின்றது. இரத்ததானம் செய்வதினைப் பற்றிய அறியாமையை உடைத்து அனைவரும் இரத்த தானம் செய்க!

பிறரைக் கெடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல;கொடுத்து வாழ்வதே வாழ்க்கை.

ஆகவே தங்களால் இயன்ற அளவு பிறர்க்குத் தானம் செய்து வாழ்க!

இரத்த தானம் செய்வீர்!மனிதாபிமானத்தை வளர்ப்பீர்! விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பீர்!

தொகுப்பு :மு.அஜ்மல் கான் .

இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்....

இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்

இஸ்லாமும் அறிவியலும் என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய அவசியம் என்னவென நீங்கள் நினைக்கலாம்..

இதைப்பற்றி விவாதிக்க வேண்டியவர்கள் அறிவியல் அறிஞர்களும், இஸ்லாமிய அறிஞர்களும்தான். என் வேலை கவனிப்பது மட்டுமே.

ஆனால் நண்பர் ஒருவர் எனக்கு பின்னூட்டம் இட்டு இருந்தார். இஸ்லாம் என்பது அறிவியலுக்கு புறம்பானது என்பது அவர் வாதம்.

இதை நாகரிகமான வார்த்தைகளால் அவர் சொல்லி இருந்ததால் பின்னூட்டத்தை வெளியிட வேண்டி இருந்தது,  ஒருவருக்கு என்ன கருத்து வேண்டுமானாலும் இருக்கலாம். நாகரிகமாக சொன்னால் , அதை கேட்பது நம் கடமை. ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷ்யம்.

இப்படி பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டதால் என் கருத்தையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பின்னூட்டத்தை ஏற்கிறேனா இல்லையா என்பதை சொல்லி ஆக வெளிப்படையாக சொல்லாமல் , கள்ள மவுனம் சாதிக்கும் கபட நாடகத்தை நான் விரும்பவில்லை.

சரியோ தவறோ , யாரும் ஏற்கிறார்களோ இல்லையோ, என் கருத்தை சொல்லியாக வேண்டும்.

சொல்கிறேன்.

  ஒரு கால கட்டத்தில் அறிவியல் என்பது மிகப்பெரிய விஷயம். அறிவியல் பூர்வ உண்மையே முழு உண்மையாக , இறுதி உண்மையாக ஏற்கப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில் இறுதி அறிவியல் உண்மை என்று எதுவும் இல்லை.
ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று அனறைய அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள். அதற்கு நிரூபணமும் காட்டினார்கள்.

ஆனால் சில ஆண்டுகளில் அது தவறு என கண்டறியப்பட்டு அந்த “ அறிவியல் “ உண்மைகள் தூக்கி எறியப்பட்டன.

சென்ற மாதம் வரை ஐன்ஸ்டீனின் கொள்கைகள் வேத வாக்காக இருந்தன, ஒளியின் வேகத்தை விட எதுவும் செல்ல முடியாது என கருதப்பட்டது.

ஆனால் இன்றைய நவீன கருவிகள் மூலம் அந்த கொள்கைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆக, அறிவியல் சொல்லும் “ உண்மைகளை “ வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது.

இன்றைய நிலையில் அது உண்மை என்ற அளவுக்கே அறிவியலுக்கு மரியாதை.

இது என் கருத்து அன்று.

ஸ்டீவன் ஹாக்கிங் தன் நூலில் ( கிராண்ட் டிசைன் ) இப்படி சொல்கிறார்.

இப்போதைய கருவிகளின் திறனுக்கேற்ப, இப்போதைய நம் அறிவுக்கேற்ப சில உண்மைகளை கண்டு பிடிக்கிறோம். ஆக அறிவியல் உண்மை என்பது, சில விசேஷ சூழ்னிலைகளுக்கு உட்பட்ட உண்மை என்பது அவர் கருத்து,
இது உறுதியானதோ, இறுதியானதோ அல்ல.


ஆனால் ஆன்மீக நூல்கள் கூறும் உண்மைகள் இறுதியானவை.

ஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால், அறிவியல் செய்திகளை அவற்றில் நேரடியாக தேடுவதுதான்.

e= mc2 என்ற ஃபார்முலாவை அதில் தேடினால் கிடைக்காது.  அவற்றின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவது அல்ல.. வாழ்க்கையை போதிக்கின்றன அவை, அறிவியல் உண்மைகள் ஆங்காங்கு சொல்லப்படுகின்றன.

அந்த அறிவியல் உண்மைகள் , சைன்ஸ் பாடத்தில் இருப்பது போல நேரடியாக இருக்காது. ஏனென்றால் அவை அறிவியல் பாட புத்தகம் அல்ல.


ஓகே.. இந்த குர் ஆன் வசனத்தை கவனியுங்கள்.

வானமும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் , அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் , ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து  நாமே அமைத்தோம் என்பதையும் , மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? ( 21.30 )

இதை சாதாரண ஒருவர் படித்தால் , கவிதை போல தோன்றும். ஆனால் சற்று அறிவியல் நூல்களை படித்தவர்களுக்கு வேறோரு கோணம் புலப்படும்.

50 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் புத்தகங்கள் படித்தால் ஒன்றும் புலப்படாது. லேட்டஸ்ட் புத்தகங்கள் படித்தால் , ஆச்சர்யமாக இருக்கும்

உன்மையில் ஒரு காலத்தில் எல்லாம் இணைந்துதான் இருந்தன என்கிறார் ஹாக்கிங்.

ஒரு கட்டத்தில் பிரிந்தன. ஏன் பிரிந்தன.. பிரிய வேண்டும் என ஏன் தீர்மானித்தன என்பது புரியவில்லை என்கிறார் அவர்.

இந்த பின்னணியில் மேற்கண்ட வசனத்தை பாருங்கள்..



தண்ணீரில் இருந்து என்பதும் முக்கியமானது. உயிரிகள் தண்ணீரில் இருந்துதான் தோன்றின என்கிறது அறிவியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வசனத்தை பாருங்கள்

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும் , பூமியையும் இரண்டு நாட்களில் படைத்தான் ( 7.54 )

அது எப்படி இரண்டு நாட்களில் படைக்க முடியும் என மேலோட்டமாக படிப்பவர்களுக்கு தோன்றும்..

ஆனால் அறிவியல் படித்தவர்கள் இதில் இருக்கும் உள் அர்த்தத்தையும் , சொல் அழகையும் பார்த்து ஆச்சர்யப்பட முடியும்.

காலம் என்பது நாம் நினைப்பது போல மாறாத ஒன்று அன்று.

இந்த இடுகையை அரை  மணி நேரம் செலவு செய்து நான் டைப் செய்கிறேன். இதே அரை மணி நேரத்தில் நீங்கள் , உங்கள் மனைவி துணிகளை துவைத்து கொண்டு இருக்கலாம், பெண் தோழியிடம் பேசிக்கொண்டு இருக்கலாம். உங்களுக்கு அரை மணி நேரம் ஆகும்போது எனக்கும் அரை மணி நேரம் ஆகும் . தமன்னாவுக்கும் அரை மணி நேரம் ஆகும். நேரம் மாறாத ஒன்று என நினைக்கிறோம்.

தவறு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் செல்கிறார் என்றால் , அவரது அரை மணி நேரமும் , உங்கள் அரை மணி நேரமும் ஒன்றாக இருக்காது. உங்களுக்கு ஒரு வருடம் ஆகி இருக்கும், ஆனால் அவருக்கோ ஒரு மணி நேரமும் ஆகி இருக்கும்..

வகுப்பறையில் ஒரு மணி நேரம் , ஒரு யுகமாக தோன்றும். ஆண் தோழனுடன்

அல்லது பெண் தோழியிடம் பேசும் போது ஒரு மணி நேரம் , ஒரு நிமிடன் போல தோன்றும். அது வேறு. இது வெறும் தோற்றம்தான்.

சில சூழ் நிலைகளில் உண்மையாகவே காலம் , ஒவ்வொருவருக்கும் மாறக்க்கூடும்.
அந்த வகையில், மேற்கண்ட வசனத்தில் வரும் இரண்டு நாட்கள், நாம் அன்றாட வாழ்வில் காணும் இரண்டு நாட்கள் அல்ல.


இதை பாருங்கள்

வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்.  நிச்சயம் அவற்றை விரிவாக்கம் செய்பவராவோம். ( 51.57 )

இதையுமே சென்ற நூற்றாண்டு அறிவியல் அறிஞர்கள் கிண்டல் செய்து இருக்க கூடும்.

ஆனால் இன்றைய அறிவியல் , பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.


பூமி , வானம் எல்லாம் எப்போதுமே இருந்து வருகின்றன என்பது சிலர் வாதம். அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறது இன்றைய அறிவியல்.

சில வசனங்கள் , அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன என்பது உண்மைதான், ஆனால் வருங்கால அறிவியல் அவற்றையும் உண்மையாக்கும் . அப்படித்தான் இது வரை நடந்துள்ளது.

என்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.

உங்கள் நண்பன்-மு.அஜ்மல்கான்.

நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் - திட்டமிடுதல்/தன்னம்பிக்கை/வாழ்க்கையின் இரகசியம்!....

நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் .....

திட்டமிடுதல்

முன்னொரு காலத்தில் அந்த நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். அரண்மனைக்குச் சென்று 'எனக்கு அரசர் பதவி வேண்டும்' என்று கேட்டால் போதும், அரியணையில் அமர்த்தி முடிசூட்டிவிடுவார்கள். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே
இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

மேற்கண்ட கதையை கவனியுங்கள்!
''ஐந்து ஆண்டுக்குப் பிறகு காடும் சாவும்தான் விதி'' என்ற விதியை மதியால் எப்படி மாற்றினான்?

வறுமையும், நோயும், மன உளைச்சலும், அவமதிப்பும்தான் நம்முடைய விதியா?

பசி, பிணி, மூப்பு, சாக்காடுதான் தலையெழுத்தா? எப்படியும் மரணம்தான் என்பது ஆண்டி முதல் அரசன் வரை அனைவருக்கும் வகுக்கப்பட்ட விதியாக இருந்தாலும், இறுதிக் காலத்தை ஏன் இறுகிப்போன காலமாகக் கழிக்க வேண்டும்?

அதற்காகத் துல்லியமாகத் திட்டமிடுங்கள்.
எப்போது செய்ய வேண்டும் என்று அழகாகத் திட்டமிடுங்கள்.
எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !
 தன்னம்பிக்கை

 

ஒரு மான் பிரசவ வலியில் துடித்தது. அது குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது. தனது குட்டிகளை நலமாக பிரசவித்தது. சிறிது காலம் அந்த மானும் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது. வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது. குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான் உடளே தன் குட்டிகளிடம்
" சிங்கம் குகைக்கு அருகில் வந்ததும், எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்கம் கறி வேண்டும் என்று கத்துங்கள்" என்று சொன்னது.
சிங்கம் குகை அருகில் வந்த உடன் குட்டி கத்தியதை குகையின் எதிரொலியால் பயங்கரமாக கேட்ட சிங்கம் நம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்ளே இருப்பதாக நினைத்து ஓட்டமெடுத்தது.
ஒரு நரி, ஓடி வருகிற சிங்கத்தை பார்த்து,
" ஏன் ஓடுகிறீர்கள் ? " என்று கேட்க,
" என்னுடைய குகையில் வேறு ஏதோ மிருகங்கள் குடியிருக்கின்றன. எவை என்னைக் கொள்வதற்கு காத்திருக்கிறது " என்று சிங்கம் சொன்னது. அதை கேட்ட நரி,
" வேறு மிருகங்கள் இல்லை. மானும் அதன் குட்டிகளும்தான் இருக்கிறது. எனக்குத் தெரியும், வாருங்கள் பெரிய மானை நீங்கள் சாப்பிடுங்கள். குட்டிகளை நான் சாப்பிடுகிறேன்." என்றது. அதற்கு சிங்கம்,
" சரி வருகிறேன். ஆனால் நீ ஏற்கனவே என்னை ஏமாற்றியவன், அதனால் உன்னுடைய வாலையும் என்னுடைய வாலையும் முடிந்து கொண்டு செல்வோம் " என்று சொல்லி அதன் வாலைத் தன்னுடைய வாலுடன் பிணைத்துக் கொண்டது. சிங்கத்தை நரி அழைத்து வருவதைப் பார்த்த மான், அருகில் இரண்டும் வந்த உடன் தன் குட்டிகளிடம் சத்தமாக,
" கவலைப்படாதீர்கள் பிள்ளைகளே, இன்று நாம் எப்படியும் சிங்கக்கறி சாப்பிடுவோம், அதை எப்படியாவது அழைத்து வந்து விடுவேன் என்று நரி அண்ணன் சொல்லிச் சென்றுள்ளது. நிச்சயம் நரி அண்ணன் சிங்கத்துடன் வரும் " என்று சொன்ன உடன்,
இதை கேட்ட சிங்கம் தலைதெறிக்க ஓடியது. அதன் வாலோடு தன் வாலைப் பிணைத்திருந்த நரி அடிபட்டு இறந்தது.

- இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது, எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிட கூடாது. ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலை படுவதாலோ வருத்தப் படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப்போவதில்லை. அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால் நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.

உதாரணம், ஒரு ஒருவழி சாலையில், நீங்கள் இரண்டு சக்கர வாகனம் ஓட்டி கொண்டு செல்கிறீர்கள், அப்போது எதிரே பஸ் அல்லது லாரியோ எதிரே வேகமாக வருகிறது சில நொடிகளில் விபத்து ஏற்பட கூடிய சூழ்நிலை, இந்த தருனத்தில் நீங்கள் அய்யோ என்று பதறினால் ஒன்றும் நிகழப்போவதில்லை உங்களுக்கு நன்மையாக, ஆனால் உங்களின் கவனத்தை எதிரே வருகிற வாகத்தை எப்படி தவிர்த்து ஒதுங்கி போவது என்று சிந்தித்து அதன்படி உங்கள் வாகத்தை செலுத்தினால் அந்த விபத்திலிருந்து தப்பலாம்.
ஒரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்தால் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று சிந்திக்க வேண்டும் தன் நம்பிக்கையுடன். எனக்கு அது போல சூழ்நிலை ஏற்படுவதுண்டு என் மனைவி அய்யயோ இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படுவதுண்டு நான் அதை பற்றி சிந்திக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து அதன்படி செயல்பட ஆரம்பித்து விடுவேன். பிறகு அந்த சூழ்நிலை மாறியதும் என் மனைவியிடம் சொன்னால் அதற்கு நீங்கள் ரொம்ப அழுத்தம் என்பார்கள்.

எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே அதிலிருந்து தப்ப தன்னம்பிக்கையும், பதட்டப்படாமல் இருந்தாலே பாதி வெற்றி, நாம் பயப்படாமல் எதிரில் உள்ளவர்களை சமாளித்தால் மீதி வெற்றி.

தன்னம்பிக்கை வேண்டும் பதட்டம் வேண்டாம்... வெற்றி உங்களுக்கே...


ஒரு கப்பல் கட்ட வேண்டுமா? உங்கள் ஆட்களைக் கூப்பிட்டு, மரத்தைக் கொண்டுவரச் சொல்லி, வேலைகளைப் பிரித்துக்கொடுத்து, உத்தரவுகள் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்காதீர்கள். முடிவு இல்லாத அகண்ட கடலை நினைத்து ஏங்குவதற்கு அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள் போதும்.

எல்லோரையும் நம்முடைய பயணத்தில் சேர்த்துக் கொள்ளச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? அவர்கள்  ‘நானும் வருகிறேன்’ என்று சொன்னால் மட்டும் போதாது. அவர்களின் அடி மனத்தில் நுழைந்து பாதித்து, உங்களைவிட அவர்கள் அதிக உற்சாகமாகப் புறப்படும்படி செய்துவிட வேண்டும்.

மனிதர்களை கூட்டு சேர்த்துக்கொள்வது என்றால், அவர்கள் முழுக்க முழுக்க ‘இது என்னுடைய வேலை’ என்று சொந்தம் கொண்டாட வேண்டும். அதற்கு, தொழில் இலக்குகளோ, புள்ளி விவரங்களோ போதாது. ஒரு லட்சிய வேள்வியின் பயனாக விளைவது அது.

கூட்டாளிகள் வந்து சேர வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் வெற்றி கிடைக்க வேண்டும். அதற்குப் பெயர் தான் மும்முனைத் திட்டம்.
         
1. எடுத்த காரியம் வெல்ல வேண்டும்.
        
2. நாம் வெல்ல வேண்டும்.
        
3. நம்முடன் சேர்ந்தவர்கள் வெல்ல வேண்டும்.

நம்முடைய லட்சியத்தால் கவரப்பட்டு, தோழர்கள் தானாக வந்து சேர்ந்து கொள்ள வேண்டும்; நம் சுருதியில் இழைந்து பாட வேண்டும். யாரையும் வலிமையைக் காட்டி இழுக்கக் கூடாது. கட்டாயப்படுத்தி கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டோமானால், எப்போது அவர்கள் நம்முதுகில் குத்துவார்கள் என்றே தெரியாது. நம் முதுகைக் காப்பாற்றுவதற்கே நேரம் சரியாகப் போய்விடும். ஆனால் பணியின் மீது முழு ஈடுபாட்டை அவர்கள் மனத்தில் ஏற்படுத்தி விட்டால் போதும்; எப்போதும் நமக்குத் துணையாக இருப்பார்கள்.

வாழ்க்கையின் இரகசியம்!

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை
 உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!

யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ
அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
 பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட
ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!

அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை.
தூரத்தில் இருக்கும் போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்
மறக்க வேண்டாதவகைகளை மறந்து விடுவதும்தான்
இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல
விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

நன்றாகப் பேசுவது நல்லதுதான்
ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தியாகி விடுகிறது!

முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி
மெளனமாக இருப்பதுதான!

பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்!
பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!

தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!
வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!

இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!

Saturday, 31 December 2011

மூலிகையில் கொட்டும் பணம் !! அள்ளநீங்க தயாரா?


ஆவாரை செடி
"வாரை பூத்திருக்க சாவரை கண்டதுண்டோ" - ஆவாரை செடியை மருந்துக்கு பயன்படுத்தினால் இறப்பு கூட பக்கத்தில் வராது என்பது தான் இதற்கு பொருள். தமிழ்நாட்டில் நீங்கள் எங்கு பயணம் செய்யும் போதும் இந்த ஆவாரை மஞ்சள் நிறத்தில் பூக்களுடம் சாலையின் ஒரங்களில் எங்கும் வளர்ந்து கிடப்பதை பார்க்கலாம். இப்படி வளர்ந்து கிடக்கும் செடியை பறித்து பணம் பார்க்க தான் யாரும் முன்வருவதில்லை.

இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை பெண்களின் அழகை மேம்படுத்துவதற்காக விற்பனை செய்யப்பட்டும் இயற்கை கிரீம்களில் இந்த ஆவரை சேர்க்கப்படுகிறது. ஆவாரையை பொடியாக்கி தேய்த்து குளித்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும் என்கிறது சித்த நூல்கள்.

இது போல் தமிழ்நாட்டில் சாலை ஓரங்களிலும், வயல்வரப்புகளிலும் மருத்துவ குணமுடைய ஏராளமான மூலிகைகள் வளர்ந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டின் மாவட்டங்கள் அனைத்தும் இயற்கையாகவே சிறந்த மண்வளம் மற்றும்  தட்பவெப்ப நிலையை கொண்டிருக்கிறது. இப்படியிருந்தும் உலக அளவில் இந்தியாவின் மூலிகை ஏற்றுமதி வணிகம் என்பது 1 சதவீதத்திற்கும் கீழ்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உலகின் பெரும்பான்மையான மக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்த்துக் கொள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளையே நாடுவதாக கூறுகிறது.  வளர்க்க வளர்க்க பணத்தை, டாலர்களை அள்ளித்தரும் ஒரே வளம் மூலிகைகள் மட்டுமே.

இந்தியாவிலும் கடந்த 10-15 ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவ முறைகள் நன்றாக வளரத் தொடங்கியுள்ளது. இதனால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருந்து தயாரிப்புக்கான மூலிகைகளின் தேவை பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மத்திய அரசு, மூலிகை தொடர்பான தொழில்களில் ஈடுபட விரும்புபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய முன்வந்துள்ளது. இதற்காக, தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் என்று ஒரு வாரியத்தை உருவாக்கியுள்ளது. மத்திய அரசு உருவாக்கிய இந்த வாரியத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மருத்துவ தாவர வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறது.

மருத்துவ தாவரங்கள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைப்பது, பாரம்பரிய மருத்துவ துறையை வளர்க்க தேவையான கொள்கைகளை உருவாக்குவது, பணம் ஈட்டக்கூடிய தாவரங்களை பயிரிடுதல், முறையான அறுவடை செய்தல், ஆய்வு மற்றும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வது, பதப்படுத்துதல், மூலப்பொருட்களை உருவாக்குதல், சந்தை நிலவரம் உள்பட பல தகவல்களை மூலிகை பயிரிடுவோருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் எடுத்து சொல்வது தான் இந்த வாரியத்தின் வேலை.

இந்த வாரியம் மூலிகை பயிரிட விரும்புபவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. இதனை தெரிந்து கொண்டவர்கள் சிறிய அளவில் நிலம் இருந்தால் கூட அதிக அளவு டாலர்களை மூலிகைகளை விற்பனை செய்வதன் மூலம் பெற முடியும். எனவே இந்த பதிவை பதிக்கும் படிக்கும் பதிவர்களுக்கு வசதியாக தமிழ்நாட்டின் எந்த மாநிலத்தில் என்ன மாதிரியான மூலிகைகள் நன்றாக வளரும் என்ற பட்டியலையும் இங்கு கொடுத்துள்ளேன்.

இந்த தாவரங்களை பயிரிட விரும்பும் விவசாயிகள், பயிர் செய்யவுள்ள மூலிகை, எத்தனை ஏக்கர் பரப்பில பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது, அதற்காக தேவைப்படும் நிதி அளவு உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு  விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து சென்னையில் இயங்கும் மாநில மருத்துவ தாவர வாரியத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு பெறப்பட்ட திட்ட அறிக்கை தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு சிறந்த திட்ட அறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு தகுந்த மானியம் வழங்கப்படும். இந்த மானியம் விண்ணப்பதாரருக்கு இரண்டு அல்லது மூன்று தவணைகளில் வழங்கப்படும்.

மூலிகை தாவரங்களை பயிரிடும் விவசாயிகள் அவற்றை நல்ல லாபத்தில் உள்ளூரில் விற்க தேவையான நடவடிக்கைகளை வாரியம் செய்துள்ளது. இதன்படி மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முகவரிகள், மூலிகைகளை வாங்குவோர் பற்றிய தகவல்களையும்  அளித்துள்ளது.

எனவே உங்கள் நிலமும் மூலிகை தாவரங்களை வளர்க்க ஏதுவானதாக இருந்தால் உடனே வர்த்தகரீதியாக லாபம் தரக்கூடிய மூலிகைகளை பயிரிட்டு பலன் பெறலாம். இது குறித்து மேலும் தகவல் பெற விரும்புபவர்கள்


மாநில மருத்துவ தாவரங்கள் வாரியம்,
அரும்பாக்கம், சென்னை-06.
தொலைபேசி எண்: 044-2622 2565/ 2621 4844 / 2628 1563 யில் தொடர்பு கொள்ளலாம்.


எந்த மாவட்டத்தில் என்ன மூலிகை வளரும்?
தற்போது தேசிய மருத்துவதாவர வாரியம் உலகின் மூலிகை தேவையை கருத்தில் கொண்டு 2011-12ல் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் எக்டர் பரப்பளவில் மூலிகை சாகுபடியை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக 200 வகையான விதை மற்றும் கன்றுகளுடன் கூடிய தரம் வாய்ந்த பயிர்த் தோட்டங்களை அமைப்பது, மருந்து தர நிர்ணய ஆய்வகங்கள் நிறுவுவது உள்பட பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது.  எனவே கீழ்க்கண்ட மாவட்டங்களில் சில மூலிகைகள் நன்றாக வளர வாய்ப்புள்ளன. இதனை பயன்படுத்தி மருத்துவ தாவரங்களை பயிரிட்டு பணம் காணலாம்.

சித்தாமுட்டி-(தமிழகத்தின் அனைத்து வறண்ட நிலப்பகுதிகள்)
பாரிசவாதம், பக்கவாதம், முகவாதம் போன்ற கடும் வாத நோய்களை தீர்க்க உதவும் சித்தாமுட்டி 1000 மெட்ரிக் டன் அளவு தேவைப்படுகிறது. இதனை தமிழ்நாட்டின் அனைத்து வறண்ட நிலப்பகுதிகளிலும் பயிரிடலாம்.

கலப்பைக் கிழங்கு -( சேலம், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி )
மருந்து கூர்க்கன் (திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோயமுத்தூர்)
அமுக்கரா -( கம்பம், கொல்லிமலை, ஏற்காடு, ஓசூர்)

தாட்டுபூட்டு பூ- (சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி)
கடல் அழிஞ்சில் (வேதாரணியம், கோடியக்கரை, கன்னியாகுமரி)

நுணா -(ஈரோடு, கோயமுத்தூர், திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலைகளான தேனி, பெரியகுளம். உடலின்நாடி நடையை உயர்த்த உதவும் நுணாவிற்கு 1000 மெட்ரிக் டன் தேவை உள்ளது.

கள்ளி முளையான் -(திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி)
சக்கரைக் கொல்லி -(திண்டுக்கல், தேனி, பெரியகுளம், திருநெல்வேலி)

திப்பிலி -(கொல்லிமலை, பழனிமலை, கன்னியாகுமரி, குளிர்ந்த பகுதிகளான ஓசூர், பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர்)

அசோகா -(மேற்கு தொடர்ச்சி மலையின் பின்பகுதி)
கருச்சிதைவு, கர்ப்பசூலை உள்ளிட்ட பெண்களின் நோய்களுக்கு அருமருந்தாகும் இதன் ஆண்டு தேவை 100 மெட்ரிக் டன்கள்

மாகாலி வேர்- (தென்மலை, ஜவ்வாது மலை முழுவதும்)

பாலைக்கீரை -(திருவள்ளூர் மாவட்டம் முழுவதும்)

நிலவேம்பு -( ஈரோடு, கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், கடலூர்)

இசப்பு கோல் -( இராமநாதபுரம், விருதுநகர்)

மேலும் வல்லாரை, மணத்தக்காளி, நெல்லி, நிலாவரை, நிலப்பணைக்கிழங்கு, சிறுகுறிஞ்சான், கறிவேப்பிலை, கீழாநெல்லி, கருந்துளசி, வசம்பு, சித்தரத்தை, ஆடாதோடை, அதிவிடயம், பச்சைநாபி, சோற்றுக்கற்றாழை போன்றவையும் மருத்துவ தேவைக்காக உலக அளவில் 500 முதல் 1000 மெட்ரிக் டன்கள் அளவு வரை தேவைப்படுகிறது. எனவே மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தகுந்த மூலிகைகளை பயிரிட்டால் கை மேல் காசு நிச்சயம்...