Sunday, 6 May 2012

பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள்....

தமிழ்நாட்டில் பொறியியல் விண்ணப்பங்கள் மே11 முதல் விற்பனை செய்யப்படும். விண்ணப்ப விற்பனை மே 11-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கும். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாள்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படாது.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள்:
தமிழகம் முழுவதும் 58 மையங்களில் இந்த விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், பிற ஐந்து இடங்களில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 58இடங்களில் விண்ணப்பன்க்களை பெறலாம்.

விண்ணப்பங்களைத் நேரில் பெற:
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 58 மையங்களில் மாணவர்கள் நேரில் சென்று ரூ.500-ஐ பணமாகவோவரைவோலையாகவோ செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்டபழங்குடியினஅருந்ததியின மாணவர்கள் தங்களது ஜாதிச் சான்றிதழின் நகலைச் சமர்ப்பித்து ரூ.250-க்கு விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களைத் தபாலில் பெறலாம்:
விண்ணப்பங்களைத் தபாலில் பெற விரும்பும் மாணவர்கள்செயலாளர்தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைஅண்ணா பல்கலைக்கழகம்சென்னை -600025 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தைக் கோரும் கடிதத்துடன் ரூ.700-க்கான வரைவோலையை இணைக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டபழங்குடியினஅருந்ததியின மாணவர்கள் தங்களது ஜாதி சான்றிதழுடன் ரூ.400-க்கான வரைவோலையை இணைத்தாலே போதுமானது.

வரைவோலை (Demand Draft):
அனைத்து வரைவோலைகளும் (டிமாண்ட் டிராப்ட்) செயலாளர்தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை என்ற பெயருக்கு சென்னையில் ஏதேனும் ஒரு தேசிய வங்கியில் மே11 அல்லது அதற்குப் பிந்தைய தேதிகளில் மாற்றத்தக்கதாக இருக்க வேண்டும்.மாணவர்கள் இணைக்கும் டி.டி.யின் பின்புறத்தில் அவர்களது பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிட வேண்டும்

கடைசி தேதி:
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை, மே 31-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.

எத்தனை இடங்கள்:
கடந்த ஆண்டு, 1.10 லட்சம் இடங்கள் பூர்த்தியான நிலையில், 40 ஆயிரம் இடங்கள் கடைசி வரை நிரம்பவில்லை. நடப்பாண்டில், 1.60 லட்சம் இடங்கள் வரை, எதிர்பார்க்கப்படுகிறது.


இதுதொடர்பான சந்தேகங்களுக்கு044-22358265, 22358266, 22358267 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின்  http://www.annauniv.edu/  என்ற இணையதளத்தையும் பார்க்கலாம்.

நான்கில் நான்காவதைத் தேர்வு செய் !

என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!! 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு 

ஏகத்துவத்தைப் பற்றி மக்கள் மத்தியில் பிரச்சாரம் நம் சகோதரர்கள் பல பிரச்சினைகளை சமுதாயத்தில் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் இளைஞர்களாக இருப்பவர்கள் தங்கள் எதிர்கால வாழ்வு தொடர்பாக பல சிக்கள்களையும், பிரச்சினைகளையும், கேள்விக் கணைகளையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. பெண்களின் வாழ்வுரிமை காத்த இஸ்லாமிய மார்க்கத்தில் வரதற்சனை என்ற கொடுமையினால் இஸ்லாமிய சகோதரிகள் தங்கள் வாழ்வின் வாசலைக் கூட அண்மிக்க முடியாத ஒரு துற்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் ஏகத்துவப் பிரச்சாரத்தின் வீரியத்தினால் அல்ஹம்துலில்லாஹ் நமது இளைஞர்கள் படை வரதற்சனை என்ற வஞ்சகத்தனத்தை தவிர்த்து ஏகத்துவம் காட்டிய இனிய வழியில் இஸ்லாமிய போதனைகளின் படி வரதற்சனை இல்லாத் திருமணங்களை நடத்திக் காட்டி தங்கள் கொள்கையின் பிடிப்பை நடை முறையில் வாழ வைக்கிறார்கள்.

ஷைத்தானின் சிந்தனைக்கு அடி பணிந்து, கொள்கையில் கோமான் என்று வாயளவில் சொல்லிக் கொள்ளும் பலர் தமது திருமணம் என்று வரும் போது தாம் கொண்ட கொள்கையை காற்றில் பறக்கும் பட்டத்தைப் போல் பறக்கவிட்டு விட்டு, பெண் விட்டின் சீதனமாக வரதற்சனை என்ற கொடிய செயலை மனதில் சிறு குழப்பம் கூட இல்லாமல் சர்வ சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

வரதற்சனை ஒரு வன் கொடுமை.

பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்.

பெண்ணின் கண்ணியம் காத்த இஸ்லாம்.

மணக் கொடை கொடுத்து திருமணம் புரிவோம்

இப்படியெல்லாம் மேடை போட்டுப் பேசியவர்கள், துண்டுப் பிரசுரம் வெளியிட்டவர்கள், பத்திரிக்கைகளில் எழுதியவர்கள் தமது திருமணத்தில் மாத்திரம் இவையனைத்தையும் மூட்டை கட்டி குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கமோ வெரும் வெற்று வார்த்தைக்குறிய மார்க்கமாக இல்லாமல் வாழ்வில் அனைத்துக் காரியங்களிலும் நடைமுறைக்கு ஏற்ற வழிகாட்டியாகத் திகழ்கிறது.

இந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதாக யாராவது சொன்னால் அவன் அதனை நடை முறைப்படுத்த வேண்டும், பேச்சில் தான் மார்க்கம் செயலில் இல்லை என்ற நிலை இருக்குமானால் அது இறைவனால் மிகவும் வெருக்கத்தக்கதாக கணிக்கப்படும்.

நம்பிக்கை கொண்டோரே ! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குறியது. (61:2,3)

ஆக ஏகத்துவக் கொள்கையை பேசுபவர்கள் வாய்ச் சொல்லில் வீரர்களாக இருக்கமாட்டார்கள் கண்டிப்பாக செயல் வீரர்களாகத் தான் இருப்பார்கள்.

நான்கில் நான்காவதைத் தேர்ந்தெடு.

திருமணம் செய்வதற்கு தயாராகும் இளைஞனைப் பார்த்து நபியவர்கள் நான்கு விஷயத்தை தெளிவுபடுத்திவிட்டு நான்கில் நான்காவதைத் தேர்வு செய் என்கிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளது செல்வத்திற்காக.

2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.

3. அவளது அழகிற்காக.

4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! (புகாரி - 5090)


மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவா்கள் ஆண்கள் பெண்களை எந்தெந்த நோக்கங்களுக்காக திருமணம் செய்கிறார்கள் என்பதைப் பட்டியல் போடுகிறார்கள். அதில் நான்காவதைத் தேர்வு செய்வதின் மூலம் வெற்றியடையும்படி வலியுறுத்துகிறார்கள்.

கரும்பு திண்ணக் கூலி கேட்கும் கயவர்கள்.

பெரும்பாலான ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் மிக முக்கிய விஷயம் பணம் தான். நான் உங்கள் மகளைத் திருமணம் செய்கிறேன் என்ன தருவீர்கள்? என்று மணமகன் கேட்ப்பான்.அல்லது உங்கள் மகளை எனது மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க நான் தயார் எனது மகனுக்க என்ன தருவீர்கள் என்று தந்தை அல்லது தாய் கேட்பாள்.

வீடு, கடை, தோட்டம், வாகனம், கை செலவுக்குப் பணம், உடுப்பதற்கான புதிய ஆடைகள், பெண் வீட்டு விருந்து இப்படி நீளும் பட்டியல்.

இவைகளைக் கொடுத்தால் தான் ஒரு பெண் மணப் பெண்ணான குறிப்பிட்ட மணமகனுடன் வாழ்வில் இணைய முடியும்.

மொத்தத்தில் கரும்பைத் திண்பதற்காக கூலி கேட்கும் வெட்கம் கெட்ட மாப்பில்லைதான் நான் என்பதை இவர்கள் இதன் மூலம் தெளிவாக நிரூபனம் செய்கிறார்கள்.

சிலரைவிட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களை செலவிடுகிறார்கள் என்பதாலும், ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். (4-34)

பெண்களை நிர்வகிக்கும் பொருப்பு ஆண்களிடம் தான் வழங்கப்பட்டுள்ளது. இப்படியிருக்க நாம் நிர்வகிக்க வேண்டியவர்களிடம் நாமே கை நீட்டி பணத்தை வாங்குவதென்பது வெட்கமே இல்லாதவனின் பண்பாகும்.

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :நீங்கள் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப் பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களுக்குத்) தரும் மஹ்ர்(விவாகக் கொடை)தான். (புஹாரி - 5151)

நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது என நபியவர்கள் பெண்களுக்கு ஆண்கள் கொடுக்கும் மஹர் தொகையைத் தான் குறிப்பிடுகிறார்கள். அப்படியிருக்க நாம் அவர்களிடம் பொருளையோ அல்லது பணத்தையோ வாங்குவதென்பது மார்க்கம் தடை செய்த, ஹராமான செயல்பாடாகும்.

ஆக கண்டிப்பாக எந்தக் காரணம் கொண்டும் செல்வத்தை முன்நிறுத்தியோ, மணமகள் தரப்பின் பொருளாதார வளர் நிலையை கருத்தில் கொண்டோ நாம் திருமணம் செய்யக் கூடாது என இஸ்லாம் நமக்குக் கட்டளையிடுகிறது.

குழப்பத்தை உண்டாக்கும் குடும்பப் பாரம்பரியம்.

இரண்டாவதாக நபியவர்கள் குறிப்பிடுவது குடும்பப் பாரம்பரியத்தைப் பற்றியதாகும். திருமணம் முடிக்கும் போது இரண்டாவதாக அநேகமானவர்கள் பார்க்கும் ஒரு விஷயம்தான் குடும்பப் பாரம்பரியம்.

பெரிய குடும்பமா? ஊரில் செல்வாக்கு வாய்ந்தவர்கள் இருக்கும் குடும்பமா? புகழ் அடைந்த குடும்பமா? அல்லது ஒரு பிரச்சினை என்று வந்தால் தலையைக் கொடுப்பவர்கள் அதில் இருக்கிறார்களா? இப்படியெல்லாம் குடும்பத்தைப் பற்றி பார்ப்பார்கள். ஆனால் இஸ்லாமோ இதற்கெல்லாம் சாவு மணி அடிக்கிறது.

திருமணம் என்பது பெண்ணைப் பொருத்து அமையும் செயலே தவிர பெண்ணின் குடும்பத்தை வைத்து பார்க்கும் விஷயமல்ல. பெண்ணிக் தாய் எப்படிப்பட்டவர்? பெண்ணின் தந்தை எப்படிப்பட்டவர்? அவளின் சகோதரர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதைப் பற்றியெல்லாம் ஆராயும்படி இஸ்லாம் எந்த இடத்திலும் நமக்குக் கட்டளை இடவே இல்லை.

ஆனால் இன்று பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்துவிட்டாலே முதலில் ஆய்வுக்குற்படுத்தப்படுவது பெண்ணின் குடும்பமே ஒழிய பெண்ணைப் பற்றிய செய்திகள் அல்ல.

இதனைத் தான் நபியவர்கள் வண்மையாகக் கண்டிக்கிறார்கள் பெண் குடும்பப் பாரம்பரியத்திற்காக திருமணம் செய்யப்படுகிறாள் அப்படி நீ செய்யாதே என்று மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் தெளிவான தடையுத்தரவை விதிக்கிறார்கள்.

ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் (6 - 164)

பெற்றோரின் பாவத்திற்காக அல்லது சகோதரர்கள் செய்த தவறுக்காக அவர்களுக்கிருந்த நல்ல பெயரைக் கெடுத்துக் கொண்டதற்காக குறிப்பிட்ட பெண்ணைப் புறக்கணிப்பது இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் செயல் அல்ல.

குறிப்பிட்ட பெண் மார்க்க அளவில் கெட்டவள் அல்லது தகாத நடத்தையுடையவள் என்று அறியப்பட்டால் அவளை வெறுப்பதில் அல்லது புறக்கணிப்பதில் இஸ்லாம் தடை விதிக்க வில்லை ஆனால் மணமகளின் குடும்பத்தின் தீய செயலுக்காக அவளை நாம் புறக்கணிக்கக் கூடாது என்று இஸ்லாம் தெளிவாக விளக்கம் தருகிறது.

அன்பை முறிக்கும் அழகு பார்க்கும் படலம்.

பெண் பார்க்கும் படலத்தில் மூன்றாவது இடம் வகிப்பது அழகு. பெண் அழகாக இருக்க வேண்டும், தோழ் சிகப்பாக இருக்க வேண்டும், மிக மிக அழகானவள் என்று மற்றவர்கள் மெச்ச வேண்டும், என்றெல்லாம் மண மகன், மண மகளைப் பற்றிய தன்னுடைய எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துகிறான்.

கருப்புப் பெண்களாக இருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று பார்ப்பது. ஓரளவுக்கு அழகானவர்களாக இருந்தால் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முற்படுவது இருந்தாலும் என்றொரு வார்த்தையை வெளிப்படுத்துவது. என்னதான் இல்லாவிட்டாலும் பரவாயில்லை பெண் அழகாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்கமாக வைப்பது போன்றவை இன்று நமது சமுதாய ஆண்களிடம் சர்வ சாதாரண விஷயமாக மாறிவிட்டது.

அழகுக்காக திருமண பந்தத்தில் நுழைந்த எத்தனையோ பேர் மனைவியின் அழகு குறைந்தவுடன் அன்பையும் குறைத்துவிடுவதை அல்லது இழந்து விடுவதைப் பார்க்கிறோம்.

தான் இவளுடைய அழகுக்காகத் தான் திருமணம் முடித்தேன் ஆனால் இப்படி அசிங்கமாக இருக்கிறாளே என்று கணவன் எண்ணத் தலைப்படுதல்.
அதன் மூலம் தான் அவள் மீது கொண்ட பாசத்தை வேறொரு அழகானவளிடம் காட்ட முற்படுவது போன்ற பல நிகழ்ச்சிகள் நமது அன்றாட வாழ்க்கையில் நடை பெற்றுக் கொண்டிருப்பதை நாம் கண் கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம்.

ஆதலால் இளைஞர்களே நமது திருமணம் எந்தக் காரணத்தைக் கொண்டும் அழகை முன் நிருத்தியதாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவான நிலையில் நாம் இருக்க வேண்டும்.

நபியவர்கள் எதை பார்க்க வேண்டாம் என்றார்களோ அது நமக்குத் தேவையில்லை என்ற நிலைபாட்டில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

நமக்குத் தேவையானது, நான்காவது தேர்வே !

நபியவர்கள் குறிப்பிட்டவைகளில் நான்காவதாக ஆண்கள் பெண்களிடம் அவளது மார்க்க (நல்லொழுக்க)த்தைப் பார்ப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.

இப்படிச் சொன்ன நபியவர்கள் கடைசியாக மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என்று கூறினார்கள்.

மார்க்கம் தெரியாத பெரிய குடும்பப் பாரம் பரியம் மிக்க மிக அழகான செல்வச் செழிப்பானவளை திருமணம் செய்து வாழ்வில் சளிப்படைவதைவிட மார்க்கம் தெரிந்த ஒரு ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்தாவது வெற்றியடைந்து கொள்ள முனைய வேண்டும்.

மார்க்கம் தெரியாதவள் எவ்வளவு பெரிய பணக்காரியாக இருந்தாலும், குடும்பப் பாரம் பரியம் மிக்கவளாக இருந்தாலும், அழகில் தேவதையாக இருந்தாலும் மார்க்கத் தெளிவில்லாவிட்டால் வாழ்வில் வசந்தத்தை எதிர்பார்க்க முடியாது.

பணம் கோடி கோடியாக இருக்கிறது நிம்மதிதான் இல்லை என்று புலம்புபவர்களைப் பார்க்கிறோம்.

பெரிய குடும்பம், நல்ல செல்வாக்கு இருக்கிறது, ஆனால் வாழ்வில் சந்தோஷமில்லை என்று ஓழமிடுபவர்களை சந்திக்கத்தான் செய்கிறோம்.

ஆதலினால்.......................... அன்பின் சகோதரர்களே !

நண்பர்களே !

இளைஞர்களே !

நபியவர்கள் சொன்ன நான்காவதை மாத்திரம் நமது குறிக்கோளாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதுவல்லாத எதை நமது குறிக்கோளாக எடுத்தாலும் நாம் வழி தவறிவிடுவோம் என்பது தெளிவு. அதனால் தான் நபியவர்கள் (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என்று கடிணமான முறையில் சொல்கிறார்கள்.

அன்பின் சகோதரர்களே !

நான்கில் நான்காவதைத் தேர்ந்தெடுத்து நாளை மறுமையில் வெற்றி பெருவோமாக!

Saturday, 5 May 2012

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்....


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!

எது நேர்வழி? எது சத்தியம்? எதை இறைவன் விரும்புகிறான்? எதை வெறுக்கிறான்? இறைஉவப்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? இம்மை வாழ்வை நடாத்திச் செல்வது எப்படி? மறுமை வெற்றியை ஈட்டுவது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறுவது நடக்கிற காரியமா? அசாத்தியம்: எனவே, நாம் பொய்யில் புரண்டு, அசத்தியத்தில் மூழ்கி, கடும் இயப்பாடுகளில் சிக்கி, இருளிலேயே தட்டுத் தடுமாறி உழன்று கொண்டு இருந்திருப்போம். மனிதர்களாகவே இருந்திருக்க மாட்டோம்.

ஆனால் இறைவன் நம் மீது மாபெரும் அருட்கொடையை பொலிந்து விட்டான். ஆம்! அந்த மாபெரும் அருட்கொடைதான் நமது நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) ஆவார்கள். " மனிதர்களே! இதோ, அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பிவிட்டேன். இனி உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில் தான் அடங்கியுள்ளது!" என்று வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்துவிட்டான்.

இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் - அண்ணலாரின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் - அவர்களின் சிறுசிறு அசைவுகளும் கூட மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. காரணம்: திருநபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் வாழ்க்கை திருகுர்ஆனின் செயல்வடிவாகத் திகழ்ந்தது. அதாவது, நடமாடும் குர்ஆனாக அவர்கள் திகழ்ந்தார்கள். வாழ்வின் ஏதோ ஒன்றிரெண்டு துறைகளுக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டினார்கள். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், தந்த அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்துமே மனிதனுக்கு வழிக்காட்டும் ஒளி விளக்குகளாய் விளங்குகின்றன.

நபிகளார் மொழிந்தவை:

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.

2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.

11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.

15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.
18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.
25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.
26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.
29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.
34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.

39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.
48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.
50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.
52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.
53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.
54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்
55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.

யா அல்லாஹ்! உனது தூதர், எங்களின் சிரேஷ்டர், உலக மக்களின் நேர்வழிகாட்டி, எங்கள் ஆத்மாக்களுக்கு புத்துயிர் தந்த ஞானதீபம், அனாதைகளின் இரட்சகர், ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் இந்த உயர் மணி மொழிகளை எங்கள் வாழ்க்கையில் எடுத்து நடக்க நீ எங்களுக்கு அருள் புரிவாயாக. அவர்களோடு நாளை சுவர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை எனக்கும், என் குடும்பத்துக்கும், என் அன்பான சுன்னத் வல் ஜமாஅத் எனும் சத்திய கொள்கை பாதையில் இருக்கும் நண்பர்களுக்கும் நசீபாக்குவாயாக!! ஆமீன்!!


நன்றி: உண்மை உலகம்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Friday, 4 May 2012

உலகின் ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை மாவீரன் திப்புசுல்தான்-நினைவு கூறுவோம்



இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கினார். 226 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்லமையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கிலேயப் படைகளை திணறடித்தது. மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின்கோட்டையும், படைக்கலத் தயாரிப்பு தொழிற்சாலையும் இருந்த அவல நிலை குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். 

அந்தக் கடிதத்தை இந்திய பாதுபாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை தலைவர் எஸ்.டி. பிள்ளையன் பார்வைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்.


பிறகென்ன... ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ராணுவ தொழில்நுட்ப வரலாறு ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருந்த தகவல் உலகுக்குத் தெரிய வந்தது. திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தின் தந்தை என்பதும், ஏவுகணைகளைப் பயன்படுத்தியதில் முன்னோடி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பழமை வாய்ந்த பகுதிகளில் ராணுவ வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுக்காக சுற்றியபோது பல பகுதிகள் இவர்களால் அடையாளம் காணப்பட்டன.


எதிரி முகாம்களை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் ஏவுகணை ஏவும் தளங்களை அவர்கள் கண்ணெதிரே கண்டனர். இந்திய அரசு, விஞ்ஞானிகளின்சாதனைகளை ஆவணப்படுத்தி அறிஞர்கள் மற்றும் அவர்களின் விஞ்ஞான பாரம்பரியம், அவர்களின் சேவைகள் குறித்தும் ஆய்ந்து வரும் வேளையில் திப்பு சுல்தான் மற்றும் அவர் தந்தையார் ஹைதர் அலியின் நன்கொடைகள் குறித்து சிலாகித்துப் பேசுகிறார் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரான டாக்டர் ஏ.எஸ். சிவதாணு பிள்ளை.


சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்புசுல்தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் தற்போது அங்கீகரித்துள்ளனர். நவீனகால ராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்புசுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 6000 படை வீரர்களைக் கொண்ட 27 தளபதிகளைக் கொண்ட திப்பு சுல்தானின் முழுமையான ஏவுகணைப் படைப்பிரிவு 1792ல் நிகழ்த்திய சாகசங்கள் பிரிட்டிஷ் படைகளின் பின்னடைவுக்கு காரணமாகிறது. வீரத் திப்புவின் படைகள் பயன்படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள 'உல் விச்' அருங்காட்சியகத்தில் தற்போது உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினம் நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தின் தொட்டில் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய v2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். திப்புவின் ராக்கெட் 2.2 கிலோ கிராம் முதல் 5.5 கிலோ கிராம் வரை இருந்தது. ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.


மாவீரன் திப்பு துரோகத்தால் வீழ்ந்த 1799ஆம் ஆண்டுக்குப் பிறகு 700 ராக்கெட்களும், 900 சிறிய வகை ராக்கெட்களும் லண்டன் ராயல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின
ஏவுகணைகள் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், வீரத் திப்புவின் போர் நிபுணத்துவத்தையும் விளக்குவண்ணம் உள்ளது.


டாக்டர் பிள்ளை, குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தலைமையின் கீழ் ராக்கெட் விஞ்ஞானியாய் பணிபுரிந்தவர். விலை மதிப்புமிக்க இந்த வரலாற்றுத் தகவல்களை ஆராய தூண்டுகோலாய் விளங்கிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு நன்றி கூறிய சிவதாணு பிள்ளை, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து தங்கள் குழுவின் ஆய்வின் விவரங்களை தெரிவிக்கப் போவதாகக் கூறினார்.


இன்னும் இரண்டொரு மாதத்தில் தனது முழு ஆய்வறிக்கையை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்துள்ளது.


நாஸாவில் டாக்டர் அப்துல் கலாம் கலாம் கண்ட காட்சி


இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சி அணுஆயுத எழுச்சி, ராணுவத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அத்தனை ஏற்றங்களுக்கும் முக்கியக் காரணமாக விளங்கிய அறிவியல் அறிஞரும் இந்தியக் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம், தனது ஆராய்ச்சிக்பணிக்காலத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவிற்குச் சென்றபோது தான் கண்ட காட்சியை நாட்டு மக்களுக்கு தனது 'அக்கினிச் சிறகுகள்' நூலில் விவரித்துள்ளார்.


''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி மையத்திற்குச் சென்றேன். இந்த மையம வர்ஜீனியா மாகாணத்தில் கிழக்குக் கடற்கரைத் தீவான வாலப் ஸில் அமைந்துள்ளது. நாஸாவின் சவுண்டிங் ராக்கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே, வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந்தார்கள். இந்தக் காட்சியைக் கருவாகக் கொண்ட ஒரு ஓவியம் இப்படிப்பட்ட இடத்தில் இருப்பது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல. ஆனால் என் கவனத்தை ஈர்த்தவர்கள், அதில் சித்தரிக்கப்பட்டிருந்த படை வீரர்கள்! ராக்கெட்டுகளை ஏவும் பகுதியில் காணப்பட்ட அவர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்ல. தெற்காசிய மக்களிடம் காணப்படும் உருவ அமைப்புடன் கருப்பு நிறம் கொண்ட படை வீரர்கள், அவர்கள். ஒரு நாள், எனக்குள் ஊற்றெடுத்த ஆர்வம், அந்த ஓவியத்தின் அருகே என்னை இழுத்துச் சென்றது. திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டு விட்ட ஒரு உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப்படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது
ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஒரு இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சிகொண்டேன்.'' 
சர்வதேச ஏவுகணை தொழில்நுட்ப தந்தையான திப்பு சுல்தானைப் பற்றி நவீன இந்திய ராணுவ தொழில்நுட்ப மேதை டாக்டர் அப்துல் கலாம் குறிப்பிடுவதுபொருத்தமானது தானே?

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.


Thursday, 3 May 2012

டார்வினின் பரிணாம கோட்பாட்டை நிராகரித்துள்ள உயிரியல் விஞ்ஞானி Didier Raoult -ஒரு சிறப்பு பார்வை ....


பிரான்சின் முன்னணி ஆய்வாளரான Didier Raoultடார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இவர் பிரான்சிலேயே மிகப்பெரிய உயிரியல் விஞ்ஞானியாம். பல புதிய பாக்டீரியாக்களை கண்டுபிடித்தவராம். உலகிலேயே (இது வரையிலான) மிகப்பெரிய வைரசை கண்டுபிடித்தது இவரது டீம் தானாம். 


இவரின் Dépasser Darwin (Beyond Darwin) என்ற அறிவியல் புத்தகம் சென்ற ஆண்டு வெளியானது. இதில் டார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளாராம் Raoult.

இதையெல்லாம் யார் சொல்கின்றார்கள் தெரியுமா? சில நாட்களுக்கு முன்பாக வெளியான, மதிப்புமிக்க ஆய்விதழான Science தான் தெரிவிக்கின்றது.

Raoult last year published a popular science book that flat-out declares that Darwin's theory of evolution is wrong - Science Magazine, 2nd March 2012.
சென்ற ஆண்டு Raoult பிரசுரித்த பிரபல அறிவியல் புத்தகம், டார்வினின் பரிணாம கோட்பாடு தவறு என்று வெளிப்படையாக அறிவிக்கின்றது - Science Magazine, 2nd March 2012.

சிலபல மாதங்களுக்கு முன்பு தான் (டாகின்ஸ்சின் வார்த்தைகளில்) பரிணாமத்தின் ஆணிவேரான பரிணாம மரத்தை கட்டுக்கதை என்று வர்ணித்தார் மற்றொரு முன்னணி உயிரியல் ஆய்வாளரான கிரேக் வென்டர். இப்போது இவர்.

பரிணாமத்திற்கு மாற்றாக உள்ள "அறிவார்ந்த வடிவமைப்பு (intelligent design} கோட்பாடு" வளருகின்றதோ இல்லையோ, பரிணாமக்கோட்பாடு அதள பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

அப்புறம் என்ன? ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க...



மனிதர்களில் உயர்வு தாழ்வு என்று பேதம் கற்பிக்கும் வர்ணாசிரமத்தை தீவிரமாக எதிர்க்கும் நாத்திகர்கள், எப்படி உலக மக்களிடையே உயர்வு தாழ்வை கற்பிக்கும் பரிணாமத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள்? இனவெறியால் பலரும் பாதிக்கப்பட பரிணாமமே காரணம் என்பதை எப்படி மறந்தார்கள்? 


பல நாத்திகர்களின் மதமான பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை என்பதையும், அது யூகமாக (Hypothesis) இருக்க கூட தகுதி இல்லாதது என்பதையும் இந்த தளத்தில் உள்ள பரிணாமம் குறித்த கட்டுரைகள் மூலம் விளக்க முயற்சித்துள்ளேன். என்னுடைய கருத்துக்களை வெறுமனே சொல்லாமல் அதற்கு ஆதாரமாக அறிவியல் உண்மைகளையும், பரிணாமவியலாளர்களின் கருத்துக்களையும் கொடுத்துள்ளேன். 

இந்த தளத்தில் உள்ள பரிணாமம் குறித்த கட்டுரைகளை வாசிக்கும் சகோதர/சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளை அப்படியே ஏற்காமல் பரிணாமம் குறித்து நீங்களே தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்பதுதான்.  

மேலும், பரிணாமம் குறித்த கட்டுரைகளின் பின்னூட்ட பகுதியில் நாத்திகர்களுடனான எங்களது உரையாடல்களும் உள்ளன. அவையும் உங்களுக்கு உதவலாம்.


1. பரிணாமவியலாளர்கள் செய்த பித்தலாட்டங்கள், 
2. பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குவதிலேயே குழப்பங்கள் இருப்பது, 
3. முதன் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படும் உயிரினங்கள் திடீரென தோன்றியிருப்பது, 
4. பெரும்பாலான உயிரினங்கள் மாற்றமடையால் தொடர்ந்தது, 
5. பரிணாமவியலாளர்களுக்குள் இருக்கும் குழப்பங்கள், 
6. நவீன வர்ணாசிரமமாக மனிதர்களிடையே இனபேதத்தை கற்பித்து பலரின் அழிவுக்கு காரணமாக பரிணாமம் இருந்தது மற்றும் ஹிட்லரின் வெறிக்கு பின்னால் முக்கிய காரணகர்த்தாவாக பரிணாமம் இருந்தது,
7. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பது, 
8. பரிணாமம் குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்,
9. பரிணாமம் குறித்து ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள்.
10. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தானா?
11. பரிணாமம் உண்மையாக இருந்தால் கூட அதனை வைத்து இறைவனை மறுக்க முடியுமா? 

12. பரிணாமத்தின் துணை கொண்டு நடந்த அட்டுழியங்கள் - மனித ZOO 
13. APPENDIX உபயோகமற்ற உறுப்பா?


என பரிணாமம் குறித்து பல தலைப்புகளில் இந்த தளம் அலசுகின்றது.


பரிணாமம் குறித்து இந்த தளத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளின் தொகுப்பு பின்வருகின்றது 

1. எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I 
2. புரியாதப் புதிர்கள்..
3. Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்?
4. பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?
5. பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்? 
6. Evolution St(he)ory > Harry Potter Stories - I
7. Evolution St(he)ory > Harry Potter Stories - II
8. Evolution St(he)ory > Harry Potter Stories - III
9. Evolution St(he)ory > Harry Potter Stories - IV 
10. தற்செயலாய் வீடு உருவாகுமா?
11. "செயற்கை செல்(?)" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா? 
12. Evolution St(he)ory > Harry Potter Stories - V
13. (பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா?
14. Evolution St(he)ory > Harry Potter Stories - VI
15. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - I
16. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II
17. இதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு?
18. Evolution St(he)ory > Harry Potter Stories - VII 
19. தயங்குகின்றார்களாம் ஆசிரியர்கள்...பரிணாமத்தை ஆதரிக்க !!!!!!!!!!! 
20. விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...  
21. டாகின்ஸ் VS வென்டர் - யார் சரி? யார் தவறு?
22. உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...
23. உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie
24. மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்... 

25. வாட்சின்:ஆச்சர்யங்கள்-மர்மங்கள்-குழப்பங்கள்
26. முஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..
27. ~600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்...
28. உங்கள் உயிரை காப்பாற்றலாம் APPENDIX..


29. ஓர் தீவு - மரபணு குப்பையில்(?) ஒர் தீர்வு
30. புரிதலை பின்னுக்கு தள்ளிய பாக்டீரியாக்கள்..




தங்களுடைய ஆர்வத்துக்கு என்னுடைய நன்றிகள். தாங்கள் உண்மையை கண்டறிய எல்லாம் வல்ல இறைவன் உதவ வேண்டுமென்று மனதார பிரார்த்திக்கும், 

நன்றி :www.ethirkkural.com

பரிணாம கோட்பாடு குறித்த என்னுடைய கட்டுரைகளை காண...


http://www.ajmal-mahdee.blogspot.com/2011/12/blog-post_3717.html

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

பேஸ்புக்(Face Book)- ஒரு சிறப்புப் பார்வை


பேஸ்புக்(Face Book) வலைத்தளம் 2004 - ஆம் ஆண்டு ஆரம்பமானது. மார்க் எலியட் ஜூகர்பெர்க்என்பவர் தனது நண்பர்கள் டஸ்டின் மாகேவிச் எடுராடோ சாவரின், கிரிஸ்ஹியூக்ஸ் ஆகியோருடன் இணைந்து இந்தத் தளத்தை உருவாக்கினார்.

தான் படித்த ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் விளையாட்டாய் உருவாக்கிய இந்தத் தளம் இன்று உலகெங்கும் பரவி 900 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன் பிரமிப்பூட்டுகிறது.

ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனரும் சராசரியாக 130 நண்பர்களைக்கொண்டிருக்கின்றனர் என்கிறது பேஸ்புக்கின் ஒரு ஆய்வு.
900 மில்லியனுக்கும் மேற்பட்ட பொருட்களில் மக்கள் இதின் வழியே ((Pages, Groups, Events and Community pages) )பயனிக்கிறார்களாம்.

இன்றைய ஃபேஸ்புக்கில் 13 வயதான நபர்கள் சேரலாம்

சராசரியாக ஒவ்வொரு பயனரும் 80 மேற்பட்ட ( community pages, groups and events) போன்றவைகளில் இணைக்கப்படுகிறார்கள்.

பேஸ்புக்கின் வழியாக ஒரு நாளைக்கு 250 மில்லியன் படங்கள் ஏற்றப்படுகிறது (image upload)

70 க்கும் அதிகமான மொழிகளில் பயன்படுத்தும் வகையில் இருப்பது இதன் சிறப்பு.

80 % சதவீததிற்கும் மேற்பட்ட பயனர்கள் United States அல்லாத வெளிநாட்டினரே!

முகநூல் நிறுவனம் 2,000 ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

பேஸ்புக்கை தினமும் 300,000 மேற்பட்ட பயனர்கள், மொழிபெயர்ப்பு பயன்பாட்டைப்(translations application) பயன்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

பேஸ்புக் பயனர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 மில்லியன் பயன்பாடுகளை (Apps) இதன் வழியே நிறுவிக்கொள்கின்றனர்.

பேஸ்புக்கிற்கான இயங்குதளத்தையோ அல்லது பயன்பாட்டையோ ஒவ்வொரு மாதமும் 500 மில்லியனுக்கும் மக்கள் மற்ற தளங்களில் பயன்படுத்துகின்றனர்.

மாதந்தோறும் 7 மில்லியனுக்கு மேற்பட்ட பயன்பாடுகளும்(Applications), வலைதளங்களும்(Websites) பேஸ்புக்குடன் ஒருங்கிணைப்படுகின்றன.

350 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் மொபைலின்(Mobile) மூலமே பேஸ்புக்கை அணுகுகின்றனர்.

475 மேற்பட்ட மொபைல் தயாரிப்பாளர்கள் பேஸ்புக்கின் மொபைல் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர்.


வியாபாரிகளும், நிறுவனங்களும் தங்களுடைய பொருள்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வழியாக முகநூலைக் கருதுகின்றனர்.

ஒரே எண்ணம், விருப்பம் உடையவர்களை ஒன்றிணைக்கும் தளமாக உள்ளது.

பிரிந்து போன குடும்பங்கள் இந்த முகநூல் மூலம் ஒன்று சேர்ந்த நிகழ்வுகளும் உண்டு.

சிலர் நண்பர்கள், உறவினர்களிடம் தொடர்பு கொள்ளும் தளமாகக் கருதினாலும், வேறு சிலர் நேரடித் தொடர்பு இல்லாததால் முகநூல் மூலம் சமூகக் குற்றங்கள்நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனர்.

அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணைய முழுவதிலும் ஃபேஸ்புக் 
தான் இரண்டாவது மிகப் பரவலமான இணையத்தளமாகும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.