Sunday 6 May 2012

பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள்....

தமிழ்நாட்டில் பொறியியல் விண்ணப்பங்கள் மே11 முதல் விற்பனை செய்யப்படும். விண்ணப்ப விற்பனை மே 11-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கும். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாள்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படாது.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள்:
தமிழகம் முழுவதும் 58 மையங்களில் இந்த விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், பிற ஐந்து இடங்களில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 58இடங்களில் விண்ணப்பன்க்களை பெறலாம்.

விண்ணப்பங்களைத் நேரில் பெற:
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 58 மையங்களில் மாணவர்கள் நேரில் சென்று ரூ.500-ஐ பணமாகவோவரைவோலையாகவோ செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்டபழங்குடியினஅருந்ததியின மாணவர்கள் தங்களது ஜாதிச் சான்றிதழின் நகலைச் சமர்ப்பித்து ரூ.250-க்கு விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களைத் தபாலில் பெறலாம்:
விண்ணப்பங்களைத் தபாலில் பெற விரும்பும் மாணவர்கள்செயலாளர்தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைஅண்ணா பல்கலைக்கழகம்சென்னை -600025 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தைக் கோரும் கடிதத்துடன் ரூ.700-க்கான வரைவோலையை இணைக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டபழங்குடியினஅருந்ததியின மாணவர்கள் தங்களது ஜாதி சான்றிதழுடன் ரூ.400-க்கான வரைவோலையை இணைத்தாலே போதுமானது.

வரைவோலை (Demand Draft):
அனைத்து வரைவோலைகளும் (டிமாண்ட் டிராப்ட்) செயலாளர்தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை என்ற பெயருக்கு சென்னையில் ஏதேனும் ஒரு தேசிய வங்கியில் மே11 அல்லது அதற்குப் பிந்தைய தேதிகளில் மாற்றத்தக்கதாக இருக்க வேண்டும்.மாணவர்கள் இணைக்கும் டி.டி.யின் பின்புறத்தில் அவர்களது பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிட வேண்டும்

கடைசி தேதி:
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை, மே 31-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.

எத்தனை இடங்கள்:
கடந்த ஆண்டு, 1.10 லட்சம் இடங்கள் பூர்த்தியான நிலையில், 40 ஆயிரம் இடங்கள் கடைசி வரை நிரம்பவில்லை. நடப்பாண்டில், 1.60 லட்சம் இடங்கள் வரை, எதிர்பார்க்கப்படுகிறது.


இதுதொடர்பான சந்தேகங்களுக்கு044-22358265, 22358266, 22358267 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின்  http://www.annauniv.edu/  என்ற இணையதளத்தையும் பார்க்கலாம்.

No comments:

Post a Comment