Thursday, 3 May 2012

அரவாணிகள் எனும் மூன்றாம் பாலினம்-ஒரு விழிப்புணர்வு ஆய்வு...

ஆண்கள் பெண்கள் என்ற இருபாலாருக்கும் இடையில் தங்களை மூன்றாவது பாலினமாக அறிவிக்கக் கோரி போராடும் ஒரு குழுவாக இன்றைய நாட்களில் நம்முன் தெரியக் கூடிய ஒரு வகையினர் அரவாணிகள்.
தங்களை மூன்றாவது பாலினமாக அறிவிக்கும் படி கூறும் இவர்கள் ஆரம்பத்தில் தங்கள் பெயருக்காக போராடினார்கள்.
அலிகள் என்று அழைக்கப் பட்டவர்கள் மீடியாக்கள் தங்களை அரவாணிகள் என்று அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி அதில் வெற்றியும் கண்டார்கள்.
இதே குழு தற்போது தங்களை திருநங்கைகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

அரவாணிகள் என்றால் யார்?

க்களுக்கு மத்தியில் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல நாங்கள் மூன்றாவது பாலினம் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள்.உண்மையில் மூன்றாவது பாலினம் என்பது பொய்யாகும்.
இவர்கள் உண்மையில் ஆண்கள் தான் என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அதாவது பிறப்பில் ஆண்களாக இருக்கும் இவர்கள் பெண்களைப் போல் தங்களை ஜாடை செய்து கொள்வார்கள்.
பெண்களைப் போல சேலை கட்டுவதிலிருந்து அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது வரை அனைத்து விஷயங்களிலும் தங்களை பெண்களாக காட்டிக் கொள்ள முயல்வார்கள்.
நடை உடை பாவனை அனைத்திலும் செயற்கையாக தங்களை பெண்ணாக காட்டுவார்கள்.
ஆனால் உண்மையில் இவர்களின் உடல் அமைப்பு ஆணாகத் தான் இருக்கும்.இந்தியாவின் மும்மை டெல்லி குஜராத் போன்ற இடங்களில் ஆண்களை அறுவை சிகிச்சை மூலம் பெண்களின் சில உடல் அமைப்பிற்கு மாற்றும் செயன்முறையை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இதன் மூலம் மார்பு போன்ற பிறப்பில் தங்களுக்கு இல்லாத சில பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் இவர்கள் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.அதன் பின் தங்களை பெண்களாக மக்களுக்கு மத்தியில் அறிமுகப் படுத்துகின்றனர்.


அரவாணிகளின் தொழில்(?)உலகுக்கே ஆபத்தானது.

திருநங்கைகள் என்று சொல்லப் படும் இந்த அரவாணிகள் தங்களுக்கென்று பெரும்பாலும் சுய தொழில்கள் எதையும் செய்வதில்லை.இவர்கள் தங்கள்; முக்கிய தொழிலாக விபச்சாரத்தைத் தான் செய்கிறார்கள்.அதனுடன் சேர்த்து பிச்சை என்ற பெயரில் மக்களிடம் பணம் பரிப்பதும் இவர்களின் முக்கிய தொழில்களில் ஒன்றாகும்.
இவர்கள் தங்கள் இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று ஒரு அடி அடித்துவிட்டு பிச்சை கேட்பார்கள் அப்படி அவர்கள் கேட்கும் போது யாரும் அவர்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் அவர்களை கண்ட வார்த்தைகளை கொண்டு திட்டுவதும் வசை பாடுவதும் இவர்களின் தொழில்.இவர்களின் இந்த இழி செயலுக்கு பயந்தே பலர் இவர்களிடம் பணத்தை கொடுத்துவிடுகிறார்கள்.இதற்காக வேண்டிய தன்னைத் தானே பெண்ணாக உருவகப் படுத்தி அரவாணியாக காட்டிக் கொள்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

அரவாணிகள் வாழும் நாடுகள்.
அரவாணிகள் ஆரம்பத்தில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தான் அதிகமாக இருந்தார்கள் தற்போது  அதிகமாக இந்தியாவில் தான் உருவெடுக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்திய நாட்டின் முக்கிய நகரங்களாகிய மும்மை கல்கத்தா குஜராத் டெல்லி சென்னை போன்ற நகரங்கள் இதில் அதிகம் முக்கியத்துவம் பெருகின்றன.
இது தவிர மலேசியா சிங்கப்பூர் இஸ்ரேல் வட தென் அமெரிக்க நாடுகள் போன்றவற்றிலும் இவர்கள் அரவானிகள் என்ற பெயரில் இருக்கிறார்கள்.
அரவாணிகள் என்ற பெயரைத் தவிர்த்து இவர்களின் வேலையை செய்யக் கூடிய கேடு கெட்டவர்கள் பலர் அணைத்து நாடுகளிலும் உள்ளனர்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று இவர்கள் அழைக்கப் படுவர் இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் அரசாங்கங்களின் அங்கீகாரத்துடன் கிட்டத்தட்ட 128 நாடுகளில் பகிரங்கமாக இந்த அசிங்கத்தை நடத்தி வருகிறார்கள்.இந்தப் பட்டியலில் இருதியா 128வது நாடாக இந்தியா இடம்பிடித்துள்ளது.129வது நாட்டினராக தங்களை அறிவிப்பு செய்யும் படி இலங்கையில் இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இலங்கை அரசுக்கு கோரிக்கை வைப்பதாக அன்மையில் பி.பி.சி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.


சென்ற ஆண்டு (2011) முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கையர் தினம் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2008-ம் ஆண்டு ‘அரவாணிகள் நலவாரியம்’ தோற்றுவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ம் தேதிதான் திருநங்கையர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது,

பெண் என்பது ஒரு பாலினம் ஆண் என்பது இன்னொரு பாலினம், அரவாணி என்பது மூன்றாவது ஒரு பாலினம் என்று கொள்ளலாம். ஆணும் பெண்ணும் இயற்கையின் படைப்பு என்றால் அரவாணிகளும் இயற்கையின் படைப்புதான் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடிப்படையான பால் நிலையிலிருந்து திரிபடைந்தவர்களே இந்த அரவாணிகள். ஆரம்பத்தில் ஆணாகப் பிறக்கும் இவர்கள் நாளடைவில் மன ரீதியாக மற்றும் உடல் ரீதியாக பெண்மைக்குரிய தன்மையினை அதிக அளவில் பெறுவதால் இந்த மாற்றம் நிகழ்கிறது. பிறவியில் பெண்ணாகப் பிறப்பவர்கள் ஆணாகத் திரிபடைதலும் உண்டு. எனினும் எண்ணிக்கையில் இது மிகவும் குறைவு.

அரவாணிகள் பலகாலமாக அலி பேடி போன்ற சொற்களால் கிண்டலும் கேலியுமாக அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமின்றி வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள்.

அரவாணிகள் என்போர் இன்று நேற்றல்ல, இதிகாச காலத்திலிருந்தே இருந்து வருகிறார்கள். தொல்காப்பியம் ஆண் தன்மை மிகுந்த பெண்களை ‘ஆண் அரவாணி’ என்றும் பெண் தன்மை மிகுந்த ஆண்களை ‘பெண் அரவாணி’ என்றும் விளக்குகிறது. நன்னூல் ஆண் அரவாணியை ‘ஆண்பேடு’ என்றும் பெண் அரவாணியை ‘பெண்பேடு’ என்றும் வகைப்படுத்தியுள்ளது,

மகாபாரதத்தில் அரவாணிகள் பாத்திரங்களாகவே படைக்கப் பட்டுள்ளனர், குருஷேத்திரப் போரில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க ‘எந்தக் குறையும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனித உயிர் தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்’ என ஆரூடம் கூறுகிறது. அர்ஜுனனின் மகன் அரவானை பலியாக்க முடிவு செய்கின்றனர். அதற்கு அரவான் சம்மதித்தாலும் தன் கடைசி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லறவாழ்வில் ஈடுபட்ட பின்புதான் பலிக்களம் செல்வேன் என்று சொல்கிறான். எந்தப் பெண்ணும் இதை ஏற்க முன்வரவில்லை. இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணக்கிறார். ஒருநாள் இல்லறவாழ்விற்குப் பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக்கோலம் பூணுகிறாள் மோகினி. அந்த மோகினியாகத்தான் அரவாணிகள் தங்களை நினைக்கின்றனர். கொலையுண்ட அரவானை கூத்தாண்டவராக நினைத்து வழிபடுகின்றனர்.


கூத்தாண்டவர் திருவிழா

அரவாணிகள் சமூகத்தில் கூத்தாண்டவர் திருவிழா ஒரு சமுதாய சடங்காக நடத்தப்படுகிறது. திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயில் விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் அருகே கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று நடைபெறுகிறது.
சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானை கணவனாக நினைத்துக் கொண்டு கோயில் அர்ச்சகர் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலி கட்டிக் கொள்கின்றனர். இரவு முழுவதும் தங்களது கணவனான அரவானை வாழ்த்தி பொங்கல் வைத்து கும்மியடித்து ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ச்சியாக இருக்கின்றனர். பொழுது விடிந்ததும் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அரவான் சிலை வைக்கப்பட்டு கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ. தூரத்தில் உள்ள கொலைக்களமான அமுதகளம் கொண்டு செல்லப்படுகிறது. உயிர்விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கின்றனர். அமுதகளத்தில் அரவான் தலை துண்டிக்கப்படுகிறது. திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக் கொண்ட தாலியை அறுத்து பூ எடுத்து வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவைக் கோலம் பூணுகின்றனர்.
இந்தியாவின் பல பாகங்களிலிருந்து வரும் திருநங்கைகளை ஒன்றிணைக்கும் விழாவாகவும் அவர்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு கலைத்திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் இந்த விழா அமைகிறது,
அரவாணிகளை மக்கள் மதிக்கின்ற நிகழ்வுகளும் உண்டு, திருமண விழா குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா கடை திறப்பு விழா போன்ற நற்காரியங்களுக்கு பூசாரியை அழைப்பது போன்றே திருநங்கைகளையும் அழைத்து ஆசி வாங்கிக் கொள்ளும் பழக்கம் மும்பை போன்ற பகுதிகளில் அதிகமாக உள்ளது. அரவாணியிடம் ஆசி பெற்றால் குழந்தை அரவாணியாக மாறாது என்று நம்பிக்கையும் நிலவுகிறது.

http://www.youtube.com/watch?v=5iljkl7nva4&feature=player_embedded


அரசின் திட்டங்கள்
தங்கள் சமூகத்தின் முதல் போராட்டம் என்று அரவாணி சமூகத்தினர் கருதுவது 2004ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட ரிட் மனுவைத்தான் வங்கிக் கணக்கு திறப்பது வங்கிக் கடன் பெறுவது தொலைபேசி இணைப்புக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றிற்குத் தகுதியானவராகக் கருதப்பட ஒருவருக்கு தேவையான குடும்ப அட்டை அரவாணிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடரப்பட்ட ரிட் மனு அது.ஜுலை 2004ல் சென்னை உயர்நீதி மன்றம் வெளியிட்ட அறிவிப்பில் அரவாணிகள் அரசு அடையாள அட்டைகளுக்கும் ஆவணங்களுக்கும் விண்ணப்பிக்கும்போது ஆண் அல்லது பெண் இரண்டில் தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறியது.

டிசம்பர் 2006ல் அரவாணிகளின் வாழ்க்கைச் சூழலில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும் என்று அரவாணிகள் நல்வாழ்வுக்கான துணைக்குழு அமைக்கப்பட்டது. இதனையொட்டி வெளிவந்த அரசாணை பல முக்கிய விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறது, அரவாணிகளுக்கு அனுமதி வழங்காத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீது நடவடிக்கைகள்; அரவாணிகள் சுய உதவிக்குழுக்களுக்கு சிறு நிதியுதவிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள்; பால் மாற்று அறுவை சிகிச்சை வேண்டி அரவாணிகள் அணுகும் மருத்துவமனைகளுக்குத் தேவையான அறிவுப்பூர்வமான தகவல்கள்; மனநல ஆலோசனை வழங்குவதற்கானப் பயிற்சி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அடையாள அட்டைகள் குறித்த புகார்களைத் தெரிவிப்பது போன்றவை செயல்படுத்தப்பட வேண்டும் என்று இந்த அரசு ஆணை தெரிவித்தது.

மே 2008ல் சமூக நலவாழ்வுத் துறையின் கீழ் அரவானி நலவாரியம் அமைக்கப்பட்டது. அதே மாதம் நிறைவேற்றப்பட்ட ஒரு ஆணை தமிழகக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அரவாணிகளுக்கு இட ஒதுக்கீட்டிற்கு வழி செய்தது.


கணக்கெடுப்பு

பொதுவாக அரவாணிகளை ‘ஆண்கள்’ பிரிவில் சேர்க்கும் நடைமுறை உள்ளது. ஆனால் ‘தங்களை தனிப்பிரிவாக சேர்த்து தனி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அரவாணிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணைப்படி அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு அரவாணிகள் குறித்து ஆய்வு செய்து அவர்களை ‘மற்றவர்கள்’ பிரிவில் சேர்க்கலாம் என்று பரிந்துரைத்தது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்கள் பெண்களுக்கு முறையே 1 2 என்ற எண்கள் வழங்கப்பட்டுள்ளன, இப்போது அரவாணிகளை ‘மற்றவர்கள்’ பிரிவில் சேர்க்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. அதன்படி அவர்கள் 3 என்ற எண்ணில் குறிக்கப்படுவார்கள் எனினும் 3ம் எண்ணில் குறிக்கலாம் என்று சம்பந்தப்பட்டவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே அந்த எண்ணில் சேர்க்கப்படுவர்.

ஆண் பெண் போலவே அரவாணியும் ஒரு மனித இனமே. அவர்களும் சமமாக கருதப்பட வேண்டும். அரவாணிகள் நலனுக்காக தமிழக அரசு தனி வாரியம் அமைத்துள்ளது. அவர்கள் கல்வியறிவு பெறவும் மருத்துவ அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறவும் சட்டபூர்வ அந்தஸ்தை பெறவும் அரசு வழி வகை செய்துள்ளது. நீண்டகால போராட்டத்திற்குப் பின்பு இப்போதுதான் சமுதாயத்தில் இவர்களுக்கு ஓரளவு அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கி உள்ளது.

மக்கள் அரவாணிகளை அருவருப்பான மனநிலையோடுதான் பார்க்கின்றனர். ஊடகங்கள் அவர்களை கேவலமாக சித்தரிக்கின்றனர். சமூகம் இவர்களை ஒரு இழி பிறவிகளாக கருதி புறக்கணிக்கின்றது. அரவாணிகள் குறித்து பல்வேறு பிரச்சனைகளும் சிக்கல்களும் விவாதங்களும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
மற்றவர்களைவிட உழைப்பிலும் அறிவிலும் அரவாணிகள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. சமுதாயம் தான் அவர்களுக்குரிய வாய்ப்புகளைத் தராமல் ஒதுக்கி வருகிறது. தடைகளைத் தாண்டி அரவாணிகள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறவேண்டும்.
திருநங்கை சமுதாயத்தில் பிறந்து இன்று ஆண் பெண் இருபாலரையும் விஞ்சி விடும் வண்ணம் மிகச் சிறந்த நடனக்கலைஞராக வளர்ந்து நடனப் பள்ளி தொடங்கி நடனத்தை வளர்த்து வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறார்.

திருநங்கைகளுக்குச் சமுதாயத்தில் அங்கீகாரம் தர வேண்டும் என்ற விழிப்புணர்வு விதைக்கப்பட்டதன் காரணமாக ஊடகங்களில் திருநங்கையே தொகுப்பாளராக வந்து முத்திரை பதித்து வருகின்றனர்.
அவர்கள் தங்களுக்குள் இருக்கும் மனத்தடைகளையும் குழப்பங்களையும் உடல் ரீதியான உறவுகள் குறித்தும் தெளிவான சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், பிரபலமாக உள்ள அரவாணிகள் களப்பணியாற்றி தங்களைப் போன்றவர்களை வழி நடத்த வேண்டும்,  

அரவாணி வாழ்வு என்பது அவர்களாக விரும்பி ஏற்பதில்லை, அவர்களுக்குள் எழும் மாற்றங்களே அவர்களை அந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. வலியுடனும், வேதனையுடனும் வாழும் அரவாணிகளைப் புறக்கணிப்பதைத் தவிர்த்து அவர்களை அங்கீகரிக்க வேண்டும்.
அரவாணிகளுக்கான தவறான பிம்பத்தை உடைத்தெறிந்து அவர்களது உணர்வு மதிக்கப்படவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அவர்களை அரவாணி என்று குறிப்பிடுவதை விட திருநங்கை என்று அழைப்பதையே விரும்புகின்றனர். பெண்ணியம் போல அரவாணியம் பேசப்பட வேண்டும். அப்போதுதான் திருநங்கையரும் நல்வாழ்வு வாழ வழி பிறக்கும்.

ரவாணிகள் பற்றிய முதல் நாவல் ‘வாடா மல்லி’. எழுதியவர் சு. சமுத்திரம். ஓர் அரவாணி எழுதிய முதல் நாவலாக வெளிவந்துள்ளது ‘முன்றாம் பாலின் முகம்’. எழுதியவர் பிரியா பாபு. ’தமிழகத்தில் அரவாணிகளின் வழக்காறுகள்’ என்னும் ஓர் ஆவணப்படத்தையும் ‘அரவாணிகள் சமு்க வரைவியல்’ என்னும் தொகுப்பையும் வெளியிட்டு தொடர்ந்து அரவாணிகளுக்காக பாடுபட்டு வருபவர்.


 அரவாணிகள் பற்றி இஸ்லாம் கூறுவது ....

அரவாணிகள் குறித்து குர்ஆனில் வசனம் எதுவும் இல்லை! நபிமொழிகளில்
அரவாணிகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. இவர்கள் அறுவறுப்பான முறையில் பெண்களின்
அங்கங்களைக் கொச்சைப் படுத்தி வர்ணிப்பவர்கள் என்பதால் அரவாணிகளை வீடுகளில்
சேர்க்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர். 
நபிமொழித் தொகுப்பு புகாரி நூலில் அறிவிக்கப்பட்ட அரவாணிகளின் செய்தி: 
பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4324 

(நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் 
என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) 'அலி' ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி(ஸல்)
அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த 'அலி', (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு
அபீ உமய்யாவிடம், 'அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ்
வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம்
நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்''
என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இந்த அலிகள்
(பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று
கூறினார்கள். இப்னு உயைனா(ரஹ்), இப்னு ஜுரைஜ்(ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த
அலியின் பெயர் 'ஹீத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
... மற்றோர் அறிவிப்பில், 'அப்போது நபி(ஸல்) அவர்கள் தாயிஃபை 
முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்கள்'' என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது. 
பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5235 


உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் 
(ஒரு நாள் என் கணவர்) நபி(ஸல்) அவர்கள் என் அருகில் இருந்து
கொண்டிருந்தார்கள். அங்கு எங்கள் வீட்டில் (பெண்களைப் போல் நடந்து கொள்ளும்)
'அலி' ஒருவனும் இருந்துகொண்டிருந்தான். அந்த 'அலி' என் சகோதரர் அப்துல்லாஹ்
இப்னு அபீ உமைய்யாவிடம், 'நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ்
வெற்றியளித்தால், ஃகைலானுடைய  மகளை உனக்கு நான் அடையாளம் காட்டுகிறேன். (அவளை
நீ மணந்துகொள்.) ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும்
பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று (அவளுடைய மேனி அழகை
வர்ணித்துக்) கூறினான். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'இவன் உங்களிடம்
ஒருபோதும் வரக்கூடாது'' என்று கூறினார்கள். 
பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5886.
 
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும்,
ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும்,
'அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்' என்றார்கள்.
அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர்(ரலி) அவர்கள்
இன்னாரை வெளியேற்றினார்கள். 
பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5887.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: 
அவளுடைய வயிற்றுச் சதையின் நான்கு மடிப்புகளின் காரணத்தால் 'முன்பக்கம் நான்கு
மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்' என்று அந்த அலி சொன்னார். அந்த நான்கு
மடிப்புகளின் ஓரங்கள் இரண்டு புறங்களிலும் சேர்ந்து பின்புறம் எட்டு ஓரங்களாக
காட்சி தருவதால் 'பின்பக்கம் எட்டு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்' என்று
கூறினார். 
'தரஃப்' (ஓரம்) எனும் சொல் ஆண்பாலாயினும், அது வெளிப்படையாகக் குறிப்பிடாததால் கான்
'அர்பஉ' (நான்கு), 'ஸமான்' (எட்டு) ஆகிய எண்கள் (இலக்கண விதிக்கு மாறாக)
ஆண்பாலாகவே (மூலத்தில்) குறிப்பிடப்பட்டுள்ளன. 
பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6834 

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும்,
ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும்,
'அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்!' என்றும்
சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் இன்னாரை வெறியேற்றினார்கள்; உமர்(ரலி)
அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள்.
 

தொகுப்பு : .மு.அஜ்மல் கான்.


No comments:

Post a Comment