Thursday 31 May 2012

காதல் முக்கியமா? உறவு முக்கியமா?- ஒரு சிறப்பு பார்வை 

Post image for காதல் முக்கியமா? உறவு முக்கியமா?

இப்படியெல்லாமா காதல் என்பது இருக்கும் என்று பலர் அதிசயிப்பார்கள்.

ஆணும் ஆணும் காதலிப்பது, பெண்ணும் பெண்ணும் காதலிப்பது என்பதெல்லாம் ஏதோ ஒரு புரட்சி என்று தோன்றுமே தவிர, இது காதல் கிடையாது. உடலில் ஜீன்கள் செய்யும் சேட்டை அவ்வளவுதான்.

இதுபோலவே தவறான உறவு முறைகளுக்குள் உண்டாகும் காதலும் ஏடாகூடக் காதலே. அண்ணன் உறவு முறை, தகப்பன் மகள் உறவு முறை போன்றவற்றில் காதல் ஏற்பட்டுவிட்டது என்பதை சமூகம் ஒப்புக்கொள்ளாது.

உண்மையில் என் சகோதரரை காதலிக்கிறேன் என்பது சம்பந்தப்பட்டப் பெண்ணைப் பொறுத்தவரை அக்மார்க் நிஜமாகவே இருக்கலாம். ஆனால், அதற்கான இதனை காதல் எனும் வரிசையில் சேர்ப்பித்துவிட முடியாது.

பலரது ஏச்சுக்கும், பேச்சுக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளாகும் உறவு முறைகளைக் காதல் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட காதலில் இருந்தும் வெளியேறுவதுதான் நல்லது.

உண்மைக் காதல் என இதனைக் கடைசி வரை கடைப்பிடிக்க நினைத்தால் கண்டிப்பாக பிற்காலத்தில் முன்னர் செய்த காதலுக்காக வருத்தப்பட வேண்டியிருக்கும்.

இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து.



காதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளிருந்து வந்தது தான் இந்த காதலர் தினம்.நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளிடம் இந்த காதல் நோய் தொற்றிகொண்டது என்பது தான் மிக பெரிய கவலை.


பெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் இவர்கள் காதல் வலையில் சிக்கி, பெற்றோர்களை தலை குனிய வைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தவறான வழியில் போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. வயதும் மற்றும் சூழ்நிலையும் தவர் செய்வதற்கு வழி வகுக்கிறது என்பது உண்மை.


ஒரு காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை அவர்கள் அதிகமாக வீட்டில்தான் இருப்பார்கள். பொழுதுபோக்கு என்பது ரேடியோ மட்டும்தான் இருக்கும். டிவி இருக்கும் வீடு விரலைவிட்டு எண்ணும் அளவுக்கு தான் இருக்கும். இன்றைய காலத்தில் வீட்டில் இருந்தப்படியே எல்லாம் பார்க்கலாம்,பேசலாம் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பெண்ணை படிக்கவைத்து, படிப்புக்கு பிறகு அவளுக்கு திருமணம் செய்வதற்கு பேசி முடித்து, பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கும் நிலையில், அந்த பெண் திடிரென்று யாரோ ஒருவனுடன் ஓடிவிடுகிறாள் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது உண்மைதானே?





திருமணக் காதலர்கள!





குறிப்பாக நம் நாட்டைப் பொறுத்தவரை மிக அதிகமான திருமணம் என்பது பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணமாகும்.

திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழையும் வரை ஒருவரை ஒருவர் முழுசாக பார்த்து கூட இருக்கமாட்டார்கள். ஒரு வார்த்தை கூட பேசியிருக்க வாய்ப்பிருக்காது. உறவுகளுக்காகவும், சமுதாயத்தின் கட்டாயத்திற்காகவும் சேர்ந்து வாழும் பெரும்பாலான தம்பதியர்கள்இருவரும் காதலர்களாக கடைசி வரை சந்தோஷமாக வாழமுடியும் என்ற உண்மை நிறைய பேருக்குத் தெரிவதில்லை. ஓர் ஆணால் இன்னொரு பெண்ணைத் தேர்வு செய்ய முடியாது என்பதும், அந்தப் பெண் வேறு வழியின்றி கணவனாக வந்திருக்கும் ஆணை மட்டுமே காதலிக்க வேண்டும் என்ற கட்டாயம் தவிர, மற்ற எல்லா விஷயங்களும் காதலர்களைப் போலவே இவர்களுக்கும் பொருந்தவே செய்யும்.

உறவை விட காதல் தான் முக்கியம் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் சில நாட்கள் பழகிய ஒருவனுடன் இப்படி ஓடும் எதனை பெண்கள் ,அந்த குடும்பத்தின் நிலை என்ன? அந்த குடுபத்தில் இன்னுரு பெண் இருந்தால் அவள் நிலை என்ன? சிந்திக்க வேண்டாமா? அன்பு சகோதரிகளே! அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்! பெற்றோரை கண்ணிய படுத்துங்கள்! ஆசை அறுபது நாள் மோகம் நுப்பது நாள் என்று சொல்வார்கள். வேண்டாம் இந்த காதல். விபரிதம் தெரியாமல் இந்த காதலில் சிக்கி விடாதீர்கள்!



உங்கள் குடும்பத்தை தலை குனிய வைத்துவிடாதீர்கள், உறவு தான் முக்கியம் அது தான் கடைசி வரை வரும் என்பதை மறந்து விடாதீர்கள்!

அந்த காதல் இந்த காதல் கள்ள காதல் சொல்லாத காதல் சுகமான காதல் ஊரை சுற்றும் காதல் இப்படி பலவகை காதல் இருக்கிறது. உண்மையான காதல் என்பது எது என்று புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்குப்பிறகு உங்கள் துணையுடன் கொள்ளும் காதலே உண்மையானது, நிலையானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பள்ளிக்கு போனால் படிப்பை மட்டும் கவனியுங்கள். பெறோர்கள் உங்களை நம்ம்பி அனுப்புகிறார்கள் அவர்களுக்கு மோசம் செய்யாதீர்கள்! மாற்று மத பெண்களுடன் ரொம்ப கவனமாக இருங்கள். யாருக்கு உங்கள் செல் போன் நம்பரை கொடுக்காதீர்கள்! எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கும் உங்களுக்கும் நற்கிருபை செய்வானாக..

 ஆக்கம்  மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment