Thursday, 31 May 2012

திருமண மண்டபம் பார்த்து பதிவு செய்யும் முன் கவனிக்க‍வேண்டிய விஷயங்கள்...


இந்தக் காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை கூட எளிதில் கிடைத் து விடுவார்; ஆனால் திருமண மண்டபம் கிடைப்பதுதான் குதி ரைக் கொம்பாக இருக்கிறது. சமீ பத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கே, இரு ந்த போர்டில் ஏறத்தாழ இந்த ஆண்டு முழுவதும் இருக்கும் அனைத்து முகூர்த்த நாட்களுக்கு ம் அந்த மண்டபம் புக் ஆகி இருந் ததைப் பார்க்க முடிந்தது. இன்று திருமண மண்டபங்களுக்கு நல்ல கிராக்கி சார்! சினிமா தியேட்டர்களை இடித்துவிட்டு ஒன்று ஷாப் பிங் வளாகம் கட்டுகிறார்கள்; அல்லது திருமண மண்டபம் கட்டுகி றார்கள்” என்றார் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். இன்று சாதாரண வசதிகள் கொண்ட, சிறிய திருமண மண்டபங்களுக்குக் கூட நாள் ஒன்றுக்கு ஐம்பதா யிரம், எழுபத் தைந்தாயிரம் என்று வாடகை கேட்கிறார் கள். இதைத் தவிர மின் கட் டணம், அலங்காரம், தண்ணீ ர் அது, இது என்று சொல்லி இன்னும் ஆயிரக்கணக்கில் கறந்து விடுகிறார்கள். என வே, திருமண மண்டபம் பார்த்து பதிவு செய்வதை கவனமுடன் செய்ய வேண் டியது மிக அவசியம்.
சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில் திருமணம்நடத்த வேண்டுமென்றால், நகரத்தின் எந்த ஏரியாவில் மண்டபம் வேண்டும் என்ப தைத் தீர்மானித்துக் கொள் ள வேண்டும். அதனை மாப் பிள்ளை வீட்டாருடன் கல ந்து ஆலோசித்து முடி வெடு ப்பது நலம். பொதுவாக எல் லா திருமண மண்ட பங்களி லும், டோக்கன் அட் வான்ஸ் என்பதெல்லாம் கிடையாது. புக் பண்ணும்போதே மொத்த தொகை யையும் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். அதன் பின்னால், கேன்சல் செய்தால் பணம் வாபஸ் வாங்குவது அவ்வளவு சுலபமில்லை. எனவே, மண்டபத்தை புக் பண்ணுவ தற்கு முன்னால், தீர ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். திரும ணத்துக்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை உத் தேசமாகக் கணக்கிட்டு, அத ற்கேற்ப மண்டபத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். திருமண ஹாலில் எத்தனைப் பேர் அமரலாம், சாப்பாட்டுக் கூடத் தின் கொள்ளவு என்ன, தங்கும் அறைகள், குளியலறைகள், கழிப் பறைகள் போதுமான எண்ணிக்கையில் இருக்கின்றனவா, குளிய லறைகளில் வெந்நீர் வசதி உண்டா, குடி தண்ணீருக்கு என்ன ஏற் பாடு போன்றவற்றைத் தெரிந்து கொண் டுதான் இறுதி முடிவு எடுக்க வேண் டும்.குறிப்பிட்ட மண்டபத்தில் தான் திருமணம் செய்வது என்று முடிவு செய்துவிட்டால், மூன்று, நான்கு முகூர்த்த நாட்களை முடிவு செய்து க் கொண்டு, அதில் மண்டபம் கிடை க்கக் கூடிய நாளில் முகூர்த்தத்தை முடிவு செய்யலாம். இல்லையெ னில் முகூர்த்த நாளை முடிவு செய் து கொண்டு, அந்த நாளில் கிடைக்கிற மண்டபத்தில் திருமணத்தை நடத்திக் கொள்ள வேண்டும்.
மண்டப நிர்வாகமே மண்டபத்தில் உள்ள அறைகளுக்கான பூட்டு,சாவிகளைக் கொடுப்பார்க ள், இல்லை நாமே எடுத்துக் கொண்டு வரவேண்டுமா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப ஏற் பாடுகள் செய்ய வேண்டும். எப்படியென்றாலும், எந்த அறை யாருக்கு ஒதுக்கப்படு கிறது என்பதை முன்னதாக வே முடிவு செய்து, சம்மந்த ப்பட்டவர்களிடம் பூட்டு, சாவியை ஒப்படைத்துவிட்டு, டூப்ளிகேட் சாவிகளை ஒருவர் பத்திரமாக வைத்துக் கொண்டால், எதிர்பாரா மல், சாவி தொலைந்து போனாலும் பிரச்னை இல்லாமல் இருக்கு ம். மண்டபத்தில் இருக்கும் அறைகளுக்கு நிர்வாகத்தின ரே பூட் டும், சாவியும் கொடுப் பார்கள் என்றாலும் விலை உயர்ந்த பொருட்கள் வைக்கு ம் அறைகளைப் பூட்டுவதற்கு, நாமே சொந்தமாக பூட்டு, சாவி எடுத்துக் கொண்டு போய் பயன்படுத்து வது நல்லதொரு முன் ஜாக்கிரதை நடவடிக்கை. அடுத்ததாக, கார் பார்க்கிங் வசதி, எமர்ஜென்ஸி வழி, சமையல்கூடத்தில் உள்ள வசதிகள் போன்றவ ற்றை நேரில் பார்த்து, ஏற்பாடு செய்வ து நல்லது. மண்டப அலங்காரம், வாழை மரம், மின் அலங்காரம், குடி தண்ணீர், மற்ற உபயோக ங்களுக்கான தண்ணீர் போன்றவை மண்டப வாட கையில் அடங்குமா அல்லது உபரியா க நாம் பணம் செலவழித்து செய்ய வேண் டுமா என்பதை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். சில மண்டபங் களில், இந்த ஏற்பாடுக ளுக்கு வெளியாரை அனுமதிப்பதில் லை. அதற்கேற்ப திருமண காண்டிரா க்டரிடம் பேசி முடிக்க வேண்டும்.
இப்போதெல்லாம் நெரிசல் மிகுந்த சாலைகள் வழியாக போக்குவ ரத்து இடைஞ்சலாக மாப்பிள்ளை அழை ப்பு ஊர்வலம் நடத்துவதில்லை. ஆ னால், நீங்கள் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடத்த வேண்டுமென்றால் , அப்பகுதியிலுள்ள காவல் நிலையத் திலிருந்து ஊர்வல அனுமதியை வாங்கிக் கொள்ள வேண்டும்.





நன்றி :கௌதம் ராம் அவர்கள்.

No comments:

Post a Comment