இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினைக்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர்.
மேலும், இந்தக் கார்டை வாங்கினால் கட்டாயம் வருமான வரி செலுத்த வேண்டியிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களுக்குக் விடைகாணும் பொருட்டு, பான்கார்டை வழங்குவதற்காக, மத்திய வருமான வரித்துறையின் அங்கீகாரம் பெற்ற யூ.டி.ஐ.டெக்னாலஜி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் பாபுவைச் சந்தித்துப் பேசினோம்.
""மத்திய அரசு 200 77 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக்கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியுள்ளது. பத்து இலக்க எண்ணைக் கொண்டது இந்த பான் கார்டு.
பான் கார்டு வாங்கினால் அரசுக்கு ஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும் என்று பயப்படுகின்றனர். உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமான வரம்புக்குள் கொண்டு வருவதற்காகவே இந்த பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நிரந்தரக் கணக்கு எண் என்ற பத்து இலக்க எண்தான் PAN- (Permanent Account Number). இந்திய வருமான வரி செலுத்தும் ஒவ்வோர் இந் தியரும் இந்த எண்ணைப் பெற்றிருப்பது அவசியம். வங்கிக் கணக்கு தொடங்க, தொலைபேசி இணைப்பு பெற, வங்கிக் கணக்கில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் போடவோ- எடுக்கவோ, பான் எண் வேண் டும். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடு போன்றவற்றிற்கு பான் எண் அவசியம்.
இந்த பான் கார்டை பெற தரகர்கள் மூலம் வாங்கினால், 200 முதல் 300 ரூபாய் வரை செலவு ஆகும். ஆனால், நாடு முழுக்க உள்ள ஐ.டி. பான் சேவை நடுவங்களில் ஏதாவது ஒன்றில் நீங்களே விண் ணப்பித்தால், கட்டணம் 94 ரூபாய் மட்டுமே. இதுதவிர ஆன்லைன் மூலமும் (http://www.utiisl.co.in/) விண்ணப்பிக்கலாம்!
இதற்கு, உங்கள் புகைப்படத் துடன் கூடிய அடையாள ஆவ ணம் ஒன்றின் நகல் அதாவது, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை போன்றவற்றில் ஒன்று. அடுத்து, முகவரிக்கான ஆதாரமாக மின் கட்டண ரசீது, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றில் ஒன்றும், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் ஒன்றையும் இணைத்து, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், 15 நாட்களில் பதிவுத் தபாலில் பான் கார்டு வீடு தேடி வந்து விடும்.!
விண்ணப்பப் படிவத்தில் ஃபர்ஸ்ட் நேம் , மிடில் நேம், சர் நேம் என் கிற பகுதி இருக்கும். இதில் ஃபர்ஸ்ட் நேம் என்கிற இடத்தில் உங்கள் பெயரையும், சர் நேம் என்கிற இடத்தில் உங்கள் தந்தை யின் பெயரையும் எழுதவும். பொதுவா க தமிழர்கள் ‘மிடில் நேம்’ வைத்துக் கொள்ளும் பழக்கம் இல்லை என்பதா ல், அந்தக் கட்டத் தைக் காலியாக விட்டுவிடலாம்.
திருமணமான பெண்கள் விண் ணப்பத்தில் தந்தை பெயரை மட்டும் தான் குறிப்பிட வே ண்டும். ஏற்கெனவே பான் கார் டு வாங்கிய பெண்கள் திரும ணத்துக்குப் பிறகு முகவரியை மாற்றிக்கொள்வது அவசியம். இந்தியாவைப் பொறுத்த வரை யில் பெற்றோரைக் காப்பாள ராகக் காட்டி, பிறந்த குழந்தை க்கு கூட பான் கார்டு வாங்க முடியும்.
ரூ. 2 லட்சத்துக்கு மேல் ஒருவர் தங்க நகை வாங்குபவர்கள்,கட்டாயம் வருமானவரி கணக்கு அட்டை (பான்கார்டு)வைத்திருக்க வேண்டும். வாங்கும் நகைக்கு 1 சதவீதம்வருமானவரி பிடித்தம் செய்ய வேண்டும். அதாவது
ஒரு பவுன் தங்க நகை ரூ. 20,906 என்ற நிலையில்இப்போது உள்ளது. இதில் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை சேர்த்தால் ஒரு பவுன் தங்க நகையின் விலை தோராயமாக ரூ.25,000-ஐ எட்டிவிடும். அப்படி என்றால் ஒருவர் 8 பவுன் தங்க நகை வாங்கினால்அவர் கட்டாயம் ரூ. 2,000 வருமான வரி கட்ட வேண்டும்.
PAN explained.......
1. First three characters are alphabetic series running from AAA to ZZZ
2. Fourth character of PAN represents the status of the PAN holder.
- C — Company
- P — Person
- H — HUF(Hindu Undivided Family)
- F — Firm
- A — Association of Persons (AOP)
- T — AOP (Trust)
- B — Body of Individuals (BOI)
- L — Local Authority
- J — Artificial Juridical Person
- G — Government
3. Fifth character represents first character of the PAN holder’s last name/surname.
4. Next four characters are sequential number running from 0001 to 9999.
5. Last character in the PAN is an alphabetic check digit.
Nowadays, the DOI (Date of Issue) of PAN card is mentioned at the right (vertical) hand side of the photo on the PAN card.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment