Wednesday, 7 November 2012

கருத்தடை பற்றிய முழுமையான ஆய்வு!! -ஒரு சிறப்பு பார்வை ...

குழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பது எப்படி?
குழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பது எப்படி?,Birth control கருத்தடை என்பது கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறையாகும். கரு அணு, கரு முட்டை இணைந்து, வளரும்போது கருத்தரிப்பு நிகழ்கிறது. இதை மையாமாகக்கொண்டு கருத்தரிப்பு நிகழ்வதைத் தடுப்பதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன.
முதலாவது உடலுறவை தவிர்ப்பது. முக்கியமாக கருமுட்டை வளரும்காலத்தில் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. 


இரண்டாவது எளிமையான முறை
கருமுட்டை, கரு அணுவுடன் சேராமல் தவிர்ப்பது. ஆண் அல்லது பெண் கருத்தடை சாதனம் உபயோகிப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். அல்லது நிரந்தரமான கருத்தடை முறை ஆண் அல்லது பெண் செய்துகொள்ளலாம்.
வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் மூலமும் கரு முட்டையும், கரு அணுவும் இணைந்து கருத்தரிப்பதை தவிர்க்கலாம்.
பெண்ணின் கருப்பையில் ஐயுடி பொருந்துவதன் மூலம் கரு வளர்வதைக் தடுக்கலாம்.
கருத்தரித்த பின் கூட குறிப்பிட்ட நாட்களுக்குள் கருச்சிதைவு செய்துகொள்ள இயலும், மாத்திரைகள் மூலம் கூட கருவை கலைக்கலாம்.
மேற்குறிப்பிட்ட கருத்தடை முறைகளை அவரவர்களின் சூழ்நிலைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றார்ப் போல் கைக்கொள்ளலாம்.

கருத்தடை முறைகளை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
1. கருத்தடை முறை பாதுகாப்பானதா அல்லது ஏதேனும் மோசமான பக்க விளைவுகள் உள்ளதா என்பதை அறிதல்.
2. நீண்ட நாள் உபயோகம் செய்யும்போது பக்க விளைவுகள் உள்ளதா என்பதைக் அறிதல்
3.அது தாய்ப்பால் அளிப்பதில் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதையும் தாயப்பாலில் கருத்தடை மருந்தின் குணங்கள் கலந்துவிட வாயப்புள்ளதா என்னும் அறிய வேண்டும்.
4.பிறக்க இருக்கும் குழந்தையின் உடல்நலத்தைப் பாதிக்குமா என்பதை அறிதல்
5.கருத்தடை சாதனம் உடலுக்கு ஏதேனும் ஒவ்வாமையை ஏற்படுத்துமா? ஒழுங்கான மாதவிடாய் இல்லாமை அல்லது கருவழி பாதையில் உள்ள பிரச்சனைகள், கருத்தடை சாதனத்தை தானாகவே உபயோகித்துக் கொள்ளலாமா அல்லது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையா? ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

கருத்தடை- இயற்கை முறை

1.ரிதம் (காலண்டர்) முறை (Rhythm calendar method)
இந்த முறைப்படி மாதவிடாய் முடிந்த 10 நாட்களுக்கு பின் கருமுட்டை வளர்ச்சி அடைவதால், அவ்வளர்ச்சிப் பருவத்தில் உடலுறவைத் தவிர்த்தால் கருத்தரிப்பையும் தவிர்க்க இயலும். ஆகவே பாதுகாப்பான காலம் மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பும் பின்பும் ஆகும் இந்த முறையில் பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்ற முறையில் கணக்கிடப்பட்டுகிறது. ஆனால் இதிலிருந்து மாறுபடும் சுழற்சி உள்ளவர்களுக்கு இந்த முறையில் தோல்விகள் ஏற்பட்டு கருத்தரிக்க வாய்ப்புள்ளது.




  
2. பில்லிங்ஸ் முறை (Billings or Ovulation Method)

 பெரும்பாலான பெண்களுக்கு பெண் உறுப்பிலிருந்து திரவம் சுரப்பது காணப்படும். இது அளவிலும் நிறத்திலும் அடர்த்தியிலும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இது மாதவிடாய் காலச் சுழற்சியைப் பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் வெள்ளை நிறத்தில் ஒட்டுகின்ற தன்மையுடன் காணப்படும். மாதவிடாய் முடிந்தவுடன் இது சற்று குறைந்த அளவில் வறண்டு கெட்டியாகவும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் வழுவழுப்புத் தன்மை கரு முட்டை வளர்ச்சி அடைந்த நிலையில் அதிகமாக இருக்கும். இது கருத்தரிப்பதற்கான  நாட்களின் அறிகுறியாகும் இந்த மாறுபாடுகளைக் கவனிக்கும்போது பெண்கள் கருத்தரிக்கும் நாட்களையும் கருத்தரிக்காத நாட்களையும் அறிந்துகொள்ள இயலும்.

3.உடலில் வெப்ப மாறுபாடு
பெண்களில் உடலில் வெப்பம் கூடுவதையும் குறைவதையும் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் நேரத்தில் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக மாதத்தின் நடுப்பகுதியில் கண்காணித்தல் வேண்டும்.
அக்காலகட்டத்தில் கருமுட்டை வளர்ச்சி அடையும்போது உடலில் வெப்பநிலை 1-2 டிகிரி பாரன்ஹிட் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் (1-16 நாட்கள்) உடலுறவைத் தவிர்ப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். ஆனால் வெப்பநிலையைத் தெரிந்துக்கொள்ள தினமும் நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

செயற்கையான முறையில் தடுக்கும் முறை 

கரு முட்டை கரு அணு இணைவதைத் தடுக்கும் முறை) (Condom) 
ஆண்கள்  அணியும் ஆணுறையை உடலுறவிற்கு முன்பு அணிந்து கொள்வதன் மூலம், கரு அணு கர்பப்பையில் கருமுட்டையுடன் இணைவதைத் தடுத்து கருத்தரிப்பைத் தவிர்க்க இயலும். ஒரு முறை உபயோகித்த அணுறையை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. அது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக செயல்படுவதுடன் எய்டஸ் மற்றும் உடலுறவு சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்க இயலும்.

பெண்களுக்கான கருத்தடை சாதனம் டயாபர்ம்

த்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்களுக்கான கருத்தரைட சாதனம் 2-4 இன்ச் வட்டவடிவில் ஒரு ரிங் இணைக்கப்பட்ட பொருளாகும். இதை ஆரம்பக்கட்டத்தில் ஒரு மருத்துவரின் அல்லது மருத்துவ ஊழியரின் உதவியுடன்  பொருந்திக் கொள்ளப் பழகிவிட்டால் பின் சுயமாகவே பெண் உடலுறப்பில் பொறுத்திக் கொள்ள இயலும்.
இதை அணிவதன் மூலம் கரு அணு கரு முட்டை இணைவதைத் தடுத்து, கருதரிப்பை தவிர்க்க இயலும் ஒரு முறை உபயோகித்தபின் அதை சோப்புப் போட்டு சுத்தப்படுத்தி மீண்டும் அடுத்த முறை உபயோகம் செய்யலாம். இதன் விலை சற்றே அதிகமானாலும் பெண்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பெண்களுக்கு சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது.


சர்விகல் கேப் (cervical cap)
இது டயாபர்ம் போன்றே சர்விக்ஸ்-ல் பொருத்திக் கொள்ளக்கூடிய ஒரு ரப்பர் கேப். இதை அணிந்து கொள்வதன் மூலம் சர்விக்ஸின் திறப்பு மூடப்படுவதால் கருத்தரிப்பு நிகழ்வு தடைப்படுகிறது.

பெண்களுக்கான கருத்தடைப் பொருள்
பெண்களுக்கான இந்தக் கருத்தடைப் பொருள் பாலியுரித்தனால் செய்யப்பட்ட மெதுவான பெண்களின் உடலுறுப்பில் பொருந்திக்கொள்ளக்கூடிய வசதியுடன் உள்ள ஒன்றாகும். உடலுறவிற்கு முன்பே இதைப் பொருத்திக் கொள்வதன் மூலம் கரு அணு கரு முட்டையுடன் இணைவதை தவிர்க்கலாம். இது கருத்தரிப்பைத் தவிர்ப்பதுடன் எய்ட்ஸ் மற்றும் உடலுறவின் மூலம் ஏற்படும் நோய்களைத்  தடுக்கவும் இயலும். ஆனால் சற்றே விலை அதிகமானது.

ஸ்பெர்மிசைடு
ஸ்பெர்மிசைடு என்பது உறுப்பில் தடவிக்கொள்ளும் ஒரு ரசாயனப் பொருளாகும் இது கரு அணுவை செயலிழக்கச் செய்வதால் கருத்தரிப்பை தடை செய்ய இயலும். இது மெதுவான நுரை வடிவத்திலும்,மாத்திரைகள், கீரீம் வடிவத்தில் உள்ளது. இதன் பக்கவிளைவுகள் கூட மிகக் குறைவே. ஒரு சிலருக்கு இது ஒவ்வாமை விளைவுகளைக் கொடுக்கலாம்.

நடைமுறை வழக்கத்தில் உள்ள கருத்தடை முறை

தாய்ப்பால் அளிப்பது
குழந்தை பிறந்த பின் ஒருசில மாதங்களுக்கு கருமுட்டை வளர்வது, மீண்டும் மாதவிடாய் ஏற்படுவது போன்ற நிகழ்வுகள் ஏற்பட சற்றே தாமதம் ஏற்படும். தாய்ப்பால் அளிக்கும் காலத்தை நீட்டிப்பதன் மூலம் கருத்தரிப்பை தள்ளிப் போட இயலும்.

கருத்தடுப்பு சாதனங்கள்
ஐயுடி (Intrauterine device) என்பது சிறிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு கர்பப்பையில் பொருத்திக் கொள்ளப்படும் ஒரு கருத்தடை சாதனம் ஆகும். கர்பப்பையில் உள்ள இந்தப் பொருள் கருத்தரிப்பைத் தடை செய்து கரு அணுகவும் கரு முட்டையும் இணைந்து வளாவதைத் தடை செய்கிறது.
நம் தேசத்தில் புழக்கத்தில் உள்ள இந்தக் கருத்தடைப் பொருளின் பெயர் கர்ப்பர் டி. இது பொருத்தப்பட்ட இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட வேண்டும்.  இது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ளபட வேண்டிய ஒன்று. ஆனால் இது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக கருதப்படுகிறது. ஆனாலும் இதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளது.

பொருத்தப்பட்ட மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை வலி ஏற்படுகிறது.
மாதவிடாயின்போது அதிக உதிரப் போக்கு ஏற்பட்டு ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. மிக அறிதாக கர்பப்பையில் உள்சுவர் தோலில் பிரச்சனைகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் போது அதை நீக்கும் நேரத்தில் வலி ஏற்படலாம்.
ஐயுடி (Intrauterine device) பொருத்திக் கொள்வதால் கர்பப்பையில் வெளிப்புறத்தில் முக்கியமாக பெல்லோபியன் டியுபில் கரு வளர்ச்சியடைய வாயப்புள்ளது. இதன் மூலம் இன்பெக்ஷன்ஏற்பட்டு சரியான மருத்துவ வசதி இல்லாதபோது உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட நேரிடலாம்.

ஹார்மோன் முறைகள்
ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் முறையில் ஈஸ்ட்ரோஐன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவுகள் உடலில் மாற்றப்படுவதால் கரு வளர்ச்சியும் கரு அணு வளர்ச்சியும் தடுக்கப்படுகிறது.
மேலும் இது சர்விகல் சுவரை அடர்த்தியாகச் செய்வதால் கரு அணு கர்ப்பப்பைக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆனால் இம்முறையில பக்க விளைவுகள் ஏற்பட வாயப்புள்ளது. மேலும் இது சர்விகல் சுவரை அடர்த்தியாகச் செய்வதால் கரு அணு கர்ப்பப்பைக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆனால் இம்முறையில் பக்க விளைவுகள் ஏற்பட வாயப்புள்ளது.


வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் கருத்தடை மருந்துகள்
ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் கலந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் ஓவரியில் வளரும் கருமுட்டைகளை வளர விடமால் தடுக்க இயலும். மாலா டி குறைந்த வீரீயம் உள்ள பாதுகாப்பான கருத்தடை மருந்தாகும்.

ப்ரோஐஸ்ட்ரோன் மட்டும் உள்ள மருந்துகள்
ப்ரோஐஸ்ட்ரோன் மாத்திரை மட்டும் எடுத்துக் கொள்ளும்போது சர்விகல் ம்யூகஸ் அதிகமாக்கியும் கரு அணு கரு முட்டை நகர்வதைக் குறைத்தும், கரு வளர்வதைத் தடுக்கிறது. ஆனால் இம்முறையில் உடல் நலத்தில் பக்க விளைவுகள் உள்ளது.

அவசரகால கருத்தடை மாத்திரைகள்
பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இத்தகையை கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். இதன் பக்க விளைவுகளாக வாந்தி அடுத்த மாதவிடாய் சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த முறை 100% நம்பகமானதல்ல

நிரந்தர கருத்தடை முறைகள்
நிரந்தரமாகச் செய்து கொள்ளும் இந்த முறையில் கரு அணு அல்லது கரு முட்டையை எடுத்துச் செல்லும் குழாயைத் தடுப்பது, அல்லது வெட்டி எடுப்பது போன்ற முறைகள் கையாளப் படுகிறது. இம்முறையில் தம்பதியினர் இனி குழந்தையே வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கின்ற போதே செய்துக்கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை முறை
வாசக்கடமி என்பது ஆண்கள் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் சிறிய மாறுதல். இந்த அறுவை சிகிச்சையைச் செய்வதன் மூலம் கரு அணு உள்ளே செல்வது தடைப்படுவதால் பெண்கள் கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம். ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து 48 மணிநேரம் ஒய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு வாரம் வரையில் அதிக பளுவுள்ள பொருட்களைத் தூக்கக் கூடாது. சிகி்சசைக்குப் பின் வீக்கம், வலி, ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பெண்களுக்கான நிரந்தரக் கருத்தடை
இந்த முறையில் பெண்களின் பிறப்புறுப்பில் செய்யும் சிறிய அறுவை சிகிச்சையால் ஓவரியில் வளரும் கரு முட்டை கரு அணுவுடன் இணைவது தடுக்கப்படுகிறது. சரியான முறையில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை முறை சிறந்த கருத்தடை முறையாகும். ஒரு சில நேரங்களில் இன்பெக்ஷன், ரத்தக்கசிவு ஏற்படலாம்.
அதிக வலி மற்றும் உதிரப் போக்கு இருக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அறுவை சிகிச்சை முடிந்து 48 மணிநேரம் ஒய்வும் 2-3 நாட்களுக்கு அதிக பளுவோ தூக்கக் கூடாது.


நன்றி  – டாக்டர்.க.திருத்தணிகாசலம்,

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Tuesday, 6 November 2012

ஆக்ஸிஜனிலிருந்து மின்சாரமா ? அமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத்தமிழர்!!


கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.


அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? 



கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபாரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார்.
தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர்,ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.
தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்தி லேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
”உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர். ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது ஃபெட்எக்ஸ் (FedEx்), இபே (eBay), கோக்கோ கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இபே (மீஙிணீஹ்) நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் இபே!
”உடனே மூன்று ப்ளூம் பாக்ஸ்களை அனுப்பி வையுங்க’ என்று மட்டும் யாரும் கேட்டுவிடாதீர்கள். காரணம், இது எதிர்காலத் தொழில்நுட்பம். இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.
ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

சிங்கப்பூரில் தமிழரின் பங்கு!! ஒரு வரலாற்று பார்வை...


சிங்கப்பூரில் தமிழர் எனப்படுபவர், தமிழைப் பேசும் ஒரு மக்கள் கூட்டத்திலிருந்து தோன்றியவர் என்பதைப் பலரும் ஏற்றுவந்துள்ளனர். தமிழர் எனப்படுபவர் தமிழ்மொழிப் புழக்கத்தால் மட்டுமே அறியப்படக் கூடியவர் என்று மற்றுமொரு விளக்கமும் உண்டு. ஆயினும், வரலாற்று அடிப்படையில் தமிழ் மொழிப் பயனீடு இன்றைய தமிழக-வடஇலங்கைப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் மத்தியில் மட்டும் அடங்கிவிடவில்லை. மாறாக, தென்னிந்தியர்கள் மத்தியிலும் தமிழ் புழங்கப்படுகிறது. மலாயா-சிங்கப்பூரில் தமிழ்மொழி தென்னிந்தியர்களின் தொடர்புமொழியாகக் கடந்த நூறு ஆண்டுகளாய் இருந்துவருகிறது. எனவே, தமிழ்மொழிப் பயனீடு, தமிழர் அல்லாதவர் மத்தியிலும் விரிவாக்கம் கண்டுள்ளது. மலாய்ச் சமூகத்துடன் சில தலைமுறைகளாகக் கலந்துவிட்ட குடும்ப உறுப்பினர்களும் தமிழரெனக் குறிப்பிடப்படுகின்றனர். பாட்டன் காலத்தில் மலாய் மாதுவை மணமுடித்தவர் தமிழராக இருந்தால், பேரப்பிள்ளைகள் காலத்திலும் அக்குடும்பத்தில் தோன்றியவர்கள் தமிழரெனக் குறிப்பிடப்படுகின்றனர்.


சிங்கப்பூரில் தமிழர் சமுதாய உருவாக்கத்தைப் புரிந்துகொள்ள இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய காலத்தை எடுத்துக்கொண்டால் போதும். இரண்டாம் உலகப்போருக்கு முந்திய காலப்பகுதி யில், சிங்கப்பூரின் வரலாறு மலாயாவுடன் மிகவும் இணைந்திருப்பதால், சிங்கப்பூர்த் தமிழர்கள் வரலாற்றைத் தனியாகக் காண்பது எளிதாக இராது. போருக்கு முன்னைய ஆண்டுகளில், சிங்கப்பூருக்கும் தமிழர்களுக்கும் மலாக்கா நீரிணைக் குடியேற்ற இடங்களான பினாங்கு, மலாக்கா முதலான இடங்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. தமிழர்கள் மலாயாவின் எந்தப் பகுதியிலும் வாழ முடிந்தது. இதனால் சிங்கப்பூருக்கு வந்த தமிழர்கள் மலாயாவின் பல பகுதிகளுக்குச் சென்றனர். அதைப் போலவே மலாயாவில் வாழ்ந்த தமிழர்கள் சிங்கப்பூருக்கு வந்து வாழ்ந்தனர். இந்த நிலை சிங்கப்பூர் தனி நாடாகும்வரை நீடித்தது. 1965இல் மலேசியர்களுக்கெனச் சிங்கப்பூர் நுழைவு அட்டையை அறிமுகம் செய்த பின்னரே, சிங்கப்பூர்த் தமிழர்கள் எனும் அடையாளம் உறுதிபெற லாயிற்று. அதுவரை ‘ஜாலான் பாஸ்’ (அடையாள அட்டை) மட்டுமே மலாயாவில் வாழத் தேவைப் பட்டது. இந்த அடையாள அட்டைகூட, 1950களில் உருவாகிய கம்யூனிசப் புரட்சியின்போதுதான் அறிமுக மாகியது. அதற்கு முன்னதாக, தமிழர்கள் மலாயாவில் எந்த இடத்திலும் வாழ்வது எளிதாக இருந்தது.

சிங்கப்பூர் இந்தியர்களில், தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு அண்மைய கால வரலாறுதான் காரணமாக உள்ளது. ஆங்கிலேயர் சென்னை மாகாணத்தை ஆண்டபோது, மலாயாவுக்கான உடலுழைப்புக்கான தொழிலாளர்களாகத் தமிழர்களையே பெரும்பாலும் கொண்டுவந்தனர். தமிழ்ப் பாட்டாளிகளை மலாயாவுக்கு எளிதாகவும் மலிவாகவும் கடல்வழி அனுப்ப, நாகைப்பட்டினத் துறைமுகத்தருகில் ஆவடி எனும் பாட்டாளிகளைச் சேர்க்கும் நிலையத்தை நடத்தினர். தமிழ்ப் பாட்டாளி மக்களோடு, மலையாளம், தெலுங்கு முதலான இதர தென்னிந்திய மொழி பேசுவோரும் வந்தனர். இவர்கள் தமிழர்களோடு வாழ்ந்ததால் தமிழில் பேசவும் கற்றனர். இவ்வாறாகத் தென்னிந்தியப் பாட்டாளி மக்கள் மத்தியில் தமிழைத் தொடர்பு மொழியாகக்கொண்ட சமுதாயம் உருவாகியது.


சிங்கப்பூரில் குடியேறிய தமிழர்கள் மத்தியில், 50 விழுக்காட்டினருக்கு அதிகமானோர் இந்துக்களாக இருந்தனர். இது சமுதாய ஒருமைப்பாட்டுக்கு உதவியது. கிறித்துவம், இசுலாம் முதலான மதத்தினரும் தமிழர்கள் மத்தியில் இருந்தனர். மொழியால் இவர்கள் இணைக்கப்பட்டிருந்தாலும் சமயங்கள் இவர்களைப் பிரித்தே வைத்தன.

சிங்கப்பூர் இந்தியர்களின் சமூக உருவாக்கத்தில், அவர்களின் பொருளாதார நிலைதான் தலையாயக் காரணமாக இருந்தது. காலனித்துவப் பொருளாதாரத்தில் அவர்களின் ஈடுபாடு ஏனைய நடவடிக்கைகளை எல்லாம் பாதித்தது. சிங்கப்பூருக்கு வந்த இந்தியர்களில் பெரும்பாலோர் தமிழ்ப் பாட்டாளிகளாய் இருந்ததால், பெரும்பான்மை இந்தியர்கள் பாட்டாளிகளாகவே வாழ்ந்தனர். பாட்டாளித் தமிழர்கள் பொதுப் பயனீட்டுத் துறைகளான சாலை அமைத்தல், கப்பல் தளங்கள், சுகாதாரம் முதலான பிரிவுகளில் பணியாற்றினர். 1970கள் வரை தமிழர்களின் எண்ணிக்கை இத்துறைகளில் மற்ற இனத்தவர்களைக் காட்டிலும் அதிகமாகவே இருந்தது. பாட்டாளித் தமிழர்கள் ஈடுபட்ட வேலைகள், அவர்கள் பணியாற்றிய தொழில் மனைகள் அவர்களுக்குத் தரப்பட்ட வீடுகள், இந்த வீடுகளின் அமைப்பு முதலானவை தமிழர்களின் வாழ்க்கையையும் எண்ணங்களையும் பாதித்தன. இந்தப் பாதிப்புகள், புதியதோர் தமிழர் பண்பாடு உருவாக அடித்தளமாய் அமைந்தது.

சிங்கப்பூரில் உருவாகிய தமிழர் சமுதாயம், தொடக்கத்தில் பாட்டாளி மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தாலும், போருக்குப் பின் கல்வி கற்ற தென்னிந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தொழில்நுட்பம் மிகுந்த வேலைகள், நடுநிலை நிர்வாகிகள், வியாபாரம் முதலான தொழில்களுக்குப் படித்த இந்தியர்கள் வந்தனர். சிங்கப்பூரைத் தூரகிழக்குக்கான கடற்படைத்தளமாகப் பிரிட்டன் மாற்றியபோது, மலையாளிகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்தது.


பாட்டாளிகள், கல்வி அறிவு தேவைப்பட்ட தொழில்களில் ஈடுபட்டோர் ஆகியோருடன் மூன்றாம் பகுதியினராக வர்த்தகத்தில் ஈடுபட்ட தமிழர்களைக் குறிப்பிடலாம். வர்த்தகத்தில் ஈடுபட்ட இதர இந்தியர்களோடு ஒப்பிடுகையில், வர்த்தகத்தில் ஈடுபட்ட தமிழர்கள் பல்வேறு பொருள்களை விற்பவர்களாகவும் சேவைகள் வழங்குபவர்களாகவும் இருந்தனர். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இவர்கள் வந்திருந்தனர். இவர்களிடையே குறிப்பிடத்தக்கவர்களாக நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் விளங்கினர். தமிழகத்தின் கடலோர நகரங்களில் இருந்து தமிழ் முஸ்லிம்களும் கேரளப் பகுதிகளிலிருந்து மொப்ளாக்களும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். சின்னஞ்சிறு பொருள்கள் விற்பது, சமைத்த உணவைத் தள்ளுவண்டிகளில் எடுத்துச்சென்று விற்பது, பலசரக்குக் கடைகள், ஜவுளிக் கடைகள், தங்க நகைசெய்து விற்பது, தனவைசிகத் தொழில் (வட்டித் தொழில்) முதலான பல்வேறு தொழில்களில் தமிழர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆயினும், மேலோட்டமாகப் பார்க்கும்போது, வர்த்தகத்தில் வட இந்தியர்கள் முன்னணி வகிப்பதுபோல் தெரிந்தது. வட இந்தியர்களின் கடைகள், பழைய சிங்கப்பூரின் மையப் பகுதியில் இருக்கும் ‘ஹய் ஸ்திரீட்’ (High Street) எனும் சாலையில் அமைந்திருந்ததால், வியாபாரத் துறையில் அவர்கள் மிகுந்த செல்வாக்குடன் இருந்ததாகத் தோற்றம் தந்தது. தென்னிந்திய வியாபாரிகள், இந்தியச் சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வணிகத்தில் ஈடுபட்டிருந்ததால், தமிழர்கள் பரவலாக வாழ்ந்த இடங்களில் தத்தம் வியாபாரத்தைச் செய்தனர். வட இந்திய வணிகர்கள் கால வோட்டத்தில், செல்வந்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வியாபாரங்களில் ஈடுபட்டனர். இந்திய வணிகர்கள் மத்தியில் காணப்பட்ட இருதுருவப் போக்கு, சமுதாய உருவாக்கத்திலும் விளைவுகளை ஏற்படுத்திற்று.


சமுதாய உருவாக்கமும் அடையாளமும்...
இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்கள், மலாயாவின் இந்தியச் சமூகத்தின் ஒரு பகுதியினராய்க் கருதப்பட்டனர். தமிழர்களின் உலகளாவிய சிந்தனையைக் குறிப்பிடுகையில் அதில் முதலிடம் வகித்தது அவர்கள் மலாயாவில் இந்தியர்களாக வாழ்ந்த வாழ்க்கைதான். அதே சமயத்தில் அவர்களின் எண்ண அலைகள் இன்றைய தமிழகம், வட இலங்கை ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. சிங்கப்பூரில் வாழ்ந்த ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் அவர்களோ அல்லது அவர்தம் மூதாதையரோ விட்டு வந்த கிராமம் மனத்தில் தெள்ளத் தெளிவாக இருந்தது. சிங்கப்பூர் ‘சம்பாத்தியம்’ செய்ய வந்த இடமாகவும் தமிழகத்திலிருந்த அவர்களுடைய ‘ஊர்’ நிலையான இடமாகவும் விளங்கியது. சிங்கப்பூர்த் தமிழர்களின் சிந்தனையில், தமிழகத்தில் காணப்படாத தமிழ் மொழியால் ஏற்பட்ட இன உணர்வு மிளிர்ந்தது. மலாயாவில் தமிழ் புழங்குவோர் அனைவரும் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வு படிப்படியாக மேலோங்கியது. இந்த உணர்வுகளுக்கு அப்பால்தான், இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் என்ற சிந்தனை எழுந்தது. சிங்கப்பூர் மலாயா ஆகியவற்றின் வரலாறு எழுதுவோர் மலாய்க்காரர், சீனர், இந்தியர், இதர இனத்தவர் எனும் நான்கு இனப் பாகுபாட்டைக்கொண்டே பல ஆய்வுகளை எழுதி வந்திருப்பதால் தமிழர்களின் தனிப்பட்ட அடையாளம் பல நிலைகளில் மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் வந்துள்ளது. இதனால் சிங்கப்பூர்த் தமிழர்களுக்குத் தனியொரு வரலாறு எழுதுவது பெருஞ்சவாலாக இருந்துவருகிறது.

சிங்கப்பூரில் தமிழர்கள் தனியொரு அடையாளம் பெற, பல்வேறு சமூக உருவாக்கங்கள் உதவின. சிங்கப்பூருக்குள் குடியேறும் முதல் தலைமுறைக் குடியேறிகள் மத்தியில் சாதி ஒரு முக்கியச் சமூக அடையாளமாக உதவியது. தொடக்க நிலைச் சமூகங்களை உருவாக்கச் சாதியமைப்பு உதவியாக இருந்தது. குறிப்பிட்டதொரு சாதியைச் சார்ந்தோர் போதிய எண்ணிக்கையில் இல்லாதபோது, தமிழர்கள் தாங்கள் வந்த ஜில்லா, வட்டாரம் முதலானவற்றின் அடிப்படையில் தொடக்க நிலைச் சமூகக் கூட்டங்களை உருவாக்கினர்.


இந்திய விடுதலைக்கு முன்னர் சென்னை மாகாணத்தில் எழுந்த பல்வேறு சமூகச் சிந்தனைகள், சமூக இயக்கங்கள் மலாயாவில் வாழ்ந்த தமிழர்களை ஈர்த்தன. இவற்றில் இரண்டு, சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்களையும் கவர்ந்தது. திராவிட இயக்கம் சிங்கப்பூர்த் தமிழர்கள் மத்தியில் சமூக மாற்றத்தைச் செய்யத் தூண்டியது. தமிழர்களின் வாழ்விலும் சிந்தனையிலும் அது சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியது. அரசியல் விடுதலையைக் காட்டிலும், தமிழர்கள் தங்கள் சமுதாய வாழ்க்கையில் தீவிரமான சீர்திருத்தத்தைச் செய்ய வேண்டுமென அது தூண்டியது. இந்திய விடுதலை இயக்கம், சில இந்தியர்களிடையே முக்கிய இயக்கமாகக் கருதப்பட்டாலும், பாமரத் தமிழர்கள் மத்தியில் அது இரண்டாம் இடத்தையே வகித்தது. மகாத்மா காந்தி போன்ற இந்திய தேசியத் தலைவர்களைத் தவிர, இந்திய விடுதலை பற்றிய ஏனைய கருத்துகள் அனைத்தும் தமிழ்மொழி வாயிலாகவே பாமரத் தமிழர்களைச் சென்றடைந்தது. ஆங்கில மொழியைப் புழங்கிய இந்தியர்களிடையே, இந்திய விடுதலை இயக்கம் ஒன்றுதான் முக்கியமான இயக்கமாக இருந்தது. இந்திய விடுதலை இயக்கம், ஆங்கில மொழியை அதிகமாத் தழுவிச் செயல்பட்டதால், பாமரத் தமிழர்கள் மத்தியில் அதற்கு அதிக வரவேற்பில்லை.


சமூகச் சீர்திருத்தம் பற்றிய கருத்துகள் மலாயாவில் வேரூன்றியதால், 1930களின் பிற்பகுதிக்குள், கோயில்களில் ஆதிதிராவிடர்கள் நுழைவதற்கு இருந்த தடை அகன்றது. சாதி சமய விழாக்களில் இருந்து அகன்றதால், தீமிதி, தைப் பூசம் முதலான தமிழ் இந்து விழாக்கள் தமிழர்கள் திரளாக ஒன்றுகூடும் விழாக்களாக மாறின. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரின் பல இடங்களில் நடைபெற்ற தைப்பூசம் தெங் ரோடு சுப்பிரமணியர் ஆலயத்தை மையமாகக் கொண்டு வளர்ந்தது. தீமிதி விழா சௌத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோயிலை மையமாகக் கொண்டு வளர்ந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர், இன்றைய அல்பர்ட் சாலையைத் தமிழர்கள் ‘தீமிதித் திடல்’ என்றே அழைத்தனர். அங்குதான், சிங்கப்பூரில் முக்கியச் சமய விழாவாகத் தீமிதி கொண்டாடப்பட்டது.


இரண்டாம் உலகப்போர் பொருளாதார நெருக்கடியையும் வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் இல்லாமையையும் தமிழர்களுக்குத் தந்தது. அந்த இன்னல் சூழ்ந்த போர்க்கால வாழ்க்கையிலும் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை தரும் மனநிறைவுகள் ஏற்பட்டன. சுமார் நூறாண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயக் காலனித்துவம் பாட்டாளித் தமிழர்களை உடல் உழைப்பாளிகளாக மட்டும் கருதி வந்த நிலை ஜப்பானியரின் வருகையால் மறைந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் சிங்கப்பூரில் நிறுவப்பட்ட இந்திய தேசிய விடுதலைப் படையில் பாட்டாளித் தமிழர்கள் போர் வீரர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். தங்களை மனிதச் சமுதாயத்தின் அடிமட்டத்தில் உழலும் வெறும் கூலிகளாய் எண்ணி வாழ்ந்த ஆயிரக்கணக்கான பாட்டாளித் தமிழர்கள் நேதாஜியின் வீர உரைகளால் மன எழுச்சி பெற்றனர். இரண்டாம் உலகப்போரின் முடிவு இந்திய விடுதலைப் படைக்கு வெற்றி தராவிட்டாலும் அதில் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் எண்ணத்தில் பலவித முன்னேற்றச் சிந்தனைகள் நிலவின.

1950களில் சிங்கப்பூரில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் பொதுத் தேர்தலைப் பிரபலமாக்கின. இதனால், இந்தியர்களில் பெரும்பான்மையினராய் இருந்த தமிழர்கள் தேர்தல்களில் முக்கிய மக்களாகக் கருதப்பட்டனர். 

தொழிற்சங்கங்களில் தீவிரப் பங்காற்றிய தமிழர்களால் புதிய அரசியல் கட்சிகள் பல தோன்றின. தமிழர்களின் ஆதரவினால் பல் வேறு அரசியல் கட்சிகள் சிங்கப்பூரில் உருவாகின. 1959ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது உள்நாட்டு நிர்வாகத்தில் சுயாட்சி பெற்றது. அச்சமயத்தில் ஆளுங்கட்சியிலும் எதிர்க்கட்சிகளிலும் தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். அன்று ஆளுங்கட்சியாக இருந்த ‘மக்கள் செயல் கட்சிக்கு’ தமிழர்களின் ஒருமித்த ஆதரவு இருந்தது. மக்கள் செயல் கட்சி தனது அரசியல் சித்தாந்தத்தில் தமிழுக்குச் சரிநிகர் இடம் தந்தது தமிழர்களின் ஆதரவை ஈர்த்தது எனலாம். சிங்கப்பூர் மலேசியாவில் சேருவதற்கு முன்னதாகவும் சேர்ந்த பின்னரும் மக்கள் செயல் கட்சியின் அரசியல் செல்வாக்குக்குத் தமிழர்கள் பேராதரவு தந்தனர். சிங்கப்பூரின் மக்கள் தொகையில் தமிழர்கள் 4 விழுக்காட்டினராய் இருந்தாலும் சிங்கப்பூர் மலேசியாவில் சேர்ந்திருந்த காலத்தில் தமிழர்களின் பலம் 10 விழுக்காடாக அதிகரித்திருந்தது. எல்லாத் தேர்தல்களிலும் தமிழர்களின் வாக்களிப்பு வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கக் கூடியதாய் இருந்தது.


சிங்கப்பூரில் நிகழ்ந்த துரித அரசியல் மாற்றத்தில், தமிழர்களின் ஆதரவை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பார்த்ததால் தமிழும் முக்கியத்துவம் பெற்றது. சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் தமிழும் ஒரு மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் வறுமையில் வாடிய தமிழ்மொழிக் கல்வியும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களும் அரசாங்க நிதியுதவி பெற்றன.



வேலைவாய்ப்பு ...
சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விதிகளை, அந்நாட்டு அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது. இதனால், நடுத்தர மற்றும் அடித்தள வேலைவாய்ப்புகள், இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டவருக்குக் கிடைப்பது இனி சிரமமாக இருக்கும்.
சிங்கப்பூரில் தற்போது, 35 சதவீதம் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். அந்நாட்டு சட்டப்படி, அங்குள்ள வெளிநாட்டவர் தற்போது, மாதம் குறைந்தபட்சம் 2,800 சிங்கப்பூர் டாலர் சம்பாதித்தால் தான், அங்கு பணிபுரிவதற்கான அனுமதியை (இ.பி.,) பெறலாம். இந்த விதி திருத்தப்பட்டு, மாதம் 3,000 சிங்கப்பூர் டாலர் சம்பாதிக்க வேண்டும் என்ற புதிய விதி, 2012ம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக அங்கு வேலைக்காக வரும் வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்து வருவதால், குறைந்த சம்பளம் உள்ள வேலை கூட மண்ணின் மைந்தர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற புகார்கள் அதிகரித்து வந்தன.
இதையடுத்து, அந்நாட்டின் மனிதவள அமைச்சகம், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: நீண்ட கால அடிப்படையில், வெளிநாட்டுப் பணியாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, நாட்டில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வெளிநாட்டுப் பணியாளர்களாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சமீப காலமாக இ.பி., கோரி அதிகளவில் விண்ணப்பங்கள் வருகின்றன. அதனால் அடிமட்ட, நடுத்தர, நிர்வாக மற்றும் உயர் நிர்வாக வேலைகளில், வெளிநாட்டினர் சேர்வதற்கான விதிகள் மேலும் கடினமாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளில், அதிக கல்வித்தகுதி அதற்கேற்ற நல்ல சம்பளம் ஆகியன அடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 3,800 இந்திய நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை நிறுவியுள்ளன. அவற்றில் பணியாற்றுவதற்கு, இந்தியாவில் இருந்து ஆண்டு தோறும் அதிகமானோர் சிங்கப்பூருக்குச் செல்கின்றனர். தற்போதைய புதிய விதிகளால் அவர்களின் வருகை பாதிக்கப்படக்கூடும். ஆனால், சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ள இந்தியர்களுக்கு புதிய விதிகளால் பாதிப்பு ஏற்படாது.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

Monday, 5 November 2012

தகவல் அறியும் உரிமைச்சட்டம்!!ஒரு சிறப்பு பார்வை...

தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 (சட்டம் இல. 22/2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004,[1]ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மே 11, 2005,[1] மக்களவையிலும், மே 12, 2005,[1] ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 15 2005 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஜூன் 21, 2005, அரசுப் பதிவியழில் வெளியிடப்பட்டு அக்டோபர் 12,2005 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிறப் பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள்..

கவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவதில் இந்தியாவுக்கு 2வது இடம் கிடைத்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்கா ரஷ்யா உட்பட 95 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் செர்பியா முதலாவது இடத்திலும் இந்தியா 2வது இடத்திலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் தகவல்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம்
1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.
3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.
4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.
5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.
6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.
7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம் ?

 எடுத்துக்காட்டாக:
1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?
2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?
3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?
4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ( தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா ?
8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?
10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ?
11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?

12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும் ? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும் ? இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.
மாநில அரசு தகவல்கள் பெற :-
திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )
மாநில தலைமை தகவல் ஆணையர், காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி, ( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 , அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 ) தேனாம்பேட்டை, சென்னை – 600 018 தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580 Email : sic@tn.nic.inhttp://www.tnsic.gov.in/contacts.html
மத்திய அரசு தகவல்கள் பெற :-
Shri Satyananda Mishra Chief Information Commissioner Room No.306, II Floor August Kranti Bhavan Bhikaji Cama Place New Delhi – 110 066. Phone:- 011 – 26717355 E-mail :- s.mishra@nic.inhttp://cic.gov.in/
தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்?. 
( What type questions can be asked in RTI act 2005 )

1) பதிவேடுகள் (Records), 

2) ஆவணங்கள் (Documents), 

3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips),

4) கருத்துரைகள் (Comments), 

5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,

6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள் (Offices of the Information notes),

7) சுற்றறிக்கைகள் (Circulars),

8) ஆவணகள் (Documentation),

9) ஒப்பந்தங்கள் (Agreements),

10) கடிதங்கள் (Letters),

11) முன்வடிவங்கள் (Model),

12) மாதிரிகள் (Models),.

13) கணீனி சார்ந்த பதிவுகள் (Information stored in computer),

14) மின்னஞ்சல்கள் (Emails).

15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள் (All information of public good well),

16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை,
(The right to review relevant documents and records),

17) நகல் எடுக்கும் உரிமை (Right to take Xerox)

ஆகியன உறுதிப்படுத்தபட்டுள்ளன.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் பெற வேண்டும்.

யாருக்கு தகவல் அனுப்ப வேண்டும் என்று தெரியவில்லையா ?

எந்த துறைக்கு (Department) அனுப்ப வேண்டும் என்று தெரியவில்லையா?

கவலை வேண்டாம்.

வழிமுறை
**********
உங்களுக்கு அருகில் உள்ள கலக்டர் ஆபிஸ் முகவரிக்கு அனுப்பவும்.

(உதாரணம்)

பொது தகவல் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை ரோடு,
தேனி மாவட்டம் 625605.

விளக்கம்:
1) முகவரியில் "பொது தகவல் அலுவலர்" என்ற வார்த்தை முக்கியமாக எழுத வேண்டும். காரணம் 2005 ஆம் வருடத்திலேயே ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஒரு "பொது தகவல் அலுவல் அதிகாரி" ஏற்க்கனவே நியமிக்கப்பட்டு உள்ளார்.

2) எந்த அரசு பொது தகவல் அதிகாரியின் கடமை என்னவெனில், உங்களது "தகவல் கேட்டு விண்ணப்பித்த மனுவை" சம்பத்த பட்ட அரசு அலுவலகத்துக்கு அவர்களே அனுப்பி வைக்க வேண்டும் என்று தகவல் அறியும் சட்டம் 2005 கூறுகிறது.

3) எனவே நீங்கள் கோரிய தகவல் எந்த மாவட்டமாக இருந்தாலும் முதல் 15 நாட்களுக்குள் சென்றுவிடும். பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரி பதில் அளிக்க 15 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் ஆக மொத்தம் 30 நாட்களுக்குள் உங்களுக்கு பதில் வந்தடையும்.
குறிப்பு :- மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அந்தந்த தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம். சகோதரர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.

வளைகுடா நாடுகளுக்கு செல்வோர்களுக்காண கசகசா பற்றிய விழிப்புணர்வு ஆய்வு ...


மட்டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட சேர்க்கப்படும் கசகசா கொண்டு சென்றதற்காக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு 10 முதல் 20 வருடங்கள் வரை அங்கே சிறைத் தண்டனை என்பது தெரியுமா உங்களுக்கு? 
இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து ஒட்டகம் மேய்க்கும் வேலைக்காக வளைகுடா நாட்டுக்குச் சென்றார் ஓர் இந்திய இளைஞர். தனது சம்பளத்தை மிச்சப்படுத்தி வறுமையில் வாடும் தன் குடும்பத்துக்காக அனுப்பும் நோக்கில், தானே சமையல் செய்து சாப்பிடும் நோக்கில் மளிகை சாமான்களைக் கொண்டுபோனார்.

அவற்றில் அசைவ உணவுகளைத் தயார் செய்யப் பயன்படும் கசகசாவும் இருக்க, அவரை அந்த நாட்டு போலீஸ் உடனே சிறையில் அடைத்துவிட்டது. அவருக்கு என்ன ஏதென்று எதுவும் புரியவில்லை. 

இந்திய தூதரக அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லையாம். இந்தக் கொடுமையை உங்களால் தடுக்க முடியாவிட்டாலும், இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள். 
இனி ஓர் இந்தியர்கூட அந்நிய மண்ணில் அறியாமை காரணமாக சிறைப்படக் கூடாது!' - இப்படி ஒரு மெயில் கடந்த வாரத்தில் வலைத்தளத்தில் வளைய வந்துகொண்டு இருந்தது. 

இந்தச் செய்தியை அதிர்ந்து விசாரிக்கக் கிளம்பினால் அடுக்கடுக்காக அதிர்ச்சிகள்! 

சென்னை செய்த எச்சரிக்கை! 

முதலில் சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். ''வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை! 

இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது. 

கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக 'கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை' என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. 

கசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார். 

அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர். 

கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன. 
இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது! 

இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார். 

இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார். 
கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது. 

இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள். நாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம்.

கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக் கெட்டுகளில் அடைக்கப்பட்ட பான் பராக், வாசனைப் பாக்கும் கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான். நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக்கிறார்கள்!'' என்றார்கள்.

நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக்கிறார்கள்!'' என்றார்கள்.

கசகசா விவகாரத்தால், இதுவரை சுமார் 50 இந்தியர்கள் வளைகுடா நாடுகளின் சிறைகளில் வாடி வருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. 

அறியாமையைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத இவர்களை மீட்க, இதுவரை அங்கு உள்ள இந்திய துணை தூதரகம் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் கொடுமை. 

மூன்று வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கான இந்திய தூதராக இருந்த கே.சி.சிங் என்பவர் மட்டும்தான், வளைகுடா நாடுகளை சற்று காரமாக எச்சரித்தார். 

'கீட்டமைன்' கெட்ட நேரம்!
ஒருவழியாக கசகசாவைப்பற்றிய விழிப்பு உணர்வு வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் மத்தியில் போனாலும், அவர்களை இன்னொரு பொருளும் அந்நாட்டு சிறை நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கிறது. 


அதுதான் - கீட்டமைன் (ketamine). சிங்கப்பூர், மலேசியா, தைவான், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிக மிக அதிக டிமாண்டில் இருக்கும் போதைப் பொருள் இந்த கீட்டமைன்! மாவு போன்று உப்பு வடிவில் இருக்கும் அது, 

இந்தியாவில்... குறிப்பாக மும்பையில்தான் தயார் செய்யப்படுகிறது. மனித மற்றும் மிருகங்களின் சிகிச்சைக்காகவும், அறுவை சிகிச்சைகளின்போது மயக்க மருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகிறது. அதுவே போதை உலகில் இப்போது 'மோஸ்ட் வான்டட்' அயிட்டமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

நம் நாட்டில் ஒரு கிலோ கீட்டமைன் விலை 35 ஆயிரம் ருபாய். அதுவே, மேற்குறிப்பிட்ட நாடுகளில், கிலோ லட்சங்களில் விலை பேசப்படுகிறது. எல்லா நாடுகளிலும் அதன் குறைந்தபட்ச விலை கிலோவுக்கு 10 லட்ச ரூபாய். 

ஆனால், கசகசாவைப்போல இதிலும் இந்தியர்களுக்கு கெட்ட நேரம்தான். இந்திய அரசைப் பொறுத்தவரை தேவையான அங்கீகாரம் இல்லாமல் கீட்டமைன் வைத்து இருந்தால், ஐந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கும். 

அதுவும் ஜாமீனில் வந்துவிடலாம். காரணம், இன்னும் கீட்டமைன், இந்தியாவில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. ஆனால், உலக நாடுகள் கீட்டமைனைக் கையாளும் விதத்தைப் பார்த்து,
'இந்தியாவிலிருந்துதான் உலகம் முழுக்க அதிகம் பரவுகிறது' என்ற கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பையில் நாளரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக ரெய்டு நடக்கிறது. 


உண்மையில், கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கடத்தும் தளமாக சென்னைதான் செயல்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப் பெரிய அளவில் கீட்டமைன் பதுக்கலைக் கண்டுபிடித்தது சென்னையில் இருக்கும் வருவாய் நுண்ணறிவு இயக்ககம். (Directorate of Revenue Intellegence)அதன் இயக்குநர் ராஜனை சந்தித்தோம். 

''கடந்த மாதம் எங்களுக்கு வந்த ரகசியமான தகவலை அறிந்து, சில குடோன்களை சோதனை செய்யக் கிளம்பியபோது பல ஆச்சர்யங்கள்! 

சென்னையில் ஏழு இடங்களில் அந்த குடோன்கள் வெளிப்படையாகவே செயல்படுகின்றன. அவற்றுக்கு, மும்பையில் இருந்து கீட்டமைன் சப்ளை ஆகிறது. மொத்தம் 500 கிலோ கீட்டமைனை நாங்கள் கைப்பற்றினோம். இதன் மதிப்பு, 50 கோடி. 

இதன் ஆணி வேரைத் தேடிப் போனபோது, அது மும்பையில் ஆழமாகப் பதிய... அங்கு இருக்கும் போலீஸ் மூலம் கீட்டமைன் தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்து சீல் வைக்கப்பட உதவினோம். உலகம் முழுவதும் இதன் தேவையை மும்பைக்குத் தெரிவிக்கிறார்கள். 

அதைத் தயாரிக்கும் பக்குவம் தெரிந்த நபர்கள் மும்பையில் தான் குறைந்த செலவில்தயாரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கொண்டு போகும் நபர்கள், சாமானிய நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தான். கடத்தல்காரர்கள்

இதுபோன்ற இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் சமயம் விமான நிலையத்தில் அணுகுகிறார்கள். அவர்களிடம் 'இந்த சாப்பாட்டு கேரியரை என் மச்சானிடம் கொடுத்துவிடுங்கள்' என்றோ, 'இந்த ஒரே ஒரு பாக்கெட் உப்பை மட்டும் கொடுத்துவிடுங்கள்' என்றோ சென்டிமென்ட்டாகப் பேசி ஒப்புவித்துவிடுவார்கள். 

கேரியருக்குள் நேர்த்தியாக ஒரு கிலோ கீட்டமைனை வைத்துவிடுவார்கள். உப்பு பாக்கெட்டிலும் இதே கதைதான். சென்னையில் இருந்து விவரம் தெரியாமல் இதைக் கொண்டு போகும் பயணிகளில் பலரும் அங்கே மாட்டிய சம்பவங்கள் உண்டு. 

எங்களின் கடுமையான நடவடிக்கைகளால் இப்போது கீட்டமைன் கடத்தல் சென்னையில் குறைந்திருக்கிறது. மலேசியா, சிங்கப்பூரில் இந்தக் கடத்தல் வழக்கில் மாட்டினால்... மரண தண்டனைதான்!'' என்றார் ராஜன். 

ஸ்டார் பார், குளிர்பான கிக்! இப்போதெல்லாம் சென்னையில் உள்ள பார்களில் பிராந்தி, விஸ்கியைவிட கீட்டமைன் கலந்த குளிர்பானங்களுக்கு ஏக கிராக்கி என்றொரு பகீர் தகவலும் உலவுகிறது. 

வெளி இடங்களிலும் சாதாரணப் பெட்டிக் கடைகளில் ஒரு பாட்டில் குளிர்பானத்தை வாங்கும் இளசுகள் ஓசைப்படாமல் பாக்கெட்டில் மடித்துவைத்து இருக்கும் கீட்டமைனைக் கலந்து குடிக்கும் கலாசாரம் துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஊருக்குள் நடமாடும் கீட்டமைனை பிடிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையாம்.

கசகசா ஏன் கதி கலக்குது?
உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது. 


இந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. 

ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது... அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது, அந்த விதைப் பையைக் கீறி... அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்... அதுதான் ஓபியம். 

'பாப்பி' செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான். மற்ற வகையின் 'பாப்பி' மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.


நன்றி -ஜூனியர் விகடன் 



ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்தி...


 அமீரகத்தில் இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர் லண்டன் செல்வதற்காக துபாய் வழியாக வந்துள்ளார். அவர் தான் கொண்டுவந்த லக்கேஜில் நம்ம ஊர்களில் விருந்து சமையளுக்காக பயன்படுத்தப்படும் கஸகஸா இருந்துள்ளது.கஸகஸா (paapy seeds) போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும் கொடுமையான பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டுபல அரபு நாடுகளில் சமீப காலமாக தடைசெய்துஇதை கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை நிர்ணயித்துள்ளார்கள். அந்த அப்பாவி மனுசனுக்கு தெரியாது போல இங்கு அனேக அரபு நாடுகளில் கஸகஸா தடை செய்யப்பட்ட பொருள் என்று.


துபாய் போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிறையில் உள்ளார். அவரை வெளியில் கொண்டுவர அவரின் நண்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள். கைதானவர் மிக கடினமான பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க இங்குள்ள வக்கீல்களுக்கு ஆகும் செலவு  இந்திய ரூபாய் 12 லட்சம் மேல் செலவு ஆகுமாம்.

என்னா கொடுமை பார்த்தீங்களா சிறிய கவனகுறைவால் வந்த வினை.
கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பான் பராக், வாசனைப் பாக்கும் கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான். 

தொகுப்பு : மு.அஜ்மல் கான். 


சென்னையில் விபச்சாரம் பெருகும் ஆபத்தா!! -ஒரு சமுதாய பார்வை...


                                                                 
 girl.jpg
சமீபத்தில் எனது கல்லூரி நண்பனைக் காண பூந்தமல்லி  சென்றிருந்தேன். அவன் ஸ்ரீபெரம்பதூரில் உள்ள ஒரு கொரியன் கம்பெனியில் வேலையில் இருந்தான்.   பார்த்து பேசிக்கொண்டு இருந்தபோதுதான் ஒரு அதிர்ச்சியான செய்தியை சொன்னான்.

அது..... இந்தப் பகுதிகளில் தங்கு தடையின்றி நடைபெற்றுவரும் 'விபச்சாரம்'.

இந்திய தொழிற் நகரங்களில் சென்னை முக்கியமான  நகரமாக மாறிவருகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது சின்னதும் பெரிதுமாய் நிறைய வெளிநாட்டு தொழிற் நிறுவனங்கள் சென்னையில் கால் பதித்துள்ளன.  இதனால் சென்னையை சுற்றி தொழிற்சாலைகள் அணிவகுத்து நிற்கின்றன. அந்த வகையில்.   ஹூண்டாய், ஃபோர்ட்,  நிசான் போன்ற உலக புகழ்பெற்ற கார் கம்பெனிகள் இங்கு அமைந்திருப்பதால்  சென்னையை அடுத்த  ஸ்ரீபெரம்புதூர் இந்தியாவின் 'டெட்ராய்டாக' மாறிவருகிறது.

இதனால் உலகின் பல பாகங்களிலிருந்தும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சென்னைக்கு வந்தவன்னம் உள்ளனர்.  பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, வேலைவாய்ப்பு  என்று  ஒரு பக்கம் மகிழ்ச்சியாக  இருந்தாலும். நாம் அதிர்ச்சி அடையவும் செய்திகள் இருக்கின்றன.

கொரியன்கள் ஆதிக்கம்....

கார் உதிரி பாகங்கள் தாயரிப்பில் அதிக அளவில் கொரியன் கம்பெனிகள் ஈடுபட்டுவருகின்றன. சென்னை சுற்றுப் பகுதிகளில் ஹூண்டாய், சாம்சங், எல்ஜி., உட்பட 160க்கும் மேற்பட்ட கொரிய நிறுவனங்கள் ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு துறையில் ஈடுபட்டுவருகின்றன.  மாதத்திற்கு சராசரியா 100 கொரியன்கள் சென்னையில் கால் பதிக்கின்றனர்.  ஸ்ரீபெரம்புதூர், ஒரகடம் போன்ற பகுதிகளில் நிறைய கொரிய குடியிருப்புகள் முளைத்துள்ளன.  கொரியன் என்றில்லை உலகின் பல பாகங்களிருந்து  தொழிலாளர்கள் சென்னைக்கு வந்தவன்னம் உள்ளனர்.

இவர்கள் வீட்டை விட்டு பல மாதங்கள் தனியாக இருப்பதால், இவர்களுக்கு பெண் துணை தேவைப்படுகிறது. அதனை இங்கு உள்ள ஏஜெண்டுகள் பயன்படுத்தி பெண்களை சப்ளை செய்து காசு பார்க்கின்றனர். கொரியன்களுக்கு இயல்பாகவே இரண்டு நாளுக்கு ஒரு முறை பெண் துணை தேவைப்படுமாம்   (நண்பன் சொன்னது) . இவர்களது தேவை நமது கலாச்சாரத்தை பதம் பார்க்கிறது. இதனால் தமிழ் நாட்டின் மானம் விமானம் ஏறுகிறது.

நண்பன் சொன்ன செய்தி!...

   நண்பனது அலுவலகத்தில் படுக்கை அறைகளும் இருந்தது.  கார் கம்பெனிகளுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அது.  இங்கு இருக்கும் படுக்கை அறைகளைக் காட்டி,  உயர் அதிகாரிகள் தங்கி ஓய்வு எடுக்கும் அறை என்றான். ஓய்வு என்றால் தனியாக அல்ல இளம்பெண்களோடு!?.

இத்தகைய வெளிநாட்டு பணியாளர்களுக்கு பெண்களை சப்ளை செய்யவே தனியாக இந்தப் பகுதிகளில் ஏஜெண்டுகள் இருக்கின்றார்களாம். வெளி நாட்டினர் எந்த வகை பெண்களை விரும்புகின்றனறோ அந்த வகை பெண்களை அவர்கள் சப்ளை செய்கின்றனர்.  கல்லூரிப் பெண்கள், வழக்கமான பாலியல் தொழிலாளர்கள் , குடும்பம் பெண்கள் (?) துணை நடிகைகள் என்று பல வகைகளிலும் சப்ளை நடக்கிறதாம்.
   
   
வெளிநாட்டினர் தங்கி இருக்கும் வீடுகளுக்கோ அல்லது பங்களாவிற்கோ சென்று இந்தகைய பெண்கள் சேவை ஆற்றுகின்றனர்.  அதனால் இவர்களை போலீஸ் பிடிப்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. அதுவும்போக வெளி நாட்டினர் மீது நமது காவல்துறை அவ்வளவு சுலபமாக நடவடிக்கை எடுத்துவிடமுடியாது.

இதுபோக  கொரியன் ஒருவரே  இங்கு பங்களாவை வாடகை எடுத்து,  கொரிய பெண்களை வைத்து தொழிலில் ஈடுபட்டு வருகிறாராம்.  இங்கு வரும் கொரியன் மற்றும் ஜப்பானியர்களுக்கு நம்மூர் பெண்களை அவ்வளவாக பிடிப்பதில்லையாம். அதனால் மணிப்பூர், மேகாலயா நேபாளம் போன்ற இடங்களிலிருந்து பெண்களை தருவித்து தருகிறார்களாம்" என்றான்.  எனக்குத் தலை சுற்றியது.

இதுபோக வித்தியாச அனுபவத்திற்கு ஆசைப்பட்டு நிறைய சென்னை வாழ் இளம்வட்டங்கள் ஸ்ரீபெரம்புதூருக்கு படையெடுக்கின்றனர். இதனால் வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் சென்னையில் விபச்சாரம் பெருகும் ஆபத்து ஏற்படும் நிலைமையில் உள்ளது.

நாணும் கொரியனும் ....

    நான் கடந்த மூண்டறை  ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள சாம்சுங் இன்ஜினியரிங்  கம்பெனியில் (கொரியன்)வேலை பார்த்து  வருகிறேன்.அவர்கள் பழக்கவழக்கங்கள் என் நண்பன் கூறியது போலவே தன இருந்தது.ஒவ்வொரு வாரமும் அவர்கள் தப்பு செய்வதற்காக அருகே  உள்ள பக்ரைன் நாட்டிற்கு சென்று வருவார்கள்.

காவல்துறை நடவடிக்கை தாமதமா? 

இரண்டு மூன்று மாதத்திற்கு முன் இந்த பகுதிகளில் பெரிய அளவில் விபச்சார வேட்டையை நடத்தியது புறநகர் காவல்துறை. அதில் ஒரு கொரியன் ஒருவன் சிக்கினான்.  இன்னும் விபச்சார வேட்டையை தீவிரப் படுத்தினால் இந்த பகுதியில் விபச்சாரத்ததை அடியோடு ஒழித்துவிடலாம்.

அதுவும் இல்லாமல்  ஒன்றும் அறியாத அப்பாவி பெண்களையும் இந்த கும்பல்  விபச்சாரத்தில் ஈடுபடுத்திவருகிறது.  வேலை வாங்கித் தருகிறோம் என்று கூறி, ஸ்ரீபெரம்பூதூரை சுற்றி உள்ள இளம் கிராமப்புற  பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் சுற்றி வருகிறது. இதை தடுக்க இப்போதே தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய நகரங்களோடு சென்னையை ஒப்பிடும்போது சென்னையில் மட்டும்தான் விபச்சாரத்திற்கு என்று தனியாக பகுதி இல்லை. மும்பையில் காமந்திபுரா, மீரா ரோடு , நல்பஜார்  கல்கத்தாவில் சோனாகஞ், தில்லியில் சில பகுதிகள் என்று விபச்சாரதிற்குகேன்றே சில இடங்கள் வரையிறுக்கப்பட்டு அங்கு தொழில்கள் நடைபெற்று வருகிறது.  சென்னையில் கோடம்பாக்கத்தை அப்படிபட்ட இடமாக மாற்ற 80ளில் சிலர் முயற்சி செய்தனர். ஆனால் நமது காவல் துறையினர் திறமையாக செயல்பட்டு அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டனர்.  அத்தகைய ஆற்றல் பெற்றது தமிழ்நாடு காவல் துறை.


இங்கேயும் அப்படிப்பட்ட ஒரு  நடவடிக்கையை எடுத்து, சென்னையை சுற்றி அப்படி ஒரு அவலம் ஏற்படாவன்னம்  காக்கவேண்டியது காவல்துறையினரின் கடமை. செய்வார்களா......?

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.