Tuesday, 27 March 2012

தமிழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு விழிப்புணர்வு- ஒரு ஆய்வு


நான் தினமலரில் இந்த கட்டுரையை படித்துவிட்டு அதிர்ச்சி அடைந்தேன்.முதலில் ஆய்வு என்ன தான் கூருகிறது  என்று பார்போம் .


திறமையான இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து, 16 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, கடைசி இடம் கிடைத்துள்ளது. டில்லி, பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், திறமை மற்றும் ஆங்கில பேச்சுத்திறன் உள்ளவர்களாக இருப்பதால், இவர்களுக்கே அதிகளவில் உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்றும், ஆய்வில் தெரிய வந்துள்ளது.


22 மாநிலங்களில் ஆய்வு: தனியார் வேலை வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தும், "ஆஸ்பையரிங் மைன்ட்ஸ்' என்ற நிறுவனம், "தேசிய அளவிலான வேலை வாய்ப்பு அறிக்கை - 2011'யை, சமீபத்தில் வெளியிட்டது. வட மண்டலத்தில், டில்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்கள்; கிழக்கு மண்டலத்தில் அசாம், சத்திஸ்கர், மேகாலயா, ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்கம்; மேற்கு மண்டலத்தில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவா. தென் மண்டலத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் என, மொத்தம், 22 மாநிலங்கள், 250 பொறியியல் கல்லூரிகள், 2011ல் படிப்பை முடித்த, 55 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் ஆகியோரைக் கொண்டு, மிகப்பெரிய ஆய்வை இந்நிறுவனம் நடத்தியது.

17 சதவீத பேருக்கே வேலை: நாடு முழுவதும் உள்ள, 3,000 பொறியியல் கல்லூரிகள், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. ஆனால், இவர்கள் அனைவரிடமும், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் கல்வித்தரமோ, திறமையோ இல்லை என்பது தான் வேதனை! இவர்களில், வெறும், 17.45 சதவீதம் பேருக்கு மட்டுமே, ஐ.டி., தொழில் துறையில், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வகையான பட்டதாரிகளும், 70 சதவீதம் பேர், கேம்பஸ் இன்டர்வியூ மூலமே தேர்வு செய்யப் பட்டு விடுகின்றனர்.

சாதிக்கும் பீகார்: ஐ.டி., துறை சார்ந்த வேலை வாய்ப்புகளில், முதல் இடத்தை டில்லி பிடித்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, ஒட்டுமொத்த வளர்ச்சி என, எல்லாவற்றிலும் மிகவும் பின் தங்கிய மாநிலமாக பேசப்படும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலம், இரண்டாம் இடம் வகிக்கின்றன.

கடைசியில் தமிழகம்: தமிழகத்தை மாற்றி, மாற்றி ஆண்டு வரும் தி.மு.க.,வும் - அ.தி.மு.க.,வும், "எல்லா வகையிலும், தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றிக் காட்டுவதே நோக்கம்' என, சபதம் போடுகின்றனரே தவிர, எதையும் சாதித்துக் காட்டவில்லை என்பதை, ஐ.டி., வேலை வாய்ப்புகளில், தமிழகத்திற்கு கடைசி இடம் உள்ளது மூலம் தெரிந்து கொள்ளலாம். தெற்கு பிராந்தியத்தில், கர்நாடகமும், கேரளாவும் தான், முன்னணி மாநிலங்களாக விளங்குகின்றன. பி.பி.ஓ., வேலை வாய்ப்புகளை எடுத்துக் கொண்டாலும், தமிழகத்திற்குத் தான் கடைசி இடம்! தமிழக பொறியியல் பட்டதாரிகளில், வெறும், 10 சதவீதம் பேருக்கு மட்டுமே, வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.

கல்லூரிகளின் தரம்: வேலை வாய்ப்பில் முன்னணி இடங்களை வகிக்கும் மாநிலங்களில், பீகார், உத்தரகாண்ட், சத்திஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில், குறைந்த எண்ணிக்கையில் கல்லூரிகள் இருக்கின்றன. எனினும், இவை தரமான கல்லூரிகளாக விளங்குகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள், ஆங்கில பேச்சாற்றலுடன், பிரச்னைக்கு தீர்வு காணும் ஆற்றல் உடையவர்களாகவும், படைப்புத்திறன் மிக்கவர்களாகவும் உள்ளனர். இதன் காரணமாகவே, இம்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என, ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், தமிழகத்தில் புற்றீசல் போல், 600 பொறியியல் கல்லூரிகள் முளைத்து விட்டன. கல்விக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம், பொறியியல் கல்லூரிகளை துவக்கினர். ஏ.ஐ.சி.டி.இ.,யில் இருந்து வருபவர்களையும், தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை, "எப்படி' கவனிக்க வேண்டும் என்ற வித்தைகளை தெரிந்து, அங்கீகாரம் பெற்று கல்லூரிகளை துவக்கி, கல்லா கட்டி வருகின்றனர். ஆனால், தரமான கல்வியைப் பற்றி, ஒருவரும் சிந்திப்பதில்லை.
நன்றி : தினமலர் நாளிதழ்.

உண்மை நிலையை உள்ளது உள்ள படி சொன்ன தினமலருக்கு நன்றி....
இப்போது நாம் விசயத்துக்கு வருவோமே.... 

தமிழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு விழிப்புணர்வு- ஒரு ஆய்வு
இன்று இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வி கற்க சிறந்த மாநிலமாக விளங்குகிறது.அதனால்தான் 3 லட்சத்திறகுமா அதிகமான வெளிமாநில மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பயின்று வருகிறார்கள் என்று நினைக்ககூடாது.

 தமிழகத்தில்  கல்வி ஒரு வியாபாரமாக அல்லவா நடந்து கொண்டு இருக்கிறது , குறிப்பாக இன்ஜினியரிங் கல்லூரிகள் .. இந்த 600 கல்லூரிகள் 1000 மாக ஆகி இன்ஜினியரிங் என்ற அருமையான துறைக்கு மொத்தமாக மதிப்பு இல்லாமல் ஆக்கிவிடுவார்கள் அரசியல்வாதிகள் மற்றும் பண முதலாளிகள் .

பொறியியல் பட்டப்படிப்பு மட்டுமே ஒரு மனிதனை பொறியியல் வல்லுநர் ஆக மாற்றிவிடாது. இன்றைய சூழ்நிலையில் எந்த தொழிலும் குறிப்பிட்ட தனித்திறன் தேவைபடுகின்றது. மொழி என்பது இன்னுமொரு பாலம். பீகார் மாநிலம் என்று தவறான கண்ணோட்டம் நமக்கு இருக்கின்றது. பாட்னா கல்வியில் பல இடங்களில் சிறந்து விளங்குகின்றது. I .I .T . மாணவர்கள் பலர் உள்ளனர் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.நாம் ஆங்கிலத்தை தமிழ் வழியாகவே கற்கின்றோம். english is a polite language. இன்றும் நம்மில் பலருக்கு ஆங்கிலத்தில் நேரம் (மணி) என்ன என்று கேட்க தெரியாது. அதிகபட்சம் what is the time now? என்று கேட்டு விடுவோம். ஆனால் இப்படி கேட்பது தவறு என்று அவர்களுக்கு தெரியாது. வெளிநாட்டினரிடம் இப்படி நாம் கேட்டால் நம்மை நாகரிகம் அற்றவர் என்று முதலிலேயே நினைத்துவிட வாய்ப்புக்கள் அதிகம். முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகிவிடும். சரி ஆங்கிலத்தில் எப்படி முறையாக கேட்பது. Excuse me, What is the time Please? என்று எத்தனை நபர்களுக்கு தெரியும்? Excuse me, Please & Thank you என்று இடத்திற்கு ஏற்றவாறு பேசினாலே உங்களுக்கு முன்னேறுவதற்கு வழி பிறக்கும். ஆங்கிலம் ஒரு மருந்தாகவே பார்க்கப்படுகின்றது. 
இது வேதனையான விஷயம். 
 இந்த நிலை மிகவும் மோசமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளின் விபரங்களை மற்றும் அதன் விபரங்களையும் ://www.studyguideindia.com/Colleges/Engineering/ ல் காணலாம்.


எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சுய நிதி கல்லூரிகள் சகட்டு மேனிக்கு திறந்து விடப்பட்டது. கல்வியின் தரம் பற்றி கவலைப்படவில்லை. தமிழ் நாட்டை பொறுத்த வரை ஒரு பத்து கல்லூரிகள் தான் தரம் வாய்ந்தவை. சென்னை அண்ணா மெயின் காம்பஸ், திருச்சி என்.ஐ.டி, கோவை பி.எஸ்.ஜி, கோவை சி.ஐ.டி இப்படி வைத்து கொள்ளலாம். சமீப காலங்களில் ஐ.ஐ.டி, பிட்ஸ் பிலானி போன்ற கல்லூரிகளில் நம் மாணவர்கள் சேருவது மிக குறைவாகி விட்டது. இப்படி ஒரு ரிபோர்ட் வந்தது ஆச்சர்யம் இல்லை. ஜெயலலிதா, கருணா நிதியும் போட்டி போட்டு கொண்டு, தமிழ் நாட்டை முதல் மாநிலம் ஆக்குவேன் என்று சொல்வது எல்லாம் வெறும் குப்பை வாதம். உண்மையில் கடைசி நிலைக்குதான் கொண்டு வந்துள்ளார்கள். 

இன்று தமிழகத்தில் நடப்பது கல்வி சேவை அல்ல.. வெறும் கீழ்த்தரமான வியாபாரம் என்பது உலகறிந்த விஷயம்.. இதில் வாங்கிய காசுக்கு தரமான கல்வி அளிக்கவேண்டும் என்று நினைப்பது மிக சில விரல் விட்டு எண்ணக்கூடிய கல்லூரிகளை.. மீதமுள்ள கல்லூரிகள் எல்லாம். முன்னால் அரசியல் அடியாட்கள், இன்னல் ஜாதீய மாற்றும் மத வெறி கொண்ட தலைவர்களால் நடத்தபடுகிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது..திலுமே தகுதி இல்லாதவர்களை விட்டால் இப்படி தான் நடக்கும். அரசியலில் தரம் இல்லாதவர்களை விட்டோம். அதன் விளைவு, நம் அரசியல் சாக்கடை ஆகி விட்டது. சாராயம் காசும் வியாபாரிகளை கல்லுரி நடத்த விட்டோம். அதன் விளைவையும் பார்த்து விட்டோம். தகுதி இல்லாதவன் எந்த துறையில் புகுந்தாலும், அதை நாசம் செய்வான்.  இதுதான் இன்றைய பள்ளி கல்வி நிலையும்.. பின்னர் தரம் எங்கிருந்து கிடைக்கும்.. ? தரமற்ற நிறுவனர், தரமற்ற ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர்கள் அல்லது முனைவர்கள் .. அதிக பணம் அல்லது சிறப்பு அந்தஸ்து உள்ளதால் சீட்டு வாங்கிய மாணவர்கள்.. இதுதான் இன்றைய தமிழகத்தின் கல்வி நிலை. 
  இப்பொது ஐ.டி கம்பனிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மிக குறைவாகவே தேர்வாகின்றனர். அதற்க்கு காரணம் குறைவான கணித, ஆங்கில அறிவே ஆகும். குக் கிராமங்களில் கூட இங்கு இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன.ஆனால் மிக தரமற்ற கல்வி கொடுக்கபடுகிறது. கடந்த ஆட்சியில் ஏறக்குறைய அணைத்து அமைச்சர்களும் இன்ஜினியரிங் கல்லூரி வைத்து நடத்தினர். இவர்கள் நோக்கம் பணம் பறிப்பது ஒன்றே ஆகும். தவிர தற்போது உள்ள பல பெரிய ஐ.டி கம்பனிகளான இன்போசிஸ்,TCS , விப்ரோ , CTS என பல நிறுவங்கள் இன்ஜினியரிங் மாணவர்களை விட மூன்றாண்டு BSC கணிதம், இயற்பியல், புள்ளியல், கணிபொறி சார்ந்த மாணவர்களை தேர்வு செய்கின்றனர். இந்த மாணவர்கள் அரசாங்க கல்லூரிகளில் படிபவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் தற்போதெல்லாம் வருடத்திற்கு 30000 , 40000 இன்ஜினியரிங் சீட்டுகள் காலியாகவே உள்ளன. அதற்க்கு காரணம் தரமான கல்லூரிகள் இல்லாதது, மற்றும் இந்த 4 வருட இன்ஜினியரிங் படிப்பிக்கு லட்சகணக்கில் செலவழித்து படித்து வீனா போவதைவிட அரசாங்கம் மற்றும் அரசாங்க உதவி பெரும் கல்லூரிகளில் மூன்றாண்டு BSC படித்துவிட்டு முதுகலை, ஆராய்ச்சி என்று செல்வது எவ்வளவோ மேல் என்று கருதுவதுதான். அதுதான் உண்மையும் கூட. 4 இன்ஜினியரிங் படிப்பதற்கு 4 லட்சத்தை வீணாக்குவதை விட அரசாங்கம்/அரசாங்க உதவி பெரும் கல்லூரிகளில் 3 வருட படிப்பை 10000 முதல் 15000 ல் முடித்து விட்டு நல்ல தரமான கல்வியை பெற்று வேலைக்கு செல்வது எவ்வளவோ மேல். வெறும் என்ஜினீயர் என்று பீற்றி கொள்வதற்காகவே பல மாணவர்கள் இதை படிகிறார்கள். வீண் செலவு, வெட்டி பந்தா, இதை இன்ஜினியரிங் கல்லூரிகள் நன்றாகவே பயன்படுதிகொள்கிரார்கள்.

நாட்டில் உள்ள 3000 பொறியியல் கல்லூரிகளில் 600 கல்லூரிகள் மட்டும் தமிழகத்தில் இருப்பது வியாபார நோக்கத்தைதானே காண்பிக்கிறது. ஒரு மாநிலத்திற்கு எதற்கு இத்தனை கல்லூரிகள்? கல்லூரி உரிமையாளரை தவிர அரசுக்கோ,அதற்க்கு அனுமதி வழங்கும் அமைப்புக்கோ கூட தெரியாது.ஏன் ?எதற்கு என்று ஆராய்ந்து கொடுக்க வேண்டாமா அனுமதி? கல்லூரி உரிமையாளர்,அரசுகள், அனுமதி வழங்கும் அமைப்பு இவை சமுதாயம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று நினைத்து லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கி இன்று தமிழகத்தை கேவலமான நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளனர். கல்வி விஷயத்தில் மாநில அரசு எந்த முடிவும் எடுக்க கூடாது மத்திய அரசு மட்டுமே முடிவெடுக்க வேண்டும். மாநில அரசுக்குள்ள உரிமையை தவறாக பயன்படுத்தி கருணாநிதி,ஜெயலலிதா போன்றவர்கள் ஒட்டு வங்கி அரசியலுக்காக வெறும் 35 மதிப்பெண் பெற்றாலும் பொறியியல் கல்லூரியில் அனுமதி கொடுத்து பொறியாளர்களின் தரத்தை தாழ்த்துகிறார்கள் விபரம் தெரியாத மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டு படிக்கமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு 4 ஆண்டுகளில் முடிக்கவேண்டிய படிப்பை 6 , 7 வருடங்களில் முடித்துவிட்டு வெளியே வரும்போது அவனுடைய படிப்புக்கும்,அவனுக்கும் என்ன மதிப்பு இருக்கும் இன்றைய போட்டிமிக்க சூழ்நிலையில். அதே மாணவன் அவனால் முடிந்த துறையில் சேர்ந்தால் அந்த படிப்பை முடித்து ஏதேனும் ஒரு வேலையில் சேரலாம். இதை கருணாநிதி,ஜெயலலிதா போன்றவர்கள் உண்மையான அக்கறையுடன் யோசித்து பார்க்காமல் சுமாராக படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல நம் மாநில பெயரையும் ஏன் கெடுக்கிறார்கள் ? 

இதில் மாணவர்களும்,பெற்றோரும் ஒரு காரணம் தான் தன மகன் 50 % மார்க் எடுத்து பாஸ் ஆகிவிட்டு அவனை பொறியியல் படிப்புக்கு சேர்த்தால் அவன் எப்படி படிப்பான் அவனால் முடியுமா என்று யோசிபதில்லை பக்கத்துக்கு வீடு பைய்யன் படிக்கிறான் அதனால் இவனும் படிக்கணும்...ஏன் இன்ஜினியரிங் படித்தால் தான் ஒருவன் வாழ்கையில் முன்னேற முடியமா வேறு படிப்பு படித்தவர்கள் முன்னேற வில்லையா,,,,,,,மக்கள் அறிவுக்கு இது எப்போது எட்டுகிறதோ அப்போது தான் இந்த அவல நிலை வராது அது வரை தொடரும். 

தீர்வு
தற்போதுள்ள பள்ளி கல்வி தரத்துக்கு, பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியில் மற்றும் கணிதம் படங்களில் 70 % மதிப்பெண்கள் மேல் பெரும் மாணவர்களே பொறியியல் படிப்புக்கு ஏற்றவர்கள். 70 % குறைவாக பெரும் மாணவர்களால் கண்டிப்பாக ஒரு தரமான பொறியாளராக உருவாக முடியாது. இதை தமிழ்நாடு அரசு உணராத வரையில் பொறியியல் கல்வியில் தமிழ்நாட்டில் மாற்றம் வராது. வெறும் ஒட்டு அரசியலுக்குகாக 50 % மதிப்பெண்கள் பெரும் மாணவர்களை பொறியியல் கல்வி பெற அரசு அனுமதிப்பது நமது மனித வளத்தை நாமே அழிபதற்க்கு சமமாகும்.... 

Monday, 26 March 2012

சைபர் க்ரைம் (Cyber Crime) பற்றிய விழிப்புனர்வு பார்வை...





தொழில்நுட்பம் வளரவளர பிரச்னைகளும் கூடவே சேர்ந்து வளருகிறது. முன்பெல்லாம் காவல் நிலையங்​களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இப்போது, சைபர் க்ரைம் பிரிவு களில்தான் கூட்டம் நெட்டித்தள்ளுகிறது. செல்போனில் மிரட்டல், ஆபாச  எஸ்.எம்.எஸ்., நைஜீரியர்களின் மோசடியில் சிக்கி ஏமாறுகிறவர்கள் என்று இங்கே படை யெடுப்பவர்கள் ஏராளம். இதில் சிக்கிக்கொள் பவர்களும் ஏராளம். விடுபட முடியாமல் தவிர்ப்பவர்களும் ஏராளம். !

இந்தியாவில் இணையதளம் தொடர்பான குற்றங்களால் நடப்பாண்டில் 24,630 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது. சைமன்டெக் நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2013 ஆண்டு ஜூலை வரை ஆய்வு நடைபெற்றது. 1000 இந்தியர்கள் உள்ளிட்ட 24 நாடுகளைச் சேர்ந்த 13000 இளைஞர்கள் இதில் பங்கேற்றனர்.மொபைல்போன் மூலமான திருட்டு 58 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இ.மெயில் ஐடி, பாஸ்வேர்ட் போன்றவைகளை ஹேக் செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.நாடும் நகரமும் டிஜிட்டல் வயப்படுவதைத் தொடர்ந்து அனுபவிக்கும் அவஸ்தைகளைப் பற்றித்தான் இந்த சிறப்புக் கட்டுரை


இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.


இணைய குற்றங்கள் (Cyber Crimes):


1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத  மெயில்கள். இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.

2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.

3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.

4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.

6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது.  [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது  வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]

7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.

பாதுகாப்பு வழிகள்:

1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி  போன்றவற்றை பகிர வேண்டாம்.

2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.

3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.

4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.

5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.

6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.

7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.

8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.

9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.

10. குழந்தைகள், பெண்கள்  புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள்.https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும். 

13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.

பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:
undefined

1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு 

2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் 

3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].   

4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள் 

5. கடன் அட்டை எண் திருட்டு
 

6. வலைத்தள ஹேக்கிங்

சைபர் க்ரைம் குற்றங்களுக்காண தண்டனை..


1.ஹேக்கிங் HACKING ]
2.ஆபாசமாக மெஸ்சேஜ் அனுப்புதல். PORM SMS ]
3.கம்ப்யூட்டர் இன்டர்நெட் வழியாக திருடப்பட்டதை வாங்குவது.
4.அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன் , பாஸ்வேர்டுகளை திருடுவது.
5.போலி ID உருவாக்கி தன்னை வேருவர் போல் காட்டிக்கொள்வது.
6.ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது.
7.சைபர் டெரரிசம் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்களில் ஈடுபடுதல்.
8.ஆபாச போட்டோ வெளியிடுதல்.
9.ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல்.
10.குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல்.


சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தால் ஐ.டி சட்டம் 2008 ன் படி மூன்று ஆண்டு முதல் ஆயுள் வரை தண்டனை வழங்கப்படும்.

ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.


இவர்களில் ஆபாச மெசேஜ் அனுப்புவது, ஆபாச போட்டோ போடுவது, ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது, போலி ID உருவாக்கி தன்னை வேருவர் போல் காட்டிக்கொள்வது, ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது, சைபர் டெரரிசம் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்களில் ஈடுபடுதல், ஆபாச போட்டோ வெளியிடுதல், ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டால் அவர்கள் ஜாமீனில் வரமுடியாதபடி கைது செய்யப்படுவார்கள்.








தமிழ்நாட்டில் புகார்  கொடுக்க:

undefined

சென்னை தவிர பிற மாவட்டங்கள்:
 Tmt.Sonal V.Misra, IPS,
SCB, Cyber Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in

சென்னை:
Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in


புகார்களை sms அனுப்ப : 95000 99100.

சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்ய
phone: 044-23452350

Cyber Crime Cell
Chennai
******
Sri Sudhakar
Assistant Comissioner of Police
Cyber Crime Cell
Commissioner office Campus
Egmore, Chennai- 600008

(044) 55498211
cbcyber@tn.nic.in
EMail: cidap@cidap.gov.in
EMail: info@cidap.gov.in

Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512

Chennai for Rest of Tamil Nadu,
Cyber Crime Cell
CB, CID
Off: 044 25393359

Delhi
****
Supdtof Police,
Cyber Crime Investigation Cell Central Bureau of Investigation,
5th Floor, Block No.3, CGO Complex,
Lodhi Road,

New Delhi - 3, Phone: 4362203, 4392424

 கவனிக்க: இந்தியாவில் 10ல் 7 இளைஞர்கள் சைபர் கிரைம் மூலம் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகி தங்களின் வாழ்க்கையை தொலைக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 4.2 கோடி மில்லியன் பேர் சைபர் குற்றங்களினால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை இன்டர்நெட் செக்யூரிட்டி த்ரெட் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிப்பிற்கு ஏற்ப அது தொடர்பான குற்றங்களும் அதிகரிக்கிறது. நாடு முழுவதும் 52 சதவிகிதம் பேர், ஏமாற்றப்படுதல், ஹேக்கிங், திருட்டு, வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட சைபர் குற்றங்களினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.தைரியமா புகார் கொடுங்க இதுபோல் பிரச்சினை வரும்போது, பெண்கள் தவறான முடிவுக்கு போகக்கூடாது. துணிச்சலாக போலீசுக்கு புகார் கொடுக்க வரவேண்டும். இந்த பதிவை எழுதுவதற்கு என்னை தூண்டியதே 3,6,7 ஆகிய குற்றங்கள் தான். அவைகள் என்னை அதிகம் கவலைப்பட வைத்தது. நாளைய தலைமுறையினர் வழிமாறி செல்லக்கூடாது என்பதே எனது ஆசை. 

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

70 வயதாகி விண்ணப்பித்தால் ஹஜ் பயணம் உறுதி – ஹஜ் கமிட்டி!


இஸ்லாம் நிறுவியுள்ள 5 தூண்களில் இறுதியானதும், மிக முக்கியமானதுமான ஹஜ் பயணம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பது அரிதான விசயமாகத் தான் இருக்கிறது.

ஹஜ் செய்வதற்கு பொருளாதார வசதிகள் இருந்தும் சரியான பொருப்பாளர்கள் இல்லாத காரணத்தினாலும் வயதாகியவர்கள் யாரை துணைக்கு அழைத்துச் செல்வது எந்த நோக்கிலுமே பலரது ஹஜ் பயணங்கள் தள்ளிப்போகின்றன அல்லது ரத்தாகி விடுகின்றன.

இந்த நிலையில் ஹஜ் என்பது மகிழ்ச்சிகரமான விசயமாக இருந்தாலும், பயணம் செய்வதை அதுவும் இந்த முதிய வயதில் பயணம் செய்வதை சுமையாகக் கருதிய 70 வயதிற்கும் மேற்ப்பட்ட ஹஜ் பயணிகளுக்கு ஒரு அறிய செய்தியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதை மையமாக வைத்து தமிழக அரசு இன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

70 வயதுக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள், இந்த ஆண்டு முதல் அவருடன் சக பயணி ஒருவரையும் அழைத்துச் செல்லவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றும் , அதன்படி இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, 70 வயது பூர்த்தியாகிய ஒருவர் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் போது, அவரோடு ஒரு சக பயணியுடன் விண்ணப்பித்தால், இந்த ஆண்டு அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் அளிக்கப்படும். ஹஜ் பயணத்துக்காக ஏற்கனவே விண்ணப்பங்களை அளித்துள்ள 70 வயதுக்கும் மேற்பட்ட பயணிகள், அவர் தன்னுடன் பயணியாக யாரை அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளார் என்பதை தெரிவித்தால் மட்டுமே அப்பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் வழங்க இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 70 வயது பூர்த்தியானவர்கள், இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்து தற்போது விண்ணப்பிக்க விரும்பினால் , தங்களது விண்ணப்பத்துடன்,அவர் அழைத்துச் செல்ல விரும்பும் சக பயணியின் விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். உறுதி செய்யப்பட்ட இருக்கைகள், பன்னாட்டு கடவுச்சீட்டு ( International Passport) வைத்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணி மற்றும் மற்றும் அவருக்கு உதவியாகச் செல்லும் பயணி ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும்.

ஒருவேளை ஹஜ் பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்தால், எக்காரணத்தை கொண்டும் சக பயணிகள் மட்டும் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணிகள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இந்த மாதம் 30 ஆம் தேதி கடைசி நாள்.

இதற்கான விண்ணப்பங்கள் www.hajcommittee.com என்ற முகவரியில் கிடைக்கின்றன.இது குறித்த பத்திர்க்கை செய்தி தினமணி

பெண்கள் யாரை துணைக்கு அழைத்துக் செல்லலாம் என்பது குறித்து அறிய இங்கு சொடுக்கவும்

அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கைகள்!...


உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)
  
இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!
சூராவளி என்பது என்ன?
சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.

சூராவளியின் வேகம்
பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.
சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.

சூராவளி  டொர்னடோ எவ்வாறு உருவாகிறது
ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும் போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.

இந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன?
டொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.

இந்த சூராவளி காற்றின் வேகம் என்ன?
வானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.

இந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது?
மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.

சூராவளியின் வகைகள் பார்ப்போம்

SUPERCELL TORNADOES (சூராவளி மேகங்களுடன்)

இந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும்.  ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)

நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூராவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

GUSTNADO (கஸ்டனாடோ சூராவளி)

இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூராவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு  மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.

WATERSPOUT (நீரில் ஏற்படும் சூராவளி)

வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூராவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூராவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூராவளிகளின் வடிவ மேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான்.  இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.

DUST DEVILS

இந்த வகை சூராவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூராவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூராவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.

FIREWHIRLS
நெருப்புச் சுறாவளிகள் அதாவது சூராவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூராவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.
இந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெரும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும்.

அல்லாஹ் அருள்மறையில் விவரிக்கும் சூராவளியின் தாக்கம் பற்றி மீண்டும் ஒருமுறை படித்து நல்லுணர்வு பெற முயலலாமே
 உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும்திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,)பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்றுஅ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளைஉங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266) 

 இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இந்த சூராவளிகளும் ஆதாரமாக திகழ்கிறது! எனவே இந்த உண்மைகளை அறிந்த நீங்கள் எப்போது இஸ்லாத்திற்குள் வருவீர்கள் என நமபுகிறோம்
அல்ஹம்துலில்லாஹ்
நன்றி:http://islamicparadise.wordpress.com