Saturday, 28 April 2012

கடல்கள் பற்றிய ஆய்வு- ஒரு சிறப்பு பார்வை...



தற்போதைய நவீன அறிவியலில் கடலாய்வும் ஒன்று. கடலில் ஒரு இடத்தில் இரு வேறு கடல்கள் சங்கமிக்கின்றன, அவ்வாறு அவைகள் சங்கமித்தாலும் இரண்டு கடல்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் உள்ளது என்றும், மேலும் அவற்றின் வெப்பம், உப்புத்தன்மை, அடர்த்தி ஆகியவற்றிலும் தங்களது தனித்தன்மைகளுடனேயே உள்ளன என்றும், சமீபத்திய தமது ஆய்வில் கடலாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.  

உலகில் ஏறத்தா 146 கோடி கன கிலோ மீட்டர் தண்ணீர் நிறைந்துள்ளது. இதில் கடல்கள் மற்றும் நில உட்கடல்கள் 97.3 சதவீதமாகும். இதன் அளவு 144.5 கோடி கன கிலோ மீட்டர் ஆகும். மீதமுள்ள 2.7 சதவீதம் பனியாறுகள்பனிச்சிகரங்கள்நன்னீர் ஏரிகள்ஆறுகள்நிலத்தடிநீர் போன்றவைகளாகும்.

கடல்நீரில் ஏறத்தா 3.5 சதவீதம் வரை உப்புகள் கரைந்திருக்கின்றன. குளோரின்சோடியம்மெக்னீசியம்கந்தகம்கால்சியம்பொட்டாசியம்,புரோமின்ஸ்டிரான்ஷியம்போரான் போன்றவற்றுடன் மிக நுண்ணிய அளவில் கரிசிலிக்கான்அலுமினியம், புளூரின்அயோடின் ஆகிய மூல உப்புகளும் காணப்படுகின்றன.

 கடலுக்குள் எப்போதும் நீர் அலை மோதிக்கொண்டிருக்கிறது. இதற்கு சூரிய வெப்பமே 
காரணம். நிலநடுகோட்டுப் பகுதிகளில் சூரியனால் சூடேற்றப்பட்ட தண்ணீர் விரிவடைந்து 
ஒருசில அடி உயருகிறது. இவ்வாறு உயர்ந்த நீர் துருவப் பகுதிகளை நோக்கி வழிகிறது. பூமி 
கிழக்கு நோக்கி சுழன்று கொண்டிருப்பதால் கடல்நீர் மேற்கு பக்கமாக அடித்துச் 
சுருட்டப்படுகிறது.

 உலகிலேயே பெரிய கடல் பசிபிக் பெருங்கடலாகும். பூமியின் பரப்பளவில் 35.25 சதவிகிதம் கொண்டது. உலகிலேயே ஆழம் கூடிய மிண்டானா பகுதி திலுள்ளது. இதன் ஆழம் 11,516 மீட்டர். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தீவுகளும் இக்கடலில் தான் உள்ளன.
 ஆர்டிக் பெருங்கடல் அலைகளே இல்லாத பெருங்கடலாகும். இதில் கப்பற்பயணம் செய்ய முடியாது. குளிர்காலத்தில் உறைபனியாகவும்,இதரப்பருவங்களில் பனிக்கட்டித் துண்டங்கள் மிதக்கும் பகுதியாகவும் இது விளங்குகிறது. 130 இலட்சம் ச.கி.மீ.க்கும் அதிகமான இடத்தை நிரப்பிக் கொண்டிருப்பதாலேயே பெருங்கடல் என்ற சிறப்புடன் இது அழைக்கப்படுகிறது.

உதாரணமாக, 

மத்திய தரைக்கடலை அட்லாண்டிக் கடலுடன் ஒப்பிடுவோமானால், மத்தியதரைக்கடல் வெதுவெதுப்பான, உப்புத்தன்மையான மற்றும் குறைந்த அடர்த்தியும் கொண்டது. ஜிப்ரால்டர் ஜலசந்தியில் மத்திய தரைக்கடல் அட்லாண்டிக் கடலுடன் சங்கமிக்கும் போது, 1000 அடி ஆழத்தில் பல நூறு மைல்கள் தூரம் அட்லாண்டிக் கடலுக்குள் பயணம் செய்கின்றது. அவ்வாறு பயணம் செய்யும் மத்திய தரைக்கடல், வெப்பம், உப்புத்தன்மை மற்றும் அடர்த்தி ஆகியவற்றில் எந்த மாற்றமும் அடையாமலேயே தன் பயணத்தை அட்லாண்டிக் கடலினுள் தொடர்கின்றது. ஆழத்திலும் மத்திய தரைக்கடல் தனது தன்மையில் மாறாத நிலையையே பெற்றிருக்கிறது.
இதனிடையே இரு கடல்களிலும் உண்டாகும் பேரலைகள், சக்திவாய்ந்த நீரோட்டங்கள் மற்றும் சிற்றலைகள் போன்றவற்றின் தாக்கத்தால் எந்த பாதிப்பையும் இரு கடல்களிலும் உண்டாக்குவதில்லை. 
இதையே திருமறையில் இறைவன், கடல்களுக்கிடையே அவை சந்திக்கும் இடத்தில் ஒரு தடுப்புச் சுவர் உண்டு, ஆனாலும் அவை ஒன்றையொன்று மீற மாட்டா! என்று கூறுகின்றான். அதாவது,
இரு கடல்களை - அவை இரண்டும் ஒன்றோடொன்று சந்திக்க அவனே விட்டு விட்டான். (ஆயினும்) அவை இரண்டுக்கிடையில் ஒரு தடுப்புண்டு: (அத் தடுப்பானதை) அவ்விரண்டும் மீறி விடாது. (அல் குர்ஆன்: 55:19-20).
ஆனால், மேலே நாம் பார்த்த இறைவசனத்தில் இறைவன் கடலும் கடலும் சந்திக்கும் இடத்தில் தடுப்புச் சுவர் உண்டு எனக் கூறிய இறைவன், நல்ல தண்ணீர் மற்றும் கடல் நீரைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவை இரண்டுக்கும் இடையே உள்ள தடையில் ஒரு ஷமீற முடியாத தடுப்பைஅமைத்துள்ளோம் எனக் குறிப்பிடுகின்றான். இதையே இறைவன் தனது திருமறைக் குர்ஆனில்,
இன்னும் அவன் எத்தகையவனெ;னறால், இரு கடல்களையும் அவன் ஒன்று சேர்த்திருக்கின்றான்: (அதில் ஒன்றான) இது மிக்க மதுரமானது, தாகம் தீர்க்கக் கூடியது: (அதில் மற்றொன்றான) இது உப்புக்கரிப்பானது, கசப்பானது: இவ்விரண்டிற்குமிடையில் (அவை ஒன்றொடொன்று கலந்திடாமல்) திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் அவன் ஆக்கியிருக்கின்றான். (அல் குர்ஆன்.25:53).

திருமறையானது, கடலும் கடலும் சங்கமிக்கும் இடத்தில் அவையிரண்டுக்கும் இடையே ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளோம் எனக் கூறும் அதே வேளையில், கடலும் நதியும் (நல்ல தண்ணீர்) கலக்கும் போது அவையிரண்டுக்கும் இடையே திரையையும் அதையடுத்து ஒரு மீற முடியாத தடையையும் ஏறபடுத்தியுள்ளோம் என ஏன் கூற வேண்டும்? என ஒருவர் கேள்வி எழுப்ப முடியும். இதற்கான பதிலை நவீன அறிவியலாளர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.

கடலும் நதியும் சங்கமிக்கும் கழிமுகங்களில் தங்களது ஆய்வுகளை மேற்கொண்ட அறிவியலாளர்கள், கடலும் கடலும் சங்கமிப்பதற்கும், கடலும் நதியும் சங்கமிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியலானார்கள். அதாவது இங்கே தண்ணீரின் மாறுபட்ட அடர்த்தியின் விகிதம் ஒவ்வொரு நிலையிலும் மாறுபட்டு, ஒரு விகிதத்தல் இருந்து இன்னொரு விகிதத்திற்கு மாறக்கூடிய நிலையில் அவ்விரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட அதனதன் விகிதத்தைப் பிரித்துக் காட்டக் கூடிய பகுதி தான், நல்ல தண்ணீரையும், கடல் நீரையும் பிரித்துக் காட்டும் திரையாகச் செயல்படுவதாகக் கண்டறிந்துள்ளார்கள்.ழூ இவ்விரண்டு கடல் நீர் மற்றும் நல்ல தண்ணீர் ஆகியவற்றின் உப்புத் தன்மையை விட, இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் நீரின் உப்புத்தன்மையின் அளவில் மாறுபாடும் காணப்படுவதால்,ழூழூ திருமறையில் இறைவன் கூறியுள்ளபடி, கடல் நீருக்கும் நல்ல தண்ணீருக்குமிடையே திரையையும், மீற முடியாத தடையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம், என்ற திருமறைக் குர்ஆனின் வசனம் அறிவியலாளர்களால் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. 

மேற்கண்ட தகவல்கள் யாவும் இன்றைய நவீன அறிவியல் கருவிகளின் துணை கொண்டு, நீரின் வெப்பம், உப்புத் தன்மை, அடர்த்தி, மற்றும் ஆக்ஸிஜன் கரையும் அளவு ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவற்றின் தகவல்களின் துணை கொண்டு தான் அறிவியல் அறிஞர்கள் இந்த பேருண்மைகளைக் கண்டறிந்துள்ளார்கள். மேலும் இரண்டு கடல்களையும் பிரிக்கும் தடுப்பை மனிதக் கண்கள் கொண்டு காண முடியாது, கடலின் மேற்பரப்பு யாவும் ஒரே நீர்ப்பரப்பாகத் தான் நமக்குத் தோற்றமளிக்கும். இதே போல கழிமுகத் துறைகளில் நின்று கவனித்தால் கூட நல்ல தண்ணீர் ஒரு பிரிவாகவோ, கடல் நீர் ஒரு பிரிவாகவோ, இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதி (Pலஉழெஉடiநெ ணழநெ) ஒரு பிரிவாகவோ நமக்குத் தோற்றமளிக்காமல், ஒரே நீர்ப்பரப்பாகத் தான் நமக்குத் தோற்றமளிக்கும்.



அல்குர்ஆனின் கூற்றுப்படி நவீன விஞ்ஞானமும் இரு கடல்கள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையும்தடுப்பும் இருப்பதாகக் கூறுகின்றது. இவ்விரு கடல் நீரினதும் வெப்பநிலைஉப்பின் தன்மை,அடர்த்தி ஆகியன வேறுபடுகின்றன.

உதாரணமாக,  Mediterranean seaAtlantic ocean ஆகியவற்றின் நீரில் Mediterranean sea யினது நீரின் வெப்பம்உப்பின் தன்மைஅடர்த்தி Atlantic ocean னினது நீருடன் ஒப்பிடும்போது குறைவாககே உள்ளது.


கீழுள்ள படத்தில் இவ்விரு கடல்நீரும் ஒன்றுடன் ஒன்று கலக்காததை விஞ்ஞான ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளலாம்.



அத்துடன் இவ்விரு கடல்களில் பாரிய அலைகள்உறுதியான திரவ வாயு ஓட்டம்,கடலின் ஏற்றமும்வற்றுதலும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை.


நவீன விஞ்ஞான ஆய்வுகளின் படி மதுரமான நீர்உப்பு நீர் ஆகியன சந்திக்கும் இடமான முகத்துவாரம் ஆனது இரு கடல்கள் சந்திக்கும் பகுதியைவிட வித்தியாசமானது. நவீன கண்டுபிடிப்புகளின் படி மதுரமான நீரிலிருந்து உப்பு நீரை அடர்த்தியின் காரணமாக வேறுபடுத்திக் காட்டும் வெவ்வேறான இரு அடுக்குகள் அடையாளம் காணப்படுகின்றன.


கீழுள்ள படத்தில் இவ்வடுக்குகளை தெளிவாக அவதானிக்கலாம்.


இந்தத் தகவல் சமீபத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. நவீன கருவிகளின் மூலமே இவற்றின் வெவ்வேறான வெப்பநிலைஉப்பின் தன்மைஅடர்த்திஆக்சிஜன் (oxygen)ஓட்டம் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன. வெற்றுக் கண்களுக்கு இவ்விரு வித்தியாசமான கடல்கள் தென்படாதது போலவே வெவ்வேறு தன்மையுள்ள மதுரமானகசப்பானஉவர்ப்பான நீரினதும் அடுக்குகள் வெற்றுக் கண்களுக்குத் தென்படுவதில்லை.


ஆழ்கடல் இருள்.


அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஓன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும்போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.(அல்குர்ஆன் 24: 40)


கடலின் மிக ஆழத்தில் எந்தவித வெளிச்சமும் இல்லாத இருளாகக் காணப்படுவதாக விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. காரணம் சமுத்திரங்களில்  கடல் மட்டத்திலிருந்து  சில 100மீ தொடக்கம் 11034மீ ஆழத்திற்குள் சூரிய ஒளி ஊடுருவுவதில்லை.

கிட்டத்தட்ட சமுத்திரங்களும்கடல்களும் கடல் மட்டத்திலிருந்து 200மீ அல்லது அதற்கு குறைவான ஆழத்திலேயே இருளாகக் காணப்படும். இந்த ஆழத்தில் அநேகமாக இருளாகக் காணப்படும். கடல் மட்டத்திலிருந்து 1000மீ ஆழத்திற்குக் கீழே எந்தவொரு ஒளியும் இல்லை. 100மீ ஆழத்திலேயே சூரியக் கதிர்கள் நீரால் உறிஞ்சப்படுகின்றன. இந்தப் பகுதியானது கடலின்  luminous பகுதி என அழைக்கப்படுகின்றது. இதனால் 1% ஆன சூரியக் கதிர்கள் 150மீ பகுதியிலும்0.01% ஆன சூரியக் கதிர்கள் 200மீ பகுதியிலும் தென்படுகின்றன.


எனவேஆழ்கடல் இருள்களால் சூழ்ந்தது என 1400 வருடங்களிற்கு முன்னே அல்குர்ஆனில் முன்னறிவிக்கப்பட்டு விட்டது.


ஆழ்கடல் அலைகள்.


ஆழ்கடலில் வித்தியாசமான அடர்த்தியுள்ள நீர் ஒன்றுடன் ஒன்று தடுக்கப்படுவதால் ஆழ்கடல் அலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. 



ஆழ்கடலின் நீரின் அடர்த்தி அதற்கு மேலுள்ள நீரின் அடர்த்தியிலும் பார்க்க கூடுதலாகும். சமுத்திரங்களின் அல்லது கடலின் மேற்பகுதியிலுள்ள கடலலைகளைப் போன்றதே ஆழ்கடல் அலைகளும்.

ஆழ்கடல் அலைகள் மனித வெற்றுக் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆனால்,ஆழ்கடலின் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தின் நீரின் வெப்பநிலைஉப்பின் தன்மை ஆகியவற்றின் மாறுதல்களை ஆராய்வதன் மூலம் கண்டறியலாம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை பாலைவனப் பிரதேசத்தில் சமுத்திரங்களுக்கெல்லாம் தொலைவில் அமைந்திருந்தது.

அவர்கள் சமுத்திரங்களுக்கிடையே எந்த பயணங்களும் மேற்கொண்டதும் இல்லை. சமுத்திரங்களைப் பற்றிய இத்தகவல்களை அவர்கள் அறிந்து கொள்வதற்கு எந்தவித வழியும் இருந்திருக்கவில்லை.  


எனவே, 1400 வருடங்களுக்கு முன் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கூற்றாக குர்ஆன் இருப்பதற்கு எந்த வகையிலும் சாத்தியமில்லை. குர்ஆன் நிச்சயமாக அல்லாஹ்வின் கூற்றேயாகும்.


கடல் பயணமே செய்தறியாத எம் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வளவு துள்ளிதமாக கடலின் தன்மைகள் பற்றி எவ்வாறு கூற முடிந்தது!!? நம்மை வியக்க வைக்கும் திருமறையை அதன் அற்புதங்களை நமது சிந்தனைக்கு வழங்கியவன் இந்த பேரண்டத்தைப் படைத்து பரிபக்குவப்படுத்தி பாதுகாத்து வரும் ஏக இறையோனாகிய அல்லாஹ் அல்லவா!!!!! 

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

தடுப்பூசியின் தந்தை எட்வர்ட் ஜென்னர் (Edward - Jenner) வரலாறு -ஒரு பார்வை....


முன்னுரை: விண்ணை முட்டும் மாடங்கள், காற்றைவிடக் கடிது செல்லும் வானுர்திகள், நீரினைக் கிழித்துச் செல்லும் அதிவிரைவுக் கப்பல்கள். காடுகளை எல்லாம் அழித்து வண்ணங்களைக் கொண்டு வடிவமைக்க இயலுமோ அத்தனை தொழில்நுட்பங்களைக் கொண்டு வடிவமைத்த கட்டிடங்கள் இவைதான் நாகரிக சின்னங்கள் என்று நம்பி மனிதன் கண்மூடித்தனமான வாழ்வு வாழ்கிறான். ஆனால் நலவாழ்வு என்பது பிணியற்றது - பகையற்றது - பசியற்றது - குணநலம் மிக்கது - மாந்த நேயம் கொண்டது என்ற எளிய செய்தியை மக்களிடையே தமது வாழ்நாளில் உணர வைத்தவர் ஜென்னர் என்ற ஆங்கில மருத்துவர். வருமுன் காப்பதே வாழ்வு - அதிலும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை முதன்முதலில் தடுப்பூசிமூலம் (Inoculation) பெரியம்மை நோயை விரட்டியடித்தவர் - மனித குலம் என்றென்றும் இவரது கண்டுபிடிப்புக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது.
இளமையும் கல்வியும்
எட்வர்டு ஜென்னர் 1749ஆம் ஆண்டு மே 17ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள பெர்க்கிலி (Berkley) எனும் சிறிய நகரில் பிறந்தார். இவர் இளம் வயதில் பள்ளிப் படிப்பை தமது ஊரில் உள்ள துவக்கப் பள்ளியில் துவங்கினார். அப்போதே இவருக்கு மருத்துவத் துறையில் பேரார்வம் இருந்தது. அக்காலத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வது மிகவும் கடினம். பெரும் முயற்சியும் _ உழைப்பும் இடையீடில்லா ஊக்கமும், உள்ளத்து உறுதியும் உடையவர் மட்டுமே அப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெற முடியும். ஜென்னரிடம் மேலே சொன்ன தன்மைகள் அனைத்தும் ஒருசேர அமைந்திருந்தமையால் தம் 14ஆம் வயதில் தமது ஊருக்கு அருகில் உள்ள செட்பரி (Sedbury) என்ற கிராமத்தில் திறமைமிக்க அறுவைசிகிச்சை மருத்துவரிடம் ஆரம்பகட்டப் பயிற்சியை மேற்கொண்டார். 21ஆம் வயதில் இலண்டனில் தூய ஜார்ஜ் (St. George) மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்றியவாறே புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.
ஜென்னரின் மருத்துவப் பயணம்:
டாக்டர் எட்வர்ட் ஜென்னர் 1776ஆம் ஆண்டு தமது சொந்த ஊருக்குச் சென்று மருத்துவப் பயிற்சியைத் தொடர்ந்தபோது சாரா நெல்ம்ஸ் (Sarah Nelmes) என்ற இடையர் குலப்பெண் பசு அம்மை (Cow-Pox) நோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்காக இவரிடம் வந்தார். கிராமப்புரத்தில் மாடு மேய்க்கும் பெண்களைப் பசு அம்மை நோய் எளிதில் தாக்கும். அப்படிப் பசு அம்மை நோய் தாக்கப்பட்டவர்களைப் பெரியம்மை நோய் (Small Pox) தாக்குவதில்லை என்ற கருத்து குடியானவர்கள் மத்தியில் பரவி இருந்தது. இக்கருத்தை அரசாங்கமோ, அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களோ ஏற்றுக் கொள்ளவில்லை. இக்காலத்திலும் சரி, அக்காலத்திலும் சரி ஏழையின் பேச்சு அம்பலமேறாது; ஆனால் ஜென்னர் இயல்பாகவே குடியானவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர். கிராம மக்களின் நீண்டகால நம்பிக்கையை உறுதிப்படுத்த தமது கடினமான ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தினார். பசு அம்மை (Cow-Pox) நோயால் தாக்கப்பட்ட சாராநெல்ம்ஸ் என்ற பெண்ணின் விரலிலிருந்து பசு அம்மைக் கிருமியை எடுத்து 8 வயதுச் சிறுவன் ஜிம்மி பிப்ஸ் (Jimmy Phipps) உடலில் செலுத்தப்பட்டது. பசு அம்மை நோய் அவனைத் தாக்கியது.
சுமார் 7 வாரங்கள் கழித்து பெரியம்மை (Small Pox) நோயால் தாக்கப்பட்டவர் உடலிலிருந்து பெரியம்மைக் கிருமியை எடுத்த ஜிம்மி பிப்ஸ் உடம்பில் செலுத்தினார். இதற்குப் பெரும் துணிச்சல் தேவைப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் சிறுவன் இறக்க நேரிட்டால் இவர் ஒர் இளம் குழந்தையைக் கொண்றவராக உலகம் இவரை தண்டித்திருக்கும். அதேசமயம் இவரது எல்லையற்ற துணிச்சலால் குழந்தை பெரியம்மை நோயிலிருந்து காப்பாற்றப் படுவானாயின் அது இவ்வுலக சமதாயத்திற்குக் கிடைத்த ஈடு இணையற்ற பரிசாகும். பாஸ்ச்சர்   என்னும் ஆய்வாளர் ஜென்னரின் ஆய்வு மிகவும் சரியானது என்று உறுதி செய்தார். இவர் முயற்சி இங்ஙனம் வெற்றி கண்டது. இவரது மருத்துவப் பயணம் மாபெரும் சாதனைக்கு வித்திட்டது.
பெரியம்மை நோய்பற்றிய குருட்டு நம்பிக்கையும் அதற்குச் சாவு மணியடித்த ஜென்னரின் ஆராய்ச்சி முடிவும்
ஒரு காலகட்டத்தில் பெரியம்மை நோய் மாரியத்தாளின் கோபம் காரணமாகப் பரவுகிறது என்று நம் நாட்டு மக்கள் எண்ணியிருந்தனர். மாரியத்தாளின் கோபம் தணிய தங்கள் வீட்டின்முன் வேப்பிலையை வைத்து வணங்கினர் - மாரியம்மன் கோவிலில் கூழ்காய்ச்சி வந்தவர்க்கெல்லாம் வழங்கி வழிபட்டனர். இந்த மூடநம்பிக்கை நம் நாட்டில் மட்டுமல்லாது மேலை நாடுகளில் கல்வி அறிவு பெற்றவர்களிடம் கூடப் பரவலாகக் காணப்பட்டது. அதாவது மதகுருமார்கள் மூடநம்பிக்கைக்கு முதன்மை அளித்து - வளர்ந்து வந்த மருத்துவ அறிவியல் கருத்துகளுக்குப் பெரும் தடை விதித்து வந்தனர். இச்சூழலில் ஜென்னரின் அரிய கண்டுபிடிப்பு மக்களிடம் செல்வாக்குப் பெற 30 ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட வேண்டி வந்தது. அதாவது தமது சோதனையை 27 பேரிடம் தொடர்ந்து ஓயாது நடத்தினார்; அதன்மூலம் பசு அம்மைக் கிருமிகளை மென்மைப்படுத்தி அதனை ஊசிமூலம் ஒருவரது உடலில் செலுத்தினால் அவருக்குப் பெரியம்மை நோய்த் தாக்குதல் இல்லை என்பதைத் திட்டவட்டமாக நிரூபித்தார். ஜென்னர் தமது ஆராய்ச்சி முடிவுகளை அம்மை நோயின் காரணங்களும் விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற சிறு நூலில் 1778ஆம் ஆண்டு வெளியிட்டார்.
அது தவிர அம்மை குத்தல் குறித்து அய்ந்து கட்டுரைகள் எழுதினார். மக்களிடையே விழிப்புணர்வைத் தூண்டத்தானே பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். தாம் கண்டுபிடித்த இந்த முறையை இலவசமாகவே உலகுக்கு வழங்கினார். தமது உழைப்புக்கு - ஆராய்ச்சிக்கு ஆதாயம் தேட இவர் ஒருபோதும் விரும்பவில்லை. இவரது இந்த அரிய கண்டுபிடிப்பு உலக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இராணுவத்தினர் - கடற்படை வீரர்கள் ஆகியோருக்குத் தடுப்பூசி முறை கட்டாயமாக்கப்பட்டது. இங்கிலாந் திலிருந்து இந்த வாக்ஸினேஷன் (Vaccination) முறை உலகின் எல்லா நாடுகளிலும் அதிவிரைவாகப் பரவியது. அமெரிக்க நாட்டு ஜனாதிபதியே ஜென்னர் அனுப்பிய தடுப்புஊசியை ஏற்றுக் கொண்டார். அவரது குடும்பத்தார்க்கும் அதைப் போடச் செய்தார்.
இதனால் அம்மை நோய் என்பது மக்கள் செய்த தவற்றிற்கு இறைவன் அளித்த தண்டனை என்ற மூடநம்பிக்கை முடமாக்கப்பட்டது. அம்மை நோயிலிருந்து விடுபட வேண்டுமாயின் பிரார்த்தனையும் - பரிகாரமும்தான் சரியான வழி என்ற மதத் தலைவர்களின் வேதவாக்கு மாமேதை ஜென்னரின் கண்டுபிடிப்புக்கு முன் தலைதாழ்ந்தது. சுருங்கச் சொன்னால் மதம் மாமேதையின் அறிவியலுக்கு முன்னர் மண்டியிட்டது.  20ஆம் நூற்றாண்டில் மட்டும் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் உயிர் இழந்தனர். சிலர் தங்கள் பார்வையிழந்தனர். வேறு சிலர் தங்கள் அழகிய தோற்றத்தை இழந்தனர். இப்படிப் பல கோடிக்கணக்கான மக்களை எல்லையற்ற தொல்லைகளுக்கு ஆளாக்கிய பெரியம்மை நோய் (Small pox) இன்று ஜென்னர்தம் அயராத உழைப்பால் முழுவதுமாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. பெரியம்மை நோயின் அறிகுறிகள் உலகில் முற்றிலும் இல்லாமல் செய்த பெருமை இவரையே சாரும். இவரது மருத்துவக் கண்டுபிடிப்பால் பெரியம்மை நோய் இல்லாத உலகை இன்று காணமுடிகிறது.
ஜென்னர் பெற்ற பரிசுகளும் பாராட்டுதல்களும்
ஜென்னரின் திறமையை வியந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் அறித்துச் சிறப்பித்தது. இரஷ்ய நாட்டு ஜார் மன்னர் இவருக்கு மோதிரம் அணிவித்து தமது பாராட்டுதலைத் தெரிவித்தார். பிரான்ஸ், ஹாலந்து, சுவிட்ஜர்லாந்து ஆகிய நாட்டினர் தாமாகவே முன்வந்து அம்மைத் தடுப்பூசி போட்டுக் கொண்டு இவரது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் அளித்தனர். 1802ஆம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றம் 10,000 பவுன் பரிசு வழங்கி இவரது ஆராய்ச்சியை மேலும் விரிவுபடுத்த ஊக்குவித்த. அடுத்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து பாராளுமன்றத்தினர் மேலும் 20,000 பவுன்களை வழங்கி இவரது பெருமைக்குப் பெருமை சேர்த்தது. உலகம் முழுவதிலுமிருந்து இவருக்குப் பரிசுகளும் - பாராட்டுதல்களும் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஏனெனில் ஆரம்பத்தில் இவர் கண்ட இந்தத் தடுப்பூசி முறை (Vaccination)  பின்னர் இளம்பிள்ளை வாதம் (Polio myclitics), காலரா, மஞ்சள் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல் (டைபாயிடு) ஆகிய ஆபத்தான நோய்களிலிருந்து மனித குலத்தைக் காப்பதுடன் - அந்நோய்களைக் கட்டுப்படுத்தும்  நிலையைப் பெற்று நோயற்ற வாழ்வு வாழ வழிவகுத்துள்ளது. எதிர்காலத்தில் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளுக்கும் இவரது ஆராய்ச்சியே முன்னோடி. ஜென்னர் வாழ்ந்த வீடு இன்று பெரியம்மை நோய்த் தடுப்புக்கு வித்திட்ட அருங்காட்சியகமாக விளங்குகிறது. இவரது சிலை இன்று கென்சிங்டன் தோட்டத்தை அலங்கரிக்கிறது. அமெரிக்க அய்க்கிய நாட்டில் பென்சில்வேனியாவில் பல தொகுப்புக் கிராமங்கள் இவரது பெயரைக் கொண்டுள்ளன. இவர் பிறந்த பெர்க்கிலி நகரம் அமைந்திருக்கும் கிளசெஸ்டாஷயரில் (Gloucestershire) உள்ள ராயல் மருத்துவமனையில் இவர் பெயரில் ஒரு பகுதி (Ward) செயல்பட்டு வருகிறது.
முடிவுரை:
தன்னலம் கடந்த அன்பால் இவ்வுலகை ஒன்றாக இணைக்க விழைந்தார் புத்தர். பண்புடையார் பட்டுண்டு உலகு என்று பண்பால் இவ்வுலகை உயர்த்த நினைத்தார் வள்ளுவர் - சமனிய தத்துவத்தால் -  ஜாதி மதங்களற்ற சமுதாய அமைப்பால் நம் நாட்டில் உயர்வை அடைய அவாக் கொண்டார் பெரியார். மேலே சொன்ன மாண்புடைத் தலைவர் காண விழைந்த சமுதாயம் சிறக்கவும் அங்கு நோயின் தாக்கம் சிறிதும் இல்லாமல் மக்கள் விழிப்புற்று எழவும் எதிர்கால சந்ததியினர் - நோயற்ற பெருவாழ்வு வாழவும் வித்திட்ட விவேகம் மிக்க மருத்துவ மாமேதை ஜென்னரின் புகழ் என்றும் நிலைக்க நாம் அரண் அமைப்போம்.

நன்றி : சாரதாமணி


உலகின்முதல் நோய்த் தடுப்பு ஊசி!!!-ஒரு ஆய்வு.


வைசூரி, பெரியம்மை, ஸ்மோல் பொக்ஸ் (SMALL POX) என்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்தக் கொடிய நோய் மனித வரலாற்றில் பெரும் உயிர்க் கொல்லியாக இடம் பெற்றது. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குத் தாவும் நோய்களில் இதுவும் ஒன்று.
வளர்ப்பு விலங்குகள் பறவைகளில் இருந்து பரவும் கொடிய நோய்கள் மனிதர்களை இன்றும் தாக்குகின்றன. தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கும் வரை அவற்றின் பாதிப்புக்கள் தொடரிந்தபடி இருக்கும் என்பது துயரமான செய்தி.
பிறப்பு 17.05.1749 இறப்பு 26.01.1823 ஸ்மோல் பொக்ஸ் நோய்க்கான தடுப்பு ஊசியைக் கண்டுபிடிக்கும் வரை அது மிகவும் கொடிய நோயாக இடம் பெற்றது.
18ம் நூற்றாண்டு முற்பகுதியில் ஸ்மோல் பொக்ஸ் நோய் உலகம் முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கியது. நோய் பற்றிய விவரத்தை மருத்துவர்கள் அறியாதிருந்த காரணத்தால் அதன் பரவலைத் தடுக்க முடியவில்லை. அந்த மர்ம நோயால் பீடிக்கப்பட்டவர்களில் 20விகிதத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உயிர் பிழைத்தோர் விகாரமான தோற்றத்தைப் பெற்றனர். பலர் கண் பார்வை இழந்தனர். பெரியம்மை எனப்படும் ஸ்மோல் பொக்ஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குத் தாவிய ஒரு வைரஸ் என்றாலும் அது விலங்கினத்தில் இருக்கும் போது அவற்றிற்கு ஒரு பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.
மனித உடலுக்குள் புகுந்த பிறகு இந்த வைரஸ் தனது கொடூரத்தைக் காட்டத் தொடங்குகிறது. உடலுக்குள் எப்போது புகுந்தது, அப்போது உடல் இருந்த நிலவரம் என்ன போன்ற தகவல்கள் சரிவரத் தெரியவில்லை. எப்போது புகுந்தது என்ற வினாவுக்கு மிகவும் வியப்பான பதில் கிடைத்தது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனிதனும் மிருகமும் நெருங்கி வாழ்ந்த காலத்தில் ஒரு வகைத் தொற்றாக இந்த வைரஸ் நோய் தொடங்கியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. காலத்திற்குக் காலம் இந்த நோய் கெம்பியும் பின்பு தணிந்தும் தனது வரலாற்றைத் தொடர்ந்தது.
இந்த நோயின் கொடிய வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்தவர் இங்கிலாந்து நாட்டவரான  எட்வேட் ஜென்னர் என்பதும் அவருடைய கண்டுபிடிப்பு மனித குலத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றும் கருதப்படுகிறது. அவர் மருத்துவத் தொழில் செய்த காலத்தில் ஸ்மோல் பொக்ஸ் பெருமளவில் பரவத் தொடங்கியது.
அவருடைய கண்டுபிடிப்பிற்கு 18ம் நூற்றாண்டு முற்பகுதியில் அசுர வேகத்தில் பரவிய இந்த நோய் உடனடிக் காரணமாக அமைந்தது. அவரும் இந்த நோயும் எதிரும் புதிருமாகச் சந்தித்த போது அவருடைய கண்டுபிடிப்பு நோயை வீழ்த்தியது.
ஜென்னர் பேர்க்கலே கிராமத்தில் மருத்துவராகப் பணியாற்றியவர். அவர் வாழ்ந்த கிராமத்திலும் பிற பகுதிகளிலும் இறப்புச் செய்திகள் குவிந்த வண்ணம் இருந்தன. பெரியோர்கள், சிறுவர்கள், குழந்தைகள், பெரும் எண்ணிக்கையில் இறந்தனர். மருத்துவ உலகம் செய்வதறியாது தவித்தது.
அந்த நேரத்தில் எட்வேட் ஜென்னரின் கவனத்தை ஒரு கிராமப்புற நிகழ்வு ஈர்த்தது. பசு மாடுகளில் பால் கறக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இந்த நோய் வருவதில்லை என்பதை அவர் அவதானித்தார். அந்த அடிப்படையில் அவர் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். பால் கறப்போருக்கு ஏன் இந்த நோய் வருவதில்லை?
பால் கறக்கும் கிராம மக்களுக்கு பசு அம்மை (COW POX) என்ற ஆபத்தற்ற நோய் வருவதுண்டு. அதுகும் வைரஸ் நோய்தான். அதன் பாதிப்பு மிகக் குறைவு. காய்ச்சலும் உடல் வலியும் இருக்கும். இதன்பின் அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
பசு அம்மைக்கு ஆளானவர்களுக்குப் பெரியம்மை அதாவது ஸ்மோல் பொக்ஸ் வராது என்ற முடிவுக்கு வந்த அவர் மேலதிக ஆராய்ச்சியில் இறங்கினார். அவர் தனது சுற்றாடலில் வாழ்ந்த இரு மனிதர்களையும் ஒரு பசு மாட்டையும் தெரிவு செய்தார்.
சாரா நெல்மெஸ் என்ற பால் கறக்கும் பெண், ஜென்னருடைய தோட்டக்காரனுடைய எட்டு வயது மகன் ஜேம்ஸ் பிப்ஸ் என்பவர்களுடன் புளொசம் என்ற பசு மாடும் அவருடைய ஆய்வுக்கு உதவினார்.
புளொசம் (BLOSSOM) என்ற பெயரைத் தாங்கிய பசுவில் பால் கறந்த சாராவுக்குக் கைகளில் பசு அம்மைக் கொப்புளங்கள் தோன்றின. கொப்புளங்களில் வடிந்த திரவத்தை எடுத்த ஜென்னர் அந்த எட்டு வயதுச் சிறுவனுக்கு ஏற்றினார். அவனுக்கு இலேசான காய்ச்சலும் உடல் வலியும் ஏற்பட்டது.
அவனுக்கு வேறு பாதிப்பு இல்லை. பெரியம்மை நோய் அவனைத் தீண்டவில்லை. இப்படித்தான் பசு அம்மை வைரசைப் பயன்படுத்திய அவர் ஸ்மோல் பொக்ஸ் நோய்க்குத் தடுப்பு ஊசியைக் கண்டுபிடித்தார். இவருடைய கண்டுபிடிப்புத்தான் எந்தவொரு நோய்க்குமான முதலாவது தடுப்பு ஊசி.
பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றியவர் என்று டாக்டர் எட்வேட் ஜென்னர் சிறப்பிக்கப்படுகிறார். மருத்துவர்கள் துப்பறியும் நிபுணர்கள் போல் தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எட்ட வேண்டும் என்ற உண்மைக்கு அவர் உதாரணமாக விளங்குகிறார்.
ஜென்னரின உருவச் சிலைகள், மருத்துவ மனைகள், நகர மையங்கள், பல்கலைக் கழகங்கள், தேவாலயங்கள், ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளன. ஆய்வுக்கு உதவிய பசு மாட்டின் தோல் புனித ஜோர்ச் மருத்துவக் கல்லூரியில் பாதுகாக்கப்படுகிறது.
ஜென்வர் வாழ்ந்த வீடு அருங்காட்சி நிலையமாகப் பேணப்படுகிறது. அவர் பாவித்த பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவை அந்த வீட்டில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவருக்கு உதவிய பசு மாட்டின் இரு கொம்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து மருத்துவர் டாக்டர் எட்வேட் ஜென்னர் (EDWARD JENNER)  எக்காலத்திலும் மறக்க முடியாத மாமனிதர். இவரை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போமே!!.
தொகுப்பு; மு.அஜ்மல் கான் 

Thursday, 26 April 2012

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?-ஒரு ஆய்வு..

உலகம் இயற்கையாகவே தோன்றியது. முதலில் புழு பூச்சிகள் உண்டாயின. அவற்றில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு ஒரு வித குரங்குகள் தோன்றின. அக்குரங்குகள் மேலும் வளர்ச்சியடைந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சி பெற்றன என்று சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி கூறுகிறார்.
ஆனால் இதற்கு மாற்றமாக இஸ்லாம் ஒரு ஆண் ஒரு பெண்ணிருந்து மனிதன் படைக்கப் பட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது.


எப்படி என்பதை இங்கு காண்போம்...

பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்.

கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் கொள்கையைச் சிலர் ஏற்றிப் போற்று கிறார்களே தவிரஅது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும்.

சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை!

எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.

குரங்குக்கும்மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.

அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும்.

உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்குமனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம். ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனித னுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம்.

மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர். குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை.

பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போகிறது. அநேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும் அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாகவுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் குரங்கிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடுமாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட அறிவியல் பூர்வமான இந்தக் காரணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.

இன்றைக்கும் கூட தகப்பனின் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் இவன் தான் தந்தைஎன்று முடிவு செய்கிறோம். வடிவத்தைக் கணக்கில் கொள்வதில்லை.

டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?

இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான்.

வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.

ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர். ஆச்சரியமாக பன்றியின் இதயம்மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும்அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் எந்தப் பிராணியிலிருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும்.

டார்வின் கூறுவது போல் உடலமைப்பை அடிப்படையாகக் கொள்வதை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கமுடையதாகும்.

இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.

குரங்கின் மரபணுக்களையும்மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோவேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.

இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.

குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்குகள் மனிதர்களாக மாறின என்பது டார்வினின் தத்துவம்.

முழு மனிதனுக்கும் ஒரே தாய் தான் என்ற கண்டுபிடிப்பு டார்வினின் கொள்கையைச் சவக்குழிக்கு அனுப்பி விட்டது.

மனிதன் ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம்இனம்நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும். ஆனால் டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.

'என்னுடைய முதல் தந்தையும் உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு'எனக் கூறி இன்று நிலவும் வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.
எனவே உலகுக்குக் கேடு விளைவிக்கும் உளறலே டார்வின் தத்துவம்.
 
இதையெல்லாம் விட உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையை மனிதன் பெறவில்லை. பகுத்தறிவால் தான் அந்தப் பெருமையைப் பெறுகிறான்.

உடல் வளர்ச்சிக்கும்உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் - நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.

ஆடுமாடுகளுக்கு இருப்பது போன்ற கழுத்தைத் தான் ஒட்டகச்சிவிங்கி பெற்று இருந்ததாம்! அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டிநீட்டி வந்ததாம்! இதனால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டதாம்! டார்வினிஸ்டுகள் உளறுகின்றனர்.

உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்.

இந்த வாதத்தின் படி உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது. ஆனால்பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததாஉயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் எப்போதும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை. எனவே பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலக் கட்டத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் பகுத்தறிவு என்பது வரவே முடியாது. இந்தச் சாதாரண அறிவு கூட டார்வினுக்கு இருக்கவில்லை.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தையும் நாம் ஏற்க முடியாது.

யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?
கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?

யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?
கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையாபரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?

தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை?இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.

மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கின்றது.

மனிதனின் இரத்தம்இதயம்ஈரல்சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும்,மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும். எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.
நன்றி:பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.
மேலும் பரிணாமம் பற்றி அறிய ...