Saturday, 28 April 2012

கடல்கள் பற்றிய ஆய்வு- ஒரு சிறப்பு பார்வை...



தற்போதைய நவீன அறிவியலில் கடலாய்வும் ஒன்று. கடலில் ஒரு இடத்தில் இரு வேறு கடல்கள் சங்கமிக்கின்றன, அவ்வாறு அவைகள் சங்கமித்தாலும் இரண்டு கடல்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் உள்ளது என்றும், மேலும் அவற்றின் வெப்பம், உப்புத்தன்மை, அடர்த்தி ஆகியவற்றிலும் தங்களது தனித்தன்மைகளுடனேயே உள்ளன என்றும், சமீபத்திய தமது ஆய்வில் கடலாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.  

உலகில் ஏறத்தா 146 கோடி கன கிலோ மீட்டர் தண்ணீர் நிறைந்துள்ளது. இதில் கடல்கள் மற்றும் நில உட்கடல்கள் 97.3 சதவீதமாகும். இதன் அளவு 144.5 கோடி கன கிலோ மீட்டர் ஆகும். மீதமுள்ள 2.7 சதவீதம் பனியாறுகள்பனிச்சிகரங்கள்நன்னீர் ஏரிகள்ஆறுகள்நிலத்தடிநீர் போன்றவைகளாகும்.

கடல்நீரில் ஏறத்தா 3.5 சதவீதம் வரை உப்புகள் கரைந்திருக்கின்றன. குளோரின்சோடியம்மெக்னீசியம்கந்தகம்கால்சியம்பொட்டாசியம்,புரோமின்ஸ்டிரான்ஷியம்போரான் போன்றவற்றுடன் மிக நுண்ணிய அளவில் கரிசிலிக்கான்அலுமினியம், புளூரின்அயோடின் ஆகிய மூல உப்புகளும் காணப்படுகின்றன.

 கடலுக்குள் எப்போதும் நீர் அலை மோதிக்கொண்டிருக்கிறது. இதற்கு சூரிய வெப்பமே 
காரணம். நிலநடுகோட்டுப் பகுதிகளில் சூரியனால் சூடேற்றப்பட்ட தண்ணீர் விரிவடைந்து 
ஒருசில அடி உயருகிறது. இவ்வாறு உயர்ந்த நீர் துருவப் பகுதிகளை நோக்கி வழிகிறது. பூமி 
கிழக்கு நோக்கி சுழன்று கொண்டிருப்பதால் கடல்நீர் மேற்கு பக்கமாக அடித்துச் 
சுருட்டப்படுகிறது.

 உலகிலேயே பெரிய கடல் பசிபிக் பெருங்கடலாகும். பூமியின் பரப்பளவில் 35.25 சதவிகிதம் கொண்டது. உலகிலேயே ஆழம் கூடிய மிண்டானா பகுதி திலுள்ளது. இதன் ஆழம் 11,516 மீட்டர். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தீவுகளும் இக்கடலில் தான் உள்ளன.
 ஆர்டிக் பெருங்கடல் அலைகளே இல்லாத பெருங்கடலாகும். இதில் கப்பற்பயணம் செய்ய முடியாது. குளிர்காலத்தில் உறைபனியாகவும்,இதரப்பருவங்களில் பனிக்கட்டித் துண்டங்கள் மிதக்கும் பகுதியாகவும் இது விளங்குகிறது. 130 இலட்சம் ச.கி.மீ.க்கும் அதிகமான இடத்தை நிரப்பிக் கொண்டிருப்பதாலேயே பெருங்கடல் என்ற சிறப்புடன் இது அழைக்கப்படுகிறது.

உதாரணமாக, 

மத்திய தரைக்கடலை அட்லாண்டிக் கடலுடன் ஒப்பிடுவோமானால், மத்தியதரைக்கடல் வெதுவெதுப்பான, உப்புத்தன்மையான மற்றும் குறைந்த அடர்த்தியும் கொண்டது. ஜிப்ரால்டர் ஜலசந்தியில் மத்திய தரைக்கடல் அட்லாண்டிக் கடலுடன் சங்கமிக்கும் போது, 1000 அடி ஆழத்தில் பல நூறு மைல்கள் தூரம் அட்லாண்டிக் கடலுக்குள் பயணம் செய்கின்றது. அவ்வாறு பயணம் செய்யும் மத்திய தரைக்கடல், வெப்பம், உப்புத்தன்மை மற்றும் அடர்த்தி ஆகியவற்றில் எந்த மாற்றமும் அடையாமலேயே தன் பயணத்தை அட்லாண்டிக் கடலினுள் தொடர்கின்றது. ஆழத்திலும் மத்திய தரைக்கடல் தனது தன்மையில் மாறாத நிலையையே பெற்றிருக்கிறது.
இதனிடையே இரு கடல்களிலும் உண்டாகும் பேரலைகள், சக்திவாய்ந்த நீரோட்டங்கள் மற்றும் சிற்றலைகள் போன்றவற்றின் தாக்கத்தால் எந்த பாதிப்பையும் இரு கடல்களிலும் உண்டாக்குவதில்லை. 
இதையே திருமறையில் இறைவன், கடல்களுக்கிடையே அவை சந்திக்கும் இடத்தில் ஒரு தடுப்புச் சுவர் உண்டு, ஆனாலும் அவை ஒன்றையொன்று மீற மாட்டா! என்று கூறுகின்றான். அதாவது,
இரு கடல்களை - அவை இரண்டும் ஒன்றோடொன்று சந்திக்க அவனே விட்டு விட்டான். (ஆயினும்) அவை இரண்டுக்கிடையில் ஒரு தடுப்புண்டு: (அத் தடுப்பானதை) அவ்விரண்டும் மீறி விடாது. (அல் குர்ஆன்: 55:19-20).
ஆனால், மேலே நாம் பார்த்த இறைவசனத்தில் இறைவன் கடலும் கடலும் சந்திக்கும் இடத்தில் தடுப்புச் சுவர் உண்டு எனக் கூறிய இறைவன், நல்ல தண்ணீர் மற்றும் கடல் நீரைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவை இரண்டுக்கும் இடையே உள்ள தடையில் ஒரு ஷமீற முடியாத தடுப்பைஅமைத்துள்ளோம் எனக் குறிப்பிடுகின்றான். இதையே இறைவன் தனது திருமறைக் குர்ஆனில்,
இன்னும் அவன் எத்தகையவனெ;னறால், இரு கடல்களையும் அவன் ஒன்று சேர்த்திருக்கின்றான்: (அதில் ஒன்றான) இது மிக்க மதுரமானது, தாகம் தீர்க்கக் கூடியது: (அதில் மற்றொன்றான) இது உப்புக்கரிப்பானது, கசப்பானது: இவ்விரண்டிற்குமிடையில் (அவை ஒன்றொடொன்று கலந்திடாமல்) திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் அவன் ஆக்கியிருக்கின்றான். (அல் குர்ஆன்.25:53).

திருமறையானது, கடலும் கடலும் சங்கமிக்கும் இடத்தில் அவையிரண்டுக்கும் இடையே ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளோம் எனக் கூறும் அதே வேளையில், கடலும் நதியும் (நல்ல தண்ணீர்) கலக்கும் போது அவையிரண்டுக்கும் இடையே திரையையும் அதையடுத்து ஒரு மீற முடியாத தடையையும் ஏறபடுத்தியுள்ளோம் என ஏன் கூற வேண்டும்? என ஒருவர் கேள்வி எழுப்ப முடியும். இதற்கான பதிலை நவீன அறிவியலாளர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.

கடலும் நதியும் சங்கமிக்கும் கழிமுகங்களில் தங்களது ஆய்வுகளை மேற்கொண்ட அறிவியலாளர்கள், கடலும் கடலும் சங்கமிப்பதற்கும், கடலும் நதியும் சங்கமிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியலானார்கள். அதாவது இங்கே தண்ணீரின் மாறுபட்ட அடர்த்தியின் விகிதம் ஒவ்வொரு நிலையிலும் மாறுபட்டு, ஒரு விகிதத்தல் இருந்து இன்னொரு விகிதத்திற்கு மாறக்கூடிய நிலையில் அவ்விரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட அதனதன் விகிதத்தைப் பிரித்துக் காட்டக் கூடிய பகுதி தான், நல்ல தண்ணீரையும், கடல் நீரையும் பிரித்துக் காட்டும் திரையாகச் செயல்படுவதாகக் கண்டறிந்துள்ளார்கள்.ழூ இவ்விரண்டு கடல் நீர் மற்றும் நல்ல தண்ணீர் ஆகியவற்றின் உப்புத் தன்மையை விட, இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் நீரின் உப்புத்தன்மையின் அளவில் மாறுபாடும் காணப்படுவதால்,ழூழூ திருமறையில் இறைவன் கூறியுள்ளபடி, கடல் நீருக்கும் நல்ல தண்ணீருக்குமிடையே திரையையும், மீற முடியாத தடையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம், என்ற திருமறைக் குர்ஆனின் வசனம் அறிவியலாளர்களால் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. 

மேற்கண்ட தகவல்கள் யாவும் இன்றைய நவீன அறிவியல் கருவிகளின் துணை கொண்டு, நீரின் வெப்பம், உப்புத் தன்மை, அடர்த்தி, மற்றும் ஆக்ஸிஜன் கரையும் அளவு ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவற்றின் தகவல்களின் துணை கொண்டு தான் அறிவியல் அறிஞர்கள் இந்த பேருண்மைகளைக் கண்டறிந்துள்ளார்கள். மேலும் இரண்டு கடல்களையும் பிரிக்கும் தடுப்பை மனிதக் கண்கள் கொண்டு காண முடியாது, கடலின் மேற்பரப்பு யாவும் ஒரே நீர்ப்பரப்பாகத் தான் நமக்குத் தோற்றமளிக்கும். இதே போல கழிமுகத் துறைகளில் நின்று கவனித்தால் கூட நல்ல தண்ணீர் ஒரு பிரிவாகவோ, கடல் நீர் ஒரு பிரிவாகவோ, இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதி (Pலஉழெஉடiநெ ணழநெ) ஒரு பிரிவாகவோ நமக்குத் தோற்றமளிக்காமல், ஒரே நீர்ப்பரப்பாகத் தான் நமக்குத் தோற்றமளிக்கும்.



அல்குர்ஆனின் கூற்றுப்படி நவீன விஞ்ஞானமும் இரு கடல்கள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையும்தடுப்பும் இருப்பதாகக் கூறுகின்றது. இவ்விரு கடல் நீரினதும் வெப்பநிலைஉப்பின் தன்மை,அடர்த்தி ஆகியன வேறுபடுகின்றன.

உதாரணமாக,  Mediterranean seaAtlantic ocean ஆகியவற்றின் நீரில் Mediterranean sea யினது நீரின் வெப்பம்உப்பின் தன்மைஅடர்த்தி Atlantic ocean னினது நீருடன் ஒப்பிடும்போது குறைவாககே உள்ளது.


கீழுள்ள படத்தில் இவ்விரு கடல்நீரும் ஒன்றுடன் ஒன்று கலக்காததை விஞ்ஞான ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளலாம்.



அத்துடன் இவ்விரு கடல்களில் பாரிய அலைகள்உறுதியான திரவ வாயு ஓட்டம்,கடலின் ஏற்றமும்வற்றுதலும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை.


நவீன விஞ்ஞான ஆய்வுகளின் படி மதுரமான நீர்உப்பு நீர் ஆகியன சந்திக்கும் இடமான முகத்துவாரம் ஆனது இரு கடல்கள் சந்திக்கும் பகுதியைவிட வித்தியாசமானது. நவீன கண்டுபிடிப்புகளின் படி மதுரமான நீரிலிருந்து உப்பு நீரை அடர்த்தியின் காரணமாக வேறுபடுத்திக் காட்டும் வெவ்வேறான இரு அடுக்குகள் அடையாளம் காணப்படுகின்றன.


கீழுள்ள படத்தில் இவ்வடுக்குகளை தெளிவாக அவதானிக்கலாம்.


இந்தத் தகவல் சமீபத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. நவீன கருவிகளின் மூலமே இவற்றின் வெவ்வேறான வெப்பநிலைஉப்பின் தன்மைஅடர்த்திஆக்சிஜன் (oxygen)ஓட்டம் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன. வெற்றுக் கண்களுக்கு இவ்விரு வித்தியாசமான கடல்கள் தென்படாதது போலவே வெவ்வேறு தன்மையுள்ள மதுரமானகசப்பானஉவர்ப்பான நீரினதும் அடுக்குகள் வெற்றுக் கண்களுக்குத் தென்படுவதில்லை.


ஆழ்கடல் இருள்.


அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஓன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும்போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.(அல்குர்ஆன் 24: 40)


கடலின் மிக ஆழத்தில் எந்தவித வெளிச்சமும் இல்லாத இருளாகக் காணப்படுவதாக விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. காரணம் சமுத்திரங்களில்  கடல் மட்டத்திலிருந்து  சில 100மீ தொடக்கம் 11034மீ ஆழத்திற்குள் சூரிய ஒளி ஊடுருவுவதில்லை.

கிட்டத்தட்ட சமுத்திரங்களும்கடல்களும் கடல் மட்டத்திலிருந்து 200மீ அல்லது அதற்கு குறைவான ஆழத்திலேயே இருளாகக் காணப்படும். இந்த ஆழத்தில் அநேகமாக இருளாகக் காணப்படும். கடல் மட்டத்திலிருந்து 1000மீ ஆழத்திற்குக் கீழே எந்தவொரு ஒளியும் இல்லை. 100மீ ஆழத்திலேயே சூரியக் கதிர்கள் நீரால் உறிஞ்சப்படுகின்றன. இந்தப் பகுதியானது கடலின்  luminous பகுதி என அழைக்கப்படுகின்றது. இதனால் 1% ஆன சூரியக் கதிர்கள் 150மீ பகுதியிலும்0.01% ஆன சூரியக் கதிர்கள் 200மீ பகுதியிலும் தென்படுகின்றன.


எனவேஆழ்கடல் இருள்களால் சூழ்ந்தது என 1400 வருடங்களிற்கு முன்னே அல்குர்ஆனில் முன்னறிவிக்கப்பட்டு விட்டது.


ஆழ்கடல் அலைகள்.


ஆழ்கடலில் வித்தியாசமான அடர்த்தியுள்ள நீர் ஒன்றுடன் ஒன்று தடுக்கப்படுவதால் ஆழ்கடல் அலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. 



ஆழ்கடலின் நீரின் அடர்த்தி அதற்கு மேலுள்ள நீரின் அடர்த்தியிலும் பார்க்க கூடுதலாகும். சமுத்திரங்களின் அல்லது கடலின் மேற்பகுதியிலுள்ள கடலலைகளைப் போன்றதே ஆழ்கடல் அலைகளும்.

ஆழ்கடல் அலைகள் மனித வெற்றுக் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆனால்,ஆழ்கடலின் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தின் நீரின் வெப்பநிலைஉப்பின் தன்மை ஆகியவற்றின் மாறுதல்களை ஆராய்வதன் மூலம் கண்டறியலாம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை பாலைவனப் பிரதேசத்தில் சமுத்திரங்களுக்கெல்லாம் தொலைவில் அமைந்திருந்தது.

அவர்கள் சமுத்திரங்களுக்கிடையே எந்த பயணங்களும் மேற்கொண்டதும் இல்லை. சமுத்திரங்களைப் பற்றிய இத்தகவல்களை அவர்கள் அறிந்து கொள்வதற்கு எந்தவித வழியும் இருந்திருக்கவில்லை.  


எனவே, 1400 வருடங்களுக்கு முன் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கூற்றாக குர்ஆன் இருப்பதற்கு எந்த வகையிலும் சாத்தியமில்லை. குர்ஆன் நிச்சயமாக அல்லாஹ்வின் கூற்றேயாகும்.


கடல் பயணமே செய்தறியாத எம் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வளவு துள்ளிதமாக கடலின் தன்மைகள் பற்றி எவ்வாறு கூற முடிந்தது!!? நம்மை வியக்க வைக்கும் திருமறையை அதன் அற்புதங்களை நமது சிந்தனைக்கு வழங்கியவன் இந்த பேரண்டத்தைப் படைத்து பரிபக்குவப்படுத்தி பாதுகாத்து வரும் ஏக இறையோனாகிய அல்லாஹ் அல்லவா!!!!! 

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment