தமிழகத்தின் காரைக்குடியைச் சேர்ந்த எங்கள் பரம்பரயில் வந்த எங்கள் அண்ணன நீதிபதி ஃபக்கீர் முஹம்மது இப்ராஹீம் கலீஃபுல்லாஹ் அவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெருவித்து கொள்கிறோம்.இன்றும் அவர்கள் பரம்பரை வீடு மற்றும் எங்கள் வீடு ஒரே தெருவில் உள்ளது.இதில் எனது சிறிய தந்தை(ஜின்னா ) அவர்களின் பாலிய நண்பரும் கூட(இதுவரை).நான் பிறப்பதற்க்கு முன்பாக திருச்சி சென்றுவிட்டனர்.ஆகவே அவருடன் பழகுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் அமையவில்லை.ஆனால் எனது அண்ணன் அமீன் அவர்களுக்கு சென்னையில் சந்தர்பம் கிடைத்தது. மேலும் பின்னி நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய போது எனது சகோதரன் அல் அமீன் www.facebook.com/alameen.muthalif அவர்களின் முன்னேற்றதிற்கு உற்ற அறிவுரையாளராக திகழ்ந்தார். எப்பொழுது காரைக்குடி வந்தாலும் மிகவும் சாதாரணமாக எங்கள் கல்லுகட்டி(A.K.Kasi & Bros) கடையில் சென்று ஜின்னா சிச்சா அவர்களுடன் பேசி, சிரித்து, மகிழ்து செல்வார்கள்.
சரி, என் புராணம் போதும்... அவர்களை பற்றிய செய்தி தொகுப்பை பார்போம் ..
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.எச். கபாடியா நேற்று(திங்கள்கிழமை) காலை கலீஃபுல்லாஹ்வுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
ஜம்மு-கஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த கலீஃபுல்லாஹ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றதை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 31 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தில் தற்பொழுது 5 இடங்கள் காலியாக உள்ளன.
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 3-வது நீதிபதியாக கலீஃபுல்லாஹ் தற்பொழுது பொறுப்பேற்றுள்ளார். நீதிபதிகள் அல்டமஸ் கபீர், அஃப்தாப் ஆலம் ஆகியோர் இதர 2 நீதிபதிகள் ஆவர். தமிழகத்திலிருந்து நீதிபதி பி.சதாசிவத்துடன் பணியாற்றும் 2-வது நீதிபதி கலீஃபுல்லாஹ் ஆவார்.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 1951-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி பிறந்த இப்ராஹிம் கலிஃபுல்லா, 1975-ம் ஆண்டு முதல் வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். தொழில் சட்டங்களில் கவனம் செலுத்திய கலீஃபுல்லாஹ் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் வழக்கறிஞராக பணியாற்றினார்.மேலும் பின்னி நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி போது தமிழ்நாடு மின்சார வாரிய வழக்கறிஞராகவும் சேவையாற்றியுள்ளார்.2000 ஆண்டு மார்ச் 2-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நிரந்த நீதிபதியாக கலிஃபுல்லா நியமிக்கப்பட்டார். பின்னர், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு ஏப்ரலில் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார்.
தொகுப்பு : மு. அஜ்மல் கான்.
No comments:
Post a Comment