இந்திய சுதந்திரப் போராட்டம் என்றால் நமக்கு வெகுசிலரை தவிர வேறு யாரும் நினைவுக்கு வருவதில்லை, இதுகூடப் பரவாயில்லை, பலரை யாரென்றே பலருக்கு தெரியவில்லை என்றால் அதுவும் சுபாஷ் சந்திரபோசுக்கு இணையானவர் ஒருவரை பற்றி தெரியாமல் போனதும் அதிலும் அவரர் ஒரு தமிழர் என்பது தெரிந்துகொண்டபின்பு எனக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்றே தெரியவில்லை.
அந்த மாவீரனின் பெயர் "செண்பகராமன்"
இவரை "ஜெய்ஹிந்த் செண்பகராமன்" என்றும் அழைப்பார்கள். முதமுதலில் ஜெய் ஹிந்த் என்று முழங்கியவர் இவரே என்னும் காரணத்தால் இப்பெயர் பெற்றார் என்று சொல்லப் படுகிறது
அந்த மாவீரனின் பெயர் "செண்பகராமன்"
இவரை "ஜெய்ஹிந்த் செண்பகராமன்" என்றும் அழைப்பார்கள். முதமுதலில் ஜெய் ஹிந்த் என்று முழங்கியவர் இவரே என்னும் காரணத்தால் இப்பெயர் பெற்றார் என்று சொல்லப் படுகிறது
“எனது தாயகத்தின் மண்ணோடு மண்ணாக என்னுடல் கலக்க வேண்டும். அகண்ட பாரதத்தின் பரந்து விரிந்த வயல்களுக்கு, என் எலும்புகளும், நரம்புகளும் உரமாக வேண்டும்” என்று கூறியவர் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு என்பது பலருக்குத் தெரியும். ஆனால் நேருஜிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செந்தமிழ் வீரன், “சுதந்திர இந்தியாவில் - நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்.” என்று கூறினான் என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ?
பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தைப் பொறுத்த வரையில், இந்த சூதாட்டம் நினைவிற்கப்பாற்பட்ட காலந் தொட்டு நிலவிவரத்தான் செய்கிறது. எனினும் நீண்ட காலம் புதை குழிக்குள் இருக்கக் கூடியதல்ல சத்தியம். அது உலகுக்கு வெளிப்படும் போதெல்லாம், விஸ் வரூபத்திலேயே மக்கள் அதைத் தரிக்கின்றனர். அப்படி ஒரு தரிசனம் தான். இந்த மாவீரன் டாக்டர் செண்பகராமன் வரலாறு.
இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜேய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜேய் ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜேய் ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
வீரபாண்டியகட்டபொம்மன் ஆரம்பித்த விடுதலைப்போர், இந்தியா முழுவதும் வீறிட்டெழுந்து பயங்கர ஜுவாலையாகப் பரவிய காலம் அது. வெள்ளையரை நாட்டை விட்டு வெளியேற்றி, பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். இந்திய உபகண்ட மெங்கும் ஒரே கொந்தளிப்பு. அதை அடக்க பிரிட்டிஷ் ஆட்சியினர், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இச் செயல் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஆறாகப் பாய விட்டது போலாகி விட்டது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர்.
பாடங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு குட்டித் தலைவன். வயது பதினைந்துதான். ஆனால் ஆற்றலோ, அணைகடந்ததாக அமைந்தது. நாஞ்சில் பெற்றெடுத்த இந்தச் சிறுவன் நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்களின் தலைவனாகி விட்டான். எழுச்சி மிக்க அவனது பேச்சுக்கள், இளைஞர்களின் இதயங்களில் ஆழப் பாய்ந்தன. விளையாட்டுப் போல் அவன் ஆரம்பித்த தேசியப்படை, பலமிக்க ஒரு நிறுவனமாக உருவாகியது. அரசாங்கம் வாளாவிருந்து விடுமா? சிறுவனது வாயையும், கரங்களையும் கட்டிப் போட முயன்றது. இதனால் சிந்தை கலங்கவில்லை இந்தச் சின்னஞ் சிறு வீரன் செண்பகராமன். அதற்குப் பதிலாக, அவனது சுதந்திரத் தாகம் எரிமலையாகியது.
திருவனந்தபுரத்திலே அடங்கிக் கிடந்த செண்பகராமனை, உலகம் அறிந்;து கொள்ள ஒரு சந்தர்ப்பம் இக் கட்டத்தில் தான் ஏற்பட்டது. செந்தமிழ் நாட்டு வீரன், சர்வதேசமும் புகழும் தலைவனாகும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அடிமைப்பட்ட இந்திய மக்கள் மட்டுமல்ல, அவதிப்பட்ட உலகமக்கள் அத்தனை பேரும் விடுதலை பெற, அவர்களுக்காகப் பாடுபடும் ஒரு பாக்கியம் செண்பகராமனுக்கு கிடைத்தது எப்படி என்பதுதான் இங்கே மிகவும் சுவாரஸ்யமானதாகும்.
உண்மையும் உறுதியும் ஒளி வீசும் கண்கள், விடுதலை வெறியையே மூச்சாகச் சுவாசிக்கின்ற உத்வேகம், சுடரொளி வீசும் கம்பீரத் தோற்றம் அத்தனையையும் கொண்ட மாணவன் செண்பகராமனைக் கண்டு தன் சிந்தையைப் பறி கொடுத்தார் ஒருவர். ஆனால் அவர் ஒரு இந்தியரல்லர்! செண்பகராமனுக்கு பரம எதிரிகளாகக் காட்சியளித்த ஆங்கிலேயப் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர். அவரது பெயர் சேர் வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட். இவரது தாயார் ஒரு ஜெர்மனியர். எனவே சேர் வால்டர். திருவனந்தபுரத்திலே ஒரு ஜெர்மன் உளவாளியாக அந்தக் கட்டத்திலே வாழ்ந்து வந்தார். விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பது போல, நாளை ஒரு தன்னிகரற்ற தீரனாகத் திகழக் கூடிய சாத்தியக் கூறுகளோடு விளங்கிய இளைஞன் செண்பகராமனுக்கு நல்லதொரு வழியைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் சீமான் வோல்டர் மனதில் எப்படியோ எழுந்;தது. அப்போது திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த செண்பகராமனுக்கு வோல்டர் கூறிய புத்திமதி நன்கு பிடித்திருந்தது. பலன்? கட்டுண்டு கிடந்த இந்தியத் தாயை விடுவிக்கும் நோக்கில், தனது கட்டுப்பாடு, சூழ் நிலைகளையே துறந்து, ஏன் பாரதத்தையே விட்டு விட்டு, சேர். வால்டரோடு செண்பகராமன் அலை மோதும் ஆழியில் தனது பிரயாணத்தை மேற் கொள்ளலானான்.
இது நடந்தது 1908-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் திகதி என். எல். ஜி. யோர்க் என்ற ஜெர்மனிய கப்பலில் ஏறி செண்பகராமன் தலை மறைவாகியதுதான் தாமதம், இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பேற்றபட்டது. செண்பகராமனின் வீட்டுக்கு பலத்த காவல்! பள்ளிக்கூடத்திற் பயிலும் சின்னஞ் சிறு மாணவன் எங்கே எப்படி மறைந்திருக்க முடியும் என்ற கேள்வியைக் கேட்டுக் கேட்டு கிலிபிடித்துக் கலங்கினர் வெள்ளையர்கள்.
திரு. சின்னசாமிப்பிள்ளை, நாகம்மாள் என்றழைக்கப்படும் சாதாரண ஏழைத் தாய் தந்தையருக்குப் பிறந்த செண்பகராமன் காலடி யெடுத்து வைத்த உலகமோ பரந்து விரிந்த தொன்று. ஐரோப்பா நோக்கிச் சென்ற அவன் கால்கள் இத்தாலியில் சிறிது காலம் நிலைத்தன. அங்கு இலக்கியம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்று, பின் சுவிட்சர்லாந்திற்குச் சென்றான். அங்குள்ள கலாசாலை யொன்றின் மிகச் சிறந்த மாணாக்கனாகத் திகழ்ந்த செண்பகராமன் பட்டங்கள் பலவற்றைத் தன் பெயரோடு சேர்த்துக் கொண்டான். மணவனாக இருக்கும் போதே, சுவிட்சர்லாந்தில் நிகழ்த்திய பல சொற்பொழிவுகளின் போது, இந்திய நாட்டில் நடைபெறும் அந்நிய அடக்கு முறைகளைப் பற்றி வீரம் கொப்பளிக்கும் வண்ணம் எடுத்துக் கூறி, இந்தியாவின்பால், அந்நாட்டு மக்களின் அனுதாபத்தையும், ஆதரவையும் திருப்ப முயன்றான். சுவிட்சர்லாந்திலிருந்து ஜெர்மனியின் தலைநகரான பெர்லினுக்குச் சென்ற செண்பகராமன், அங்குள்ள கலாசாலையொன்றில் சேர்ந்து, பொறியியற் துறையில் கலாநிதி பட்டம் பெற்று, தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டான். ஆம்! பதினைந்தாவது வயதில் வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறி, இப்போது ஒரு டாக்டராகி விட்ட அவனை, இனிமேல் டாக்டர் செண்பகராமன் என்று அழைப்பது தான் பொருத்தமல்லவா?
இனிமேல், திரு. செண்பகராமனின் பணியென்ன? தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மன் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தப்பபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய டாக்டர், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.
தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “ப்ரோ இந்தியா” (Pசழ ஐனெயை) எனும் ஆங்கிலப் பத்திரிகை நவ இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது. இந்தக் கட்டத்தில் செண்பகராமனின் செல்வாக்கும் புகழும் சொல்லில் அடங்காதவை. ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்வா? டாக்டர் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகிவிட்ட நேரத்தில் தான், இந்திய பிரிட்டிஷ் ஆட்சி, அவரது இருப்பிடத்தை கண்டுகொண்டது. விட்டுவிடுமா? செண்பகராமனைச் சுற்றி பலமான விலங்குகள் நெருங்கிக்கொண்டிருந்தன. அதே வேளையில் செண்பகராமனது தேசப் பற்றும் கட்டுக் கடங்காத எரிதணலாக தக தகக்கத் தொடங்கியது. “அடிமைப்பட்ட மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களது விலங்குகளை ஒடித்தெறிய வேண்டும்” என்று கூவி கொந்தளிக்கும் ஆவேசத்தோடு செயலாற்றத் தொடங்கி விட்டார். மேதை டாக்டர் செண்பகராமன். இதனால் “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த முதல் சரித்திர புருஷன், ஒரு தமிழனே” என்ற பெருமையை, பேச்சில் மட்டுமன்றி செயலிலும் அவர் எடுத்துக் காட்டினார். டாக்டர் செண்பகராமன் நிறுவிய “ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கம்” (டுநயபரந ழக ழிpசநளளநன pநழிடந) “ கீழ் நாட்டவர் சங்கம்” (வுhந ழுசநைவெ ஊடரடி) ஆதியன மக்களது அமோக ஆதரவைப் பெற்றன. இவற்றின் கிளைகளை நிறுவுவதற்காக பட்டேவியா, பர்மா, சயாம், சீனா, எகிப்து, துருக்கி, அமெரிக்கா, தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்குச் செண்பகராமன் விஜயம் செய்தார். பன்னிரண்டு உலக மொழிகளில், மிகச் சரளமாக உரையாடும் ஆற்றல் மி;க்க செண்பகராமன், அந்தக் கட்டத்திலே, ஒரு சர்வதேச கதாநாயகனாகத் திகழ்ந்தார் என்று கூறினாலும் மிகையல்ல. சங்கம் நிறுவும் பணியில் சென்ற செண்பகராமனுக்கு புதிய உபகண்டத்திலே ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது!
“தாழ்த்தப்பட்ட மக்கள் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் அவர்களின் அடிமைத் தளைகளை அறுத்தெறிவேன்” எனச் சங்க நாதம் செய்த செண்பகராமனுக்கு, அவரது உன்னத லட்சியங்களுக்கு உருவங்கொடுக்கும் ஒரு துணைவி பேர்லினில் வாய்த்தார். செண்பகராமனின் தீரமிக்க வரலாற்றில் இங்கே தான் ஓர் அற்புதமான திருப்பம் ஏற்பட்டது. கெய்சர் மன்னனின் அத்தியந்த நட்பைப் பெற்ற அவருக்கு ஜெர்மன் அரசு “வொன் (ஏழn) என்ற கௌரவப் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. ஜெர்மனியில் வாழ்ந்துகொண்டு இந்தியாவின் வளத்திற்காக, வர்த்தக அபிவிருத்திக்காகப் பாடுபட்ட டாக்டர் பிள்ளை, (இனிமேல் வீரன் டாக்டர் செண்பகராமன் பிள்ளையை டாக்டர் பிள்ளை என்றே கௌரவமாக அழைப்பது நல்லதல்லவா?) 1930-ம் ஆண்டில் இந்திய வர்த்தக சபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக நியமனம்; பெற்றார். அப்போது தான் சுகந்த மணவாழ்வு அவரை நாடியது.
பெர்லின் நகரில் பல இந்தியக் குடும்பங்கள். அந்தக் காலத்தில் வாழ்ந்து வந்தன. அக்குடும்பங்கள் அனைத்தும் டாக்டர் பிள்ளையின் இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டியிலும், கிழக்கத்தியர் கழகத்திலும் அங்கத்துவம் வகித்தன. அவற்றில், மணிப்புரி நாட்டைச் சேர்ந்த செல்வி லb;மி பாயின் குடும்பம், தேச பக்தியிலும் தீரச் செயல்களிலும் தலைசிறந்து விளங்கியது. குறிப்பாகத் தேசத் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பேரழகியான வீராங்களை லb;மிபாயின், அரசியல் அறிவு டாக்டர் பிள்ளையைப் பெரிதும் கவர்ந்தது. உயிருக்கு ஒரு பாரதம் என மூச்செறிந்து வாழ்ந்த வீரனின், உள்ளத்திற்கொருத்தியாக லb;மிபாய் திகழ்ந்தார். இதன் விளைவாக சாதாரண லb;மிபாய், திருமதி செண்பகராமனாகி, ஜெர்மனியில் இந்திய நாட்டின் இல்லத்;தரசி போன்ற ஒரு ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டார்.
நேருவும் போசும் தங்கிய இல்லம்..
பெர்லின் சென்ற இந்தியத் தலைவர்கள், டாக்டர் பிள்ளையின் இல்லத்திற்குச் சென்று. திருமதி லb;மிபாயின் கைகளால் தயாரிக்கப்பட்ட அறுசுவை உண்டியை அருந்தி இன்புறத் தவறியதே இல்லை. அப்படியான தலைவர்களில் வங்கத்தமின் சிங்கம் சுபாஷ் சந்திரபோஸ், ஆசியஜோதி பண்டித ஜவஹர்லால் நேரு, அவரது தந்தை பண்டித மோதிலால் நேரு, லால்சந்த், ஹீராசந்த் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தியாவின் மாபெரும் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட விட்டல்பாய் பட்டேல், டாக்டர் பிள்ளையின் இல்லத்திலேயே, 1931ல் பெர்லினுக்குச் சென்ற போது தங்கியிருந்தார்.
இவ்விதம் மேனாடுகளில் ஒரு தன்னிகரற்ற இந்தியத் தூதுவனாகத் திகழ்ந்த டாக்டர் பிள்ளைக்கு, புதிய கண்டத்திலே காத்திருந்த அதிர்ச்சிதான், அவரை ஒரு உலக வீரனாக்கியதென்று கூறலாம். ஜனநாயகத்தை காக்க உறுதி பூண்டு, ஐக்கிய நாடுகள் சபையிலேயே அங்கத்துவம் வகிக்கும் அமெரிக்காவில், கறுப்பு நிற மக்களான, நீக்ரோக்களுக்கு இழைக்கப்படும் பாரபட்சம், கொடுமை இவைதான் டாக்டர் பிள்ளையை அதிர வைத்தன. மேனியின் நிறம் கறுப்பு என்ற ஒரே காரணத்திற்காக, கண்ணீர் வெள்ளத்திலே மிதந்த நீக்ரோக்களுக்கு நியாயம் வழங்க எவருமே அற்ற நிராதரவான நிலையைக் கண்டு கருணைமிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்த அந்தப் பச்சைத் தமிழன் கண் கலங்கினான். கலிபோர்னியாவுக்கு அவர் சென்றது ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கத்தை அமைப்பதற்காகத்தான். ஆனால் மக்கள் கேவலம்! புழுவிலும் கேவலமாக வாழ்கிறார்கள் என்பதை டாக்டர் பிள்ளை கனவிலும் கருதவில்லை. நீக்ரோக்களுக்கு உடனடியாக நீதிபெற்றுத்தர வேண்டும் என்று துடித்த அவர். அப்போது ஆட்சியிலிருந்த அமெரிக்க ஜனாதிபதி திரு. வுட்ரோ வில்சனை சந்தித்தார்.
நீக்ரோக்களின் விடுதலைக்காக பாடுபட்ட ஆபிரஹாம் லிங்கனுக்குப் பிறகு, மிகப் பிரபல்யம் வாய்ந்த அமெரிக்க ஜனாதிபதி திரு. வுட்ரோ வில்ஸன் தான், கல்லையும் உருக்கும் வண்ணம் கறுப்பு நிற மக்களின் துன்பத்தை எடுத்துக் கூறினார். டாக்டர் பிள்ளை தமது சங்கத்தின் லட்சியங்களை தெளிவாக வில்ஸனிடம் விளக்கினார். நீண்டநேரம் தனது வாக்கு வன்மையின் பலத்தை வைத்து வாதாடினார் டாக்டர் பிள்ளை. ஆனால் நீக்ரோக்களுக்கு நீதி வழங்கவேண்டும் என்பது தான் தனது நோக்கம் என்றும், எனினும் அமெரிக்க மக்கள் தான் அன்றும் விரும்பவில்லை என்றும், மக்களின் அபிப்பிராயத்திற்கு மாறாக தன்னால் நடக்க முடியாது என்றும் கூறி ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன் கையை விரித்து விட்டார். அதோடு அயர்ந்து விடவில்லை அந்த தீரமிக்க தமிழ் வீரன் செண்பகராமன்!
பேராபத்துச் சூழ்ந்தது...
நீக்ரோ மக்களுக்காக பாடு பட்ட அமெரிக்க ஜனாதிபதி லிங்கனையே படுகொலை செய்த பயங்கர வாதிகளுக்கிடையில், தன்னந் தனியாக நின்று, தோட்டம், தோட்டமாகச் சென்று, தனியொரு சக்தியாக அடிப்படை மனித உரிமைகளைப் பற்றி பிரசாரம் செய்ய ஆரம்பித்தார் டாக்டர் பிள்ளை.
ஒர் அந்நியன் வந்து, அடக்கப்பட்ட அனாதைகளுக்காகப் போராடுவதா? என்று ஆத்திரப்பட்டனர் அங்கிருந்த நிறவெறியர்கள். ஆரம்பித்தது டாக்டர் பிள்ளைக்கு கடுமையான எதிர்ப்பு ஆபத்து அவரை நிழல் போலத் தொடரத் தொடங்கியது. சூட்சும புத்தி மிக்க டாக்டர் செண்பகராமன் பிள்ளை நாளொரு பெயரும், பொழுதொரு வேடமுமாக அமெரிக்கா எங்கும் சுற்றித் திரிந்தார். அக்ரோஷமான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவற்றைக் கேட்டு கிளர்ந்தெழந்த நீக்ரோ மக்கள் டாக்டர் பிள்ளையை, தனது ரட்சகனாகவே கருதினார்கள் என்றால் மிகையல்ல!
இந்த கட்டத்தில் இனியும் இவரை சும்மா விட்டு வைப்பது ஆபத்தெனக் கருதிய பிரிட்டிஷ் அரசாங்கம், பொலிஸோடு பிரிட்டிஷ் ஒற்றர்களும் டாக்டர் பிள்ளையை நோக்கி தமது வலையை விரித்தனர். தன் லட்சியப் பாதையிலே வந்த, தடையை வெற்றிகரமாகத் தாண்டி, மாறு பெயரில் பாஸ்போர்ட் பெற்றுக் கொண்டு, புதிய கண்டத்தை விட்டு அந்தாத்தியானமாகி விட்டார் டாக்டர்.
அடுத்து அவர் கால் வைத்தது இருண்ட கண்டமெனும் ஆபிரிக்காவில். அங்கும் அடக்கப்பட்ட அனாதை மக்கள் அவலப்படுவதைக் கண்டார். லட்சியப் பணி மேலும் புது வேகத்தோடு தொடர்ந்தது. இந்த நிலையில் ஆபிரிக்காவில் வைத்தே அவரைக் கைது செய்து விட வேண்டும் என்று, பிரிட்டிஸ் ஆட்சி முடிவு செய்தது. விளைவு? டாக்டர் பிள்ளையை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு ஒரு லட்சம் பவுண் பரிசளிக்கப்படும் என்று பிரி;ட்டிஷ் அரசு பிரகடனப்படுத்தியது தான் தாமதம், ஒற்றர்களின் துடிப்பும், வேகமும் கரை கடந்தன. அவர்களில் ஒரு பெண் சாகஸங்களில் கைதேர்ந்தவள். பெண்மையைப் பயன் படுத்தி, மாபெரும் சூரத்தனமான காரியங்களைச் சாதித்தவள். அவளின் பாச்சா கூட டாக்டர் பிள்ளையிடம் பலிக்கவில்லை. மாறு வேஷம் போடுவதி;ல் புகழ் பெற்ற அரேபியாவின் லோரன்ஐஸ விட பன் மடங்கு கைதேர்ந்தவர் டாக்டர் பிள்ளை. எனவே எப்படியோ எல்லோரையும் கொட்டாவி விட வைத்து விட்டு, கம்பி நீட்டி விட்டார் பொலினுக்கு!
அப்போது தான் இந்தியாவில், சுகந்திரப் போராட்டங்கள் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்து கொண்டிருந்தன. அங்கு பாஞ்சால். வங்காள வீரர்கள் நடத்திய தீரமான போராட்டங்களுக்கு டாக்டர் பிள்ளை, ஜெர்மனியிலிருந்து ரகசியமாக ஆயுதங்களை அனுப்பி உதவி செய்தார். வங்கத்தின் சிங்கத்தை டாக்டர் பிள்ளை சந்தித்த சம்பவம், இந்திய வரலாற்றில் இன்று மறைக்கப்பட்டோ மறக்கப்பட்டோ இருந்த போதிலும்;. ஓரு முக்கிய கட்டமென்றே கூறவேண்டும். 1933-ம் வியன்னாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டுக்கு டாக்டர் பிள்ளையும் சென்றிருந்தார். இந்தியப் பிரதிநிதியாக அங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரசன்னமாகி இருந்தார். டாக்டர் பி;ள்ளையும், போஸ{ம் நீண்ட நேரம் உரையாடினார்கள். பாரதத்தின் விடுதலையைப் பெறுவது எப்படி என்பது பற்றி பலபட ஆராய்ந்தனர் இருவரும். அப்போது டாக்டர் பிள்ளை வெளியிட்ட ஒரு திட்டம் சந்திரபோஸைப் பெரிதும் கவர்ந்தது. தான் தேடிக்கொண்டிருந்த பாதையைக் காட்டியவர் என்ற மதிப்பில் டாக்டர் பிள்ளையை ஆரத் தழுவி பூரித்தார் போஸ்.
போஸ் அளித்த சத்தியம்...
‘இந்தியா விடுதலை பெற வேண்டுமானால், இந்தியாவுக்கு வெளியே இந்திய தேசிய ராணுவம் ஒன்றை அமைக்க வேண்டும். அந்நிய நாடுகளின் ஆதரவோடு தான். பிரிட்டிஷாரை வெளியேற்ற வேண்டும். உலக மகா யுத்தத்தின் போது தான் கண்ட அனுபவங்களைக் கொண்டே, இந்தத் திட்டத்தை நான் வகுத்தேன்” என்று கூறினார் செண்பகராமன். “டாக்டர் பிள்ளை! உங்கள் அற்புதமான திட்டத்தை, சந்தர்ப்பம் கிடைக்கும் போது அமுலாக்க நிச்சயம் நான் தவற மாட்டேன்” என்று சத்திய வாக்குக் கொடுத்தார் சுபாஸ் சந்திரபோஸ். இந்த சத்திய வாக்கின் அடிப்டையில் தான் பின்னர் மகாத்மா காந்தியடிகளை பின்பற்றிய காலத்திலும், போஸ் தீவிரமாக நடந்து கொண்டார். செண்பகராமனின் சக்தியே போஸை இயக்கியது, என்று கூறப்படுகிறது. மீண்டும் ஒரு மறை டாக்டர் பிள்ளையை சந்திரபோஸ். பெர்லினில் சந்தித்த போது. பிள்ளை வகுத்த திட்டமும், தான் அளித்த வாக்குறுதியும் நிறைவேறும் காலம் அண்மி வருவதாக போஸ் கூறினாராம். அந்த நினைப்பை நிதர்சனமாக்குவது போல, 1939ல் உலக யுத்தம் வெடித்தது. அப்போது வங்கத்தின் சிங்கம் சுபாஷ் சிறையில் அடைபட்டுக் கிடந்தார். இக்கட்டத்தில் தான் டாக்டர் பிள்ளைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என்று, திட்டவட்டமாக நம்பிய போஸ், சிறையிலிருந்து வெளியேற, உண்ணாவிரதத்தை ஆயுதமாகப் பாவித்தார். தக்க பலன் கிட்டியது ஆனால் வீட்டிலே பாதுகாப்புக் கைதியாக்கப்பட்டார். கடுமையான கட்டுக் காவலையும் மீறி, ஒரு நாள் எப்படியோ இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார் போஸ். தப்பித்த போஸ், செண்பகராமன் ஏற்கனவே அஸ்திவாரமிட்டிருந்த இந்திய தேசிய ராணுவத்தின் (ஐ. என். ஏ) தலைமையை ஏற்று. டாக்டர் பிள்ளைக்கு அளித்த சத்தியத்தை நிறைவேற்றி விட்டார்;.
“ஜேய் ஹிந்த்!” பிறந்த கதை...
இன்று இந்தியாவின் இதய கீதமாக இருக்கும் “ஜேய் ஹிந்த்” எனும் கோஷத்தைத்தான் சந்திர போஸ{ம் மற்றும் இந்திய வீரர்களும் தம் உயிர் மூச்சாகக் கருதினர். ஆனால் அதை வகுத்த வீரனை உலகம் ஏன்? இந்திய மக்களே அறியவில்லை. எப்படியோ மறந்து விட்டார்கள்! மறைந்த மாவீரர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது போலும்! “ஜேய் ஹிந்த்” கீதத்தை செண்பகராமன் சின்னஞ் சிறு பாலகனாக, பள்ளியிலே மாணவனாக இருந்த காலத்திலேயே, சிருஷ்டித்து விட்டார் என்றால் உலகம் நிச்சயம் ஆச்சரியப்படத் தான் செய்யும்! இன்றைய உலகில் உண்மை அநேகமாக ஆச்சரியமானதாகத் தானே இருக்கிறது!
புரட்சிப் பாதையில் நடந்த மாணவன் செண்பகராமனுக்கு ஆட்சியினர் விதித்த தடைகள், அவனை மாணவர் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கத் தூண்டியதல்லவா? அப்போது அவ் வீரன் வகுத்த, மாணவ சேனையின் தாரக மந்திரம்தான், “ஜேய் ஹிந்த்” அயல் நாடுகளில் வாழ்ந்த காலத்தில் எல்லாம். அந்நிய தலைவர்களை சந்தித்த போதெல்லாம், முதலில் “ஜேய் ஹிந்த்” கோஷம் எழுப்பி விட்டுத்தான், டாக்டர் பிள்ளை மறு காரியம் பார்த்திருக்கிறார் இவரைப் பின்பற்றியே சுபாஸ{ம் அந்தக் கோஷத்தை ஏற்றார் என்பதற்கு மறைக்கப்பட்ட வரலாறுகளில் சான்றுகள் உண்டு. இந்தத் தமிழ் மகன் தான், ‘சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வர வேண்டும்” என்று ஜெர்மன் மன்னரான கெய்சரே ஒரு முறை பகிரங்கமாக விருப்பம் தெரிவித்திருந்தார் என்று கூறுகையில், ஒரு கட்டுக்கதை போல் இருக்கிறதல்லவா? இதைப் பற்றிய சில குறிப்புக்களை, பாரதத்தின் முதல் பிரதமரான திரு. ஜவஹர்லால் நேரு, தமது சுயசரிதையில் தந்துள்ளார்.
சர்வாதிகாரி ஹிட்லரையே மண்டியிட வைத்த மாவீரன் செண்பகராமன் பிள்ளையைப் பற்றி, காலஞ் சென்ற பாரதப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு தமது சுய சரிதையில் குறிப்பிட்ட தென்ன என்பதை நாம் அறிந்தோமானால், டாக்டர் பிள்ளையின் தியாகத்தின் உயர்வை ஓரளவுக்காவது உணர்ந்து கொள்ள முடியும். நேருஜியின் நெஞ்சத்தில் இருந்து எழுந்த உணர்ச்சிகரமான கூற்று இதுதான்.
“நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவரான டாக்டர் செண்பகராமன் பிள்ளையை நாம் சந்தித்தோம். அவர். பழைய யுத்தக் கோஷ்டியைச் சேர்ந்தவர்களில் பெயர் பெற்ற அங்கத்தவராவர். பெர்லினில் அவர் மிக படாடோபமாக வாழ்ந்து வந்தார். அங்குள்ள இளம் மாணவர்கள், அவருக்கு பொருத்தமற்ற பட்டம் ஒன்றை வழங்கினர். டாக்டர் பிள்ளை தேசியம் ஒன்றில் மட்டுமே தம் சிந்தனையை செலுத்தினார். பொருளாதார சமூகப் பிரச்சினைகளில் போதிய அக்கறை காட்டவில்லை. உருக்குத் தொப்பி அணிந்த ஜெர்மனிய தேசிய வாதிகளுடன் எவ்வித வேறுபாடுமின்றி, மிக சகஜமாக பழகினார். நாஜிகளுடன் கலந்து, சற்றும் பயமின்றி பணி புரிந்த சொற்ப இந்தியர்களில் டாக்டர் பிள்ளை முதன்மையானவர். நான் மீண்டும் சிறையில் இருந்த காலத்தில் பெர்லின் நகரில் டாக்டர் பிள்ளை மரணமடைந்ததை கேள்வியுற்றேன்”
சொல் வீரன் மட்டுமல்ல...
டாக்டர் பிள்ளை தேசியம் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தினார் என்றால், அந்த நேரத்தில் அவரது தேசிய விடுதலை வெறி, எந்தக் கட்டத்தில் இருந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா? தேச விடுதலைக்குப் பிறகு தானே. சமூக, பொருளாதார விடுதலைகளைப் பற்றி யோசிக்க முடியும்! இதனால் தான். ரஷ்யர்கள் பல முறை தாமே வலிந்து வலியுறுத்தியும் கூட, எவ்வித உதவியையும் பெற டாக்டர் பிள்ளை மறுத்தார். இவர் வெறும் சொல் வீரனாக மட்டும் திகழவில்லை. செயலிலும் தீரனாகத் திகழ்ந்தார். இதைக் கருத்தில் கொண்டே நேருஜி, “இளம் மாணவர்கள் அவருக்குப் பொருத்தமற்ற பட்டம் ஒன்றை வழங்கினர் என்று கூறியிருக்கலாம். நேருஜியின் கூற்றிலிருந்து டாக்டர் பிள்ளை கெய்ஸர் மன்னரின் சகலவரிசைகள், மரியாதைகளையும் பெற்று, பெர்லினில் ஒரு பிரபு போல வாழ்ந்திருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறதல்லவா?
இந்த கர்ம வீரர். பாரதத்தின் தந்தையான காந்தி மகாத்மாவை ஒரு முறை சந்தித்தார். எப்போது தெரியுமா? உலக மகா யுத்தம் ஆரம்ப மாவதற்கு முன், தென் ஆபிரிக்காவில் வைத்து, இந்த அற்புதமான, சரித்திர ரீதியான சந்திப்பு நிகழ்ந்தது.
தென்ஆபிரிக்காவுக்குச் சென்று காந்திஜியோடு தேசப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார் டாக்டர் பிள்ளை. அப்போது காந்திஜி தென்னாபிரிக்கா இந்தியர்களுக்கும் சுதேசிகளுக்கும் பிரதிநிதியாகப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். “அபிரிக்க சுதேசிகளிடம் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுங்கள்” என டாக்டர் பிள்ளை காந்திஜியை வற்புறுத்தினார். இதற்கு முன் ஒரு தடவை தென் ஆபிரிக்காவுக்கு டாக்டர் பிள்ளை விஜயம் செய்து நீக்ரோக்களுக்காக பாடுபட்டதை, காந்திஜி அறிந்திருந்தார். கென்யாவில் டாக்டர் பிள்ளை நிகழ்த்திய சரித்திரப் பிரசித்தி பெற்ற சொற்பொழிவைப் பற்றியும் கேட்டிருந்தார். எனவே டாக்டர் பிள்ளையை ஆரத் தழுவி, அண்ணல் பெருமிதம் கொண்டார் எனக் கூறவும் வேண்டுமா?
இந்திய விடுதலையையே தன் உயிர் மூச்சாகக் கொண்டிருந்த டாக்டர் பிள்ளை சர்வாதிகாரி ஹிட்லரை மண்டியிட வைத்த வரலாறு, ஒவ்வொரு இந்தியனையும், ஒவ்வொரு தமிழ் மகனையும் பெருமிதத்தால், நெஞ்சம் பூரிக்க வைக்கும், ஒருநாள் டாக்டர் பிள்ளையும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார். ‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் டாக்டர் பிள்ளை. இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் பிள்ளையின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே பிள்ளையிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் பிள்ளை. அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.
நாஜிகள் கொதித்தனர்..
நாஜிகள் தலைவணங்காத ஹிட்லர், டாக்டர் பிள்ளை முன் மண்டியிட நேர்ந்த சம்பவம், ஜெர்மனியில் நாஜிகளின் நெஞ்சத்தைக் கொதிக்க வைத்தது. டாக்டர் பிள்ளைக்கு விரோதிகள் அதிகரித்தனர். ஆனால் அவரோ கலங்கவில்லை. தன் வாழ்நாளில் முதன் முறையாக ஓர் இந்தியன் முன் மண்டியிட நேர்ந்த அவமானத்தால் குன்றிய ஹிட்லர், டாக்டர் பிள்ளையை ஒழித்துக்கட்டிவிட தருணத்தை எதிர்நோக்கியிருந்தார்.
இத்தகைய அளப்பரும் வீரம் படைத்த செண்பகராமன். வகுப்புவாதத்தை அடியோடு வெறுத்தார். டாக்டர் பிள்ளையோ, அவரது அடிச்சுவட்டை பின்பற்றிய சுபாஸ் சந்திர போஸோ பாரதம் - பாகிஸ்தான் என்று இரு கூறாக இந்தியா பிளவுபடும் என்பதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். தனது 17-ம் வயதில் தாயகத்தை விட்டு வெளியேறிய டாக்டர் பிள்ளை, தனது அஞ்ஞாதவாசத்தின் 25-வது ஆண்டை, அதாவது வெள்ளி விழாவை 1933-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் திகதி பெர்லினில் கொண்டாடினார். இவ் வைபவத்தில் ஜெர்மனிய நாட்டு பிரமுகர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டனர்.
அந்தக் காலத்திலே தான் ஹிட்லரின் கை பலவிதத்திலும் ஒங்க ஆரம்பித்தது. ஜெர்மனிய அதிகார பீடத்தில் ஹிட்லர் நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்தார். அவருடைய நாஜிக் கூட்டமும் தீவிர பலத்தோடு விளங்கியது. 1933-ல் ஹிட்லர் ஜெர்மனியைக் கைப்பற்றினார். அதோடு பிரிட்டனின் நட்டைப் பெறவும் அதை ஆதரிக்கவும் ஹிட்லர் முன்வந்தார். அதன் காரணமாக பிரிட்டிஷாரின் விரோதிகளை வெறுக்க ஆரப்பித்தார். இதுவும் செண்பகராமனுக்குப் பாதகமாகவே அமைந்தது. இத்தனை பாதகமான சூழ் நிலையும் ஒன்று திரண்டு மாவீரன் செண்பகராமனை ஒழித்துக் கட்டி விட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி விட்டன. பாரதத்தின் தலை சிறந்த வீரன்;: தமிழன்னையின் தீரமிக்க மைந்தன் செண்பகராமனை இனிமேல் நீண்ட காலம் தாங்கும் வாய்ப்பு பாரத மாதாவுக்கு. ஏன் பூமாதேவிக்கே கிடையாது!
ஜெர்மன் நாஜிகளையும் ஹிட்லரையும் அவமானத்தால் மனங்குன்ற வைத்த இந்திய மகனான செண்பகராமன், பாரத சுயராஜ்யத்திற்கு எவ்விதம் வழி வகுத்தான் என்பதையும் ஐரோப்பிய நாடுகளில் அவனது செல்வாக்கு எவ்வாறு பரவியிருந்தது என்பது பற்றியும் அறிய, அவனது வரலாறை படிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் விரும்புவர். பாரதத்திலிருந்து பிரிட்டிஷாரை வெளியேற்ற. தக்கதோர் தருணத்தைப் பார்த்திருந்த செண்பகராமனுக்கு, 1914-ம் ஆண்டு, அந்த வாய்ப்புக் கிட்டியது. ஆம்! அப்போதுதான் உலக மகாயுத்தம் வெடித்தது.
பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் போர் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் பிள்ளை ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, “போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல” என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார். இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை” (ஐனெயைn யேவழையெட ஏழடரவெநநச ஊழசிள) என்று பெயர் கொடுக்கப்பட்டது.
ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.
ஹம்டன் கப்பலின் கமாண்டராக...
யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம்திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் உலக சாதனையை ஏற்படுத்திய வீரன், பிரிட்டிஷ் ஆதிபத்தியத்தை முறியடிக்க, மெஸபொட்டேமிய யுத்த கேந்திரத்தையே பயன்படுத்தினார். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.
நான்கு ஆண்டுகள் மகா யுத்தம் மிக உக்கிரமாக நடைபெற்றதை உலகறியும். நாளடைவில் ஜெர்மனி தோல்வியடையக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படலாயிற்று. எனவே, யுத்தம் நிறுத்தப்பட்டு, சமாதான பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகின. இது செண்பகராமனின் திட்டங்களை பாதிப்பதாக இருந்த போதிலும், அவரது சிந்தையில் மேலும் தீவிரமான எண்ணங்கள் உதயமாகவே செய்தன.
பிள்ளை கூறிய ஜீவசக்தி....
“யுத்தத்தில் ஜெர்மனி தோற்றாலும், அது இந்திய சுய ராஜ்யப் போரின் தோல்வியாகாது. புரட்சிகரமான வளர்ச்சியும், புதிய சக்தியும் இந்தியப் போராட்டத்திற்குக் கிடைத்துள்ளது. இந்த ஜீவ சக்தி ஒன்றே இந்திய வானில் சுதந்திரக்கொடியை சுடர் விட்டொளிர விடும்” என வீர முழக்கமிட்டார் செண்பகராமன் பிள்ளை. டாக்டர் பிள்ளை அன்று குறிப்பிட்ட அந்த ஜீவ சக்தி தான், ஐ. என். வி. யாக இருந்து, இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஐ. என். ஏ யாக மலர்ந்தது. செண்பகராமனின் பாதையிலே சுபாஸ் சந்திரபோஸ் நடத்திய ஐ. என். ஏ:யின் போராட்டத்தை, இந்திய வரலாற்றின் பொன்னோடுகளில் ஒன்றெனக் கூறின், மிகை அல்ல!
ஜெர்மனிக்கும் பிரிட்டனுக்கும் இடையில், திட்டமிடப்பட்ட வேர்ஸெயிர்ல்ஸ் உடன்படிக்கையின் ஷரத்துகளில், “டாக்டர் பிள்ளையை ஜெர்மனி பிரிட்டனிடம் ஒப்படைக்க வேண்டும்” என்பது மிக மிக முக்கியமானதாகும். இதை ஜெர்மன் அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தது. எனவே பிரிட்டன் தனது நிபந்தனையை வாபஸ் பெற்ற பின்னரே, வேர்ஸெயில்ஸ் உடன்படிக்கை நிறைவேறியது. இவ்விதம் பிரிட்டிஷாரிடமிருந்து காப்பாற்றப்பட்ட செண்பகராமனின் உயிரை கடைசியில் ஜெர்மனியே பறித்துக்கொண்டது. விதி செய்த சதியென்றே இதனைக் கூறலாம். ஹிட்லரை டாக்டர் பிள்ளை, மண்டியிட வைத்த சம்பவத்தையடுத்து நாஜிகள் பழிவாங்கும் உணர்ச்சியில் கொந்தளித்துக் கொண்டிருந்தனர் என்பதை நான் முன்னமே குறிப்பிட்டிருந்தேன். அதன் விளைவாக ஒரு நாள் செண்பகராமனது உணவிலே கொடிய விஷம் கலக்கப்பட்டது. தன்னைச் சுற்றியிருந்தவர்களை நம்பியதால் கெட்ட தமிழ் வீரன், மிடுக்கும் துடுக்கும் இழந்து, உயிர்ப்பினமாக நோயாளியாக படுக்கையிலே விழுந்தான். நாஜிகளின் கொடிய விஷம், தமிழகத்தின் நாஞ்சில் பெற்ற நல் வரத்தை, சிறிது சிறிதாக ஜீவ ஒளி குன்றச் செய்தது. தனக்கு இனி எதிர்காலம் ஒன்றில்லை என்பதை டாக்டர் பிள்ளை உணர்ந்தார். மனைவி லb;;மிபாயைத் தன்னருகில் அமர்த்தி, தன் இறுதி லட்சியத்தை எடுத்துக் கூறினார். இந்திய விடுதலைக்காக வெளிநாடுகளில் போர்க்குரல் எழுப்பிய முதல் இந்திய வீரனான செண்பகராமன் என்ற தமிழ் வீரன்!
இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது. எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான் பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில் கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு. அதோடு என் உயிர் பிரிந்தபின்னும்;, என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்த வேண்டும்.” நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்த செண்பகராமனின் உயிர் 1934-ம் ஆண்டு மே மாதம் 26-ம்; திகதி இவ்வுலகத்தை விட்டு நீங்கி அமரத்துவம் அடைந்து, புயல் மோதும் அலைகடலில், திக்கற்ற படகாகத் தவித்தார் லb;மி பாய், எனினும் ஒரு மாவீரனின் மனைவியல்லவா? ராஜதந்திரம் அவர் ரத்தத்தில் ஊறியதில் ஆச்சரியமொன்றும் இல்லை.
கணவரின் உயிர் பிரிந்த உடனேயே முக்கியமான தஸ்தாவேஜுகளை எல்லாம் லb;மிபாய் எடுத்து, பதுக்கி விட்டார். எதிர்பார்த்தபடி நாஜிக்கூட்டம் செண்பகராமனின் வீட்டில் புகுந்து சோதனையிட்டது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த முக்கியமான தகவல்கள் எதுவும் நாஜிகளுக்கு கிடைக்கவேயில்லை. கணவரின் ஈமக்கிரியைகளைக் காண, லb;மிபாய்க்கு தடை விதிக்கப்பட்டிருந்தது எனினும் சடலத்தை எரிக்க நியமிக்கப்பட்ட நபரின் காலடியில் லb;மிபாய் விழுந்து கண்ணீர் சிந்திக் கதறிய காட்சி, அந்த கல்நெஞ்சுக்காரனையே இளக வைத்தது. சடலத்தை பார்க்க லb;மிபாயை அனுமதித்தான் அந்தச் சுடலைத் தொழிலாளி.
மணப் பெண்ணாக லட்சுமி பாய்....
தூய வெண்ணிற ஆடையில் சோகமே உருவாகச் சென்ற லb;மிபாய், டாக்டர் பிள்ளைக்கு மிகவும் பிடித்தமான லில்லி, “போகெட்-மி-நொட்” மலர்களை நீல “ரிப்பன்” கொண்டு மலர்ச் செண்டாகக் கட்டி சடலத்தின் மீது வைத்தார். தனது கல்யாண நகைகள் அத்தனையையும் அணிந்து கொண்டு மணப்பெண் போலத் திகழ்ந்த அவர் டாக்டர் பிள்ளையின் கழுத்தை முத்தமிட்டு, கணவரது தலையை தன் தலையோடு சேர்த்துக்கொண்டு கதறிய காட்சி, நாஜிகளைக் கூட சற்று கலங்க வைந்ததாக. லb;மிபாயின் சிநேகிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சடலத்திற்கு தீ மூட்டும்போது லb;மிபாய் ‘ஓ வென்று கதறி அழுதார். தனக்கு ஒரு கணவர் இல்லையே! என்றல்ல. “இந்தியா ஒரு விடுதலை வீரனை இழந்துவிட்டதே!” என்று!....
லட்சுமி பாயைச் சுற்றிப் படர்ந்தது விஷமிகளின் கரம்...
அன்று மதுரையை எரித்த கண்ணகியைப் போல பெர்லினில் நின்று கதறினார் லb;மிபாய். அவர் கதறக்கதற வீரன் செண்பகராமனின் சடலம் ஜுவாலையாக பற்றி எரிந்ததை இந்திய சுதந்திர ஜுவாலை சுடர்விட்டொளிர்ந்தது போல இருந்ததாக ஒருவர் குறிப்பிட்டார். அஸ்தியை பத்திரமாகப் பேணிக் கொண்டார் லb;மிபாய். அவரையும் சும்மா விட்டு வைக்க விரும்பவில்லை நாஜிகள். பைத்தியக்கார ஆஸ்பத்திரியில அடைத்தனர் அத்தியந்த நண்பர்களின் உதவியால் லb;மி, ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறினார். நாஜிகள் மத்தியில் வாழும் நரக வாழ்க்கையை உதறி எறிந்து விட்டு, தாயகம் திரும்ப லb;மி துடி துடித்துக் கொண்டிருந்தார். அவரது எல்லையற்ற அழகைக் கண்டு மோகித்த ஜெர்மன் பிரபுக்களிடமிருந்து தந்திரமாகத் தப்பி, இத்தாலிக்கு ஓடினார் லb;மிபாய். அங்கிருந்து ஸ்பெயினூடாக பம்பாய்க்குச் சென்றார். 1936-ம் ஆண்டு பம்பாய் வந்து சேர்ந்த லb;மிபாய், இன்றும் பம்பாயில் தான் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.
‘சுதந்திர பாரதத்தின் வயல்களிலும் கரமனை ஆற்றிலும் எனது அஸ்தி தூவப்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்ட மாவீரன் செண்பகராமனின் கோரிக்கை, அவர் காலமாகி சுமார் முப்பத்திநான்கு ஆண்டுகளுக்குப் பின், அதாவது 1966-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவின் முதலாவது யுத்தக் கப்பலான “ஐ. என். எஸ் டெல்லி” என்ற கப்பலில் டாக்டர் பிள்ளையின் அஸ்தி பம்பாயிலிருந்து எர்ணாகுளத்திற்கு 1966-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் திகதி கொண்டு வரப்பட்டது. ஒரு போர்க் கப்பலில்தான், தாயகம் திரும்ப வேண்டும் என்ற கணவரின் லட்சியத்தை, கற்புக்கரசியான லb;மிபாய் இந்தியக் குடியரசின் உதவியோடு நிறைவேற்றினார். “வந்தே மாதரம்” இசை முழங்க திருமதி லbமிபாய், கணவரின் இறுதி அவாவை நிறைவேற்றுமுகமாக கரமனை ஆற்றில் ஆஸ்தியைக் கரைத்தார். எனினும் அஸ்தியின் ஒரு பகுதி நாஞ்சில் வயல்களில் தூவப்பட்டதா? என்பதைவிட்டு எந்த விபரமும் எனக்குக் கிடைக்கவில்லை. திருமதி லb;மிபாயோடு. இதையிட்டு நான் மேற் கொண்டுள்ள கடிதத் தொடர்புக்கு, இன்னமும் பதில் வந்து சேரவில்லை. அஸ்திகரைப்பு சம்பவத்தையிட்டு சென்னையிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கிலத் தினசரியான “ஹிந்து” பத்திரிகை மிக, மிக உருக்கமாக அதை விபரித்திருந்தது. அக் குறிப்பிலும் கூட, வயல்களில் அஸ்தி தூவப்பட்டதா? என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை.
நம்மவரை மறப்பது இழுக்கல்லவோ?
கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி. யும் திருப்பூர்க் குமரனும், தமிழினத்தின் தனிப்பெரும் வீரர்களாக பாரத உப கண்டத்தின் விடுதலைக்குப் போராடியிருக்கிறார்கள். இவர்கள் சேவையை இன்றைய தமிழினம் ஓரளவுக்காவது அறிந்து வைத்திருக்கிறது. நாளை தமிழ் உலகுக்கும் விட்டுச் செல்ல நம்மிடையே, அவ்வீரர்களைப் பற்றிய வரலாற்று ஏடுகள் உண்டு. ஆனால் மிக, மிக துரதிஷ்டவசமாக தமிழ்த் தாய் ஈன்றெடுத்த வீரர்களிலே திலகம் போன்ற செண்பகராமனைப் பற்றிய, தகவல்கள் மட்டும், ஏனோ மறைக்கப்பட்;டோ, அல்லது தற்செயலாக விடுபட்டோ போய்விட்டது. இந்நிலை மேலும் நீடிக்க அனுமதிப்பது தமிழர்களின் பாரம்பரிய வீரத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமென்றே கருதத் தோன்றுகிறது. எங்கோ ஒரு அந்நிய நாட்டில் பிறந்து, அந்நிய மொழிக்காக கலை, கலாசாரத்திற்காக, இன விடுதலைக்காக பாடுபட்டவர்களுக்கெல்லாம், கோலாகலமாக விழா எடுத்து ஆடம்பரமாகப் பிதற்றிக் கொள்ளும் நாம். நம்மினத்தில் பிறந்த தலைவர்களை, அறிஞர்களை, தன்மானமிக்க வீரர்களை போற்றப் பழகும் காலம், விரைவில் உதயமாக வேண்டும். உலக வரலாற்றில் நம்மவர் ஆற்றிய அருந் தொண்டுகள், மண்ணோடு மண்ணாக மக்கி மறைந்து விடலாகாது. இப்பணி மூலம்தான், எமது பழம் பெரும் இனத்தின் பாரம் பரிய தனித்துவத்தை எதிர்காலத்தில் பேணிக்காக்க, வித்திடமுடியும். உண்மை விளக்கத்தை, வீரன் செண்பகராமன் வரலாறு, நம்மவர் இதயங்களில் ஏற்படுத்துமா?
தொகுப்பு : மு.அஜ்மல் கான்
தமிழர் சென்பகராமன் என்று ஆரம்பித்து மாவீரன் சென்பகராமன்..பின்பு டாக்டர் சென்பகராமன் பிள்ளை...முடிவில் என குறிப்பிட்டு .. பின்பு தண்டராப்போட்டு டாக்டர் பிள்ளை என்று சாதியாக்கி விட்டீர்கள். சபாஷ்! மாவீரனை சாதியாதியாக்கி உங்கள் ஆசையை தேடிக்கொண்டீர்கள்.
ReplyDelete