Monday, 25 June 2012

தைரொயிட் நோய்கள்-.ஒரு சிறப்பு பார்வை.....

தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?
"கை கால் உளைவு, களைப்பு, உடம்பு நோ, சோம்பல், தூக்கக் குணம், மலச்சிக்கல், உடம்பு பாரமாக இருக்கு, தசைப்பிடிப்பு ...." என்று சொல்லிக் கொண்டே போனாள்

அந்தப் பெண்மணியின் நோய் அறிகுறிகள் தண்டவாளம் போல முடிவின்றி நீண்டு கொண்டே போயின. அவரை நோட்டமிட்டேன்.

வயது அய்ம்பது இருக்கும். 'வதனமே சந்திரபிம்பமோ' என்பது போல உருண்ட வட்ட முகம், கொழுத்த உடம்பு, வரண்ட தோல், சற்றுக் கரகரத்த குரல், அதிகம் கொட்டியதால் அடர்த்தி குறைந்த தலை முடி.


அவர் கூறிய அறிகுறிகளையும், நான் அவதானித்த குறிகளையும் இணைத்துப் பார்க்கும் போது இவருக்கு தைரொயிட் சுரப்பியின் செயற்பாடு குறைவாக இருக்கலாமோ எனத் தோன்றியது.
இவற்றுடன்
  • குளிர் சுவாத்தியத்தைத் தாங்க முடியாத தன்மை,
  • மறதி,
  • மனச் சோர்வு,
  • தசைப் பிடிப்பு போன்ற அறிகுறிகளும் சேர்ந்திருப்பதுண்டு.
நாடி பிடித்துப் பார்த்தபோது நாடித் துடிப்பு சற்றுக் குறைந்திருந்தமை எனது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இளம் பெண்களுக்கு மாதவிடாய்க் குழப்பங்களும் ஏற்படுவதுண்டு.
"உங்களுக்கு தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பி வேலை செய்வது குறைவு போல இருக்கு. இரத்தம் பரிசோதித்துப் பார்ப்போம்" என்றேன்.
"எனக்கு தொண்டையில் வீக்கம் ஒன்றும் கிடையாதே. ஏன் தைரொயிட் நோய் என்கிறீர்கிறீர்கள்?" என என் முடிவில் சந்தேகம் எழுப்பினார்.

தைரொயிட் என்பது எமது தொண்டைப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. இதனால் தைரொயிட் நோய் என்றாலே தொண்டைப் பகுதியில் கழலை என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாயிருக்கிறது.


பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்த அயடின் குறைபாட்டால் வரும் தொண்டைக் கழலை (Goitre) தான் பலரின் ஞாபகத்திற்கு வரும். எனவே அவரது சந்தேகத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது.


சுரப்பியில் வீக்கம் எதுவும் இல்லாமலே பல தைரொயிட் நோய்கள் வருவதுண்டு. அது
  • குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் கைபோதைரொயிடிசம் (Hypothyroidism),
  • அதிகம் சுரப்பதால் ஏற்படும் கைபேர்தைரொயிடிசம் (hyperthyroididm) ஆகியவை இத்தகையவே.

தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பியில் வீக்கம் (கழலை)இருந்தால் அது முன்பு குறிப்பிட்ட
  • அயடின் குறைபாட்டால் ஏற்படும் கட்டியாகவோ, அல்லது
  • நீர்க் கட்டியாகவோ (Cyst) இருக்கலாம்.
  • புற்று நோயாலும் அவ்விடத்தில் கட்டி தோன்றலாம்.
எனவே தைரொயிட் சுரப்பியில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படலாம் என்பதை நாம் உணர வேண்டும். அவற்றிற்கு வெவ்வேறு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. எத்தகைய சிகிச்சை தேவையென வைத்தியர்தான் தீர்தானிக்க முடியும்.
மேற் கூறிய பெண்ணுக்கு இரத்தப் பரிசோதனைகள் செய்தபோது அது சுரப்பியின் குறைச் செயற்பாட்டால் வரும் நோய் (Hypothyroidism) என்பது தெளிவாகியது. தைரொக்சின் (Thyroxine) மாத்திரைகள் கொடுத்தபோது அறிகுறிகள் நீங்கிக் குணமாகியது.

ஆயினும் அம் மருந்தை அவர் பெரும்பாலும்
  • வாழ்நாள் முழுவதும் உபயோகிக்க வேண்டி நேரிடும்.
  • காலையில் வெறும் வயிற்றில் போட வேண்டிய மாத்திரை அது.
  • மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து மருந்தின் அளவை தீர்மானிக்க வேண்டியிருக்கும்.

தைரொயிட் நோய்கள் பலவிதம் - கட்டியில்லாமலும் கூட

"கை கால் உளைவு, களைப்பு, உடம்பு நோ, சோம்பல், தூக்கக் குணம், மலச்சிக்கல், உடம்பு பாரமாக இருக்கு, தசைப்பிடிப்பு ...." என்று சொல்லிக் கொண்டே போனாள்.

அந்தப் பெண்மணியின் நோய் அறிகுறிகள் தண்டவாளம் போல முடிவின்றி நீண்டு கொண்டே போயின.

அவரை நோட்டமிட்டேன்.

தைரொயிட் ஹோர்மோன் குறைவாகச் செயற்படல்

வயது அய்ம்பது இருக்கும். 'வதனமே சந்திரபிம்பமோ' என்பது போல உருண்ட வட்ட முகம், கொழுத்த உடம்பு, வரண்ட தோல், சற்றுக் கரகரத்த குரல், அதிகம் கொட்டியதால் அடர்த்தி குறைந்த தலை முடி.

குறைவாகச் செயற்படும் தைரொயிட்

அவர் கூறிய அறிகுறிகளையும், நான் அவதானித்த குறிகளையும் இணைத்துப் பார்க்கும் போது இவருக்கு தைரொயிட் சுரப்பியின் செயற்பாடு குறைவாக இருக்கலாமோ எனத் தோன்றியது.
இவற்றுடன்
  • குளிர் சுவாத்தியத்தைத் தாங்க முடியாத தன்மை,
  • மறதி,
  • மனச் சோர்வு,
  • தசைப் பிடிப்பு போன்ற அறிகுறிகளும் சேர்ந்திருப்பதுண்டு.
நாடி பிடித்துப் பார்த்தபோது நாடித் துடிப்பு சற்றுக் குறைந்திருந்தமை எனது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இளம் பெண்களுக்கு மாதவிடாய்க் குழப்பங்களும் ஏற்படுவதுண்டு.

"உங்களுக்கு தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பி வேலை செய்வது குறைவு போல இருக்கு. இரத்தம் பரிசோதித்துப் பார்ப்போம்" என்றேன்.

"எனக்கு தொண்டையில் வீக்கம் ஒன்றும் கிடையாதே. ஏன் தைரொயிட் நோய் என்கிறீர்கிறீர்கள்?" என என் முடிவில் சந்தேகம் எழுப்பினார்.

தைரொயிட் என்பது எமது தொண்டைப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. இதனால் தைரொயிட் நோய் என்றாலே தொண்டைப் பகுதியில் கட்டி அல்லது கழலை இருக்கும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாயிருக்கிறது.



பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்த அயடின் (Iodine) குறைபாட்டால் வரும் தொண்டைக் கழலை (Goitre) தான் பலரின் ஞாபகத்திற்கு வரும். எனவே அவரது சந்தேகத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது.




சுரப்பியில் வீக்கம் எதுவும் இல்லாமலே பல தைரொயிட் நோய்கள் வருவதுண்டு. அது
  • குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் கைபோதைரொயிடிசம் (Hypothyroidism),
  • அதிகம் சுரப்பதால் ஏற்படும் கைபேர்தைரொயிடிசம் (hyperthyroididm) ஆகியவை இத்தகையவே.
அதீத தைரொயிட் செயற்பாடு

தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பியில் வீக்கம் (கழலை)இருந்தால் அது முன்பு குறிப்பிட்ட
  • அயடின் குறைபாட்டால் ஏற்படும் கட்டியாகவோ, அல்லது
  • நீர்க் கட்டியாகவோ (Cyst) இருக்கலாம்.
  • புற்று நோயாலும் அவ்விடத்தில் கட்டி தோன்றலாம்.
எனவே தைரொயிட் சுரப்பியில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படலாம் என்பதை நாம் உணர வேண்டும். அவற்றிற்கு வெவ்வேறு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. எத்தகைய சிகிச்சை தேவையென வைத்தியர்தான் தீர்தானிக்க முடியும்.

தொண்டையில் கழலையுள்ள தைரொயிட் (Goiter)

இது பொதுவாக கடற்கரையிலிருந்து தொலை தூரத்தில் இருக்கும் பகுதியில் அயடின் குறைவான பகுதியில் உள்ளவர்களுக்கே வருகிறது. இதைத் தடுக்கவே இப்பொழுது அயடின் கலந்த உப்பு பாவனையில் உள்ளது.
இத்தகைய கட்டி பொதுவாக
  • பெண்களில் அதிகமாக இருக்கும்
  • பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதிகம்
  • ஒரே குடும்பத்தில் பலருக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம்
  • உணவில் போதிய அயடின் இல்லாதவர்களுக்கு வரும்
மேற் கூறிய பெண்ணுக்கு இரத்தப் பரிசோதனைகள் செய்தபோது அது சுரப்பியின் குறைச் செயற்பாட்டால் வரும் நோய் (Hypothyroidism) என்பது தெளிவாகியது. தைரொக்சின் (Thyroxine) மாத்திரைகள் கொடுத்தபோது அறிகுறிகள் நீங்கிக் குணமாகியது.

ஆயினும் அம் மருந்தை அவர் பெரும்பாலும்
  • வாழ்நாள் முழுவதும் உபயோகிக்க வேண்டி நேரிடும்.
  • காலையில் வெறும் வயிற்றில் போட வேண்டிய மாத்திரை அது.
  • மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து மருந்தின் அளவை தீர்மானிக்க வேண்டியிருக்கும்.
நன்றி : டாக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Saturday, 23 June 2012

நகைச்சுவை டாக்டர்கள் இல்லாமல் தத்தளிக்கும் தமிழ் சினிமா!! ஒரு சிறப்பு பார்வை..

ரு திரைப்படம் என்றாலே அதில் நகைச்சுவை  கட்டாயம் குடி கொண்டிருக்கும் இல்லையென்றாலும் குடியமர்த்தப்படும்.1931 ம் ஆண்டு அக்டோபர் 31 ந் தேதி தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளிவந்தது.அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமா பல பரிணாமங்களைத் தாண்டி வந்திருக்கிறது.திரையில் ஜொலித்த எத்தனையோ நடிகர்களையும் நடிகைகளையும் நாம் பார்த்து ரசித்துப் போற்றி தத்தம் இதயக் கோயிலில் வைத்து பூசித்திருக்கிறோம். ஒரு திரைப்படத்திற்கு நாயகன் நாயகி அவசியம். அதற்கடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த கதா பாத்திரம் என்னவென்று பார்த்தால் அது நகைச்சுவை பாத்திரம் தான். அந்தப் பாத்திரத்தில் நடித்த நடிகர்களையும் நாம் நாயகனுக்கு இணையாக போற்றியிருக்கிறோம் என்பதில் மாற்றுக்கருத்திருக்காது.

                    ஒரு படத்தின் வெற்றிக்கு எப்படி நாயகன், நாயகியின் நடிப்பு முக்கியமோ அதைப் போலவே அப்படத்தின் நகைச்சுவை நடிகனின் பங்கும் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. கறுப்பு வெள்ளைப் படங்களில் நகைச்சுவைக்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்தார்களோ அந்த முக்கியத்துவம் இன்னும் தமிழ் திரைப்பங்களில் குறையாமல்தான் இருக்கிறது.  

                  கறுப்பு வெள்ளை சினிமாக்கள் ரசிகர்களை சிரிக்க வைப்பதற்கு மட்டும் நகைச்சுவையை பயன்படுத்தாமல் அதன் மூலம் சமுதாயக் கருத்துக்களையும் சொல்லிவந்திருக்கிறது. ஆனால் இன்றைய திரைப்படத்தில் வரும் நகைச்சுவையில் சமுதாயக் கருத்துக்கள் முற்றிலும் காணாமல் போயிருக்கிறது.தமிழில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வந்து போயிருந்தாலும் நம் மனதில் இன்றும் நிலைத்து நிற்பவர்கள் என்று சொன்னால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேல், சந்தானம் போன்றோர்கள் மட்டுமே..   
                    கறுப்பு வெள்ளைப் படங்களில் கலைவாணரின் ஒவ்வொரு நகைச்சுவையும் பல கருத்துக்களைச் சொல்லும். சந்திரபாபுவின் பாடல்களும் பல தத்துவங்களை சொல்லிபோகும். நாகேஷ் தனது அசாதாரமான நடிப்பால் கொள்ளை கொண்டார். உடல் அசைவுகளின் மூலம் நகைச்சுவையை திரையில் புகுத்தியவர் என்றே சொல்லலாம். கறுப்பு வெள்ளை ஆதிக்கம் முடியும் தருவாயில் திரைத்துறையில் நுழைந்தவர் கவுண்டமணி.அவர் திரயில் நுழைந்த வருடம் முதல் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நகைச்சுவை நடிகனாகத் திகழ்ந்தார். அவரோடு ஜோடி சேர்ந்த செந்தில் 25 வருட சினிமாவை ஆட்கொண்டார். அவர்கள் இருவரும் உச்சத்திலிருந்த போது பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட விவேக் தனக்கென பாணியை வைத்துக்கொண்டு மெல்ல வளர்ந்து கொண்டிருக்க, ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப் பட்ட வடிவேலு அசுர வளர்ச்சி அடைந்தார். நாகேஷைப் போல உடல் அசைவுகளும் அப்பாவித்தனமான அவரது உரையாடலும் பாமரனையும் சிரிக்க வைத்தது.

                       தமிழ்த் திரையுகலம் ரஜினி கமல் போன்றோரை மூத்த நாயகர்கள் என்று பட்டியலிட இளைய நாயகர்களாக விஜய், அஜீத் உள்ளே நுழைந்தனர். அவர்களின் படங்களில் விவேக்கும், வடிவேலும் இடம் பிடிக்க கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக இன்னும் இருவரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சம்பளம் அதிகமாக மற்றும் கால்சீட் கிடைக்காமல் போக மாற்று நகைச்சுவை நாயகனை சில இயக்குனர்கள் அறிமுகம் செய்ய அதில் கருணாஸ் மற்றும் கஞ்சாகருப்பு, சந்தானம் போன்றோரே சிரிக்க வைத்தனர். அப்போது நகைச்சுவைக்கும் அடுத்த தலைமுறை உருவாகிவிட்டது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

      மாறாக கருணாஸ் ரசிகர்களை தொடர்ந்து சிரிக்க வைக்க முடியாமல் தடுமாற திடீரென நாயகனாகி இப்போது நடித்து வருகிறார். கஞ்சா கறுப்பு உச்சக்கட்ட காமெடியில் நடித்தால் கூட ரசிகர்கள் சிரிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதனால் அவரும் இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்.ஆனால் சந்தானம் யாரும் எதிர்பாராத விதமாக தனது டைமிங் காமெடியில் அசத்தி   இளைய தலைமுறையினர் நடிக்கும் எல்லாப் படங்களில் ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

            சந்தானம் சென்னை பாஷை மட்டுமே பேசுவதால் மற்ற மாவட்ட ரசிகர்களுக்கு அவரது நகைச்சுவை புரியாமல் போகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் சென்னை சுற்றுப்புற ரசிகர்கள் சந்தானம் என்ன சொன்னாலும் எதைச் செய்தாலும் ரசிக்கிறார்கள்.

       
             கவுண்டமணி செந்தில் இல்லாத வெற்றிடத்தை எப்படி வடிவேலுவும் விவேக்கும் நிரப்பினார்களோ அப்படி விவேக்கும் வடிவேலும் இல்லாத வெற்றிடத்தை சந்தானத்தால் நிரப்ப முடியாது. காரணம் வடிவேலு நகைச்சுவை விவேக் நகைச்சுவை என்று பிரித்து இனம் காட்டலாம் அப்படி சந்தானத்தின் நகைச்சுவை இது என இனம் காட்ட முடியாது. படத்தின் ஏதாவதொரு ஒரு காட்சியைத்தான் காட்ட முடியும். இன்னும் சொல்லப்போனால் சந்தானம் தனியாக நகைச்சுவை நடிகனாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நாயகனின் நண்பனாக நடித்து அவ்வப்போது சிரிக்க வைக்கிறார் என்றே சொல்லலாம். வடிவேல் போலவோ விவேக் போலவோ காமெடிக்கென்று தனியாக ஸ்கிரிப்ட் எழுதப் பட்டு அவர் நடிப்பதில்லை. கதையோடுதான் பயனப்பட்டுக்கொண்டிருக்கிறார். பெரும்பாலும் சென்னையில் நடக்கும் கதைப்படி நாயகனுக்கு நண்பனாக வந்தால் மட்டுமே அவரது டைமிங் காமெடி எடுபடுகிறது. இன்றைய சூழலில் இவர் மட்டும்தான் காமெடி நடிகர் என்றொரு நிலை இருக்கிறது. அதனால் அவரும் தொடர்ந்து ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார். அனைத்து முன்னணி இளைய நடிகர்களோடு நடிக்க வேறு காமெடி நடிகர் இல்லாதது சந்தானத்தின் மார்க்கெட் உயர காரணமாகிறது. வடிவேல் பிசியாக இருந்தால் விவேக் நடிப்பார். விவேக் பிசியாக இருந்தால் வடிவேலு நடிப்பார் என்ற நிலை இப்போதில்லை.

       வடிவேலு முன்னணி நடிகர்களோடு நடித்தாலும் சின்ன சின்ன கிராமத்துப் படங்களிலும் நடிப்பார். ஆனால் சந்தானம் கிராமத்து படங்களில் நடிப்பதில்லை. அப்படி நடித்தாலும் அவரது சென்னை பாஷை அதற்கு பொருந்தாமல் போகிறது. வடிவேலு சொந்தப் பிரச்சனை காரணமாக நடிக்காமல் இருக்க, கிராமத்துப் படங்கள் சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்க நகைச்சுவை நடிகர் இல்லாமலேயே இருக்கிறார். வடிவேலு நடிக்க வேண்டிய பாத்திரங்களில் இப்போது மைனா படத்தின் மூலம் தேசிய விருது வாங்கிய நடிகர் தம்பி ராமையா நடித்துக் கொண்டிருக்கிறார். எப்படி பார்த்தாலும் விவேக் இடத்தை நிரப்ப சந்தானம் என்றாலும் கூட வடிவேலு இடத்தை நிரப்ப ஆள் இல்லாமல்தான் தடுமாறிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday, 20 June 2012

அறிவியல் துறை மாணவர்கள் சிறந்த இளநிலை பட்ட படிப்பை தேர்வு செய்வது எப்படி?

பி.எஸ்சி., விவசாயம்
பல்வேறு தொழிற்துறைகள் இருந்தபோதிலும் நாட்டின் முதுகெலும்பாக விவசாயமே திகழ்கிறது. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியால் சுதந்திரத்திற்குப் பின் நாம் விவசாயத்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
விவசாயத்தில் திட்டமிட்ட நீர்ப்பாசன முறை, புதியரக விதைகள், வேதி உரங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொழிற்துறை வளர்ச்சியில் விவசாயத் தொழில்நுட்ப வல்லுனர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். 

பி.எஸ்சி., விவசாய படிப்பில், விவசாய வர்த்தக நிர்வாகம், அக்ரிகல்சுரல் பயோடெக்னாலஜி, ரசாயனம், பொருளாதாரம், ஏற்றுமதி மேலாண்மை, கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சி, இந்திய பாரம்பரியம், மார்கெட்டிங் மற்றும் சர்வதேச வர்த்தகம், வானிலை, பிராஜக்ட் அனலைசிஸ், புள்ளியியல், அக்ரோ இண்டஸ்ட்ரியல் என்டர்பிரைசஸ், அக்ரோனமி, அப்ளைடு என்டோமாலஜி, அப்ளைடு பிளான்ட் பேத்தாலஜி போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன.

இத்துறையை தேர்ந்தெடுப்பவர்கள், அரசு விவசாய அதிகாரியாகவும், விவசாயம் தொடர்பான தொழிற்சாலைகளில் லேண்ட்ஸ் கேப் டிசைனர்களாகவும், ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. பல்வேறு விவசாய பல்கலைகழகங்களில் இத்துறையில் முதுநிலைப்பட்டப் படிப்பும், பி.எச்டி., படிப்புகளும் உள்ளன.

பி.வி.எஸ்சி.,
உலகிலேயே கால்நடைகள் அதிகமுள்ள நாடு இந்தியா. கிராம வளர்ச்சியில் கால்நடைகளும், பால்பொருட்களும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. செல்லப்பிராணிகள், கோழிகள், மீன்கள், பறவைகள், விலங்குகளை பாதுகாப்பான முறையில் வளர்க்க கால்நடை மருத்துவர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். மேலும் பண்ணைகளை பராமரித்தல், விலங்குகளை பாதுகாத்தல் சமூகத்திற்கு முக்கியமானதாகும்.

கால்நடைகளுக்கு பொதுவாக மாஸ்டிட்டிஸ், புரூ செல்லோசிஸ், பன்றி காய்ச்சல், அக்கி நோய்வகைகள், ஆந்த்ராக்ஸ், லெப்டோஸ்பைரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படுவதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. அம்மை குத்துதல், தொற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பளித்தல் போன்ற பணிகள் மட்டுமல்லாது ஆந்த்ராக்ஸ், டியூபர்குளோசிஸ், புரூசெல்லோசிஸ், கேனைன் டிஸ்டம்பர் மற்றும் ரேபிஸ் முதலான நோய்களால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து, மற்ற விலங்குகளுக்கும் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க அவற்றை தனிமைப்படுத்துதல், தொற்றுநோய்கள், இன்பர்டிலிட்டி, ஊட்டச்சத்து குறைவு போன்றவற்றுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஐந்தாண்டு படிப்பான கால் நடை மருத்துவத்தில் அனாடமி, பிசியாலஜி, ஹிஸ்டாலஜி, பார்மகாலஜி, மைக்ரோபயாலஜி(பாக்டீரியாலஜி, வைராலஜி, பாரசைட்டாலஜி உட்பட) பேத்தாலஜி போன்ற பிரி கிளினிக்கல் பாடங்களும், இன்டர்னல் மெடிசின், சர்ஜரி, பிரிவென்டிவ் மெடிசின் போன்ற கிளினிக்கல் பாடங்களும் உள்ளன. சிகிச்சை அளிக்க பயிற்சியும் வழங் கப்படுகிறது. புண்கள், எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அறுவை சிகிச்சை முறைகளும்,ரேடியாலஜி, அனஸ்தீசியாலஜி, ஆப்சஸ்டட்ரிக்ஸ் போன்ற நவீன மருத்துவ நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இப்படிப்பு முடிந்தவுடன் ஆறு மாத பயிற்சி அவசியம்.

கால்நடைகள், செல்லப்பிராணிகள், மிருகக் காட்சி சாலைகளில் உள்ள காட்டு விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கால்நடை மருத்துவர்கள் சிறந்து விளங்கலாம்.இத்துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. இதில் சிறந்து விளங்க முதுநிலைப்பட்டமோ, சூப்பர்ஸ்பெஷாலிட்டி படிப்போ தேவையில்லை. பலர் இப்படிப்பில் இளநிலையை முடித்தவுடனே பணியில் சேர்ந்து விடுகின்றனர். இதில் முதுநிலைப் பட்டப் படிப்பில் சேர விரும்பினால் எளிதில் இடம் கிடைக்கும்.

அனிமல் ஜெனிடிக்ஸ், அனாடமி, ஹஸ்பன்ட்ரி, எகனாமிக்ஸ், ரீபுரடக்சன், டெய்ரி இன்ஜினியரிங், பேத்தாலஜி, பாரசிட்டாலஜி, நியூட்ரிஷியன், பிசியாலஜி மற்றும் போட்டர் டெக்னாலஜி போன்ற பாடத்திட்டங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பை தேர்ந்தெடுக்கலாம். கால்நடை மருத்துவத்தை தவிர்த்து பயோடெக்னாலஜி, ஜெனிடிக் இன்ஜினியரிங், பயோ இன்பர்மேட்டிக்ஸ் போன்ற துறைகளிலும் முதுநிலைப்பட்டப்படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளராகவும் உருவாகலாம்.

மாநில அரசின் கால்நடை மையங்கள், கால்நடைப் பண்ணைகள், பால் தொழிற்சாலைகள், ராணுவம் (கால்நடைப் பிரிவுகளுக்கு), பார்மசூட்டிக்கல் கம்பெனி, பால்பண்ணைகள், கோழிப் பண்ணைகள், மிருகக்காட்சி சாலைகள், சரணாலயங்கள், விலங்கு பாதுகாப்பு அமைப்புகள், இறைச்சி ஆய்வகங்கள், பொது இன்சூரன்ஸ், குதிரைப்பந்தய கிளப்புகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் இத்துறையை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. தனியாக மருத்துவமனை தொடங்கியும் சாதிக்கலாம்.

தோட்டக்கலை..
காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களுக்காக வளர்க்கப்படும் தாவரங்களை பற்றிய படிப்பே தோட்டக்கலை (ஹார்ட்டிகல்சர்). அலங்கார செடிகள், மரங்கள், தோட்டங்கள் பற்றியும் இப்படிப்பில் கற்றுத் தரப்படுகிறது. இதில் பல்வேறு முக்கிய பிரிவுகள் உள்ளன.

ஆர்போரிகல்சர் அலங்கார மரங்கள் மற்றும் செடிகள் வளர்த்து பராமரித்தல் பற்றியது.புளோரிகல்சர் பூக்கள் நிறைந்த தாவரங்களை வளர்த்தல் மற்றும் விற்பனை செய்தல்ஆலரிகல்சர் காய்கறிதாவரங்களை பயிரிடுதல் மற்றும் விற்பனை செய்தல்போமாலஜி பழங்கள் உற்பத்தி மற்றும் விற்பனைவிட்டிகல்சர் திராட்சை உற்பத்தி மற்றும் விற்பனை

விவசாய பல்கலைக்கழகங்களில் பி.எஸ்சி., ஹார்ட்டிகல்சர் மற்றும் பி.டெக்., ஹார்ட்டிகல்சர் படிப்புகள் உள்ளன.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தானிய உற்பத்தியாளர், தாவர பராமரிப்பு நிபுணர், ஆராய்ச்சியாளர், திசு வளர்ப்பு நிபுணர் மற்றும் பல்வேறு பதவிகளில் இப்படிப்பை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.

மேலும் லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர், கட் பிளவர் இன்டஸ்ட்ரி, பிளான்ட் நர்சரி, பிளான்ட் பயோடெக்னாலஜி, புரூட் அண்டு வெஜிடேபிள் பிராசசிங், பெர்டிகேசன், பார்மசூட்டிகல் பிளான்ட் கல்டிவேசன், பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் போன்ற இடங்களில் இத்துறையை சேர்ந்தவர்கள்பணிபுரியலாம்.

பி.எப்.எஸ்சி.,
மீன் மற்றும் இதர கடல்வாழ் உயிரினங்கள் மனிதனின் உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றன. தொழிற்சாலைகளுக்கென பிடிக்கப்படும் மீன்கள் நேரடியாக உணவுப்பொருளாக பயன்படுத்தப் படுவதில்லை.

மிக நீண்ட கடற்கரையை கொண்ட இந்தியா மீன்பிடி தொழிலில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது. மீன் தொழிற்கூடங்களும் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. மீன்களை உரிய முறையில் பாதுகாத்தல், பதப்படுத்துதல், டின்களில் அடைத்தல் தவிர இது தொடர்பான விற்பனை மற்றும் ஆராய்ச்சி பிரிவுகளில் திறன்மிகு வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர். கடல்வாழ் உயிரினங்களை பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வமும், அறிவியல் மனப்பாங்கு கொண்டவர்களுக்கு இத்துறை பொருத்தமானது.

நான்காண்டு பி.எஸ்சி., பிஷரிஸ் படிப்பில் அக்குவாகல்சர், பிஷரி பயாலஜி, பிராசசிங் டெக்னாலஜி, பிஷரி ஹைட்ரோகிராபி, பிஷிங் டெக்னாலஜி, பிஷரி இன்ஜினியரிங் அண்டு மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன. இத்துறையில் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. தேசிய அளவில் கூட இப்படிப்பில் குறைந்த இடங்களே உள்ளன. அரசு மீன்வளத் துறை, கடல் உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மீன்பிடி சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மீன்பண்ணைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் முதலியவற்றில் இத்துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. சுயதொழில் தொடங்கியும் சாதிக்கலாம்.

பிஷரிஸ் பயாலஜி அண்டு கேப்சர் பிஷரிஸ், அக்குவாகல்சர், பிஷ்ஷிங் டெக்னாலஜி அண்டு பிஷரிஸ் இன்ஜினியரிங், பிஷ் பிராசசிங் டெக்னாலஜி, பிஷரிஸ்என்விரான்மென்ட், பிஷரிஸ் எகனாமிக்ஸ் அண்டு ஸ்டேட்டிக்ஸ், பிஷரிஸ் எக்ஸ்டன்சன் போன்ற பாடப்பிரிவுகளில் முதுநிலை படிப்பை தொடரலாம்.

பி.எஸ்சி., பாரஸ்ட்ரி
காடுகள், தோட்டங்கள், இயற்கை வளங்கள் நிர்வகிப்பது தொடர்பான கலை மற்றும் அறிவியல் படிப்பு பி.எஸ்சி., பாரஸ்ட்ரி. காடு வளர்ப்புக்கலை என்பது காடுகள் மற்றும் செடிகள், மரங்களை வளர்த்தல், பாதுகாத்தல் தொடர்பான அறிவியல் படிப்பு. தற்போது காடுகள், கட்டுமானப்பணிக்கு தேவைப்படும் மரங்களுக்காக வளர்க்கப்படுகின்றன. இதுதவிர விலங்குகளின் உறைவிடமாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை குறைக்கவும் காடுகள் பயன்படுகின்றன. 

ஒரு செமஸ்டர் பயிற்சியுடன் கூடிய நான்காண்டு பி.எஸ்சி., படிப்பில், அக்ரோ பாரஸ்ட்ரி அண்டு சோஷியல் பாரஸ்ட்ரி, அக்ரோனமி, பயோகெமிஸ்ட்ரி, எகனாமிக்ஸ், என்டமாலஜி, என்விரான்மென்டல் பாரஸ்ட்ரி, எக்ஸ்டன்சன் எஜூகேசன் அண்டு கம்யூனிகேசன் மெத்தட்ஸ், பேத்தாலஜி, பாலிசி அண்டு லெஜிஸ்லேஷன், புரொடக்ஷன் எகனாமிக்ஸ் அண்டு மார்கெட்டிங், சில்விகல்சர் பிராக்டிஸ் ஆகிய பாடங்கள் உள்ளன.

இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ், அரசு வனத்துறை, காடுகள் தொடர்பான தொழில் நிறுவனங்கள், வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள், நகர்ப்புற மர வளர்ப்பு, பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் முதலியவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன. டேராடூனில் உள்ள இந்தியன் கவுன்சில் ஆப் பாரஸ்ட்ரி ரிசர்ச் அண்டு எஜூகேசன் மற்றும் போபாலில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் மேனேஜ்மென்ட் போன்ற சில பல்கலைக்கழகங்களில் பாரஸ்ட்ரி தொடர்பான முதுநிலை படிப்பும், ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

குடல் புண் (ULCER)என்றால் என்ன? - ஒரு விழிப்புணர்வு ஆய்வு....


Gastroscopy procedure
குடல் புண் (Ulcer) பற்றி தெரியுமா உங்களுக்கு ?
யிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும்பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா?நெஞ்செரிச்சல் உள்ளதாவயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாஇவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் இருக்கலாம்.  

குடல் புண் என்றால் என்ன?
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.
புண் எதனால் ஏற்படுகிறது?

குடல் புண் தோன்றுவதற்கரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை இருப்பினும் புகைப்பிடித்தல்,புகையிலையைச் சுவைத்தல்மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன. சாலிசிலேட் மருந்துகள்ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள்காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள்வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.

குடல் புண் வகைகள்: 
குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .
2) சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.

குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?
காரணமின்றி பற்களைக் கடித்தல்துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலிமார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாகக் கொள்ளலாம்.
இந்தப் பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள்சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ் வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாகக் காணப்படுகிறது.

சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடுஅமைதியற்ற நிலை,பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.

ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்துசில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

சிலருக்கு இவ்வலிகுறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றிபல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின்,அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.

மருத்துவம் செய்யாவிட்டால்...
குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல்ரத்தக் கசிவும் சமயத்தில் உதரப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாகஅரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார்வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால்இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டுவயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.ஆகவேவயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. அதனால்வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.
சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.இதுவும்அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்..

செய்யக்கூடாதவை:
    • புகைபிடிக்கக் கூடாது.
    • மதுகாபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.
    • அதிகமாகச் சாப்பிடக்கூடாது.
    • பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
    • சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.
    • சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோவளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
    • இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.
    • மனநிலையை தடுமாற விடக் கூடாது.
    • அவசரப்படக் கூடாது.
    • கவலைப்படக் கூடாது.
    • மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
செய்ய வேண்டியவை:
    • குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்
    • தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
    • அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.
    • தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
    • மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
    • இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.
    • இருக்கமாக உடை அணியக் கூடாது.
    • மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம்.
    • யோகாசனம்தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.
    • எப்போதும் ஜாலியா இருக்க வேண்டும்
    • அலுவலக வேலைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும்.
    • முறையாகஇறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.
    • சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
    • குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?
    • அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால்கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும்புகை பிடித்தல்புகையிலையைச் சுவைத்தல்மது முதலியவற்றை விட வேண்டும். அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும். இவை தவிரதற்காலத்தில் புரோபான்தளின்சிமிடிடின்ராணிடிடின், •பாமாடிடின்சுரால்பேட்முதலியவும் பயன்படுகிறது,சிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும்.
    • குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்ன?பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள்ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம். சத்தான சரிவிகித உணவு.
    • குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.
    • காபிமதுகாற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
    • டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.
    • வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.
    • மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
    • பச்சையானநன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
    • பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
    • பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.
நன்றி : Dr.அம்புஜவல்லிதஞ்சாவூர்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Monday, 18 June 2012

வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்என்ன?- ஒரு சிறப்பு பார்வை ....


‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் எங்களுக்கு(இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு)  என்ன நிகழ்கிறது?
 
 
பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற செல்வம் எங்களுக்கு சீரழிந்து போயிருக்கும். கை நிறைய பணமும்,உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து சிறிது ஆராய்வோம்.
 
 
மனதில் எதிர்கால வாழ்க்கையைக் குறித்த கற்பனை கோட்டைகளை எழுப்பிவிட்டு இந்தியர்கள் வளைகுடா நாடுகளை நோக்கி பறக்கின்றனர். சூட்டினால் தகிக்கும் பாலைவன மண்ணில் ஒரு பூலோக சுவர்க்கத்தை தங்களது வாழ்க்கையில் கட்டலாம் என்ற நம்பிக்கையில் தாயகத்தை துறந்து அந்நிய தேசத்திற்கு செல்லுகின்றனர். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் தாம் சந்திக்கவிருக்கும் நெருக்கடிகள் ஒவ்வொன்றாக தென்பட துவங்குகிறது.
 
வானமும், பூமியும் கைவிட்ட உலகம். நதிகளும், வயல் வரப்புகளும், மரங்களும், கிளிகளும் இல்லாத நாடு. குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியே வந்தால் மண்டையை பிளக்கும் சூடு. இதனை விட சொந்த ஊரையும், குடும்பத்தையும் பிரிந்த வேதனை. மேலும் அவர்களது பாதுகாப்புக் குறித்த கவலை.
 
ஒரு மரத்தைப் பறித்து இன்னொரு நாட்டில் கொண்டு போய் நட்டால் ஏற்படும் அதே நிலைமைதான் வளைகுடா வாழ் இந்தியர்களின் நிலைமையும்.
 
மாறிய காலச்சூழலுடன் ஒத்துப்போகாத உடல்நிலை அவர்களது முக்கிய பிரச்சனையாக மாறுகிறது. காற்று, நீர், உணவு இவற்றில் ஏற்படும் திடீர் மாற்றம் செடி கொடிகளைப் போலவே அவர்களது மனமும் வாடிப்போகிறது. இந்த வாட்டத்தை  எதிர்கொள்ள முடியாமல் வீழ்ந்து போவோரும் உண்டு.
 
கவலைகளுக்கும்,நெருக்கடிகளுக்கும் மத்தியில் அவர்கள் தங்களது சொந்த ஆரோக்கியத்தைக் குறித்து மறந்து போகின்றார்கள். முற்றிலும் வித்தியாசமான வாழ்க்கை முறை வளைகுடா வாழ் இந்தியர்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்ப்போம்.
 
 
சிண்ட்ரோம் எக்ஸ்
 
 
வளைகுடா வாழ் இந்தியர்களை காத்திருக்கும் நோய்களின் கூட்டுப் பெயர் தாம் சிண்டோம் எக்ஸ். இதனை செல்லப் பெயர் என நீங்கள் கருதினாலும் தவறில்லை.
 
நீரழிவு(சர்க்கரை வியாதி), கொலஸ்ட்ரோல், இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகிய நோய்கள் அடங்கியதுதான் சிண்ட்ரோம் எக்ஸ். இவையெல்லாம் வாழ்க்கை முறை மாறுவதால் உருவாகும் நோய்களாகும். மிக விரைவில் வளைகுடா வாசிகள் இந்த நோய்களின் பிடியில் சிக்கிவிடுகின்றார்கள்.
 
வாழ்க்கை முறை ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை இதில் இருந்தே விளங்கிக் கொள்ள முடியும்.
வளைகுடா வாசிகளின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் உடலின் செயல்பாடுகளை ஒவ்வொன்றாக பாதிக்கும் வேளையில்தான் நோய்களும் ஒவ்வொன்றாக குடிக்கொள்கிறது.
 
சொந்த உடல்நிலைக் குறித்து அவர்களில் பெரும்பாலோர் கவலைப்படுவதில்லை. இவ்வாறு சிண்ட்ரோம் எக்ஸ் அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை கழிக்கின்றார்கள் வளைகுடா வாசிகள்.
 
 
வளைகுடா வாசிகளை(வளைகுடா வாழ் இந்தியர்களை) நோயில் தள்ளும் காரணிகள்
 
 
மனச்சோர்வு(depression) நோய்களை உருவாக்கும் மனோரீதியான பிரச்சனைகள்
 
நாட்டையும், வீட்டையும் துறந்து செல்லும் இந்தியர்களை முதலில் பாதிப்பது நெருக்கடிகளாகும். குடும்பத்தைக் குறித்த கடுமையான கவலை, புதிய இட சூழலுடன் பொருந்திப் போவதில் ஏற்படும் சிரமம், பணி இடங்களில் சந்திக்கும் பிரச்சனைகள், பணிச் சுமை, வேலையில் அதிருப்தி, தனிமை ஆகியன மனநெருக்கடிகளை உருவாக்குபவையாகும்.
ஓய்வு, உல்லாசம், நிம்மதியான உறக்கம், உடற்பயிற்சி, நட்புறவுகள் இவற்றையெல்லாம் புதிதாக வளைகுடா செல்லும் நபர் இழக்கவேண்டிய நிலைமை உருவாகிறது.
 
மன நெருக்கடிகளுக்கு ஆளாகும் சிலர் நிம்மதியை தேடுவதாக கூறி புகை, மதுபானம் போன்ற தீயப்பழக்கங்களுக்கு அடிமையாகிப் போகின்றனர். உள்ளத்திற்கும், உடலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதால் மன நெருக்கடிகளின் பலன் உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது.
 
 
மனோரீதியான நெருக்கடிகள் காரணமாக வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றத்தால் உருவாகும் நோய்கள் ஒவ்வொன்றாக வளைகுடா வாசிகளை பாதிக்கத் துவங்கின்றன.
 
வளைகுடா வாழ் இந்தியர்களில் ஒரு குறிப்பிட சதவீதம் பேர் மனச்சோர்வால்(depression) பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலோர் இத்தகைய மனச்சோர்வுக்கு உரிய சிகிட்சையை பெற முயலுவதில்லை.
 
மன ரீதியான நெருக்கடிகளை சந்திக்கும் வேளையில் குடும்பத்தினரின் ஆதரவும், ஆறுதலும் கிடைக்காமல் போகும் பொழுது அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெரும்பாலும் இதன் இறுதி முடிவு தற்கொலையில் சென்று முடிவடைகிறது.
 
வளைகுடா நாடுகளில் தற்கொலை செய்வோரில் 43 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர் என புள்ளிவிபரம் கூறுகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக பின்வருவன சுட்டிக்காட்டப்படுகின்றன:
 
1.மோசமான பணி சூழல்
2.மோசமான வாழ்க்கை சூழல்
3.சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்காமை
4.பணி ஒப்பந்தங்களில் பிறழ்வு
5.பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை ஆகியவற்றின் காலாவதி முடியும் வேளையில் சந்திக்கும் பிரச்சனைகள்
6.ஏஜண்டுகளின் ஏமாற்று வேலைகள்
7.குடும்பத்தினரின் பிரிவு
8.கடன் உள்ளிட்ட பொருளாதார ரீதியான பிரச்சனைகள் ஆகியனவாகும்.
 
சுருக்கமாக கூறினால் வளைகுடாவசிகளின் மனதில் சிறகு முளைத்த கனவுகள் ஒவ்வொன்றாக கருகிப் போகின்றன.
எதற்கும் தீர்வு காணமுடியாத சூழல் உருவாகும் பொழுது தற்கொலையில் அபயம் தேடுகின்றார்கள். மேற்கூறிய பிரச்சனைகள் குறித்து முன்னரே அறிந்திருந்தால், அவற்றை கையாளும் பக்குவமும், பொறுமையும் இருந்தால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும். தற்கொலை எந்தப்பிரச்சனைக்கும் தீர்வு அல்ல என்ற புரிந்துணர்வு வேண்டும். இத்தகைய நபர்கள் மட்டுமே கடல் தாண்டி வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிப்பது சிறந்தது. அவ்வாறு இல்லையெனில், சொந்த நாட்டிலேயே தொழில் புரிந்து கிடைக்கும் சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டுவதுதான் உசித்தம்.
 
 
உணவு பழக்க வழக்கம்
 
சூழ்நிலைகள் அவர்களை மாற்றுகிறது என்பதுதான் சரியான காரணம்.
 
இட்லி-சாம்பார், தோசை-சட்னி, இவையெல்லாம் வளைகுடாவாசிகளில் பெரும்பாலோருக்கு கனவாக மாறிவிடுகிறது. காய்கறிகள் இங்கே கிடைக்காமலா உள்ளது? ஆனால், வேலை முடிந்து சோர்வாக வரும் பொழுது காய்கறிகளை நறுக்கி, தேங்காயை துருவி உணவு சமைக்க அலுப்புத் தோன்றும். ஆகவே குக்கரில் சாதம் தயாரித்து, ஏதேனும் ஒரு குழம்புடன் முடித்துக்கொள்ளும் போக்கே பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது சிக்கன் கறியாகும். தயாரிப்பதற்கு எளிது என்பதாலும், விலை மலிவு என்பது சிக்கனை தேர்வுச்செய்ய காரணமாகும். இதனை 2,3 நாட்கள் உபயோகிப்போரும் உண்டு. இவ்வாறு சிக்கன் அன்றாட வாழ்க்கையின் உணவாக மாறுகையில் கொலஸ்ட்ரோல் சிண்ட்ரோம் உடலை ஆளத்துவங்கும்.
 
வளைகுடாவாசியின் உடல் எடைபோட்டு க்ளாமர் முகத்தில் தெரிந்தாலே புரிந்துகொள்ளலாம் இது சிக்கனின் கொழுப்பு என்பதை. அதிக வருமானம் உடையோர் மீன் வகைகளை உண்பார்கள். இதுவும் கொலஸ்ட்ரோலை கை நீட்டி அழைக்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. காரணம் மாமிச உணவின் கொழுப்பை குறைக்க நார்ச்சத்துள்ள காய்கறிகளை இவர்கள் உபயோகிப்பதில்லை. இவ்வாறு பெரும்பாலோர் அதிக உடல் எடை பிரச்சனையை சந்திக்கின்றனர்.
 
சிக்கன் உணவின் அளவுக்கதிகமான உபயோகத்தால் மூல நோயால் அவதியுறுவோரும் உண்டு. மேலும் சுத்தமான குடிநீரை தேவைக்கேற்ப அருந்தாதும் இப்பிரச்சனையை உருவாக்குகிறது. கோடை காலங்களில் சூட்டையும், தாகத்தையும் தாங்கமுடியாமல் கிடைத்த பானங்களை வாங்கி அருந்துவதால் சிறுநீரக கல்லும், மஞ்சள் காமாலை நோயும் உருவாக காரணமாகிறது.
 
 
உணவும், உறக்கமும் முறை தவறும் பொழுது
 
10-18 மணிநேரம் தொடர்ச்சியாக பணியாற்றும் சூழல் ஏற்படும் இவர்களுக்கு குறிப்பிட நேரத்தில் உணவு சாப்பிடவோ, தூங்கவோ முடியாது. ஸ்நாக்சும், ஏதேனும் கோலாக்கள் மூலமாக தற்காலிக பசியை அடக்குவோரும் உண்டு. ஏதேனும் ஒரு வேளையில் இவர்கள் வயிறு முட்ட சாப்பிடுவார்கள். இது உடல் நலனுக்கு கேடானது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இன்னும் சிலர் உண்டு. அவர்களுக்கு காலை உணவே கிடையாது. பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்போர் காசை மிச்சம் பிடிக்கவே இந்த வழியை கையாளுகின்றனர். இரவு தாமதமாக உணவை உண்டு, காலையில் தாமதித்து எழுந்து மதிய உணவை சாப்பிட்டால் காலை உணவை தவிர்க்கலாம் என்ற கொள்கையை சிலர் வகுத்து வைத்துள்ளனர்.
உணவுப் பொருட்களின் விலை ஏறுமுகமாக இருக்கும் சூழலில் சிலர் காசை சேமிப்பதற்காக தங்களது உடல் ஆரோக்கியத்தை பலி கொடுக்கின்றனர்.
 
 
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை
 
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைதான் வளைகுடா வாசிகளுக்கு சொந்தம். நேரமின்மையே அதற்கு முக்கிய காரணம். நமது நாட்டைப்போல வளைகுடா நாடுகளில் வேலைக்கு மட்டம் போட முடியாது. ஒரு நாள் லீவு கிடைக்கவே பெரும் பாடுதான். இந்நிலையில் அன்றாட வேலையை முடித்து விட்டு, உணவு தயாரித்து, துணிகளை கழுகி, வீட்டிற்கு போன் செய்யவே நேரம் சரியாக இருக்கும். இந்நிலையில் உடற்பயிற்சியைக் குறித்து சிந்திக்க முடியுமா? ஆகவே ரேசன் போல் கிடைக்கும் நேரத்தில் அனைவரும் தவிர்க்க விரும்புவது உடற் பயிற்சியாகும்.
 
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையும், கொழுப்பான உணவு வகைகளைக் கொண்ட வாழ்க்கை முறையும் இணையும் பொழுது இயல்பாகவே உடல் நோய்களின் இருப்பிடமாக மாறிவிடும்.நீரழிவு நோய்(சர்க்கரை வியாதி)போன்ற வாழ்க் கை முறையினால் உருவாகும் நோய்கள் ஏற்பட உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையே காரணமாகும்.
 
 
ஓய்வில்லாத பணி!
 
பொதுவாகவே வளைகுடாவுக்கு வேலை தேடி வருவோருக்கு பணமே முக்கிய நோக்கம் ஆகும்.அதனால்தான் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூக்கம் என்ற தத்துவம் எல்லாம் இவர்களைப் பொறுத்தவரை வெத்து வேட்டுதான். பணிகளுக்கு இடையே ஒய்வு என்பது செயல் திட்டத்திலேயே இல்லை. பெரும்பாலோர் 12-13 மணிநேரங்கள் உழைக்கின்றனர். இதன் பலனாக கிடைப்பது முதுகு வலி.
 
முதுகு வலிக்கு முக்கிய காரணி மன அழுத்தம் ஆகும். வளைகுடா வாசிகளைப் பொறுத்தவரை மன அழுத்தத்திற்கு எவ்வித பஞ்சமுமில்லை. இத்துடன் உடற்பயிற்சியும் இல்லை என்றால் முதுகுவலி ஏற்படுவது இயல்பே.
நமது சிந்தனைப் போக்கை மாற்றி நமது ஆரோக்கியத்தைக் குறித்து சற்று சிந்தித்து அதன் அடிப்படையில் வாழ்ந்தால் முதுகு வலி இல்லாத வாழ்க்கையை சொந்தமாக்கலாம்.
 
 
ஆஸ்துமாவை உருவாக்கும் மணல் காற்றும், புகையும்!
 
பாலைவன மண்ணை வீசியடிக்கும் காற்றில் பறந்து வரும் மண் துகள்கள் மூச்சுக் குழாய்க்குள் செல்கிறது. தாமதமில்லாமல் இவர்கள் ஆஸ்துமா நோயினால் பாதிப்படைகின்றனர். மேலும் பாலைவனப் பகுதிகளில் உருவாகும் மணல் காற்றும், புகையும் வெளியிடங்களில் வேலை பார்ப்போருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் bronchitis என அழைக்கப்படும் மூச்சுக்குழாய் அழற்சி நோய் ஏற்படுகிறது.
 
 
கடுமையான வெப்பம்
 
வளைகுடா வாசிகளால் தாங்க முடியாதது அங்கு கோடைகாலத்தில் நிலவும் கடுமையான வெப்பமும், குளிர்காலத்தில் நிலவும் கடுங் குளிருமாகும்.
 
கோடை காலத்தில் 50 டிகிரி வரை சூடு நிலவும். குளிர் காலத்திலோ மைனஸ் டிகிரியை அடையும். இவை இரண்டுமே அசெளகரியங்களை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
 
ஏர்கண்டிசன் இல்லாத வாழ்க்கையை இங்கு சிந்திக்க கூட முடியாது. ஆனால் வெளியே வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் வெப்பத்தையும், குளிரையும் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
 
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், நோயாளிகளும், ஆரோக்கியம் இல்லாதவர்களும் சூடு தாங்கமுடியாமல் sun stroke காரணமாக நினைவு இழந்து விழுவது வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் ஏற்படும் இழப்புகள் தங்களை பாதிக்காமலிருக்க ஒப்பந்தக்காரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிச் செய்துள்ளனர். இவையெல்லாம் உயிரை காப்பாற்றலாம், ஆனால் உடல்நலனை பாதுகாப்பதற்கு போதுமானது அல்ல.
 
பெனடால் என்ற உற்றத்தோழன்
 
 
வளைகுடா வாசிகளுக்கு பெனடால் என பெயர் சூட்டிய பாரசிட்டாமோல் மாத்திரைதான் அவர்களின் பெரியதொரு பாதுகாவலன். தலைவலியா? காய்ச்சலா? ஜலதோஷமா? ஒரு பெனடாலில் அவர்கள் ஆறுதலை தேடிக்கொள்வார்கள்.
 
வளைகுடாவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு காலநிலையில் ஏற்படும் மாற்றத்தால் உடல்நிலை பாதிக்கப்படுவது வழக்கம். தலைவலியும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் உண்டு. இதற்கெல்லாம் மருத்துவமனைக்கு சென்று காண்பிக்கும் வழக்கம் இல்லை. காராணம், சாதாரண நபர்களால் வளைகுடா நாடுகளில் சிகிட்சை செலவை தாங்கமுடியாது. வேலைச்செய்து கிடைக்கும் சம்பாத்தியம் முழுவதும் ஒரேயடியாக செலவழிந்து விடுமே என அஞ்சி இவர்கள் எந்த நோய் வந்தாலும் உடனே பெனடாலை விழுங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு பெனடால் வளைகுடா வாசிகளின் உற்றத் தோழனாக மாறிவிட்டது. இதன் எதிர்விளைவுகளை குறித்து சிந்திக்கவும் அவர்களுக்கு நேரமில்லை.
 
 
பல வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய பிறகே பெனடாலின் பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு தெரியவருகிறது. பெனடாலை வழக்கமாக உபயோகிக்கும் பழக்கமுடையவர்களுக்கு சிறுநீரகத்தையும், இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கிய பாரசிட்டாமோல் மாத்திரையைத்தான் தாம் இதுவரை உற்றத் தோழனாக கருதினோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
 
 
தாயகத்தில் கிடைப்பதைவிட பல மடங்கு வருமானத்தை எதிர்பார்த்து இந்தியர்கள் வளைகுடாவுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால், திடீரென மாறும் வாழ்க்கைச் சூழல் அவர்களை விரைவில் வாழ்க்கை முறை மாறுவதால் ஏற்படும் நோய்களில் பிடியில் சிக்கவைக்கிறது.
 
 
இக்கட்டுரையின் துவக்கத்தில் கூறியபடி ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதை புரிந்துகொண்டால் நாம் இந்த துயரங்களை தவிர்க்கலாம்.
 
உணவு முறையிலும், உடற்பயிற்சியிலும் நாம் கவனம் செலுத்தினால் சம்பாதித்த பணத்துடன் தாயகம் திரும்பி சந்தோஷமாக வாழலாம். வளைகுடா வாழ் இந்தியர்கள் மத்தியில் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்பதை இதன் மூலம் நாம் புரிந்துகொண்டிருப்போம்.
 
 
இந்திய தூதரகமும், வளைகுடா நாடுகளில் இயங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நல அமைப்புகளும் இப்பிரச்சாரத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும். பணத்தை மட்டும் சேமித்தால் போதாது அதனை அனுபவிக்க கூடிய ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வளைகுடா வாழ் இந்தியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் வேகத்தில் ஆரோக்கியத்தை தொலைத்துவிடாமல் எச்சரிக்கையாக இருப்போம்!