Thursday, 29 November 2012

வீட்டுக் கடன்!! ஒரு சிறப்பு ஆய்வு ....


வருகின்ற 2012-13 ஆம் நிதி ஆண்டிற்கான   மத்திய அரசின் பொது பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது . அதில், வீட்டுக் கடன் வாங்கிய தனிநபர்கள் செலுத்தும் வட்டிக்காக வழங்கப்பட்டு வரும் வருமான வரிச் சலுகை வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யப்பட்டது. 

வீட்டுக் கடன் வட்டிக்கான வருமான வரிச் சலுகை வரம்பு தற்போது ரூ. 1.50 லட்சமாக உள்ளது. அதாவது, வீட்டுக் கடன் வட்டி செலுத்துபவர்கள் அவர்களது ஆண்டு வருமானத்திலிருந்து ரூ. 1.50 லட்சம் வரை கழித்துக் கொள்ளலாம். வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, வாங்கும் கடன் தொகையும் உயர்ந்து வட்டி விகிதமும் அதிகரிக்கிறது. 

சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொல்கத்தா, புதுடெல்லி மற்றும் மும்பை போன்ற பெரும் நகரங்களில் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக வீட்டு கடன் பெறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.எனவே, வீட்டுக் கடன் வட்டிக்கான வருமான வரிச் சலுகையை உயர்த்த வேண்டும் என்பது ரியல் எஸ்டேட் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் கோரிக்கையாக உள்ளது. 

வீட்டுக் கடன் வாங்கியவர்கள்வட்டிச் சலுகையுடன், அசல் தொகைக்கும் வருமான வரிச் சலுகை  அளிக்கப்படுகிறது. வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி&ன் கீழ் இந்தச் சலுகை ரூபாய் ஒரு லட்சம் வரை வழங்கப்படுகிறது. இப்பிரிவின் கீழ் வருங்கால வைப்பு நிதிக்காக பணியாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை, குழந்தைகளுக்கான படிப்பிற்காக செலுத்தும் கல்விக் கட்டணம், ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்காக செலுத்தப்படும் பிரிமியம் போன்றவற்றிற்கும் வரிச் சலுகை வழங்கப்படுகிறது.

இந்த அனைத்து வகையான வரிச் சலுகைகளும் சேர்ந்து 80சி பிரிவின் கீழ் ரூ.1 லட்சம் வரை மட்டுமே வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது. ஆக, வீட்டுக் கடன் வட்டி வருமான வரிச் சலுகை, பிரிவு 80சி&ன் கீழ் வழங்கப்படும் சலுகை ஆகிய இரண்டையும் சேர்த்து மொத்தம் ரூ.2.50 லட்சத்துக்கு வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இதனை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் சந்திரஜித் பானர்ஜி கோரிக்கை விடுத்தார் .

இந்த ஐந்து லட்சம் ரூபாயில், வீட்டுக் கடன் வட்டிக்கான வரிச் சலுகையை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும், வீட்டுக் கடனுக்காக செலுத்தப்படும் அசல் தொகைக்காக மட்டும் தனியே ரூ.2 லட்சத்திற்கு சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்தது. 




50 லட்ச ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் வாங்குபவர் உயர்வு




சான்றாக, மொத்த வீட்டு வசதி கடனில் ரூ. 50 லட்சத்துக்கும் அதிகமாக கடன் பெறுபவர்கள் எண்ணிக்கை 2007ஆம் ஆண்டில் 7% ஆக இருந்தது. இது, 2011 ஆம் ஆண்டில் 12% ஆக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், ரூ.10 லட்சத்துக்கும் குறைவாக வீட்டுக் கடன் பெறுபவர்கள் எண்ணிக்கை 40% லிருந்து 21% ஆக குறைந்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்த வீட்டு கடனில், ரூ. 20 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை கடன் பெறுபவர்கள் 35% ஆக உள்ளனர்.
இவ்வளவு அதிக தொகை கடன் வாங்குவதற்கு முக்கிய மூல காரணம் வீட்டின் விலை கண்டபடி உயர்ந்திருப்பதே..!



எஸ்.பி.ஐ. சுலப வீட்டுக் கடன் வசதி!


இந்தியாவில் வீட்டுக்கடன் வழங்குவதில் நம்பர்ஒன் வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(எஸ்.பி.ஐ) திகழ்கிறது. 20 (இருபது) லட்சம் குடும்பங்களுக்கு ஒருலட்சம் கோடி ரூபாய் வீட்டுக் கடனைவழங்கி அந்த குடும்பங்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கி உள்ளது.

ஏன் எஸ்.பி.ஐ. தேர்வு செய்ய வேண்டும்?

முப்பது லட்சம் ரூபாய் வரை 10%,
முப்பது லட்சம் ரூபாய் மேல் 10.15%
வட்டியில் வீட்டுக் கடன் வழங்கி வருகிறது.
வேறு எந்த வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்திலும் கிடைக்காத குறைந்தபட்ச பரிசீலனைக் கட்டணம்.

கடனை திரும்ப செலுத்தும் காலம் மிகஅதிகப்பட்சமாக முப்பது (30) ஆண்டுகள் அனுமதிக்கப்படுகிறது.

ஒரு மாதத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகக்குறைவான இ.எம்.ஐ. தொகை 878 ரூபாய். (முப்பது லட்ச ரூபாய் வரை).
முப்பது லட்சம் ரூபாய்க்கு மேல் இ.எம்.ஐ 889 ரூபாய்

21 முதல் 35 வயது இளைஞர்களுக்கு கூடுதலாக 20% கடன் வழங்குகிறது.வீட்டை தேர்வு செய்யும் முன்பே வீட்டுக் கடன்தகுதியை உறுதிப்படுத்துதல்
.
வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு தனிநபர்கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படும்.வட்டி தினசரி குறையும் முறையில் பாக்கியிருக்கும் அசல் தொகைக்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது.கடன் அசல் தொகையை பகுதியாகவோ அல்லதுமுழுவதுமோ முன்கூட்டியே கட்டினால் அபராதக் கட்டணம் கிடையாது.ஏற்கனவே வீட்டுக்கடன் வாங்கியிருக்கும் வங்கியிலிருந்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிற்குவீட்டுக் கடனை மாற்றும் போது, பரிசீலனைக்  கட்டணம் 1,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது மற்ற வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவு.

எஸ்.பி.ஐ. மாக்ஸ் கெயின் & (மாத சம்பளதாரர்களுக்கு)

ஸ்.பி.ஐ. மாக்ஸ் கெயின் திட்டத்தின் மூலம்உங்கள் சேமிப்பு கணக்கையும், வீட்டுக் கடன்கணக்கையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து கொண்டு,வட்டிக்கு செல்லும் தொகையை குறைக்க முடியும்.உதாரணத்துக்கு, ஒருவர் 20 லட்ச ரூபாய் வீட்டுக்
கடன் வாங்கியிருக்கிறார் என்று வைத்துக் கொஷீமீவோம்.அவருடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம்
இருக்கிறதோ அந்தத் தொகையைக் கழித்து கொண்டுகடனுக்கான வட்டியைக் கணக்கிடுவார்கள். அவர் தன்
சம்பளத்தை வங்கி கணக்கில் போட்டு வைத்துவிட்டால்,அது வீட்டுக் கடன் தொகையில் உடனடியாக
குறைத்துக் கொள்ளப்படும். அந்தத் தொகையைகழித்துவிட்டு பாக்கியுள்ள தொகைக்கு வட்டி
கணக்கிடப்படுகிறது. அவர் வங்கிக் கணக்கிலிருந்துசெலவுக்கு பணம் எடுக்க எடுக்க கடனுக்கான வட்டி
கணக்கீடும் மாறும்.இடையே சேமிப்பாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் தொகையும் இந்த வட்டிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்தக் கணக்கு வசதி மாத சம்பளதாரர்களுக்கு மட்டுமானது.
மற்ற வங்கிகளை விட குறைந்த வட்டியே வசூலிக்கப்படுகிறது.

இ.எம்.ஐ. சுமையை குறைப்பதற்காக கடன்காலத்தை முப்பது வருடங்களாக நீட்டிப்பு.வீடு / ஃபிளாட் கட்ட ஆரம்பித்ததிலிருந்து 36மாதங்கள் கழித்து கடனைக் கட்ட ஆரம்பிக்கலாம்.

எஸ்.பி.ஐ. க்கு இந்தியா முழுகக் 14,000 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
உங்கள் அருகிலுள்ள எஸ்.பி.ஐ. கிளையை தொடர்புக்கு கொண்டு மேற்கொண்டு தகவல் அறிந்துக் கொள்ளலாம்.

வீட்டுக் கடனுக்கென சிறப்பு விற்பனை பிரிவு அலுவலர்களை தொடர்பு கொள்ள
24 மணி நேரமும் கட்டணமில்லா எண்களான1800-11-22-11 / 1800-425-38-00 அழைக்கலாம்.

ஆக்ஸிஸ் வங்கி: புதிய வீட்டுக் கடன் திட்டம்..

வீட்டுக் கடன் மாத தவணையை (இ.எம்.ஐ ) முறையாக திரும்ப செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, கடைசி 12 தவணைகளை ரத்தும் செய்யும் விதமாக புது வீட்டுக் கடன் திட்டத்தை தனியார் துறையை வங்கியான ஆக்ஸிஸ் வங்கி அறிமுகம் செய்திருக்கிறது.
ஹேப்பி எண்டிங் ஹோம் லோன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின்படி, 20 ஆண்டு கால வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் 15 வருடங்களை கடந்து தொடரும் பட்சத்தில் அவர்களது கடைசி 12 தவணைகள் ரத்து செய்யப்படுகிறது. அதாவது 15 வருடங்களுக்கு முன்னதாக கடனை முழுவதுமாக திரும்ப செலுத்தாமலும், பிற வங்கிகளில் கடன் பெற்று கடன்களை திரும்ப செலுத்தாமலும் தொடர்ந்து நீடிக்கும் வாடிக்கையாளர்கள் இச் சலுகைக்கு தகுதி பெறுவார்கள். அதேநேரத்தில், தவணை தொகையை முறையாக செலுத்துவதும் வீட்டுக் கடன் பிரிவுக்கான இதர நிபந்தனைகளும் இந்த புதுக் கடன் திட்டத்துக்கும் பொருந்தும்.

இந்த புது திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சத்தை 11% மாறுபடும் வட்டியில் (ஃப்ளோட்டிங்) கடனாக பெறும் ஒரு வாடிக்கையாளர் கடைசி 12 தவணைகள் ரத்து செய்யப்படும்பட்சத்தில் அவர் ரூ.6.19 லட்சம் லாபம் அடைவார்.  

தொகுப்பு ; மு.அஜ்மல் கான்.

Wednesday, 28 November 2012

24 கேரட் தங்கம் உருவாக்கும் குப்ரியாவிடஸ் பாக்டீரியா!! ஒரு சிறப்பு பார்வை....




தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.


இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கத் துகள்கள்
மண்ணுடன் கலந்துள்ள தங்கத் துகள்கள்
பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.
இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.



ஆனால் இன்று மிக மிக தூய்மையான 24 கேரட் தங்கத்தை பாக்டீரியா ஒன்று உருவாக்குகிறது என்ற ஆச்சரியமான விஷயத்தை அமெரிக்காவின் மிச்சிகன்  பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 


அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் ஈஸ்ட் லான்சிங் நகரில் உள்ளது மிச்சிகன் மாநில  பல்கலைக்கழகம். இப்பல்கலையின் மைக்ரோ பயாலஜி மற்றும் மாலிக்யூலர் ஜெனடிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வு  நடத்தினர். பாக்டீரியா ஒன்று சுத்தமான தங்கம் உருவாக்குவதை ஆய்வில் கண்டறிந்தனர். இந்த பாக்டீரியாவுக்கு குப்ரியாவிடஸ் மெட்டாலிடியுரன்ஸ் என  பெயரிட்டுள்ளனர். 

இதுபற்றி பல்கலைக்கழக மைக்ரோபயாலஜி பேராசிரியர் கசம் கஷேபி கூறியதாவது: பொதுவாக பாக்டீரியாக்கள் நச்சுத்தன்மையுள்ள பொருட்களில்  வளர்வதில்லை. ஆனால் இந்த பாக்டீரியா இயற்கையில் காணப்படும் நச்சுத்தன்மையுள்ள தங்க குளோரைடு என்ற  வேதிப்பொருளில் வளர்கிறது. இந்த தங்க  குளோரைடு நீர்ம தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாவை தங்க குளோரைடில் வளர்த்தபோது ஒரே வாரத்தில் தங்க குளோரைடு நீர்மமானது  தங்கக்கட்டியாக மாற்றமடைந்தது. 

இயற்கையில் தங்கம் எப்படி உருவாகிறதோ, அதேபோன்ற வினை இங்கும் நடந்திருக்கிறது. இவ்வாறு கசம் கஷேபி கூறினார். இந்த கண்டுபிடிப்பை  ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற பிரிக்ஸ் ஆர்ஸ் எலக்ட்ரானிக்கா என்ற கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட தங்கத்தைக்  கொண்டு தங்க முலாம் பூசப்பட்ட ஒரு பொருளையும் காட்சிக்கு வைத்திருந்தனர். த கிரேட் ஒர்க் ஆஃப் மெட்டல் லவ்வர் என்ற பெயரில் பாக்டீரியா உருவாக்கிய  தங்கம் காட்சிக்கு வைக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த மைக்ரோ பயாலஜி விஞ்ஞானிகள் இதை ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

24 கேரட் பரிசுத்தமான தங்கத்தை பாக்டீரியா உருவாக்குகிறது என்ற கண்டுபிடிப்பு மிக மிக முக்கியமானது. அதே நேரம், இந்த தொழில்நுட்பத்தில் தங்கத்தை  உருவாக்குவது சவாலானது, அதிக செலவு ஏற்படுத்தக்கூடியது. பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது செலவு கட்டுப்படுத்தப்படலாம் என்றும்  ஆராய்ச்சியாளர்கள் கூறினர். சுரங்கம் அமைத்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை பாக்டீரியாவை கொண்டு உருவாக்கினால் உலக அளவில் பொருளாதாரத்தில்  என்னென்ன மாற்றங்கள் ஏற்படும். சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமா தொழில் ரீதியான உற்பத்திக்கு பாக்டீரியா என்ற உயிரை பயன்படுத்தலாமா என பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த ஆராய்ச்சி.

திருமண சீசன் தொடங்க உள்ள நிலையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பண்டிகை, திருமண சீசன் மேலும் களைகட் டும் என்பதால் தங்கம், வெள்ளியின் விலை மேலும் உயர அதிக வாய்ப்புகள் உள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு...


 
கணணியின் விசைப் பலகையானது(Key Board)வழமையாக ஆங்கிலத்திலேயே காணப்படும். ஆனால் தமிழில் TYPE பண்ணவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போதுதான் தமிழ் விசைப்பலகையை தேடி ஒடுவதுண்டு. அப்படியில்லாவிடில் StartàAll Programs  இல் Accessories  இனுள் சென்று ON Screen KeyBoard ஐ தமிழில் SELECT பண்ணிவிட்டு பார்த்துப் பார்த்து கஷ்டப்பட்டு அடிப்பதுண்டு. இதற்காக இணைய வசதி உள்ளோர் தமிழ் எழுத்துருமாற்றியை (Tamil Translate) நாடுவதுண்டு. இது இணையவசதி உள்ளபோது மட்டுமே பொருந்தக்கூடியது.  அத்துடன் இணைய வேகம் குறைவாக இருப்பின் தமிழுக்கு மாற்றுவதற்கும் சற்றே நேரமெடுக்கும். ஆனால் இணைய வசதி இல்லாத வேளையிலும் அனைவரினது கணணியிலும் சுலபமாகவும் விரைவாகவும் தமிழில் TYPE பண்ணுவதற்கு எளிமையான மென்பொருள் ஒன்றினை கூகிளானது(google) எமக்குத் தந்துள்ளது. அதனை எப்படி பயன்படுத்துவதென்று பார்ப்போம்.

இதனை எமது கணனியில் நிறுவிக்கொள்ள முதலில் கூகுளை Open பண்ணி அதில் கீழ் காட்டப்பட்டவாறு Type பண்ணி  Enter பண்ணவும்.

இப்போ கூகிளின் தேடல் பதில்கள் வந்திருக்கும். இதில் முதலாவதாக உள்ள Type in Hindi- Google Transliteration  எனும் link ஐ கிளிக் செய்யவும்.

இப்போ உங்களுக்கு கீழே உள்ள விண்டோ வந்திருக்கும்.

இதில் இணையவசதி உள்ளவேளையில் தமிழுக்கு மாற்ற இடதுபக்க மேல்மூலையில் உள்ள HINDI எனும் பட்டனை கிளிக் செய்து விரும்பிய மொழியை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் நாம் இப்போ பார்க்கவேண்டியது இணைய வசதி இல்லாதவேளையில் பயன்படுத்துவது தான்.
இதற்கு மேல் உள்ள அவ் விண்டோவின் வலதுபக்க மேல் மூலையில் New! Download Transliteration IME என்பதை கிளிக் செய்யவும்.  இப்போ உங்களுக்கு கீழ் உள்ளது போன்ற பக்கம் தோன்றும். இதில்மொழித்தெரிவுக்காக தமிழ் என்பதை தெரிவுசெய்து DOWNLOAD Button ஐ கொடுக்கவேண்டியதுதான்...

இப்பக்கத்திற்கு நேரடியாகச் சென்று தரவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும். 
இப்போ கீழே உள்ளதுபோன்று சேமிக்கவா(Save) என கேட்கப்படும். SAVE என்பதை அழுத்தி கணனியில் save செய்து கொள்ளவும்.

பின்னர் கணனியில் எங்கு Download ஆகி உள்ளதோ, அங்கு சென்று அம் மென்பொருளை  Open செய்யவும். இப்போ கீழ் உள்ளது போன்ற விண்டோ தோன்றும். அதிலே RUN என்பதை கிளிக் செய்து கணனியில் நிறுவிக்(Install) கொள்க.




நிறுவுகை(Install) முடிந்ததன் பின்னர் கீழே உள்ளது போன்று டாஸ்க்பாரில்(TaskBar)  “EN” எனும் எழுத்து காணப்படும். “EN“ என்பது மொழி ஆங்கிலம் என்பதாகும். உங்களுக்கு தமிழ் வேண்டுமாயின் “EN“ ஐ கிளிக் பண்ணி அதில் உள்ள “TA“ என்பதை தெரிவுசெய்தால் போதும்.


இதன்மூலம் நீங்கள் ஏதும்  Folder இற்கு பெயர் மாற்றவோ அல்லது தமிழில் Typeசெய்யவோ முடியும்.
உதாரணம்:
நீங்கள் “தமிழில் எழுதுவதற்கு“ என்பதை ஆங்கிலத்தில் “THAMILIL ELUTHUVATHATKU”  எனtype செய்தால் போதும்.....

Monday, 26 November 2012

சிரியா யுத்தமும் ஈழ யுத்தமும் - வித்தியாச சிறப்புப் பார்வை


ஈழ யுத்தத்தில் ஈடுபட்ட பெரிதும், சிறிதுமான வெவ்வேறு ஈழ விடுதலை இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கும், தற்போது, சிரியாவில் ராணுவத்துக்கு எதிராக போராடும் பெரிதும், சிறிதுமான வெவ்வேறு போராளி இயக்கங்கள் நடந்து கொள்வதற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை சற்று விரிவாக நோக்கப்பட்டுள்ளது.


சிரியாவில் அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி இயக்கங்களின் கூட்டமைப்பை ஐரோப்பாவில் முதல் நாடாக அங்கீகரித்துள்ளது பிரான்ஸ். சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் இரு பெரிய ஒரு திருப்பம். அத்துடன் சிரியா அரசுக்கு விழுந்த மிகப்பெரிய அடி.
காரணம், போராளி இயக்கங்களின் கூட்டமைப்பு சிரியா ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரிவதற்கு ஆயுதங்கள் வழங்குவது பற்றி ஆலோசித்து வருவதாகவும் அறிவித்துள்ளார், பிரான்ஸ் ஜனாதிபதி. அதன் அர்த்தம், அடுத்த சில தினங்களில் சிரிய உள்நாட்டு யுத்தத்தில், போராளிகளின் கைகளில் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மின்னப் போகின்றன.
கடந்த 20 மாதங்களாக சிரியா அரசுக்கு எதிராக போராளி இயக்கங்கள் நடத்தும் யுத்தத்தில் இது ஒரு திருப்பு முனை. 20 ஆண்டுகளுக்கு முன், இலங்கையில் ஈழ விடுதலை போராளி அமைப்புகளுக்கு கிடைத்த சந்தர்ப்பம் போன்றதுதான் இது.
பெரிதும், சிறிதுமான வெவ்வேறு போராளி இயக்கங்கள், சிரியா ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரிந்து வருகின்றன. இருந்த போதிலும், இந்த இயக்கங்கள் இடையே ஒற்றுமை கிடையாது என்ற நிலை இருந்தது.
இது, கிட்டத்தட்ட 1980களின் இறுதியில், இலங்கையில் இருந்த அதே நிலை. அப்போது, பெரிதும், சிறிதுமான வெவ்வேறு ஈழ விடுதலை இயக்கங்கள், இலங்கை ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரிந்தன. இருந்த போதிலும், அந்த இயக்கங்கள் இடையே ஒற்றுமை கிடையாது என்ற நிலை இருந்தது.
அப்போது, ஈழ விடுதலை இயக்கங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது சர்ச்சையில் அடிபடும் ‘டெசோ’ அமைப்பு கூட, ஈழ விடுதலை இயக்கங்களிடையே ஒற்றுமை வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான். இருந்த போதிலும், ஈழ விடுதலை இயக்கங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த யாராலும் முடியவில்லை.
ஆனால், தற்போது சிரியாவில் உள்ள நிலை அதில் இருந்து வேறுபட்டு உள்ளது. சிரியாவில், ராணுவத்துக்கு எதிராக போராடும் போராளி அமைப்பினரிடையே தற்போது ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
“போராளி அமைப்பினர் உங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையை ஏற்படுத்துங்கள்” என்று விடுக்கப்பட்ட கோரிக்கை, சிரியாவுக்கு உள்ளே நடைபெறுவது கடினம் என்பதை புரிந்துகொண்டு, போராளி அமைப்புகளிடையே பேச்சுவார்த்தைகளை நடத்த தமது நாட்டில் இடம் கொடுத்தது கத்தார் நாடு.
20 ஆண்டுகளுக்கு முன்பு, “போராளி அமைப்பினர் உங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையை ஏற்படுத்துங்கள்” என்று விடுக்கப்பட்ட கோரிக்கை, இலங்கைக்கு உள்ளே நடைபெறுவது கடினம் என்பதை புரிந்துகொண்டு, போராளி அமைப்புகளிடையே பேச்சுவார்த்தைகளை நடத்த தமது நாட்டில் இடம் கொடுத்தது இந்தியா.
அன்று, இந்தியாவில் நடைபெற்ற முயற்சிகள், 5 விடுதலை இயக்க தலைவர்கள் (பிரபாகரன், உமா மகேஸ்வரன், பத்மநாபா, ஸ்ரீசபாரத்னம், பாலகுமார்) ஒன்றாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தது என்ற அளவில் முடிந்து போனது.
ஆனால், சிரியாவில் போராடும் போராளி அமைப்பின் பிரதிநிதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தார் நாட்டில் கூடி பேசினர். இவர்களுக்கிடையே ஒரு உடன்பாடு ஏற்படுத்தப்பட்டு, ஒரு பொதுக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஒரு தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த தலைவரை பல நாடுகள் அங்கீகரிக்க தொடங்கியுள்ளன.
‘National Coalition for Opposition Forces and the Syrian Revolution (NCSROF)’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள சிரியா நாட்டு போராளிகள் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டவரின் பெயர், மொவாஸ் அல்-காதிப். இவர் ஒரு சன்னி இன முஸ்லிம். சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள உமய்யாத் பள்ளிவாசலில் இமாம் ஆக இருந்தவர். அதற்குமுன், Applied Geophysicsல் பட்டம் பெற்ற இஞ்சினியராக பணியாற்றியவர்.
போராளி கூட்டமைப்பின் பொதுக்குழு தலைவர், “சிரியா ராணுவத்துக்கு எதிராக போராடும் எமக்கு அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, மற்றும் அனைத்து நாடுகளும் ஆதரவு தரவேண்டும்” என்று கடந்த ஞாயிற்றுக் கிழமை கோரிக்கை விடுத்தார். அத்துடன், “சிரியா ராணுவத்திடம் துல்லியமான ஆயுதங்கள் உள்ளன. அவர்களை நாம் ஜெயிக்க வேண்டும் என்றால், வெளிநாடுகள் எமக்கு ஆயுத உதவி செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
சிரியாவில் ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் பெரிதும், சிறிதுமான வெவ்வேறு 12 போராளி இயக்கங்கள் இணைந்து NCSROF அமைப்பை உருவாக்கியுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன், ஈழ விடுதலை இயக்கங்கள் ஒன்று சேர்ந்து ENLF என்ற அமைப்பை உருவாக்கின.
இந்த சிரியா போராளிகள் கூட்டமைப்புக்கு வெளிநாட்டு அங்கீகாரம் கிடைக்க பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது, இந்த விடுதலை இயக்கங்களில் சில, ஐரோப்பாவில் பின்னணி அமைப்புகளை வைத்துள்ளன. (விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் உலகத் தமிழர் என்ற அமைப்பை வைத்து இயக்கியது போல)
சிரியா போராளி இயக்கங்களின் வெளிநாட்டு பின்னணி அமைப்புகள் பலம் வாய்ந்தவை. இவற்றில், உலக வங்கியில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரி, ஹாவர்ட்டு பல்கலைக்கழகத்தில் அரசியல்துறை பேராசிரியராக இருந்தவர் போன்றவர்கள் தலைவர்களாக உள்ளனர். இவர்கள், வெளிநாட்டு அரசுகளால் மதிக்கப்படும் நபர்களாக உள்ளார்கள். இவர்களால், அந்தந்த நாடுகளை தமது அமைப்புக்கு ஆதரவாக மாற்றுவது சாத்தியமாகி உள்ளது.
சிரியா போராளி இயக்கங்களின் கூட்டமைப்பு NCSROF, சிரியா மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாம் என்பதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்தது.
ஈழ விடுதலைப் போராளிகளின் கூட்டமைப்பு ENLFல் இருந்த, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா, டெலோ தலைவர் ஸ்ரீசபாரத்தினம் ஆகியோர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டு, அந்த அமைப்புகளை தடை செய்த விடுதலைப்புலிகள் இயக்கம், ஈழ தமிழரின் ஏகப் பிரதிநிதிகள் தாம் என்பதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
சிரியா போராளி அமைப்புகளின் கூட்டமைப்பு NCSROF கடந்த ஞாயிற்றுக் கிழமை விடுத்த வேண்டுகோளை ஏற்று நேற்று (செவ்வாய்க்கிழமை), இந்த கூட்டமைப்பை ஐரோப்பாவில் முதல் நாடாக அங்கீகரித்துள்ளது பிரான்ஸ். மற்றைய ஐரோப்பிய நாடுகளும், இந்த அமைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பிரான்ஸ் செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் கொடுப்பதற்கு முன், திங்கட்கிழமை 6 அரபு நாடுகள் NCSROF அமைப்பை தாம் அங்கீகரிப்பதாக அறிவித்தன. பஹ்ரைன், குவைத், ஓமான், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவையே அந்த 6 நாடுகள்.
பிரான்ஸ் ஜனாதிபதி Francois Hollande, “NCSROF, சிரியா மக்களின் நியாயமான ஏகப் பிரதிநிதிகள் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இந்த அமைப்பு நிர்வாக ரீதியில் இயங்கத் தொடங்கியதும், இவர்கள் யுத்தம் புரிவதற்கு ஆயுதங்களை வழங்க நாம் யோசித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதே பிரான்ஸ் உள்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், 2006ம் ஆண்டு மே மாதம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என தடை செய்தன.
சிரியா போராளிகளுக்கு ஆதரவு கொடுத்து, ஏகப் பிரதிநிதிகளாக அங்கீகரித்து, யுத்தம் புரிய ஆயுதங்களும் கொடுக்க தயாராக உள்ள நாடுகள், ஈழப் போராட்டத்துக்கு ஏன் உதவி செய்யவில்லை? விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றது ஏன்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை சொல்லி புரிய வைப்பதால் இன்றைய தேதியில் எந்த பலனும் கிட்டப் போவதில்லை. ஆர்வமுள்ளவர்கள், தாமாகவே புரிந்து கொள்வார்கள். அல்லது ஏற்கனவே புரிந்து கொண்டிருப்பார்கள்.
 தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Sunday, 25 November 2012

கணவன்-மனைவிக்கிடையே உறவே நல்ல உறவு !!


நல்ல உறவு வச்சிக்கிட்டா ஹார்ட்டை சிறப்பாக இயக்குமாம்.

LE LOVE BLOG PHOTOS IMAGES STORIES SUBMISSIONS ADVICE RELATIONSHIPஅனுமதிக்கப்பட்ட (கணவன்-மனைவி) (உடல்)உறவு உடலுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது என்று நிபணர்கள் கூறுகின்றனர்.

உடலின் ரத்த ஒட்டம் சீராகிறதாம்இதயம் தொடர்பான நோய்கள் குணமடைவதோடு உற்சாகம் அதிகரிக்கும் என்கின்றனர் 

ரத்த ஓட்டம் சீராகும்
செக்ஸ் உறவின் உச்சக்கட்டத்தில் உணர்வுகளினால் உடலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறதாம்பிறப்பு உறுப்புகளில் மட்டுமல்லாது சருமத்தின் அனைத்து பகுதிகளிலும்ரத்த ஓட்டம் சீராவதோடு ஆரோக்கியான சருமத்தை ஏற்படுத்துகிறது என்கின்றார் ஜெனிபர் பெர்மன் என்ற பாலியல் நிபுணர்.

இதயநோய்கள் குணமடையும்
உச்சக்கட்ட உணர்வில் இதயத்துடிப்பு அதிகரிக்கும்உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் வேகமாக பாயும்அப்பொழுது சுரக்கும் ஹார்மோன் இதயம்தொடர்பான நோய்களை போக்கும் என்கிறார் பெர்மன்உடற்பயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மைகளை விட ஆர்கஸம் மூலம் இதயத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகிறதுஎன்கிறார் இந்த பாலியல் நிபுணர்.

உற்சாகம் அதிகரிக்கும்

ஆர்கஸத்தின் போது எண்டோர்பின்டோபமைன்ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றனஇது உடலையும்மனதையும் உற்சாகப்படுத்தும்.

சீரான உறக்கம்
உடலும் உள்ளமும் அமைதியடைந்து உறக்கம் எளிதாக வரும் என்கின்றனர் நிபுணர்கள்தூக்க குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த 1,800 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டஆய்வில் உறவில் ஈடுபட்ட பின் நிம்மதியாக உறங்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.

புத்திக்கூர்மை அதிகமாகும்
தாம்பத்ய உறவில் ஈடுபடும் பெண்களை விட உறவில் ஈடுபடாத பெண்களில் புத்திக்கூர்மையில் சில சிக்கல்கள் இருந்ததாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டபேராசிரியர் Logan Levkoff, Ph.D தெரிவித்துள்ளார்ஆர்கஸம் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகப்பதோடுஅவர்களின் முடிவெடுக்கும் திறன்புத்திக்கூர்மைபோன்றவைகளை அதிகரிக்கிறது என்கின்றார் இந்த பாலியல் நிபுணர்.

மூளையின் ஆரோக்கியம்
ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் விரைவாக பாய்வதால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறதுஎம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது இதுநிரூபிக்கப்பட்டதுஆர்கஸத்திற்குப் பின்னர் மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை வலி நிவாரணி
உடல்வலியோ மன வலியோ இரண்டையும் போக்கும் இயற்கை வலி நிவாரணி செக்ஸ்ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் வேகமாக பாயும் பொழுது உடலில் ஆங்காங்கேரத்தம் தேங்கியிருந்தாலும் அவற்றை உடைத்துக் கொண்டு நன்மை செய்கிறதாம்சோர்வுமன அழுத்தம் போன்றவைகள் ஏற்பட்டிருந்தாலும்தலைவலி இருந்தாலும்அவற்றை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது ஆர்கஸத்தின் போது சுரக்கும் ஹார்மோன்கள் என்கிறார் பெர்மன்.

கள்ள உறவு  வச்சிக்கிட்டா ஹார்ட் அட்டாக் வருமாம்!

அனுமதிக்கப்படாத (கணவன்-மனைவி அல்லாத) (கள்ள)உறவு உடலுக்கு பெரும் கேடு விளைவித்து இதயத்துடிப்பை நிருத்தி அகால மரணத்திற்கு இட்டுச் செல்வதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆபத்தானது
துணைக்குத் தெரியாமல் கள்ளத்தனமான உறவில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.கள்ள உறவானது முதலில் சுவாரஸ்யமாக இருந்தாலும் நாளடைவில் அதுவே உயிருக்கு ஆபத்தானதாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

கொலைகளுக்குக் காரணமாகிறது.
இன்றைக்கு ஊடகங்களில் சிறப்பு செய்திகளாக இடம்பெறுபவை கள்ளக்காதல் செய்திகள்தான்இதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றனகணவன் மனைவியைகொல்வதுமனைவி கணவனை கொல்வதுகுழந்தைகளை கொல்வது என பெரும்பாலான கள்ளத் தொடர்புகள் மரணத்தில்தான் முடிகின்றனஇந்த கள்ளத்தொடர்புகளைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்அதாவது கள்ளத் தொடர்பில் ஈடுபடுபவர்களுக்குஹார்ட் அட்டாக் வரும் என்பதுதான் அது.

இது தொடர்பாக இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

மனைவி யை தவிர்த்து மற்றவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3 மடங்கு மரணங்கள்
மனைவி க்கு தெரியாமல் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மனரீதியாக குற்ற உணர்ச்சி ஏற்படும்இதனால் அவர்கள் எப்போதும் பதட்டத்துடன் காணப்படுவர்.மேலும் செக்ஸ் உறவில் ஈடுபடும் போது ஏற்படும் அதிக பதட்டமும்ஆர்வமும் காரணமாக 3 மடங்கு  அவர்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த ஆய்வில்தெரியவந்துள்ளதுமேலும் குடித்து விட்டு உறவில் ஈடுபடுபவர்களை அதிக அளவில் மாரடைப்பு தாக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

கள்ளக் காதல் செய்பவர்கள் எதற்கும் கொஞ்சம் யோசித்துக் கொள்வது நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.


இறைவன் இருக்கிறான் அவனே இப்பிரபஞ்சத்தை படைத்து அவனே இயக்குகிறான் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்களை நாம் வாழும் காலங்களிலேயேக் கண்டுவருகிறோம்.

அதற்கு இதுவும் ஒரு உதராணமாகத் திகழ்கிறது ஒரே மாதிரியான உறவு தான் ஒன்று ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது மற்றொன்று ஆரோக்கியத்தை அழித்துவிபரீதத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் உலகம் முழுவதும் பரவிய எய்ட்ஸ் கிருமிகளை அழிக்க முடியாமல்மனித சமுதாயம் திணறுவதிலிருந்து இறைவனை மறுப்பவர்களும்மறப்பவர்களும் புரிந்து கொள்வார்கள்.

மனிதர்களேஉங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான்அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்உறவினர்கள் விஷயத்திலும்(அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்ஏனெனில் திருமணம் என்பது (பிறன்மனை நோக்குவதை விட்டும்பார்வையைத்தடுக்கக் கூடியதாகவும் கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர்இப்னு மஸ்ஊது (ரலிநூல்புகாரி 1905, 5065, 5066

தகாத நடத்தையிலிருந்து ஒவ்வொருவரும் தன்னைக் காத்துக் கொள்வது திருமணமும் அதன் மூலம் ஏற்படும் நல்ல உறவும்ஆரோக்கியமும் நோக்கமாகும் என்பதை இந்த ஹதீஸிலிருந்துஅறியலாம்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.