Wednesday, 15 May 2013

நம் உண்ணும் உணவில் இஞ்சி!! ஒரு சிறப்பு பார்வை..



காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் கோல் ஊன்றி நடப்பவர் கூட கோலை வீசி விட்டு கம்பீரமாக நடப்பார்கள் என சித்த மருத்துவம் சிறப்பித்துக் கூறுகிறது.

இஞ்சி மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டது. இஞ்சிச் செடியின் வேர்ப் பகுதியே நம்மால் இஞ்சி என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இஞ்சி, இந்தியா, சீனாவில் மட் டுமே மிகுதியாக மருந்துப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.


உடலுக்கு அத்தியாவசியமான ரசாயனங்கள், தாதுக்கள் இஞ்சியில் உள்ளன. குறைந்த ஆற்றல் வழங்கக் கூடியது இஞ்சி. 100 கிராம் இஞ்சி, 80 கலோரி ஆற்றலைத் தருகிறது. இஞ்சியில் கெட்ட கொழுப்புகள் கிடையாது. இஞ்சி, பழங்காலம் முதலே மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இஞ்சி மருத்துவம்

இஞ்சி சமையலுக்கு மட்டுமே பிரபலமானது அல்ல, இஞ்சியை ஒரு நாளில் ஒரு எண்ணிக்கை என தினமும் சாப்பிடக்கூடிய இயற்கை மருந்தாக கருதப்படுகிறது? 

காலை நோய் மற்றும் எரிச்சல்...

இஞ்சி டீ குடிப்பது காலை நோயை சமாளிக்க சிறந்த வழி. குறிப்பாக கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகள் இஞ்சி டீ குடிப்பது அவசியம். ஏனெனில் காலை வேளையில் ஏற்படும் மசக்கையை தடுக்க இஞ்சி டீ ஒரு மிக சிறந்த இயற்கை வழியாகும். மாறாக வெறுமனே காலை நோயை போக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சேர்த்து சாப்பிடலாம்.


சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.
இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.
ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது;
கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
மகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.
உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.

DSC_3316
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.
இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.
பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, ‘பைப்ரினோலிடிக்’ செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.
இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.
இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.
இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.
எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.
முடிவு :
இவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல், பொ¡¢யலில் சேர்த்து பயன் பெறலாமே. அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.

தொகுப்பு :  .தையுபா அஜ்மல்.

Monday, 13 May 2013

Domestic Free Baggage Allowance From 20 kg to 15 kg Reduced in All Airlines in India..

The free check-in baggage for domestic flyers is all set to be reduced from 20 kg to 15 kg and a host of other charges are on the way. Airport Authorities of India(AAI) has decided to reduce the free baggage limit for economy passengers to 15 kg and will charge anywhere between Rs 200 to Rs 250 per kg for excess weight. While all airlines in India is planning to implement this from next week itself to cash in on the holiday travel (summer break in north India begins this weekend), all other airlines are going to follow suit soon. 
Apart from lower check-in weight, All Domestic flights has also decided the extra charges it will implement in coming days. "We will have a charge for pre-selection of seats in place by next month. The amount is yet to be decided," said an official. 

Airlines permits the checked baggage up to 15 Kg. per passenger in case of domestic flights and apart from that a complimentary carry on of a small handbag for personal items will be permitted as the cabin baggage. Other items like a laptop computer, an overcoat or a blanket, an umbrella or a walking stick, some amount of reading material, a small camera, and infant’s food for the passengers traveling with an Infant is also permitted as cabin baggage. Passengers are allowed to carry a maximum of one piece of cabin baggage, as specified in BCAS guidelines, with a maximum weight of 7 kg. The dimensions of the Cabin Baggage should not exceed (L+B+H) - 55+35+25 totaling 115cms for flights operating the Boeing aircraft (737-800/900 ER) and (L+B+H) - 50+35+23 totaling 108cms for the flights operating Bombardier Q400 aircrafts. The passengers connecting to or from a  International flight to  Domestic flights are entitled to a free baggage allowance as permitted as per International regulations. 

Collection by  M.Ajmal Khan.

Thursday, 9 May 2013

இ- கோல்ட் (E-Gold) பற்றிய ஆய்வு!! ஒரு பார்வை...


தங்கம் வாங்குவதில் நம்மவர்களுக்கு அலாதி ஆனந்தம் உண்டு. நகைக் கடைக்குச் சென்று தங்கத்தை ஆபரணமாக வாங்கியது அந்தக் காலம். இப்போது கோல்டு இ.டி.எஃப்., இ-கோல்டு என நவீன முதலீட்டுக் கருவிகள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வது இந்தக் காலம். இதில் இ-கோல்டில் முதலீடு செய்ய வழி? தங்கமாகவே வாங்கிக்கொள்ளலாமா? என பல சந்தேகங்கள் இருக்கவே செய்கிறது.

இ- கோல்ட் என்ற  வார்த்தை புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா.. ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. எல்லாம் ஷேர் மாதிரிதான், தங்கத்தை சேர்த்து வைக்க அருமையான வழி இது. வழக்கமாக தங்கத்தை நகையாக, நாணயமாக சேர்த்து வைப்போம். வசதி படைத்தவர்களாக இருந்தால் பிஸ்கட்களாக வைத்திருப்பார்கள். இ கோல்ட் முறையில் தங்கம் நமது கணக்கில் சேர்ந்து கொண்டிருக்கும், தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்த ஏடிஎம் மாதிரி. 
தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிட்டெட் நிறுவனம் இ கோல்ட் விற்பனையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாம் ஒரு டிமாட் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் மின்னணு முறையில் தங்கத்தை சேர்த்துக் கொண்டு வரலாம்.
இதில் யூனிட் முறையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு யூனிட் தங்கம் என்றால், ஒரு கிராம் தங்கத்திற்குச் (நாணயம் அல்லது பார்) சமமானது. இங்கேயே தங்கம் வாங்கலாம், இவர்கள் மூலமாகவே விற்கவும் செய்யலாம்.
இங்கு விற்பனை செய்யப்படும் தங்கமானது 99.9 சதவீதம் தூய்மையானதாகும் என்பது இங்கு முக்கியமானது.
என்எஸ்இஎல் நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் உறுப்பு நிறுவனங்களிடமிருந்து தங்கம் வாங்க நாம் பதிவு செய்து கொள்ளலாம்.

திருட முடியாத தங்கம்!
நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் முதலீட்டுத் திட்டம்தான் இ-கோல்டு. பங்குகளை வாங்குகிற மாதிரி இந்த இ-கோல்டையும் வாங்கலாம். இ-கோல்டை யூனிட் முறையில் வாங்கலாம். ஒரு யூனிட் இ-கோல்டு என்பது ஒரு கிராம் தங்கத்திற்கு நிகரானது. ஒரு யூனிட் தங்கத்தைகூட வாங்கலாம். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரங்களுக்கு ஏற்ப, இ-கோல்டு தங்கத்தின் விலை மாறும். நீங்கள் வாங்கிய யூனிட்களின் விலை உயரும்போது அல்லது உங்களின் தேவையைப் பொறுத்து விற்று பணமாக்கி, நமக்குப் பிடித்த மாதிரி நகைகளாகவோ அல்லது பார்களாகவோ வாங்கிக்கொள்ளலாம். இ-கோல்டு பேப்பர் வடிவில் இருப்பதால் திருடு போய்விடுமோ என அஞ்சத் தேவையில்லை.


என்னென்ன தேவை?
இ-கோல்டு வாங்குவதற்கு தனியாக டீமேட் கணக்கு தேவை. பங்குகள் வாங்குவதற்கு டீமேட் கணக்கு இருந்தாலும், இ-கோல்டு வாங்குவதற்கு என்று தனியாக டீமேட் கணக்கு வேண்டும். மேலும், தனியாக டிரேடிங் அக்கவுன்டும் தேவை. இந்த இரண்டும் இருந்தால் நீங்கள் இ-கோல்டு வாங்கலாம். ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு யூனிட் முதல் அதிகபட்சமாக 10,000 யூனிட்கள் வரை வாங்கலாம். இந்த யூனிட்களை விற்று காசாகவும் ஆக்கிக்கொள்ளலாம். அல்லது 99.95% சுத்த தங்கமாகவும் டெலிவரி பெற்றுக்கொள்ளலாம். 


டெலிவரி கட்டாயமா?
நீங்கள் வாங்கும் இ-கோல்டு யூனிட்களை சுத்தத் தங்கமாக டெலிவரி எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தங்கத்தை டெலிவரியாக எடுத்தாக வேண்டும் என்று எந்த கட்டாயமுமில்லை. தற்போது மும்பை, டெல்லி, அகமதாபாத், சென்னை, கொச்சின், பெங்களூரு உள்ளிட்ட 13 இடங்களில் டெலிவரி சென்டர்கள் இருக்கிறது. பராமரிப்புக் கட்டணம் மற்றும் பரிவர்த்தனைக் கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஒரு கிராம் தங்க காயின் அல்லது கட்டியாக டெலிவரி எடுக்கும்போது 100 ரூபாயும், எட்டு மற்றும் பத்து கிராம் டெலிவரி எடுக்கும்போது 400 ரூபாயும் கட்ட வேண்டும். ஆனால் ஒரு கிலோ டெலிவரி எடுக்கும்போது எந்தவித கட்டணமும் கட்ட வேண்டியதில்லை. 

பாசிட்டிவ் பாயின்ட்!
குறைந்த பராமரிப்பு கட்டணத்தில் சுலபமான வழியில் இ-கோல்டு வாங்க முடியும்.
தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்திற்குத் தகுந்த யூனிட்கள் கிடைக்கும்.
உங்களுக்குத் தேவையான நேரத்தில் தங்கமாக டெலிவரி எடுத்துக்கொள்ளும் வசதி இதில் உண்டு.


நெகட்டிவ் பாயின்ட்!
டெலிவரி மையங்கள் குறைவாக இருப்பதால் தங்கமாக டெலிவரி எடுப்பதில் சிக்கல் இருக்கிறது.
யூனிட்களை விற்று பணமாகப் பெற்று அதை நகைக் கடையில் கொடுத்து நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரத்திற்குச் செலவிட வேண்டியிருக்கும்.
 நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் எவ்வளவு தங்கத்தை வாங்கி வைத்திருக்கிறது என்பது என்.எஸ்.டி.எல். மற்றும் சி.டி.எஸ்.எல். ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும்தான் தெரியும். இதுபற்றிய விவரங்கள் இன்னும் முதலீட்டாளர்களுக்கு தெரிவிப்பதில்லை.

தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறுவதால் இதுபோன்ற சேமிப்பு திட்டங்கள் மூலம் வாங்கி சேமிப்பது நல்லது!

கூடுதல்தங்க  வரி 
ரூ. 2 லட்சத்திற்கும் மேல் ரொக்கத்திற்கு வாங்கும் தங்கத்தின் விலை ஜூன் 1ம் தேதி முதல் அதிகரிக்கப் போகின்றது. இது தங்க காசு மற்றும் தங்கப் பத்திரங்களுக்கும் பொருந்தும். மத்திய அரசு இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு ஜூன் 1ம் தேதி முதல் 1 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டிருக்கிறது.
ரூ. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தங்க விற்பனைகளுக்கு(தங்க நாணயங்கள் மற்றும் தங்க பத்திரங்கள் உட்பட) 1 சதவீத வரி (டிசிஎஸ்) பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இதே போன்று திருத்தப்பட்ட 2013 நிதி மசோதாவின்படி, ரூ 5 லட்சத்திற்கும் மேல் ரொக்கத்திற்கு வாங்கும் தங்க ஆபரணங்களுக்கும் 1 சதவீதம் வரி விதிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மாற்றப்ட்ட புதிய விதிகள் வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
தற்போதுள்ள விதிமுறைகளின் படி தங்க நாணயங்கள் தங்கம் மற்றும் ஆபரணங்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. எனவே, ரூ 2 லட்சத்திற்கும் அதிக மதிப்புடைய தங்க நாணயங்களின் பரிவர்த்தனைகளின் போது எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. 
தற்போது புதிதாக எந்த ஒரு வரியும் விதிக்கப்படவில்லை என்றும், தங்க நாணயங்கள் மற்றும் தங்க பத்திரங்களுக்கு (10 கிராம் அல்லது அதற்கு குறைந்த எடையுள்ள) அளிக்கப்பட்டிருந்த விதி விலக்கு நீக்கப்பட்டுள்ளது என்று செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்துள்ள மசோதாவின் மூலம் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
"இது புதிய வரி அல்ல. நடைமுறையில் உள்ள பழைய வரியே. ஆனால், அதில் அளிக்கப்பட்டிறுந்த 10 கிராம் அல்லது அதற்கு குறைந்த எடையுள்ள தங்க நாணயங்கள் மற்றும் தங்க பத்திரங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த விதி விலக்கு மட்டும் நீக்கப்பட்டுள்ளது" என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மக்களவையில் இம்மசோதாவை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் திரு ப. சிதம்பரம், "தற்போது நடைமுறையில் உள்ள விதி விலக்கு, பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கின்றது", என்று கூறினார். தற்போது, இந்த மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின் ஜனாதிபதியின் கையொப்பம் பெற்று சட்டமாக நிறைவேற்றப்படும் என்பது கூடுதல் தவகல்.

For English....
Generally most of the people do not know about E-Gold. This article will be used for them.E-Gold is a new incarnation of gold, innovated by National Spot Exchange (NSEL), which enables investors to invest their funds into gold in smaller denomination and hold it in demat form. It is available on the pan India electronic trading platform set-up by the National Spot Exchange, which can be accessed through the members of NSEL or their franchises. It provided a unique opportunity to buy, accumulate, hold and liquidate "Electronic Gold (E-Gold)" as well as to convert the same into physical gold coin/ bar in a seamless manner.
For the first time in the history of the Indian commodity market, the National Spot Exchange has launched a unique investment product in gold on its platform. It provides an opportunity for small investors to invest in gold in smaller denominations of 1 gram and multiple thereof in demat form.
The segment, which is similar in functionality to the cash segment in equities, offers commodities in the dormant form in smaller denominations (e.g. 1, 2, 3 gms). Powered by its unique features, E-GOLD is poised to become a household name across the country with millions of investors opening their demat account to participate in this spectacular instrument.
The product is designed to reach the masses across the country. Investors can now trade and invest in gold just like shares. This product is equally suitable for retail investors of equity market and household. The clearing and settlement pay-in and the payout is based on T+2 cycles.
Hitherto the exposure of commodity market participants in India has been limited to commodity futures contract, physical commodity and ETF Gold. NSEL came with the objective to develop a convenient and cost effective platform for buying and selling physical gold by providing an option of holding gold electronically (in Demat account). It will reduce the cost associated with holding physical gold (cost of lockers & insurance costs) and will offer a transparent price structure for retail investors. It will attract a new segment of savvy investors who have refrained from investing in gold for want of a cost efficient seamless platform.
The exchange has empanelled Depository participants which include Globe, Religare, Karvy, Goldmine, IL&FS, Monarch, SMC, SSD, SHCIL, Alankit, Zuari, LSE, Geojit BNP Paribas, Master Capital, India Infoline and Aditya Birla.. An individual interested in trading in E-GOLD will have to open beneficiary and a trading account with any of the empanelled DPs. In case the unit holder is interested to take physical delivery of gold bar/ coin, against his E-GOLD units, he can surrender such units to the Exchange and get physical delivery at any point of time at his discretion. Initially, delivery of physical gold will be made available at Ahmadabad, Mumbai and Delhi. The Exchange is in the process of expanding the number of centers in the future to offer physical delivery. If a client opts for physical delivery, he can get the same from any center of his choice out of such specified centers.
The main advantages of NSEL E-Gold are transparent pricing, seamless trading, easy entry and exit, lower holding cost and pan India accessibility.
Investors can invest in E GOLD without worry for daily MTM pay in/payout and roll over issues as applicable in the derivative market.
Liquidity, i.e. Any time buying and selling of commodity is possible with hassle free low cost transaction in physical commodities
There is no risk of commodity custody/theft. The storage charges of holding gold in demat form are Rs.0.60 per unit/month.

e-Silver

E-Silver is a new incarnation of silver, innovated by National Spot Exchange (NSEL), which enables investors to invest their funds into silver in smaller denomination and hold it in demat form. It is available on the pan India electronic trading platform set-up by the National Spot Exchange, which can be accessed through the members of NSEL or their franchises. It provided a unique opportunity to buy, accumulate, hold and liquidate "Electronic Silver (E-Silver)" as well as to convert the same into physical silver coin/ bar in a seamless manner.

e-Copper

In order to penetrate further into the retail segment of the commodities investors, National Spot Exchange Limited (NSEL) has launched E-Copper contract under its E-series kitty after E-gold and E-silver. E-copper will enable those retail investors who prefer investing in commodity stocks with a view to gain benefits from the volatility in the respective commodities, with no exchange currently offering such facility. It provides an opportunity for small investors to invest in Copper in smaller denominations of 1 Kg and multiple thereof in demat form.

e-Zinc

In order to penetrate further into the retail segment of the commodities investors, National Spot Exchange Limited (NSEL) has launched an e-Zinc contract under its e-Series kitty after e-Gold and e-Silver and e-Copper. e-Zinc will enable those retail investors who prefer investing in commodity stocks with a view to gain benefits from the volatility in the respective commodities, with no exchange currently offering such facility. It provides an opportunity for small investors to invest in Zinc in smaller denominations of 1 Kg and multiple thereof in demat form.

e-Lead

In order to penetrate further into the retail segment of the commodities investors, National Spot Exchange Limited (NSEL) has launched an e-Lead contract under its E-series kitty after e-gold and e-silver, e-copper and e-zinc. e-Lead will enable those retail investors who prefer investing in commodity stocks with a view to gain benefits from the volatility in the respective commodities, with no exchange currently offering such facility. It provides an opportunity for small investors to invest in Lead in smaller denominations of 1 Kg and multiple thereof in demat form.

e-Nickel

Spot Trading in “E-NICKEL” contract have been launched for trading from Monday, the 28th November 2011. The members, who have opened CM-Pool Accounts with any of the DPs empanelled with National Spot Exchange will be eligible to participate in this contract. It is mandatory for the members to have CM-Pool accounts in both depositories i.e., NSDL and CDSL.
Only such clients and constituents, who have opened their Client Beneficiary Accounts with any of the NSEL empanelled DP can participate in this contract. It provides an opportunity for small investors to invest in Nickel in smaller denominations of 1 Kg and multiple thereof in demat form.

e-Platinum

Spot Trading in “e-Platinum” contract has been launched for trading from Tuesday, the 17th April 2012. The members, who have opened CM-Pool Accounts with any of the DPs empanelled with National Spot Exchange will be eligible to participate in this contract. It is mandatory for the members to have CM-Pool accounts in both depositories i.e., NSDL and CDSL.
Only such clients and constituents, who have opened their Client Beneficiary Accounts with any of the NSEL empanelled DP can participate in this contract. It provides an opportunity for small investors to invest in Platinum in smaller denominations of 1 gram and multiple thereof in demat form.



E Gold India

Today, in India, gold rate is increasing dramatically. The cost of the gold is growing determined by money changing instead of secure-haven need and usual saving models, according to the commodities of Angel, a top brokerage in India. Tracking the rate of e gold India as from before the year, it can be viewed that gold rates positioned across Rs 20255/10gram when the cost of Indian currency against the dollar of US was 45.35. The currency reduced essentially thereby helping a fixed increase in costs. Spot rates of gold started the year in $1565/Oz and measured top to check a stage of $1785/Oz, place which the downturn started.
This decline in costs is suggested to maintain in the temporary thinking the constant financial doubts. The gold exchange traded money in India saw the maximum net outflows in early 52months. As per the cash managers bankers have begun reserving gains as a revival in the market of stock can be viewed and e gold India reaches Rs.30000 per grams. The list is which has made as the most impressive saving in the past 3 years in before observing a delay in inflow as 2nd FY 2012 half. E gold India has increased a lot in future too.
The main use that saving in e-gold India has across gold ETF is that it engages no executive rates or other recurring prices. So the brand is more expensive for people who have a saving prospect. The payments engaged are a single time transaction charge of 2-3/gram and a brokerage charge of 0.2 to 0.3 percent. Both these payments are taxed in terms of gold ETFs, but are extremely high. E-gold can be changed into normal gold for amounts as less as 8gm, while gold ETFs provide the choice of physical supply but for a denomination of around a kg. Collecting such a big sum of gold is not possible for savers.
To purchase e gold India units, the person wants to unlock a debit account with the most impaneled DP (Depository Participants). Retail people can locate sell and buy orders for the units of e gold India with their broker via phone or via the internet. Saving in e gold India or other metal releases up more benefit class for wholesale people to expand their investment collection. It offers a means to purchase, sell and collect e gold as well as to change the same into normal gold. To save in e gold India, people want to have their Demat account at these locations.
The main reason for the gap is that in the terms of saving in the ETFs of gold, there is a variety of payments, such as supervision and advisory pays, distribution costs and marketing, and other functional prices. The cost ratio of gold ETFs is nearly one percent. Aside for the payments, tracking faults are also getting down the paybacks of gold ETFs somewhat more.


How to Buy Gold

Gold is forever, is useful, beautiful and never throw out. Gold ornaments intensely connect with the tradition, culture and religion of India. Indian people see gold ornaments as an asset for their wealth. When planning to buy gold, it is essential one should be familiar with how to buy gold and they must remember certain terms like quality of gold, recent price of gold, credible seller and the fluctuating trends of the gold market.
Purchasing gold should not be an impetuous decision because people should be careful when purchasing gold and consider the above specified terms. Many people mostly like to invest on gold ornaments or cold coins for their future. People have either purchased gold for daily use like gift, ornaments and more or they purchase it for the purpose of investment. Whatever the reason of purchasing gold is, it should be bought from a credible and authentic source. Many people don't know how to buy gold and other hand some people are buying gold without checking any features of gold.
Gold is often in great demand; it is a real product which can be passed on without any concern for its appeal in the future. Many people think gold is a superior for protecting wealth, and essential investment for future use.
Pure gold is priced as 24 Karat gold, and is rated against the Indian money on a regular basis. It is then converted into gold bars, bricks, coins of various weights ranging from a gram to kilograms. This kind of gold is bought and sold for investment purpose. Each coin, goldbrick, and bar are engraved with 999 stamps or symbol, which indicate its purity. Only authorized companies can scratch this symbol on the gold bricks and this is the essential stamp that one should look for while purchasing gold. This information will help one to know how to buy gold and what are the essential terms should see when purchasing gold.
Gold for investment reason is also sold on the term of 18k and 22k in the Indian Market. When purchasing gold determines the recent market rate of gold. After determining the rate, confirm it with minimum one reputable source, and preferable other trustworthy sources.
Many dealers have charged for handling and shipping and provide quantity discounts. When buying, get bills for all purchases and get a verification of delivery date before paying for the gold bricks.
To know how to buy a good one can take the help of their friends or relative who have good knowledge in the gold market. One should often keep on looking at the market trend when plan to buy gold. Sometimes the gold rate may decline; sometimes the price may increase or remain steady for the long term.
Before buying gold, one has to learn how to buy gold because there are several grades available which provide fake piece as gold. People can browse on the online site in order to get an idea about how to buy gold.

And the other advantages?

Well there are a host of other benefits, which are:

  • Convenience in transacting: E-Gold provides you seamless transacting. You simply have to call your broker and place your order to transact (buy or sell) in the product, and your demat account too will reflect the transaction (buy or sell) done. You can transact during the long trading hours of NSEL, which are from 10:00 am till 11:30 pm.

  • Liquidity: E-Gold provides you, with the requisite liquidity as you can sell any number of units (subject to the existing units held by you), at anytime during the trading hours of the exchange. Moreover, while selling your E-Gold, you won’t encounter some terrible experiences like the ones you face while selling physical gold (typically while selling physical gold, the jeweler will deduct making the charges (the charge that is added while buying gold). As regards banks, they refuse to buy back gold).

  • Cost effective: E-Gold enables you to transact in gold, by incurring minimal cost (Rs 0.60 per unit per month, which is the annual maintenance cost of your demat account, plus some marginal (generally 0.50%) brokerage charged by your broker. Hence, by opting for this instrument for gold investments, you save onto the holding costs, which you otherwise pay steep while stacking physical gold in your bank locker.

  • No risk of theft: E-Gold eliminates the risk of theft of your precious yellow, as the NSEL acts as the custodian of your gold.

  • Quality: You can be rest assured that the quality of your gold will never be compromised, because as per the Securities and Exchange Board of India (SEBI) regulations, the purity of underlying gold should be 0.995 fineness and above.

  • Premium: We are sure that you must have encountered the horrendous experience of the gold vendor charging a premium at the time of your purchase of physical gold. However, this does not happen in E-Gold as transactions take place at the prevailing market rates, without paying any premiums. Hence, the pricing in the product is transparent.

At a glance

Collection By : M. Ajmal Khan.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Monday, 6 May 2013

உங்கள் குழந்தைகளுக்குப் பயனுள்ள விளையாட்டுத் தளங்கள்!!


லீவு இருந்தும் காலையில் வெளியே விளையாடப் போக முடியலை. வெயில் சுட்டெரிக்கிறது. என்ன செய்யலாம்?
ஆன்லைனில் உங்களுக்காகவே கொட்டிக்கிடக்கின்றன, பயனுள்ள விளையாட்டுத் தளங்கள். சிலவற்றை இப்போது பார்ப்போம்.
கிட்ஸ் கேம்ஸ்... இணைய விளையாட்டுக்காகவே உருவாக்கப்பட்ட இந்தத் தளத்தில், விதவிதமான விளையாட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லாமே 10 வயது வரையான சுட்டிகளுக்கு ஏற்றவை. சுட்டுத்தள்ளும் வழக்கமான விளையாட்டுகள் போன்றவை அல்ல; விதவிதமான தலைப்புகளில் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
முதலில், கோ-ஆர்டினேஷன் விளையாட்டுகள். இந்த வகையில் முதலில் இருப்பவை, 'கண்டுபிடி' ரகத்தைச் சேர்ந்தவை. ஒளிந்திருக்கும் சிறுவனைக் கண்டுபிடிப்பது, மழை மேகங்களில் இருந்து சொட்டும் நீர்த் துளிகளைக் குடையால் பிடிப்பது, பறக்கும் பட்டாம்பூச்சிகளைப் பிடிப்பது என எல்லாமே  குதூகலம் தரக்கூடியவை.
அடுத்து, சரியான வார்த்தையை யூகிக்கும் சொல்விளையாட்டு, விசைப்பலகை எழுத்து விளையாட்டு, முட்டையைக் காப்பாற்றுவது என நிறைய உள்ளன. இவை போரடித்தால், விதவிதமான புதிர்கள். சிதறி இருக்கும் துண்டுகளைக் கவனமாகச் சேர்த்து, முழுச் சித்திரத்தை உருவாக்கும் விளையாட்டு. 25 துண்டுகளில் தொடங்கி,100 துண்டுகள் வரை புகுந்து கலக்கலாம்.
வேகப் பிரியர்களுக்கான பந்தய விளையாட்டுகளும் இருக்கின்றன. எதையாவது உருவாக்கி மகிழும் வகையில் கிரியேட்டிவானதாக என்றால், அதற்கும் ரெடி. மணல் சிற்பங்களை உருவாக்குவது, மரத்தில் உருவங்கள் செய்வது, இணையப்  பென்சிலைக்கொண்டு உருவங்களை வரைவது என அசத்தலாம்.
சும்மா விளையாடிக்கொண்டே இருந்தால் போதுமா? விளையாடும்போதே எதையாவது கற்றுக்கொண்டால்தானே பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால், அதற்கேற்ற கற்றல் சார்ந்த விளையாட்டுகளும் உண்டு. இந்தத் தளத்துக்கான முகவரி: www.kidsgames.org
பிபிஎஸ்கிட்ஸ் என்ற தளமும் சிறுவர்களுக்கான விளையாட்டுகளை வழங்குகிறது. கல்வி சார்ந்த சுவையான நிகழ்ச்சிகளை வழங்கும் அமெரிக்கத் தொலைக்காட்சியான பிபிஎஸ், சிறுவர்களுக்காகவே  உருவாக்கிய வலைதளம் இது.
வகைவகையான விளையாட்டுகளுடன், பார்த்து ரசிப்பதற்கான வீடியோக்களும் இருப்பது இந்தத் தளத்தின் சிறப்பு. வாசிக்கும் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு, விலங்கு விளையாட்டு, இசை விளையாட்டு, விஞ்ஞான விளையாட்டு, கணித விளையாட்டு, சுற்றுச்சூழல் விளையாட்டு என, இதில் இருக்கும் விளையாட்டுகள் மனதைக் கொள்ளைகொள்பவை. புதிர் விளையாட்டு மற்றும் வண்ணம் தீட்டும் விளையாட்டுகளும் கவர்ந்திழுக்கக் கூடியவை. வண்ணம் தீட்டும் விளையாட்டுகளிலேயே பல ரகங்கள் இருக்கின்றன. இந்தத் தளத்தின் முகவரி www.pbskids.org
விளையாட்டுகளோடு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள நினைத்தால், லேர்னிங் கேம்ஸ் ஃபார்கிட்ஸ் (www.learninggamesforkids.comதளத்துக்குச் செல்லலாம். இதை, விளையாட்டுகளின் தலைநகரம் என்று வர்ணிக்கலாம். அந்த அளவுக்கு இந்தத் தளத்தில் விளையாட்டுகள் குவிந்து கிடக்கின்றன. இது நமக்கு நிறையக் கற்றுக்கொடுப்பவை.
உதாரணத்துக்கு, ஆங்கில மொழியில் சொற்களைச் (ஸ்பெல்லிங்) சரியாக அறிமுகம் செய்துகொள்வது, இலக்கிய விளையாட்டு, அறிவியல் விளையாட்டு, பூகோள விளையாட்டுப் போன்றவை இருக்கின்றன.
டைப்பிங் செய்வதை சுவாரஸ்யமாகக் கற்றுக்கொள்ள பிபிசி இணையதளம் சார்பிலும் ஒரு விளையாட்டு உள்ளது. நான்கு கட்டங்களைக் கொண்டது. இந்தப் பகுதியிலேயே வேறு சில விளையாட்டு களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் புகுந்து விளையாட,www.bbc.co.uk/schools/typing என்ற முகவரிக்குச் செல்லலாம்.

பிளாட்(plot) Vs பிளாட்(flat) Vs தனிவீடு !! என்ன வாங்கலாம்? ஒருஆய்வுகட்டுரை...



Red Sea Palace Hotel (Hilnan)பிளாட்(plot) வாங்கலாமா?ஃபிளாட்(flat) வாங்கலாமா?தனிவீடு வாங்கலமா?அடுக்கு மாடி வீடு வாங்கலாமா?நிலம்,கட்டிடங்களின் விலை இப்படி விண்ணை எட்டிக்கொண்டே போகிறதே.குறையுமா இல்லை இன்னும் அதிகரிக்குமா?தனிவீடாயின் வில்லங்கம் வந்து விடுமா?பில்டர் நினைத்த படி கட்டி முடித்து தருவார்களா?வீடு வாங்க நினைப்பவர்களின் மனதில் எழும் பல கேள்விகளில் இந்தக்கேள்விகள் முக்கியமானது.

ரெகுலர்இன்கம்வேண்டுமென்றால்ஃப்ளாட்டிலும், நீண்டகால முதலீடுக்கு பிளாட்டிலும் முதலீடு செய்வதே சிறப்பானதாகும்.

எப்பொழுதுமே நம் நாட்டில் ஐ டி துறையைச்சார்ந்தேநிலங்களின்,அடுக்கு மாடி குடி இருப்புகளின் வளர்ச்சியும் ,வீழ்ச்சியும் இருக்கும்.மற்ற துறைகளை விட ஐ டி துறையினருக்கு வருமானம் அதிகம்.வருமானவரித்தொல்லைகளில் இருந்து விடுதலை பெற அதிகளவு நிலமாகவோ,அடுக்குமாடி குடியிருப்புகளாகவோ வாங்குகின்றனர். சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே ஒரு வீட்டுக்கு சொந்தக்காரர் ஆகி விடுகின்றனர். 

இப்பொழுது உள்ள விலை வாசியில் நடுத்தர வர்க்கத்தினர்  அவரவர் தகுதிக்கு எற்றார் போல் அடுக்குமாடி குடி இருப்புகளையே வாங்க விரும்புகின்றனர்.கால் கிரவுண்ட் வாங்கக்கூடிய விலையில் முழுதாக ஒரு வீட்டையே வாங்கி குடி புகுந்து விடலாம்.

புறநகர்ப்பகுதிகளில் நிலங்கள் வாங்கி முதலீடு செய்தால் அது ஆக்கிரமிக்கப்படும் அபாயமும் உள்ளது. பிறகு ஆக்கிரமிப்பாளர்களைக் காலி செய்ய கோர்ட் கேஸ் போன்ற அலைச்சல்,காலி செய்ய பணம் ,வாங்கிய நிலத்தை அவ்வபொழுது சென்று கண்காணிக்கும் சிரமம்,டென்ஷன் என்று ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு பயந்து  ஃப்ளாட்டுக்களில் செய்யும் முதலீடு அதிக சிக்கலில்லாதது அதுவே சிறந்ததாக கருதுகின்றனர்.இன்னொரு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் கையிலே காசு வாயிலே தோசை என்பது போல் முதலீடு செய்த சில மாதங்களில் வாடகை மூலம் வருமானமும் வரும்,ஃபிளாட்டின் மதிப்பும் (Appreciation ) உயர்ந்து கொண்டே செல்லும் என்று கணக்கு போடுபவர்கள் அதிகம்.

சொந்த வீடு அனைவரின் கனவாக,இலட்சியமாக உள்ளது.ரிசர்வ் வங்கி வீட்டுக்கடன் வட்டியை குறைத்ததுமே பலரும் வீடு வாங்க நினைகின்றனர்.தங்கள் சேமிப்பில் முழு தொகையை வைத்து வீடு வாங்குவோரை விட,அதிகளவு வங்கி கடன் பெற்று வாங்குபவர்களே அதிகம்.பில்டர்களும் 20% சொந்த பணம் போதும்.மீதி 80% நாங்களே ஏற்பாடு செய்து தருகின்றோம் என்று சுண்டி இழுக்கின்றனர்.

வீடு வாங்குபவர்கள் தங்களுடைய பட்ஜெட்டுக்கு தகுந்தவாறு,தரமான திருப்திகரமான வீடுகளை வாங்க நினைப்பவர்கள் முதலில் நல்லதொரு பில்டரை தேர்வு செய்வது நல்லது.பற்பல விஷயங்களை பொறுத்தே ஒரு பிளாட்டின் விலையை மதிப்பீடு செய்ய  முடியும்.  வீட்டைக்கட்டும் பில்டர்,பிளாட் அமைந்துள்ள இடம்,உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ஏரியா, ஃபிளாட்டின் வசதிகள்,கட்டுக்கோப்புகள்,உபயோகிக்கப்படும் பொருட்கள் ,பராமரிப்பு,  போன்ற  அம்சங்களை கொண்டு ஒரு ஃபிளாட்டின் விலை மதிப்பிடப்படுகிறது.

இதற்கு முன் அந்த நிறுவனத்தினர் கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகள்,நிறுவனத்தினரின் செயல்பாடுகள் அதன் வசதிகள் என்று அக்குவேறாக ஆணி வேறாக அலச வேண்டுவது அவசியம்.ஒரு புடவை வாங்குவதென்றாலே நான்கு கடைகள் ஏறி இறங்கும் பொழுது முழுதாக ஒரு வீடு வாங்கும் பொழுது கண்டிப்பாக சிரமம் ஏற்று அலைந்தாக வேண்டியது அவசியம்.

சதுர அடியின் விலை சற்று அதிகமாயினும் தரமான,முன்னணி பில்டர்களிடம் வாங்குவது இன்னும் பாதுகாப்பானது.உடனே குடி புகத்தேவை இல்லை என்றால் கட்டிடடத்திற்கு அஸ்திவாரம் போடும் பொழுதே நாம் புக் செய்து விட்டால் குறைந்த விலையில் வாங்கி விடலாம்.அதுதான் புத்திசாலித்தனமும் கூட.அடித்தளம் போடும் பொழுது 5000 ரூபாய் ஒரு சதுர அடி என்று அறிவித்து இருந்தால் 20 சதவிகிதம் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது 5300 ஆகி விடும்.கட்டிடம் படிப்படியாக முழுமை பெற பெற சதுர அடியின் விலையும் எகிறிக்கொண்டே இருக்கும்.ஆரம்பநிலையில் விலை குறித்து பில்டர்களிடம் அடித்து பேரம் பேசலாம்.அவர்களும் நிறைய இறங்கி வருவார்கள்.ஃபிளாட் வாங்குபவர்களுக்கும் முதலீட்டுப் பெருக்கம் என்பது அவர்கள்  எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக கிடைக்கும்.

அண்மைக் காலமாக நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் புதுப்புது லே-அவுட்கள் தினமும் முளைக்கின்றன. ஆயிரக்கணக்கில் போடப்படும் இந்த பிளாட்களை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். டிவி துணை நடிகைகளை வைத்து இடத்தின் அருமைபெருமைகளை எடுத்துச் சொல்வதில் தொடங்கி, 'ஃப்ரீ சைட் விசிட்’ என பல வகையிலும் விளம்பரம் செய்கின்றன. இந்த இடங்களை நீங்கள் வாங்கப் போனால் என்னென்ன விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும்? ஏற்கெனவே போய் வந்தவர்களின் அனுபவங்களிலிருந்து இதை நன்றாகவே தெரிந்துகொள்ளலாம். சுவாரஸ்யமான அந்த அனுபவங்களின் தொகுப்பு இனி: சொல்வது ஒன்று, காட்டுவது வேறு..! அரை கிரவுண்ட் மனை 40,000 ரூபாய் என விளம்பரம் செய்வார்கள். விலை குறைவாய் இருக்கிறதே என நீங்கள் போனால், மாட்டிக்கொள்வீர்கள். 

பில்டர்களின் கலர் கலர் விளம்பரங்களை அப்படியே நம்பி, வார்த்தை ஜாலங்களில் மயங்கி விடாமல்,அட்வான்ஸ் கொடுக்கும் முன் வாங்குபவர்கள் ராஜா.அட்வான்ஸ் கொடுத்த பின் பில்டர்கள் ராஜா என்பதை கவனத்தில் கொண்டு அட்வான்ஸ் கொடுக்கும் முன்னரே ஏகப்பட்ட ,வேண்டிய கேள்விகள் கேட்டு ,தேவையான கண்டிஷன்கள் போட்டு,தரமற்ற,நியாமற்ற புரமோட்டர்களின் வலையில் வீழ்ந்து விடாமல்,விழிப்புணர்வோடு,பக்கா டாக்குமெண்டில்,அவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி,அக்ரிமெண்ட் போட்டு,கட்டிடம் கட்டப்படும் காலம் பல தடவைகள் சிரமம் பாராது சென்று கட்டிடத்தின் வளர்ச்சியை கண்கானித்து,ஏமாற்றம்,குறை இருப்பின் அப்பொழுதே புகாராக கூறி,அதற்கான தீர்வு பெற்று ,அக்ரிமெண்டில் உள்ள பிரகாரம் பணம் செலுத்துவதில் கவனம் கொண்டு விழிப்புணர்வுடன் செயல் பட்டால் இனிய இல்லம் நமதே. மொத்தத்தில் பொன்னில் போட்ட காசுக்கும் மண்ணில் போட்ட காசுக்கும் பழுதில்லை என்ற பழமொழிகொப்ப புத்திசாலித்தனமாக,கவனமாக ஆராய்ந்து வீட்டை வாங்கி முதலீடு செய்வது நலமே.

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.



Saturday, 4 May 2013

இன்று முதல் தமிழகம் முழுவதும், 59 மையங்களில்பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது!!.


நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இன்று (மே 4) முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் பொறியியல் இடங்கள் இருப்பதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிந்து, தற்போது, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, "டேட்டா சென்டரில்", மதிப்பெண்களை தொகுக்கும் பணி முடிவுறும் நிலையில் உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களின் முதல், "சாய்ஸ்", பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளாகத் தான் இருக்கின்றன.
அதிலும், மருத்துவப் படிப்பிற்கு, "சீட்" கிடைக்கும் மாணவர்கள் கூட, கடைசி நேரத்தில், பொறியியல் கலந்தாய்வுக்கு வந்து விடுகின்றனர்.முன்னணி கல்லூரியில் படிப்பை முடித்தால், கைமேல் வேலை, கை நிறைய சம்பளம் என்ற நிலை இருப்பதால், மாணவர்கள், பொறியியல் படிப்பை, அதிகளவில் தேர்வு செய்கின்றனர்.
கடந்த ஆண்டு நிலை: கடந்த ஆண்டு, பொதுக் கல்வி பிரிவில், 1.74 லட்சம் விண்ணப்பங்கள், தொழிற்கல்வி பிரிவில், 6,000 விண்ணப்பங்கள் என, 1.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 1.75 லட்சம் இடங்கள் இருந்தன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள், கடைசி வரை நிரம்பவில்லை.
இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 2 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட, அதிக மாணவ, மாணவியர் விண்ணப்பிப்பர் என, அண்ணாபல்கலை எதிர்பார்க்கிறது. எனவே, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டுள்ளது.சென்னையில் 4 இடங்களில் படிவம் விற்பனை செய்யப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகம், குரோம்பேட்டை, ஐ.எம்.ஐ.டி., புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக், பிராட்வே பாரதி அரசு பெண்கள் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தில் 59 மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 2 1/2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
விண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்.சி., எஸ்.சி (அருந்ததி), எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250 சலுகை விலையில் வழங்கப்படுகிறது. சலுகை விலையில் பெறத் தகுதியுடையவர்கள் அதற்கான ஜாதி சான்றிதழ்களின் நகல் கொடுக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் ரூ.700-க்கு வரைவு காசோலை எடுக்க வேண்டும். "செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-600025" என்ற முகவரிக்கு காசேலை எடுக்க வேண்டும்.
விண்ணப்பம் வழங்கும் இடங்கள் மற்றும் சேர்க்கை அட்டவணை தொடர்பான விவரங்கள் அனைத்தையும்,www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

முஸ்லிம் மாணவ, மாணவியர் இலவச பொறியியல் படிப்பை பயன்படுத்திக் கொள்வார்களா?


Stock Photo - myanmar (burma), 
 yangon (rangoon), 
 students and 
members of the. 
fotosearch - search 
stock photos, 
pictures, wall 
murals, images, 
and photo clipart
பெரும்பாலான மாணவ, மாணவியர் +2 முடித்தவுடன் பி.இ. எனப்படு
ம் என்ஜினியரிங் படிப்பு படிக்கவே விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.
ஆனால் சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ள 30 ஆயிரம் சீட்டுகள் கடைசி வரை காலியாகவே கிடந்தன.

இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 94 பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்கப் பட உள்ளன. இதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன, இவற்றில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து விடும் என்று தெரிகிறது.

இதன் மூலம் கூடுதலாக 12 ஆயிரம் மாணவ, மாணவியர் பொறியியல் படிப்பு படிக்கலாம். சுருங்கச் சொல்வதெனில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சீட் ரெடி. இது தெரியாமல் நிறைய முஸ்லிம் மாணவ, மாணவியர் நிர்வாகக் கோட்டவுக்கு பல லட்ச ரூபாய் கொடுத்து விட்டு கை பிசைந்து நிற்பதை பார்க்க முடிகிறது.

பொறியியல் படிப்புக்கு மூன்று விதத்தில் சீட்கள் ஒதுக்கப்படுகின்றன. +2வில் மிக அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும். இந்த சீட்களை பெற்றவர்களுக்கு வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வராது.

அதோடு நன்கொடையும் பெறப்படாது. அதற்கு அடுத்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும்.

ஒரு தனியார் கல்லூரிகளில் 100 சீடகள் இருந்தால் அதில் 60 சீட்கள் அரசு வசம் ஒப்படைக்கப்படும். அதே தனியார் கல்லூரி சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரியாக இருந்தால் 40 சீட்கள் அரசு வசம் ஒப்படைத்து விடுவார்கள்.

இப்படி அரசு வசம் ஒப்படைக்கப்பட்ட கல்லூரி சீட்களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த சீட்களுக்கு கட்டணமாக ரூ. 32 ஆயிரம் வரை (வருடத்திற்கு) செலுத்த வேண்டியிருக்கும். இந்த சீட்களும் கிடைக்காமல் போகும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாக கோட்டா சீட் தான் கதி.

ஒரு தனியார் கல்லூரி 100 சீட்களில் 60 சீட்களை அரசு வசம் ஒப்படைத்து விட்டால் மீதம் 40 சீட்கள் இருக்குமல்லவா? இந்த 40 சீட்கள் தான் நிர்வாக கோட்டா சீட்கள் என அழைக்கப்படுகின்றன. தரமான கல்லூரிகளில் இந்த சீட் 3 லட்ச ரூபாய் வரை விலை போகிறது.


பிரபலமல்லாத கல்லூரிகளில் வெறும் 32 ஆயிரம் ரூபாய்க்கும் தரப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இட ஒதுக்கீடு கிடைத்த பிறகு எப்போதும் இல்லாத வகையில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிக முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு இடம் கிடைத்துள்ளது.

இதில் இடம் கிடைக்காத முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு தனியார் கல்லூரிகள் அரசு வசம் ஒப்படைத்த சீட்களில் படிக்க இடம் கிடைக்கும். இதிலும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு உண்டு. அதனால் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் முஸ்லிம் மாணவ, மாணவியர் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இந்த மாதம் 31ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி விட வேண்டும்.

அடுத்த ஜீன் மாதம் 18ம் தேதியன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு 28ம் தேதியன்று கவுன்சிலிங் தொடங்கும். அந்தக் கவுன்சிலிங் ஜீலை 25ம் தேதி முடிவடையும்.

இந்த ஆண்டு மருத்தவம், பல் மருத்துவம், பொறியியக்ம் வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டக் கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியர் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால் படிப்பு கட்டணச் செலவை அரசே ஏற்கும். விண்ணப்பதாரரின் தாய், தந்தை, பெற்றோரின் பெற்றோர், உடன் பிறந்தோர் பட்டதாரியாக இல்லாமல் இருந்தால் இந்தச் சலுகை கிடைக்கும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பலகலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் அரசு செலுத்தி விடும்.

இந்த சலுகையை பெற வேண்டுமெனில் தங்கள் குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இல்லை என்ற சான்றிதழை தங்களது பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் மூலம் விண்ணப்பித்து துணை வட்டாட்சியர் பதவிக்கு குறையாத அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும்.

பெரும்பாலான முஸ்லிம் குடும்பங்களில் பட்டதாரிகள் இருக்க மாட்டார்கள். அதனால் இந்த கட்டணச் சலுகை முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு பலன் தரும் என்பதே உண்மை. இந்தச் சலுகையை முஸ்லிம் மாணவ, மாணவியர் ஒழுங்கான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

ஒரு வேளை இச்செய்தி இப்போதைக்கு உங்களுக்கு பயன் தராவிட்டாலும், சமுதாய சொந்தங்களுக்கு இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக பயன் தரலாம். எனவே கால தாமதம் செய்யாமல் விரைவாக தேவையானவர்களுக்கு கிடைக்கும் Share செய்யுங்கள்
.
தொகுப்பு : மு.அஜ்மல் கான் .


Thursday, 2 May 2013

Free USA Telephone Service for Apple & Android Users...

24 மணி நேரம் பேசனும், வருஷம் பூரா பேசனும்னு ஆர்யா ஒரு படத்தில சொல்வாரு, அதுக்கு சந்தானம் அப்ப நேராதான் பேசனும்னு சொல்றது இப்போ பொய் ஆகி போச்சு. இன்னைக்கு ஒரு சூப்பர் ஆபறை பற்றி கூறப்போகிறேன். இது ஆப்பிள் மற்றும் ஆன்ட்ட்ராயிட் ஃபோன்… வச்சிருக்கவங்களுக்கு வரப்பிரசாதம். 

லைன் 2 என்னும் ஆப்ஸை இறக்குமதி செய்யுங்க. அதில் ஒரு டெலிஃபோன் நம்பர் தருவாங்க அமெரிக்கா நம்பர். இதுக்கு தேவை போஸ்ட்கோடு என்னும் அமெரிக்க பின்கோடு மற்றும் மின்னஞ்சல் முகவரி. போஸ்ட்கோடு எப்படி கிடைக்கும்னு கேக்குரவங்களுக்கு ஒரு க்ளூ கூகுள் பன்னுங்க ஏதாவது ஒரு அமெரிக்க கம்பேனி அல்லது அட்ர்ஸோட பின்கோடை போட்டா அந்த ஏரியால இருந்து மூனு நம்பர் கிடைக்கும் அதுல ஒன்னை செலக்ட் செய்தா ஒரு பைசா இல்லாம வாழ்க்கை முழுவது இலவச டெலிஃபோன் மற்றூம் இதை இந்தியாவுல அல்லது உலகத்துல எந்த மூலையில் உள்ள ஆட்களுக்கு இலவசமா – வைஃபை அல்லது 3ஜி அல்லது 2ஜி இன்டர் நெட் இருந்தா போது பேசலாம் ஐ எஸ் டி தேவையில்லை. வைபர், ஸ்கைப் இதெல்லாம் இருக்கே இது எதுக்குனு கேக்குறவங்களுக்கு இதில் மட்டும் தான் டெலிஃபோன் நம்பர் உங்களுக்குனு தனியா தராங்க,அதனால் உங்க ஒரிஜினல் நம்பர் தர விருப்பம் இல்லாத நேரத்தில இந்த நம்பரை கொடுக்கலாம். அது போக ஒரே ஃபோன் இரண்டு நம்பர்.

இதுல முக்கிய விஷயம் இதை டவுன்லோட் பண்ணீனவங்க கிட்ட டெலிஃபோன் நம்பரை தெரிஞ்சி கொன்டு இரண்டு பேரும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். அது போக நீங்க வெளியே இருந்து எந்த பப்ளிக் பூத்ல இருந்தும் நம்பர் தெரிஞ்சா ஃபோன் பன்னலாம். அது போக அமெரிக்கா கனடா நாடுகளுக்கு டோல்ஃப்ரி நம்பரை ஃப்ரீயா பேசி உங்க வியாபார நட்பை வளர்த்து கொள்ளலாம். இந்த நம்பர்ல இன்னொரு ஆஃபர் இருக்கு அதாவது 9.99 டாலர் மாசம் (ரூபாய் 550) கட்டினா அமெரிக்கா, கனடா நாட்டின் எந்த ஒரு நம்பருக்கும் இந்த ஆப்ஸ் இல்லாதவங்களுக்கு இலவசமா பேசலாம், எஸ் எம் எஸ் , வாய்ஸ் மெயில், கால் ஃபார்வர்டிங்கும் இலவசம். சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஸ்டம்.

முக்கிய விஷயம் செல்ஃபோன் இல்லாதவங்க கூட ஐ பேட் அல்லது டேப்ளட் வச்சிருக்கவங்க கூட தொலைப்பேசியா உபயோகிக்கலாம்
“மேலே இடது பக்கக்த்து படத்தில் உள்ளது எனது லைன் 2 தொலைப்பேசி நம்பர்”
இதை ஆப்பிள் சப்ஸ்கிரைபர் இங்கு டவுன்லோட் செய்யவும் https://itunes.apple.com/us/app/line2-new-phone-line-calling/id319185557?mt=8

இதை ஆன்ட்ராயிட் சப்ஸ்கிரைபர் இங்கு டவுன்லோட் செய்யவும்.
https://play.google.com/store/apps/details?id=com.toktumi.line2&hl=en

For English...
Line2 gives your iPhone/Android a second phone number — a second phone line, complete with its own contacts list, voice mail, and so on – All you need is an American postcode and email address to get a dedicated American member FREE. It is different from Viber and Skype due to its dedicated telephone number. However you can use this service free to another Line 2 telephone number and unlimited Toll Free numbers in USA and Canada. Someone can dial from a public booth and reach you also possible. If you want unlimited outgoing to any American and Canadian number then you have to pay 9.95 per month (Rs 550) to call anyone and unlimited SMS and voice mail. Anyway if you make your friends to get a number no need the 9.95 plan.
The left side picture has my USA – Line 2 Number
If you don’t have a mobile phone NO WORRIES – YOU MAY USE THIS IPAD AND ANY TABLET ALSO AS A TELEPHONE

For IOS Download here..
 https://itunes.apple.com/us/app/line2-new-phone-line-calling/id319185557?mt=8

For Android Users Download here..
 https://play.google.com/store/apps/details?id=com.toktumi.line2&hl=en 

Collection by M. Ajmal Khan.