Thursday, 15 October 2015

சவுதி அரேபியாவில் மன்னர் சல்மானின் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது !!

comprehensive-legislation.jpg
சவுதி அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது சவுதி அரசாங்கம். அதன்படி பின்வரும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.



1⃣ தொழிலாளரின் passport அந்த தொழிலாளரிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு 2000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
2⃣ தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தை (employee contract papper) தொழிலாளரிடம் வழங்காத நிறுவனங்களுக்கு 5000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
3⃣ தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தில் இல்லாத வேலைகளைச் செய்ய வற்புறுத்தும் நிறுவனங்களுக்கு 15000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
4⃣ மாத ஊதியத்தை தாமதமாக தந்தாலோ, அதிகப்படியான(OT)வேலைக்கு ஊதியம் வழங்காமல் கூடுதல் நேரம் வேலை செய்ய வற்புறுத்தினாலோ அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
5⃣ ஒரு நிறுவனத்தில் 12% சவுதி நாட்டை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அல்லது வேலை வழங்கவில்லை என்றாலோ அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
6⃣ தங்கள் நிறுவனத்தில் 12% சவுதி நாட்டை சேர்ந்தவர்கள் வேலை செய்வதாக போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கும் நிறுவனங்களுக்கு 25000 ரியால் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 5 நாட்களில் அந்த நிறுவனம் இழுத்து மூடப்படும்.
7⃣ விசாவை பணத்திற்கு விற்க்கும் நிறுவனங்களுக்கு 50000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
8⃣ ஒரு நிறுவனம் உரிமம் இல்லாமல் ஆட்களை சேர்த்தால் 45000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.
9⃣ ஒருமுறை அபராதம் செலுத்திவிட்டு அதே தவறை மீண்டும் செய்தால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
10.அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும்.


In English..
http://www.arabnews.com/saudi-arabia/news/728971

Monday, 12 October 2015

நடிகையர் திலகம் பத்மஸ்ரீ ஆச்சி மனோரமா வாழ்க்கை பற்றிய சிறப்பு பார்வை..

தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

தனது திரைப்பட வாழக்கையில்.வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர்விருது, பத்மஸ்ரீ ,தேசிய விருதுஉள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். 

நகைச்சுவை அரசியின் வாழ்க்கை வரலாறு..


"ஆச்சி' மனோரமா

தமிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்போடு "ஆச்சி' என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமா, தமிழ்ப்பட உலகில் தனி முத்திரை பதித்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்து பிரிவுகளில் தனது பெயரை நிலைநாட்டியவர். இவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை என கூறுமளவுக்கு நடிகை, அம்மா, ஆச்சி, வில்லி, காமெடி, பாடல் என அனைத்து கேரக்டர்களிலும் கொடிகட்டி பறந்தவர். நடிப்பில் 50 ஆண்டுகளை கடந்து "பொன்விழா' கொண்டாடியவர். 

பெற்றோர்  மற்றும் பிறப்பு  :
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1937, மே 26ல் கோபிசாந்தா காசி குலோகுடையார் - ராமாமிதம் ஆகிய தம்பதிகளுக்கு மகளாக மனோரமா பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள். மனோரமாவின் தந்தை, வெள்ளையர் ஆட்சி காலத்தில் ரோடு காண்ட்ராக்டராக இருந்தார். அதனால் மிகவும் வசதியான குடும்பமாக இருந்தது....இந்த நிலையில் மனோரமாவின் தாயார், தனது உடன் பிறந்த தங்கையையே கணவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தார்....இதன் காரணமாக வீட்டு நிர்வாகம் மனோரமாவின் சித்தியின் கைக்கு மாறியது. அதன் பிறகு துன்புறுத்தல்களும் அதிகரிக்கத் தொடங்கியது....இதனால் மனமுடைந்த மனோரமாவின் தாயார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது மனோரமாவுக்கு ஒரு வயது கூட ஆகவில்லை....மனோரமாவின் அழுகுரலை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, மனோரமாவின் தாயார் தூக்கு மாட்டிக்கொண்டு, உயிர் போகும் நிலையில் துடித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து பதறினார்கள். கயிற்றை அறுத்து அவரைக் காப்பாற்றினார்கள்....அதன் பின்னர் மனோரமாவை அழைத்துக்கொண்டு, அவரது தாயார் ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூரில் குடியேறினார்..


சிறுமியாக இருந்த போதே போராட்டம் !!

மிகவும் வறுமையில் வாடி வந்த அவர்கள், பலகாரம் சுட்டு விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார்கள். 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். மனோரமா சினிமா 'டூரிங்' கொட்டகைக்கு சென்று பலகாரம் விற்பார்...அங்கே பலகாரம் விற்பதுடன், எந்த காட்சியிலும், எந்த நேரமும் உள்ளே சென்று படம் பார்க்கும் இலவச அனுமதியும் கிடைத்தது. 'பாட்டுப் பாடுற பொண்ணு படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்' என்று பிரியமாக விட்டு விடுவார்கள். அதனால் மனோரமாவும் இடை, இடையே தியேட்டருக்குள் சென்று பாடல் காட்சிகளை பார்த்து விட்டு வருவார்...இப்படியே தியேட்டரில் படம் பார்த்தும், கிராமபோன் ரெக்கார்டுகளைக் கேட்டும் அவருடைய இசை ஞானம் வளர்ந்தது...இந்த நிலையில் மனோரமாவுக்கு மீண்டும் ஒரு சோதனை வந்தது. அவருடைய அம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மனக்கவலை, வறுமை, கடுமையான உழைப்பு இவை அனைத்தும் சேர்ந்து நோயாக மாறியது...ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தனது தாயாருக்கு துணையாக மனோரமா இருந்தார். ஒரு ஆண்டு சிகிச்சை பெற்ற பின்னர்தான் மனோரமாவின் தாயார் குணம் அடைந்தார்...அதன் பின்னர் மனோரமாவின் தாயாருக்கு வேலை பார்க்க முடியாத சூழ்நிலை உருவானது. எனவே, பள்ளத்தூரில் வசதி படைத்த செட்டியார் வீடுகளில் மனோரமாவை வேலைக்கு சேர்ந்துவிட முடிவு செய்தார்...இதனால் ஒரு செட்டியார் வீட்டில் குழந்தையை கவனித்துக் கொள்ள மனோரமாவை அனுப்பி வைத்தார்...இரண்டு மாதங்கள் அங்கு வேலை பார்த்தார். பின்னர் வேலையை விட்டு விட்டார். மனோரமாவும், அவர் தாயாரும் மிகவும் சிரமப்பட்டனர்..இந்த நிலையில் தான் மனோரமாவின் பார்வை நாடக கலை மீது முழு அளவில் விழுந்தது ..

 மேடை நாடகங்களில் மனோரமா !!
மனோரமா தனது 12 வயதில் நாடகத்தில் நடிக்க தொடங்கினார். "யார் மகன்' என்பது தான் இவரின் முதல் நாடகம்.  யார் மகன்? என்ற நாடகத்தில் மனோரமா நடிக்கும் போது  நாடக இயக்குநர் திருவேங்கடம்தான் இவருக்கு "மனோரமா' என பெயர் சூட்டினார். ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார்.முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய "வேலைக்காரி' உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய "உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும் நடிக்க மனோரமா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். நாடகங்களில் நடிப்பு மட்டுமல்லாமல் பாடவும் தொடங்கினார். "அந்தமான் கைதி' என்ற நாடகம் இவர் நடித்ததில் புகழ்பெற்ற நாடகம்.ஆயிரம் நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

திருமணம் வாழ்க்கை !!
மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் மகன் பூபதியுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.


வெள்ளித்திரைக்கு பயணம்..

நாடகத்தில் நடித்து வந்த மனோரமா 1958ல் "மாலையிட்ட மங்கை' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். இவரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் கண்ணதாசன். முதல் படத்தில் காமெடி ரோலில் இவர் நடித்தார். ஆரம்பக்காலத்தில் காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தினர். முன்னணி காமெடி நடிகர் நாகேஷ் - மனோரமாவும் பல படங்களில் ஜோடியாக காமெடியில் கலக்கினர். இவர்கள் இருவரும் திரையில் தோன்றினாலே திரையங்களில் சிரிப்பு மழை பொழிய ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு இருவரும் காமெடியில் கலக்கினர்.

பாடல்..
"மகளே உன் சமத்து' என்ற படத்தில் முதன்முதலாக பாடினார். தயாரிப்பாளர் குமார் என்பவர் இந்த வாய்ப்பினை வழங்கினார். "தாத்தா தாத்தா பிடி கொடு... இந்த தள்ளாத வயசில சடுகுடி' என்று இந்த பாடல் தொடங்கும். இருப்பினும் இவர் பாடிய "வா வாத்தியாரே வுட்டான்ட' என்ற பாடல் மனோரமாவின் முதல் ஹிட் பாடலாக அமைந்தது. "டில்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லை தட்டாதே' , "நாட்டு புற பாட்டு ஒன்னு...' , "மெட்ராச சுத்தி பாக்க போறேன்...' , உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார். 

ஆறு மொழிகளில்..
மனோரமா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்துள்ளார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும். ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே, நச்சென்று பேசிவிடக்கூடிய ஆற்றல் பெற்றவர்.

விருதுகள் !!
1989ம் ஆண்டு "புதிய பாதை' என்ற படத்தில் நடித்தற்காக, "சிறந்த துணை நடிகைக்கான' தேசிய விருது மனோரமாவுக்கு வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான "பத்ம ஸ்ரீ' விருதை மனோரமா பெற்றார். தமிழக அரசின் "கலைமாமணி' விருது ஆகியவற்றை மனோரமா பெற்றுள்ளார். ஆச்சியின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு "கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கியது. அதிக படத்தில் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார். 

முக்கிய நிகழ்வுகள்..

* 1963ல் வெளிவந்த "கொஞ்சும் குமரி' என்ற படத்தில் நடிகையாக மனோரமா அறிமுகமானார். 
* "கண் திறந்தது' படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதனுடன் மனோராமா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார். 
* "குன்வர பாப்' என்ற இந்தி படத்தில் மெகமூத் என்ற பாலிவுட் காமெடி நடிகருடன் நடித்துள்ளார். 
* "நடிகன்' என்ற படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் 50 வயது திருமணமாகாத பெண்ணாக நடித்திருப்பார். இப்படம் மனோரமாவுக்கு பிடித்த படங்களில் ஒன்று. 
* அதிகளவில் "அம்மா' கேரக்டர்களில் மனோரமா நடித்துள்ளார். 
* இவரது இளமை பற்றி மனோரமாவிடம் கேட்டபோது, "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என தெரிவித்தார். 
* ஒரு "டிவி' நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் "சோ', இவரை "பெண் சிவாஜி' என்று குறிப்பிட்டார். 
* மனோரமா கடைசியாக சிவாஜியை (இறப்பதற்கு முன்) சந்தித்த போது, சிவாஜி தன் மனைவியிடம் "தமிழ் மொழியில் மனோரமாவைத் தவிர, எவராலும் இந்தளவுக்கு நடிக்க முடியாது' என தெரிவித்தார். இது தன் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என மனோரமா தெரிவித்தார். 
* "உனக்கும் வாழ்வு வரும்' என்ற படத்தில், மனோரமா ஊமையாக நடித்திருப்பார். 
* "மஞ்சள் குங்குமம்' என்ற படத்தில் நடிக்கும் போது, மனோரமாவை "கட்டுவிரியன்' பாம்பு கடித்து விட்டது. பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்த பின், அடுத்ததாக நடித்த "ஆடி விரதம்' படத்தில் பாம்பு சிலையை குளிப்பாட்டி தாலாட்டும் பாட்டு சீன் ஒன்றில் நடித்தார். 
* இவர் கடைசியாக நடித்த படம் "பொன்னர் சங்கர்'.

5 தலைமுறை நடிகை நடித்த சில முக்கியபடங்கள்:


*மாலையிட்ட மங்கை (முதல் திரைப்படம் )
*தில்லானா மேகனம்பாள்
*களத்தூர் கண்ணம்மா
*திருவிளையாடல்
*அன்பேவா
*கந்தன் கருணை
*கலாட்டா கல்யாணம்
*காசேதான் கடவுளடா
*முகமது பின் துக்ளக்
*அனுபவி ராஜா அனுபவி
*பாட்டி சொல்லை தட்டாதே
*சம்சாரம் அது மின்சாரம்
*நடிகன் 
*சின்னக்கவுண்டர்
*அபூர்வ சகேதாரர்கள்
*எஜமான்
*மன்னன்
*அண்ணாமலை
*ஒன்ன இருக்க கத்துகோனும் 
*ரசிகன்
*பொண்டாட்டி  சொன்ன கேட்டுகொனும் 
*சின்னதம்பி
*சூரியன்
*கிழக்கு வாசல்

5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசி..

 தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமாராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார். ஆயிரத்திற்கு மேற்பட்ட நாடகங்களில் மனோரமா நடித்துள்ளார்.

இறப்பு :
ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்த மனோரமா நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார் . கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 10.10.2015 அன்று இரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது .இதில் 5 தலைமுறை சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு நடிகை மனோரமாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.  பின்பு அவரது உடல் இறுதி ஊர்வலமாக இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டு ஐஸ் அவுஸ் ஐ.ஜி. ஆபிஸ் பின்புறம் உள்ள கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மனோரமா  ஆச்சி பற்றிய கவிதை..

மனோரமா எனும் ஆச்சி!
மரணம் கொண்டு போச்சு!
நடிப்பில் நீ ஒரு சிவாஜி!
நகைச்சுவையில் ஒர் அலாதி!
எமனே சலிப்படைந்து விட்டான் போல!
தான் சிரிக்க உன்னை
எடுத்து போனான் மேலே!
துடிப்புடன் நடிப்பது உன் தனி முத்திரை!
நடிப்பல்ல இது உண்மையான நித்திரை!
உன்னால் மட்டுமே முடியும்
சில பாத்திரம்!
உன் திறமைக்கு முன் ஏனையோர் எம்மாத்திரம்!
உன் வெளியீடுகளை எண்ணி எண்ணி விரல்
வலிக்கிறது!
உன் இல்லாமையை எண்ணி எண்ணி மனம்
சலிக்கிறது!
ஆண்கள் இத்துறையில்
வந்து சென்றார்கள்!!
பெண்ணோருவள் நீ மட்டுமே நிலைத்து நின்றாய்! வென்றாய்!!
முத்துக்குளியல் நடக்குமிடம் தூத்துக்குடி!
அத்தனையும் உனக்கு அத்துப்படி!
ஜாம்பஜார் ஜக்கு! நீ சைதாப்பேட்டை கொக்கு!
ஜாம்பவானாகிய உன்திறமை வேறாருக்கிங்கு இருக்கு!
எல்லா பாத்திரமும் உனக்கு பொருத்தமே!
இத்துறையில் உன் வாரிசில்லாதது வருத்தமே!
சம்சாரத்தில் மின்சாரம் பாய்ச்சிய மனோரமா!
உன்னை மீண்டும் காணும்
நாள் தான் வருமா?



முடிவு :
தற்போது  தமிழ் நகைச்சுவை சினிமாவின் தாயையும் இழந்திருக்கிறது அரசியல், கட்சி, பாகுபாடு இல்லாமல், அனைவரின் உயர்ந்த மரியாதையை பெற்றவர் இவர்.அபார நடிப்பாலும், அன்பாலும் அனைவருக்கும் குருவாக வாழ்ந்தவர் ஆச்சி மனோரமா.  அவர்களின் இறப்பு தமிழ் சினிமாவிற்கே பேரிழப்பு..உண்மையில் ஒரு பெண் சிவாஜி..சினிமாவிற்கு  பின் அலையாதிர்கள் அது ஒரு மாயை, அந்த மாயை மனிதனின் வாழ்க்கையை அழித்துவிடும்.

நம் மக்களும், இளைஞர்களும் சினிமாவிற்கு காட்டும் அக்கறையை உழைப்பில் காட்டினால் வாழ்க்கையில் உயர்வு உண்டு. சினிமாவிற்கு  பின் அலையாதிர்கள் அது ஒரு மாயை, அந்த மாயை மனிதனின் வாழ்க்கையை அழித்துவிடும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Sunday, 11 October 2015

தாலசீமியா என்பது கொடுமையான ஒரு பரம்பரை நோயா ? ஒரு மருத்துவ பார்வை..

தாலசீமியா நோய் என்பது குழந்தைகளுக்கு பிறவியிலேயே ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் ஒரு விதமான ரத்த சோகையாகும். ரத்தத்தின் சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்னும் புரதம்தான் உடலின் பல பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் முக்கியமான வேலையைச் செய்கிறது. அதன்மூலம்தான் நமக்குச் சக்தி கிடைக்கிறது. ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் அளவு குறையும்போது, அது ரத்தச் சோகையை ஏற்படுத்தும். உடல் பலவீனம் அடையும். தாலசீமியா பாதித்த குழந்தைக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இதனால், சுவாசிக்கும் ஆக்சிஜன் நுரையீரலில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது. அதற்காக, குழந்தைக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க 6-வது மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ரத்தம் ஏற்றிக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தைக்கு மாதம் மாதம் ரத்தம் ஏற்றுவதால், உடலில் பல விதமான பிரச்சினைகள் வருகின்றன. மேலும் இரும்பு சத்து அதிகரிப்பதால் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல தீவிர நோய்களும் வருவதற்கு வாய்ப்புள்ளது.

நோயின் வகைகள்..

தாலசீமியா நோய் இரண்டு வகைகளில் மனித உடலைத் தாக்குகிறது. ஹீமோகுளோபின் இரண்டு வகையான புரதத்தைக் கொண்டுள்ளது. அவை, ஆல்பாகுளோபின், பீட்டா குளோபின். குறைபாடுள்ள மரபணு ஆல்பா, பீட்டா என்னும் இரண்டு வகைப் புரதங்களில் ஒன்றின் உற்பத்தியைப் பெரிதும் கட்டுப்படுத்துகிறது.

குறைபாடுள்ள மரபணுவின் காரணமாக ஆல்பா குளோபின் புரதம் முழுமையாக இல்லாவிட்டாலோ அல்லது மாறுபட்டு இருந்தாலோ, அது ஆல்பா தாலசீமியா. மரபணு குறைபாட்டால், பீட்டா குளோபின் புரதம் இல்லாத நிலை அல்லது மாறுபட்ட நிலை காணப்பட்டால், அது பீட்டா தாலசீமியா.


எப்படி வருகிறது?

தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள், சீனா, ஆப்பிரிக்கக் கண்டத்தில் சில பகுதிகளில் வாழும் மக்களிடம் ஆல்பா தாலசீமியா நோயின் பாதிப்புகள் அதிகம் காணப்படுகிறது. பீட்டா தாலசீமியா நோய் மத்தியத் தரைக் கடல் நாடுகளில் அதிகம் பேரைப் பாதித்திருக்கிறது. சீனர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்களைக் குறைந்த அளவில் தாக்கியிருக்கிறது.
ஒவ்வொரு தாலசீமியா வகையும் தாலசீமியா மேஜர், மைனர் என்னும் இரு பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய், தந்தை ஆகிய இருவரிடமும் குறைபாடுள்ள மரபணு காணப்பட்டால், அந்தக் குழந்தைக்குத் தாலசீமியா மேஜர் என்று அர்த்தம். குறைபாடுள்ள மரபணு தாய் அல்லது தந்தை யாராவது ஒருவரிடம் இருந்து குழந்தைக்குச் சென்றிருந்தால், அந்தக் குழந்தைக்குத் தாலசீமியா மைனர் என்று அர்த்தம். சில நேரம் பெற்றோரிடமும் இத்தகைய குறைபாடுள்ள மரபணு இல்லாமல், குழந்தைக்கு வரும் சந்தர்ப்பங்களும் உண்டு.


அறிகுறிகள்...

ஆல்பா தாலசீமியா மேஜர், பிறக்கும் குழந்தைகளையும் பிரசவமடையாத குழந்தைகளையும் பெரும்பாலும் தாக்குகிறது. மேலும், முகத்தில் எலும்பு வளர்ச்சிக் குறைபாடு, அதீதச் சோர்வு, உடல் வளர்ச்சியின்மை, மூச்சு விடுவதில் சிரமம், மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் தென்படும். தாலசீமியா மைனர் வகை நோயாளிகளுக்குச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். வேறு அறிகுறிகள் தென்படாது.


பரிசோதனைகள்...

> ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.
> நுண்ணோக்கி வழியாகச் சிவப்பணுக்களை ஆராய்ந்து சிவப்பணுவின் வடிவம், தன்மை மாறியிருக்கிறதா என்பதைக் கண்டறிவார்கள்.
> ஹீமோகுளோபின் எலக்ட்ரோபோரசிஸ் பரிசோதனையின் மூலம் மரபணுவின் வடிவம் மாறியுள்ளதா என்று கண்டறியப்படும்.
> மியூடேஷனல்அனாலசிஸ் மூலம் ஆல்பா தாலசீமியா பாதிப்பு கண்டறியப்படுகிறது.

சிகிச்சைகள்..
தலசீமியா மைனர் கொண்ட நோயாளிகளுக்கு பொதுவாக தனிமுறை சிகிச்சைகள் தேவைப்படாது. ஆனால் தலசீமியா மேஜர் கொண்ட நோயாளிகளுக்கு.வாழ்நாள் முழுவதும் தாலசீமியா நோயாளிகளுக்கு ரத்த மாற்று சிகிச்சையைத் தொடரவேண்டும். மேலும் இரும்பு இடுக்கு இணைப்பு ,மண்ணீரல் அகற்றம் மற்றும் அல்லோஜெனிக் ஹீமொடோஃபாய்டிக் மாற்று போன்ற சிகிச்சைகள் தேவைப்படும்.அதீதமான இரும்புச் சத்து உடலில் தங்காமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். தற்போது இதற்கு மாத்திரைகள் கிடைக்கின்றன.

தாலசீமியா மைனர் உள்ள ஆண், பெண்ணுக்குத் தாலசீமியா மேஜர் பாதிப்புள்ள குழந்தை பிறப்பதற்கு 25 சதவீத வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

உங்களின் ரத்தச் சம்பந்தங்களுக்கு இந்த நோயின் தாக்குதல் இருந்தால் நீங்களும் தாலசீமியா பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டியது அவசியம். 

தீர்வு :

சொந்த உறவுகளில் திருமணம் செய்தால், பிறக்கும் குழந்தை தாலசீமியா நோய் பாதிப்புடன் பிறக்கும்.அம்மா, அப்பா வம்சாவழியில் யாருக்காவது தாலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்நோய் வருகிறது. முக்கியமாக சொந்த உறவுகளில் திருமணம் செய்வதால் குழந்தைகள் தாலசீமியா நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அதனால், பெண்கள் கர்ப்பக் காலத்தில் பரிசோதனை செய்து கருவில் இருக்கும் குழந்தை தாலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்கலாம். தாலசீமியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், குழந்தை வேண்டாம் என நினைப்பவர்கள் கருக்கலைப்பு செய்துவிடலாம். குறைபாட்டுடன் குழந்தையை பெற்றுக் கொண்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவதைவிட, கருக்கலைப்பு செய்துவிடுவது நல்லது. தாலசீமியா நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சையே சிறந்த தீர்வாகும்.


நோயின் விழிப்புணர்வுக்காக உலக தாலசீமியா 

நோய் தினம்:

மாலத்தீவுகள் தான் உலகிலேயே அதிகளவில் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிக பட்சமாக 18% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் ஏறத்தாள 6-8 கோடி மக்கள் பீட்டா தலசீமியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிக சரியான மதிப்பீடு அல்ல. பெரும்பாலான பகுதிகளில் இந்நோயின் விழிப்புணர்வு இல்லை. மத்திய கிழக்கு மற்றும் ஆசியா போன்ற நாடுகளில் இந்நோய்களின் பரிசோதனைக்கு தேவையான வசதிகள் இல்லாததால் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் குறைந்த அளவில் மரபு பரிசோதனை மற்றும் ஆலோசனை செய்வதால் இந்நாடுகளில் அதிகளவில் தலசீமியா காணப்படுகிறது. அடுத்த 50 ஆண்டுகளில் தலசீமியா ஒரு கவலைகரமாக கூறப்படும் விஷயம் ஆகும். உலகின் இரத்த வங்கி மற்றும் உடல் நலனை பாதிக்கும் பிரச்சனை ஆகிவிடும். மதிப்பிடுகையில் ஐக்கிய நாடுகளில் ஏறத்தாள 1,000 மக்கள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கணக்கிலில்லாமல் ஏராலமானோர் இருக்கின்றனர். தலசீமியா நோயைப் பற்றி குறைந்த விழிப்புணர்வு இருப்பதால் இந்நாடுகளில் சிகிச்சை குறைபாடுகளுக்கும் குணங்குறி மூலம் நோயைக் கண்டறிவதும் கடினமாகும்.உலக தாலசீமியா நோய் தினம் மே 8-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

நன்றி : டாக்டர் பீ.பஷீர் அஹமது (விஜயா மருத்துவமனை, சென்னை.)

        திரு.கணேசன் (மின்சார பொறியாளர்,சாம்சங்,சவுதி அரேபியா.)  

Wednesday, 7 October 2015

அனைவருக்கும் பிடித்தமான அழிக்க முடியாத உறவு என்றால் தாய்மாமன்!! ஒரு பாசப்பார்வை..

உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான்.  பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான்சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா
என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான்.எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது  ல்வடை.உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.


தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப்உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..


தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் ல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான்.


தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.


தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால்என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ
அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா?


உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம். ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை
காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம் தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை...


நண்பரின் அப்பா தனது அக்காள் குழந்தைகளை வளர்த்து இன்று அவர்கள் மரமாக நிற்கின்றனர் அவர்களுக்கு விழுதாக இந்த தாய்மாமன் இருந்தேன் என்று பெருமை படநானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்படியே ஒரு கட்டுரையாக எழுதி விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள் அந்த தாய்மானுக்கு முன்னின்று 60ம் கால்யாணம் செய்து வைக்க அடுத்த மாதம் வருகிறார்கள் என்று அவர் சொல்லும்போது அவரின் கண்களில் அந்த தாய்மாமன் என்ற பாசம் தெரிந்தது. 


நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம் நமது வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம் தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம் அது போல் நம் குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்க வேண்டும் என்பது என் ஆவா.


ஆக்கம் மற்றும்  தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.