Thursday, 27 September 2018

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க டாலருக்கும் ஏன் இந்த வித்தியாசம்...?

அன்புள்ள நமது குழுவின் நண்பர்களுக்கு,
ரூபாயின் பண மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை விளக்கும் பதிவு.
இதுஎனது பதிவு அல்ல.நாணய விகடன் பதிவு. மிக விளக்கமான பதிவு.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க டாலருக்கும் ஏன் இந்த வித்தியாசம்...?
ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.! எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது! அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.!
ஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என !) அடிக்கலாம்... என்ன,... அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பில் (எடையில்) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும்.
சரி. இப்பொழுது, நம் நாட்டோடு இன்னொரு நாட்டை ஒப்பிடலாம் - அமெரிக்காவையும் இந்தியாவையும்! அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்,... நாம் எப்பொழுதுமே அமெரிக்காவையே உதாரணமாகக் கொண்டு பழகியுள்ளோம்!
கணக்கிடுவதற்காக, சில கற்பனை உதாரண மதிப்புக்களை / எண்களை எடுத்துக்கொள்வோம்:
துவக்கத்தில், அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் சமமாக, 1 கிலோ (1000 கிராம்) தங்கம், கையிருப்புள்ளதாக வைத்துக் கொள்வோம்.
இப்பொழுது:
அமெரிக்கா, மொத்தம் ஆயிரம் டாலர் மதிப்புக்கு, 1 டாலர் நோட்டுக்கள் 1000 அச்சடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது (தங்கம் இருப்பைக் கணக்கில் கொண்டால்), 1 கிராம் தங்கம் 1 டாலருக்கு சமம்! சரியா!
இந்தியாவும், அதே போல், ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு இணையாக 1000 ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது.! அதாவது ஒரு கிராம் தங்கத்துக்கு, ஒரு ரூபாய் மதிப்பு!
இப்பொழுது பார்த்தீர்களானால், ஒரு அமெரிக்க டாலரும் கூட, ஒரு இந்திய ரூபாய்க்கு சரி நிகர் மதிப்பே! ஒரு அமெரிக்க டாலர் = ஒரு இந்திய ரூபாய் மட்டுமே!
இப்பொழுது,
அமெரிக்க அரசாங்கம் ஆயிரம் ஒரு டாலர் நோட்டுக்களை புழக்கத்தில் இறக்கி, அதிலிருந்து, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு, 20 சதவீதம் வரியாக இலக்கு வைக்கிறது. அதன் மூலமாக, 200 டாலர்கள் வரியாக திரும்பப் பெறுகிறது.
இந்த 200 டாலர்களை வைத்து, இன்னமும் ஒரு 200 கிராம்கள் தங்கத்தை வாங்கி, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 200 ஒரு டாலர் நோட்டுக்களை அச்சடித்து, புழக்கத்தில் விடுகிறது! ஆக மொத்தம், தற்போது, அமெரிக்க அரசாங்கத்திடம் 1200 கிராம் தங்கமும், அமெரிக்க சந்தையில் அந்தத் தங்கத்துக்கு இணையாக 1200 டாலர் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன! ஆயினும், ஒரு கிராம் தங்கம் = ஒரு டாலர் மட்டுமே!
இந்த பொருளாதாரம், இதே போன்று விரிவடைந்து, மேலும் தங்கம்-மேலும் டாலர் நோட்டுக்கள், என, எவ்வளவு வளரும் பொழுதும், ஒரு கிராம் தங்கம் ஒரு டாலருக்கு நிகராகவே இருக்கும் - இலக்கு வைத்த வரிவிகிதம் முழுமையாக வசூலாகும்வரை!.
இப்பொழுது, இந்தியாவுக்கு வருவோம்.!
இந்திய அரசும் அமெரிக்கா போலவே 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு, அதிலிருந்து 20% வரியாக வசூலாக இலக்கு வைக்கும். ஆனால், அசல் வரிவசூலோ,.. வெறும் 50 ரூபாய்கள் மட்டுமே (என்று வைத்துக்கொள்வோம்!).!! அதாவது, புழக்கத்தில் விட்ட 2000 ரூபாய்களில், வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக, பரிவர்த்தனை செய்யப்பட்டது! மிச்சம் 750 ரூபாய்கள், வரி செலுத்த விருப்பம் இல்லாதவர்களால், கணக்கில் வராமல் புழங்கத் தொடங்கி விட்டது! இதுதான் கருப்புப்பணம்.!
இந்த 750 ரூபாய்கள், சந்தையில் புழக்கத்தில் இருந்தாலும் கூட, இது அரசின் வரவு செலவுக் கணக்குகளில் பதிவாவதில்லை.! ஆக, அரசுக் கணக்குப்படி, நாட்டில் புழக்கத்தில் வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே இருப்பதாக கணக்கில் கொள்ளப்படும் (சந்தையில் மிச்சம் 750 ரூபாய்கள் நிஜத்தில் இருந்தாலும் கூட!).! இந்த கணக்கில் வராத 750 ரூபாய்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைதான், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, இணைப் பொருளாதாரம் என்பது!
சரி. இப்பொழுது, அரசு, தனக்கு கிடைத்த வரிப்பணம் 50 ரூபாய்களை வைத்து, மேலும் ஒரு 50 கிராம் தங்கம் மட்டுமே வாங்கி கையிருப்பை உயர்த்த முடியும்! தவிர, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 50 ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்து வெளிவிட முடியும்! இப்பொழுது சந்தையில் (அதிகாரபூர்வமாக) உள்ள இந்திய ரூபாய்கள் வெறும் 300 ரூபாய்கள் மட்டுமே! (ரூ.250 + ரூ.50). ஆனால், அசலாக அரசு அச்சடித்து வெளியிட்ட 1000 + 50 சேர்ந்து, மொத்தம் 1050 ரூபாய்கள் கணக்கில் இருந்திருக்க வேண்டும்!
எது எப்படி இருந்தாலும், அரசு, மேலும் நோட்டுக்களை அச்சடித்து சந்தையில் வெளியிட்டே ஆகவேண்டும் - காரணம், ஏற்கெனவே வெளியிட்ட 750 ரூபாய்கள் அதிகாரபூர்வமாக கணக்கில் வராமல் "காணாமல் போய்விட்டதல்லவா"? எனவே, அரசு அந்த விடுபட்ட 750 ரூபாய்களை அச்சடித்து வெளிவிட முடிவெடுக்கிறது!
இப்பொழுது வருகிறார் கண்கொத்திப்பாம்பு IMF ! "நீங்க அதுமாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு அச்சடிக்க முடியாது.! உங்க தங்கம் கையிருப்புக்கு இணையாகத்தான் நோட்டுக்கள் வெளிவிடமுடியும்!" என்கிறார் அவர்! ஆனால், இந்திய அரசோ, நோட்டு அச்சடித்தே தீரவேண்டும் என்று ஆடம் பிடிக்கும் பொழுது, IMF சொல்லும்: "உன் ரூபாயின் மதிப்பை, நிகராக நீயே குறைத்துவிட்டு, மேலும் நோட்டுக்களை அச்சடித்துக்கொள்!", என்று! அரசுக்கு வேறு வழி கிடையாது! காரணம், அது, வெளியிட்ட நோட்டுக்களுக்கு, இலக்கு வைத்த வரி 100% வசூலாகவில்லை! அதனால், மேலும் (அமெரிக்கா போல) தங்கம் வாங்கி கையிருப்பை உயர்த்த முடியவில்லை! அதனால், கணக்குப் போட்டு, ரூபாயின் மதிப்பை தானே குறைத்து அறிவித்துவிட்டு, மேலும் 750 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது, இந்திய அரசு! இப்பொழுது, மொத்தம் 1800 ரூபாய்கள் அச்சடித்து புழக்கத்தில் உள்ளது 1000 + 50 + 750) - ஆனால், அரசின் வசம், வெறும் 1050 கிராம் தங்கம் மட்டுமே கையிருப்பு உள்ளது!
ஆக,.. இப்பொழுது, இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.1 இல் இருந்து, ரூ.1.71 என ஆகி விட்டது! (1800 ஐ 1050ஆல் வகுத்தால் = 1.71)
அதாவது, மேற்சொன்ன அமெரிக்க டாலரை ஒப்பிடும் பொழுது, 1 டாலருக்கு சமமாக இருந்த இந்திய ரூபாய், இப்பொழுது ரூ.1.71 என வீழ்ச்சி அடைந்துவிட்டது! $1 = Rs.1.71 !
இதேபோல், நோட்டுக்களை, சந்தைத் தேவைக்கு ஏற்றாற்போல் அடித்து வெளிவிட வெளிவிட, ரூபாயின் மதிப்பு ஒவ்வொரு முறையும் குறைந்துகொண்டே வருகிறது! ஆனால், கையிருப்பு தங்கம் மட்டும், வெளிவந்த நோட்டுக்களுக்கு சமமாக கூடுவதே இல்லை!
இதனால்தான், ... இன்று, ஒரு அமெரிக்க டாலர் = Rs. 67.80 என வந்து நிற்கிறது!
இந்திய அரசும் 100 % இலக்கு வைத்த வரிகளை வசூலித்திருக்குமானால், நம் இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு கேவலமாக சரிந்திருக்கவே சரிந்திருக்காது!
இப்பொழுது, உங்களுக்கு வரிகளின் முக்கியத்துவமும், பொதுமக்களுக்கு அதனால் (மறைமுகமாக) கிடைக்கும் பலன்களும் ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்! நிலையான வலுவான ரூபாயில், வீடு, நிலம், பொருட்களின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும்!
இந்த ஒற்றைக் காரணத்தால், அமெரிக்கா, உலகின் மிகப் பணக்கார நாடாக அறியப்படுகிறது! காரணம், அங்கு கிட்டத்தட்ட 95% குடிமக்கள் வரி செலுத்துகின்றனர்!
ஆனால், இந்தியாவில்? யாராலாவது, ஊகிக்க முடியுமா?
percentage of taxpayers in India என்று கூகிள் செய்து தேடிப்பாருங்கள்!
நல்ல இந்தியக் குடிமகன் தலையை வெட்கத்தில் தொங்கவிட்டுக் கொள்வான்!
ஆம்.! வெறும் 1% க்கும் குறைவானவர்களே இந்தியாவில் வரி செலுத்துபவர்கள்!
நாம், நம் நாட்டில் அமெரிக்காவுக்கு இணையான சமூகப் பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள், சுத்தம், சுகாதாரம், வெட்டில்லாத மின்சாரம், பகல்போல ஒளிமயமான இரவு, உயர்தர வாழ்க்கை என எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம்! அங்கு இருக்கும் அவற்றை சிலாகித்து புகழ்ந்து பெருமூச்சு விடுகிறோம். ஆனால்,...
அவர்கள் போல, ஒட்டுமொத்த சமூகமாக வரி செலுத்துகிறோமா? கள்ள/கறுப்புப் பணத்தை புறம் தள்ளுகிறோமா? நாடு முன்னேற, நம்மாலான பங்களிப்பை, வரிகள் வாயிலாக செய்கிறோமா? என்று யோசித்தால்,... கசப்பான விடை, "இல்லை" என்பதே ஆகும்!
-----------------------
இந்த ஆய்வுக் கட்டுரையை
படிக்கும் உங்களுக்கு, கறுப்புப் பணம், எப்படி உருவாகி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும், என்று எடுத்துக் காட்டவே...
Special Thanks to : நாணயம் விகடன்.

Friday, 21 September 2018

கனடாவில் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவி தூத்துக்குடி சோபியாவின் தமிழகத்தின் கூட்டு மனசாட்சியின் கோபக் குரல். !!

குருவியை சுடுவதுபோல் 15 உயிர்களை சுட்டுத்தள்ளி அதன் சுவடு கூட இன்னும் மறையவில்லை. அதற்குள் நீங்கள் அந்த நச்சு ஆலையை திறப்பதற்கு எல்லா வேலையும் செய்கிறீர்கள். நாங்கள் அதை ஏன் என்று கூட கேட்க கூடாது என்று நினைக்கும் உங்கள் பாசிசத்திற்கு பதிலடிதான் சோபியாவின் தனிமனித கோபக்குரல்.
தூத்துக்குடி சோபியாவின் க்கான பட முடிவுதூத்துக்குடி சோபியா, நடுவானில், பா.ஜ.க மாநிலத் தலைவரின் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு பாசிச பா.ஜ.க ஒழிக என்று கோஷமிட்டது சற்று பொருத்தமற்றதாகவும் சக பயணிகளுக்கு தொந்திரவு தருவதாகவும் அமைந்திருக்கலாம்..
அவர் கனடாவில் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவி...
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அவருக்கு ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
பகுத்தறிவாளர்கள் கொல்லப்படுவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
கறுப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் சாமானிய மக்கள் வங்கிகள் வாசலில் சுருண்டு விழுந்து மடிந்தது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
சிறு குறு தொழில்கள் அடியோடு அழிந்தது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
ரபேல் கொள்முதலில் மர்மம் நீடிப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
உலகமெல்லாம் மலிவாக விற்கப்படும் போது இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை எகிறுவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
கிராமப்புற மாணவர்களின் வயிற்றில் அடித்த நீட் தேர்வு, வலிந்து திணிக்கப்பட்டது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
அத்தேர்வை விலக்கக் கோரி அனுப்பப்பட்ட சட்ட மன்ற தீர்மானம் எங்கே உள்ளது என இன்னும் விசாரித்துக் கொண்டே இருப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
ஒற்றை வரி விகிதம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட GST வரிவிகிதம் ஏற்படுத்திய விலையேற்றம் கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
உலகம் முழுதும் சுற்றி பெரு முதலாளிகளுக்கு ஒப்பந்தங்கள் கொண்டு வருவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
வங்கிகளில் மக்கள் பணம் குறிப்பிட்ட சிலரிடம் வராக் கடனாய் கை மாறிப்போனது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
அர்பன் நக்ஸல்கள் உள்ளிட்ட புதிய புதிய கண்டுபிடிப்புகள் கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
மண்ணையும், மலையையும், இயற்கை வளங்களையும், மீத்தேன், நியுட்ரினோ என ஆழக்குழி தோண்டி புதைப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
புதைந்து போன தொல்நாகரீக கீழடி அடையாளங்களை மீட்டெடுக்க மறுப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
ஒரு பேரிடர் நிகழும் போது உதவிக்கரம் நீட்டாமல், ஒவ்வாத கருத்துக்களை உதிர்ப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
அவர் ஒரு குடிமகள்...
இவ்வளவிற்கு பிறகும் பாசிசம் வாழ்க என்றா கோஷம் இடுவார்???
பாசிசபாஜக ஆட்சி ஒழிக என்று தான் கோஷம் போடுவார்.
சோபியாவை 15 நாள் சிறையில் வைத்து உங்கள் மனதை தேற்றிக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் உங்களை விட பைத்தியகாரர்கள் மூளை இல்லாதவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் சோபியா தனிமனித பெண்ணல்ல தமிழகத்தின் கூட்டு மனசாட்சியின் கோபக்குரல்.
ஆயிரம் ஆயிரம் சோபியாக்கள் தமிழக மண்ணில் உங்களை நோக்கி விரல்களை நீட்ட தயாராகி விட்டார்கள் என்பதன் ஆரம்ப கட்டம் தான் உங்கள் முகத்துக்கு நேராக அந்த பெண் சொன்ன பாசிச பாஜக ஒழிக எனும் குரல்.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Wednesday, 19 September 2018

நாம் துவக்கி வைப்போம் இந்த மாற்றத்தை.....

Image result for tamil nadu dead bodyஅன்புக்குரிய ஒருவரின் எதிர்பாராத திடீர் மரணம் பெரும் துயரத்தை உண்டாக்குகிறது. அது நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும், தாளா துயரில் ஆழ்த்திவிடும். பல நாட்களாய் வியாதியில் வேதனைப்படும் நமது அன்பானவர், மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருப்பது நமக்குத் தெரியும்தான். ஆனாலும் அவர் இறக்கும்போது ஏற்படும் துக்கத்தையும் இழப்பையும் நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது.

அன்புக்குரிய ஒருவர் எவ்வித சூழ்நிலையில் இறந்திருந்தாலும்சரி, இழப்புக்கு ஆளானவருக்கு ஆதரவும் ஆறுதலும் தேவை. 

குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசில்லாமல் திணரும் ஒருவரை நீங்கள் கவனித்ததுண்டா...?


உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறிவிடும். எளிமையா ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30,40 ஆயிரம் இல்லாமல் முடியாது. அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா???? சிலமணி நேரத்தில் பணம் எப்படி தயார் செய்வது???? என்ற நெருக்கடியை நினைத்து அழுவதா..?. கடன் பழக்கமே, இல்லாதவர்களைக் கூட அச்சூழல் வட்டிக்கடைக்கும், அடகு கடைக்கும் கொண்டு போய் தள்ளும்.
.
இது விசயத்தில் முக்கியமான ஒரு கருத்தை எல்லோரும் தயவுசெய்து ஏற்கவேண்டும் அல்லது இனிமேலாவது இந்த செயலை ஏற்படுத்த வேண்டும்...


அப்படி என்ன செயல்?...

இனிமேல் எந்த துக்கம் வீட்டுக்கு சென்றாலும், யாரும் பூ மாலை வாங்கி போட வேண்டாம் ஏன்?...

நாம் மாலை வாங்கி போட்ட அடுத்த நிமிடமே..... அந்த மாலையை வெளியே எடுத்து வந்து ஒரு இடத்தில் மாட்டி விடுவார்கள்... பின்னர் அந்த மாலையை துக்கம் விசாரிக்க வந்த (சில உறவினர்கள் நண்பர்கள் பொதுவாக நமது கலாச்சாரத்தில் பிறந்தாலும் ஆட்டம், செத்தாலும் ஆட்டம் , பாட்டம் ,கொண்டாட்டம்) ரோடு முழுவதும் போட்டு குப்பையாக்கி, அதுவும் மெயின் ரோட்டில் போகும் போது பஸ்ஸில் உள்ளே போடுவது.... மின்சார கம்பி ஒயரில் போடுவது... அதனால் சார்டாகி அக்கம்பக்கத்தினர் குடும்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் இது தேவையா?....

அந்த பூ மாலையை நூறு /நூற்று ஐம்பது / ஐநூறு /ஆயிரம் செலவு செய்வதை.....
இறந்துபோன குடும்பத்திற்கு பணமாக கொடுத்தால், அவர்களுக்கு ஈமக்கிரியை செலவுக்கு ஆகும்

ஏழையோ பணக்கார குடும்பமோ எல்லா இடங்களிலும் கூலர் பாக்ஸ் (ஓர் இருபது வருடங்களுக்கு முன்பு கையில் தான் தூக்கி போவார்கள் ஆனால் இன்று உடலிலும் தெம்பு இல்லை மனதிலும் தெம்பு இல்லை) தள்ளிக்கிட்டு போக ஓட்டிகிட்டு போக வண்டி என ஏகப்பட்ட செலவுகள் வந்து விடும்...

எனவே....இனி வரும் காலத்தில் இதை பற்றி சிந்திக்க வேண்டும்....

திருமண வீடுகளில் மொய் எழுத்தும் பழக்கம் நாம் அறிந்த ஒன்று தான். “ஏதோ கடன உடன வாங்கி கல்யாணம் பண்றான்.,நாம எழுதுற மொய்ப்பணம் கொஞ்சம் அவனுக்கு உதவியா இருக்குமே” என்பதால் தான், இந்த மொய்பழக்கம்....
கல்யாணம் என்பது திடீர் செலவு இல்லை. நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி நாள்/ மண்டபம் குறிச்சு நம்ம திட்டப்படி கல்யாணம் நடத்திக்கலாம்.

பல சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏதோ காரணத்துக்காக ஏதோ ஒரு காலநெருக்கடியில உருவாகி இருக்கலாம். ஆனா
கல்யாண வீட்டை விட சாவு வீட்டில தான் சார்.....
மொய் எழுதும் பழக்கம் ரொம்பவே முக்கியம் ..

சில ஏரியாகளில் இந்த பழக்கம் இருக்கலாம்.. தெரியல?? ஆனா பெரும்பாலும் இல்லை தானே.

அம்மாவ அப்பாவ அண்ணன தம்பிய பிள்ளைய இழந்த ஒருத்தன் நம்ம கண்ணு முன்னாடி சாவு செலவுக்கு காசில்லாம அலையலாமா...?தன்மானம் சுட அவன நாம கடனோ உதவியோ கேட்கவிடலாமா..?

உண்மையில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனொருவனின் கரங்களை இறுக பற்றி “நாங்க இருக்கோம்யா, தைரியாமாஇருயா செலவ பாத்துக்கலாம்”னு சகமனிதனாக நாம் சொல்லவேண்டிய தருணம் அது தான்...

இதுவரை இல்லாவிட்டாலும்..... இனி இப்படியொரு பழக்கத்தை துவங்குதல் நல்லது...

சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தன் அழக்கூடாது.....

நாம் அனைவரும் மனம் வைத்தால் கண்டிப்பாக ஓர் நல்ல மாற்றம் கிடைக்கும் செய்வோமா?
கண்டிப்பாக செய்தே தீரவேண்டும்

அனைத்து குழுமங்களிலும் பகிருங்கள்..

உங்கள்  தோழன்  மு.அஜ்மல் கான்.

கோமாவுக்கும், மூளைச்சாவுக்கும் என்ன வித்தியாசம் ??

No automatic alt text available.கோமா என்றால் நினைவு இழத்தல் என்பதும், மூளைச்சாவு என்றால் மூளை மரணம் அடைந்துவிட்டது என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், கோமா எதனால் ஏற்படுகிறது, கோமாவுக்கும் மூளைச்சாவுக்கும் உள்ள வேறுபாடு என்ன, கோமா வந்தவர்களுக்கு மூளைச்சாவு வருமா, கோமா வந்தவர்களுக்கு எப்போது திரும்பவும் நினைவு வரும், என்பதில் நிறைய சந்தேகங்கள் உண்டு.

கோமா என்றால் என்ன?
நமது மூளை சுயநினைவுடன் செயல்பட உதவுவது மூளைப் பகுதியில் இருக்கும் ரெட்டிக்குலார் ஆக்டிவேட்டிங் சிஸ்டம் (Reticular activating system) மூளைத்தண்டுவடம், ஹைப்போதாலமஸ் ஆகிய பகுதிகளில் ஏதேனும் தற்காலிகமான பாதிப்பு ஏற்பட்டால், மூளையின் ‘ரெட்டிக்குலார் ஆக்டிவேட்டிங் சிஸ்டம்’ (RAS) பாதிக்கப்படும். இந்த ஆர்.ஏ.எஸ் பகுதியில் இருக்கும் நரம்புகள் தான் சுயநினைவுக்குக் காரணமாக இருக்கின்றன. பாதிக்கப்படும் அளவைப் பொறுத்து நினைவு இழக்கும் நிலை ஏற்பட்டு மயக்கமடைவார்கள். இந்த சமயங்களில் சுயநினைவுக்குக் காரணமான நியூரான்கள் சரியாக வேலை செய்யாமல், மூளைக்குச் சற்று குறைவாக ரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்லும். இது, தற்காலிகமானதுதான். எதனால் ஆர்.ஏ.எஸ் பாதிக்கப்பட்டுள்ளது எனச் சரியாகக் கண்டறிந்து, பாதிப்புக்குக் காரணமான காரணியைச் சரிசெய்தால், கோமாவில் இருந்து மீள முடியும். அதுவரை, அவர்கள் படுத்த படுக்கையாக மட்டுமே இருக்க முடியும்.

ஏன் ஏற்படுகிறது?
தலையில் அடிபட்டு மூளை பாதிக்கப்படுவது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு அல்லது விரிசல் ஏற்படுவது, மூளையில் கட்டிகள் வளருவது, உடலில் வேறு பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய், மூளையைப் பாதிப்பது, அதிக அளவு கதிர்வீச்சால் பாதிக்கப்படுவது, தூக்க மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களால், மூளை நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கோமா ஏற்படலாம். இதுதவிர, மூளையில் ஏற்படும் அதிக அழுத்தமும் கோமாவை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் அதிக வேலை, மன அழுத்தம் காரணமாக ஏற்படும் உயர் ரத்த அழுத்தமும் மூளையைப் பாதிக்கும்.
கோமா ஸ்கோர் அளவைக் கணித்து, தேவையான சிகிச்சை கொடுக்க முடியும். பொதுவாக, மூளைக்கு மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் ரத்தம் செல்லவில்லை எனில், மூளை மற்றும் மூளைத்தண்டு நிரந்தரமாகச் செயல் இழந்து, மீள முடியாத நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்க, மாரடைப்பு, ஸ்ட்ரோக் மற்றும் விபத்தில் அடிபட நேர்ந்தால், விரைவில் மருத்துவமனையை நாடி, செயற்கை முறையில் ஆக்சிஜன் அளிக்க வேண்டும்.
கோமாவில், சுய நினைவு தவறுமே தவிர, உடனடியாக மரணம் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. கண் திறப்பது, பேசுவது, சொன்ன செயலைச் செய்வது ஆகியவற்றைப் பொருத்து, கோமாவில் எந்த நிலையில் உள்ளார் என மதிப்பிடப்படும். (பார்க்க: பெட்டி செய்தி)
கோமாவில் இருந்து ஒருவர் முழுமையாக மீள வழி உண்டா?
நிச்சயமாக மீள முடியும். கோமா ஸ்கோர் அளவைப் பொருத்தும், அளிக்கும் சிகிச்சையைப் பொருத்தும் கோமாவில் இருந்து முழுமையாக மீள முடியும். ஒருவர் ஒருமுறை கோமாவில் இருந்து மீண்ட பிறகு, மீண்டும் அவருக்கு கோமா ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு. எனினும், கோமா ஏற்பட்ட காரணம் கண்டறிந்து, விழிப்புடன் இருக்க வேண்டும்.

மூளைச்சாவு எப்படி ஏற்படுகிறது?
விபத்து, கட்டி என மூளையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக மூளைத்தண்டுவடம் நிரந்தரமாக செயல் இழந்துவிடும். செயற்கை சுவாசம் அளிப்பதன் காரணமாக, இதயம் சிறிது நேரம் செயல்படும் நிலையைத்தான் மூளைச்சாவு என்கிறோம். மூளைச்சாவும் மரணம் அடைவது போன்றதுதான். மூளைத்தண்டுவடம் பகுதியில்தான் மெடுலா ஆப்லங்கேட்டாவும் இருக்கிறது. மெடுலா ஆப்லங்கேட்டா, 2 செமீ அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும். இதயத்துடிப்பும், மூச்சு விடுதலும் சீராக இயங்க, இதுதான் காரணம். மூளைத்தண்டுவடத்தில் கட்டி ஏற்பட்டாலோ, மெடுலா ஆப்லங்கேட்டாவில் அடிபட்டாலோ, சில சமயம் மூளை உடனடியாகச் செயல் இழந்துவிடும். சில நிமிடங்களில் இதயமும் செயல் இழக்கும். அதே சமயம், மூளைச்சாவு அடைந்தவர்களுக்கு விரைவாக செயற்கை முறையில் ஆக்சிஜன் கருவியைப் பொருத்தினால், இதயத் துடிப்பு மேலும் 12-24 மணிநேரம் சீராக இயங்கும். வெகு சிலருக்கு, அரிதாக ஒரு வாரம் வரைகூட இதயத்துடிப்பு இருக்கும். ஆனால், செயற்கை ஆக்சிஜனை எடுத்துவிட்டால், இதயத்துடிப்பு நின்றுவிடும். இந்த சூழ்நிலையில்தான், நோயாளியின் குடும்பத்தினரின் அனுமதி பெற்று, சீராக இயங்கும் மற்ற உறுப்புக்களைத் தானமாகப் பெற்று மற்றறவர்களுக்குப் பொருத்தப்படுகிறது.
கோமாவுக்கும், மூளைச்சாவுக்கும் என்ன வித்தியாசம்?
கோமா என்பது நினைவு இழத்தல். அதில் இருந்து மீண்டுவர முடியும். உடனடி மரணம் கிடையாது. சிகிச்சைக்குப் பிறகு நினைவு திரும்ப வாய்ப்புகள் அதிகம். நினைவு திரும்பாமல் உயிர் இழக்கவும்கூடும். ஆனால், மூளைச்சாவு அடைந்துவிட்டால் அதற்கு சிகிச்சை இல்லை.
சாலை விதிகளைப் பின்பற்றுவதாலும், ஹெல்மெட் அணிந்து செல்வதாலும், விபத்தில் தலையில் அடிபடுவதைத் தடுக்க முடியும். ஓய்வு எடுக்காமல் சிந்தித்துக்கொண்டே இருப்பதால், மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதனைத் தவிர்க்க, தியானம் செய்வது நல்லது. அடிக்கடி தலைவலி, வாந்தி, மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட்டால், மூளையில் கட்டி இருக்க வாய்ப்பு உண்டு. மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
மூளைச்சாவு எப்படி உறுதி செய்யப்படுகிறது?
ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்ட நிலையில், அந்த மருத்துவமனையில் உள்ள பொது மருத்துவர், நரம்பியல் மருத்துவர், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் முன்னிலையில் ‘ஆப்னியா’ பரிசோதனை செய்யப்படும். இந்தப் பரிசோதனையின்போது, ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு அளவுகள் கணக்கிடப்படுகின்றன. அதன் பின்னர், செயற்கை சுவாசத்தைத் தற்காலிகமாக நிறுத்தி, அவரால் மூச்சுவிட முடிகிறதா என, மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் பரிசோதிக்கப்படும். தொடர்ச்சியாக மூச்சுவிட முடியவில்லை, இதயத் துடிப்பு குறைகிறது, ரத்த அழுத்தம் மாறுகிறது என்றால், உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்படும். மூச்சு விடவில்லை என்றாலோ, மூச்சு விடுவதற்கான அறிகுறியே இல்லை என்றாலோ, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ரத்தத்தில் கார்பன்டை ஆக்சைடு அளவு பரிசோதிக்கப்படும். கார்பன்டை ஆக்சைடு அளவு 50-ஐத் தாண்டினால் ‘ஆப்னியா’ பரிசோதனை பாசிட்டிவ் எனக் குறித்துக்கொள்வார்கள். பெரியவர்கள் எனில், மீண்டும் ஆறு மணி நேரம் கழித்தும், குழந்தைகள் எனில் வயதைப் பொறுத்து 12-24 மணிநேரங்கள் கழித்தும் மறுபடியும் பரிசோதனை செய்யப்படும். அப்போதும் ‘ஆப்னியா’ பரிசோதனை பாசிட்டிவ் என வந்தால், மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்படும்.
கோமா ஸ்கோர்
கோமா ஸ்கோரைவைத்தே, கோமாவைக் குணப்படுத்தும் நிலையை மருத்துவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.
கண்களைத் திறந்து பார்ப்பது
கோமாவில் இருப்பவர் கண்களைத் திறந்து பார்த்தால், நான்கு மதிப்பெண்கள். கூப்பிடும்போது மட்டுமே பார்த்தால், மூன்று மதிப்பெண்கள். உடலில் எங்கேனும் கிள்ளுதல் அல்லது வலி கொடுத்தலின்போது கண்களைத் திறந்து பார்த்தால், இரண்டு மதிப்பெண்கள். என்ன செய்தாலும் கண்களைத் திறக்கவே இல்லை எனில், ஒரு மதிப்பெண்.
பேசுவது
கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொன்னால், ஐந்து மதிப்பெண்கள். கேட்ட கேள்விக்கு, சம்பந்தமே இல்லாமல் பதில் அளித்தால், நான்கு மதிப்பெண்கள், பேசவில்லை வார்த்தைகள் மட்டும் ஒன்றிரண்டாக வருகிறது எனில், மூன்று மதிப்பெண்கள், ஏதேனும் உடலில் வலி ஏற்படுத்தினால் மட்டும் சத்தம் வருகிறது எனில், இரண்டு மதிப்பெண்கள். எந்த சத்தமும் வரவில்லை எனில், ஒரு மதிப்பெண்.
சொன்ன செயலை செய்வது
மருத்துவர் சொல்வதைக் கேட்டறிந்து, சரியாகப் பின்பற்றினால், ஆறு மதிப்பெண்கள். சொன்ன வேலையைச் சரியாக செய்யவில்லை, ஆனால், மருத்துவர் உடலில் வலி ஏற்படுத்தும்போது மருத்துவரின் கையைத் தட்டிவிட்டால் ஐந்து மதிப்பெண்கள். வலி ஏற்படுத்தும்போது இன்னொரு பக்கமாகத் திரும்புகிறார் எனில், நான்கு மதிப்பெண்கள். வலி கொடுத்ததும் இரண்டு கை விரல்களையும் இறுக்கிக்கொண்டால், மூன்று மதிப்பெண்கள். வலி ஏற்படுத்தும்போது கைகளை நீட்டினால் இரண்டு மதிப்பெண்கள். என்ன செய்தாலும் சலனமற்று எதையுமே செய்யவில்லை என்றால், ஒரு மதிப்பெண்.
மூன்று செயல்களையும் சேர்த்து பதினைந்து மதிப்பெண் என்பது அதிகபட்ச ஸ்கோர். மூன்று குறைந்தபட்ச ஸ்கோர். கோமா ஸ்கோர் 12-க்கு மேல் எனில், சிகிச்சை மூலம் மிக விரைவில் நினைவு திரும்ப வாய்ப்பு உண்டு. ஏழு முதல் 11 வரை எனில், நினைவு திரும்ப சில நாட்கள் ஆகும். நான்கு முதல் ஆறு எனில் நினைவு திரும்ப சில மாதங்கள் ஆகலாம். கோமா ஸ்கோர் மூன்று எனில், நினைவு திரும்புவது மிகவும் கடினம். தொடர் சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்த மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

தொகுப்பு : மு.அஜ்மல்  கான். 

இந்த காணொளியை  அப்டேட்  செய்துள்ளேன் ..

https://www.youtube.com/watch?v=nVbIduZamWY

Friday, 7 September 2018

தமிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் ( Palindrome )வார்த்தைகள் !!

Palindrome க்கான பட முடிவுஎந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) என்பதாம்
தமிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் வார்த்தைகள்!
விகடகவி
மாவடு போடுவமா,
துவளுவது
தாளாதா
வா தாத்தா வா!
மாலா போலாமா,
தேருவருதே
மேகமே
வாடவா
தாத்தா
கலைக
வினவி
யானை பூனையா,
யானையா பூ யானையா,
பாப்பா
தேருவருதே
தந்த
மாறுமா
தேயுதே
மேளதாளமே.
மாடு ஓடுமா
கலைக
கலக
மோருபோருமோ,
போ வாருவா போ.
மாடமா
மாதமா
மானமா
மாயமா
கற்க
மாமா
காக்கா
சிவா வாசி
ஆங்கிலத்தில் இதுவரை நான் அறிந்த (PALIMDROME) வார்த்தைகள் !
1: civic
2: Dewed
3: deified
4: dad
5: mom
6: devoved
7: Hannah
8: peeweep
9: repaper
10: kayak
11: minim
12: radar
13: murdrum
14: Malayalam
15: madam
16: lemel
17: level
18: racecar
19: radar
20: redder
21: bob
22: pop
23: tot
24: refer
25: reviver
26: rotator
27: rotavator
28: stats
29: solos
30: tenet
31: terret
32: testset
33: Kinikinik
34: Wassamassaw
35: Yreka Bakery
36: Navan
37: Cain: a maniac.
38: A Toyota.
38: Race fast, safe car.
39.RACECAR
40.MALAYALAM
41.EVE
42.LEVEL
43DEED
44.ROTOR
45.CIVIC
46.POP
47.MADAM
48.EYE
49.NUN
50.RADAR
51.TOOT
 Thokuppu
தொகுப்பு  மு.அஜ்மல் கான்.

Thursday, 6 September 2018

கோயம்புத்தூரில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

Related imageஎன்னைப் பொறுத்தவரையில் கோயம்புத்தூரில் உள்ள ஓட்டல்களில் சாப்பாட்டில் ருசி அவ்வளவு ஒன்றும் பிரமாதம் என்று சொல்லிவிட முடியாது தென்னகத்திலே ஆந்திராவில் நன்றாக இருக்கும்தமிழகத்தில் சென்னை வட ஆற்காடு போன்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு சுமாராக இருக்கும் கர்நாடகம் சிறிது பரவாயில்லை கேரளா சொல்லவே தேவையில்லை மிக மிக மோசம். கோயம்புத்தூரில் சாம்பாரில் வெல்லத்தை கலந்து தித்திப்பாக பரிமாறுகிறார்கள் அதனால் அவ்வூர் மக்களுக்கு வேண்டுமென்றால் பிரமாதமாக இருக்கலாம் மற்ற மக்களுக்கு சுமார். பெரும்பாலும் கோவை மக்கள் சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அவர்களின் மனநிலை எல்லாம் பணம் சம்பாதிப்பதிலேயேநான் சில மாதங்கள்  கோயம்புத்தூரில் இருந்தவன் என்ற முறையில் இதை பதிவு செய்கிறேன்..

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....
நீங்கள் உணவுப்பிரியரா ?
சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் அதை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் சுவையான தரமான உணவை சாப்பிட விருப்புவரா?
பல இடங்களில் பலர் சாப்பிட்டதை வைத்து தொகுக்கப்பட்ட உணவுக்கடைக‌ளின் தொகுப்பைக் கொடுத்துள்ளேன்.
ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல், வடவள்ளி, கோவை. Special : மட்டன் குழம்பு, தந்தூரி சிக்கன்
கௌரி மெஸ், ராம் நகர், கோவை. Special : சிக்கன் கிரேவி, பூ மீன்
ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால், ராமசேரி, கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு ரோட்டில். Special : இட்லி
கோவை to சேலம் சின்னியம்பாளையம் bridge அருகில்: Garden restaurant, non-veg & veg பிரியர்களுக்கு, honeymoon spl ice cream top class..
அவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், செளடேஸ்வரி கோவில் பின்புறம், கோவை. Special : இட்லி
வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை
ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை. Special : கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்
கண்ணன்ணன் விருந்து, RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி. Special : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..
டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை. Special : ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்
சத்யா மெஸ், புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே, பாப்பநாயக்கன் பாளையம், கோவை. Special : கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை
வைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை. Special : காரப்பொறி
ஜெர்மன் ஹோட்டல், காரணம்பேட்டை, சூலூர். Special : நாட்டுக் கோழி வறுவல், கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானு
மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, கோவை. Special : சாப்பாடு
படையப்பா மெஸ், குமரன் சாலை, திருப்பூர். Special : முயல் கறி ஸ்பெசல்
இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு. Special : பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி, பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும்
தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை. Special : பரோட்டா
மாரிமுத்து போண்டா கடை, முருகாலயா தியேட்டர் நேர் எதிரே, பொள்ளாச்சி. Special : போண்டா பஜ்ஜி
அபூர்வ விலாஸ், கணபதி, கோவை. Special : தேங்காய் பால், பலகாரம் ஸ்பெசல்
ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலணி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி
ஓம்சக்தி ஹோட்டல், இடையர் வீதி அருகே உள்ள குரும்பூர் சந்து, மநக வீதி, கோவை. Special : சிக்கன் 65
திருமூர்த்தி டீ & டிபன் ஸ்டால், அவிநாசி புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது. Special : தோசை, ஆப்பம்
பாரதியார் உணவகம், வரதராஜா மில் அருகில், பீளமேடு. Special : திண்டுக்கல் ரோஸ்ட், மற்றும் கோதுமை தோசை
பிஸ்கட்
சென்னையிலிருந்து பெங்களூருக்கோ, கோவைக்கோ, இல்லை எங்கயோ ஆம்பூர் வழியாக ரயிலில் பயணித்தால், ஆம்பூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த நம்பர்களில் ஸ்டார் பிரியாணிக்கு 04174 249393, CELL : 9894247373 போன் செய்து பிரியாணி ஆர்டர் செய்து உங்கள் கோச் நம்பரையும் சொல்லி விட்டால் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் கோச்சில் வந்து டெலிவரி செய்கிறார்கள்.
காவேரி ஜூஸ் கடை, 5 கார்னர், கோவை. Special : நன்னாரி சர்பத், ரோஸ் மில்க்
பிரியா, கோவை சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில். Special : அடப்பிரதமன்
சிவ விலாஸ் ஹோட்டல், கோவை, கணபதி. Special : தேங்காய் பால்
மயூரா பேக்கரி, கருமத்தம்பட்டி மெயின் ஜங்ஷன். Special : காரட் கேக்
பழனியம்மா பாட்டி டீக்கடை, சரவணம்பட்டி, கோவை. Special : இஞ்சி டீ
கணபதி மெஸ், வடவள்ளி பழமுதிர் நிலையம் அருகே, கோவை. Special : ஈவ்னிங் வெஜிடேரியன் டிபன்.
பர்மா பாய் கடை, கோவை. Special : பரோட்டா பெப்பர் லெக்
எஸ்.ஆர்.கே.பி மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்
ஸ்ரீசாய் கபே, கோவை அண்ணா சிலை. Special : ஃபுல் மீல்ஸ்
Barbeque Nation, கோவை டவுன் ஹால். Special : Unlimited Barbeque
மீசை பாணி பூரி, சுக்ரவார்பேட்டை. Special : முட்டை பூரி
கொங்கு மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்
பாபு ஹோட்டல், கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப். Special : ஆப்பம், சாம்பார் பொடி
SMS ஹோட்டல், கோவை, Special : நல்லி எலும்பு சூப், மட்டன் கீமா, தோசை
கீர்த்தி மெஸ், தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்
அன்ன பூரணி மெஸ், காந்திபுரம் வீதி 1, கோவை. Special : அனைத்து வகை சிற்றுண்டி
ஆஜ்மர் பிரியாணி, மணி கூண்டு, கோவை. Special : பிரியாணி, குஸ்கா
MR ஹோட்டல், கோவை நேரு ஸ்டேடியம். Special : நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை
CFC HOT FRIED CHICKEN, கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில். Special : வறுத்த கோழி
நல்உணவு, கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில். Special : சிறு தானியங்கள் உணவு
பிரியாணி மண்டி, ராம்நகர் காளிங்கராயர் தெரு. Special : பிரியாணி
ஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி, உக்கடம், கோவை. Special : பிரியாணி, அரி பத்திரி
லக்ஷ்மி சங்கர் மெஸ், ஜி சி டி, கோவை. Special : ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு
ஆச்சி மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : 12 வகை வெரைட்டி சாத வகைகள்
சஹாய் க்ரில்ஸ், கோவை, பீளமேடு. Special : செட்டிநாடு க்ரில், பெப்பர் க்ரில்
ஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ, வரதராஜபுரம், கோவை. Special : குருமா, பரோட்டா
கோவை RS புரம் பாலாஜி மெஸ், பெண்களே சமையல். Special : மீன் குழும்பு, கைமா வடை
அம்மா மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : மீன் குழம்பு, மீன் சாப்பாடு
குப்பண்ணா ஹோட்டல், கோயம்புத்தூர், ராம்நகர். Special : அசைவ சாப்பாடு
சி கே மீல்ஸ், ரயில் நிலயம், கோவை. Special : அளவுச் சாப்பாடு
வில்லேஜ் லஞ்ச் ஹோட்டல், கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி. Special : அனைத்து வித தோசைகள்
பாரதி மெஸ், NEAR NATIONAL MODEL SCHOOL, கோவை. Special : அனைத்து வித தோசைகள்
கீதா கெண்டீன், ரயில் நிலையம், கோவை. Special : அனைத்து வகை டிபன்
கண்ணணண் கறி விருந்து, கோவை. Special : நாட்டுக்கோழி சிக்கன், புதினா சிக்கன்
சுப்பு மெஸ், ரயில் நிலையம், கோவை. Special : சைவ, அசைவ ஃபுல் மீல்ஸ்
ஃபுட் கார்டன், RS Puram, கோவை. Special : தயிர் பூரி
குப்தா ஜி சாட்ஸ், கோவை சாய்பாபா காலனி, சர்ச் ரோடு. Special : தயிர் பூரி
வைரமாளிகை, நெல்லை. Special : ப்ரைடு சிக்கன், ஷார்ஜா மில்க்‌ஷேக்
சுகுணவிலாஸ் ஹோட்டல், அண்ணா சிலை, கடை வீதி, திருசெங்கோடு. Special : பள்ளிபாளையம் சிக்கன்
அன்னை மெஸ், குன்னத்தூர் பஸ் ஸ்டாண்ட். Special : நாட்டுக் கோழிக் குழம்பு, ஆசாரி வறுவல்.
தூத்துக்குடி பரோட்டோ கடை, கோவை ஹோப்ஸ். Special : பரோட்டோ
சென்ட்ரல் பிரியாணி கடை, திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு. Special : பிரியாணி
ஜோஸ் கடல் மீன் உணவகம், குமார் நகர், திருப்பூர். Special : கடல் மீன் உணவு
ஆச்சிஸ், திண்டுக்கல். Special : அயிரை மீன் பக்கோடா
டேன்ஜரின் ரெஸ்டாரன்ட், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : சாப்பாடு
சாய் கப்சப், RS PURAM, கோவை. Special : இஞ்சி டீ:
JMS சர்பத் கடை, திண்டுக்கல். Special : சர்பத்
ஸ்ரீ பாலாஜி பவன் ஹைகிளாஸ் வெஜ ஹோட்டல், திண்டுக்கல். Special : ஃபுல் வெஜ் மீல்ஸ்
அப்பா மெஸ், திருப்பூர் கரட்டாங்காடு பஸ் ஸ்டாப். Special : ஃபுல் மீல்ஸ்
மணி கவுண்டர் மெஸ், திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு. Special : சிந்தாமணி சிக்கன்
தம்புடு ஹோட்டல், பல்லடம் போலிஸ் ஸ்டேசன். Special : இரவு இட்லி, ரோஸ்ட், பரோட்டா
செட்டியார் கடை, திருப்பூர். Special : டயனமைட் சிக்கன் :
ராமசாமி மட்டன், திருப்பூர் புதிய பஸ்நிலையம், திருப்பூர். Special : மட்டன், குடல்பிஃரை
கவுண்டர் மெஸ், அவினாசி ஆட்டயாம்பாளையம். Special : அசைவச் சாப்பாடு
முத்துமெஸ், தாராபுரம் ரோடு, திருப்பூர். Special : அசைவ சாப்பாடு
இந்திராணி அக்கா இட்லி கடை, காரணம் பேட்டை. Special : இட்லி
திருப்பூர் ஷெரிப் காலனி மெயின்ரோடு. Special : அடை சுண்டல்
கொங்கு மீன் ஸ்டால், திருப்பூர் காங்கயம் ரோடு. Special : மீன் வறுவல்
HBH, ஊட்டி சேரிங் கிராஸ் அருகே. Special : பிரியாணி
இதயம் பப்ஸ், திருப்பூர் PN ரோடு, மேட்டுப்பாளையம் பஸ்டாப் அருகில். Special : வெஜ் சமோசா, அரைத்து விட்ட குருமா
அம்மாயி வீட்டு மண் பானை சமையல், கோவை ஆவாரம்பாளையம். Special : குடல்கறி, தோசை
கிங் பரோட்டா, டாஜ், டவுன்ஹால் ரோடு, கோவை. Special : பட்டர் சிக்கன்
வில்லெஜ் விருந்து, பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம். Special : பன், பரோட்டா
சூரியா ஹோட்டல், NGM கல்லூரி அருகில், பொள்ளாச்சி. Special : கொழுக்கட்டை
அமுதசுரபி, பொள்ளாச்சி. Special : விதம் விதமான தோசை
கௌரி கிருஷ்ணா, பொள்ளாச்சி. Special : மினி காஃபி.
பிரியாணி ஹவுஸ், பொள்ளாச்சி. Special : சிக்கன் பிரியாணி
ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோவை கலெக்டர் ஆபிஸ் ரோடு. Special : அன்லிமிட் சாப்பாடு
கீதா ஹால், கோவை. Special : நீர் தோசை
ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலனி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி.

Our Sincere thanks to Kovai Neram( Mr.Jeevanandam )

Friday, 31 August 2018

தமிழ்மண் மீட்புப் போராளி மங்கலங்கிழார !!

1911ஆம் ஆண்டிற்கு முன்னர் வடவேங்கடம், திருக்காளத்தி உட்பட பல்வேறு பகுதிகள் தமிழ்நாட்டின் வடவெல்லையாக இருந்து வந்தது. அப்போது பிரித்தானிய அரசு நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்களை உருவாக்கியது. 1911ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாளன்று வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தமிழர் பகுதிகளான திருத்தணிகை, புத்தூர், திருக்காளத்தி, சந்திரகிரி, சிற்றூர், பலமேனரி, புங்கனூர் ஆகிய வட்டங்களைப் பிரித்தும், கடப்பை மாவட்டத்தில் உள்ள தெலுங்கர் பகுதிகளான மதனப்பள்ளி, வாயல்பாடு ஆகிய இரண்டு வட்டங்களைப் பிரித்தும் புதிதாக சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
இதன் காரணமாக சிறுபான்மை இனத்தவராகிய தெலுங்கர்கள் பெரும்பான்மையாக மாற்றப்பட்டனர். பனகல் அரசர், பொல்லினி முனிசாமி நாயுடு போன்றோர் சென்னை மாகாண முதல்வராக இருந்த காரணத்தால் சித்தூர் மாவட்ட அதிகார மையங்களில் தெலுங்கர்களே ஆதிக்கம் செலுத்தினர். பெரும்பான்மை தமிழர்கள் மீது தெலுங்குமொழி கட்டாயமாக திணிக்கப்பட்டது. சித்தூர் மாவட்டம் தெலுங்கர் மாவட்டமென்று பொய்யான பரப்புரை செய்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.
சித்தூர் மாவட்டத்தில் ஆந்திரர்கள் தந்த நெருக்கடி காரணமாக தமிழ்மொழி மீது தமிழர்களே பற்று கொள்ளாமல் தடுத்து நிறுத்துப்பட்டதோடு, தமிழ்பாடசாலை கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆந்திரர்களின் தெலுங்கு தேசிய உணர்வு அங்குள்ள தமிழர்களை தெலுங்கு மொழியை பேச வைத்தது. அத்தகையச் சூழ்நிலையில், வளரும் தலைமுறை மாணாக்கர்களுக்கு தமிழ் மொழிக் கல்வியை அளித்து இலட்சக்கணக்கான தமிழர்களை தெலுங்கராக மாறிப் போகாமல் தடுத்து நிறுத்தினார் ஒரு தமிழர். அவர் தான் 'மாத்தமிழர்' மங்கலங்கிழார்.
வட ஆற்காடு மாவட்டம் அரக்கோணத்தை அடுத்து ஒரு கல் தொலைவில் உள்ள புளியமங்கலம் எனும் சிற்றூரில் 1897ஆம் ஆண்டு ஐயாசாமி- பொன்னுரங்கம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். ஐயாசாமி அவ்வூரில் மணியம் (ஊர்த் தலைவர்) வேலை பார்த்து வந்தார். அவர் தம் மகனுக்கு குப்பன் என்று பெயரிட்ட போதிலும், மற்றவர் அவரை குப்புச்சாமி என்றே அழைத்து வந்தனர்.

குப்புச்சாமி தனது தொடக்கக்கல்வியை புளியமங்கலத்தில் கற்று வந்தார்.
அவரின் தமக்கையாருக்கு குழந்தைப்பேறு இல்லாத நிலையில் பத்துவயது நிரம்பிய குப்புச்சாமியை வளர்க்க விரும்பினார். அவர் விரும்பிய படி குப்புச்சாமி தமக்கையார் வசித்த சென்னை புரசைவாக்கத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

1908இல் குப்புச்சாமி அங்குள்ள பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்ததோடு, தேர்வுப் போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்றார்.
இதைக் கண்டு இன்புற்ற அவரின் தமக்கையார் எதிர்காலத்தில் குப்புச்சாமி பெரிய வழக்கறிஞராக வரவேண்டும் என்று விருப்பப்பட்டார். அவரின் கனவோ நிறைவேறவில்லை. கணவர் எதிர்பாராமல் இறந்துவிட, குடும்பம் வறுமையில் மூழ்கத் தொடங்கியது. இதன் காரணமாக குப்புச்சாமி படிப்பைக் கைவிட்டு தச்சுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்.
1914இல் இளமையில் கல்வி கற்க முடியாத நிலையை எண்ணி வருந்திய குப்புச்சாமிக்கு இரவுப் பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இரவுப் பள்ளியை டி.என்.சேஷாசலம் ஐயர் என்பவர் கல்வி இடை நிற்றல் மாணவர்களுக்காக நடத்தி வந்தார். அப்பள்ளியில் குப்புச்சாமி சேர்த்துக் கொள்ளப்பட்டார். டி.என்.சேஷாசலம் ஐயர் சிறந்த வழக்கறிஞர் மட்டுமல்ல; சிறந்த தமிழுணர்வாளர்; ஆங்கிலம், தமிழ், வடமொழியில் புலமை மிக்கவர். இவரின் தமிழுணர்வும் குப்புச்சாமியின் தமிழார்வமும் இரவுப்பள்ளியில் ஒன்றாய்க் கலந்தது.

தமிழ்மொழி மேம்பாட்டுக்காக ஐயர் "கலாநிலையம்" எனும் இலக்கிய ஏட்டை நடத்தி வந்தார். அவர் அவ்வேட்டின் பொறுப்பு முழுவதையும் குப்புச்சாமியிடம் ஒப்படைத்தார். அவ்வேடு தொடர்ந்து வெளிக்கொணர நிதி தேவைப்பட்டதால்
மாணவர்கள் மத்தியில் "கலாநிலையம்" பெயரிலே நாடகம் தயாரிக்கப்பட்டு சென்னை, சிதம்பரம், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் நடத்தப்பட்டது.

இந்நாடகத்தில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு " தமிழ் நாடகக் கலைத் தந்தை" சங்கர தாஸ் சுவாமிகள் பயிற்சியளித்தார். இந்த நாடகத்தில் பெண் வேடமிட்டு குப்புச்சாமி சிறப்பாக நடித்தார். இவரின் நடிப்பைக் கண்டு பிரபல நாடக நடிகர் கிட்டப்பா வியந்து பாராட்டினார். நாடகம் மூலம் கலாநிலையப் பணிகள் பலரின் பாராட்டைப் பெற்றபோதிலும், நிதியுதவி கிடைக்கப் பெறாததால் நின்று போனது.
இதற்கிடையில், 1922-இல் தமது இருபத்தைந்தாம் வயதில் கமலாம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் தமிழ் மீதான ஈடுபாடு கூடியதே தவிர குறையவில்லை.
தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களை பிழையறக் கற்றுக் கொள்ளவும், இலக்கண, உரை விளக்க நூல்களில் சிறப்பெய்திடவும் விரும்பினார். அதன் பொருட்டு "இலக்கணப்புலி" என்று அறியப்பட்ட தமிழறிஞர் கா.ரா.கோவிந்த சாமி முதலியார் என்பவரிடம் போய்ச் சேர்ந்தார். இவரோடு தமிழறிஞர் சிந்தாமணி மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை என்பவரும் இணைந்து படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தச்சுத் தொழிலாளி மிகுந்த ஆர்வத்தோடு இலக்கணம் கற்பதில் சிறந்து விளங்குவதைக் கண்டு வியப்புற்ற கா.ர. கோவிந்தசாமி முதலியார் அவர்கள் பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார் உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக நியமனம் செய்யப் பரிந்துரைத்தார். அங்கு பதினைந்து ஆண்டுகள் பணிபுரிந்து வந்த குப்புச்சாமிக்கு இரத்த அழுத்த நோய் கூடி, பற்கள் கொட்டி விடவே ஆசிரியப் பணியை கைவிட்டார்.
இந்நிலையில், தந்தையார் இறந்து விடவே, அவரின் உறவினர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி "மணியம்" வேலையை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று குப்புச்சாமியும் சென்னையிலிருந்து தம் பிறந்த ஊரான புளிய மங்கலத்திற்கு இடம் பெயர்ந்தார்.
1934இல் ஊர்த்தலைவர் பொறுப்பை ஏற்று திறம்பட பணியாற்றியதால், அவ்வூர் மக்கள் "மங்கலங் கிழார்" என்று அழைக்கலாயினர். இப்பெயரே நாளடைவில் எல்லோரும் அழைக்கும் பொதுப் பெயராக நிலைத்து நின்றது.
மங்கலங்கிழார் தனக்கு கல்வி புகட்டிய டி.என். சேஷாசல ஐயர் வழியில் புளியங்குளத்தில் இரவுநேரப்பள்ளியைத் தொடங்கி தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது இராணிப்பேட்டை சின்மயானந்தா அடிகளோடு தொடர்பு கிடைத்ததால் துறவு நிலைக்கு மாறினார். அதுமுதல் வெண்மையான வேட்டியும், காவி ஜிப்பாவும், கதர் சால்வையும் அணியத் தொடங்கினார். அவரின் புறத் தோற்றம் மாறினாலும் உளத் தோற்றம் மாறவில்லை. சித்தூர் மாவட்டம் முழுவதும் தெலுங்கு மொழி ஆதிக்கத்தால் தமிழ்மொழி அழியும் நிலைகண்டு அவரின் உள்ளம் குமுறியது. உடனடியாக அங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் விழிப்புணர்ச்சியூட்டிட "அறநெறித் தமிழ்ச்சங்கம்" என்னும் அமைப்பை நிறுவினார்.
1939-இல் வளர்புரத்தில் முதல் அறநெறி தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டது. பின்னர் அது படிப்படியாக விரிவடைந்து குருவராயப்பேட்டை, அம்மையார் குப்பம் , மின்னல், நரசிங்க புரம், கீழ்ப்புத்தூர், மேல் புத்தூர், நாராயணவனம், சத்திரவாடி, சிந்தலப்பட்டடை, பொதட்டூர் பேட்டை, அத்தி மாஞ்சேரிப் பேட்டை, புதுப்பேட்டை, சுரைக்காய்ப் பேட்டை, மத்தூர், மத்தேரி முதலிய 16 கிராமங்களுக்கு கிளை பரப்பியது.
மங்கலங்கிழார் முயற்சியால் மேற்கண்ட ஊர்களில் தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டு நான்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. அவைகள் ஆரம்ப வகுப்பு, ஒளவை வகுப்பு, சிற்றிலக்கிய வகுப்பு, பேரிலக்கிய வகுப்பு என அழைக்கப்பட்டன. முதலிரண்டு வகுப்பு மாணவர்களுக்கு இலக்கியம் கற்கும் மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்கள் பாடம் நடத்தினர்.
அறநெறிக் கழகம் மூலம் தமிழுணர்வு பெற்ற மாணவர்களைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஊரிலும் "மாணவர் மாநாடு" பெயரில் விழா நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் தமிழறிஞர்கள் தொ.ப.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் ஆகியோர் பங்கு பெற்று தமிழ் எழுச்சியூட்டினர்.
அது போல், தமிழ் தழைக்கப் பாடுபட்ட சமயச் சான்றோர்களான திருஞான சம்பந்தர், அப்பரடிகள், சுந்தரருக்கும் "திருநாள்" பெயரில் விழா கொண்டாடப் பட்டது. அந்நிகழ்வுகளில் 'தமிழ்த்தென்றல்" திரு.வி.க., ச.சச்சிதானந்தம், " சைவப் பெரியார்" சச்சிதானந்தம் , தமிழ் அகராதி தந்த பாலூர் கண்ணப்ப முதலியார், முனைவர் மா.இராசமாணிக்கனார், தென்னிந்திய சீவரட்சகத் தலைவர் ஶ்ரீபால், மறைமலையடிகள் மகள் நீலாவதி அம்மையார் ஆகியோர் பங்கேற்று சொற்பொழிவு நிகழ்த்தினர். பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற திரு.வி.க. மங்கலங் கிழாரை "வித்தியானந்தர்" என்றே விளிப்பது வழக்கம்.
பல்வேறு விழாக்கள் நடத்தி மங்கலங்கிழார் செய்த தமிழ்த்தொண்டிற்கு நல்ல பலன் கிடைத்தது. சித்தூர் பகுதியில் தமிழ் படித்த பல்லாயிரக்கான மாணவர்கள் உருவானார்கள். பலநூறு மாணவர்கள் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்று ஆசியர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அடுத்த கட்டமாக திருத்தணிகையில் தமிழ் வளர்ச்சிக் கழகம், பொதட்டூரில் தமிழாசிரியர் பயிற்சிப் பள்ளி என்று மங்கலங்கிழாரின் தமிழ்ப்பணி விரிவடைந்தது.
மங்கலங் கிழாருக்கு தமிழ்ப்பணி ஒரு கண்ணென்றால், 'தமிழ்மண் மீட்புப் பணி' மறு கண்ணாகும்.
சித்தூர் மாவட்டத் தோற்றத்திற்கு முன்பு இருந்த மக்கள் தொகை விவரம், வரைபடங்கள், கல்வெட்டு, இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றை சேகரித்தார். சித்தூர் குறித்து பல்வேறு செய்திகளை திரு.வி.க. மூலம் உறுதி செய்து கொண்டார். இதற்கிடையில், ம.பொ.சி.யின் "தமிழ்முரசு" ஏடு தமிழ் மாகாண உரிமை பற்றி எழுதி வந்ததையும் கண்ணுற்றார்.
1947ஆம் ஆண்டு வடக்கெல்லை கிளர்ச்சிக்காக ம.பொ.சி. உள்ளிட்ட தோழர்கள் திருவாலங்காடு வந்தபோது வரவேற்பு அளித்ததோடு உடன் சென்று தமிழர்களின் வடக்கெல்லைப் பகுதிகளை அடையாளங் காட்டினார்.
1949இல் திருத்தணிகையில் "தமிழ் வளர்ச்சிக் கழகம்" தொடங்கப்பட்ட போது அங்கு வந்திருந்த மங்கலங்கிழாருக்கு எல்லை மீட்புப் போராளிகள் தளபதி கே. விநாயகம், கோல்டன் ந.சுப்பிரமணியம், சித்தூர் அரங்க நாத முதலியார் ஆகியோரின் நட்பும் கிடைத்தது.
அதே ஆண்டில் "ஆந்திர கேசரி" என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசம் என்பவர் சென்னை ஆந்திரருக்கு உரியது என்று பேசி வந்தார். அப்போது ம.பொ.சி. ஒருங்கிணைப்பில் சென்னையில் "தமிழர் மாநாடு" கூட்டப்பட்டது. அந்த மாநாட்டிற்கு ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமை தாங்கினார். அதில் வடக்கெல்லை சார்பில் மங்கலங்கிழார் கலந்து கொண்டு சென்னை தமிழருக்கே என்று முழங்கினார்.
அத்தோடு நின்று விடாது, சித்தூர் ஜில்லா அறநெறித் தமிழ்ச் சங்கம் சார்பில், "தமிழ்ப் பெரு மக்களுக்கொரு வேண்டுகோள் " (சங்க வெளியீடு 1) என்ற பெயரில் வட ஆர்க்காடு தமிழ்ப்பகுதி பறிபோன வரலாற்றைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார்.
மற்றொன்றில், "தமிழ்நாட்டின் வடக்கு" என்று தலைப்பிட்டு (சங்க வெளீயிடு 2 ) விரிவாக வெளியிட்டார். அதில், சங்க இலக்கிய, இலக்கண, செய்யுள், புராண நூல்களிலும், கல்வெட்டுகளிலும் திருப்பதி வரை தமிழக எல்லை குறிப்பிட்டு இருப்பதை விளக்கினார்.
மேலும், தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆந்திரருக்கு தெலுங்கு மொழி கற்கும் வசதியும், காரமான உணவு சாப்பிடுவதற்கு தனி விடுதி வசதியும் அளிக்கப்படும் போது, விசாகப் பட்டினத்தில் உள்ள ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் மட்டும் தமிழுக்கும், தமிழருக்கும் இடமில்லையே? ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்மண் மீட்புப் போராட்டத்தின் போது பின்வரும் முழக்கங்களை தானே கைப்பட எழுதி வெளியிட்டார். அது வருமாறு:
1. வேங்கடத்தை விட மாட்டோம். 2. சென்னை ராஜ்ஜியத்தின் வடவெல்லை திருப்பதி மலை 3. நகரி பிர்க்காவை சென்னையோடு சேர். 4. புத்தூர் பிர்க்காவை சென்னையோடு சேர் . 5. சித்தூர் தமிழ்ப் பகுதிகளை ஆந்திர நாட்டோடு சேர்க்காதே! 6. முன்னே எல்லையைப் பிரி- பின்னே நாட்டைப் பிரி 7. நமது ராஜ்ஜியம் சென்னை ராஜ்ஜியம் 8. நமது தலைநகரம்- சென்னை நகரம் 9. சென்னையோடு சேர்ந்து வாழ்வோம் 10. சென்னை நகரம் சமீபமானது 11. விஜயவாடா- வெகுதூரம் 12. ஐதராபாத்து- அதிக தூரம் 13. சென்னையை விட்டால் - பின்னால் கஷ்டம்.

1952 திசம்பர் இறுதியில் பிரதமர் நேரு ஆந்திரம் தனிமாநிலமாக பிரிக்கப்படும் என்றும், அதில் தமிழ் மாவட்டமான சித்தூரும் உள்ளடங்கும் என்று அறிவித்தார். இதை எதிர்த்து ம.பொ.சி. முயற்சியில் வடக்கெல்லை பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. அதில் மங்கலங்கிழார் உறுப்பினராக இருந்து தீவிரமாக செயல்பட்டார். 25.6.1953இல் 144 தடையை மீறி மறியல் நடத்தியதால் மங்கலங்கிழார் கைது செய்யப்பட்டு திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டார்.
வடக்கெல்லை பாதுகாப்புக் குழு கூட்டம் மீண்டும் 10.7.1953இல் சென்னையில் கூடி சித்தூர் மாவட்டத்தில் தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்புக்கு பாதுகாப்பு வழங்கங் கோரி பிரதமர் நேருவை சந்திக்க முடிவெடுத்தது. இக் கூட்டத்தில் ம.பொ.சி., தளபதி விநாயகம், கோல்டன் ந.சுப்பிரமணியம், டி.எம்.திருமலைப் பிள்ளை, வேலூர் அண்ணல் தங்கோ ஆகியோரோடு மங்கலங்கிழாரும் பங்கேற்றார். இதுவே மங்கலங்கிழார் இறுதியாக கலந்து கொண்ட நிகழ்வாகும்.
பொதட்டூரில் தமிழாசிரிரியர் பயிற்சிப் பள்ளி கட்டட வேலையில் தீவிரம் காட்டி வந்த நிலையில், மங்கலங்கிழாருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் பள்ளிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி 31.8.1953இல் காலமானார்.
மங்கலங் கிழார் எழுதிய நூல்கள் பத்துக்கும் மேற்பட்டவை. அவற்றுள் வடவெல்லை, தமிழ்நாடும் வடவெல்லையும், தமிழ்ப் பொழில், நளவெண்பா விளக்க உரை, இலக்கண விளக்கம், இலக்கண வினா விடை , நன்னூல் உரை ஆகியவை முதன்மையான நூல்களாகும்.

குறிப்புதவி:
1. தமிழக வரலாற்றில் மாத்தமிழர் மங்கலங்கிழார் - முனைவர் செ.உலகநாதன்
2. தமிழக வடக்கெல்லைப் போராட்டமும்- தணிகை மீட்சியும் -கோல்டன் ந.சுப்பிரமணியம்
3. தமிழ் வளர்த்த மாமுனிவர் மங்கலச் கிழார் - முனைவர் ஆலந்தூர் மோகனரங்கன்


நன்றி:

இக்கட்டுரை,தமிழ்த் தேசியப் பேரியக்க கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 அக்டோபர் 16-31இதழில் வெளிவந்தது.

Sunday, 26 August 2018

'குற்றால அருவியில் ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் "ஆஷ்'' என்ற வெள்ளைக்கார கலெக்டர் என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?




collector ash durai க்கான பட முடிவு அன்றைய காலத்தில் ''குற்றால அருவியில் பார்ப்பனர்கள் மட்டும்தான் குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது", என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் "ஆஷ்'' என்ற வெள்ளைக்கார கலெக்டர் என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் 
ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ் (Robert William Escourt Ashe) ICS (இந்திய நிர்வாகப் பணி) (பிறப்பு நவம்பர் 23, 1872 )பிரித்தானிய அரசின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் இருந்தவர்
ஒரு நாள் ஆஷ் துரை மாலை நேரத்தில்  தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார். நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் சத்தம் பலமாக கேட்கிறது. 

ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை.
அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். "ஏன்" என்று வினவிய துரைக்கு " அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள்
அங்கு போகக் கூடாது என்றும் சொல்லுகிறார்....!!!
உடனே ஆஷ் துரை ராவுத்தரை பார்த்து "சரி நீ போய் பார்த்து வா" என்றார். சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார், " முதல் பிரசவம் துரை. சின்ன பொண்ணு ரெண்டு நாளா கத்திக்கிட்டு இருக்காளாம், பிள்ளை வயித்துல தலை மாறிக் கிடக்காம். பரிதாபம், இனி எங்கிட்டு துரை பொழைக்கப் போகுது" என்றார்.
ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக் கேட்க ,அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா. பின்ன எப்படி வண்டி கட்டி டவுனுக்கு கொண்டு போறது?, என்றார் ரவுத்தர்.
இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி. ஆஷ்துரை இறங்கி அக் குடிசை நோக்கி போனார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் ஒரு உயிரையேனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று 
உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையோட்டியைப் பணித்தார் துரை. அந்த வழியாய் செல்ல வண்டிப்பாதை பிராமணர்களின் அக்கிரஹாரத்தை தாண்டித்தான் சென்றாக வேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டி மறிக்கப்படுகிறது.
ஒரு சேரிப்பெண்ணை ஏற்றிப் போகும் வண்டி இப் பாதை வழியே போகக் கூடாது என்று பார்ப்பணர்கள் வழி மறித்து வழி விட மறுக்கிறார்கள்...!!!வண்டி கொண்டு வரச் சொன்னது துரையும் அவரின் மனைவியும் தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள்.
இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார்ராவுத்தர். இதைக் கேட்ட ஆஷ் துரை அவர்கள்,தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.
collector ash durai க்கான பட முடிவுகுதிரையோட்டியின் பக்கதிலேறி அமர்ந்தும் கொண்டார். வண்டி அக்கிரஹாரத்திற்குள் நுழைகிறது.பார்ப்புகள் கூட்டமாய் வழி மறிக்கிறார்கள். "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக் கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது" என்கிறார்கள்.
வழி விட சொல்லிப் பார்த்த துரை அவர்கள் வழி விட மறுக்கவே, வண்டியைக் கிளப்பு என்று உத்தரவிடுகிறார். மீறி வழி மறித்த பார்ப்புகளின் முதுகுத் தோல் துரை அவர்களின் குதிரை சவுக்கால் புண்ணாக்கப்படுகிறது. அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாள்.
ஆஷ் துரை அவர்களிடம் அடி வாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான்.அவன் பெயர் வாஞ்சிநாதன் திருவிதாங்கூர் சமத்தானத்தின் செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்கிற சங்கர அய்யர். .அப்போது வாஞ்சிநாதன் எடுத்தசபதம் தான்.  திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் இடையேயுள்ள மணியாச்சி தொடருந்துச் சந்திப்பில்,17.06.1911 அன்று ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட வஞ்சகமாக அமைந்து விட்டது.
ஆஷைக் கொன்றபின் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். கொலை நடந்தபோது வாஞ்சியுடன் இருந்த சங்கர கிருஷ்ண அய்யர் என்ற இளைஞர் தப்பித்து ஓடிவிட்டார். ஆனால் அவர் சீக்கிரமே பிடிபட்டு தண்டனையளிக்கப்பட்டார். 

இந்தியச் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் போது தென்னிந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானிய ஆட்சியாளர் ஆஷ் ஒருவர் மட்டும்தான்.

மனித உயிரை விட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கப்பட்டு வருகிறது.

 பிரித்தானிய அரசு 1913ல் தூத்துக்குடியில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பியது. இப்பொழுது அந்த நினைவுச் சின்னம் பாழடைந்த நிலையிலுள்ளது
இதுவும் "ழான் வோனிஸ் எழுதிய "Ash. Official Notes"என்னும் குறிப்புகளில் அரசு ஆவணக் காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக் கொண்டிருக்கிறது...

மேலும் அறிய..
https://www.youtube.com/watch?v=w6cao4bkUYY

தொகுப்பு மு.அஜ்மல் கான்.

Tuesday, 21 August 2018

அவசர உதவிக்கு கட்டணமில்லாத் தொலைபேசி !!

1033 - அவசர உதவி
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவசரக் காலங்களில் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக, நான்கு இலக்கம் கொண்ட கட்டணமில்லாத் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நகரமயமாக்கல், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கம், சாலை விரிவாக்கம் போன்றவற்றால் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் 1.37 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 4 லட்சம் பேர் காயமடைகின்றனர்.

இந்தியாவில் தற்போது 90 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகள் மூலம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நுழைவுக் கட்டணங்களை வசூலிக்கும் பெரும்பாலான சுங்கச் சாவடிகள் தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும் சில சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. சாலை விபத்து நேரிடும் காலங்களில், பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை மீட்பதற்கான அவசரகால தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து வசதிகளும், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தாலும், அந்தந்த மாநில அரசுகளாலும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இருப்பினும், அவசர கால தொலைபேசி எண் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதால் அவற்றை நினைவில் கொள்வது கடினமாகவும், உடனடியாக தொடர்பு கொள்வது பெரும் சவாலாகவும் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவசர காலங்களில் எளிதில் நினைவு கொள்ளும் வகையில் நான்கு இலக்கம் கொண்ட கட்டணமில்லாத் தொலைபேசி எண் சேவையை மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையின் புள்ளி விவரப்படி, நாடு முழுவதும் கடந்த 2013-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 4.86 லட்சம் சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 1,37,572 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.

நிமிஷத்துக்கு ஒரு விபத்து

அதாவது, ஒவ்வொரு நிமிஷத்துக்கும் ஒரு சாலை விபத்து நிகழ்கிறது. நான்கு நிமிஷங்களுக்கு ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார். "கோல்டன் ஹவர்' என்று குறிப்பிடப்படும் நேரத்திற்குள் விபத்தில் சிக்கும் நபருக்கு சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

தேசிய நெடுஞ்சாலையில், ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்கு இடையிலும் அனைத்து விதமான அவசரகால வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அதேபோல, நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் சாலையின் இருபுறமும் அவசரக் கால தொலைபேசி எண்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.மேலும், சுங்கச் சாவடிகளில் வழங்கப்படும் வாகன நுழைவுச் சீட்டிலும் அந்த எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். இருப்பினும், ஒவ்வொரு சுங்கச் சாவடிக்கும் இந்த அவசரகால தொடர்பு எண்கள் மாறுபட்டிருக்கும். இதன் காரணமாக, விபத்தின் காலத்தில் சாலைப் பயன்பாட்டாளர்கள் அந்தத் தொடர்பு எண்ணை நினைவில் கொள்வது கடினமாக உள்ளது.

நான்கு இலக்க எண்


எனவே, தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் வசதிக்காக நாடு முழுவதும் நான்கு இலக்கம் கொண்ட ஒரே எண் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, 1033 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விபத்தின் போது வாகன ஓட்டிகள் எளிதாக நினைவில் வைத்து, உடனடியாக தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.


6 கால் சென்டர்கள்


நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு அவசர உதவியை உடனடியாகப் பெறலாம். இதற்கென தெற்கு, மேற்கு, கிழக்கு, வடகிழக்கு, தில்லி, சண்டீகர் ஆகிய 6 மண்டலங்களுக்கு உள்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை இணைக்கும் விதமாக, 6 கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவசர உதவிக்காக, இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் முதல் உதவிக்கான அனைத்து விதமான வசதிகளையும் கட்டணமில்லாத் தொலைபேசி மையப் பிரதிநிதிகள் மேற்கொள்வார்கள்.

அதாவது, அருகிலுள்ள சுங்கச் சாவடி, தன்னார்வத் தொண்டு நிறுவனம், ஆம்புலன்ஸ், 108 சேவை மையம், காவல் நிலையம், அவசரச் சிகிச்சை மையம் ஆகியவற்றுக்குத் தொடர்பு கொண்டு விபத்து பற்றி உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

ஆதாரம் : இந்திய அரசு - தகவல் மையம்