Thursday 26 May 2016

உலகின் மிகவும் அழகான எட்டுப் பெண் அரசியல்வாதிகள்!!

Ruby-Dhalla
கனடாவிலிருந்து றூபி (Ruby Dhalla)  எனும் பெயரையுடைய இந்திய வம்சாவழியையுடைய இவர் கனடிய அரசியல் வாதியாகவும் உள்ளார். இவர் கனடாவிலுள்ள 50 அழகான பெண்களுள்; முன்னிலையில் இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளார். இவருக்கு பொலிவூட் படங்களில் பணியாற்றியது சம்பந்தமாக சுருக்கான வரலாறும் இருக்கின்றது. சீக் மதத்தைச் சேர்ந்த இவர் கனடிய அரசியல் மூலமாகப் பெண்களிடைபே பணியாற்ற விழைகின்றார். 
Sarah-Palin
சாறா பாலின்(Sara Palin)) ஏனும் நாமத்தையுடைய அமெரிக்கப் பெண், அலாஸ்கா மாகாணத்தின் 9தாவது கவர்னராக இருந்தவர். கிட்டத்தட்ட 2006 – 2009 காலங்களில் பணியாற்றியிருக்கின்றார். அத்துடன் இவர் முன்னைநாள் துணை ஜனாதிபதி வேட்பாளராக நின்றவர். மேலும் இவர் எழுத்தாளராகவும், வர்ணனையாளராகவும் உள்ள தகமைகளைக் கொண்டவர். ஜனாதிபதிக்கான தேர்தல் பிரச்சாரங்களின்போது இவரது ஆடைகள் பெரும் சர்ச்சையை உருவாக்கி விட்டன. இவரும் மிகவும் அழகான பெண்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார்.
Ukraine
யூலியா ரைமொஸ்ஹென்கொ Yulia Tymoshenko எனும் பெயரையுடைய இவர் உக்கிரையின் நாட்டைச் சேர்ந்தவர். இவர் மிகவும் பிரபல்யமான அரசியல்வாதியும் அழகான பெண்ணும் கூட. அத்துடன் அவரது தலைமுடியால் இவர் எல்லோராலும் அறியப்பட்டவராக விழங்குகின்றார். இவர் முன்னைநாள் உக்கிரைன் நாட்டின் மந்திரியாக விழங்கியிருக்கின்றார்.
Rania Jodan
றாணியா Rania  எனும் பெயரையுடைய இந்தப் பெண் ஜோடான் நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஜோடான் நாட்டின் மன்னனான அப்துல்லா 2வதினுடைய மனைவியாவார். அத்துடன் இவர் அழகான பெண் அரசியல்வாதியாகவும் பிரபல்லயமடைந்து விழங்குகின்றார். அதுமட்டுமல்ல இவர் நாட்டின் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக அத்துறையில் பணியாற்றுகின்றார். இவர் மிகவும் நாகரீகமானவர் மட்டுமல்ல அழகான பெண் எனவும் பிரபல்யமான ஜோடான் நாட்டின் பெண்களுள் அடங்குகின்றார்.
Rathika-Sitsabaiesan
றாதிகா சிற்சபேசன் Rathika Sitsabaiesan எனும் பெயரையுடைய இந்தப் பெண் கனடா நாட்டைச் சேர்ந்தவர். இவர் ரொறன்ரோப் பெரும்பாகத்தின் கனடியப பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மிகவும் வயதில் இளையவராகக் காணப்படுகின்றார். இவர் முதலாவது கனடியத் தமிழர் என்ற பட்டத்தையும் பெற்றுக்கொள்கின்றார். றாதிகா அவர்கள் ஆண் ஆதிக்கக் கலாச்சாரத்தில் பணியாற்றுகின்றார்.
Hina-Rabbani-Khar
ஹின்னா றாபானி கார் Hina Rabbani Khar  எனும் பெயரையடைய பெண் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். இவர் பாகிஸ்தான் அரசியல்வாதியாக மட்டுமல்ல் தற்போது உலகில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவராகவும் காணப்படுகின்றார். இவர் முன்னைநாள் வெளிவிவகார அமைச்சராகவும் பணியாற்றியிருக்கின்றார். இவர் அமைச்சாராக இருந்தபோது இந்தியப் பயணங்களின்போது இவர் அணிந்து சென்ற நாகரீகமான உடையால் இவர் மிகவம் பிரபல்யம் பெற்றவராவர்.
Mara-Carfagna
மாறா கர்வக்னா Mara Carfagna எனும் பெயரைச் சூடிய இந்தப் பெண் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவர் அழகான பெண் அரசியல்வாதிகள் மத்தியில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் இவரது தலையலங்காரத்தினாலும் இவர் பிரபல்யம் அடைந்திரு;க்கின்றார் எனக் கூறப்படுகின்றது. இவருக்கு 30 வயதிற்கு அதிகமாக இருக்கும்போது இவரத தலையலங்காரம் மூலமாக மிகவும் வயதில் குறைந்தவர் போன்று காட்சியளிக்கின்றார்.

லூசியானா லியன் Luciana Leon எனும் பெயரைத் தாங்கிய இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவராவர். இவர் ஒரு அரசியல்வாதிமட்டுமல்ல ஒரு பேச்சாளரும் கூட. இவர் மிகவும் பிரபல்யம் வாய்ந்ததும், மிகவும் மதிக்கப்படும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவராவர். இவரும் அழகான பெண் அரசியல்வாதிகள் மத்தியில் இடம் பெறுகின்றார்.
தொகுப்பு  : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment