Sunday, 15 May 2016

இன்றைய அரசியல் சூழ்நிலையில் நோட்டா நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் !! ஒரு சமூக பார்வை..






'
வாக்குப்பதிவு இயந்திரத்தில் மேற்கண்ட வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை”எனப்படும், 'நோட்டா' பொத்தானை அழுத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், ஓட்டை பதிவுசெய்யும் ஜனநாயக உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுரிமை, ஒரே நாளில் பெறப்படவில்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சட்டப் போராட்டம் நடத்தி, வெற்றி கண்டதில் நானும் ஒருவன்; 

நோட்டா' சாத்தியமா என இந்திய தலைமை தேர்தல் கமிஷன் சந்தேகம் எழுப்பாமல் இல்லை. எனினும், விடாமுயற்சியின் விளைவால், பூத்தது நோட்டா. இன்றைய அரசியல் சூழ்நிலையில், ஆண்டிப்பட்டியில், ஒரு முறை, தேனியில், ஒரு முறை, திருவாரூரில், ஒரு முறை, துறைமுகத்தில், ஒரு முறை என, தொகுதி மாறி நிற்கிற வேட்பாளர்களும்; தான் போட்டியிடுகிற தொகுதியின் உண்மை நிலை என்ன, அங்குள்ள மக்களின் பிரச்னை என்ன என்பது எதுவும் அறியாமல், தொகுதியின் எல்லைகளை கூட அறியாமல், 'சீட்' கிடைத்து விட்டதே என்ற ஒரே காரணத்திற்காக போட்டியிடுபவர்களும் அதிகம்.

என் கட்சி வேட்பாளர், என் ஜாதி வேட்பாளர், எனக்கு பணம் கொடுத்த வேட்பாளர் என்று, பணம், கட்சி, ஜாதி என்ற, மூன்று காரணிகளை தாண்டி சிந்திக்க தெரியாத வாக்காளர் இருக்கிற சூழ்நிலையை மாற்றி, இந்தியாவை காப்பாற்ற கிடைத்த, ஒரே வலிமையுள்ள ஆயுதம், 'நோட்டா' மட்டுமே. நோட்டாவில், சமூக அக்கறையுள்ள, நாட்டு நலன் பற்றி சிந்திக்கிறவர்கள், அதிகமாக ஓட்டளிக்கிற சூழ்நிலை வளர வளர, நல்ல வேட்பாளர்களை போட்டியிட வைக்க வேண்டும் என்கிற மனநிலை, கட்சிகளுக்கு ஏற்படும். அதைப்போல், பெரும்பான்மை ஓட்டுக்கள் நோட்டாவுக்கு கிடைக்கிறபோது, மறுதேர்தல் என்பதும் சாத்தியமாகும்.
இன்றைய தேர்தல் சூழ்நிலையில், நான்கைந்து கட்சிகள் ஓட்டுகளை பிரிக்கிறபோது, 100 ஓட்டுக்களில், 30 சதவீதம் ஓட்டுகளை பெற்றவர், 70 பேர் எதிர்த்து ஓட்டளித்து இருந்தாலும் கூட, வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். 'மெஜாரிட்டி' என்கிற அடிப்படை தத்துவமே அடிபட்டு போய்விடுகிறது. ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தும், சட்டசபையில், ஒரு நாள் கூட பேசியது இல்லை என்ற பெருமைக்குரிய பிரதிநிதிகளை பெற்றிருப்பது, நமக்கும், நமது குடியரசுக்கும் கிடைத்த அவமானம் இல்லையா?சுதந்திரப் போராட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே சுதந்திரம் கிடைத்து விடவில்லை. மறுமலர்ச்சிக்கான போராட்டமும் அப்படித்தான். சுதந்திரத்தின் உண்மை தன்மை அறியாமல், அடிமைத்தனத்தில் ஊறிப்போன இந்தியர்களுக்கு தரப்பட்ட சுதந்திரம்,


நோட்டா என்பது வெறும் சொல்லோ சின்னமோ.. அல்ல.. இது ஒரு மக்கள் எதிர்ப்பு குரல் இது மாற்றத்திற்கான அமைதிப் புரட்சி சின்னம். அரசியலை சுத்தம் செய்யும் சின்னம் நோட்டா. எப்படி என்றால், நோட்டாவில் மட்டும் 35 சதவீத ஓட்டுகள் பதிவாகிவிட்டால் போதும். அந்தத் தேர்தலில் எந்தக் கட்சி பெற்ற வெற்றியும் செல்லாததாகிவிடும் சிறு சிறு துளிகள் சேர்ந்துதான் பெரும் வெள்ளத்தை உருவாக்கும் என்பது போல.. தமிழகம் முழுவதும் 5.5 லட்சம் வாக்காளர்கள் தங்கள் எதிர்ப்பை ஜனநாயக முறையில் தெரிவித்து உள்ளனர் , அவர்கள் வாக்குகளை வீணாக்கவில்லை . இது சிறய மாற்றம் , இதுவே அவர்களை சிந்திக்க வைக்கும் .


இன்று 5 லட்சம். நாளை 5 கோடி.. நோட்டா வாக்குகள் என்றாகும் போது.. மக்களின் மனதிலிருக்கும் அரசியல் மாற்றத்தை புரிந்துக்கொள்வார்கள் ஜனநாயகத்தை கொன்றழிக்கும் அரசியல் கட்சிகளும். போலி புகழ் தேடும் அரசியல் கிருமிகளும்.. நோட்டாவிற்கு வாக்களித்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள். உண்மையான ஜனநாயகம் மலர.. உங்கள் ஒரு ஓட்டு விதை போட்டுள்ளது.

நோட்டாவுக்கு வாக்கு போடுவதன் மூலம் வாக்காளர்கள் எந்த வேட்பாளரையும் விரும்பவில்லை என்று பதிவு செய்ய முடியும். இதற்காக வெட்கபடவேண்டியவர்கள் அரசியல் கட்சிகள் தானே தவிர வாக்காளர்கள் இல்லை. சரியான வேட்பாளரை நிறுத்துவது அரசியல் கட்சிகளின் கடமை, அவர்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்தினால் அவரை ஆதரிக்க வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட எந்தக்கட்சியும் மீண்டும் போட்டி போட முடியாது. அதுமட்டுமல்லாமல், அவர்களின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபட முடியாது.

எனவே 6 மாத காலத்துக்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிடும். அதன் பின்பு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வகையில் அரசியல் தூய்மையாகிவிடும். இந்த அரசியல் சட்டம் தெரியாமல் நாம் இருக்கிறோம். இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

தங்கள் தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வேட்ப்பாளர்கள் தகுதியற்றவர்கள், லஞ்ச ஊழல் பேர்வழிகள் என்பதை வெளிப்படையாக நிரூபிக்கத்தான் வரிசையில் நின்று நோட்டோவிர்க்கு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர் சென்னைவாசிகள், இதைத்தான் கிராமங்களில் குடிக்க முடியாத நீரை கொப்புளித்து துப்பு என்பார்கள். தேர்தலில் நிறுத்தப்பட்ட வேட்ப்பாலர்களை மட்டுமல்ல அவர்களை தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிடச் செய்த அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களை கண்டிக்கவும் பாடம் கற்ப்பிக்கவும் தேர்தல் ஆணையம் வழங்கிய வாய்ப்பில் தங்களை நிலைப்படுத்தி உள்ளனர் சென்னை வாழ் படித்த பண்பாளர்கள். இது முடிவல்ல நல்லதொரு ஆரம்பமே. நோட்டோ காட்டுகின்ற அர்த்தங்களையும் அடையாளங்களையும் புரிந்துகொண்ட ஏற்றுக்கொண்டால்தான் எதிர் காலத்தில் தங்களின் வழிகளையும் கொள்கைகளையும் மாற்றிக்கொண்டு மக்கள் நலப்பணிகளை மனசாட்சியுடன் தன்னலம் கருதாமல் ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற தங்களைஉருவாக்கிக்கொள்கிற வேட்ப்பாளர்களையும் தலைவர்களையும் அவர்களின் கட்சிகளையும் தமிழக மக்களின் வாக்குகளுக்கு சொந்தக்காரர்கள் என்பதை நோட்டோ எச்சரிக்கை செய்கிறது


ஒரே தீர்வு. உடனே தேர்தல் ஆணையம் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரணும். அதாவது வேட்பாளர்களை அனைத்து கட்சிகளும் தேர்தல் நாளுக்கு இரண்டு மாதங்கள் முன்னர் அறிவிக்க வேண்டும் (இதில் standby வேட்பாளர்களும் அடங்கும்). அவர்களை முதலில் தொகுதியில் ஒருமாதம் எந்த பிரச்சாரத்தையும் செய்யவிடாமல் ஒவ்வொவொரு பகுதியில் உள்ள அவர்கள் கட்சி அலுவலகங்களில் தங்கி இருந்து அந்தந்த பகுதி சிறிய, நடுத்தர, நீண்டகள கோரிக்கைகள், பிரச்சனை, திட்டங்களை குறிப்பெடுக்க செய்யவேண்டும். பின்னர் அவர்கள் கட்சி தலைமை அலுவலகம் சென்று கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்க பரிந்துரைக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் போது இந்த அறிக்கையை உறுதி பிரமாணமாக கட்சி தலைமையின் letter pad இல் தலைமை கையெழுத்து மற்றும் சீல் உடன் சமர்பிக்க வேண்டும். குறைந்தது மூன்றாண்டுகளில் 60% கோரிக்கைகளை நிறைவேற்றி இருந்தால் அவரை மாறுதலில் போட்டி இட அனுமதிக்கலாம். 20% கூட தாண்டாத நிலைமை இருந்தால் அவரை திரும்பபெறலாம். மிகமிக முக்கியமான ஒன்று என்னவெனில் மாதம் ஒருமுறை ஒவ்வொரு பகுதி கட்சி அலுவலகங்களில் சனி ஞாயிறு தாங்கள் சமர்பித்த கோரிக்கைகளின் நிலையை சரிப்பார்க்க வேண்டும், புதிய கோரிக்கைகளை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் (திட்டங்கள் முன்னேறும் அளவுகோல்களை ) கணினி / ஸ்மார்ட் போன் மூலம் மக்கள் மற்றும் ஊடகங்களுக்கு தெரிய படுத்த வேண்டும். ஒவ்வோவ்று திட்டத்திற்கு ஒரு "டிக்கெட்" (கணினி மொழியில் reference எண்) பதிய வேண்டும்.


ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

நன்றி : இந்திய தலைமை தேர்தல் கமிஷன்

No comments:

Post a Comment