தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளில் நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் 73.85 சதவீதஓட்டுகள் பதிவாகின. ஒரு வழியா ஓட்டு பதிவும் முடிஞ்சு போச்சு. கடந்த சட்ட மன்ற தேர்தலை விட இது 5 சதம் குறைவு என்பது எதையோ உணர்த்துகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. தமிழக தேர்தல் நடைபெற்றதோ வறுத்தெடுக்கும் கோடை வெயில். ஆனால் மக்கள் மகிழும் வண்ணம் வான்மழையும் பெய்து பெருக்கெடுத்து ஓடியது. ஆளுவோரின் பண மழையும் பெய்து பெருக்கெடுத்து ஓடியது.முகநூலிலும், ஊடகங்களிலும், சமூக வலை தளங்களிலும், பொரிந்து தள்ளும் இந்த இளைய சமூகம், அதுவும் தலைநகரில் வசிப்பவர்கள், ஏறக்குறைய 40% மக்கள் வரமால் இருந்தது, ஒரு அவ நம்பிக்கையை ஏற்படுத்துகிறது, கிராமங்களில் கூட ஏராளமான மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன் படுத்தியுள்ளார்கள், ஆனால் நகரவாசிகள் தங்கள் கடமையை நிறைவேற்ற தவறிவிட்டார்கள், எப்படி இவர்கள் அரசுக்கு ஆதரவோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கமுடியும், இது தானே சந்தர்ப்பம், இன்னும் மக்களிடம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். தமிழகத்தில் பதிவான ஓட்டுகள் 68 ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அம்மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1,800 துணை ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுவாக கிராம பகுதிகளில் ஓட்டுப்பதிவு அதிகமாகவும், நகரங்களில் குறைவாகவும் இருந்தது.ஓட்டுப்பதிவு முடிந்ததும்,'சீல்' வைக்கப்பட்ட அறைக்குள் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அறை முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இனி ஒரு ரெண்டு நாளைக்கு கைய கட்டிட்டு கொரங்கு பொம்மை மாறி உக்காந்து இருக்க வேண்டியதுதான். யாரு வருவாங்க, வந்தாலும் நல்லதெல்லாம் பண்ணுவாங்களா?
இந்த தேர்தலில் யார் ஜெயிக்கிறார்களோ இல்லையோ , தோல்வி அடைந்தவை இரண்டு....
1. தேர்தல் கமிஷன்...2 ஊடகங்கள்.....
1. இரண்டரை மாதங்களுக்கு முன்னரே தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு, இரண்டு மாதம் தேர்தல் ஆணையம் பண்ணிய கெடுபிடிகள் பொதுமக்களை தான் பாதித்ததே தவிர, அரசியல் கட்சிகளை துளியும் பாதிக்க வில்லை... ஒரு அரசியல் கட்சி, ஒரு தொகுதிக்கு 40 லட்சம் தான் செலவழிக்க வேண்டும் என்பது சட்டம்.. ஆனால் அரசியல் கட்சிகள் ஒரு நாளைக்கு 40 லட்சம் செலவழித்து இருப்பார்கள்,... இதில் அரசியல் தலைவர்களின் பயணம் செலவு தனி...
2. பண பட்டுவாடாவை தடுக்க இயலாமல் தேர்தல் ஆணையம் விழி பிதுங்கி நின்றது....
3. சாதி அரசியலை , மத அரசியலை மற்றும் அதனை சார்ந்து வாங்கப்பட்ட ஓட்டுக்களை கவரும் அரசியல் கட்சிகளை தடுக்க இயலாத கையாலாகாத தனத்தில் தேர்தல் ஆணையம் இருந்தது....
4. ஊடகங்கள், கருத்து கணிப்பு என்ற பெயரில் , கருத்து திணிப்புக்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தலுக்கு இரண்டு நாள் முன்னர்வரை , திணித்து கொண்டிருந்ததை கை கட்டி வேடிக்கை பார்த்தது....
5. ஊடகங்களை பொருத்தவரை, சேனல்கள் TRP யை மட்டுமே குறிவைத்து, கத்திகொண்டிருந்தன....
6. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ஊடகம், அவர்கள் சொல்வது தான் செய்தி, என்று மக்களை மழுங்கடித்து கொண்டு இருந்தார்கள்....
7. தாது மணல் கொள்ளைகாரர்கள் எல்லாம் சேனல் நடத்துகிறார்கள்... கல்வியை வியாபாரமாக்கிய கல்வி தந்தைகள் எல்லாம் சேனல் நடத்துகிறார்கள்... இவர்கள் மட்டுமில்லாமல் கட்சி காரர்கள் நடத்தும் சேனல்களும் சொல்வதை தான் செய்திகள் என்ற பெயரில் நாம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்...
8. ஊடகங்களில் விவாதங்கள், TRP எகிற தான் உபயோகபட்டதே தவிர, மக்களின் அறிவை வளர்க்க, விழிப்புணர்வை ஏற்படுத்த துளியும் உபயோகப்படவில்லை...
9. கருத்து கணிப்புகளை மக்களிடையே இவர்கள் திணித்ததை மறக்கவே இயலாது.... மக்களின் மனநிலையை தாறுமாறா திசைமாற்றியத்தில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது....
10. ஏறத்தாழ மக்கள் இந்த 5 மாத காலத்தில், தேர்தல் திருவிழா என்ற அரசியல் கட்சிகளின் பணம் சம்பாதிக்கும் தொழில்களுக்கு , தங்களையும் அறியாமல் அதில் இணைத்துக்கொண்டு, நமது பொன்னான நேரங்களை வீணடித்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. [ இந்த தேர்தலில் காமராசர், கக்கன், கலாம் அய்யா, சகாயம் போன்ற நல்லவர்கள் போட்டியிட்டு இருந்தால்கூட டெப்பாசிட் கூட வாங்கியிருக்க மாட்டார்கள்.
6 கட்சிகள் சேர்ந்த , ஓரளவுக்கு செலவும் செய்த, 3 வது அணியையே களத்திலேயே இல்லாதது போல ஊடகங்கள் சித்தரித்தன.. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நேர்மையையே மட்டுமே மூலதனமாக வைத்திருந்த, கலாம், காமராசர், கக்கன் மற்றும் சகாயம் ஆகியோர் எம்மாத்திரம்?மக்களுக்கு நல்லது செஞ்சா எதுக்கு பயப்படனும் ? தேவை மாற்றம் முன்னேற்றம்
இல்ல பழைய காலம் மாறியே நம்ப வெச்சு ஏமாத்தி ஓட்டை வாங்கிட்டு, கும்மாங்குத்து குத்துவாங்களா? ஒண்ணுமே புரியலையே. அரசியல்வாதிங்க கொஞ்சம் ஒத்துளைச்சாங்கன்னா போதும், நாம் எங்கியோ போய்டலாம். ஆனா ஒத்து வர மாட்டுறாங்களே.தமிழகத்தின் எதிர்க்காலம் எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம். எப்போ பாத்தாலும் நம்ப வெச்சு கழுத்தரிக்கிறது. இதுதானே இவங்க பொலப்பா இருக்கு. ம்ம்ம் சரி பார்ப்போம், என்னதான் நடக்குதுன்னு!!
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment