Friday 24 August 2007

இஸ்லாமியத் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் மஹர் !!

அஸ்ஸலாமு அலைக்கும்!!
பெண்களே இது எங்களுக்குத்தான்
சீதனம் என்று வரும் போது ஆண்களைத் திட்டுகின்றோம். முதுகெலும்பு இல்லாதவன்,உழைக்கத் தெரியாதவன்,ஹராம
ான வழியில் சொத்துச் சேர்ப்பவன்.....இப்படி எல்லாம் சொல்லி வசை பாடுகின்றோம்.கு
ர்ஆன் ,ஹதீஸ் எல்லாம் பேசி ஆண்களுக்கு உபதேசம் செய்கின்றோம்.ஆனால்,
எந்தப் பெண்ணாவது நான் சீதனம் கொடுத்து திருமணம் செய்யா மாட்டேன் என்று உறுதியாக இருக்கின்றாளா? தேடிப் பார்த்தால் ஆயிரத்தில் ஒருத்தி இருப்பாள்.பலர் சீதனத்துக்கு எதிராக கோசம் விட்டு விட்டு கடைசியில் இரகசியமாக அதற்குத் துணை போகின்றனர்.தந்தை,சகோதரர்கள் எப்படியாவது சொத்துக்களை சேர்த்து தரட்டும் என்று மௌனமாக இருந்து விடுகின்றனர்.இன்னும் சொல்லப் போனால் அரபிக் கல்லூரிகளில் ஷரீஆ துறையில் படித்த பெண்களும் இதற்கு எதிப்புத் தெரிவிப்பதில்லை.இந்தக் காலத்தில் சீதனம் கொடுக்காவிட்டால் நல்ல ஒரு வரன் கிடைக்காது என்ற சிந்தனை பரவலாக இருக்கின்றது.எங்கோ ஒரு நாட்டில் ஹிஜாபுக்காக ஒரு பெண் உயிரிழக்கிறாள்,இன்னோரிடத்தில் காபிர்களுக் கெதிராகப் போராடி இன்னொரு பெண் உயிரிழக்கிறாள்,அதானின் அழைப்புக்குப் பதில் கொடுத்து மணக்கோலம் களைந்து தொழுகைக்கு சென்ற பெண் சுஜூதில் மரணிக்கிறாள்,இதையெல்லாம் நாம் பெருமையாகப் பேசிக் கொண்டாடுகின்றோம


இந்த சீதன விடயத்தில் ஏன் ஒரு உறுதியை எடுக்க முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம்??????


பெரிய அந்தஸ்தில் இல்லாத ஒருவன்,ஹலாலாக சம்பாரித்து இரண்டு நேரமாவது உணவு போடத் தகுதியான ஒருவன் ,சீதனம் வாங்குபவனை விட சிறந்தவன் என ஏன் பெண்கள் ஏற்றுக் கொள்வதில்லை???


இந்த விடயத்தில் உறுதியாக இருந்து, எதுக்குமே பிரயோசனம் இல்லாதவன் என்று இருந்த ஆண்களை சீதனம் இல்லாமல் திருமணமுடித்த ஈமானிய உறுதி கொண்ட சில பெண்களின் இல்லற வாழ்வை அல்லாஹ் எப்படி சிறப்பாக்கி வைத்திகுகின்றான் என்பதையும் இப்போது காண்கின்றோம்.


எதிர்காலத்துக்குரிய ரிஸ்க் அளக்கப்பட்டு இருக்கின்றது.அது எப்படியும் எம்மை வந்து சேர்ந்து தான் ஆகும்.அதனை ஹலாலகவோ ஹராமாகவோ அமைத்துக் கொள்வது அவரவர் கைகளில் தான் உள்ளது.


எனவே ஆண்களை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல் நாமும் குற்றவாளிகள் தான் என்பதை விளங்கி ,இந்த விடயத்தில் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் உறுதி எடுப்போம் .இறையுதவி என்றும் சமீபமாக இருக்கும் ..இன்ஷா அல்லாஹ்


இஸ்லாமியத் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் மஹர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும். ஆனால், தான் கொடுப்பதற்குப் பதிலாக, தனக்காக எல்லாத் தியாகங்களையும் செய்ய முன் வந்து வாழ்க்கைத் துணைவியாக வரப்போகும் மனைவியிட மிருந்தே வரதட்சணையாக ஒரு பெரும் தொகையையோ, பொருளையோ வாங்குவது தன்மானமில்லா கேவலமான ஒரு விசயமாகும். இந்த அவல நிலையை இன்று நாம் நாட்டில் பரவலாகக் காணும்போது சமுதாயமே வெட்கித் தலைக்குனிய வேண்டியதிருக்கிறது.

நாளிதழ், வார, மாத இதழ்களிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் வரதட்சணையின் விளைவுகளைப் பற்றி அன்றாடம் செய்திகள் இடம் பெறாமலில்லை.வரதட்சணைக்கு எதிராக பலர் குரல் கொடுத்தாலும் வரதட்சணை ஒழிந்த பாடில்லை. இஸ்லாம் வரதட்சணையை வன்மையாகக் கண்டிக்கிறது. அதை வாங்குவோரும். கொடுப்போரும் கடும் தண்டனைக்கு ஆளாகின்றனர் என்பதை குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது.

வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37) தனக்கும் பிற குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள் என கூறுகிறது. அல்குர்ஆன் (42:45) பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு இம்சைப்படுத்தும் மணமகன் வீட்டார் மறுமையில இழிநிலையை எய்துவர் என மேற்கூறிய மறைவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. மறுமையில் மட்டுமல்ல, இம்மையிலும், பாதிக்கப்பட்டோரின் மன வேதனையாலும், பிரார்த்தனையாலும் பல்வேறு சோதனைகளை அடைவர்.

உன்னால்) அநீதம் செய்யப்பட்டவனின் (ஏக்கப்பெரு மூச்சால் எழும்) பிரார்த்தனையை பயந்துகொள். இறைவனுக்கும் அவனது பிரார்த்தனைக்குமிடையே திரையேதும் இல்லை என்பது நபிமொழி. மஹர் கொடுத்து மணம் முடியுங்கள் என்ற 4:4 ஆவது இறைக் கட்டளையை மீறிய பாவத்திற்கும் இவர்கள் ஆளாவர். மணமகன் வீட்டார் வரதட்சணையாக கேட்பது அறவே கூடாது ஆயினும் பெண் வீட்டார் மனமுவந்து வழங்கும் அன்பளிப்புகளைப் பெறுவதில் தவறில்லை.

எனவே இலட்சங்களுக்காக பேரம் பேசாமல் இலட்சிய வாழ்வுக்காக போராட வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் மஹர் கொடுத்து தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ வேண்டும். வல்ல ரஹ்மான் அதற்குத் துணை புரிவானாக. ஆமீன்.


ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment