வாழ்ந்த காலம்: கி.பி 980- கி.பி1037
இறைவனின் வழிகாட்டுதல்களை பேணி நடந்தவர்கள் வாழ்வின் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதற்க்கு வரலாறு ஒரு சாட்சி.
இவ்வழியில் நடந்து மருத்துவ துறையில் மகத்தான இடம் பிடித்தவர் நம் முன்னோர்களில் ஒருவரான இப்னு ஸினா அவர்கள்.
இளவயதிலேயே இறைமறையை கற்று தேர்ந்த இவர் தன்னுடைய 17 வது வயதியதில் மருத்துவ துறையில் அதிக கவனம் செலுத்து 4 வருடத்திற்க்குள் மருத்துவ நூலை எழுதும் அளவிற்க்கு தேர்ச்சி பெற்றார்.
இப்னுஸினா பல்துறை அறிவு சார்ந்த ஒரு மருத்துவர் ஆவார். இவர் வேதியியல் , தொல்லியல், இயற்பியல், உளவியல் , நிலவியல்,அறிவியல், கவிதை போன்ற துறைகளில் வல்லுனராக திகழ்ந்தார்.


இன்னும் மருத்துவ துறைகளில் பல அறிய சாதனைகளை நிகழ்த்தியும், முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
இப்னு ஸினா வின் இவ்வள பெரிய சாதனைகளிலால் தான் அவர் மருத்துவர்களின் மருத்துவர் (DOCTOR of DOCTOR)என்று போற்றபடுகிறார்.
மருத்துவ உலகில் அளவுகடந்த பல சாதனைகளை நிகழ்த்திகாட்டியும், முன்னோடியாகவும் இருந்து காட்டியவர் இப்னு ஸினா என்ற முஸ்லிம் நபர் என்பது நம்மில் எத்தனை நபருக்கு தெரியும்...????
No comments:
Post a Comment