Friday, 18 September 2009

இந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) பங்கு!!

வெளிநாடு  வாழ் இந்தியர்கள் என்றால் இந்தியாவிற்க வெளியில் வாழும் இந்திய குடிமக்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர்.


இது சென்ற வருடம் (2008) NRI  என்றால்  மக்கள் இந்தியாவிற்கு அனுப்பிய பணம் (Remittance by NRIs to India).

உலக வங்கியின் அறிக்கையின் படி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 2008ல் இந்தியாவிற்கு அனுப்பியது $ 52 பில்லியன். உலகிலேயே இதில் இந்தியாவிற்கு
முதலிடம்
, இரண்டாம் இடத்தில் சைனா (40.6 Billion $)மற்றும் மூன்றாம் இடத்தில் மெக்ஸிகோ (சலவைக்காரி ஜோக் என்னான்னு யாராவது 
சொல்லுங்களேன்)- 26.3 billion $.

Recession hit வருடத்திலும் NRI மக்கள் அனுப்பிய பணம் இந்தியப் பொருளாதாரத்துக்கு கண்டிப்பாக உதவியிருக்கும். பணத்தை அரசாங்கத்துக்கு யாரும் 
தரவில்லை அவரவர் வீட்டுக்குத்தான் அனுப்பினர், ஆனால் அந்தப் பணம் சந்தையில் செலவிடப்படும் போது சந்தையின் முன்னேற்றத்துக்கும், வங்கிகளில் 
சேமிக்கப்படும் போது வங்கிகளின் முன்னேற்றத்துக்கும் உதவியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

அது மட்டுமில்லை, இந்தியாவின் Ever Increasing need for oil க்கு தேவைப்படும் அந்நிய செலாவணியை (Foreign exchange) தருவதில்
NRI களின் பங்கு மகத்தானது. NRI களின் அலப்பறை பற்றி போஸ்ட் போடும் மக்கள் ஏன் இதைப்பத்தி எழுதுவதில்லை?? 

ஐயா சாமிகளா, இனிமேலாவது, NRI கள் தண்ணி பாட்டில் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள்ன்னு சொல்லாதீங்க. தெரியாமத்தான் கேக்கறேன் - இந்தியாவில்
வாழும் இந்தியர்கள் யாரும் தண்ணி பாட்டில் வாங்குவதே இல்லயா? Aqua fina கம்பெனியெல்லாம் NRIகளை நம்பித்தான் இருக்குதா? NRI களைப் பழிக்கும்
எல்லோர் வீட்டிலும் கார்பொரேஷன் தண்ணிதான் குடிக்கறாங்களா?? அடுத்தவனை குத்தம் சொல்லும் முன் அவனிடம் உள்ள நல்ல குணங்களையும், தம்மிடம்
உள்ள குறைகளையும் பாருங்கள்.


தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.


தகவல் உதவி : Little India Magazine Sep 2009 & http://blogs.worldbank.org/peoplemove/india-is-the-top-recipient-of-remittances

No comments:

Post a Comment