Wednesday, 30 September 2009

IPC Sec 498A வரதட்சணைக் கொடுமைச் சட்டம்.....

IPC Sec 498A வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தின் தவறான பயன்பாட்டின் பயங்கரத்தை மக்களுக்கு அறிவுறுத்தும் நோக்கில் சில தன்னார்வ நிறுவனங்கள் சேர்ந்து ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டணத்தில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். இதில் இந்திய குடும்பமுறை பாதுகாப்புக் குழுமம் (Save Indian Family Foundation), பாரதத்தைக் காப்போம் இயக்கம் (பாரத் பசாவோ சங்கடன்) போன்றவை பங்கெடுத்துக்கொண்டன.

அச்சமயம் நடந்த பத்திரிக்கையாளர் நேர்காணலில் தெரிவிக்கப்பட்ட உண்மைகள்:

1. இந்த 498A சட்ட செயலாக்கத்தை இந்திய உச்ச நீதிமன்றம் "சட்டபூர்வமான பயங்கரவாதம்" (Legal terrorism) என்று வர்ணித்துள்ளது.

2. இந்தச் சட்டத்தின்படி ஒரு பெண் வேறெந்தத் தகவலும் அளிக்காமல் தன்னை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினர் என்று மட்டும் கூறினால் போதும், அவளுடைய புகாரில் குறிப்பிடப்பட்ட அனைவரையும் (அது 100 வயது ஆன கிழவர்களாக இருந்தாலும் சரி, 3 மாதக் குழந்தையாக இருந்தாலும் சரி) அவர்களை உடனே எந்தவித முன்னறிவிப்போ, வாரண்டோ இல்லாமல், ஜாமீன் அளிக்காமல் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஏனென்றால் வேறெந்தச் சட்டதிலுமில்லாமல் இந்தச் சட்டத்தில் மட்டும் உள்ள பயங்கரம் இது. The IPC Sec 498A is cognizable, non-bailable and non-compoundable. இதைவிட கொடுங்கோன்மையான சட்டம் இந்தியாவில் கிடையாது.

3. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்ப்டும் புகார்களில் பெரும்பகுதி பொய்யானவை; தவறான நோக்கம் கொண்டவை என்பதை நிரூபிக்கும் வகையில் சில தரவுகள் கொடுக்கப்பட்டன. 2006-ம் ஆண்டில் மட்டும் 63,128 வழக்குகள் இந்த 498A சட்டத்தில் பதியப்பட்டன. ஆனால் அதில் 2% கேசுகளில் மட்டுமே குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன. மற்ற 98% கேசுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

4. ஆனால் இதுபோன்ற பொய்யான புகார்களை எழுதி கேசு போடும் பெண்களைத் தண்டிக்க வழியேதும் இல்லை.

5. இன்னொரு கொடுமை என்னவென்றால் இதுபோன்ற புகார்களின் தொடக்க வரிகளே, தான் இவ்வளவு வரதட்சணை கொடுத்தேன் என்றுதான் இருக்கும். சட்டப்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம்தான். ஆனால் அவர்களுக்கு எந்தவித தண்டனையும் இந்த சட்டத்தின்பேரில் கொடுக்கப்படுவதில்லை.

6. இந்த சட்ட துஷ்பிரயோகம் நகரங்களில் வாழும், நன்கு படித்து நல்ல வேலையிலிருக்கும் பெண்களால்தான் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது (mostly software engineers and NRIs).

7. தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau) தரும் குறிப்புகளின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 55,000 மணமான ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் 28,000 மணமான பெண்கள்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் மக்கள் மனத்தில் பெண்கள்தான் பெரும்பாலும் கொடுமைப் படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

8. இந்த 498A சட்டத்தின் தவறான பயன்பாட்டினால் எந்தவித விசாரணையுமின்றி இதுவரை 1,15,000 பெண்கள் கைது செய்யப்பட்டு சிரையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிறு குழந்தைகளிலிருந்து மிகவும் வயதானவர்களும் அடங்குவர்.

9. இந்த 498A சட்டத்தின்படி ஒருவர் அவருக்கு எதிராக ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே குற்றவாளியாக முடிவெடுக்கப்பட்டு கைது, சிறை போன்ற கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார். கேசு நடத்தி அதிலிருந்து விடுபடுவதற்குள் எல்லாவித சிறுமைகளுக்கும், பணச் செலவுக்கும் ஆளாகி முழுத் தண்டனையும் அனுபவித்துவிடுகிறார். இது எந்த ஒரு நாகரிகமான நாட்டிலும் நடக்கக்கூடாத கேவலமான நிலை.

10. இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்த அனைத்து தன்னார்வ குழுமங்களும், இந்தச் சட்டம் கணவனிடமிருந்து பணம் கறக்க நினைக்கும் கெடுமதியினருக்குத் துணை போகின்றதேயன்றி அடிப்படையில் பெண்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை என்று ஒருமனதாக முடிவெடுத்தார்கள்.

11. இந்தக் குழுக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்னைகளை மக்களுக்கும் ஆட்சியினருக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்தில் வரும் 19-11-2008 அன்று கோவாவில் ஒரு மாபெரும் தர்ணா மற்றும் ஊர்வலத்தை நிகழ்த்த இருக்கிறார்கள்.

12. முக்கிய கோரிக்கைகள்:

i) இந்த 498A சட்டப்பிரிவு Bailable, compoundable and Non-cognizable ஆக மாற்றப்படவேண்டும்

ii) இதுபோன்ற பெண்கள் தரப்புக்கு ஒருதலைச் சார்புள்ள அனைத்துச் சட்டங்களும் ஆண், பெண் இருபாலருக்கும் சமமாகப் பொருந்துமபடி மாற்றியமைக்கப்படவேண்டும் (They should be made gender-neutral)
 

No comments:

Post a Comment