Wednesday, 3 March 2010

ஆயகலைகள்அறுபத்து நான்கு பற்றிய அறிய தவகல்...

இன்று விஞ்ஞானம் எத்தனையோ புதிய புதிய விஷயங்களை தந்து கொண்டிருக் கிறது. அத்தனையும் ஆச்சரியப்ப டுத்தும் விஷயங்களாக இருக்கின்றன.

ஆனால் அந்தக் காலத்தில் ஆயகலைகள் அறுபத்து நான்கும் தெரிந்திரு ந்தால் அத்தனையும் அறிந்த அறிவாளி என்று அர்த்தம் என்று இந்து மத புராணங்கள் சொல்கின்றன.

அந்த ஆயகலைகள் அறுபத்து நான்கு எது என்று உங்களுக்கு த் தெரியுமா?

அறுபத்து நான்கு கலைகள் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்தளித்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of Tamil Language) Vol.1-Part-1, 545-548ஆம் பக்கங்களில் கண்டபடி பட்டியல் இடப்பட்டுள்ளது.


நான்கு வேதம், ஆறு சாத்திரம், பதினெண்புராணம், அறுபத்துநான்கு கலைகள், இவை ஆரியவழி வந்த இலக்கிய மரபெனினும், 'அறுபத்து நான்கு கலை' என்ற பெயர் தமிழாதலாலும், அறுபத்து நான்காக சொல்லப்பட்ட கலைகள் அத்தனையும் தமிழருக்கும் உரித்தானதாலும், தமிழ்க் கலைகள் ஆரிய கலைகட்குக் காலத்தால் முந்தியவையென்பதாலும், அறுபத்து நான்கு கலைப் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் எங்கிருப்பினும் எடுத்துக் கொள்வதே இன்றைய நிலைப்பாடு.

கீழே தரப்பட்ட முதற் பட்டியல் ஆரிய இலக்கிய மரபை வழுவியது. வடமொழிச் சொற்களத்தனையும், மொழியாக்கஞ் செய்யப்பட்டு, அருகிலேயே தரப்பட்டுள்ளன. பொதுவான சொற்கள் அல்லது ஏற்கனவே தமிழில் புழக்கத்தில் இருக்கும் சொற்கள் தனியாகத் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பட்டியல் காலத்தால் பிற்பட்டதாகையால், தமிழ்மொழிச் சொற்களால் அடங்கப் பெற்றது. கடைசியாக சொல்லப்பட்ட அறுபத்து நான்கு கலையின் ஆங்கில மொழி பெயர்ப்பு, வாத்ஸ்யாயனரின் காமசூத்திராவை ஆங்கில மொழியாக்கஞ் செய்த டாக்டர் சந்தோஷ்க் குமார் முகர்ஜி தொகுத்த அறுபானாற் கலையின் ஆங்கிலப் பட்டியலாகும்.

அறுபத்து நான்கு கலைகள்.. 

எண் தமிழ் விளக்கம் வடசொல்...
1. எழுத்திலக்கணம் அக்கரவிலக்கணம்
2. எழுத்தாற்றல் லிகிதம்
3. கணிதவியல் கணித சாத்திரம்
4. மறை நூல் வேத சாத்திரம்
5. தொன்மம் புராணம்
6. இலக்கணவியல் வியாகரணம்
7. நய நூல் நீதி சாத்திரம்
8. கணியக் கலை சோதிட சாத்திரம்
9. அறத்துப் பால் தரும சாத்திரம்
10. ஓகக் கலை யோக சாத்திரம்
11. மந்திரக் கலை மந்திர சாத்திரம்
12. நிமித்தகக் கலை சகுன சாத்திரம்
13. கம்மியக் கலை சிற்ப சாத்திரம்
14. மருத்துவக் கலை வைத்திய சாத்திரம்
15. உறுப்பமைவு உருவ சாத்திரம்
16. மறவனப்பு இதிகாசம்
17. வனப்பு காவ்யம்
18. அணி இயல் அலங்காரம்
19. இனிதுமொழிதல் மதுரபாஷணம்
20. நாடகக் கலை நாடக சாத்திரம்
21. ஆடற் கலை நிருத்திய சாத்திரம்
22. ஒலிநுட்ப அறிவு சப்த ப்ரம்மம்
23. யாழ் இயல் வீணையிலக்கணம்
24. குழலிசை வேணு கானம்
25. மத்தள நூல் மிருதங்க சாத்திரம்
26. தாள இயல் தாள சாத்திரம்
27. வில்லாற்றல் அஸ்திர ப்ரயோகம்
28. பொன் நோட்டம் கனகப் பரிட்சை
29. தேர்ப் பயிற்சி இரதப் பயிற்சி
30. யானையேற்றம் கஜப் பரிட்சை
31. குதிரையேற்றம் அசுவப் பரிட்சை
32. மணி நோட்டம் இரத்தினப் பரிட்சை
33. மண்ணியல் பூமிப் பரிட்சை
34. போர்ப் பயிற்சி சங்கிராமவிலக்கணம்
35. கைகலப்பு மல்யுத்தம்
36. கவர்ச்சியியல் ஆகரூடணம்
37. ஓட்டுகை உச்சாடணம்
38. நட்பு பிரிக்கை வித்வேடணம்
39. மயக்குக் கலை மோகன சாத்திரம்
40. புணருங் கலை காம சாத்திரம்
41. வசியக் கலை வசீகரணம்
42. இதளியக் கலை இரசவாதம்
43. இன்னிசைப் பயிற்சி காந்தருவ வாதம்
44. பிறவுயிர்மொழி பைபீல வாதம்
45. மகிழுறுத்தம் கவுத்துக வாதம்
46. நாடிப் பயிற்சி தாதுவாதம்
47. கலுழம் காருடம்
48. இழப்பறிகை நஷ்டம்
49. மறைத்ததையறிதல் முஷ்டி
50. வான்புகுதல் ஆகாய ப்ரவேசம்
51. வான் செல்கை ஆகாய கமனம்
52. கூடுவிட்டு கூடுபாய்தல் பரகாய ப்ரவேசம்
53. தன்னுறு கரத்தல் அதிருசியம்
54. மாயம் இந்திரஜாலம்
55. பெருமாயம் மகேந்திரஜாலம்
56. நீர்க் கட்டு ஜல ஸ்தம்பனம்
57. அழற் கட்டு அக்னி ஸ்தம்பனம்
58. வளிக் கட்டு வாயு ஸ்தம்பனம்
59. கண் கட்டு த்ருஷ்டி ஸ்தம்பனம்
60. நாவுக் கட்டு வாக்கு ஸ்தம்பனம்
61. விந்துக் கட்டு சுக்ல ஸ்தம்பனம்
62. புதையற் கட்டு கனன ஸ்தம்பனம்
63. வாட் கட்டு கட்க ஸ்தம்பனம்
64. சூனியம் அவஸ்தை ப்ரயோகம்

ஆயகலைகள்அறுபத்து நான்கு 

1. அக்கரவிலக் கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. ஜோதிடம்
9. தர்ம சாஸ்திரம்
10. யோக சாஸ்திரம்
11. மந்திர சாஸ்திரம்
12. சகுன சாஸ்திரம்
13. சிற்ப சாஸ்திரம்
14. வைத்திய சாஸ்திரம்
15. உருவ சாஸ்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுர பாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரு ம்மம்
23. வீணை
24. வேணு (புல்லாங்க� �ழல்)
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம்
27. அத்திரப் பரிட்சை
28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்)
29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்)
30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை
33. பூமிப் பரிட்சை
34. சங்கிராம விலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகருடனம்
37. உச்சாடனம்
38. வித்து வேடனம் (ஏவல்)
39. மதன சாஸ்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. இரசவாதம்
43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை)
44. பைபீலவாதம் (மிருக பாஷை)
45. கவுத்துவ வாதம்
46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
47. காருடம்
48. நட்டம் (காணாமற்போ பொருளைக் கண்டுபிடித ்தல் அல்லது நாட்டியம் பழகுவித்தல ்)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக் கும் பொருளைச் சொல்லுதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது)
53. அதிரிசியம்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச சுடாமல் கட்டல்)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள மூழ்கி வெகு நேரமிருத்த ல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத தல்)
58. வாயுஸ்தம்ப ம்
59. திட்டி ஸ்தம்பம்
60. வாக்கு ஸ்தம்பம்
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடககல்)
62. கன்னத்தம்ப ம்
63. கட்கத்தம்ப ம்
64. அவத்தைப் பிரயோகம்

அறுபத்து நான்கு கலைகள் - வேறொரு பட்டியல்

எண் தமிழ்க் கலை வடசொல் English Word
1. பாடல் கீதம் Song
2. இன்னியம் வாத்யம் Music Instruments
3. நடம் நிருத்யம் Dance
4. ஓவியம் சித்ரம் Drawing Instruments
5. இலைப் பொட்டுக் கத்தரிக்கை பத்ர திலகம் Art of leaf-cutting design
6. அரிசிப் பூக்கோலம் --- Art of rice-powder drawing
7. பூமளியமைக்கை -- ---
8. ஆடையுடைப் பற்களுக்கு வண்ணமமைக்கை --- Art of coloring for cloths
9. பள்ளியறை/குடிப்பறையில் மணிபதிக்கை -- Art of embedding gems in bedrooms
10. படுக்கையமைக்கை மஞ்சம் Art of bed-making
11. நீர்க்கிண்ண இசை ஜலதரங்கம் Art of making music with water-filled cups
12. நீர்வாரியடிக்கை --- Art of water-spraying
13. உள்வரி வேடங்கொள்கை Art of Camouflage
14. மாலை தொடுக்கை --- Art of making garlands
15. மாலையணிகை --- Art of wearing Garlands
16. ஆடையணி சுவடிக்கை --- Art of make-up with clothes
17. சங்கினால் காதணி -- Art of making earrings with shells
18. விரை கூட்டுகை --- ---
19. அணிகலன் புனைகை --- Art of self make-up
20. மாயஞ் செய்தல் இந்திர ஜாலம் Art of magic
21. குசுமாரரின் காமநூல்நெறி கௌசுமாரம் Kousumar's art of Kama sutra
22. கைவிரைவு ஹஸ்த லாவகம் Speedy hands
23. மடைநூல் பாக சாத்திரம் Art of cooking
24. தையல் வேலை --- Art of Stitching.
25. நூலால் வேடிக்கை -- Art of magic with strands
26. வீணையுடுக்கைப் பயிற்சி வீணை டமருகப் பயிற்சி Art of handling Veena Instrument
27. விடுகதை ப்ரேளிகை Art of Riddling
28. ஈற்றெழுத்துப் பாப்பாடுகை அந்தாக்ஷரி Art of Play Singing(last words)
29. நெட்டுரு சொற்றொடர் --- Art of playing with words
30. சுவைதோன்ற பண்ணுடன் வாசிக்கை --- Reading with the music rhythm
31. நாடக உரைநடை வசனம் Prose
32. குறித்தபடி பாடுகை ஸமஸ்யா பூரணம் To sing from the word given
33. பிரம்பால் பின்னுதல் --- Art of Caning chair objects
34. கதிரில் நூல் சுற்றுகை --- Art of hand-spinning
35. மரவேலை --- Carpentry
36. மனை நூல் வாஸ்து சாத்திரம் Art of house construction
37. காசு, மணி நோட்டம் கனக,ரத்ன பரிட்சை Gemology
38. நாடிப் பயிற்சி தாது வாதம் Human Pulse reading
39. மணிக்கு நிறங்கூட்டுகை -மணியிடமறிதல் --- Gemology/geology
40. தோட்டக் கலை --- Horticulture
41. தகர்ப்போர்/சேவற்போர் - விலங்கின விளையாட்டு --- Cock/Bull fights
42. கிளிப் பேச்சு பயிற்றுவிக்கை --- Art of teaching parrots
43. உடம்பு பிடிக்கை/எண்ணை தேய்க்கை --- Art of ordinary/oil massage
44. குழூவுக்குறி சங்கேதாக்ஷரங்களமத்து பேசுகை Cryptography
45. மருமமொழி ரஹஸ்ய பாஷை Code wording
46. நாட்டுமொழியறிவு தெசபாஷையுணர்வு Linguistics
47. பூத்தேர் அமைக்கை புஷ்பரதம் Decorating Chariat with flowers
48. முற்குறியமைக்கை நிமித்தம் Observing Superstitions
49. பொறியமைக்கை --- Making of traps
50. ஒருகாலிற் கொள்கை ஏகசந்தக்ராகித்வம் With one leg
51. இருகாலிற் கொள்கை துவிசந்தக்ராகித்வம் With two legs
52. பிதிர்ப்பா விடுக்கை --- Singing about forefathers
53. வனப்பியற்றல் காவ்யம் Writing Story songs
54. உரிச்சொல்லறிவு நிகண்டுணர்ச்சி Idioms and Phrases
55. யாப்பறிவு --- Writing poems
56. அணியறிவு அலங்காரம் Sense of dressing
57. மாயக்கலை ஜாலவித்தை Art of Magic
58. ஆடையணி திறன் உடுத்தற் சாமர்த்யம் Sense of dresses
59. சூதாட்டம் --- Gambling
60. சொக்கட்டான் கவறாட்டம் முதலியவை Gambling with dice
61. பாவை, பந்து வைத்தாடுதல் --- Playing with dolls / balls
62. யானை/குதிரையேற்றம் கஜ/துரக வாகனாதிகள் Art of riding horse/elephant
63. படைக்கலப் பயிற்சி --- Armed Combat
64. உடற் பயிற்சி தேகச் சதுர் Physical Exercise

Sixty four Arts - From the translations of Dr. Santhosh Kumar Mukherji


SL.NO. English Translations
A. TOILET
1. Make-up, toilet and use of beautifying agents
2. Painting the body, and colouring the nails, hair, etc.
3. Decoration of the forehead.

B. DRESSING
4. Art of hair dressing.
5. Art of dressing.
6. Proper matching of decorations and jewelry.

C. MUSIC AND DANCING
7. Singing.
8. Playing on musical instruments.
9. Playing on musical glasses filled with water.
10. Acting.
11. Dancing.

D. GENERAL EDUCATION
12. Good manners and etiquette
13. Knowledge of different languages and dialects.
14. Knowledge of vocabularies.
15. Knowledge of Rhetoric or Figures of Speech.
16. Reading.
17. Reciting poems.
18. Criticism of poems.
19. Criticism of dramas and analysis of stories.
20. Filling up the missing line of a poem.
21. Composing poems to order.
22. Reply in verse (when one person recites a poem, another gives the reply in verse).
23. The art of speaking by changing the forms of words.
24. Art of knowing the character of a man from his features.
25. Art of attracting others (bewitching).

E. DOMESTIC SCIENCE.
26. Art of cooking.
27. Preparation of different beverages, sweet and acid drinks, chutneys, etc.
28. Sewing and needle work.
29. Making of different beds for different purposes and for different seasons.

F. PHYSICAL CULTURE.
30. Physical culture.
31. Skill in youthful sports.
32. Swimming and water-sports. Games.
33. Games of dice, chess, etc.
34. Games of chance.
35. Puzzles and their solution.
36. Arithmetical games.

G. ART OF ENTERTAINING.
37. Magic: art of creating illusions.
38. Trick of hand.
39. Mimicry or imitation (of voice or sounds).
40. Art of disguise.

H. FINE ARTS.
41. Painting in colours.
42. Stringing flowers into garlands and other ornaments for decorating the body, such as crowns, clapnets, etc.
43. Floral decorations of carriages.
44. Making of artificial flowers.
45. Preparation of ear-rings of shell, ivory, etc.
46. Making birds, flowers, etc., of thread or yarn.
47. Clay-modelling: making figures and images.
48. The art of changing the appearance of things such as making to appear as silk.

I. PET ANIMALS.
49. Training parrots and other birds to talk.
50. Training rams and cocks and other birds for mock fight.

J. PROFESSIONAL TRAINING.
51. Gardening and agriculture.
52. Preparation of perfumery.
53. Making furniture from canes and reeds.
54. Wood-engraving.
55. Carpentry.
56. Knowledge of machinery.
57. Construction of building (Architecture).
58. Floor decoration with coloured stones.
59. Knowledge of metals.
60. Knowledge of gems and jewels.
61. Colouring precious stones.
62. Art of war.
63. Knowledge of code words.
64. Signals for conveying messages

 Source From Internet
Collection by : M.Ajmal Khan.

No comments:

Post a Comment