
விமான விபத்திற்கு 99% காரணம் எதுவென்று பார்த்தால், அது நடுவானில் ஏற்படும் இஞ்சின் கோளாறுதான்.
விமானத்தைப்பொருத்தவரை இஞ்சிந்தான் எல்லாமே, அதுதான் மேலுழும்பும் விசையையும், முன்னோக்கு விசையையும் தருகிறது. அது பழுதாவதுதான் மிகவும் சிக்கலான ஒன்று. எந்த ஒரு சிறு விமானத்திலும் இரண்டு இஞ்சின்ங்கள் இருக்கும். நாடு விட்டு நாடுபோகும் பெரிய விமானங்களில் நாலு இஞ்சின்ங்கள் இருக்கும்
எதற்கு இரண்டு, நாலு இஞ்சிஙள் என்று கேட்டால் இவை மனிதனுக்கு எப்படி கிட்னி அவசியத்தை உணர்ந்து இயற்கை இரண்டு கொடுத்துருக்கோ அதேபோல் விமானத்திற்கு இஞ்சினின் அவசியத்தை உணர்ந்து ஒன்றுக்கு மேற்பட்டவை உள்ளது.
ஒரு சிறிய விமானத்தில் ஒரு இஞ்சின் பழுதடைந்தாலும் இன்னொரு இஞ்சின் இயங்கினால், அதை வைத்து அடுத்த ஏர்போர்ட்டில் பத்திரமாக தரையிறங்கிவிட முடியும். ஆனால் சீக்கிரம் இறங்க வேண்டும். காரனம், இப்போது இரண்டு இஞ்சிஙளின் வேலையை ஒரு இஞ்சின் செய்வதால் அத்ற்கு ஓவர் லோடு இருக்கும். அதனால் அதுவும் பழுதாகிவிட வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் ஒரு இன்சின் பழுதாகிய விமானங்கள் அருகிலுள்ள விமான நிலைத்தில் எம்ர்ஜென்சி லேண்டிங் செய்கின்றன.
பெரிய விமானங்களில் நாலு இஞ்சினில் இரண்டாவது இயங்க வேன்டும் . இரண்டு வரை பழுதாகலாம். மூன்று பழுதாகிவிட்டால் தேறாது
ஒரு இன்சின் பழுதாகும்போது, அந்த இன்சின் தானாகவே நின்றுவிடும்படி விமானக்களில் வடிவமைக்கப்பட்டூள்ளது, ஏனெனில் பழுதான இன்சின் தொடர்ந்து ஓடினால் தீப்பிடிக்கும் வாய்ப்பு அதிகம், அது நடந்தால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதால் அது தானாகவே நின்றுவிடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு இஞ்சின் பழுதானாலே அருகில் உள்ள விமான நிலயத்தில் எமர்ஜென்சி லேண்டிங் செய்ய வேண்டும் எனபது விதி
இஞ்சின் பழுதைவிட ஒரு கொடூரமான விபத்து விமானக்களில் நடக்கு வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் க்ரீஸ் நாட்டில் இப்படித்தான் ஒரு விமான விபத்து நடந்தது, ஆனால் இதன் வாய்ப்பு மிகவும் கம்மி
விமானம் உயரத்தில் பறக்கும்போது, விமானத்திற்கு வெளியில் - 50 டிகிரி குளிர் இருக்கும். அது சாதாரண குளிர் அல்ல இரத்த்தை நொடியில் உறையவைக்கும் குளிர். அதேப்போல வெளியே மிக மிக குறைந்த காறழுத்தம் இருக்கும் , அதில் கண்டிப்பாக மனிதனால் மூச்சு விட முடியாது. திடீரென்று விமானத்தின் சுவரில் எங்காவது ஓட்டை விழுந்தாலோ, அல்லது எங்காவது இடுக்கு விழுந்தாலோ, விமானத்தில் உள்ள காற்று அனைத்தும் வெளியில் உரிஞ்சப்பட்டுவிடும்.
அதனால்தான், மூச்சு விடுவதற்கு ஒரு எமர்ஜென்சி முறையை விமானம் கிளம்பும் முன் சொல்வார்கள். அதை பலர் காது கொடுத்து கேட்கமாட்டார்கள். அது மிக முக்கியம். ஏனெனில் அதன் தேவை எப்போதும் வரலாம்.
சிறிய விரிசல் என்றால் இந்த மூச்சு பிரச்சனை மட்டும்தான் வரும், உடனே எமர்ஜென்சி லேண்டிங்க் செய்தால், அந்த எமர்ஜென்சி சுவாசிக்கும் முறையை வைத்து பிழைத்துவிடலாம்
க்ரீஸ் விமானத்தில் இந்த வகை விபத்துதான் நடந்தது, இதில் பைலட்டுகளும் குளிரில் உறைந்துபோனதால், அது விபத்திற்குள்ளாகியது. ஆனால் பொதுவாக விபத்துக்கள் மற்ற போகுவரத்து முறையை ஒப்பிடும்போது விமானங்களில் மிகவும் கம்மி
உண்மையிலேயே விமானங்களில் மிகவும் ஆபத்து என்றால் அது ஐஜேக் செய்யும் தீவிரவாதிகள்தான் :) , தொழில்நுட்ப கோளாருகள் பயப்படும் அளவிற்கு அதிகம் இல்லை.
பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென உயரத்தை இழந்து (sudden loss of altitude) வானிலேயே கீழே விழுந்தது என்று தெரிகிறது.விமானங்களுடன் உங்களுக்கு பரிச்சயம் இருந்தால், இதை ஏர்-பாக்கெட் (air pocket) என்று சொல்வார்கள் என்று அறிந்திருக்கலாம். (சில வருடங்களுக்கு முன் பாரிஸ் ஏர்-ஷோவில் ஏர்பஸ் நிறுவனம், A-330க்கு பிறகு தயாரிக்கப்பட்ட விமானங்கள் turbulence-ல் பாதிக்கப்படாமல் தயாரிக்கப்பட்டுள்ளன என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது)
2010க்கு பின் நடந்த மோசமான விமான விபத்துகள்!!
* 2010 , மே 12: லிபிய தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்து ஏற்பட்டு 103 பேர் பலி.
* 2010, மே 22: ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானம், மங்களூரு விமான நிலைய ஓடு பாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளானதில் 158 பேர் பலி.
* 2010, ஜூலை 28: மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தானின் ஏர்புளூ விமானம், இஸ்லாமா பாத்துக்கு வடகிழக்கு மலைப்பகுதியில் விபத்துக்கு உள்ளாகி, 152 பேர் பலி.
* 2014, மார்ச் 8: 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து -பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் பலி.
* 2014, ஜூலை 17: ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம் ரஷ்ய எல்லை யருகே சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானத்திலிருந்த 298 பேர் பலி.
* 2014, ஜூலை 24: அல்ஜீரியாவிலிருந்து கிளம்பிய விமானம் மாலி பாலைவனத்தின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 118 பேர் பலி.
* 2014, டிச.28: இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி 162 பேர் பலி.
* 2015, மார்ச் 24: தெற்கு பிரான்ஸ் பகுதியில் ஜெர்மன்விங்ஸ் ஏ320 விமானம் விபத்துக்குஉள்ளானதில் 150 பேர் பலி.
தொகுப்பு : மு அஜ்மல் கான்.
No comments:
Post a Comment