அன்பார்ந்த நண்பர்களே !
நம் பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில், பத்தாவது பாஸ் செய்தால், அடுத்து பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டு வேலைக்கு பறப்பது தான் காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போது நம் பிள்ளைகள் ஓரளவுக்கு கல்லூரிகளில் கால் பதித்து பட்டதாரிகள் ஆகி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இருந்தாலும் கூட, அவர்களும் வெளி நாட்டு வேலை வாய்ப்பையே முழுதாய் நம்பியுள்ளனர். நம் மண்ணிலேயே அரசாங்க உயர் பதவிகளுக்கு யாரும் முயற்சி செய்வது கிடையாது. அதை பற்றியான எந்த ஒரு விழிப்புணர்வும் அவர்கள் மத்தியில் இல்லை.
நம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கூட அரசாங்க வேலை வாய்ப்புகள் பற்றி சொல்லி கொடுப்பது இல்லை. ஒரு சில மாணவர்களிடம் மட்டும் "நான் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும்.. நான் ஐ.பி.எஸ் ஆக வேண்டும்.." என்ற கனவுகள் இருந்தாலும் கூட, அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தால், அது கனவாக மட்டுமே கரைந்து விடுகிறது. ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டுமென்றால், எங்கே அதற்கான விண்ணப்பம் கிடைக்கும் ? என்று கூட தெரியாத நிலையே இன்றும் இருந்து வருகிறது.
ஆகவே இனியும் இந்த அரசாங்க வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை நழுவ விடாமல், முறையாக பயன்படுத்தி கொள்ள, இந்த ஐ.ஏ.எஸ் வழிகாட்டி தளத்தினில், ஆர்வம் கொண்ட அனைவரும் இணையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சமூக அந்தஸ்த்தின் உச்ச நிலையில் இருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு தேவையான தகுதி நிலைகள் பற்றிய தகவல்கள் இதோ:
கல்வித் தகுதி:
* அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (குறைந்தபட்ச தகுதி இளநிலைப் பட்டம்).
* இளநிலைப் பட்டப்படிப்பின் இறுதித் தேர்வு எழுதப் போகிறவர்கள் அல்லது தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுத் தொகுதியின் ஆரம்ப நிலையான பிரிலிமினரி தேர்வை எழுதலாம்.
* ஆனால், மெயின் தேர்வு எழுத செல்லும் முன்பாக, இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை காண்பிக்க வேண்டும்.
* அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை (professional) மற்றும் தொழில்நுட்ப கல்வித் தகுதியை வைத்துள்ளவர்களும், இந்தத் தேர்வை எழுதலாம்.
தேசிய அடையாள தகுதி:
* இந்திய குடிமக்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாக முடியும்.
* மேலும், கடந்த, 1 ஜனவரி, 1962ம் ஆண்டிற்கு முன்பாக, நேபாளம், பூடான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்துடன் வந்தவர்கள் மற்றும் பர்மா, எத்தியோபியா, கென்யா, பாகிஸ்தான், இலங்கை, உகாண்டா, தான்சானியா, வியட்நாம், மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கும் நோக்கத்துடன் குடிபெயர்ந்துள்ள இந்திய வம்சாவழி மக்கள் ஆகியோர், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, IAS மற்றும் IPS ஆகலாம்.
வயது தகுதி
* சிவில் சர்வீஸ் தேர்வெழுதுபவர் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
* பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 30 வயது வரை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.
* OBC பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 33 வயது வரை முயற்சி செய்யும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 35 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.
* மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.
தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள்:
* பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 4 முறை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.
* இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (OBC) சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 7 முறை முயற்சி செய்யலாம்.
* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள், 35 வயது வரை, எத்தனைமுறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.
விண்ணப்ப நடைமுறைகள்: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஒருவர், அதற்கான விண்ணப்பத்தை, தகவல் குறிப்பேட்டுடன் பெற வேண்டும். அதை எலக்ட்ரானிக் முறையில் ஸ்கேன் செய்ய முடியும் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து முக்கிய தபால் நிலையங்களிலும் பெற முடியும்.
பூர்த்திசெய்த விண்ணப்பத்தை, அதற்கான Acknowledgement அட்டையுடன் Secretary, Union
Public Service Commission, Dholpur House, New Delhi - 110011 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விபரம் அறிய..
http://www.upscexam.com/ias_syllabus_mains/
No comments:
Post a Comment