இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த தடவை 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பு நடந்தது.
இந்த தடவை கடந்த ஆண்டு தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம் வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 25 லட்சம் பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 5 ஆயிரம் நகரம், 6 லட்சத்து 30 ஆயிரம் கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் பணிகள் அனைத்தும் முடிந்து இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் சந்திர மவுலி டெல்லியில் புதிய மக்கள் தொகை பட்டியலை வெளியிட்டார்.
அதில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 2 லட்சம் என அறிவிக்கப்பட்டது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம். பெண்களின் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த போது மொத்த மக்கள் தொகை 102 கோடி ஆக இருந்தது. அதில் இருந்து இப்போது 18 கோடியே 10 லட்சம் அதிகரித்து உள்ளது. அதாவது 10 ஆண்டில் 17.64 சதவீதம் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.
அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்காளதேசம், ஜப்பான் ஆகிய 6 நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட இந்திய மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே உத்தர பிரதேசத்தில் தான் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அங்கு மொத்த மக்கள் தொகை 19 கோடியே 90 லட்சம். குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் லட்சத்தீவு. அங்கு 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர். உத்தரபிரதேசம், மராட்டியம் ஆகிய இரு மாநிலங்களை சேர்த்தால் அமெரிக்கா மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது.
இந்திய மக்கள் தொகை உலகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதமாக இருக்கிறது. குழந்தைகள் எண்ணிக் கையை கணக்கிடும் போது 1000 ஆண்களுக்கு 914 பெண் குழந்தைகள் உள்ளன. இந்தியாவிலேயே வட கிழக்கு டெல்லியில் தான் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளது. அங்கு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 37 ஆயிரத்து 346 பேர் வசிக் கின்றனர். நாட்டிலேயே குறைந்த மக்கள் அடர்த்தி அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது. அங்குள்ள திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒருவர் மட்டும் வசிக்கிறார். 74 சதவீதம் பேர் கல்வி அறிவு உள்ளவர்களாக உள்ளனர்.
2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் கல்வி அறிவு 64.83 சதவீதமாக இருந்தது. இப்போது 9.21 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பை முந்தைய 10 ஆண்டோடு ஒப்பிடும் போது மக்கள் தொகை அதிகரிப்பு 21.15 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது அதிகரிப்பு வீதம் 17.64 சத வீதமாக உள்ளது. இது இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் குறைந்து இருப்பதை காட்டுகிறது.

No comments:
Post a Comment