Wednesday 13 April 2011

இந்திய மக்கள் தொகை 2010-2011 புள்ளி விவரம்..


இந்த  ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு 15 வது கணக்கெடுப்பு  ஆகும்.


2011 மார்ச் 31 ஆம் தேதி - கணக்கெடுப்பு விவரம் ஒன்றை வெளியிட்டது மத்திய அரசு. சிட்டுக் குருவிகள் தொலைந்து விட்டன; சிங்கங்கள் குறைந்து விட்டன என்று சுற்றுச் சூழல் ஆய்வாளனை கவலை கொள்ளச் செய்யும் வெறும் புள்ளி விவரம் அல்ல அது. ஒட்டு மொத்த இந்தியாவுக்கே அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி.
ஆம்.... நம் நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் சரியத் தொடங்கும் என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல். 

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.1872 இல் முதன் முதலாக இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத் தப்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் இந்தப் பணி நடைபெறுகிறது. 2010 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2001 பிப்ரவரி 2 முதல் 28 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

15 ஆவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் சி. சந்திரமவுலி இத்தகவலை வெளியிட் டார். மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் தான், ஒட்டு மொத்த மக்கள் தொகை, விகிதாச்சாரம், பொருளாதார நடவடிக்கைகள், எழுத்தறிவு, குடியிருப்பு, வீட்டு சாதனப்பொருட்கள், நகர்மயமாக் கம், பிறப்பு, இறப்பு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மொழி, மதம், இடப்பெயர்ச்சி என சமூக, கலாசார, பொருளாதாரத் தகவல்கள் கிடைக் கின்றன.

இதன் அடிப்படையில் தான், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள், கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்தப் புள்ளி விவரங்கள், அரசு மட்டுமின்றி, தேசிய, சர்வதேச நிறுவனங்கள், ஆய்வாளர்கள், வர்த்தக அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் என, பல தரப்பினராலும் பயன்படுத்தப்படுகின்றன. சட்டசபை, மக்களவை தொகுதிகளின் மறுசீர மைப்பும், இந்த மக்கள் தொகை கணக் கெடுப்பை வைத்து தான் மேற் கொள்ளப்படுகிறது.

சொல்லப்போனால் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் உள்ளது. வெளியிடப்பட்டுள்ள 15 ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தில் பல்வேறு விசயங்களும் அடங்கி உள்ளன.மக்கள் தொகை பெருக்கம் குறைந்துள்ளது.எழுத்தறிவு எண்ணிக்கை உயர்ந்துள்ளது போன்ற புள்ளி விவரங்களால் மகிழ்ச்சிதான் ஆனால் அதேவேளை 6 வ்யதுக்கு குறைவான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது என்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவர அறிக்கை தெரிவிக்கிறது.
உலகில் வாழும் மொத்த மக்கள் தொகையில் 17.5 சதவிகிதம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 62.37 கோடி பேர் ஆண்கள், 58.65 கோடி பேர் பெண்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா. உலக மக்கள்தொகையில் 19.4 சதவிகிதம் பேர் இங்கு வாழ்கின்றனர். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேஸில், பாகிஸ்தான், வங்கதேசம், ஜப்பான் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையைக் கூட்டினால் கிடைக் கும் மொத்த எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வாழ் கின்றனர்.

2001ஆ-ம் ஆண்டிலிருந்து 2011-ஆம் ஆண்டு வரையான காலத்தில் நாட்டின் மக்கள் தொகை 18.10 கோடி அதிகரித்துள்ளது. இருப் பினும் மக்கள் தொகை பெருக்கம் விகிதம் 17.64 சதவிகிதமாகக் குறைந் துள்ளது. 2001-இல் மக்கள் தொகை பெருக்க விகிதம் 21.15 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2011 மக்கள் தொகை புள்ளி விவரப்படி, 1000 சிறுவர்களுக்கு 914 சிறுமியர் மட்டுமே உள்ளனர். இந்தியாவில் இந்த அளவுக்குக் குறைவாக இருந்தது இல்லை என்பதுதான் கூடுதல் கவலை. 1961 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 1000 சிறுவர்களுக்கு 978 சிறுமியர் இருந்தனர். இந்த விகிதாசாரம் 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 927- ஆகக் குறைந்தது. இப்போது 914 ஆகக் குறைந்துள்ளது. தற்போது இந்தியாவில் சிறுவர்களின் எண்ணிக்கையே 15.88 கோடிதான்.

இது 2001 கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 0.5 விழுக்காடு குறைவு. இது மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்து வருவதற்கான அடையாளம் என்று மகிழ்ச்சி அடையும் அதே வேளையில், சிறுமியர் எண்ணிக்கை குறைந்துவருவது ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்காது. அதற் காகத்தான் அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது. எழுத்தறிவு பெற்றவர்கள் விகிதம் 74 சதவிகிதமாக உள்ளது. 2001-ஆம் ஆண்டு இது 64.83 சதவிகிதமாக இருந்தது. குறிப் பாக பெண்கள் எழுத்தறிவு பெறும் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

2001-இல் 53 சதவிகிதமாக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 65 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆண்களில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 75 சதவிகிதத்தி லிருந்து 82 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மாநிலங்களில் மிஜோரத்தில் 98 சதவிகிதமாகவும், ஜஸ்வாலில் 98 சதவிகிதமாகவும், கேரளத்தில் 93 சதவிகிதமாகவும் உள்ளது. தமிழ் நாட்டின் எழுத்தறிவு விகிதம் 73.45 சதவிகிதத்தில் இருந்து 80.33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதில் 86.81 சதவிகிதம் ஆண்களும், 73.86 சதவிகிதம் பெண்களும் எழுத்தறிவுள்ள வர்கள். மிகக் குறைவாக எழுத்தறிவு பெற்றோர் மாநிலத்தில் பிகார் தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது. இங்கு கல்வியறிவு பெற்றோர் விகிதம் 63.82 சதவிகிதமாக உள்ளது. 10 மாநிலங்கள் 85 சதவிகிதத் துக்கும் அதிகமான கல்வியறிவு பெற் றோரைக் கொண்டவையாக உள்ளன.

இருப்பினும், பொதுவாக ஆண்- பெண் விகிதாசாரத்தைக் கணக்கிடும் போது 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் இருக்கின்றனர். 2001 கணக் கெடுப்பில் 933 பெண்கள் மட்டுமே. ஆகவே, பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்திருக்கிறது. அப்படி யானால் சிறுமியர் எண்ணிக்கை மட்டும் குறைந்திருப்பது ஏன்?

6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15.58 கோடியாகும். 2001-ஆம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் 50 லட்சம் குறைவாகும். 20 மாநிலங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந் தைகள் உள்ளனர். அய்ந்து மாநிலங் களில் ஒரு லட்சம் குழந்தைகள் கூட இல்லாத நிலை உள்ளது.

இந்த நிலைமை இயற்கையாக ஏற் பட்டது அல்ல என்பதும், பெண் சிசுக்கள் வேண்டாம் என்கிற மனநிலை பொதுவாக இந்தியா முழுவதிலும் நிலவுகிறது என்பதும்தான் சிறுமியர் விகிதாசாரம் குறைவதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. நகர்ப்புறங்களில் பெண்சிசுக் கருக்கலைப்பு அதிகரிப்பதும் கிராமங்களில் பெண்குழந்தைகளை கொன்றுவிடுவதுமான நடைமுறைகள்தான் சிறுமியர் விகிதம் குறைவதற் கான காரணம் என்று கூறுகின்றனர். கருவிலேயே பெண்சிசுவைக் கண்டறியும் மருத்துவச் சோதனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் நகர்ப்புறங்களில் இத்தகைய சோதனைகள் தடையற்று நடைபெறுவதாகவும், பெண்குழந்தைகளை சுமையாகக் கருதும் குடும்பங்கள் கருக்கலைப்பு செய்வது தொடர்ந்து நிகழ்வதும்தான் இவ்வாறு சிறுவர் சிறுமியர் விகிதாசாரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் என்பது மகளிர் நல அமைப்புகள், களப் பணியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் இந்தியாவில் விரும்பத் தகாத சமூக மாற்றங்கள் நிகழும் என அபாயச் சங்கு ஊதியி ருக்கிறது ஓர் ஆய்வு. பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது 1,000 ஆண் குழந் தைகள் எனில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை 914 ஆக உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆண்:பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இப்போது மிக அதிக அளவு குறைந்துள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கும் விசயம். சிறுமியர் எண்ணிக்கை எந்தெந்த மாநிலங்களில் குறைந்துள்ளதோ அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அரசின் கடமை.

பெண் குழந்தைகளின் எண் ணிக்கை குறையத் தொடங்கி னால் நாளைய மனித குலத்தின் தொடர்ச்சியே அற்றுப் போகும் அவலம் ஏற்படலாம். ஒரு ஆணுக்கு ,ஒரு பெண் என்ற வாழ்க்கைத் துணை இணைப் பில் கூட பிரச்சினைகள் ஏற்பட லாம்.இதனால் நம் சமூகம் மிகப் பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள் ளப்படும்.எனவே பெண் குழந் தைகளின் எண்ணிக்கையை ஆணுக்கு நிகராக கொண்டுவர அரசுகள் போர்க் கால நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

அதேபோல் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களையும், சலுகைகளையும் அரசு அறிவிக்க வேண்டும். பெண் குழந்தை பெற்றோருக்கு சுமை இல்லை என்பதை உணரவைக்கும் பொருட்டு இத்திட்டங்கள் அமைய வேண்டும். ஆண் குழந்தைக்கு மட்டுமே தாலாட்டு; பெண் குழந்தைக்கு ஒப்பாரி; என்ற அவலநிலையை அரசுகள் போக்க வேண்டும். பெண்களைத் தொலைத் தால் இந்தப் பூமி பாலையாகும் என் பதை அரசும், ஒவ்வொரு தனிமனிதனும் உணர வேண்டும்.

மக்கள் தொகையில் முதல் இடம் உ.பி, குறைவான மக்கள் தொகை அருணாசல பிரதேசம்.
தமிழ்நாடு க்கு 7 வது இடம்.
தமிழகத்தில் மிக குறைவான மக்கள் கொண்ட மாவட்டம் - நீலகிரி

தமிழ்நாடு எழுத்த்றிவில் 13 வது இடம்

தமிழ் நாட்டில் ஆயிரம் ஆணுக்கு 995 பெண் என்ற சதவீதத்தில் உள்ளது

பெண்ணின் பெருமை பற்றி மிக உயர்வாகப் பேசும் நம் நாட்டில் பெண் குழந்தைகளை ஒதுக்குவது அல்லது வெறுப்பது என்பது தேசிய அவமானம்.

No comments:

Post a Comment