பெர்முடாமுக்கோணம் (சைத்தானின்முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது) வட அட்லாண்டிக்கடலின் மேற்பகுதியில் உள்ள ஒரு பகுதி.அங்கே நிறைய வானூர்திகளும், கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.[1]
நிறைய நிகழ்வுகள் துல்லியமற்ற விளக்கங்களாக இருந்திருக்கின்றன அல்லது பின்வந்த ஆசிரியரால் சேர்த்துக்கட்டி எழுதப்பட்டனவாக இருக்கின்றன என்பதற்குக் குறிப்பிடத்தக்க ஆவணச் சான்றுகள் உள்ளன. அத்துடன் இந்தக் காணாமல் போன நிகழ்வுகளின் எண்ணிக்கையும் இயல்பும் கடலின் வேறு எந்தப் பகுதிக்கும் ஒத்ததாகவே இருக்கிறது.குறிப்பிடத்தக்க அளவில் புலனாய்வு செய்தும் விளக்க முடியாதிருக்கும் பின்வரும் நிகழ்வுகள் இருக்கவே செய்கின்றன என்பதை நிறைய அதிகாரப்பூர்வ முகவாண்மைகளும் பதிவு செய்துள்ளன.
இன்றைய உலகின் அறிவியல் வளர்ச்சி கற்பனைக்கு எட்டா அளவுக்கு முன்னேறியுள்ளது, என்பதை நாம் காணுகிறோம். 25 வருடங்களுக்கு முன் தெருவில் எதாவது வீட்டில் தான் தொலைபேசி இருக்கும் இன்றோ...
every one get mobile.. rahman.k.o.. |
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மெபைல் போன் பயன்படுத்துகின்றன்.
இன்று உலகல் பல நாட்டு செய்திகளை மற்றும் பல தகவல்களை இனையம் முலமாக அடுத்த நொடிய அறிய முடிகிறது, விமானம் முலம் உலகில் எங்கு செல்ல நினைத்தால் ஒரே நாளில் வரைவில் செல்ல முடிகிறது, அனால் அன்றைய காலகட்டத்தில் பல மாதங்கள் அகும் மற்ற நாட்டிற்கு செல்ல, உலகமே நாம் கையில் என்றும் சொல்லும அளவுக்கு அறிவியல் முன்றேட்டம் வளந்துவிட்டது..
satellite watching earth.. rko.. |
இது மட்டுமா நிலாவிற்கு TOUR செல்வது போல பயனம் செய்கின்ற அளவுக்கு அது போல வான்வழியில் SATELLITE அனுப்பிய நம்வர்கள் அதுவோ உலகத்தை வலம் வந்து நம் உலகத்தை கண்காணிக்கிற அளவுக்கு உலகம் முன்னேறினாலும் இன்றும் மனிதன் காலடிபடாட தேசங்கள் புமியில் இருக்க தான் செய்கிறது..
இன்று அமெரிக்காவோ நாங்கள் தான் மிகப் உலகின் வல்லரசு நாடு நாங்கள் வைத்து தான் சட்டம் என்று கூறிகிறது அது மட்டுமா அவர்களின் நாசா அமைப்பின் முலம் வான் வழியில் பல ஆராச்சிகள் வெற்றிகரமாக செய்கின்றன் சென்ற வாரத்தில் அவர்கள் அனுப்பிய ராக்கெட் முலம் சென்ற சிறய ரேபோ வெற்றிகரமாக செவ்வாய்ல் தரை இறக்கிவிட்டது வெகு விரைவில் மனிதன் செவ்வாயில் வாழமுடியுமா என்பதற்கு தீர்வு விரைவில் கிடைக்கும்..
last week suceesful to land nasa robo on maes..rahman.k.o |
இப்படி உலகில் மனிதன் எங்களுக்கு தெரியாத ரகசியம் இல்லை என்று மார்தட்டிம் மனிதன்க்கு சவாலாக பல மர்மங்களும பலஅதிசயங்களை இறைவனால் புமியல் மறைக்கபட்டுள்ளது. என்பது உண்மை அப்படிபட்ட ஒரு மர்மமான் ஒரு கடல் பரப்பை இந்த பதிவில் காண்போம் அந்த பரப்பு தான் பெர்முடா முக்கேனம் அதுவும் உலகில் வல்லரசு என்று மார்தட்டும் அமெரிக்காவின் அருகில்..
பல சகோதரர்கள் பதிவை தொகுத்து இந்த பதிவு இடுகிறன் உங்கள் அறிவிற்கு பயன்பட..
பெர்முடா முக்கோணம் பற்றிய தகவல்...
இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது “சாத்தானின் முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. சில ஆய்வாளர்கள் இந்த முக்கோணப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.
÷”பிளைட்-19′ என்பது குண்டு வீசும் விமானங்களுக்குப் பயிற்சியளிக்கும் விமானமாகும். இது, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமானது. இந்த விமானம் 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, ஒரு பயிற்சியில் பங்குகொண்டது. அதன் பிறகு, அட்லாண்டிக் கடலின்மீது பறந்துகொண்டிருந்தது. அது மர்மமான முறையில் திடீரென்று பெர்முடா பகுதியில் மறைந்துபோனது. இந்த நிகழ்வைப் பற்றி கடற்படை அதிகாரிகள் ஒரு அறிக்கை அளித்தார்கள். அந்த அறிக்கையில் உள்ள விவரம் இதுதான்:
÷”"விமானம் தன் கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போவதற்குச் சற்று முன்பு, விமானத்தின் திசை காட்டி இயற்கைக்கு மீறிய அளவுகளைக் காட்டியது. அனுபவம் வாய்ந்த விமானி லெப்டினென்ட் சார்லஸ் கரோல் டெய்லரின் மேற்பார்வையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு ஒரு புரியாத புதிராக உள்ளது.”
÷இதைவிட மர்மமான இன்னொரு நிகழ்ச்சி உண்டு. ஒரு கப்பல் காணாமல் போய்விட்டது. அந்தக் கப்பலை மீட்பதற்காக கடற்படை விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த மீட்பு விமானத்தில் மொத்தம் 13 பேர் பயணம் செய்தார்கள். வட அட்லாண்டிக் கடலில் பறந்துகொண்டிருந்தது இந்த விமானம். சில மணிநேரத்திற்குப் பிறகு இந்த விமானத்திலிருந்து எந்தத் தகவலும் இல்லை. அப்படியே தொலைந்துபோய்விட்டது! இந்த சம்பவமும் பெர்முடா பகுதியில் நடந்தது.
÷1872-ஆம் ஆண்டு 282 டன் எடைகொண்ட “மேரி செலஸ்டி’ என்னும் கப்பலும், 1864-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி “மேரி செலஸ்டி’ என்று அதே பெயர்கொண்ட இன்னொரு துடுப்புக் கப்பலும் பெர்முடா முக்கோணப் பகுதியில் மறைந்துபோனதாக பழைய கால செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
÷மேலும், இந்த பெர்முடா முக்கோணப் பகுதியில் 1918-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சம்பவம் நடந்தது. பார்படோஸ் தீவிலிருந்து கிளம்பியது “யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்’ எனும் ஒரு பயணிக்கப்பல். அது எந்தச் சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் தொலைந்து போனது.
÷”ஆரான் பர்’ என்பவர் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி. இவரது மகள் “தியோடோசியா பர் அல்ஸ்பான்’, தெற்கு கரோலினாவிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு “பேட்ரியாட்’ எனும் கப்பலில் பயணம் செய்தார். பின்பு, அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. பெர்முடா முக்கோணத்தில் 1812-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி நடந்த சம்பவம் இது.
÷முக்கோண எல்லைக்கு உட்பட்ட பகுதிதான் போர்டோரிகோ. இங்குள்ள சான்ஜூ நகரின் வான் பகுதியிலிருந்து ஒரு விமானம் பறந்தது. இந்த விமானத்தின் பெயர் “டக்லஸ் பிசி-3.’ மியாமி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் திடீரென்று மறைந்துபோனது. அதில் 32 பேர் பயணம் செய்தார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இது நடந்தது 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி.
÷அசோர்ஸிலிருந்து பெர்முடா செல்லும் பயணிகள் விமானம் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காணாமல் போனது. 1949 ஜனவரி 17-இல் ஜமைக்காவிலிருந்து, கிங்ஸ்டனுக்குப் பறந்து சென்ற இன்னொரு விமானத்தைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்த இரண்டு விமானங்களும் தென் அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸýக்குச் சொந்தமான ஒரே ரக விமானங்கள். இதுவும் பெர்முடா முக்கோணத்தில் நடந்தது.
wow sea eat ship.. lol..rko. |
÷இன்னும் ஒரு பெர்முடா தகவல். முன்பு கந்தகம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது “எஸ் எஸ் மரைன் சல்பர் குயின்’ எனும் கப்பல். இது, பிறகு 1963 பிப்ரவரி 4-ஆம் தேதி எண்ணெய் ஏற்றிக்கொண்டு புளோரிடா வழியாக சென்றுகொண்டிருந்தது. அதில் 39 பயணிகள் இருந்தார்கள். அந்தக் கப்பலிலிருந்து பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் கப்பல் “காண முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டது’ என்ற தகவலை மட்டும் பத்திரிகைகளில் காணமுடிந்தது.
aeroplane attract bermuda aera..rko. |
÷மேலும், ஒரு வியப்பான சம்பவம் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடந்தது. இது நடந்தது 1921-இல். “ரய் ஃபுகு மரு’ எனும் ஜப்பானியக் கப்பல் எந்தத் தடயமும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக மூழ்கிவிட்டது. அப்போது கப்பலிலிருந்து,”"கத்திக் கூம்புபோல அபாயம் தெரிகிறது…! விரைந்து உதவிக்கு வாருங்கள்…”எனும் வார்த்தைகள் அபாய அறிவிப்பாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கத்திக் கூம்பு எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது என்று இன்றுவரை அறியப்படவில்லை.
÷மேற்கண்ட அனைத்து மர்மச் சம்பவங்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் நடந்திருந்தாலும், ஏன் இப்படி நடக்கின்றன? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை.
÷1962-இல் “பிளைட்-19′ தொலைந்துபோன நிகழ்ச்சி குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற இதழ் ஒன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. விமான ஓட்டி,”"நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை…” என்று தகவல் அனுப்பியதாக , அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. மேலும், வின்சென்ட் காடிஸ் என்பவர் “அர்கோசி’ எனும் இதழில் எழுதும்போது, இந்த விமானம் தொலைந்ததற்கு மாயச் சக்திகளே காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடற்படை விசாரணைக் குழு அதிகாரிகள்,”"விமானம் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது” எனும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர். இந்தச் சமயத்தில் பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் உலக நாடுகளெங்கும் பத்திரிகைகளில் பிரசுரமாயின...
புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள்..
சில வருங்கள் கழித்து புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள் பெர்முடா பற்றிய ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கியது,.... புரூஸ் மியாமியிலுருந்து பஹாமா வழியாக பூர்டோ ரிகா சென்று கொண்டு இருந்தார், அப்போது தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல் அது தோன்றியது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது, நிச்சயமாக அவரால் சரியான திசையை கண்டறிய முடியாது, இருப்பினும் அவரது 15 வருட விமானம் ஓட்டும் அனுபவம் அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க வைத்தது, தொலைவில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை கண்டார், அதில் தெரிந்த ஒளி தப்பிக்க ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது.
வேகமாக அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது, அவருக்கு முன் கரிய நிற கோடுகள் வளையமாக நிறைய தோன்றின! கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்தாக கூறிகிறார், ஆனால் அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள் தான், அவரது விமானம் அதை கடக்க பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது மூன்று நிமிடங்கள், அது மட்டுமல்ல அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது, மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது, பஹாமா அடைய அவர் கடந்த தூரம் 160 கிலோமீட்டர் ஆனால் அதற்கான நேரம் வெறும் மூன்று நிமிடங்கள், ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார் ஆனால் அவரது விமானத்தின் அதிகபட்ச வேகமே 300 கீலோமீட்டர்கள் தான் மணிக்கு!
÷இந்த மர்ம நிகழ்ச்சிகளுக்கு மேலும் திகிலூட்டும் விதமாக,”நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்’ எனும் கட்டுரையும், “கண்ணுக்குத் தெரியாத வெளிகள்’ மற்றும் “சாத்தானின் முக்கோணத்தில்’ எனும் புத்தகங்களும் வெளிவந்தன. இந்த வெளியீடுகளில், “வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த மாய சக்திகள் கப்பல்களையும், விமானங்களையும் பிடித்துச் சென்றிருக்கலாம். அதில் இருந்த மனிதர்களை அந்த மாய சக்திகள் என்ன செய்தன என்று கடவுளுக்குத்தான் தெரியும்’ என்று எழுதப்பட்டிருந்தன.
÷கரீபியன் தீவு மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.
÷இந்த மர்மங்களுக்கு மாயச் சக்திகள்தான் காரணம் என்பதைப் பொய்யாக்கும் வகையில், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு நூலகர் டேவிட் குசெ என்பவர், “தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்ட்ரி சால்வ்டு’ என்ற நூலை வெளியிட்டார். அவர், அந்த நூலில் பெர்முடா பகுதியில் நடைபெறும் தொலைதல்களுக்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று எழுதினார். மேலும், சூறாவளித்தாக்குதல், கடலுக்கு அடியில் ஓடும் வளைகுடா நீரோடைகள், மிகப் பெரிய முரட்டு அலைகள், கடற்கொள்ளையர்களின் செயல்கள் ஆகியவையும் காரணங்கள் என்று உறுதியாகக் கூறினார். அதற்கான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார். சில எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும், இது மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் வேலை என்று கதைவிடுவதற்கு வியாபார நோக்கமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
÷சில ஆய்வாளர்கள், “”பெர்முடா முக்கோணப் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமங்களாகச் சேகரமாகியிருக்கின்றன. இந்த மீத்தேன் ஹைட்ரேட் நீர் அடர்த்தியைக் குறைத்து பெரிய நீர்க் குமிழ்களை உருவாக்கி கப்பல்களை மூழ்கடித்துவிடுகின்றன” என்று தெரிவிக்கின்றனர். மேலும் சில ஆய்வாளர்கள்,”"திடீர் மீத்தேன் வெடிப்புகள் சேற்று எரிமலைகளை உருவாக்கி கப்பல்களை மிதக்க முடியாமல் மூழ்கடித்துவிடுகின்றன” என்ற தகவல்களை வெளியிட்டனர்.
÷ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நிலவியல் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்,”"உலகம் முழுதும் கடலுக்கடியிலான ஹைட்ரேட்டுகள் பெருமளவில் இருக்கின்றன. குறிப்பாக, தென்கிழக்கு அமெரிக்கக் கடற்கரையை ஒட்டிய “ப்ளேக்ரிட்ஜ்’ பகுதியில் இச்சேகரங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இருப்பினும், அக் கடற்பகுதியில் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடப்பதைப்போன்ற எந்த நிகழ்வுகளும்
நடப்பதில்லை. பெர்முடா முக்கோணப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமம் மிகக் குறைவு. எனவே, மர்மச் சம்பவங்களுக்கு ஹைட்ரேட்டுகள்தான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” என்று தெரிவித்திருந்தது.
அமெரிக்கா மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டாக பெர்முடா முக்கோண மர்மம் பற்றி ஆராய, நவீன கருவிகளுடன் சென்றனர். இந்த ஆரய்ச்சி குழுவில் இருந்த 16 பேர் ஏதோ ஒரு விசையால் செலுத்தப்பட்டவர்கள் போல் திடீரென்று மூழ்கி போயினர். எப்படி மூழ்கினர் என்று மற்றவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
many ships & aeroplane demolish pic..rahman.k.o. |
பல ஆய்வுகளின் படி இதுவரை சுமார் 40 கப்பல்களும் , 20 விமானங்களும், சிறு சிறு மரக்கலகளும் இதுவரை பெர்முடா முக்கோணம் பகுதிகளில் கானாமல் போனதாக தெரியவருகிறது,
இந்த மாய மர்மங்களுக்கு பலர் பல வித விளக்கம் அளித்துள்ளனர். இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாகக் கூறமுடியாத நிலையே உள்ளது.
காரணங்கள்....
பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக இவ் முக்கோண வலயத்தில் ஏற்படுகின்ற விபத்துக்கள்,மர்மமான சம்பவங்களுக்கு பல காரணங்களும் விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன.அவற்றின் நம்பகத்தன்மை என்பது இன்றளவும் சந்தேகத்துக்குரியது.
கொலம்பஸ் தம் கடல் பயணத்தின் போது இவ் வலயத்தில் பல வழமைக்கு மாறான நிகழ்வுகளும் சம்பவங்களும் இடம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.ஊகங்கள்,ஆய்வுகளின் முடிவுகள்,ஆய்வாளர்களின் கருத்துக்கள் என்பவற்றினை அடிப்படையாக கொண்டு,இப் பகுதியில் நிகழும் சம்பவங்களுக்கான காரணிகள் விஞ்ஞான பூர்வமாகவும்,அனுபவ பூரவமாகவும்,அமானுஷ்யங்களுடன் தொடர்புபடுத்தியும் முன் வைக்கப்படுகின்றன.அத்தகைய காரணிகள் சிலவற்றை பார்ப்போம்.
நாட்டுப்புற கதைகளில் கூறப்படும் காரணங்கள்
1000 ஆண்டுகளுக்கு முன்பு போனீசிய,கார்தகீனியர் ஆகியோர் சார்கோ கடலைக் கடந்து செல்ல முடிந்த காலத்திலேயே அந்தக் கடலைப் பற்றியும்,பெர்முடா முக்கோணம் பற்றிய கதைகளும் தொடங்கிவிட்டன.
பழங் கதைகளின் படி அப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆதி வாசிகள் சிறந்த ஆற்றல் வாய்ந்தவர்களாக காணப்பட்டனர்.அவர்களது இயந்திரங்கள் கடலில் மறைந்துள்ளன.அவற்றின் சக்திகளால் அவர்கள் கப்பல்களையும் விமானங்களையும் கடலுக்கடியில் கொண்டுசெல்கின்றனர் என்கின்றனர்.இது வெறும் கற்பனையே.
இதனை ஒத்த கருத்து ஒன்றினை ஆய்வாளர் "Edgarcaye " கூறுகின்றார்.இன்னும் சிலர் கடலில் வாழ்கின்ற கொடிய விலங்குகளின் செயல் தான் இத்தகைய சம்பவங்களுக்கு காரணம் என்று கூறுகின்றனர்.
மேலும் வானிலிருந்து பூமியை நோக்கியை விழும் நெருப்பு கோளங்கள் வெடிப்பதால் கப்பல்கள் தாக்கப்படுகின்றது என்றும்,பெரிய கயிறு ஒன்றின் மூலமாக் கப்பல்கள் விமானகள் ஆகியவை வேறு ஒரு கடல் பரப்பிற்கு கொண்டுசெல்லப்படுகின்றது என இன்னொரு காரணமும் நாட்டுப்புறங்களில் கூறப்படுகிறது.
வேற்றுலகவாசிகளின் செயல்..
பல ஆய்வாளர்கள் இத்தகைய விபத்துகள் சம்பவங்கள் வேற்றுக்கிரகவாசிகளின் செயலாக இருக்கலாம் என்கின்றனர்.அதாவது எம்மைவிட அறிவியலில் சிறந்த உயிரினங்கள் மனிதனை அறிவியலையும் அதனால் தனக்கு ஏற்படும் பாதிப்புக்களையும் அறிந்து கொள்ள இத்தகைய செயல்களை மேட்கொள்ளலாம் என்கின்றனர்.
ஐவான் சாண்டர்சன்,மேன்சன் வாலண்டின் போன்றோரின் கருத்தானது "அறிவில் சிறந்த உயிரினங்களின் செயலாக இது இருக்கலாம்" என்கின்றனர்.
பெர்முடா முக்கோணத்தை பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் அனைவரும் UFO (Unidentifiend Flying Object ) "அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர்."இது பற்றி ஆய்வாளர்கள் பலர் இக் காரணங்களை தவறானது என்று முன் வைக்கின்றனர்.
தெற்கு புளோரிடா தொடக்கம் பஹாமா தீவுகள் உள்ள பகுதிகள் வரை UFO க்களின் நடமாட்டம் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. இவ் வலயம் பெர்முடா முக்கோணத்தில் விமானங்கள்,கப்பல்கள் காணாமல் போகும் பிரதான இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீரோட்டங்களின் செல்வாக்கு
கடலின் ஆழத்தில் ஓடுகின்ற வெப்ப,குளிர் நீரோட்டங்களின் செல்வாக்கின் காரணமாக இத்தகைய நிகவுகள் இடம்பெறலாம் என கூறப்படுகின்றது. அதாவது உலகின் கிழக்கு கண்டப் பகுதிகளின் கடற்பரப்பில் வெப்ப நீரோட்டங்கள் தென்திசையிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கின்றன.அதே போல் குளிர் நீரோட்டங்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கின்றன.இவ்விருவகை நீரோட்டங்களும் எதிர் எதிர் திசையில் சந்திக்கும் போது வெப்ப நிலை மாறல்,ஆழம் அதிகரிப்பு அமுக்க வேறுபாடுகள் என்பன ஏற்படுகின்றன.இத்தகைய ஒரு நிலையில் திசைகள் மாறுபாடும் ஏற்படுகின்றது.இவ் விளைவுகளின் காரணமாக காந்தபுலம் ஏற்படும்.இதனால் செய்தித் தொடர்பு பாதிக்கப்பட்டு அங்கு காந்த விசை பரவி அந்த பகுதியில் செல்லும் விமானங்களும் கப்பல்களும் பாதிப்படைகின்றன.
மீதேன் ஹைட்ரேட்டுக்களின்(Methane Hydrates ) தாக்கம்
ஆஸ்திரி கடல் ஆய்வுகளின் படி மீதேன் ஹைட்ரேட்டுக்கள் நீரின் அடர்த்தியை குறைப்பதினால் அவற்றினால் கப்பல்களை மூழ்கச் செய்ய முடியும் என்கின்றனர். கடலில் திடீரென ஏற்படும் திடீர் மீதேன் வெடிப்பு கப்பல் மிதக்கத் தேவையான மிதவைத் தன்மைகளை வழங்க முடியாது.ஆனால் அமெரிக்காவில் நிலவியல் துறை ஆய்வியல் படி முக்கோணப் பகுதியில் 15000 வருடங்களில் எரிவாயு ஹைட்ரேட்டுக்களின் வெளிடுகள் எதுவும் காணப்படவில்லை எனக் குறிப்பிடுகின்றனர். இதனால் இக் கருத்தும் ஏற்புடையது அல்ல.
கடலில் ஏற்படும் திடீர் காலநிலை மாற்றங்கள்
சிலர் கடலில் ஏற்படுகின்ற திடீர் வெப்ப அதிகரிப்பு,அமுக்கம் ,உயர அதிகரிப்பு என்பவற்றின் காரணமாக இவ் விபத்துக்கள் ஏற்படலாம் என்கின்றனர். ஆனால் வானிலை நிலைமைகள் சாதகமாக இருந்த போதும் கூட சில கப்பல்கள், விமானங்கள் காணாமல் போயுள்ளன.
கடற் கொள்ளை
பெர்முடா முக்கோணம் பற்றிய ஆரம்ப காலங்களில் முன்வைக்கப் பட்ட கருத்தே கடற் கொள்ளையர்களின் செயலாக இருக்கலாம் என்கின்றனர்.குறிப்பாக கரிபியன் கடற்பரப்பில் கடற் கொள்ளையர்களின் செயற்பாடு அதிகமாக காணப்பட்டது.1560 - 1760 வரை அது மிகவும் உச்ச நிலையில் காணப்பட்டது.எனினும் கப்பல்கள் கொள்ளை அடிக்கப்பட்டாலும் அவற்றின் எச்சங்களாவது கிடைக்கக்கூடியதாக இருக்கும்.ஆனால் அவ்வாறான எத்தகைய தடையங்களும் இதுவரை கிடைத்த ஆய்வுகளில் வெளிவரவில்லை.
கப்பல் மர்மமான முறையில் மூழ்குவது காரணம்...
கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது, பல வருட ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என அறியப்பட்டது, பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சசதனமாக இருக்கும், கவனிக்க இது கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை, நடுகடலிலேயே அமைதியாகி விடலாம், அதனை
“ரோக் வேவ்ஸ்” என்று அழைக்கிறார்கள்,
“ரோக் வேவ்ஸ்” என்று அழைக்கிறார்கள்,
“ரோக் வேவ்ஸ்..rko.. |
ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சசஅலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்ந்துவிடும்!,... கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்!
பெர்முடாமுக்கோணம் (சைத்தானின்முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது) வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு பகுதி.அங்கு நிறைய வானூர்திகளும், கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.
இந்த முக்கோணத்தின் எல்லைகளில், புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகள் பகுதி மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்; இன்னும் சிலர் அதனுடன் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கின்றனர். புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் ஒர் இடம்; சான் ஜுவான், பூர்டோ ரிகோ; மற்றும் பெர்முடாவின் மத்திய-அட்லாண்டிக் தீவு ஆகியவை தான் பல பிரபலமான எழுத்துப் படைப்புகளில் முக்கோண எல்லைகளாக குறிப்பிடப்படுகின்றன. விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீர்ச்சந்தியைச் சுற்றிய தெற்கு எல்லைப்பகுதியில் தான் குவியம் கொண்டுள்ளது.
இந்தப் பகுதி உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக இருக்கிறது. இதன் வழியாக அமெரிக்கா,ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. சொகுசுக் கப்பல்கள் நிறைய உள்ளன. பொழுதுபொக்கு வானூர்திகள் எப்போதும் புளோரிடாவுக்கும் தீவுகளுக்கும் இடையில் போகவும் வரவுமாய் உள்ளன. வடக்கிலிருக்கும் இடங்களில் இருந்து, புளோரிடா, கரீபியன், மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு நிறைய வர்த்தக மற்றும் தனியார் வானூர்திகள் செல்கின்றன.
நிறைய நிகழ்வுகள் துல்லியமற்ற விளக்கங்களாக இருந்திருக்கின்றன அல்லது பின்வந்த ஆசிரியரால் சேர்த்துக்கட்டி எழுதப்பட்டனவாக இருக்கின்றன என்பதற்குக் குறிப்பிடத்தக்க ஆவணச் சான்றுகள் உள்ளன. அத்துடன் இந்தக் காணாமல் போன நிகழ்வுகளின் எண்ணிக்கையும் இயல்பும் கடலின் வேறு எந்தப் பகுதிக்கும் ஒத்ததாகவே இருக்கிறது.குறிப்பிடத்தக்க அளவில் புலனாய்வு செய்தும் விளக்க முடியாதிருக்கும் பின்வரும் நிகழ்வுகள் இருக்கவே செய்கின்றன என்பதை நிறைய அதிகாரப்பூர்வ தகவல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன..
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment