Tuesday, 5 August 2014

ஒட்டுனர்கள் கவனத்திற்கு நான் கூறும் நான்கு விதிகள்...

இ​ந்தியாவில் குறிப்பாக  தமிழகத்தில் வாகன விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழலினால் ஒட்டுதல் உரிமத்தினை எளிதாக வழங்கிவிடுகிறார்கள். ஒட்டுதலில் திறமையற்றவர்கள் எளிதில் சாலையில் வந்துவிடுகிறார்கள்.

இ​ந்தியாவில்  ஊழலினால் களத்துக்கு வராமலே ஒருவர் ஒட்டுனர் உரிமம் வாங்க முடியும் அல்லது பெரும்பாலான சமயங்களில் புதிய ஒட்டுனர் குறைந்தபட்சம் வாகனத்தின் மோட்டார் இயந்திரத்தினை முடுக்கிவிட்டாலோ அல்லது நேரான சாலையில் சில மீட்டர்கள் தூரம் வாகனத்தினை  இயக்கினாலோ போதுமானது. உரிமம் உங்கள் கைகளில்.

​வளர்ந்த நாடுகளில் வாகனம் ஒட்டுபவருக்கு உரிமம் வழங்கும் முறையில் கடும் விதிமுறைகள் பின்பற்றபடுகின்றது.  எழுத்து தேர்வில் முதலில் தேர்ச்சிபெற வேண்டும். பின்பு செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். வளர்ந்த நாடுகளில் செயல்முறை தேர்வுக்கென மாதிரி சாலையினை உருவாக்கி அனைத்து விதமான விதிமுறைகளையும் செயல்முறை தேர்வின்பொழுது பின்பற்றுமாறு செய்தே மதிப்பெண் அடிப்படையில் புதிய ஒட்டுனர்களை தேர்ச்சியடையச் செய்கின்றனர். குறைந்தபட்சம் முதல்முறை தேர்வின் பொழுது ஒட்டுனர்களை தேர்ச்சி அடைய விடுவது இல்லை. அது அவர்களை நேர்மறை எதிர்கொள்ளலின் அடிப்படையில் ஒட்டுதலின்  நுணுக்கங்களை அடையாளம் கண்டுக்கொள்ளச் செய்கிறது.

​வளர்ந்த நாடுகளில்  செயல்முறை தேர்வு என்பது  இரண்டு அடுக்குகளை உள்ளடக்கியது, ஒன்று மாதிரி சாலை மற்றொன்று பொது சாலை.  மாதிரி சாலையானது “RAMP, CRANK COURSE, S COURSE, PLANK, EMERGENCY BREAK” REVERSE L  PARKING, HILL PARKING ஆகிய தேர்வுகளையும், பொது சாலையானது நேரடியாக  வாகன நெரிசல் உள்ள சாலையில் குறைந்தபட்சம் 3கிமீ தூரத்தில் “LEFT TURN, RIGHT TURN, U TURN, LANE CHANGING, PICK UP SPEED, SLOW DRIVING, SAFE DISTANCE, TRAFFIC LIGHT, ROUNDABOUT, INTERSECTION, SIGNALLING AND SAFETY CHECK, BLIND SPOT CHECK, TAILGATING, MANEUVERS" ஆகிய வெவ்வேறான நிர்பநங்களையும் உள்ளடக்கியது. இதில் தேர்வடைய வேண்டுமாயின் ஒருவர் குறைந்தபட்சம் ஒட்டுதலில் 50சதவீதம் திறன் பெற்றவராயிருப்பர்.  அதாவது உரிமம் பெறும் முன்னரே. உங்க மனசாட்சியை தட்டி எழுப்புங்கள் சகோகக்களே நீங்க எப்படி உரிமம் பெற்றீங்க...???
துவாக செயல்முறை தேர்வில் அறுபது வகையான செயல் முறைகள் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் 2  மதிப்பெண்கள் முதல் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும், இங்கு மதிப்பெண் என்பது நீங்கள் செய்யும் தவறுகளின் அடிப்படையிலே வழங்கப்படும். குறிப்பாக 20 மதிப்பெண்கள்களுக்கு குறைவாக நீங்கள் பெற்றால் உரிமம் உங்கள் கையில். அதாவது முட்டை வாங்கினால் நீங்க பாஸீ பாஸ்.


​நேரம் கிடைத்தால் இதனை விரிவாக எழுதலாம்.  ஆ​யினும் இது பற்றி எண்ணற்ற வீடியோக்களும், படங்களும் இணையத்தில் உள்ளன.  இது நமது உயிர் சம்பந்தபட்டது ஆகவே அனைவரும் பார்த்து பாராயணம் செய்வோம். விதிமுறைகள் வந்தால்தான் பின்பற்றுவோம் என்பதை விடுத்து நமது சாலை நமது பயணம் என்ற எண்ணம் கொண்டு விபத்துதனை தடுப்போம்.


விகடனில் வந்த பாதுகாப்பு டிப்ஸ்:


1. மழை பெய்யும்போது கார் ஓட்டுவதைவிட, மழை பெய்தவுடன் கார் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மழை பெய்தோ/தூறலோ முடிந்தவுடன் தார்ச்சாலையில் மெல்லிய ஃபிலிம் போன்ற லேயராக நீர் படர்ந்திருக்கும். இது சாலையைவிட்டு வழிந்து செல்லாமல் படர்ந்திருக்கும். இதுபோன்ற சாலைகளில் நாம் வாகனத்தை ஓட்டும்போது மிகவும் ஸ்மூத்தாக ஓட்டுவது போல இருக்கும். இந்த சாலைகளில் பிரேக் போடும்போது நிதானம் தேவை. நிதானமாக ஓட்டினால்தான் நிதானமாக பிரேக் போடுவதற்கான நேரமும் நமக்கு இருக்கும். ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வசதியுள்ள வாகனம் என்றால் சற்று தைரியமாக பிரேக் போடலாம். ஆனால், ஏபிஎஸ் இல்லாத வாகனத்தில் பிரேக் போடும்போது கவனம் தேவை. சடர்ன் பிரேக் போடும்போது வீல்கள் ஸ்கிட் ஆகாமல் இருக்க, பிரேக்கை விட்டு விட்டு அழுத்திக்கொண்டே காரை ஸ்டீயர் செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஏபிஎஸ் இல்லாத கார்களில், ஸ்கிட் ஆகும்போது பிரேக்கை தொடர்ந்து அழுத்திக்கொண்டே இருக்கக்கூடாது. பிரேக் அழுத்தி எடுத்ததுடன் வளைக்கும்போது கார் உங்கள் கன்ட்ரோலை விட்டு விலகுவது போன்று தோன்றினால், ஸ்டீயரிங்கை எதிர்பக்கம் திருப்பி, கன்ட்ரோல் செய்யுங்கள். காரின் டயர் தேய்மானம் இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்த டெக்னிக் சிறப்பாக கைகொடுக்கும்.



2. தமிழக நெடுஞ்சாலைகளில் சில இடங்களில் சாலை சாதாரணமாகவே வழுக்கலாக இருக்கும். உதாரணத்துக்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சில வளைவுகளில் இதுபோன்று இருந்தது. இதுபோன்ற வழுக்கலான வளைவுகளை கடக்கும்போது ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்துவிட்டு, நிதானமாகக் கடக்கவேண்டும். வளைவு முடிந்த பின்னர் ஆக்ஸிலரேஷன் கொடுத்து செல்ல ஆரம்பிக்கலாம். மழை பெய்யும்போது இந்த மாதிரியான வளைவுகளில் இன்னும் கவனம் தேவை.

3. முழுவதும் எடை ஏற்றப்பட்டுள்ள லாரி போன்ற கனரக வாகனங்களால் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சடர்ன் பிரேக் போட்டு நிறுத்த முடியாது. ஆனால், இப்போது வரும் வால்வோ இன்டர்சிட்டி கோச் பேருந்துகளில் ஹைட்ராலிக் ரிடார்டர்கள் (Retarder) இருப்பதால், திடீரென்று பிரேக் போட்டு நிறுத்தமுடியும். எனவே எந்த விதமாக கனரக வாகனங்களின் முன்னும், பின்னும் தொடர்ந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி செல்ல நேர்ந்தால் முடிந்தவரை அந்த வாகனங்களை முந்தி சென்றுவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களை முன்னே செல்லவிட்டு நாம் பொறுமையாக செல்லவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கனரக வாகனங்களின் பக்கவாட்டில் முந்தும்போது அதிக நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது.கனரக வாகனத்தின் டிரைவர் எக்காரணத்தினாலோ உங்களுடைய லேனில் நுழைய வேண்டியிருந்தால், நீங்கள் பக்கவாட்டில் இருக்கும்போது திணறுவார். நாம் எளிதாக கியர்களைக் கூட்டியோ, குறைத்தோ வேகமெடுத்துச் சென்றுவிடலாம். ஆனால், கனரக வாகனங்களில் வேகத்தைக் குறைத்தால், பழைய வேகத்துக்கு வர அதிக நேரம் ஆகும். அதனால், முடிந்தவரை கனரக வாகனங்களை விரைவாக முந்திச் சென்றுவிட வேண்டும். 


4. இன்னொரு வாகனத்தை முந்த ஆரம்பித்துவிட்டு, பின்னர் வேகம் பத்தவில்லையே என்று கியரைக் குறைத்து ஓட்டக்கூடாது. கியரைக் குறைத்தபின்னர்தான், ஓவர்டேக் செய்யவே ஆரம்பிக்க வேண்டும்.

5. உங்கள் வாகனத்தின் டயர் அதிக தேய்மானம் அடைந்திருந்தால் மழையில் கார் ஓட்டுவதையே தவிர்க்கலாம்.

6. அளவுக்கு அதிகமான எடையை (பயணிகளும், பொருட்களும் சேர்த்து) காரில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்கலாம். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படிச் செல்லும்போது வளைவுகளில் சடர்ன் பிரேக் செய்யக்கூடாது. அதேபோல், எடை அதிகம் இருப்பதால், பிரேக் பிடிக்கும்போது வழக்கத்தைவிட சற்று தள்ளியே கார் நிற்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்கு ஏற்றார்போல், முன்கூட்டியே பிரேக் செய்து கொண்டுவர வேண்டும்.

7. நான்கு வழிச்சாலைகளில் தவறான லேனில் ஓட்டுவது இந்தியாவில் மிகச் சாதாரணம். அதுவும் இரவு நேரங்களில், தவறான லேனில் வரும் வாகனத்தின் ஹெட்லைட், அந்த வாகனம் நம்முடைய லேனில் இருந்து வருகிறதா, இல்லை டிவைடருக்கு அந்தப்பக்கம் இருக்கும் லேனில் இருந்து வருகிறதா என்று குழப்பமாக இருக்கும். கவனம் தேவை.

8. இரவு நேரங்களில், முன்னே வரும் வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சத்தை நேருக்கு நேர் பார்க்கவே கூடாது. இது கண்ணையும் பாதிக்கும் என்பதோடு இல்லாமல், நம்மை அறியாமல் அந்த வாகனத்தின் மீது நேராக ஓட்டிக்கொண்டு இருப்போம். இதற்குக் காரணம் நாம் செய்யும் ஒரு அனிச்சைச் செயல்தான். கார் ஓட்டும்போது நம் கண்ணுடைய 'ப்ரைமரி' பார்வை எங்கு இருக்கிறதோ, நம்மை அறியாமல் அந்தப் பக்கம் நோக்கி, காரை ஓட்டுவோம். எப்போதும் ஹெட்லைட் வெளிச்சத்தைப் பார்க்காமல், ஹெட்லைட்டுக்கு அருகில் இருக்கும் சாலையில்தான் நம்முடைய 'ப்ரைமரி' பார்வை இருக்கவேண்டும். நம்முடைய 'Peripheral' பார்வைதான் ஹெட்லைட்டை உமிழ்ந்து கொண்டு வரும் அந்த வாகனத்தின்மேல் இருக்கவேண்டும்.

9. நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக அதிக வேகங்களில் செல்லும்போது, உங்களுடைய வேகம், கனரக வாகனங்களைவிட கொஞ்சம்தான் அதிகமாக இருக்கவேண்டும். தமிழக நெடுஞ்சாலைகளில் தற்போது இருக்கும் டிராஃபிக்கைப் பார்க்கும்போது மணிக்கு 100 கிமீ என்பதே அதிகம்தான்.

10. சர்வீஸ் லேன்கள் இருக்கும் நெடுஞ்சாலைகளில் இன்னும் கவனமாக செல்லவேண்டும். நான் சொல்லப்போகும் இந்தக் காட்சியை நீங்கள் நிறையப் பார்த்திருக்கலாம். ஊருக்கு வெளியே இருக்கும் நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் வருவதற்கு சர்வீஸ் லேன் தொடங்கும். சில டிரைவர்கள் இந்த சர்வீஸ் லேன் துவக்கத்தை சரியாக கவனிக்காமல் கடந்துவிடுவார்கள். சரியாக அந்த சர்வீஸ் லேன் என்ட்ரியைத் தாண்டியவுடன் பிரேக் போட்டு நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு, ரிவர்ஸ் எடுத்து அந்த சர்வீஸ் லேனுக்குள் நுழைய திட்டமிடுவார்கள்.  நினைத்துப்பாருங்கள். நட்ட நடு நான்குவழிச்சாலையில் நம்முடைய லேனில் ரீவர்ஸில் வந்துகொண்டிருக்கும் வாகனத்தை எதிர்பார்க்கவா முடியும்? எனவே, நகரங்களுக்கு வெளியே இருக்கும் பைபாஸ் நெடுஞ்சாலைகளில் கவனம் தேவை.

11. கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் நெடுஞ்சாலைகளில் மிகுந்த எச்சரிக்கையாக ஓட்டவேண்டும். தீடீர், தீடீரென்று டிராக்டரோ, குழந்தைகளோ, மனிதர்களோ சாலையைக் கடப்பார்கள். இவர்களையும் நம்மால் குற்றம் சொல்லமுடியாது. காலம் காலமாக அவர்கள் புழங்கிய பகுதிகளில் தீடீரென்று நான்குவழிச்சாலையைப் போட்டுவிட்டு சாலையைக் கடக்காதீர்கள் என்று சொன்னால் அவர்களுக்குக் கஷ்டமாகத்தானே இருக்கும். ஒரு மாட்டுவண்டி சாலையைக் கடக்கவேண்டும் என்றால் கூட அந்த நெடுஞ்சாலையில் அடுத்த எங்கு க்ராஸ் செய்யக்கூடிய இன்டர்செக்‌ஷன் இருக்கிறதோ அங்கு சென்றுதான் கடந்தாக வேண்டும். உச்சி வெயிலில் மாட்டு வண்டியை இயக்குபவர் சாலையைக் கடக்க கிலோ மீட்டர் கணக்காக சுற்றிக்கொண்டா வந்து கொண்டிருப்பார். எனவே, திடீரென்று சாலையைக் கடக்கிறார்களே என்று அவர்கள் மீது கோபப்படாமல், அவர்களுடைய நிலைமையையும் கவனத்தில் கொண்டு கார் ஓட்டுங்கள்.

12. கனரக வாகன டிரைவர்களை எப்போதும் கடுப்பேற்றும்படி கார் ஓட்டவே கூடாது. சில சமயம், ஒரு கனரக வாகனத்தை, இன்னொரு கனரக வாகனம் ஓவர்டேக் செய்துகொண்டிருக்கும். சில கார்/ வேன் டிரைவர்கள் அவர்களுக்கு அருகில் சென்று ஹாரன் அடித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் கனரக் வாகன டிரைவர்களுக்கு ஒரே ஒருவழிதான். சற்று பிரேக் செய்து உங்களுக்கு வழிவிடுவது. ஆனால், கனரக வாகனங்கள் வேகம் குறைந்தவுடன் மீண்டும் பழைய வேகத்துக்கு வர அதிக நேரமாகும், டீசலும் விரையமாகும். எனவே அவர்கள் முடிந்தவரை வேகமாக ஓவர்டேக் செய்துவிட்டுத்தான் நமக்கு வழிவிடுவார்கள். அவர்களுடைய சிரமத்தைப் புரிந்துகொண்டுதான் நாம் கார் ஓட்டவேண்டும். அப்படியும். பொறுமையில்லாமல் சாலையின் இடதுபுறம் கடைசி லேனில் இருந்து கீழிறங்கி ஓவர்டேக் செய்யும் கார் டிரைவர்களையும் நாம் பார்க்கிறோம்.


13. இது கேட்க ஒருமாதிரி இருந்தாலும், உண்மையில் சிறப்பான உத்தி. சாலையில் உங்களைத்தவிர மற்ற யாருக்குமே சரியாக வாகனம் இயக்கத் தெரியாது என நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இப்படி நினைத்துக்கொள்வதால் அடுத்து என்ன நடக்கும்? முன்னே செல்லும் வாகனத்தின் டிரைவர் அடுத்து எந்தப் பக்கம் வளைப்பார்? வளைவுகளில் எதிர்ப்பக்கத்தில் இருந்து வாகனம் வருமா? என்றெல்லாம் 'எதிர்பார்த்து' ஓட்டுவீர்கள். இதனால், உங்களை அறியாமலே, பாதுகாப்பான டிரைவராக மாறுவீர்கள்! 


மலை பாதைகளில் கார் ஒட்டுபவர்கள் கவனத்திற்கு. நான் கூறும் நான்கு விதிகளையும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்...

1. பயம் வேண்டும்:எவ்வளவு அனுபவம் வாய்ந்த ஓட்டுனராக இருந்தாலும் எந்த சமயத்திலும் விபத்து நேரலாம் என்ற பயம் மனதிற்குள் இருக்கவேண்டும். எப்போது நான் விபத்துக்கு அப்பாற்பட்டவன் என்று ஒரு ஓட்டுனர் நினைக்கிறாரோ அடுத்த நொடி அவர் விபத்தைச் சந்திப்பார்.

2. பொறுமை வேண்டும்.:வாகனம் ஓட்டும்போது பொறுமை அதிகம் வேண்டும். ரோட்டில் போகும் மற்ற வாகனங்கள், மனிதர்கள், விலங்குகள், குண்டு குழிகள், இவை எல்லாம் பொறுமையைச் சோதிக்கும்.


3. கவனம் சிதறாமை. உங்கள் கவனம் முழுவதும் கார் ஓட்டுவதில்தான் இருக்கவேண்டுமே தவிர, இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதிலோ, அரட்டை அடிப்பதிலோ இருக்கக் கூடாது.


4. வாகனத்தின் தன்மை. நீங்கள் ஓட்டும் வாகனத்தின் தன்மையை நன்கு அறிந்து, அதற்கு ஏற்ற மாதிரி ஓட்டவேண்டும். 5 பேர் போகக்கூடிய வாகனத்தில் 10 பேர் ஏறிக்கொண்டு சென்றால் விபத்து நிச்சயம். 80 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய வாகனத்தை 120 கி.மீ. வேகத்தில் ஓட்டினால் விளைவு விபரீதமாகத்தான் இருக்கும்.


இந்த விதிகளை மறக்காமல் கடைப்பிடித்தால் உங்கள் பயணம் விபத்தில்லாமல் இனிதே அமைய  எமது  வாழ்த்துக்கள் ..

ஆக்கம் & தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment