![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4xTL-jUKBS7fWRcW8b6rVT_6J_aHk9bOTM5BOEB-i6qFlklUvTaMz8pAuZB6t94r64JZRmrSMfiYQ66yrfiIWU2E1kMZiT2f8HzVkbQa9gn3NdB2PH_8GD-knc7U67jqiAgNvtIbxQg/s200/7787.jpg)
வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதையும் பொதுமக்கள் அந்த முகாம்களுக்கு சென்று பார்க்கலாம்.மேலும், கூடுதலாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்திலும் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தெரிவிக்கப்படும். இது இலவச தொலைபேசியாகும்.அதேபோன்று, செல்போன் மூலம் எஸ்எம்எஸ் செய்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு, EPIC என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். 24 மணி நேரத்திற்குள் தேர்தல் அலுவலகத்தில் இருந்து விவரம் தெரிந்துகொள்ளலாம். பெயர் இல்லை என்றாலும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.
No comments:
Post a Comment