வாணில்ருந்து பெய்யும் மழைதண்ணீரை சேமித்து, பாதுகாப்பாக பத்திரப்படுத்தி நமக்குத் தேவையானபோது பயன்படுத்திக் கொள்வதே மழைநீர் அறுவடையாகும். நமது வீட்டிற்கு மேல் பெய்யும் மழையை அதாவது வீணாகும் மழை நீரை சேமித்தல், பாதுகாத்தல், சுத்தம் செய்து பயன்படுத்துவதே மழைநீர் சேகரிப்பு ஆகும்
ஏன் மழைநீரை சேகரிக்க வேண்டும்?
இன்று தரமான, சுத்தமான தண்ணீர் நமது அன்றாட பயன்பாட்டிற்கு கிடைப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதால், மழைநீரை அறுவடை செய்ய வேண்டும். நம்மிடமுள்ள தண்ணீரிலேயே மழைநீர்தான் மிகவும் சுத்தமானது. தரமானதும் கூட. எனவே இப்படியொரு தரமான நீரை வீணாக்காமல் சேமித்தால் நல்லது.
மழைநீர் சேகரிப்பின் நன்மைகள்..
- நிலத்தடியிலிருந்து கிடைக்கும் நீருற்று மற்றும் அரசு வழங்கும் தினசரி குடிநீருடன், மழைநீரும் உபயோகப்படும்
- கிடைக்கும் மழைநீரை பயன்படுத்தி கட்டிடம் கட்டலாம், விவசாயமும் செய்யலாம்.
- அதிக தரமான நீர். எவ்வித நச்சுக்களோ, ரசாயனப் பொருட்களோ கலக்காத சுத்தமான நீர் இந்த மழைநீர்.
- இதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு
- மழைநீர் அறுவடையினால் வெள்ள சேதம் குறையும், மேல் மண் அடித்து செல்வதும் தடுக்கப்படுகிறது.
மழைநீர் சேகரிப்பு எந்தபகுதிகளுக்கு ஏற்றது?
- நிலத்தடி நீர்வளம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கு
- அசுத்தமான நிலத்தடி நீர் இருக்கும் பகுதிகளுக்கு
- மழைநீர் நில்லாமல் ஓடக்கூடிய பகுதிகளுக்கு
- மலைபிரதேசங்களில் மழைநீர் அறுவடை அவசியம்
- அடிக்கடி மழை வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு
- பிரச்சினைக்குரிய நீர்வளம், உப்புத்தன்மை அதிகமுள்ள பகுதிகளில் மழைநீர் அறுவடை தேவை.
- மக்கள் தொகை/எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகளுக்கு
- மின்சாரம் மற்றும் நல்ல தண்ணீரின் விலை அதிகமாக காணப்படும் பகுதிகளுக்கு
- கிடைக்கும் நீர் குடிப்பதற்கும், மற்ற உபயோகங்களுக்கு பயன்படுத்த முடியாத வகையில் இருக்கும் பகுதிகளில், மழைநீர் அறுவடை செய்ய வேண்டும்.
மழைநீர் சேகரிப்பில் கிடைக்கும் நீரை எதெதற்கு பயன்படுத்தலாம்?
- குடிப்பதற்கு, குளிப்பதற்கு, சமையல் செய்வதற்கு
- கழிவறைகளில் பயன்படுத்தலாம்.
- துணி துவைப்பதற்கு, பயிர்களுக்கு பாசனம் செய்ய
- கால்நடைகளுக்குஎன எல்லாத்தேவைகளை பூர்த்தி செய்யவும் சேமிக்கும் மழை நீரை பயன்படுத்தலாம்.
எந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பிலும் மூன்று உறுப்புகளிருக்கும். அவை மழை கொட்டும் பரப்பு, நீரை கொண்டு போகும் அமைப்பு மற்றும் சேமிப்பு அமைப்பு.
மழைநீர் சேகரிப்பில் இரண்டு முறைகள் உள்ளன.
- வீட்டுக்குகூரை அல்லது கட்டிடக்கூரைகளிலிருந்து மழைநீரை சேமிக்கும் முறை
- நிலங்களில் அல்லது பெரிய நிலப்பரப்புகளிலிருந்து மழைநீரை சேமித்து, பயிர் பாசனத்திற்கு பயன்படுத்தும் முறை.
ஆறு முக்கியமான உறுப்பு - மழைநீரை அறுவடை அமைப்பில் உள்ளன
- கொட்டு பரப்பு /பெய்யும் பரப்பு - பெய்யும் மழையை சேமிக்கும் கூரை.
- கொண்டு போகும்அமைப்பு - கூரை அல்லது நிலப்பரப்பில் பெய்யும்/அறுவடையாகும் நீரை சேமிக்க கொண்டு செல்ல குழாய்கள், கால்வாய்களை பயன்படுத்துதல்.
- கூரையை சுத்தம்செய்தல் - முதலில் பெய்யும் மழை நீரைக் கொண்டு, கூரையை சுத்தம் செய்து, அசுத்தங்களை நீக்கி, வேறு இடத்துக்கு அந்நீரை எடுத்துச் செல்லும் குழாய்கள்.
- சேமிப்பு - அறுவடையாகும் நீரை, கிருமிகள் அண்டாத வகையில் பாதுகாப்பாக, தொட்டியில் சேகரிக்க வேண்டும்.
- சுத்திகரித்தல் - அறுவடை செய்த மழைநீரை வடிகட்டி, புறஊதாக்கதிர்களை பயன்படுத்தி, குடிப்பதற்கு உகந்த வகையில் சுத்திகரிக்க வேண்டும்.
- பகிர்தல் - சேகரித்த மழை நீரை விநியோகம் செய்ய ஒரு சிறிய மோட்டார், ஒரு தொட்டி தேவைப்படும்.
கிராமப்புற பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு...
- கிராமங்களில் ஒரு சில இடங்களில் பொதுக்கிணறுகளை அமைக்க வேண்டும். கிணறுகளின் பக்கத்தில் (சுமார் 10-20 அடிக்குள்ளாக) கைப்பம்புடன் இணைந்த ஆழ்குழாய் கிணறுகளைப் போட வேண்டும். கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு உள்ள இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மனிதன், ஆடு, மாடு, இருசக்கர வானங்கள், துணிபோன்றவற்றை அந்த இடத்தில் கழுவவோ, சுத்தம் செய்யவோ கூடாது.
- ஏற்கனவே குளங்கள், குட்டைகள் கிராமங்களிலிருந்தால், அவற்றை 3 வருடங்களுக்கு ஒரு முறை தூர்வாரி சுத்தம் செய்யவேண்டும்.
- கிராமப்புறங்களில் சிறிய ஆறு, கால்வாய்கள் இருந்தால் தடுப்பணைகள் கட்டி மழைநீரை சேமித்து தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
- கூரைகள் வழியாக மழைநீரை அறுவடை செய்து சேமிக்க வேண்டும்.
கிராமப்புற பள்ளிகளில் கூரை மழைநீர் சேகரிப்பு..
கூரை முலமாக மழைநீர் அறுவடை என்பது ஒரு செலவு குறைவான திட்டம். இந்தியாவின் வறண்ட பிரதேசங்களில், பல்லாண்டு காலமாக கடைபிடிக்கப்படும் ஒரு முறையாகும். கடந்த 20 வருடங்களாக பேர்புட் கல்லூரி என்ற அமைப்பு, 15 மாநிலங்களில், பல கிராமப்புற பள்ளிகளுக்கும், 32 மில்லியன் மக்களுக்கும், பள்ளிக்கூரைகள் வழியாக மழைநீரை சேமித்து, தரைதளத்தொட்டிகளில் பாதுகாப்பாக வைத்து, குடிநீர் வழங்கி வருகிறது.
குட்கிராமங்களில், குடிநீர் கிடைப்பது பெரிய பிரச்சினையாக இருப்பதால், மழைநீர் அறுவடையால் நமக்கு இரண்டு நன்மைகள்.- குடிக்க நீர் கிடைக்கிறது. குறிப்பாக கோடை காலத்தில்.
- வருடம் முழுவதும் சுத்தமான சுகாதாரமான வாழ்க்கைக்கு நீர் கிடைக்கச் செய்வது.
பள்ளிக்களுக்கான மழைநீர் சேமிப்புத்திட்டம்...
பள்ளிகளில் மழைநீர் சேமிப்புத் தொட்டி
மழைநீர் சேகரிப்பு முறையினை அமைத்தல்
மழைநீர் சேகரிப்புக்கு தரைதளத் தொட்டி அமைப்பது ஏன்?
மழைநீர் சேகரிப்பு முறையினை பள்ளிகளில் அமைப்பதற்கு முன், அந்த பள்ளியில் குடிநீர் பற்றாக்குறை இருக்கிறதா, இப்போது எங்கிருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகிறார்கள், பள்ளிக்கூரையின் அளவு எவ்வளவு, அங்கு இருக்கக்கூடிய மண்ணின் தன்மை போன்ற விபரங்களை தெரிந்து கொள்வது முக்கியமானது.
- சுண்ணாம்பு அல்லது உள்ளுரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தரைதளத்தொட்டியில் சேமிக்கப்படும் நீரே, அடுத்த மழைக் காளம் வரை நல்ல முறையில் இருக்கும்.
- இவை, இயற்கையாக சேமிக்கும் முறை என்பதால், குளிர் காலங்களில் சூடாகவும், கோடைகாலங்களில் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
- தரைதளத் தொட்டிகள் நீண்ட காலம் இருக்கும். பராமரிப்பதும் எளிது. தரைக்கு மேலுள்ள தொட்டிகளை காட்டிலும், இந்த தரை தள தொட்டிகளை பராமரிப்பது செலவு குறைவு.
- தரைதளத் தொட்டிகள் பள்ளியின் முக்கிய கட்டிடத்திற்கு அருகில் அமைக்கப்பட வேண்டும். பள்ளிக்குழந்தைகள் எளிதில் விரைவாக பயன்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
- தரைதளத் தொட்டிக்கும் கட்டிடத்திற்கும் இடையே உள்ள தூரம் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப மாறுபடும். நிலையான மண்கண்டம் உள்ள கெட்டியான பகுதிகளில், 3-5 அடி தூரம் இருக்க வேண்டும். சுமாரான மண்கண்டம் உள்ள பகுதிகளில், சுமார் 10 அடி தூரம் இருப்பது நல்லது.
- பயன்படுத்தப்படும் குழாய்களின் நீளம் குறைவாக இருத்தல் நல்லது. இதில் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அதிகளவு விட்டமுடைய (குறைந்தது 4 இஞ்ச்) குழாய்களை பயன்படுத்தி, கூரைகளையும், தொட்டிகளையும் இணைக்க வேண்டும்.
- நிலத்திலுள்ள மண்கண்டம் கடினமாக இருக்கும் பட்சத்தில், தரைதளத்தொட்டி அமைக்க அதிக ஆழம் தோண்டாமல் இருக்க வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு தொட்டி நிலத்திலும், மூன்றில் ஒரு பங்கு தொட்டி நிலத்திற்கு மேலும் இருக்கலாம்.
தொட்டி அமைக்க தேவையான பொருட்கள்
- உள்ளுரில் கிடைக்கும் பொருட்கள் (செங்கல் / கருங்கல்)
- சுண்ணாம்பு/சிமெண்ட்
- ஜிப்சம்
- மணல்
- கூரைக்கான பொருட்கள் (ஃபெர்ரோசிமெண்ட்/ ஸ்லாப்) பகுதிக்கேற்றவாறு இந்த பொருட்கள் மாறுபடும்.
தொட்டிகளின் வடிவம்
மண் தன்மைக்கேற்றபடி தொட்டியின் வடிவம் இருக்கும். எப்போதும் செவ்வக வடிவம் அல்லது உருளை வடிவத்தில் அமைப்பது வழக்கம். பாறைபபகுதிகளுக்கு செவ்வக வடிவ தொட்டிதான் ஏற்றது. தொட்டி அமைக்கும் நுட்பம் எளிமையானது, குழியைத் தோண்டி அதன் மேல்பகுதியில் உள்ளுரில் கிடைக்கும் கற்களைக் கொண்டு கூரை அமைக்க வேண்டும். தொட்டியின் இந்த கூரை, குளிர் காலத்தில் வகுப்புகள் நடத்துமிடமாகவும், பள்ளியில் விழா நடத்த ஒரு மேடையாகவும் பயன்படும்.
உருளை வடிவத் தொட்டிகள் வறட்சிப் பகுதிக்கு ஏற்றது. உருளை வடிவத் தொட்டிகள் அமைக்கும் செலவு குறைந்த நுட்பம் தார் பாலைவனப்பகுதி மக்களிடம் உள்ளது. கிராமங்களிலுள்ள கொத்தனார்கள் உருளைவடிவத் தொட்டிகளையும், 100 மீட்டர் ஆழமுள்ள கிணறுகளையும், உள்ளூர் பொருட்களைக் கொண்டு, அவர்களாகவே கட்டி முடிக்கும் திறன்படைத்தவர்கள். மெத்த படித்த பொறியாளர்களுக்கே, இதுபோன்ற உருளை வடிவத்தொட்டிகள் கட்டுவது சற்று சிரமம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உருளை வடிவத் தொட்டிகள் வறட்சிப் பகுதிக்கு ஏற்றது. உருளை வடிவத் தொட்டிகள் அமைக்கும் செலவு குறைந்த நுட்பம் தார் பாலைவனப்பகுதி மக்களிடம் உள்ளது. கிராமங்களிலுள்ள கொத்தனார்கள் உருளைவடிவத் தொட்டிகளையும், 100 மீட்டர் ஆழமுள்ள கிணறுகளையும், உள்ளூர் பொருட்களைக் கொண்டு, அவர்களாகவே கட்டி முடிக்கும் திறன்படைத்தவர்கள். மெத்த படித்த பொறியாளர்களுக்கே, இதுபோன்ற உருளை வடிவத்தொட்டிகள் கட்டுவது சற்று சிரமம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலத்தடி நீர்வளம் குறித்த சில உண்மைகள்
- ஒரு கிணறு என்பது தண்ணீரை சேமிக்கும் இடமல்ல. கிணறுகள், நிலத்தின் மேல் பகுதியை, நிலங்களுக்கடியிலுள்ள நீருற்றுகளுடன் இணைக்கின்றன. நிலத்தடி நீர்வளத்தை பொறுத்து, மழைகாலங்களில், கிணறுகளில் நீர் மட்டம் உயரும் அல்லது தாழும்.
- மழை பெய்வது நின்று விட்டால், கிணற்றுக்கு நிலத்தடியில் உள்ள நீரூற்றுகளிலிருந்து ஓரளவிற்கு நீர் கிடைக்கும்.
- எங்கெல்லாம் ஆழ்குழாய் கிணறு போடுகிறோமோ, அங்கு மழைநீர், மண்கண்டம், பாறைப் பகுதிகள் வழியாக ஆழ்குழாய் கிணற்றுக்குள் ஊடுருவிச் செல்லும்
- ஒவ்வொரு ஆழ்குழாய் கிணறும், காலம் ஆக ஆக, தண்ணீர் இல்லாமல் வற்றிவிடுவாய்ப்புள்ளது.
- வற்றிவிட்ட ஆழ்குழாய் கிணறுகளை, நிலத்தடி நீர் ஊற பயன்படுத்தலாம். வற்றிவிட்ட கிணற்றின் மேல் பகுதியில், ஆழ்குழாய் வடிநீர் குளங்களை அமைத்தால், நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உண்டு.
மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்படம், வீடியோ படங்கள் பார்க்க, http://in.youtube.com/profile_play_list?user=indiawaterportal என்ற இணையதளத்தை உபயோகியுங்கள்/பாருங்கள்.
உங்கள் கவனத்திற்கு..- மழை நீர் சேகரிக்கும் இடம் சுத்தமாக இருப்பது நல்லது
- மழை நீர் சேகரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்திய பிறகே உபயோகிக்க வேண்டும்
- முதலில் கிடைக்கும் மழை நீரைச் சேகரிக்காமல் சிறிது நேரம் வெளியில் ஓடவிட்டு சுத்தமான நீர் கிடைக்கும் போது மட்டுமே பாத்திரங்களில் சேமிக்க வேண்டும்
- மழை நீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும்
- சேகரிக்கும் தொட்டியிலிருந்து வெளியேறும் உபரி நீரை உறிஞ்சு குழிகள் அமைத்து பூமிக்குள் செலுத்தலாம்
- மழை நீர் சேகரிக்க பயன்படும் பாத்திரங்கள், தொட்டிகள் போன்றவை அவ்வப்போது சுத்தமாக்கப்படுவதுடன், மூடிவைக்கப்பட வேண்டும்
- சேமிக்கப்படும் மழை நீரில் பாசிபடிதல் மற்றும் பூச்சி பூச்சிகள் சேருதலைத் தவிர்க்க வேண்டும்
- சமயலறை மற்றும் குளியலறையிலிருந்து வரும் கழிவு நீரில்லாத நீரை செடிகளுக்கு பாய்ச்சுவதன் மூலம் நிலத்தடி நீரை அதிகரிக்கலாம்
நன்றி : குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு.
தொகுப்பு : அ,தையுபா அஜ்மல்.
தொகுப்பு : அ,தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment