Friday 20 November 2015

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரலாறு காணாத பெருமழை !! ஒரு சிறப்பு பார்வை ..


வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சில தினங்களுக்கு முன்பு சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக திரும்பும் திசை எல்லாம் வெள்ளக்காடாய் காட்சியளித்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.சென்னை மற்றும் புறநகரில், 50 ஆயிரம் பேர், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். ஏரிகள், கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், வடிய வழியில்லாமல், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளது. வீடுகள் மற்றும் மொட்டை மாடிகளில் பரிதவிப்போரை, ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்கும் பணியில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.தமிழகம் வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தை சந்தித்துள்ளது

வட தமிழகத்தை புரட்டிப் போட்டிருப்பது பெரும் புயலும் அல்ல.சுனாமியும் அல்ல.வழக்கமான வடகிழக்கு பருவமழை தான்...திரும்பிய திசை எல்லாம் மழை நீர் வடிய இடமின்றி சூழ்ந்தது. சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.இந்த மழைவெள்ளத்துக்கு நடுவே அனைத்து ஏரிகளும் நிரம்பி வெளியேறிவிட எதுவுமே செய்ய முடியாத கையாலாகத்தனத்துக்கு தள்ளப்படுகிறது மாநில அரசு. வெயில் உக்கிரமாக அடித்து மழை நீர் வற்றும்வரை எந்த ஒரு பகுதியில் இருந்தும் வெள்ள நீர் வடியவே வாய்ப்பில்லை, மக்கள் சகித்துக் கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டும் என்ற முடிவுக்கு தமிழக அரசு தள்ளிவிட்டிருக்கிறது.

எல் நினோ புயல்
மழை கூடுதலாக பெய்யவங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் புயல் உருவாகவில்லைபசிபிக் கடல் பரப்பில்அக்டோபரில் நிலவும் வெப்பத்தின் அளவுசராசரியை விட கூடுதலாக இருக்கும்போதுஅதன் மீது கடல் காற்று மோதிகடும் வெப்பத்தை குளிராக மாற்றுகிறது.இந்த பருவ நிலை மாற்றம்கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால்கிறிஸ்துவின் பெயருடன் நினைவு கூர்ந்துஎல் நினோ எனஸ்பெயின் மொழியில் பெயரிடப்பட்டு உள்ளது.

இரண்டு முதல்ஒன்பது ஆண்டுகளுக்குஒருமுறைபசிபிக் கடல் பகுதியில் இதுபோன்ற பருவநிலை மாற்றம் ஏற்படுவது வழக்கம்அப்படி மாற்றம் ஏற்படும்போதுஅந்த ஆண்டைஎல் நினோ ஆண்டு எனஅழைக்கின்றனர்.'நடப்பு ஆண்டில்பசிபிக் கடலில்சராசரி வெப்பத்தை விட, 2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கூடுதலாக பதிவாகி உள்ளதுஎனஐக்கிய நாடுகளின் கடல் மற்றும் மேற்பரப்பு நிர்வாகம் தெரிவிக்கிறதுஎல் நினோ மூலம்குறைந்த காற்று அழுத்த தாழ்வுபுயல் போன்றவை பருவ மழைக்கு முன் அல்லது பருவமழைக்கு பின் ஏற்படும்.

சென்னை பூகோள அமைப்பு :
 சென்னையில் இவ்வளவு ஏரிகள் அமைக்கப்பட்டு உள்ளதே, இந்த நகரம் பல ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களை கொண்டு உள்ளதே? இப்படி இருக்க, "பூகோள அமைப்பை பார்க்கும்போது, மிகப்பெரிய புயலுக்கோ அல்லது மழை காலத்திற்கோ வாழ ஏற்ற இடமாக, சென்னை இல்லை" என எப்படி கூற முடியும்.சென்னை, 178 கி.மீ., பரப்பளவு கொண்டது. இது, கடல் மட்டத்தில் இருந்து, 6 - 10 மீட்டர் உயரத்தில் உள்ளது. சென்னையின் நிலப்படுகை, நீரை குறைவாக உறிஞ்சும் தன்மை கொண்டது. பொதுவாகவே மழைநீர், மேடான நிலப்பரப்பில் இருந்து பள்ளமான நிலப்பரப்பை நோக்கி ஒடிவரும். இயல்பாகவே, தண்ணீர், ஐந்து கி.மீ., முதல், 10 கி.மீ., வரை பயணம் செய்தால் தான், ஒரு மீட்டர் பள்ளம் உள்ள இடம் கிடைக்கும். எனவே, கடல் மட்டத்தில் இருந்து உயரமான பகுதிகளில் பெய்யும் மழை நீர் தாழ்வான பகுதிகளுக்கு செல்வது இயற்கை. இந்த தண்ணீர், ஐந்து கி.மீ., முதல், 10 கி.மீ., வரை பயணம் செய்தால் தான், வடிய வழி ஏற்படும்
அதனால் தான், மேடான பகுதிகளில் பெய்யும் பருவமழை, சென்னையை நோக்கி ஓடி வருகிறது. சென்னையின் நிலப்படுகை, மோசமாக இருப்பதால், அந்த நீரை உறிஞ்சுவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் தான், வெள்ளத்தில் சிக்கி, சென்னை நகரின் பல பகுதிகள் மிதக்கின்றன. பூகோள அமைப்பை பார்க்கும்போது, மிகப்பெரிய புயலுக்கோ அல்லது மழை காலத்திற்கோ வாழ ஏற்ற இடமாக, சென்னை இல்லை என்பது தான், நிதர்சனமான உண்மை
தமிழகத்தில்அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவ மழை சராசரியாக, 44 செ.மீட்டர் பெய்யும்நடப்பு ஆண்டில்நவ.,1 முதல், 18 வரைசராசரியாக, 3.7 செ.மீ., மழை பெய்ய வேண்டும்ஆனால், 9.3 செ.மீ., மழை பெய்துள்ளதுஇதுசராசரியை விட, 153 சதவீதம் அதிகம்.அதேநேரத்தில்,  இந்த காலகட்டத்தில்,
 சென்னையில் சராசரி மழை, 10 செ.மீ., -பெய்தது,  44 செ.மீ., - 
இது, 329 சதவீதம் அதிகம்காஞ்சிபுரத்தில் சராசரி மழை, 6 செ.மீ.,  
பெய்தது,- 45 செ.மீ., - இது, 656 சதவீதம் அதிகம்கடலுாரில் சராசரி மழை,  7 செ.மீ., - பெய்தது, 13 செ.மீ., - இது, 93 சதவீதம் கூடுதலாகும்.


இந்த மக்களின் வெல்ல அல்லல்களுகுக்கு மூல காரணமே இந்த பொது பணிதுறைதான்.



வெளி மாநிலங்களில் இருந்தும்வெளி மாவட்டங்களில் இருந்தும்இடம் பெயரும் பலரும்சென்னையில் சொந்தமான வீடு வாங்க வேண்டும் என நினைக்கின்றனர்அவ்வாறு அவர்கள் வாங்கும் இடம்சென்னையில் இதற்கு முன்ஏரி உள்ளிட்ட நீர் நிலையாக இருந்த இடமாக தான் இருக்கும்அந்த இடம்கடல் மட்டத்தில் இருந்து, 3 முதல், 5 மீட்டர் உயரம் உள்ள இடமாகவே இருக்கும்இப்படித்தான்சென்னையிலும்அதன் விரிவாக்க எல்லையிலும்சிறுசிறு நகர பகுதிகள் உருவாகியுள்ளனஅந்த இடங்கள் தான்மழைநீர் வெளியேற வழியில்லாமல்வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கின்றன.

அரசியல் வாதிகளோடு சேர்ந்து கொண்டு ஏரி குளங்களை காசு வாங்கி கொண்டு பிளாட் போடா அனுமதிப்பதே இந்த பொது பணி துறைதான்..பின் அதில் வந்து குடியேறிய மக்களை குறை சொல்லுவது என்ன நியாயம். ஏரி குளங்களை மூடாமல் இருந்தால் வீட்டுக்குள் புகும் நீர் கொஞ்சமாவது அந்த ஏரி குளங்களில் தங்கி இருக்கும் என்பது ஒரு சிறுபிள்ளைக்கு கூட தெரியும்

உயர் தள சாலைகள் வடிகால் பற்றி எந்த உணர்வுகளும் இல்லாமல் அமைக்கப் பட்டு உள்ளன, இது இன்றைய நிலைக்கு ஒரு முக்கிய காரணம். எகா - சென்னை புறவழி, வண்டலூர் புறவழி மற்றும் திருச்சி சாலை என 3 புறம் சூழ்ந்ததால் தான் பழைய பெருங்களத்தூர் சுற்றி உள்ள பகுதிகள் மூழ்க காரணம்.

வடிகாலாக பயன் பட்ட ஏரிகள் மூடப் பட்டதும் மற்றும் ஒரு முக்கிய காரணம். வரலாறு காணாத வெள்ளம்தான்ஆனால் குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டினால் குளம் நிரம்பும் பொழுது வீடுகள் மிதிக்கத்தான் செய்யும்.குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் அவற்றை பாரபட்சம் பார்க்காமல் அகற்றுவது ஆள்பவர்களின் கடமை.. அதுமட்டுமல்ல நகர்ப்புறத்தில் வரும் புதிய குடியிருப்புக்களை ஒழுங்காக திட்டமிடுவது CMDA வின் வேலைஆனால் அவர்கள் இன்னும் கேவலமான முறையில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறார்கள்இரண்டாவது பிரச்சினை குப்பைகளை போட்டு நீர் நிலைகளை நாசம் செய்வது.இது மக்களின் மன நிலை மற்றும் அரசின் செயல்படாத தன்மை.குப்பை அள்ளக்கூட போதுமான வசதிகள் இல்லை என்றால் கால்வாய்கள் போன்றவை சில வருடங்களில் தூர்ந்துதான் போகும்.


இந்த நிலைக்கு அரசும் ஓரளவிற்கு மக்களுமே காரணம்:
இப்பொழுது பெரும்பாலும் தனியார் வீடு கட்டும் நிலை இல்லை. பெரும்பாலும் ஏதோ ஒரு கட்டுமானக் கழகமே அடுக்குமாடிக் கட்டிடம் கட்டித்தருகிறது. அப்படியிருக்கையில், ஒரு இடத்தில் குடியிருப்பு கட்ட அனுமதிக்குமுன் அங்கு அடிப்படை வசதிகளான கழிவுநீர்க் குழாய்கள், குடி நீர்க்குழாய்கள் பதிக்கப்பட்டு, வெள்ளநீர் வடிகால்கள் நல்ல தரமான சாலை வசதி செய்யப்பட்டு இவையனைத்தும் அரசின் இத்தகு பொது வசதிகளுடன் முறையாக இணைக்கப்பட்டால் மட்டுமே, வீடுகட்ட அனுமதி என்றோர் நிலையிருந்தால் இப்படி ஆகியிருக்குமா? எங்கோ ஒரு வெட்டவெளியில் மிதிவண்டிகள் மற்றும் சிற்றுந்துகளை நிறுத்த கட்டணம் வசூலிப்பவன் அவை சேதமடைந்தாலோ திருட்டு போனாலோ தாங்கள் பொறுப்பல்ல என்று கூறுவது போல, இந்த நாட்டில்தான் வில்லங்க சான்றிதழில் "இந்த சான்றிதழில் இருக்கும் எந்தத் தவறுகளுக்கும் இந்த துறை எவ்விதத்திலும் பொறுப்பில்லை" என்றோர் வாசகம் காணப்படுகிறது இது சரியல்லவென்று எந்தக் கட்சியேனும் போராடுகிறதா ?



பருவமழை காலம் :
பருவமழை காலம் என்பது அரசுகளுக்குத் தெரியாதது அல்ல. இத்தகைய பருவமழையை எதிர்கொள்வதற்காக ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் வெளியேறும் கால்வாய்கள் பரமாரிக்கப்பட்டிருக்க வேண்டும். முகத்துவாரங்கள் சீரமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுதான் பொதுப்பணித் துறையின் முதன்மை பணி. ஆனால் இந்த பணியை ஒரு துளியும் மேற்கொள்ளவில்லை.. இயற்கை மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். இப்போது ஏரிகள் நிரம்பி பலவீனமான கரைகள் உடைந்து வெள்ள நீரோடு கலந்து நிரந்தரமாக வீதிகளில் 'டேரா' போட்டிருக்கிறது. ஏரி ஆக்கிரமிப்புகளுக்கு பக்க பலமாக, உறுதுணையாக அரசுகள் இருக்கும் போது ஏரிகள் மீது இவர்களுக்கு என்ன அக்கறை வந்துவிடப் போகிறதுநீர்நிலைகளை முறையாகப் பராமரித்தால் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க முடியும்

தமிழ் நாட்டிலே, வாழமுடியாத தமிழர்களின் வாழ்நிலை:

தமிழர்களின் வாழ்நிலை தமிழ் நாட்டிலே , வாழமுடியாத நிலை உருவாகியுள்ளது.   இதுக்கெல்லாம் காரணம்
சுயநலமுள்ள அரசு அதிகாரிகளும் ,பொறுப்பற்ற மக்களும்தான் காரணம்.அரசியில் வாதிகள் நாட்டில் உள்ள மரங்களை அழித்து ஏரிகள் மற்றும் கம்மாய் ஆகரிமிப்பை கை கட்டி வேடிக்கை பார்த்தது ,தரம் இல்லாத கான்ட்ராக்டர் ளிடம் நாட்டின் வழிச்சாலைய அமைக்க விலை போனது ,அரசு அதிகாரிகள் பிச்சை கமிசனுக்காக இதியெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காதது ,இவர்கள் தன் வீட்டு மக்கள் நன்றாக இருந்தால் போதும் என்று சுயநலமாக யோசித்தது ,எது எப்படி போனால் என்ன ஐந்து வருடத்திற்கு ஒருமுறை படித்த அறிவுள்ள எனக்கு இலவசமாக லேப்டாப்பும் படிக்காத எனக்கு மிக்சி ,கிரைண்டர்,500 ருபாய் பணம் தந்தால் போதும் என்று நினைக்கும் இந்த பொறுப்பற்ற எல்லா கேவலமான சூழ்நிலைகளுக்கும் துனைபோகும் மக்களை என்னவென்று சொல்வது அரசியல் வாதிகளின் மக்கள் விரோத செயல்களை சுட்டி காட்டாத பத்திரிகைகள் தான் காரணம். தேர்தல் வந்துவிட்டால் ஆளும்கட்சிகளிடம் பணம் வாங்கிகொண்டு செய்திகளை அவர்களுக்கு சாதகமாக வெளியிடுவதே இந்த பத்திரிக்கைகளின் வேலை. இலவசம் கொடுத்து ஓட்டு வாங்குவது லஞ்சம் கொடுப்பதை விட அசிங்கமானது, கொடுமையானது.. ஆனால் அதை தவறு என்று சொல்ல ஒரு வக்கத்த கோர்ட்டும் இல்லை என்பது தான் இந்தியாவின் நிதர்சனம்.


எனது  கருத்து :
இப்பவாவது சிந்தியுங்கள் மக்களே...உங்களுக்கு திரும்ப திரும்ப சொல்கிறேன்.. அப்பட்டமாக லஞ்சம், ஊழல், அடிப்படை திட்டங்களில் கொள்ளை.. கண்ணெதிரே கொடும் தவறுகள் நடந்தாலும் போலீசோ, அரசு இயந்திரமோ, நீதித் துறையோ கண்டு கொள்வதில்லை. இவர்கள் ஆளும்கட்சியுடன் சேர்ந்து அடிக்கும் கொட்டத்துக்கு அளவே இல்லை.. லோக்பால் சட்டத்தை கொண்டு வர எந்த அரசும் எத்தனிக்கவில்லை.. சொந்தக் காசில் சூனியமான்னு  அனைத்து கட்சியினரும். லோக்பால் சட்டத்தை கொண்டு வரணும், அது நீதிபதிகளையும், அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல், பொதுத்துறை மட்டும், தனியார் நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும்படியாக இருக்க வேண்டும் ஓட்டுக்கு பணம் வாங்கிகொண்டு ஓட்டு போடாதீர்கள்.உங்கள் ஏரியாவிற்கு என்னென்ன வசதிகள் தேவை என்பதை உணர்ந்து அதை செய்து தருவதாக வாக்கு கொடுத்து பாண்டு பேபரில் கையெழுத்து போட்டு கொடுக்கும் நபருக்கு மட்டும் ஓட்டு போடுங்கள். ஜெயித்து ஆறு மதத்திற்குள் அதற்கான முன் முயற்சி எடுக்கிறாரா என்று பாருங்கள் இல்லை என்றால் அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அலுவலகம் முன் போராடுங்கள்.அந்த எம்.எல்.ஏவின் அலுவலகம் முன் உள்ளிருப்பு வைப்பு போராட்டங்களை செய்யுங்கள்..நீதி மன்றத்தில் பாண்டு பேபரை வைத்து கொண்டு வழக்கு போடுங்கள். எல்லா கட்சிக்கும் வாய்ப்பு கொடுத்தாகிவிட்டது. ஒரே ஒரு கட்சி தான் பாக்கி . அது தான் "ஆம் ஆத்மி" அவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். 

ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment