Tuesday, 10 July 2018

2018 நீட் தேர்வு முடிவுகள்:தமிழகத்தின் பாதிப்புகள் !!


Image result for NEET


896 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 5 அரசுப்பள்ளி மாணவர்கள்...


2018ல் தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தோர் எண்ணிக்கை..
`நீட்’ தந்த பரிசு!..


சமூகநீதியை குழி தோண்டி புதைத்தது நீட்.


நீட் தேர்வால் யாருக்கு பாதிப்பு அதிகம்..


1. வசதியான குடும்பத்தை சேர்ந்த மெட்ரிகுலேஷன் (மாநில பாட திட்டத்தில்) பள்ளியில் படித்த மாணவர்கள் - கொஞ்சம் பாதிப்பு

2. வசதி குறைவான குடும்பத்தை சேர்ந்த மெட்ரிகுலேஷன் (மாநில பாட திட்டத்தில்) பள்ளியில் படித்த மாணவர்கள் - அதிகம் பாதிப்பு

3. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் - மிக அதிகம் பாதிப்பு

4. கிராமப்புற மாணவர்கள் - மிக மிக அதிகம் பாதிப்பு

5. கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் - மிக மிக மிக அதிகம் பாதிப்பு.

6. பொருளாதாரத்தில் மிகவும் அடி நிலையில் இருக்கும் கிராமப்புற, அரசு பள்ளி மாணவர்கள் - மிக மிக மிக மிக அதிக பாதிப்பு.. கொடூரமான பாதிப்பு.. கனவு கூட காண முடியாது.ஏழ்மையிலும் போராடி படித்து நல்ல மதிப்பெண் பெற்ற அரியலூர் அனிதா, நீட் கொடுங்கரத்துக்கு தம்மையே ஆகுதியாக்கி முதல் பலியாகிப் போனார். அனிதாவைத் தொடர்ந்து நீட் தேர்வு நடத்தியவர்கள் கொடுத்த உளைச்சலில் தமிழகத்தில் உயிர் பலி தொடர்ந்தது.


மேலே சொன்னதில் எந்த ஜாதி, மதத்தை சேர்ந்தவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு அதே பாதிப்பு தான்.


ஒரு சின்ன உதாரணம்.. நான் கிராமபுறத்தில் அரசு பள்ளியில் படித்து இன்று மாதம் லட்சக்கணக்கில் வருமானம் பெறும் பிற்படுத்தப்பட்ட ஜாதியை(நான் சொல்லல... சமுதாயத்தில் அழைக்கப்படும்) சேர்ந்தவர்.. சென்னையில் எனது மகன் ஒரு CBSE பள்ளியில் வருடம் 1 லட்சத்துக்கும் அதிகமாக பணம் கட்டி படித்து வருகிறான்.. அவன் இப்போது 7ம் வகுப்பு.. அவனுக்கு நீட் நல்லதா?? ஆம்.. அவன் ஒரு சிறந்த (என்று கூறப்படுகின்ற) CBSE பள்ளியில் படிக்கிறான்.. என்னால் அவனுக்கு வருடத்திற்கு லட்சக்கணக்கில் பணம் செலவழித்து 8ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை "NEET" கோச்சிங் அனுப்ப முடியும்.. "Best CBSE school + Best NEET coaching".. அதனால் எனது மகனால் எளிதில் அந்த தேர்வில் வெற்றி பெற முடியும்.. நான் பிற்படுப்பட்ட சமூகமாக இருந்தாலும் எனக்கு நீட் நல்லது தான்..


ஆனால் என்னோட உறவினர்கள் எல்லோரும் இன்னும் அதே கிராமத்தில் தான் இருக்கிறார்கள்.. அவர்கள் குழந்தைகள் அதே கிராமத்து அரசு பள்ளியில் தான் படித்து வருகிறார்கள்.. அதில் நிறைய குழந்தைகள் எனது மகனை விட மிகவும் திறமை மற்றும் அறிவு உடையவர்கள்.. ஆனால் எனது பையனுக்கு எளிதாக கிடைக்க வாய்ப்பிருக்கும் மருத்துவ இடம் அவர்களுக்கு கனவில் கூட கிடைக்காது.. இதே மாணவர்கள் பழைய முறையில் தேர்வு எழுதினால்.. எனது மகனை விட அதிக மதிப்பெண் பெற்று அவர்களுக்கு அந்த இடம் கிடைக்கும்..


நான் படித்த அரசுப்பள்ளியில் படித்து கடந்த 20 வருடமாக (2016க்கு முன்) ஒருவராவது மருத்துவதுறைக்கு சென்று விடுவார்கள்.. அவர்கள் எல்லோரும் இன்று தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவர்கள்.. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அது முடியவில்லை.. இனியும் முடியாது... இதை தான் நீட் செய்தது..


எனது பையனுக்கு நீட் நல்லது என்று அதற்க்கு நான் சப்போர்ட் செய்தால்.. என்னைப்போல் கொடூர மனம் கொண்டவர்கள் யாரும் இருக்க முடியாது..


காலம் காலமாக வசதியாக நகர்புறத்தில் வாழ்ந்துவரும் மக்கள் சமூக நீதி பற்றிய அறிவு இல்லாமல் பேசுவதற்கும்.. சமூகத்தின் நிலையை நன்கு அறிந்து ஆனாலும் தனக்கு எது நல்லது என்று மட்டும் யோசிச்சு அதற்க்கு முட்டு கொடுக்கும் மக்களால் தான் சமூக நீதிக்கு அதிக பாதிப்பு..


"நீட்" போன்ற நுழைவு தேர்வுகளை இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால் விளைவுகள் அதிகம்..

நீட் வெற்றி என்பது 11 & 12 லில் எடுக்கும் பயிற்சி அல்ல நண்பர்களே, அது கல்வியின் தொடக்கம் முதல் நம்மோடு பயணிக்க வேண்டிய கலாச்சாரம். நம் பள்ளி கல்வியின் கட்டமைப்பையே மாற்ற வேண்டும். ஆண்டுக்கு பல லட்சம் பட்டதாரிகளை உருவாக்கும் ஒரு தேசம், வெறும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களை இடை நிலை ஆசிரியர்களாக அனுமதித்து எப்படி கல்வி கண்ணை ஊனமாக்கும்?. 25 ஆயிரத்திற்கும் மேல் சம்பளத்தை அள்ளி கொடுக்கும் அரசு, இதை யோசிக்க வேண்டாமா?. தொலை தூர கல்வியில் PG , படித்தவர்கள் எப்படி 12 ஆம் வகுப்பு எடுக்க முடியும்?. இது மாணவர்களுக்கு அரசு செய்யும் துரோகம் அல்லவா?. இதை ஏன் யாரும் பேசுவது இல்லை?. யோசியுங்கள் makkale?



கமெண்ட்டில் "நீட்" தேர்வு முறை எவ்வளவு பாதிப்பானது என்பது பற்றிய பதிவு 


முதலில் என்னைப் பற்றி சொல்லிக்கொள்கிறேன்.

நான் பன்னிரண்டாம் வகுப்பில் 89.3 விழுக்காடு பெற்றேன். அந்த வருடமே நீட் தேர்வை எழுதினேன். அந்த வருடம் தான் நீட் தேர்வை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். அந்த வருடம் வெறும் Ncert biology மட்டுமே படித்திருந்தேன்.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் தேர்வு எழுதியவர்கள் : 88,000

என்னுடைய தரவரிசை எண்(rank) : 8028

தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் கிடைத்தது. ஆனால் நான் செல்லவில்லை.

அதே ஆண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்சில் சேர்ந்தேன். பயிற்சிக்கு செல்லும் அளவிற்கு பண வசதியும் இல்லை.

நீட் தேர்வுக்கு பயன்படும் புஸ்தகங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அதனால் pdf வடிவில் உள்ள புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். இரண்டிற்கும் படிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் தேர்வு எழுதியவர்கள் : 1,13,000

என்னுடைய தரவரிசை எண்(rank) : 7300

இந்த முறையும் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.

இப்போது கேள்விக்கு வருகிறேன்.

கேள்வி பாகம் 1 : ஆம், கடினமானது.

கேள்வி பாகம் 2 : ஆம், பயிற்சிக்கு செல்லாமலும் வெற்றி பெற முடியும். ஆனால் மருத்துவ சீட் பெரும் அளவிற்கு முடியாது.

விளக்கம்:

Biology : படிக்க மிகவும் எளிது மற்ற இரண்டையும் பொறுத்த வரையில். அதீத ஞாபக சக்தி , பொறுமை இருந்தால் போதும் . இதற்கு ncert (முதல் அட்டையில் இருந்து பின் அட்டை வரை ) மட்டும் படித்தாலே போதும். 330 மதிப்பெண்கள் பெறலாம். (என்னால் நிரூபிக்க முடியும் )

மீதமுள்ள மதிப்பெண்களை பெற coaching modules உபயோகமாக இருக்கும்.

கடினமான பகுதி : இதில் வெறும் facts அடிப்படையில் தான் கேள்விகள் வரும். ஆனால் ncert concepts மிகவும் கடினமானதாக இருக்கும். Molecular basis of inheritance போன்ற பாடமெல்லாம் யாராவது சொல்லி கொடுத்தால் தான் புரியும். அதுபோல கேள்விகளும் கடினமாக இருக்கும்.

Chemistry & physics :

Physics மிகவும் கடினமாக இருக்கும். இரண்டையும் சொல்லித் தர கண்டிப்பாக ஆசிரியர் தேவை. இதனை படிக்க மிகவும் கடினமாகவும் மேலும் இதில் வரும் கணக்குகளை செய்ய ஆசிரியர் உதவி கண்டிப்பாக வேண்டும்.

பயிற்சி பள்ளியில் என்ன செய்கிறார்கள்:
Ncert க்கும் மேல் நல்ல புஸ்த்தகம் கொடுக்கிறார்கள்.
அநேக கணக்குகள் அன்றைய தினத்து பாடத்தில் இருந்து கொடுத்து அவைகளை solve செய்ய சொல்லி தருகிறார்கள்.( ஒவ்வொரு பாடத்திலும் இருந்து வரும் ஒவ்வொரு concept - களுக்கும் ஒரு கேள்வி தரப்படுகிறது. அப்போது அந்த மாணவனால் எல்லா கணக்குகளையும் செய்ய இயலும )
அநேக தேர்வுகளை நடத்துகிறார்கள்.
படிக்க நல்ல இடத்தை தருகிறார்கள்.
சக மாணவர்கள் போட்டி போட்டு கொண்டு படிக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள ஒன்றும் தனியாக படிக்கும் பொழுது கிடைக்காது. என்னத்தான் படித்தாலும் கணக்குகளை செய்ய இயலாவிட்டால் சீட் பெறமுடியாது.கணக்கு செய்ய ஆசிரியர் உதவி வேண்டும். அதற்கு பயிற்சி பள்ளியில் சேர வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.


நன்றி  : கருப்பையா  பாலாஜி,  இளங்கலை கணினி அறிவியல், கோவை அரசு கலைக் கல்லூரி.

தொகுப்பு  :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment