வருடம் கி.பி.2166.
மூன்று கொரியா வெளிநாட்டுப் பயணிகள்........ சோங் , கிம் மற்றும் சோய் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
சோங் முன்னார், கேரளா சுற்றுலாத் தலத்தில் தங்கி இருக்கிறார். அங்கிருக்கும் சுற்றுலா மேலாளரிடம் கேட்கிறார். அதோ அந்த மலைக்கு அந்தப் பக்கம் என்ன ஊர் இருக்கிறது? அங்கு போகலாமா? என்று. மேலாளர் சொல்கிறார். அந்த மலையில் கடைசி ஊர் "குமுளி" அதற்கப்பால், மலைச்சரிவு முடியும் இடத்தில் The Great Tamilian Desert தொடங்குகிறது. அங்கிருந்து முன்னூறு கி.மீ. தூரத்தில் கடல் வந்து விடும்.....
"இடையே ஒன்றுமில்லையா" என்று சோங் கேட்கிறார். "இல்லை சார் வெறும் புதர்ப் பாலைவனம்...."
"இடையே ஒன்றுமில்லையா" என்று சோங் கேட்கிறார். "இல்லை சார் வெறும் புதர்ப் பாலைவனம்...."
"அங்கு மக்களே வாழவில்லையா ?.- சோய்
"இருந்தார்கள் ஒரு நூற்றைம்பது வருடம் முன்பு,,,,அங்கே பத்தாயிரம் வருடத்திற்கு மேற்பட்ட ஒரு மேலான நாகரிகம் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்...... அங்கே எல்லா நதிகளும் வறண்டதால், பாலைவனமாகி விட்டதனால், வேறு வேறு இடங்களுக்குக் குடி பெயர்ந்து விட்டார்கள்"
"ஓ ! நீராதாரங்களைப் பாதுக்காக்கத் தெரியாத முட்டாள்களா............ அப்புறம் எப்படி "மேலான நாகரிகம்" என்று சொன்னீர்கள்?"
சிரித்தபடியே, பியரை எடுத்து உறிந்து hammock இல் ஆட ஆரம்பித்தான் சோங்
கிம், பாலக்காட்டில் ஒரு ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்திருந்தான். அவனும் தன் Relationship Manager உடன் சோய் போலவே ஒரு பேச்சை நிகழ்த்தினான்.
அப்படியே நெல்லூருக்கு வந்திருந்த சோய்வும் இதற்கும் தெற்கே என்ன இருக்கிறது என்று கேட்டு... வந்த பதிலுக்கு அப்படியே பேச்சை நிகழ்த்தினாள்...........
இப்படி ஒரு கெட்ட கனவிலிருந்து நான் விழித்தேன் என்று பொய் சொல்ல மாட்டேன்.
இன்றைய தமிழ்நாட்டின் நிஜம் அங்கேதான் சென்று கொண்டிருக்கிறது.
யார் காப்பாற்ற முடியும்?
ஆளுபவர்களா? அரசியல்வாதிகளா? அரசா? - இவர்கள் அல்லது இவைகள் என்றும் எதையும் "ஆக்கியதாக" வரலாறு இல்லை.
மக்களாகிய நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறையும், காவிரி, முல்லைப் பெரியார், பாலாறு போன்ற நிகழ்வுகளில் மட்டும் பொங்கி விட்டு அத்துடன் அவரவர் நிஜ வாழ்க்கைக்கு திரும்பக் கூடாது.
தமிழகத்தின் தண்ணீர் எதிர்காலம் ஏற்கனவே ஒரு பாலைவனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.....
நாளைய நம் குழந்தைகளுக்காக, இன்று நாம் என்ன செய்யப் போகிறோம் ?
எப்போது, எப்படி, யார் யார் என்றெல்லாம் விவாதித்து முடிவு செய்து காரியத்தில் இறங்க வேண்டும்....
இந்தப் பதிவு மூலம், செயலாற்ற ஒன்று சேருங்கள்;
அதற்காகவே இந்தப் பதிவு !!!
No comments:
Post a Comment