1,சுமையா (ரலி) அவர்கள்
இஸ்லாத்தின் ஆரம்ப காலம் அது. நபி (ஸல்) அவர்களின் நற் போதனைகளை ஏற்ற நபித் தோழர்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வந்தனர். காவிர்களின் தொல்லைகள் அதிகரித்த போதிலும் இஸ்லாத்தை ஏற்ற ஆண்களும் பெண்களும் தம் கொள்கையில் உறுதியாக இருந்தனர். கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்ற பெண்களில் முதன் முதலில் தன்னுயிரைத் தியாகம் செய்த பெருமை சுமையா (ரலி) என்ற வீரத்தாயையே சாரும். எழுதுவதற்கும் சொல்வதற்கும் எளிதாயிருப்பினும் சுமையர (ரலி) அடைந்த துன்பமும் துயரமும், வேதனையும் யார் அறிவர்?
ஹஸரத் அம்மார் (ரலி) அவர்களின் அன்பு தாயார் தான். சுமையா (ரலி) அவர்கள், இரக்க மற்ற காபிர்கள் அவர்களை கடும் வெயிலில் சூடான தகிக்கும் பொடிக் கற்கள் மீது படுக்க வைத்து வேதனை செய்தார்கள். உருக்குச் சட்டை அணிவித்து கடும் வெயிலில் நிறுத்தி வைத்து வேதனை செய்தார்கள்.
ஒரு நாள் கொடியவனான இரக்க மற்ற அபூஜஹீல் அவர்களைத் திட்டி, கோபப்படுத்திய பின், ஓர் ஈட்டியினால் ஒரு குற்றமும் செய்யாத சுமையா (ரலி) அவர்களைக் குத்திக்கொன்றான். ஒரு கோத்திரத்தின் தலைவன்- வம்பன் ஒரு பெண்ணைக் கொலை செய்து தன் கோழைத் தனத்தை உறுதி செய்துகொண்டான்.
2,ஸஃபியா பின்து உபைதா (ரலி)
ஹிஜ்ரி 12ம் ஆண்டு நடந்த திமிஷ்கு போரில் காலித் பின் வலீது (ரலி) அபூ உபைதா (ரலி) ஆகிய இரு பிரதான நபித் தோழர்களும் கலந்துகொண்டார்கள் அப்போரின்போது முஸ்லிம் வீரப் பெண்கள் பலர் கலந்துகொண்டனர். சண்டை தொடங்கு முன் ஸபிய்யா (ரலி) குதிரை மீது தாவி ஏறி வாளைச் சுழற்றியவாறு, பின்வரும் வீரமிக்க உரையை நிகழ்த்தினார்.
கற்புடைய “முஸ்லிம் வீர மங்கையரின் கருவில் கனிந்த முஸ்லிம் வீரர்களே! மெய்க்கும் பொய்க்கும் போர் மூன்டிருக்கிறது. அல்லாஹ் மீது ஆணை! பசித்த புலிகளைப் போல் வீறுகொண்டு கிளம்புங்கள்! எதிரிகளை வெட்டி வீழ்த்துங்கள்! கிடைத்தால் வெற்றி! அது கிடைக்காவிட்டால் புனித ஹிஷ்த் பதவி! அல்லாஹு அக்பர்’
இவ்வீர உரையைக் கேட்ட முஸ்லிம்களின் நரம்புகளில் ஓடிய உதிரத்தில் சூடேறிற்று! இரு தரப்பினருக்குமிடையி0ல் பயங்கரமான போர் மூண்டது. இதில் ஸபியா (ரலி) ஆண் வீரர்களுக்குச் சமமாக எதிரிகள் பலரை வெட்டி வீழ்த்தி வாகை சூடினார்கள்.
3,அமாமா பின்த் ஜுபைர் (ரலி)
அது கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம். அப்துல்லா பின் ஸஅத்(ரலி) தலைமையின் கீழ் ஆப்ரிக்க நாட்டுக்குச் சென்ற படையில் இஸ்லாமிய வீர மங்கை அமாமா ரலி பங்கு பற்றினார்கள். இவர்கள் இஸ்லாமிய வீரர்கள் மத்தியில் உணர்வூட்டும் உரை நிகழ்த்தி ஆர்வமூட்டினார்கள். ஆண் வீரர்களுக்குச் சமமாக வாளேந்தி வீரர் தளபதி அப்துல்லா (ரலி) அவர்களுக்கு உதவியாக அருகிலே இருந்து வீர சாகஸங்கள் புரிந்தார். இருவருமாகச் சேர்ந்து எதிரிப் படைத்தலைவனின் தலையை வெட்டி சாய்த்தனர். ஆப்ரிக்கப் படை பல திசைகளிலும் சிதறி ஓடிற்று.
4,ஸபிய்யா (ரலி) அவர்கள்
இவர் ஹம்ஸா (ரலி) அவர்களின் சகோதரியும் நபி(ஸல்) அவர்களின் மாமியும் ஆவார்கள். பத்ருப் போரில் படுதோல்வியடைந்த காபிர்கள் ஹிஜ்ரி 2ல் நடந்த உஹத் போரில் வீராவேசத்துடன் கலந்துகொண்டனர். முஸ்லிம் வீரர்கள் ஆரம்பத்தில் காபிர்களைத் தாக்கி வெற்றிபெற்றனர்.
ஆயினும் நபி (ஸல்) அவர்களின் கட்டளை மீறப்பட்டதால், முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். இந்த இக்கட்டான கட்டத்தில் ஸபிய்யா (ரலி) அவர்கள் முஸ்லிம் வீரர்களை அழைத்து, அவர் களை உற்சாகப்படுத்தி, ஆர்வமூட்டிய தால் முஸ்லிம்கள் மீண்டும் உத்வேகத் துடன் போரில் ஈடுபட்டனர். இப்போ ரில் ஹம்ஸா (ரலி) அவர்களின் ஆக் கமும் ஊக்கமும் மகத்தானது.
அகழ்போரின்போது முஸ்லிம் பெண்மணிகளை ஒருகோட்டையில் பாதுகாப்பாக இருப்பதற்கு நபி (ஸல்) ஒரு ஹைபியை உதவியாளராக நியமித்து வைத்திருந்தார்கள்.
யூதனொருவன் முஸ்லிம் பெண்கள் இருந்த கோட்டைக்கருகில் வேவு பார்ப்பதற்கா மறைந்திருந்ததை ஸபிய்யா (ரலி) அவர்கள் அவதானித்தார்க்ள. அந்த யூதனைத் தாக்கி வரும்படி ஆண்ஸஹாபியிடம் ஸபிய்யா (ரலி) கூற, அவரின் பலவீனம் காரணமாக ஆண் ஸஹாபியால் அவ்வேலையைச் செய்ய முடியாமற்போகவே, வீரப் பெண்மணியான ஸபிய்யா (ரலி) கூடாரத்தின் ஓர் முளைக்கம்பைப் பிடுங்கி பதுங்கியிருந்த யூதனைக் கொன்று எதிரிகள் தங்கியிருந்த பகுதிக்கு இறந்த உடலை வீசி எறிந்து விட்டார்கள். இது சமயம் அவர்களின் வயதோ ஐம்பதுக்கும் அதிகமாக இருந்தது. இந்த வயதில் அவர்களின் வீரதீரச் செயல் இக்கால ஆண்களுக்கும் பெரிய படிப்பினையாகவே இருக்கின்றது.
5,ஜுவைரியா (ரலி)
ரோமானியர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நடந்த யர்மூக் போர் மிகவும் பயங்கரமானது. இதில் எதிர் தரப்பில் இரண்டு லட்சம் வீரர்கள் இருந்தனர். முஸ்லிம்களோ முப்பத்து ஐயாயிரம் வீரர்கள் மட்டுமே. ஆரம்பத்தில் முஸ்லிம் வீரர்கள் ரோமானியரின் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறினர். பலர் உயிரிழந்தும் படுகாயமடைந்தனர்.
முஸ்லிம் படையினருக்கு உணவு, நீர் வசதிகள் செய்துகொடுக்கவும், காயமடைந்த வீரர்களுக்குச் சிகிச்சை செய்யவும் முஸ்லிம் பெண்களின் படையும் வந்திருந்தது. அப்படையில அமீர் முஆவியாவின் மகளார் வீர மங்கை ஜுவைரியாவும் இருந்தார்.
எதிரிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முஸ்லிம்கள் தினறுவதைக் கண்டதும் ஜுவைரியா கொதித்தெழுந்தார். பெண்கள் அனைவரையும் திரட்டினார். வாட்களை ஏந்தியவாறு பெண்கள் படை புறப்பட்டது. இதனைக் கண்டதும் ஆண்கள் வீறு கொண்டனர். ஜுவைரியா எதிரிப்படையினும் புகுந்து வாளைச் சுழற்சி சுழற்றி வீசி னார். எதிரிகள் திகைத்தனர். ஜுவைரியாவின் உடலில் பல காயங்கள் பட்டன. அவ் வீர மங்கை காயங்களைப் பொருட் படுத்தவில்லை. முஸ்லிம்கள் வெற்றிபெறும் வரை பின்வாங்கவும் இல்லை.
முஸ்லிம்களிடையே வெற்றி முழக்கம் ஏற்பட்ட பின்னரே குதிரையிலிருந்து சோர்ந்து கீழே சாய்ந்தார்..........
இன்று உலக மகளிர் தினம். தடைகள் பல தாண்டி சாதனை படைத்து வரும் ஒவ்வொரு பெண்ணையும் கொண்டாடும் வகையில் இந்த பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. நோக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறையை தக்க நேரத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வாக்குறுதி கொள்வோம் !!
ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.
இன்று உலக மகளிர் தினம். தடைகள் பல தாண்டி சாதனை படைத்து வரும் ஒவ்வொரு பெண்ணையும் கொண்டாடும் வகையில் இந்த பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. நோக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறையை தக்க நேரத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வாக்குறுதி கொள்வோம் !!
ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment