Thursday, 30 April 2020

மரணம் கொரோனாவால் வருமா இல்லை பட்டினியால் வருமா ?? ஒரு சிறப்பு பார்வை..

இந்தியாவிலே யே டாப் மூன்று மாநிலங்களில் கொரோனா வைரசைசிறப்பாக கட்டுப் படுத்திய மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருந்தது.
லாக் டவுன் முற்றிலுமாக கடைபிடிக்கப்படவில்லை என்றாலும் ஓரளவு எஃபெக்ட்டிவ்வாக இருந்ததே இதற்குக் காரணம்.
உயர்நடுத்தர, மற்றும் நடுத்தர மக்களை விடுங்கள்.. அன்றாடம் உழைத்தால்தான் சோறு என்ற நிலையில் இருக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கூட அங்கங்கே புலம்பினாலும் எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டு இதற்கு ஒத்துழைத்தார்கள். பசித்த வயிறுகளை எல்லாம் தேடித் தேடி உதவிய தன்னார்வலர்களுக்குதான் நாம் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு ...ஆனால் இந்தளவுக்கு கட்டுப்பாட்டோடு இருந்ததை திடுமென்று ஐந்து நகரங்களில் இந்த கம்ப்ளீட் லாக்டவுன் என்று அறிவித்து மொத்த ஃபர்னீச்சரையும் தூக்கிப் போட்டு சுக்கு நூறாக உடைத்திருக்கிறது இந்த அடிமை தமிழக அரசு..
வழக்கம்போல எந்த முன்னேற்பாடும் இல்லாமல் வந்த இந்த அறிவிப்பபால் நேற்று சென்னை, மதுரையில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பிடுங்கி panic buying செய்திருக்கிறார்கள்.. ஓரளவு கட்டுப்பாட்டோடு வீட்டுக்குள் அடங்கி இருந்த மக்கள் வேறு வழி இன்றி வீதிக்கு வந்து ஒருவர் மீது ஒருவர் விழுந்தடித்து பொருட்களை வாங்கி இருக்கிறார்கள்.
கொரோனா தொற்று சமூகப் பரவலாக ஆகிவிட்டதோ என்ற பயத்தில் தமிழக அரசு அறிவித்த இந்த எதிர்பாராத சடன் லாக்டவுன்தான் இப்போது இந்த தொற்று சமூகப் பரவலாக ஆவதற்கே வழி வகுத்திருக்கிறது.
ஒரே ஒரு தொடுகை போதும், ஒரே ஒரு தும்மல் போதும் கொரோனா பரவுவதற்கு. அவ்வளவு ஏன்.. ஐந்து நிமிடம் கொரோனா நோயாளியின் அருகில் இருந்து பேசினாலே தொற்று பரவுவது உறுதி..
இந்த நிலையில் இத்தனை மக்கள் இப்படி நெருக்கி அடித்து பொருடகளை வாங்கியதில் தொற்று பரவாதவர்களுக்கு கூட நிச்சயமாக தொற்று பரவி இருகக வாய்ப்பிருக்கிறத. இது ஒரு தமிழக அரசு ஏற்பாடு செய்த சமூகப் பரவல்.. இப்படி ஒரு கேவலமான ஐடியாவை தமிழக அரசுக்கு தந்த புத்திசாலி யார் என்றுதான் தெரியவில்லை.
மக்களை சொல்லியும் குற்றமில்லை. தேனியில் பரவாயில்லை.. முதலில் உழவர் சந்தையை புது பஸ்ஸ்டாண்டுக்கு மாற்றினார்கள். மக்களை சமூக இடைவெளி விட்டு நிற்க செய்து பொருட்களை வாங்க வைத்தார்கள். அது ஓரளவுக்கு எஃபெட்டிவ்வாக இருந்தது. திடீரென்று உழவர் சந்தைகளை மூடினார்கள். நகராட்சி வண்டிகளின் மூலம் இனி காய்கறிகள் தெருத்தெருவாக விற்கப்படும் என்று அறிவித்தார்கள்.. அது கூட புத்திசாலித்தனமான ஐடியாவாகவே இருந்தது.
அதே மாதிரி வண்டிகளும் பல பகுதிகளுக்கு வந்தன.. எல்லாம் இரண்டு நாட்களுக்குதான்.. அப்புறம் எந்த வண்டிகளும் வரவில்லை. வந்தாலும் வாடிய வதங்கிய காய்களாக கொண்டு வந்தார்கள். வேறு வழி இல்லாமல் மக்கள் காய்கறிகளை தேடி வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுப் போக ஆரம்பித்தார்கள்.
ஆனால் இந்த மளிகைப் பொருள் விஷயத்தில் தேனி நிர்வாகம் ஓரளவு வெற்றிகரமாகவே செயல்பட்டிருக்கிறது. தேனியின் முன்னணி டிபார்ட்மெண்டல் ஸ்டோகளை ஒருங்கிணைத்தார்கள். அந்த ஸ்டோர்களின் எண்களை பொதுவில் விநியோகித்தார்கள். நாம் வாட்ஸ் ஆப் மூலம் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களுக்கு ஆர்டர் போட்டால் வீட்டுக்கே வந்து அனைத்துப் பொருட்களையும் விநியோகம் செய்து விட்டுப் போகிறார்கள். அவர்களும் எங்களிடம் ஸ்டாக் இருக்கும் வரைக்கும்தான் இது சாத்தியம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஆக இனி தமிழகத்தின் எதிர்காலம் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
மருத்துவர் அமலோற்பவநாதனின் கருத்துப்படி இந்த லாக்டவுனின் மூலம் கொரோனா பெருந்தொற்றை தள்ளிப் போடலாமே ஒழிய முற்றிலுமாக ஒழிக்க முடியாது..
அதாவது எவ்வளவு நாள் லாக் டவுன் அறிவித்தாலும் இந்த தொற்று முற்றிலுமாக நிற்க வாய்ப்பே இல்லை என்கிறார்.
அது உண்மைதான். அதிலும் தமிழக கொரோனா நோயாளிகளில் 90 சதவீதம் பேர் அசிம்ப்ட்டமேட்டிக்காக இருக்கிறார்கள். அவர்ளுக்குள் நோய் இருப்பதே அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவதே இல்லை.. ஆனால் அவர்கள் மூலம் நோய் வழக்கம் போல பரவத்தான் செய்கிறது.
ஆக முப்பது நாட்கள் இல்லை.. முன்னூறு நாட்கள் ஆனாலும் இந்த அசிம்ட்டமெட்டிக் தொற்றாளர்கள் இருக்கும்வரை கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கவே முடியாது என்பதே நிஜம்.. அத்தனை அமசிம்ட்டமடிக் தொற்றாளர்களையும் அடையாளம் காண வேண்டும் என்றால்ஒட்டு மொத்த ஏழரை கோடி தமிழர்களையும் டெஸ்ட் செய்து ஆக வேண்டும். அதற்கான வாய்ப்போ வசதியோ சத்தியமாக நம் நாட்டில் அல்ல.. நம் மாநிலத்தில் சாத்தியமே இல்லை.
கேரளாவில் எப்படி நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்..?
சிம்பிள்.. உணவு, அத்தியாவசிய தேவை என்று மக்கள் வெளியே வர வாய்ப்பையே அரசு அவர்களுக்கு தரவில்லை. உணவில்லாதவர்களுக்கு உணவை அரசே வழங்கியது. அதன் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.. தமிழகத்தில் அப்படியா நடந்தது..?
இப்போதைக்கு நமக்கிருக்கும் ஒரே வழி தடுப்பூசிகளும் கோரோனா எதிர்ப்பு மருந்துகளும்தான்.. அதுவும் இப்போதைக்கு நம் கைவசம் இல்லை.
சரி.. இதற்கு என்னதான் தீர்வு..?
இப்படியே லாக்டவுனை நீட்டித்துக் கொண்டே போனாலும் பாதி மக்கள் பட்டினியால் செத்துவிடுவார்களே.. என்னதான் செய்ய முடியும்.?
அதற்கும் மருத்துவர்கள் ஒரு தீர்வை சொல்கிறார்கள்.. நினைக்கவே அச்சமாக இருப்பினும் அந்த தீர்வுதான் சரி என்று நமக்குத் தோன்றுகிறது.
தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் இந்த 90 சதம் அசிம்ப்ட்டமேட்டிக் தொற்றாளர்களுக்கு தமக்கு தொற்று வந்தது தெரியவில்லை என்பதைத் தாண்டி அவர்களை அறியாமலேயே அவர்களது உடல் அந்த தொற்றுக்கு எதிராக போராடி தானாக குணமாகிவிடுகிறது என்பதுதான் நம் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் சிறப்பு.
கோமார்பிட் கண்டிஷன்ஸ் எனப்படும் சிக்கலான பிரச்சினை உள்ளவர்களான இதயநோய், நுரையீரல் பிரச்சினைகள், உயர் சர்க்கரை மற்றும் கட்டுப்படாத உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல கோமார்பிட் கண்டிஷன் உள்ளவர்களும் வயதானவர்களும்தான் இந்த தொற்று காரணமாக அதிகமாக பலியாகிறார்கள்.
மருத்துவர்கள் இப்போதுதான் இந்த ஹெர்ட் இம்யூனிட்டி தியரியை முன் வைக்கிறார்கள்.
கோரோனா தொற்று வந்தாலே நிறைய பேர் இறந்து போவது ஐரோப்பிய, அமெரிக்க, வளைகுடா நாடுகளின் நிலைமை. ஏனென்றால் அங்கே உள்ள மக்களின் நோயெதிர்ப்பு சக்தி அவ்வளவுதான்.
ஆனால் இவ்வளவு அதிகமான நோயெதிர்ப்பு சக்தி உள்ள நம் நாட்டில் பேசாமல் லாக் டவுனை தளர்த்தி விடுவதுதான் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.. அதாவது வயதானோர், கோ மார்பிட் கண்டிஷன் உள்ளோர் குழந்தைகள் ஆகியோரை மட்டும் பத்திரமாக தனிமைப் படுத்திவிட்டு மற்றோரை எல்லாம் வெளியே அனுமதிப்பதுதான் சிறந்த வழி என்கிறார்கள்..
உடனடியாக தடுப்பூசியோ, அல்லது மருந்தோ கண்டுபிடிக்கப்பட முடியாது.. அதற்கு எப்படியும் ஒரு வருடமாவது ஆகும். அது வரை இந்த லாக்டவுனை நீட்டித்தால் பாதி மக்கள் தொகை மடிந்துவிடும்.. அப்படியே கண்டு பிடிக்கப் பட்டாலும் நூற்று முப்பது கோடி மக்களுக்கும் அதை எப்படி போடுவது.? எவ்வளவு பணம் செலவாகும்.. இது மாதிரி பிரச்சினைகள் எல்லாம் உள்ளன.
அதே போல லாக்டவுனை முடிவுக்கு கொண்டு வந்து கொரோனாவை சமூகப் பரவல் ஆக்கும் பட்சத்தில் அதிலும் வயதானோர் கோ மார்பிட் கண்டிஷன் உள்ளோர், குழந்தைகள் ஆகியோர் தனிமைப்படத்தப்படும் பட்சத்தில் ஆரோக்கியமானவர்கள்தான் வேளியே நடமாடுவார்கள்..
இயல்பாகவே அதில் தொண்ணூறு சதவீதம் பேரின் உடல் தானாக நோயை சரி செய்து கொள்ளும்.. எஞ்சிய பத்து சதம் பேருக்கு மருத்துவம் தரலாம். சரி செய்து கொள்ளலாம். அதை விட்டு லாக்டவுனை நீட்டித்துக் கொண்டே போனால் கோரோனாவால் உயிரிழப்பவர்களை விட அதிக அளவு மக்கள் பட்டினியால் செத்துப் போவார்கள் என்கிறார்கள்.
துவக்கத்தில் இருந்தே இந்த ஹெர்ட் இம்யூனிட்டி சிஸ்டத்துக்கு எதிராகவே நம் மனது சிந்தித்தாலும் இன்றைய நிலையில்,, நம் நாட்டு மக்களின் நோயெதிர்ப்பு சக்தியையும் மனதில் வைத்துப் பார்த்தால் எனக்கென்னமோ இந்த தியரிதான் இப்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே வழி என்று தோன்றுகிறது.
மத்திய அரசும், அதன் அடிமையாக கால் வருடும் இந்த தமிழக அரசும் என்ன செய்யப் போகிறது என்றுதான் தெரியவில்லை.-
மரணம் கொரோனாவால் வருமா.. இல்லை பட்டினியால் வருமா என்பதே அடிப்படை தினத் தொழிலாளியின் அன்றாட கேள்வியாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.. 
நமக்குள்ளும் இது பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் துவங்கட்டும்,,

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Wednesday, 29 April 2020

வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் குடிமக்களை 500 விமானங்கள், 3 கப்பல்கள் மூலம் அனுப்ப திட்டம் !!


Image may contain: one or more people
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவது: 500 விமானங்கள், 3 கப்பல்கள் சிக்கித் தவிக்கும் குடிமக்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக்கூடும்!!!

மூன்று இந்திய கடற்படை யுத்தக் கப்பல்கள் மற்றும் 500 விமானங்கள் காத்திருப்புடன் இருப்பதால், கொரோனா வைரஸ் நெருக்கடியின் மத்தியில் வளைகுடா நாடுகளில் இருந்து சிக்கித் தவிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோரின் மிகப்பெரிய திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இது அனைத்தும் தயாராக உள்ளது என்பதற்கான தெளிவான குறிப்பை இந்திய அரசு அளித்துள்ளது.
வைரஸ் பாதித்த வளைகுடா நாடுகளில் உள்ள நூறாயிரக்கணக்கான இந்தியர்களிடமிருந்து திருப்பி அனுப்பப்படுவதற்கான கூச்சல் அதிகரித்து வருவதால், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று, உலகளாவிய தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நீல காலர் தொழிலாளர்கள் சிறப்பு திருப்பி அனுப்பப்படுவதில் முதல் இடங்களைப் பெறுவார்கள் என்று கூறினார் விமானங்கள். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் அடுத்தவர்களாகவும், பின்னர் வேலைக்காக பயணித்த இந்தியர்களாகவும் இருப்பார்கள்.
"இந்திய வெளிநாட்டவர் தொழிலாளர்கள் திரும்புவதற்கான முதல் தேர்வைப் பெற வேண்டும் என்பதில் பிரதமர் மிகவும் தெளிவாக இருந்தார்" என்று இந்துஸ்தான் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.
ஒரு பட்டியலைத் தொகுக்க இந்திய பணிகள் கேட்கப்படும் என்றும், திருப்பி அனுப்பப்படுவது அந்தந்த மாநிலங்களுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
"இது ஒரு சிக்கலான பயிற்சியாக இருக்கும். வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பயணங்கள் இந்தியாவுக்குத் திரும்ப விரும்பும் நபர்களின் பட்டியலைத் தொகுத்து, அவர்களுக்கு முன்னுரிமை அளித்து, பின்னர் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஒருங்கிணைக்கும். அவர்கள் இறுதியில் இந்தியாவில் தரையிறங்கும் போது, அனைவரும் கண்டுபிடிக்கப்பட வேண்டும் நபர் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அல்லது நேராக மருத்துவமனைக்கு அனுப்பப்பட வேண்டும், "என்று அந்த அதிகாரி கூறினார்.  
இந்த மகத்தான பயிற்சிக்கு வெளியுறவு அமைச்சகம் ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறையை அமைக்க வேண்டும், என்றார்.
இந்திய புதிய நிறுவனமான ஏ.என்.ஐ செவ்வாய்க்கிழமை ஒரு உயர் அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி, அரசாங்கம் இந்த சூழ்நிலையை மதிப்பிடுவதாகவும், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் திட்டத்தை கண்டுபிடிப்பதாகவும் கூறினார். "நாங்கள் ஏர் இந்தியா மற்றும் இந்திய கடற்படையை விரிவான வெளியேற்றத் திட்டத்தைக் கேட்டுள்ளோம்." ANI அறிக்கை கூறியது.
இந்திய கடற்படை, அரசாங்கத்திற்கு சமர்ப்பித்த விரிவான வெளியேற்றத் திட்டத்தில், "1,500 இந்தியர்களை வளைகுடா நாடுகளில் இருந்து கடற்படையின் மூன்று போர்க்கப்பல்களில் வெளியேற்ற முடியும்" என்று குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பயத்தின் மத்தியில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வர விருப்பம் தெரிவித்துள்ளனர், ஆனால் விமான நடவடிக்கைகள் மற்றும் பிற பயண முறைகள் நிறுத்தப்பட்டதால், அவர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட பூட்டுதலின் கீழ் நாடு தொடர்ந்து இருப்பதால் மே 3 வரை அனைத்து வகையான பயணங்களையும் இந்தியா நிறுத்தியுள்ளது.
அரசாங்க வட்டாரங்கள் "பல இந்தியர்கள் தூதரகங்களை சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பு கொண்டு, தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான விருப்பத்தைக் காட்டுகின்றன" என்றும் வலியுறுத்தின.
"சுமார் 10 மில்லியன் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் உள்ளனர், அவர்களில் பலர் துறைமுக நகரங்களில் வசித்து வருகின்றனர், அதனால்தான் கடல் வழிகள் வழியாக வெளியேற்றுவதற்கான விரிவான திட்டத்தை வழங்குமாறு இந்திய கடற்படையையும் அரசாங்கம் கேட்டுள்ளது" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த செயல்முறையைத் தொடங்க தேவையான ஏற்பாடுகளுக்காக வெளியுறவு அமைச்சகம் (எம்.இ.ஏ) ஏற்கனவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் (யூ.டி) ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது.
"தேவையான ஏற்பாடுகளுக்காக மாநிலங்கள் / யூ.டி.க்களின் அரசாங்கங்களுடன் நாங்கள் கலந்தாலோசிக்கத் தொடங்கினோம். அதேபோல், இந்தியாவுக்குத் திரும்புவதற்கும், அவர்களுக்கு முழு உதவிகளை வழங்குவதற்கும் விருப்பம் காட்டியவர்களுக்காக விரிவான அறிக்கையைத் தயாரிக்கவும் அனைத்து பணிகள் கூறப்படுகின்றன," MEA வட்டாரங்கள் ANI இடம் தெரிவித்தன.
துபாய் விபுல் நகருக்கான இந்திய துணைத் தூதர் கலீஜ் டைம்ஸிடம் பேசிய அவர்கள், திருப்பி அனுப்பப்படுவது தொடர்பாக டெல்லியில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக இன்னும் காத்திருக்கிறார்கள். வெளியேற்றும் முறை இந்திய அரசாங்கத்தால் முடிவு செய்யப்படும், மேலும் ஏர் இந்தியாவும் இதில் ஈடுபடும் என்று நான் நம்புகிறேன். "
டெல்லியில் இருந்து அவர்கள் முன்னேறியவுடன் ஆன்லைன் பதிவு செய்வதற்கு இந்த பணி உதவும் என்று அவர் கூறினார். "மீண்டும், இந்த விவகாரத்திலும் டெல்லியில் இருந்து இறுதி விளக்கங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்."
பிற இராஜதந்திர வட்டாரங்கள், மத்திய அரசு 'திட்டமிடல் செயல்பாட்டில்' இருப்பதாகவும், வெளிநாட்டு பயணங்கள் எந்த வகையான தரவுகளைத் தேடுகின்றன என்பதற்கான வழிமுறைகளைப் பெற்றவுடன், அதற்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் பதிவுகள் தொடங்கப்படும் என்றும் கூறினார்.
நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான வளைகுடா திரும்பியவர்களைப் பெறுவதற்கான அந்தந்த மாநில அரசாங்கங்களின் தயார்நிலையைப் பொறுத்து திருப்பி அனுப்பப்படுவது மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், 200,000 வெளிநாட்டவர்களுக்கு தங்குவதற்கு தனது மாநிலம் நன்கு தயாராக இருப்பதாகவும், அரங்கங்கள், ரிசார்ட்ஸ், பள்ளிகள் மற்றும் பிற வணிக கட்டிடங்களை அரசு கையகப்படுத்தி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கலீஜ் டைம்ஸ் அறிவித்தபடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சமூகக் குழுக்கள் திரும்பிச் செல்ல விரும்பும் மக்களின் வீக்கம் குறித்து கவலை தெரிவித்திருந்தன.
குடியேறிய கேரள மக்களுக்கான கேரள அரசின் நலன்புரி அமைப்பான நோர்கா ரூட்ஸ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்ப விரும்பும் மலையாளிகளுக்கான பதிவுகளை ஏற்க ஒரு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. தொற்றுநோய்க்கு மத்தியில் திரும்பிச் செல்ல விரும்பும் நபர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் வகையில், 150,000 பேர் சில மணி நேரங்களுக்குள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
(தனுஷா கோகுலன் மற்றும் ANI இன் உள்ளீடுகளுடன்)
செய்தி ஆதாரம்: கலீஜ் முறை 28.04.2020

Friday, 24 April 2020

வடநாட்டு தொழிலாளர் தமிழ்நாட்டில் பெருக காரணம் என்ன? நேர்மையான ஓர் அலசல் !


கொரனா வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது......அந்த நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும் பழைய செய்திகளாகிவிட்டது.. மக்களுக்கும் பழகி விட்டது......இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள்.......இப்போது வட இந்தியர்கள் பற்றிய விவாதம் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது... பான்பராக் வாயர்கள், படிக்காத அறிவுகெட்டவர்கள்.. அங்கே ஓட்டு போட்டுவிட்டு இங்கே பானிபூரி விற்க வந்துவிடுகிறார்கள்,....... மதவெறியர்கள் என்றெல்லாம் பல பதிவுகளை காண முடிகிறது... இன்று அவர்கள் செய்த.... பங்கேற்ற தொழில்கள்..... வேலைகள்..... ஸ்தம்பித்து நிற்கின்றன அல்லது போதிய வேலையாட்கள் இன்றி ஆள்பற்றாக்குறையுடன் நடக்கிறது......

அவை ஒருபக்கம் இருக்கட்டும்...... முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்... கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது... இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்...ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்.. இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்... எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்.. எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல்... பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன... எங்கு பார்த்தாலும் "எந்த பிசினசும் சரியில்லைங்க" என்ற பேச்சுகள்... இதற்கு நடுவில் கொரனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு.....வேலையிழந்தோர் பல லட்சம் ......
இதற்கு பிண்ணனியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் தேடியுள்ளேன்...
1. மது..
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காய்மறையாக இருந்த மதுப்பழக்கம் இப்போது காபி, டீ போல சாதாரண ஒன்றாகிவிட்டது... தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது என்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும் அவர்களுக்கு போட்டியிட்டு பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்... உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில் இன்று குடிகார்ர்கள் நிறைந்து , உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்துவிட்டது... குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ , குறிப்பிட்ட பணி நேரமோ செய்ய முடிவதில்லை.. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் , கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை... அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.. அதற்கு ₹1000 கூலி கேட்கின்றனர்... வீட்டுக்கு ₹500, தனக்கு இருவேளையும் மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு ₹500 என்று...
இது மட்டுமல்லாமல் மலட்டுத்தன்மை, பாலியல் குறைபாடுகள் ஏற்பட்டு, முறையற்ற உறவுகள் பெருகுவதும், இதனால் கவனிக்கப்படாத குழந்தைகள் சமூக விரோதிகளாகவும் உருவாகும் மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நம் தமிழகம் வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கிறது...
2. 2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டினால் பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தனர். சிலர் வேறு வேலைகளுக்கு சொற்ப சம்பளத்திற்கு சென்றனர்.. சிலர் கவலையில் குடி நோயாளிகளாகிவிட்டனர்... மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்க பயந்து பணிக்கு செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உண்டு.
3. நூறுநாள் வேலை..
இந்த திட்டம் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை... ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை.. இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால் காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம், வீட்டுக்கு தேவையான விறகுகளை வெட்டிக்கொள்ளலாம்.. வேறு எந்த வேலையும் இல்லை.. ₹150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால் சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது...
4. இலவசங்கள்...
அரசு தரும் இலவச பொருட்களும், ஊரக வேலைவாய்ப்பு திட்டமும் மக்களை உழைக்க விரும்பாத, சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக்கிவிட்டனர்..
5. நம் கல்விமுறை மற்றும் கல்வியின் தரம்.. அது பட்டதாரிகளை (scholars) உருவாக்குகிறதே தவிர திறன்மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை...
இத்தகைய காரணங்களால் தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது... சமீபத்தில் தொழில் தொடங்கி நட்டமடைந்து தொழிலை விட்டவர்களிடம் விசாரித்து பாருங்கள்.. 10ல் 8 பேர் ஊழியர் மற்றும் சம்பள பிரச்சினைகளாலேயே தொழில் நட்டமடைந்த்தாக சொல்லுவார்கள்..
தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர், வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்... ஓட்டல் முதல் கட்டுமான துறை வரை இதுதான் நடக்கிறது... தமிழ் சமையல்காரர், கொத்தனார், ஓட்டுனர்கள் ஒருநாளைக்கு பெறும் ₹850-1000 சம்பளத்திற்கு , (பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட வடநாட்டவர்கள் ...... 2 மணிநேரம் அதிகமாக ₹500-600 சம்பளத்திற்கு செய்கிறார்கள்.. தங்க வீடு, சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது.. வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும்...
இதுதான் பெயிண்டர், ஆசாரி, பிளம்பர், எலக்ட்ரீசியன் வேலைகளுக்கும்...
நம் ஆட்கள் கேலி செய்வதை போல அவர்கள் பானிபூரி மட்டுமே விற்க இங்கே வரவில்லை... சொல்லப்போனால் இங்கு உள்ள 100% பானிபூரி வண்டிகளில் 30% கூட வட இந்தியர்களுடையதல்ல.. 70%க்கும் மேற்பட்ட வண்டிகளில் தமிழர்களே பானிபூரி விற்கிறார்கள்...
கடைசியாக..
நம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்கள் மனநிலையில் ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது... வேலையே செய்யக்கூடாது, சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும், சும்மாவே பணம் கிடைக்க வேண்டும், சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும், தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள்... இவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசுகளே சாராயத்தை விற்று லாபத்தை தேடுவதுதான் உச்சபச்ச கொடுமை...
கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் , இன்னும், கருப்புகள் எல்லோரும் இது குறித்து சிந்தித்து இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள நோயை மாற்ற வழி தேடினால் மட்டுமே தமிழினம் தப்பிப்பிழைக்கும்...
ஆம்..
தமிழன்என்றோர்இனமுண்டுதனியே அவனுக்கோர்குணமுண்டு
உண்மைதான்..

Friday, 17 April 2020

மன அழுத்தத்தைத் தவிர்க்க 10 ஆலோசனைகள்!!!

``உலகளவில் ஏற்படும் நோய்களில் மன அழுத்தம்தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் பலரும் இதை ஒரு நோய் என்றே உணருவதில்லை. மன அழுத்தம் என்பது ஒரு தீவிரமான மனநோய். இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி, மனநல மருத்துவரைச் சந்தித்து, சிகிச்சை எடுமன அழுத்தம் News, Videos, Photos, Images and Articles ...த்துக்கொள்வதுதான். கொஞ்சம் முயற்சி செய்தால் மன அழுத்தம் ஏற்படுவதை எளிதாகத் தவிர்த்துவிடலாம்’’ என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.



மன அழுத்தம் தவிர்க்க அவர் தரும் ஆலோசனைகள்!

வாழ்க்கையில் பிரச்னைகளே வரக் கூடாது என்று எண்ணாதீர்கள். அது வரத்தான் செய்யும். பிரச்னையில்லாமல் வாழ்க்கை இல்லை. ஆகவே, அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பது பற்றித் திட்டமிடுங்கள்.

உங்களுக்கு ஒரு பிரச்னை வந்தால், அது உங்களுக்கானது மட்டும் அல்ல. அது உங்களைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை உணருங்கள். அதனால், உங்களுடைய துயரங்கள் அனைத்தையும் நெருக்கமான நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்.


* இன்று, இண்டஸ்ட்ரியல் லைப்ஸ்டைலுக்குள் (Industrial lifestyle)வந்துவிட்டோம். எனவே, நெருக்கடிகளிலிருந்து தப்பமுடியாது. வேலைநிமித்தமான அழுத்தம் என்பது இருக்கவேசெய்யும். ஆனால், அலுவலகத்திலிருந்து வெளியே வந்துவிட்டால், நம்முடைய பிரச்னைகளை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும். வீட்டுக்கு வந்தும், அலுவலக வேலைகளைத் தொடரக் கூடாது. கூடுமானவரை இதைத் தவிர்க்கவேண்டும். வீடு என்பது வாழ்வதுக்குத்தான்!

தினசரி எட்டு மணி நேர உறக்கம் என்பது அவசியம். அப்போதுதான், அடுத்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ளவும் வேலைகளில் கவனம் செலுத்தவும் முடியும்.

தற்போது, மனநலத்துறையில் `ஃபுட் ஹாபிட்ஸ் ஃபார் மென்டல் ஹெல்த்’ என்ற தலைப்பில், பெரிய விவாதமே நடந்துகொண்டிருக்கிறது. அதாவது, நாம் சாப்பிடும் உணவு எப்படியிருக்கிறது... அந்த உணவுகளால் நம்முடைய மனநிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றியெல்லாம் மனநல மருத்துவர்கள் விவாதித்து வருகின்றனர். எனவே, உணவுப்பழக்கம் முக்கியமான ஒன்று. ஒரேசமயத்தில் வயிறுமுட்ட சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை அறவே தவிர்க்கலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியமானது.

வாழ்க்கையில், நாம் நினைக்கிற மாதிரிதான் எல்லோரும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அது சாத்தியமில்லை. எதிர்மறை குணங்கள் கொண்டவர்களிடம் பழக வேண்டிய சூழல் ஏற்படும். அவர்களைப் புரிந்துகொள்ளவும் ஏற்கவும் பழகவேண்டும்.

ஆக்கபூர்வமான செயல்களுக்கான நேரத்துக்கு முக்கியத்துவம் தரவும். பொழுதுபோக்கு விஷயங்களுக்கு முன்னுரிமை தருவதைத் தவிர்க்கவேண்டும். நேர மேலாண்மையில் கவனம் செலுத்தலாம். வாழ்க்கைக்கு எது அவசியமானது என்பது பற்றி யோசிக்கலாம். விருப்பத்துக்கும் தேவைக்குமான வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு, அதன்படி செயல்படுவது நலம் தரும். தேவைகள் நிறைவேறிய பின்னரே, விருப்பத்தை நோக்கி நகரவேண்டும்.


உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த இடத்தில் எப்படியான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றித் திட்டமிடலாம். நம்முடைய உணர்வுகள் பிறரைக் காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்வது மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

தோல்விகள் என்பது பிரச்னையில்லை. ஆனால், அந்தத் தோல்விகளிலிருந்து, நீங்கள் எப்படி வெளியே வருகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதற்குரிய பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்.


தற்காலிக மன அழுத்தம் என்பது அதுவாகவே சரியாகிவிடும். ஆனால், சில பிரச்னைகளால் சாப்பிட முடியாமல், தூங்கமுடியாமல் போனாலோ, வேலைகளில் பாதிப்பு ஏற்பட்டாலோ அது தீவிர மன அழுத்தம். இதற்கு, மனநல மருத்துவரைச் சந்தித்து, சிகிச்சை எடுத்துக்கொள்வதே சரியானது''

Thursday, 16 April 2020

Brazing ( Copper Welding) Procedure !!

 A well brazed joint begins with a proper fit between components, .001 inch to .003 inch of clearance.

1. GOOD FIT AND PROPER CLEARANCE


The best clearance between the two metal parts being brazed is a close one - usually .001 inch to .003 inch, and generally not more than .005 inch. If the clearance is smaller than .001 inch, there may be no room for the molten filler metal to flow through the joint. And if the clearance is wider than .005 inch or .006 inch, capillary action is less effective and the filler metal may fail to fill the joint completely. 

In the fabrication of HVAC equipment, achieving the proper clearance for brazed joints is seldom a problem. The design of the joint is predetermined - it’s almost always a “cup” design, in which one tube is inserted into the expanded end of another tube. As long as you start with tubing that’s round and manufactured to the correct dimensions, you can anticipate no clearance problems. 

However, you do have to give some care to the preparation of the tubes for brazing. For example, if you’re brazing a tube to a fitting, you’ll generally start by cutting the tube to the length you want. Make sure it’s cut square, by using a sawing vise or tube cutter, and remove the burrs. Slide the tube end into the fitting and check that it has the proper close fit - an easy slip fit. 

The majority of brazed joints in HVAC units are copper-to-copper joints. That means you don’t have to worry about the “coefficients of expansion” of the base metals, as the two copper parts will expand at the same rate. However, if you’re brazing joints of dissimilar metals (copper to steel) you have to take into consideration the different expansion rates. You know that non-ferrous metals (copper, brass) expand more during heating than ferrous ones (steel, stainless steel). So, be sure to adjust the initial joint clearance accordingly. Where heating will reduce the clearance, for example brazing a copper tube to a steel header, start with a relatively loose fit (approximately .010 inch). Where heating will increase the clearance, start with a close or even force fit. 


2. CLEANING THE METALS



Capillary action, the basis of all brazing, can’t work properly on dirty surfaces. If the surfaces of the metals are contaminated (with oils, dirt, etc.) the brazing filler metals will not adhere to them and the joint will fail. 

In fabricating HVAC units, you’re generally working with factory new tubing and parts. But if for any reason those parts have become dirty or greasy, you will have to clean them to ensure a leak tight joint. Oil and grease can be removed with a solvent, then oxides can be removed by an abrasive like an emery cloth. Once the parts are clean, it’s recommended to braze as soon as possible so the parts won’t have time to become re-contaminated. 



3. FLUXING THE PARTS

Flux is a chemical compound, usually made in the form of a liquid or paste, which is applied to the joint surface prior to brazing. Its purpose is to protect the joint surface from the oxides that form during heating. Flux melts and becomes active during brazing, absorbing oxides and assisting in the flow of the brazing alloy. Although fluxing is generally an important part of the brazing process, it plays only a minor role in brazing HVAC components because most of these joints are copper-to-copper. When brazing copper-to-copper you can eliminate the flux by using a phosphorus bearing filler metal (such as Sil-Fos® or Fos Flo®) because the phosphorus acts as a fluxing agent. 

However, when brazing copper to steel (in compressor or valve assemblies) you can’t use phosphorus bearing filler metals as they form brittle phosphides and the joint could fail. Instead, use a phosphorus-free filler metal (such as the Braze™ family of alloys), but then you will have to use flux. When brazing brass, you could use a phosphorus bearing alloy, but you will have to apply flux here as well. 

Flux can be applied on the parts being brazed with a brush, or it can be incorporated directly into the filler material in the form of flux-cored or flux-coated wire or rod. However, the flux is applied, it is important that it does not get inside the parts where it could contaminate the system. 


We recommend a reducing flame when brazing.

4. ASSEMBLE FOR BRAZING

Before the parts can be heated and brazed, they have to be aligned and then supported. This is typically not an issue when brazing HVAC components since virtually all the joints are tubular, slip-fit assemblies. By their nature, they are self-aligning and self-supporting during the brazing process. 

When assembling, make sure there is full insertion of one tube into the other before brazing. The distance of insertion should be equal to the inside diameter of the inner tube section. 


Bring both pieces being brazed up to temperature evenly and quickly.

5. BRAZING THE ASSEMBLY

The actual brazing operation is a two-part process: first, heating the base metals, and second, applying the filler metal to the joint. 

Regardless of the heating equipment being used, be sure to heat both base metals broadly and evenly, so the filler metal will wet equally well on both metal surfaces and completely fill the joint. Because of the wide variety of joints and joint locations, the gas-air torch is frequently used as the heat source. A soft flame provides the best type of heat. 



Once the assembly has reached brazing temperature, the filler metal is applied.

When brazing a tube to a fitting, or into another tube of larger diameter, the following procedures should be followed: Adjust the torch for a reducing flame (one that contains more fuel gas than oxygen). The flame should be soft enough and large enough to envelop both the tube and fitting. 

Start heating the tube about an inch away from the end of the fitting, then shift the heat to the fitting. Sweep the heat steadily back and forth from tube to fitting, with most of the heat being applied to the heavier (and slower to heat) fitting. 



A well brazed joint - Proper alloy flow reaches inside the joint.

Heat the assembly until it reaches brazing temperature. If the part has been fluxed with Handy Flux, the flux will become clear or transparent at this temperature. If you have not used flux, you’ll know you’re at brazing temperature by the dull red color of the metals being heated. 

At this point, pull the flame back a little and apply the filler metal firmly against the tube at the junction of the tube and fitting. If you are using a phosphorus-bearing alloy, lay the rod on and wipe it around the joint, as these alloys tend to flow sluggishly. If the joint has been properly heated, the filler metal will melt, penetrate, and completely fill the joint. 



Improper alloy flow does not penetrate into the joint and produces a weak bond.

After the joint has been completed, make one final pass of the flame at the base of the joint, and even twist the joint if possible, to expel any entrapped gas or flux and to provide maximum wetting by the filler metal. 




6. CLEANING THE BRAZED JOINT

Generally speaking, brazed joints in HVAC units require no post braze cleaning operations. However, in the minority of cases where flux has been used, it may be necessary to remove the flux residues after the joint has set. A hot water wash, assisted by brushing or swabbing, usually does the job. If necessary, you can remove more stubborn residues with a wire brush. 


SOME THINGS TO CONSIDER

When you’re heating an assembly for brazing, you want to heat the joint area as rapidly and as uniformly as possible. So in those instances where you’re joining metals of unequal mass and thickness, you’ll have to apply some extra heat to the heavier section which heats more slowly. And where you’re joining dissimilar metals with differing heat conductivity (copper to steel), you’ll have to apply proportionally more heat to the copper, since copper is a better conductor and carries heat away more rapidly to the colder sections. In no case, of course, should the metals be heated to the point where they begin to melt. 


THREE COMMON JOINTS

The brazing techniques described will vary somewhat depending upon the kind of joint you’re making. The three common tube-to-fitting joints used in HVAC components are the vertical down, the vertical up, and the horizontal joint. The following procedures are recommended for each of these joints: 

Vertical down joints: Bring the entire joint area up to temperature quickly and uniformly, heating the tube first, then the fitting. When the joint area has reached brazing temperature, apply a little extra heat to the fitting, since this is the direction in which you want the filler metal to flow. 

Vertical up joints: Start by heating the tube. When it has reached a temperature of about 800°F (425°C), transfer the heat to the fitting. Then sweep back and forth from fitting to tube, all around the joint area. Be careful not to overheat the tube below the fitting, as this would encourage the filler metal to run down the tube and out of the joint. When brazing temperature is reached, touch the filler metal to the joint with the flame on the wall of the fitting. This heating pattern will draw the filler metal up and completely through the joint area. 

Horizontal joints: Preheat the tubing and fitting quickly and evenly. When brazing temperature is reached, apply the filler metal to the top of the joint. The combination of gravity and capillary action will draw the filler metal completely around the tube to its bottom. You can apply a slight excess heat to the bottom of the fitting to ensure that the filler metal totally penetrates the joint. Check the joint face to be sure filler metal is visible all around it. In particular, make sure that filler metal shows at the top of the joint. If it does not, apply some additional filler metal until it is visible all around the joint.

Monday, 13 April 2020

வெளிநாட்டுவாசி ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுபவனே !!

 



சரியாக சொல்ல  வேண்டுமானால், 2006 அரபுதேச துபாயில் தமிழ் ஹோட்டல் ஒன்றில் மதியம் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

நடுத்தர வயதுடைய ஒருவர் அங்கே வந்து "சாப்பிட என்ன இருக்கு" என கேட்டார்.

அவர்கள் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி மற்றும் பல என்றனர்.
இவர் "எவ்வளவு" என கேட்டார். அவர்கள் "சிக்கன் 10 திர்ஹம் மட்டன் 12 திர்ஹம்" என்றனர்.

"சரி சரி அதெல்லாம் வேணாம். எனக்கு ஒரு டீயும், ரெண்டு பரோட்டா மட்டும் கொடு" என்று சொல்லி எனக்கு அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தார்.

உடனே ஹோட்டல் சர்வர் அவரிடம் "இதையெல்லாம் இங்கே உட்கார்ந்து சாப்பிடக்கூடாது. பார்சல் வாங்கிட்டு போய் வெளியே சாப்பிடுங்க" என்று அனுப்பிவிட்டார்.

எனக்கோ மனசு ஒரு மாதிரி ஆயிடுச்சு. பாதி சாப்பாட்டோடு வெளியே ஓடி அவரிடம் "அண்ணே உள்ளே வந்து என்கூட உட்கார்ந்து பிரியாணி சாப்பிட வாங்கண்ணே. நா காசு கொடுக்கறேன். பார்க்கவே மனசு கஷ்டமாயிருக்கு" என்று அவரிடம் பலமுறை கெஞ்சுகிறேன்.

ஆனால் அவரோ "தப்பா நெனக்காதீங்க, எனக்கு அடுத்தவங்க காசுல வாங்கி சாப்பிட்டு பழக்கம் இல்லை. எனக்கு 700 திர்ஹம் (12,500 ரூபாய்) தான் சம்பளம் இதுலையே தான் சாப்பிட்டு செலவு பண்ணனும். இவ்வளவு காசு கொடுத்து இங்கே சாப்பிட்டா ஊருக்கு பணம் அனுப்ப முடியாது. வந்த கடன் பசங்க படிப்பு குடும்ப செலவு என நிறைய இருக்கு.



நான் இங்கே வயிறு நிறைய சாப்பிட்டா அங்கே என் குடும்பம் வயிறு நிறையாம பட்டினி கிடகனும்.


இன்னைக்கு வெள்ளிக்கிழமை அசதில தூங்கிட்டதால சமைக்க நேரம் இல்லை. இருக்குற பசிக்கு இதுபோதும்" என்று திட்டவட்டமாக சொல்லிட்டார்.

என்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீரோடு திரும்பி ஓட்டல் முதலாளியிடம் இனி இதுபோன்ற செய்யாதீர்கள் இங்கே உட்காந்து சாப்பிட முடியாத பொருட்களை ஏன் விக்கிறீர்கள்..
எல்லோரும் பிரியாணி சாப்பிடுறளவுக்கு வசதியானவங்க கிடையாது.
என்று என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.

வெளிநாடு வெளிநாடு என்று பல கனவுகளோடு அலையும் இளைஞர்களே இதுதான் வெளிநாட்டு_வாழ்க்கை.

ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுபவனே வெளிநாட்டுவாசி!!

உங்கள்  மு. அஜ்மல் கான்.

Thursday, 9 April 2020

தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த செகத்தினை அழித்திடுவோம் !!

தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த செகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியின் கோபம் இலேசதானதல்ல. சாப்பாடு இல்லாமல் உலகில் நான்கு வினாடிகளுக்கு ஒருவர் பசியினால் இறந்துபோகிறார் என்பது தெரியுமா உங்களுக்கு. ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டும் 5 கோடி பேர் தினமும் பசியினால் துடி துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் இந்த உலகத்தில் 15 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் செத்துப்போகிறார்கள். பசியால் இறந்துபோகின்ற அளவுக்கு உலகில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

பசி என்பது பெரும் துன்பம்தான். பசிக்காகவே மனிதன் உழைத்து உழைத்து சேமிக்கிறான். பசி மட்டும் இல்லாவிட்டால் மனிதனின் வாழ்க்கையே அடியோடு மாறியிருக்கும்.
ஒரு நேர உணவு இல்லாவிட்டால் எப்படி துடி துடித்துப் போகிறோம். பசியும் தாகமும் எங்களை பின் தொடருகின்றவை. அந்த இரண்டும் பூர்த்திசெய்யப்படாத எத்தனைபேர் எங்களின் காலடிக்குள் கிடக்கிறார்கள்.பசியையும் தாகத்தையும் எங்களுக்கு பூர்த்தி செய்யக் கிடைத்திருப்பதே பெரும் கொடையாகும். 
மற்றவர்களின் பசியை தீர்க்க நாம்  என்ன செய்கிறோம் என்பதனை யோசித்துப் பார்க்கவேண்டும்.
 ஆனால் அரசாங்கங்கள் மக்களின் பசியைப் போக்குவதற்கு என்ன செய்கின்றன.  

உணவில்லாமல் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் ஏழை மக்களின் அவல நிலையை படம் பிடித்து பதிவிடுங்கள், அவர்களுக்கு உதவிகள் கிடைக்கும். உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.

செலவுக்கு காசில்லாமல் மனைவி பிள்ளைகள் முன்பு கூனிகுறுகி நிற்கும் தொழிலாளர்கள், மீனவர்கள், சிறுகுறு வியாபாரிகளின் நிலையை படம் பிடித்து அப்படியே வலைத்தளங்களில் பதிவிடுங்கள்.

அவர்கள் உங்களை வாயார வாழ்த்துவார்கள்.இறைவனது அருள் கிடைக்கும்.அதை அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்புங்கள்..

அவன் தப்லீக் ஜமாத் பின்னாடியே அலைவது குறையும்.அரசின் மனசாட்சியை அது உசுப்பிவிடும்.

பத்தமடை கிழவியையும்ம்,பள்ளிவாசலில் அடிப்பதையும் திரும்ப திரும்பபகிர்வதால் என்ன பலன் ஏற்படப்போகிறது.

சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் என்ற பெயரே ஏற்படும்.

முஸ்லிம்கள் குறித்த எந்த எதிர்மறையான செய்தியையும் நீங்கள் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.அதை சங்கி மீடியாகாரன் சரியாக செய்வான்.

பதிலுக்கு சமூக அவலங்களை பகிரங்கப்படுத்தி வாயை அடையுங்கள்.

அன்பு உள்ளங்கள் அனைவரும் உதவி செஞ்சேன் என்று நிறைய பேர் போட்டோ எடுத்து அனுப்பி இருந்தீங்க..

ஏழை மக்களுக்கு நீங்க எல்லாம் உதவி செஞ்சதில்ல ரொம்ப சந்தோசம்..

கொஞ்சம் வருத்தம் அவர்களையும் சேர்த்து போட்டோ எடுத்து அனுப்புனதுல்ல..

நம்ம உதவி செய்கிறோம் என்று தயவுசெய்து யாரையும் போட்டோ எடுத்து தர்மசங்கடம் ஆக்காதீர்கள் அன்பு உறவுகளே..

தொடரட்டும் உங்கள் சேவை வளரட்டும் நல்ல மனிதம்..


உங்கள்  தோழன்  மு.அஜ்மல் கான்.

Wednesday, 8 April 2020

தப்லிக் ஜமாத் பற்றி பீலாவிடும் பீலா இராஜேஷ் !!


தில்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1200 பேர் கலந்து கொண்டார்கள் என்றும் அவர்களில் 1103 பேர் தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொண்டார்கள் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா இராஜேஷ் அவர்கள் ஏப்ரல் 01 ஆம் தேதி ஊடகங்கள் முன் சொன்னாங்க.











அதன் பின் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் முறையே

ஏப்ரல் 1 - 110 பேருக்கும்
ஏப்ரல் 2 - 74 பேருக்கும்
ஏப்ரல் 3 - 101 பேருக்கும்
ஏப்ரல் 4 - 73 பேருக்கும்
ஏப்ரல் 5 - 85 பேருக்கும்
ஏப்ரல் 6 - 48 பேருக்கும்
ஏப்ரல் 7 - 67 பேருக்கும்
ஆக மொத்தம் இதுவரை டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 558 பேருக்கு கொரனோ உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களுக்கு பீலா இராஜேஷ் பேட்டி கொடுத்தார்.


இதுவரை எந்த சிக்கலும் இல்லை.

அடுத்து என்ன சொன்னார்?


தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த 961பேருக்கு கொரனோ தொற்று இல்லை என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றார்.


மொத்தம் பரிசோதித்ததே 1103 பேருக்கு தான் என்று இவரே ஏப்ரல் 01ஆம் தேதி சொல்லிவிட்டார்.


நேற்று 961 பேருக்கு இல்லை என்றும் சொல்லிவிட்டார்.


அப்படியென்றால் மீதம் 1103-961= 142 பேருக்கு தானே கொரானோ இருக்கவேண்டும்.


பின் எப்படி 558 பேருக்கு கொரனோ என்று இத்தனை நாள் சொன்னார்?


எண்ணிக்கையளவில் மிகப்பெரிய வித்தியாசம் வருகிறதே!!!


மேலும் அடுத்த கேள்வியாக 558- 142 கழித்தால் 416 பேர் வருகிறார்களே இவர்களெல்லாம் யார்?


இதில் நாமெல்லாம் யோசிக்க வேண்டியதும் கவனிக்க வேண்டியதும் இது தான்.


இந்த எண்ணிக்கை விளையாட்டெல்லாம் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய, மக்களால் கேள்வி கேட்க முடிந்த, மக்களிடம் ஓட்டு கேட்டு போக வேண்டிய எடப்பாடியாே, விஜய்பாஸ்கராே செய்யவில்லை.


ஒரு அரசு அதிகாரி செய்தார்...  செய்யவைக்கப்பட்டார்.


என்றிலிருந்து...


முதல்வர் எடப்பாடி தமிழக கவர்னரை சந்தித்த நாள் முதல்...


அதுவரை டிவியில் தினமும் பேட்டி தந்த விஜய்பாஸ்கர் காணாமல் போய்விட்டார்.


பீலாராஜேஷ் வந்துவிட்டார்.


இதற்கு பலியாகி இஸ்லாமியர்கள் தான் தமிழ்நாட்டில் கொரோனா பரப்பும் ஏஜெண்ட் என்று நம்பியோர் நிலைமை என்ன?


இந்து Vs முஸ்லீம் அரசியல் அத்தனை கொரூரமான விளையாட்டு என்று எல்லாரும் புரிந்துக்கொள்ள வேண்டிய நேரம் இது தான்.


பொய் ஊர் முழுக்க யானை மேல் அமர்ந்து ஊர்வலம் வந்து முடிந்த பின் தான் உண்மை பொடி நடையாக தன் பயணத்ணை ஆரம்பிக்கும்......


தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல் .

Wednesday, 1 April 2020

இந்தியாவில் நாம் கொரோனா வைரஸ் பற்றிய கற்கத் தவறிய பாடங்கள் !!

நாவல் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தி, இந்நோயை முற்றிலுமாக ஒழித்திட இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எனக்கு நினைவு தெரிந்த நாள் வரையில் மட்டுமல்ல, படித்தறிந்த வரலாற்றிலும் இதுபோல நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு, மக்கள் வீதிகளில் நடமாடுவது தடை செய்யப்பட்டதில்லை.
அரசு நிர்வாகம் முழு முனைப்போடு செயல்படுகிறது. மருத்துவப் பணியாளர்கள் முழு நேரப் பணியாளர்களாக, வேலை நேரக் கட்டுப்பாடுகளின்றிப் பணியாற்றுகிறார்கள். சேலம் மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்று உள்ளவர்களோடு தொடர்பிலிருந்த, 1,08,677 வீடுகளில் வசிக்கும் 3,96,147 நபர்களுக்கு சில நாள்களிலேயே மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இவர்களிடம் கொரோனா அறிகுறிகள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. சளி, காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைப்பது போல மூக்கு, தொண்டை ஆகிய இடங்களிலிருந்து ஸ்வாப் எடுத்து பரிசோதிக்கப் படவில்லை என்பது குறை.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர், அவரே நேரடியாகச் சென்று, வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று வந்தவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்களா என்பதையும், ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்டறிகிறார். எல்லா இடங்களிலும் மாவட்ட நிர்வாகம் இதேபோன்ற சிரத்தையோடு செயல்படுவதைக் காணமுடிகிறது. பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும், அமைச்சர்களும் கொரோனா ஆபத்து குறித்த முழுமையான புரிதலோடு செயல்படுவதை காணமுடிகிறது.
கொரோனா தொற்று சவாலை இந்திய நாடு தன் நிர்வாக அமைப்பின் வாயிலாகவும், பொது சுகாதாரக் கட்டமைப்பின் வாயிலாகவும் எதிர்கொள்கிறது. பெரு வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொள்வது போன்ற பேரிடர் மேலாண்மை உத்திகளை அரசு பயன்படுத்துகிறது. பிரதமர், முதலமைச்சர்களோடு பேசுகிறார். முதலமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் நடத்தி செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தினந்தோறும் மருத்துவ அதிகாரிகளோடும், பல்துறை அதிகாரிகளுடனும் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்படுகின்றன. நோய், சமூகப் பரவல் கட்டத்தை எட்டும் பட்சத்தில், அதை எதிர்கொள்வதற்கான முனைப்பில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, கொரோனா மருத்துவத்திற்கான தனி மருத்துவமனையாக மாற்றுவது குறித்து ஆலோசனைகள் நடைபெறுவதாகக் கேள்விப்படுகிறோம். சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையை, கொரோனா நோய் சிகிச்சைக்கான தனி மருத்துவமனையாக மாற்றுவது குறித்த செய்திகள் வந்திருக்கின்றன.
சீனாவும், மேற்கத்திய நாடுகளும் நம் நாடு போலவே, பேரிடர் மேலாண்மை‌ உத்திகளைப் பயன்படுத்தி கொரோனா தொற்றை எதிர்கொண்டு வருகின்றன. ஆனால் நானறிந்தவரை இந்திய நாட்டில் நடைபெறாத ஒன்று, சீனாவிலும் மற்ற நாடுகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது நாவல் கொரோனா குறித்த அறிவியல் ஆராய்ச்சி.
இங்கிலாந்து நாடு, கொரோனா ஆராய்ச்சிக்காக 20 மில்லியன் பவுண்டுகளையும், கண்டுபிடிப்பதற்கான ஆய்வுக்காக மேலும் 20 மில்லியன் பவுண்டுகளையும் ஒதுக்கியிருக்கிறது. லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கொரோனா குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக கோவிட்-19 என்ற குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்தக் குழு வழங்கும் அறிவுரைகளை அரசு நடைமுறைப்படுத்துகிறது. மார்ச் மாத பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல் (BMJ) எனும் மருத்துவப் பத்திரிகையில் கொரோனா பற்றிய பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. கொரோனா நோய் குறித்து கூகுள் இணையதளத்தில் தேடினால், பேராசிரியர் அஸ்ட்ரா கானி, பேராசிரியர் கிரிஸ்டி டொனலி, பேராசிரியர் ஸ்டீபன் ரைலி போன்ற பிரிட்டிஷ் பெயர்களையே காணமுடிகிறது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA) கொரோனா ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி அளித்திருக்கிறது. www.coronavirus.com என்ற இணையதளத்தின் மூலம் கொரோனா ஆராய்ச்சிகளின் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடுகிறது. கொரோனா வைரஸின் மரபணு ஆராய்ச்சிகளும், வைரஸின் செல் கூறு ஆய்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கனடா நாடு 273 மில்லியன் டாலர்களை இந்த ஆய்வுக்காக ஒதுக்கியிருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் ஜெர்மனி கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டது. தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்காக ஐரோப்பிய யூனியன் 80 மில்லியன் யூரோவை ஒதுக்கீடு செய்தது. சீன நாடு, ஆராய்ச்சிகள் நடத்தி கொரோனா நோய்க்கு பவிபிரவிர் (Favipravir) என்ற மருந்து பயன்படும் என கண்டுபிடித்திருக்கிறது. இந்த மருந்து இப்பொழுது மனிதர்களிடம் சோதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கொரோனா ஆராய்ச்சி குறித்த எந்தத் தகவலும் இல்லை. இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் இணையதளத்திலும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்களோ, அல்லது அந்த வைரஸ் பற்றிய ஆராய்ச்சி குறித்த தகவல்களோ இல்லை. இந்திய மருத்துவ ஆய்வு மன்றத்தின் (Indian Council of Medical Research – ICMR) இணைய தளத்தைப் பார்த்தாலும், இந்தியாவில் கொரோனா ஆய்வுகள் நடந்துகொண்டிருப்பதற்கான சான்றுகள் காணப்படவில்லை.
கொரோனா குறித்த இந்திய ஆராய்ச்சிகள் மிக அவசியம். மிக அவசரம். கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் அது ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தவில்லை. இத்தாலியிலும், அமெரிக்காவிலும் வயது முதிர்ந்தவர்களை மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரையும் கொன்றிருக்கிறது. இங்கிலாந்து நாட்டை விட ஸ்பெயின் நாட்டில் வேகமாகவும், அதிகமாகவும் பரவியது.
கொரோனா வைரஸ் கண்ணாடி, மரம், உலோகம் போன்ற உயிரற்ற பொருள்களின் மேல் பல மணி நேரங்கள் (72 மணி நேரம் வரை) உயிர் வாழக்கூடியது. அதன் காரணமாகவே கொரோனா வைரஸ் பெரும் தொற்றாக மாறியது. இந்தியச் சூழலிலும், இந்த வைரஸ் பல மணி நேரங்கள் உடலுக்கு வெளியே உயிர் வாழக் கூடியதா என்பதை ஆராய வேண்டும். கொரோனா நோயோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களில் எத்தனைப் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுவது, நம் நாட்டில் மிகக் குறைவாக இருப்பது போலத் தோன்றுகிறது.
இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டது 31.01.2020 அன்று. இன்றோடு (31.03.2020) 61 நாள்கள் ஆகின்றன. மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி 1251 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இத்தாலி நாட்டிலும் 31.1.2020 அன்றுதான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். அந்நாட்டில் இன்றுவரை 1,01,739 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 11,591 பேர் இறந்து போயிருக்கிறார்கள். இத்தாலி நாட்டில் நடந்தது போல போல இந்தியாவில் ஏன் கொரோனா பரவவில்லை என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்தியாவில் இன்றுவரை சமூகப் பரவல் ஏற்படாததற்கு, அரசின் நடவடிக்கைகளை மட்டும் காரணமாகக் கூறிவிட முடியாது. மூன்று வார கால ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு தங்கள் ஊருக்குச் சென்றார்கள். அப்பொழுது, பேருந்துகளில் காற்று புகக் கூட இடமில்லாத நெருக்கடியில் பயணித்தார்கள். ஒரு சிலருக்கு கொரோனா தொற்று இருந்திருந்தால் கூட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஏதோ காரணத்தால் அத்தகைய பரவல் நிகழவில்லை என்பதாகவே தெரிகிறது.
இந்தியச் சூழலில் கொரோனா வைரஸ் எப்படிச் செயல்படும் என்பதை அறிவது அவசியம். மூன்று வாரங்களுக்குப் பிறகும் ஊரடங்கு தொடரலாம் என்றும், அவசர நிலை பிரகடனம் செய்யப்படலாமென்றும் வதந்திகள் உலவின. இதற்கு பதிலளித்துப் பேசிய நடுவண் அரசின் உயரதிகாரி அத்தகைய திட்டமெதுவுமில்லை என்பதை விளக்கினார். மூன்று வாரத்துக்குப் பிறகு நிலைமை மறு ஆய்வு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். எதுவாக இருந்தாலும் முடிவுகள் நிர்வாக முடிவுகளாகவே இருக்கும். மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் இந்திய மண்ணில் எப்படிச் செயல்படும் என்பது கண்டறியப்பட்டு, அதனடிப்படையில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும். அந்த அறிவியல் பாதை நமக்கு சாத்தியமில்லை. சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் பின்பற்றிய வழிகளையே நாம் பின்பற்றப் போகிறோம். உள்நாட்டு ஆராய்ச்சிகளின் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள் எதுவும் இங்கில்லை.
நான் ‘ராயல் காலேஜ் ஆப் இங்கிலாந்தி’ன் உறுப்பினர் (Fellow of Royal College of England - FRCS). ராயல் காலேஜில் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் கொரோனா குறித்த பல்வேறு அறிவியல் தகவல்களும், மருத்துவப் பணி செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய வழிகாட்டுதல்களும் இருக்கின்றன. நான் இந்திய மருத்துவக் கழகத்தில் (Medical Council of India)பதிவு செய்திருக்கிறேன். கழகத்திலிருந்து எனக்கு எந்தவிதமான வழிகாட்டுதல்களும் வரவில்லை.
மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, அறிவியல் ஆராய்ச்சிகளில் நம் நாடு மிகக் கீழே இருக்கிறது. எம்.பி.பி.எஸ், எம்.எஸ், எம்.சி.ஹெச் ஆகிய மருத்துவக் கல்வியின் மூன்று நிலைக் கல்விகளையும் பயின்றவன் நான். அந்தப் படிப்புகளின் போது நான் கற்றுக் கொண்ட ஆயிரக்கணக்கான மருத்துவத் தகவல்களில், இந்திய நாட்டில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் மூலம் சொல்லப்பட்ட செய்திகள் ஒன்றிரண்டு இருக்கலாம். மற்ற எல்லாமே மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை. சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளின் கண்டுபிடிப்புகளும் இவற்றில் இருக்கும்.
நவீன மனித வாழ்வின் அச்சாணியாக அறிவு தான் இருக்கிறது. உலகமே அறிவின் பாதையில் நடக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில், அறிவுப் பாதையை நாடாமல் இருக்கும் நாடாக நம் நாடு இருக்கிறது. அதைவிட வேதனை, வாழ்க்கையின் சிக்கல்களுக்கு, புராண, இதிகாசங்களில் விடை தேடுவது, நம்புவது போன்ற பழமைகளைப் போற்றி, அறிவுக்கு எதிராக இயங்கும் பேராபத்தான பிற்போக்கு இயக்கங்கள் நம் நாட்டில் இருக்கின்றன.
இந்திய நாடு வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை 'மொத்த உள்நாட்டு வருவாய்' என்ற குறியீட்டின் மூலம் கணக்கிடுகிறார்கள். இதே போன்ற வளர்ச்சி தொடருமானால் இந்திய நாடு பல ஐரோப்பிய நாடுகளைவிட அதிகம் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக மாறிவிடும் என்று சொல்லப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி மக்களின் வாழ்க்கைத் தரத்தின் வளர்ச்சியாக மாற வேண்டும். நாடு அறிவியல் பாதையில் சென்றால் தான் வாழ்க்கைத் தரம் மேம்படும். அறிவியல் பார்வையை வளர்ப்பதற்கும், அறிவியலை வளர்ப்பதற்கும் அரசுகள் முனைவதில்லை. நம்பிக்கையின் அடிப்படையிலான உணர்வுகளும், மத, இன அடிப்படைவாத சித்தாந்தங்களுமே அரசியல் பிரச்னைகளாக மக்கள் முன் வைக்கப்படுகின்றன. உணர்ச்சியின் அடிப்படையில் வாழும் விலங்குகளாக இருந்த மனித இனம், அறிவியலின் காரணமாக நாகரீக மனிதர்களாக உயர்வு பெற்றது.
இனி வரும் காலங்களில், நம் நாடு அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டும். மாணவர்களிடையே அறிவியல் பார்வையையும், ஆராய்ச்சி மனப்பாங்கையும் வளர்க்க வேண்டும். மக்களின் வாழ்க்கை முறையே அறிவியலின் வழியிலானதாக மாறவேண்டும்.
கொரோனா உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம் அறிவியல் பாதையில் செல்ல வேண்டிய அவசியத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

நன்றி : மருத்துவர். இரா. செந்தில்
சிறுநீரக அறுவையியல் மருத்துவ நிபுணர்.