Sunday 7 June 2020

வந்தே பாரத் சேவையின் தம்மாமிலிருந்து சென்னைக்கு செல்லும் முதல் ஏர்இந்தியா விமானம் !!


Image may contain: one or more people, people standing and outdoorஇந்திய அரசாங்கம் ஏற்பஈடு செய்துள்ள வந்தே பாரத் சேவையின்
தம்மாமிலிருந்து சென்னைக்கு செல்லும் முதல் ஏர்இந்தியா விமானம் நேற்று
05.06.2020 மதியம் 2.15 மணிக்கு 165 பயணிகளுடன் இனிதே
புறப்பட்டுச்சென்றது. ஒரு பயணிக்கு விசா காலாவதியாகி விட்டதால்அவர் பிரயாணம் செல்ல இயலவில்லை.நம் தமிழ் சமூகத்தின் கூட்டு முயற்சியின் பலன் இது என்றால் அது மிகையல்ல....

இதில் 50 க்கும் மேற்பட்டோர் கர்ப்பிணி பெண்கள், 5 பேர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,ஏனையோர் விசா காலாவதி ஆனோர்
மற்றும் வெளியேறு (exit) விசா உடையோர். காலை 11 மணியளவில்
இந்திய தமிழ் சமூகநல பணியாளர்களாகிய நான், சகோதரர் வாசு,
சகோதரர் வெங்கடேஷ் மூவரும் விமானநிலையம் சென்று
தமிழ் பயணிகள் அனைவருக்கும் வேண்டிய உதவிகளைச்செய்து
அவர்களை சிறப்பான முறையில் தாயகம் அனுப்பி வைத்தோம்.
எம்மோடு உதவியாக கேரள சமூக சேவகர் திரு.நாஸ் வக்கம் மற்றும்
விமானநிலையத்தில் பணிபுரியும் எமது தமிழ் சமூக வகர் திரு.கணேஷ் அவர்களும் உறுதுணை நல்கினார்கள்.திரு.வாசு அவர்களின் புதல்வர்
திரு.வசந்த் அவர்களும் எம்மோடு சேர்ந்து வேண்டிய உதவிகளை புரிந்தார்.

தமிழக அரசு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இலவசமாக
சிறப்பான அரசு தனிமைப்படுத்தல் ஏற்பாடு செய்திருப்பதால்
அதனையே உபயோகப்படுத்திக்கொள்ளுமாறு அனைத்து பயணிகளுடமும் தெளிவாக சொல்லியுள்ளோம்.

இந்த நேரத்தில் நமது இந்திய அரசு,தமிழ் அரசு மற்றும் இந்திய தூதரக
அதிகாரிகள் அனைவருக்கும் எமது மனமுவந்த நன்றியை  தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

நம் சகோதர, சகோதரிகளின் பயணம் இறையருளால் இனிதே அமைந்து,அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு நலமுடன் சென்றடைந்து
அவர்தம் வாழ்நாட்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க நாம் அனைவரும்
பிராத்தனை புரிவோம்...


பின்குறிப்பு:
*********
நேற்று இரவு சென்னையை அடைந்த பயணிகளுக்கு விமானநிலையத்திலேயே கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு, பெரும்பாலோர் தமிழக அரசு இலவசமாக ஏற்பஈடு செய்திருந்த தனிமைப்படுத்தல் இடமான VIT பல்கலைக்கழகவிடுதிக்கு அவர்களது பேருந்தில் அழைத்துச்செல்லப்பட்டுதங்கவைக்கபட்டுள்ளார்கள்.
சிறந்த கவனிப்பும் சிறப்பான உணவும் தரப்படுவதாக
எம்மை தொடர்பு கொண்ட பயணிகள் தெரியப்படுத்தினார்கள்.
இரண்டு நாட்களில் பரிசோதனைமுடிவு தெரிவிக்கப்பட்டு,
மூன்றாவது நாள் அவர்கள் சொந்தஊருக்கு அனுப்பப்படுவார்கள்.
அங்கே அவரவர்கள் வீட்டில் ஒரு வாரம் தனிமைப்படுத்தலில்
இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment