Friday, 27 February 2009

கடவுளின் அவதாரமா? இல்லை கபடவேடமிடும் செப்படி வித்தைக்காரனா?இந்த புட்டர்த்தி சாய்பாபா !!


சாய்பாபா கடவுளின் அவதாரமாக சொல்லிக்கொண்டு செய்யும் அற்புதங்கள் அனைத்தும் தந்திர வேலைகளேஎன்று பகுத்திறவு இயக்கத்தினர் பலமுறை நிரூபித்து காட்டியுள்ளனர்.மேலும் சாய்பாபா ஒரு கீழ்த்தரமானபாலியல் குற்றவாளி என்பதும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப் பட்டுள்ளது.தனது பாலியல் இச்சைகளுக்குஅவர் ஆசிரமம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுவர்களை பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும்ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளது.சாய்பாபாவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களே கொடூரமாககொலை செய்யப்பட்டதும் உண்டு.

இவையெல்லாம் காழ்ப்புணர்ச்சியால் உந்தப்பட்டு யாரும் இட்டுக்கட்டியவை அல்ல.இக்குற்றச்சாட்டுகள்பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனத்தால் (BBC) ஆதாரங்களுடன் ஒளிபரப்பப்பட்டு கோடிக்கணக்கானமக்களை சென்றடைந்துள்ளன.அவற்றை தமிழில் மொழிபெயர்த்து பெரியார் திராவிடர் கழகம்வெளியிட்டுள்ள ஒளிப்பட தொகுப்பை கீழ்காணும் சுட்டிகளில் காணலாம்.

ou tube : Sai Baba Tricks Completely Exposed, Satya sai baba fraud, Sai Baba's magic trick
you tube : Sai Baba: Deceiving the Gullible: http://www.youtube.com/watch?v=eTPDc5c36S8
you tube : Guru Busters on Sai Baba Tricks.mp4
you tube : Sai baba is fraud. Show on Avenues Television,Nepal.



இது தவிர சாய்பாபா பணத்தின் மீது பேராசை கொண்டவர் என்பதும்அம்பலமாகியுள்ளது.தனது பக்தர்களை தாராளமாக ஆசிரமத்துக்கு நிதி உதவி செய்யதூண்டும் பாபா பக்தர்கள் தங்களது சொத்துக்களை ஆசிரமத்துக்கு தானமாக அளிப்பதையும்ஊக்குவிக்கிறார்.அவ்வாறு விசயவாடாவை சேர்ந்த ஒரு மூதாட்டி அவர் இறந்தபின் அவரதுவீடு பாபாவின் ஆசிரமத்துக்கு தானமாக வழங்கப்பட வேண்டும் என்று தனது 55 -வது வயதில்உயில் எழுதி வைத்த பாவத்திற்காக உயிருடன் இருக்குபோதே வீட்டை பாபாவின்ஆசிரமத்திடம் பறி கொடுத்த பரிதாபத்தை கீழே உள்ள சுட்டியில் காணலாம்.

ஆக கொலைக்கஞ்சா கொடியவர்களின் ஆசிரமத்தின் தலைவர்தெருவோரத்தில் வித்தைகாட்டி பிழைக்கும் செப்படி வித்தைக்காரனின் தந்திர வேலைகளை அற்புதங்கள் போன்றுசெய்துகாட்டி ஏய்க்கும் ஒரு மோசடி பேர்வழிபேராசை கொண்ட ஒரு பணப்பேய் கடவுளின்அவதாரமாக இருக்க முடியுமா.

சாய்பாபாவின் மோசடிகளை யூடுயூபில் காட்சிகளாகக் காண இங்கே சொடுக்குக!
you tube : sai baba








you tube : Sai Baba: Deceiving the Gullible:


you tube : Guru Busters on Sai Baba Tricks.mp4
you tube : Sai baba is fraud. Show on Avenues Television,Nepal.



you tube : Sai Baba - is he cheating?

சாய்பாபாவை கடவுளின் அவதாரமாக நம்புவோரிடம் நாம் கேட்க விரும்பும் சிலகேள்விகள்.
சாய்பாபா தங்கத்தாலான கடவுள் சிலையை (லிங்கம்வாயிலிருந்து அல்லதுவயிற்றிலிருந்து எடுக்கிறார்.அவரே படைத்த ஒரு பொருள் போல் அதை பக்தர்கள் என்றபேரில் கூடியிருக்கும் ஆட்டு மந்தையிடம் காட்டி கை தட்டல் பெறுகிறார்காற்றில் கையைசுழற்றி தங்க சங்கிலி வரவழைக்கிறார்.வெறும் கையால் தங்க மோதிரத்தைதருவிக்கிறார்.இவையெல்லாம் உண்மையென்றால்,வெறும் காற்றிலிருந்தும் தனதுவயிற்றிலிருந்தும் இவ்வளவு செல்வங்களை படைக்க வல்ல சாய்பாபா இப்படி தங்ககட்டிகளை படைத்து இந்தியாவின் உள்நாட்டு,வெளிநாட்டு கடன் அத்தனையும்அடைத்துவிடலாமே.ஏன் செய்யவில்லை.
தங்கத்தையே வரவழைக்க வல்லவர் பக்தர்களிடம் பிச்சை எடுப்பது ஏன்.

தனது தள்ளாமையையும் மூப்பையும் சமாளிக்க முடியாமல் தத்தி தத்தி நடந்து வரும்,சமயங்களில் சக்கர நாற்காலியில் வரும் , பாபா பக்தர்களின் குறைகளை தீர்த்து விடுவார்என்பதை நம்ப முடியுமாஎண்ணிப்பாரீர்.

நமக்கு தெரிந்த இந்த உண்மைகள் நாட்டின் முதன்மருக்கும் மாநில முதல்வர்களுக்கும்தெரியும்தானேஅப்படியிருந்தும் அவர்கள் பாபாவை பணிந்து நிற்பதேன்.இந்த கேள்விக்குவிடை தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை.மேற்கண்ட இந்து நாளிதழின்செய்தியிலேயே இதற்கு விடை இருக்கிறது.
அந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பெரும் புள்ளிகளின் பட்டியல். 

பார்த்துவிட்டீர்களா நண்பர்களே.இப்போது சொல்லுங்கள்சாய்பாபாகடவுளின் அவதாரமாஇல்லை செப்படி வித்தையால் ஊரை,அல்ல,உலகை ஏய்க்கும் கயவனா.

கொல்லர் பட்டறையில் தங்க நகை உருவாகும்.மனிதனின் வயிற்றில் என்னஉருவாகும்.சாய்பாபா வயிற்றில் தங்கம் உருவாகிறதென்றால் பெரும் பொருட்செலவில்கோலார் தங்க வயலில் தேடுவதற்கு பதிலாக சாய்பாபாவை வைத்து வேண்டிய அளவுக்குதங்கத்தை தேடிகொள்ளலாமேஇந்திய அரசுக்கு இந்த யோசனையை நீங்கள் ஏன்தெரிவிக்கவில்லை.

சாய்பாபா கடவுளின் அவதாரம் என்றால் 50 களில் துள்ளி திரிந்த அவர் கடந்த சிலபலஆண்டுகளாக தள்ளாமையால் தடுமாறுவது ஏன்.

1.நாட்டின் முதன்மர்.மன்மோகன்.
2.ஆந்திர முதல்வர்.
3.கர்நாடக முதல்வர்.
4.தமிழக துணை முதல்வர்.(பெரியார் இல்லாதது வசதியாக போய்விட்டது .)
5.அண்மையில் மகராட்டிர முதல்வர் பதவியை இழந்த அசோக் சவான்.
6.ஆந்திர ஆளுநர்.
7.பஞ்சாப் ஆளுநர்.
8.திரிபுரா ஆளுநர்.
9.டாட்டா நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாட்டா.
10.டி.வி.எசு.நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசன்.


இப்படி பெரும்புள்ளிகள் ஒரு பட்டமளிப்பு விழாவில் ஏன் ஒன்று கூடவேண்டும்ஓரிருபிரபலங்கள் போதாதாஉண்மையில்ஆட்சியில்இருப்போருக்கும்,உயர்அதிகாரிகளுக்கும்,பெரும் முதலாளிகளுக்கும் இடையிலான வேலைகளை செவ்வனே முடித்து தரும் தரகுவேலையைத்தான் பெரும்பாலான சாமியார்கள் செய்து வருகிறார்கள்அந்தவகையில்தாங்கள் வேலைகளை சாதித்து கொள்வதற்காகவே பெரும்புள்ளிகள் மடங்களையும்ஆசிரமங்களையும் தேடி வருகின்றனர்.அப்படிப்பட்ட தரகர்களின் முன்னணி வரிசையில்உள்ளவர்கள்தான் சாய்பாபாவும் அவரது அல்லக்கைகளும்.இத்தகைய விழாக்கள் அவர்கள்கூடுவதற்கான ஒரு வாய்ப்பு,ஒரு சாக்கு.
அதனால்தான் பாபா போன்றோரின் குற்றவியல்பொருளாதாரபாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட அரசுகள் உடந்தையாக உள்ளன.ஆசிரமத்தில் கொலையே நடந்தாலும்முதல்வர்கள் தொழுது வணங்கும் பாபா மீதோ அவரது அடிவருடிகள் மீதோ முதல் தகவல்அறிக்கை பதிவு செய்ய காவல்துறையினருக்கு துணிவு வருமா என்று எண்ணிப்பாருங்கள்.
 
இப்படியான பின்னணியில்தான் சாய்பாபா அப்பழுக்கற்றவர் போல் நடித்து கடவுளின்அவதாரம் என்று நாடகமாட முடிகிறது.பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெறாதவரைபாபாக்களுக்கு கொண்டாட்டம்தான்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான் 

Wednesday, 25 February 2009

ரேபிஸ் வைரஸ் தாக்கி உயிரிழப்பு எப்படி ஏற்படுகிறது ? ஒரு விழிப்புணர்வு ஆய்வு...

ரேபிஸ் என்பது ஒரு விதமான வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளை யும், வீட்டு விலங்கான நாய் ஆகியவற்றையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், நேரடி யாக மனிதர்களை கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது. ரேபிஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடனேயே டாக்டரிடம் காட்டி உரிய சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக்  கூடியது. ரேபிஸ் நோயால் உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.இவற்றை பற்றி இங்கே விரிவாக பார்போம்!! 



நாய்கள், பூனைகள் மற்றும் வன உயிரினங்கள் மனிதனை கடித்தால், அவர்களின் உடலில் ரேபிஸ் வைரஸ் பரவுகிறது.நாய் வாய் வைத்த தண்ணீரை கொட்டச் சொல்கிறார்கள். அந்தப் பாத்திரத்தை பல தடவை தண்ணீராலும், மண்ணாலும் சுத்தம் செய்யச் சொல்கிறார்கள். 


நாய் வாய் வைத்தால் என்ன ? மண்ணை வைத்து ஏன் கழுக வேண்டும்? 

விஞ்ஞான அடிப்படையில் இறைத்தூதர்  முகமது நபியின் இந்தப் போதனை சரியானதுதானா? என்பது போன்ற பல கேள்விகள் நமக்கு எழுகின்றன.
 

நாயின் எச்சிலில் உள்ள ரேபிஸ் வைரஸ்கள் அளவில் கூற இயலாத அளவிற்கு மிகவும் நூண்ணியமானவை ஆகும். இந்த வைரஸ்கள் எவ்வளவு நூண்ணியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதனுடைய வீரியமும் இருக்கும். இந்த வைரஸ்களை அழிக்கக்கூடிய மூலங்கள் அதிகமாக மண்ணில் இருப்பதை நவீன விஞ்ஞானம் நிருபிக்கிறது.
 

பலவிதமான நோய்கிருமிகள் உடலில் உள்ள நிலையில் மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டபின் அந்த கிருமிகள் பூமியில் உயிரோடு இருப்பதில்லை. ஏனென்றால் மண்ணில் உள்ள சில மூலங்கள் அந்தக் கிருமிகளை அழித்து விடுகின்றன. இதனை பல முறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வு நிரூபித்துள்ளனர்.
 

கிருமிகளை அழிக்கக்கூடிய டெட்ரா சைக்ளின், டெட்ராலைட் ஆகிய இரண்டு மூலங்களும் மண்ணில் உள்ள புழுதிகளில் உள்ளன. சாக்பீஸ் துகள்கள் எவ்வாறு மையோடு கலந்து விடுகிறதோ அது போன்று இந்த மூலங்கள் பாத்திரத்தின் சுவர்களில் நன்றாக பரவி அந்த கிருமிகளை அழித்து பாத்திரத்தை சுத்தப்படுத்துகிறது.
 

நவீன காலத்தில் பல்லாண்டுகள் ஆய்வு செய்து விஞ்ஞானம் கூறக்கூடிய ஒரு செய்தியை, தேர்ந்த மருத்துவர்கள் பல்லாண்டுகள் கற்றறிந்து மக்களுக்கு கூறும் விஷயங்களையெல்லாம் எவ்வித விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் கூறியுள்ளார்கள்.


 

நாயின் உமிழ் நீர்...

நாயின் உமிழ் நீரில் உள்ள இந்த ரேபிஸ் வைரஸ்கள் நாய் வாய் வைத்த தண்ணீரை நாம் அருந்துவதின் மூலம் நம்முடைய உடலிற்குள் சென்று விடுகின்றது.

அல்லது நம்முடைய உடலில் காயம் பட்ட இடத்தில் நாயின் உமிழ் நீர் பட்டாலோ, அல்லது நாய் வாய் வைத்த தண்ணீரை வைத்து நம்முடைய உடலை சுத்தம் செய்யும் போது நம்முடைய உடலில் உள்ள காயங்களின் மூலம் இந்த வைரஸ் நம்முடைய உடலிற்குள் செல்கிறது.

இந்த கிருமி 30 நாட்களிலிருந்து 60 நாட்களுக்குள் கடித்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதுகடியின் ஆழத்தைப் பொறுத்து, தடுப்பூசியுடன், கடிபட்ட இடத்தைச் சுற்றி, 'இம்யுனோ குளோபுலின்' புரதமும் செலுத்த வேண்டும். சிலர், மருத்துவமனைக்கு வரும் போது, 'நாய் கடித்து விட்டது' என்று மட்டும் சொல்லி, 'ஆன்டிரேபிஸ்' தடுப்பூசி போடுவர். கடிபட்ட இடத்தை டாக்டரிடம் காண்பித்தால்தான், உரிய முறையில் சிகிச்சை அளிக்க முடியும்.


ரேபிஸ் ஏற்படுத்தும் பாதிப்பு

வெறி நாய் கடித்தவுடன் வைரஸ் கிருமி நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. மேலும் குரல் எழுப்பும் தசைகளையும் இறுக்குகிறது. இதனால் வெறிநாய் கடித்தவர்களின் குரல் நாய்கள் குரைப்பதை போல மாறிவிடுகிறது. அதோடு வலி, சோர்வு, பயம், தூக்கமின்மை, தண்ணீரைக் கண்டால் பயம் ஆகிய அறிகுறிகளும் காணப்படும். ரேபிஸ் நோய் முற்றினால் குணமாக்க மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.



இந்த ரேபிஸ் வைரஸ் காயம் பட்ட இடத்தில் படிந்தவுடன் தசை இழைகளில் பன்மடங்கு எண்ணிக்கையில் பெருகுகிறது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் வைரஸ் கடிபட்ட இடத்திலிருந்து நரம்பு வழியாக தன் இலக்கு உறுப்பான மூளையை நோக்கி நகர்கிறது. இவற்றின் பெருக்கக்காலம் என்பது பல காரணிகளைப் பொறுத்து வேறுபடுகிறது.

காயம் பட்ட இடம்..
 • காயம் பட்ட இடத்தில் பதியும் வைரஸின் அளவு
• வைரஸின் நோய் உண்டாக்கும் தீவிரத் தன்மை 
• பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்புத் தன்மையின் நிலை மூளைக்கு அருகில் அதாவது தலை கழுத்து, முகம் அல்லது அதிகளவு நரம்புகளைக் கொண்ட உடலின் எந்த ஒரு கடைப்பகுதியில் கடிபட்டாலும் இவ்வைரஸ் குறைந்த காலத்தில் பெருக்கம் அடையும்.

இந்த ரேபிஸ் கிருமிகள் மனித உடலிற்குள் சென்ற 30 லி 60 நாட்களுக்குள் வியாதி மனிதனிடம் வெளிப்படுகிறது. இந்த வைரஸ் மூளைக்குள் பரவி பல பகுதிகளைத் தாக்கி, நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. அதனால் உடலிலுள்ள பல தசைகளும் முறுக்கேறி இறுகுகின்றன. குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால் இவர்கள் குரல் நாய் குரைப்பதைப் போலிருக்கும். விழுங்கு தசைகள் இறுகுவதால் தண்ணீர் அருந்தமுடியாமல் போகிறது. முதல் அறிகுறி ரேபிஸ் பைரஸ் படிந்த இடத்தில் வலி ஏற்படுகிறது. அடுத்தபடியாக உளச் சோர்வு (Depression) பயம் (apprehension) தூக்கமின்மை தோன்றுகிறது. அதற்குப் பின் ஏதாவது பருக முயலும்போது தொண்டைச் சுருக்கம் (Spasm) ஏற்படுகிறது. உமிழ்நீர் கூட விழுங்க முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் வாந்தியும் உண்டாகும். தண்ணீரைக் கண்டால் பயம் (Hydrophobia) மாய கற்பனைத் தோற்றம் (Hallucinalions), தண்டுவடச் செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தி முடிவில் மரணத்தை ஏற்படுத்துகிறது.



நாய் கடி என்று ஊசி போட்டு அசட்டுதனமாக இருந்தால், உடனடியாக சிகிச்சை எடுக்க தவறினால் நோயாளிகள் இறக்க நேரிடும். இந்நோய்க்கான தடுப்பு மருந்துகளின் விலை அதிகம் என்பதால் வசதியில்லாதவர்கள் பலர் உரிய சிகிச்சை மேற்கொள்வதில்லை. அரசு மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகள் போதிய அளவில் இருப்பும் இருப்பதில்லைஇந்த இழப்புகள் ஏற்படுகிறது. விஞ்ஞான உலகில் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவது மக்களிடையே,உள்ள விழிப்புணர்வு இன்மையையே காட்டுகிறது.

 விழிப்புணர்வு..
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி வளர்ந்து வரும் நாடுகளில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ஆண்டுந்தோறும் 20 ஆயிரம் பேர் இறப்பதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது. சென்னையிலும் இதன் பாதிப்பு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முன்பெல்லாம் நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்துக்களில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். இதில் இப்போது தமிழக அரசு கவனம் செலுத்தாததால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெரு நாய்களை பிடித்துச் செல்ல மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

ரேபிஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும், அதை முற்றிலும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்., 28ம் தேதி சர்வதேச ரேபிஸ் தினம் கடைபிடிக்கப் படுகிறது.  ரேபிஸ் நோய்க்கு சரியான தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் இவற்றின் விலை அதிகமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. 

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Monday, 16 February 2009

உலகின் மிகசிறந்த பத்து அழகிய தீவுகள்!

1. Stromboli Island:
இத்தாலி நாட்டில் உள்ள மிகச்சிறிய தீவுதான் இது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த தீவின் அடிப்பாகம் கடலுக்கடியில் சுமார் 2000 மீட்டர் அடியில் இருக்கிறது. இந்த எரிமலை அடிக்கடி சீறும். இந்த தீவில் உருவாகும் கடல் அலைகள் மிக பெரியது சுமார் பத்து மீட்டர் உயரம் வரை எழும்பும். இதனால் கடலை ஒட்டிய கிராமங்கள் அடிக்கடி சுனாமியால் பாதிக்கப்படும்.




2. Chichagoff Island:
வட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் அருகில் உள்ள இந்த தீவு மிக அழகானது. உலகின் பெரிய தீவுகளில் 109 வது இடத்தை பெறுகிறது.


3. Socorro Island:
மெக்சிகோ நாட்டில் உள்ள இந்த தீவும் ஒரு எரிமலை தீவே. இந்த அழகான தீவில் பலதரப்பட்ட தாவரங்களும் விலங்கினகளும் காணப்படுவது இதன் சிறப்பாகும்.


4. Darwin Island:
சார்லஸ் டார்வின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ஈக்குவடார் நாட்டில் அமைந்துள்ள இந்த தீவு கேலபகாஸ் தீவு கூட்டங்களில் ஒன்றாகும். இந்த மிகசிறிய தீவில் பசுபிக் சமுத்திரத்தில் உள்ள கடல் உயிரினங்களை கண்டுகளிக்கலாம்.


5. Staten Island:
தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலை தொடரின் கிழக்கு பகுதியின் எல்லையில் அமைந்துள்ளது. அதாவது இந்த தீவு அர்ஜென்டினா நாட்டிற்கு சொந்தமானதாகும்.


6. Kornati Island:
குரசியா நாட்டில் உள்ள இந்த தீவும் மிக அழகானது.


7. Lavezzi Island:
பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அழகான தீவு.


8. Easter Island:
தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் உள்ள இந்த தீவில் பெரிய பாறைகளில் செதுக்க பட்டுள்ள மனித முகங்கள் மிகவும் புகழ்பெற்றதாகும்.


9. Fayal Island:

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள இந்த தீவு நீல தீவு என்று அழைக்கபடுகிறது.



10. Moorea Island:
பிரான்ஸ் நாட்டினுடைய அழகான தீவுதான் இது.

Monday, 9 February 2009

முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களின் சிறப்பு பேட்டி..

parvin-sultanaசென்னை நீதிபதி பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரியில் கடந்த 9 ஆண்டுகளாக தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா கொழும்பு கம்பன் விழா மேடைகளில் பட்டிமன்றம், சுழலும் சொற்போர், வழக்காடு மன்றம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு கம்பன் புகழ்பாடி தன் தமிழ் ஆற்றலை வெளிக்காட்டினார்.
ஒவ்வொரு மேடையிலும் சமூக விழிப்புணர்வுடன் கூடிய இலக்கிய உரைகளை ஆற்றிவரும் இவர், தனது கணவர் நடத்திவரும் தமிழியல் ஆய்வு நிறுவனத்திற்காக ஆய்வேடுகளை புத்தகமாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். கம்பன் விழா நினைவுகளுடன் அவர் தாயகம் புறப்படவிருந்த வேளை சங்கமத்திற்காக அவரிடம் நாம் கேட்ட சில கேள்விகளையும், அதற்கு அவர் அளித்த பதில்களையும் இங்கு தருகின்றோம்.
கேள்வி : உங்களுடைய கலை இலக்கிய பணிகளில் பிரதானமானதாக எதைக் கருதுகிறீர்கள்?
பதில் : மக்களை சந்தித்தல், பிரயாணம் என்பதும் என்னுடைய கலை இலக்கிய பயணத்தில் மிக முக்கிய கூறாகக் கருதக்கூடியது. நாம் எவ்வளவு திறன் படைத்தவர்களாக இருந்தாலும், அந்த திறமையை சரியான முறையில் பயன்படுத்தல் முக்கியம். அந்தப் பயன்பாட்டுக்கு பிரயாணமும் மக்களினுடைய சந்திப்பும்தான் முக்கியமானது. அந்த மக்களை சந்திப்பதன் மூலமாக அவர்களினுடைய நிலையில் ஊடாடுவதன் மூலமாக நம்முடைய இலக்கிய பயணத்தை சிறந்த முறையில் கொண்டு செல்ல முடியும் என நான் கருதுகிறேன்.
கேள்வி : உங்களுடைய நூல் ஆக்கப்பணிகளை பற்றி குறிப்பிடுங்கள்?
பதில் : என்னுடைய முனைவர்பட்ட ஆய்வேடு சென்னை பல்கலைக்கழகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கலாநிதி என்ற பட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு. அதில்நான் எடுத்துக் கொண்ட தலைப்பு இஸ்லாமிய இலக்கியங்கள் அதிலே படைப்போர் என்ற “போர் கதை பாடல்கள்” முனைவர் பட்ட ஆய்வேடு மிகவும் பாராட்டப்பட்ட ஆய்வேடு. அதில் உள்ள செய்திகளை நான்கு நூல்களாக வெளியிட்டுள்ளேன். பழந்தமிழ், இஸ்லாமிய இலக்கியச் சுவடிகளை தேடி பதிப்பிக்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. தமிழக இஸ்லாமிய இனக்குழு மக்களிடையே இருக்கக்கூடிய வாழ்வியல் சடங்குகள் குறித்த நூல் ஒன்றையும் பல்கலைக்கழகத்திற்கு ஒரு டிப்ளோமா பட்டத்திற்காக சமர்ப்பித்துள்ளேன். இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக அமெரிக்க அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று தலைமைத்துவ பயிற்சி ஒன்றில் கலந்து கொண்டு அந்த பயிற்சியின் அடிப்படையில் “தலைமை தாங்கவா” என்ற நூலினையும் வெளியிட்டுள்ளேன். “தங்க மங்கை” என்ற கட்டுரை பத்திரிகையில் தொடர் கட்டுரையாக வருகின்றது.
கேள்வி : இலங்கைக்கு பலமுறை வந்துள்ள நீங்கள் இலங்கைத் தமிழ் முஸ்லிம் மக்களின் இலக்கிய ஆர்வத்தை பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில் : நாகரீகத்தை தந்த இனக்குழுக்களில் இஸ்லாமியர் மிக முக்கியமானவர்கள் நாகரீகம் என்று சொன்னாலே கலை இலக்கிய ஆர்வம் இருப்பதாக பொருள். முழுமையான இலக்கிய வடிவம் பெற்ற எந்த ஒரு மொழியும் செம்மொழியாக வழங்கப்படும். அந்த மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள இலங்கை முஸ்லிம்கள் இலக்கியத்தரம், திறனாய்வு, படைப்பாக்கம் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்பது என்னுடைய கணிப்பு. காரணம் காலங்காலமாக தமிழ் இலக்கியங்களைப் படைக்கக்கூடிய வாய்ப்பு, எல்லாத் தமிழ் மக்களுக்கும் கிடைத்தாலும் முக்கியமாக இஸ்லாமிய இனக்குழு மக்களிடையே இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் இலக்கியத்திற்கு தந்த பங்களிப்பு பாரமானது. நான் ஆய்வேட்டை செய்யும் போது பல இஸ்லாமிய இலக்கிய நூல்கள் இலங்கையில் முஸ்லிம்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டேன். அதுவும் 19ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு முதற் பகுதியிலும் பல நூல்கள் கிடைக்கின்றன “ஆய்வு களத்தில் ஐந்து படைப்போர்” என்கின்ற நூல் கிடைக்க முடியாத நிலையில் அதை இலங்கையில் இருந்து பெற்றோம். அதனுடைய அச்சுவேலையெல்லாம் இலங்கையில் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது.  1978ஆம் ஆண்டு சரிபுத்தீன் என்கின்ற கவிஞர் சூறாவளி என்ற நூலை இயற்றியுள்ளார். அதுதான் படைப்போர் இலக்கியத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த நூலாகும். மார்க்கங்களை கடந்து முஸ்லிம்கள் இலக்கியம், தமிழ் என்றாலே முழுமையான ஆர்வம் காட்டி அதிலே தம்மை மிகச்சிறப்பாக நிலை நிறுத்தியுள்ளார்கள்.இதில் மகிழ்ச்சி தரும் விடயம் நான் சார்ந்துள்ள சமுதாயத்தில் இருந்து தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். அத்தோடு வேறு மார்க்கத்தில் உள்ளவர்களுடைய இலக்கியங்களைப் பெற்று அதை வெளியில் வந்து பேசவும், எழுதவும், பதிப்பிக்கவும் கூடிய வாய்ப்பையும் பெற்றுள்ளார்கள் என்பது மனிதநேயத்தின் முக்கிய விடயமாக நான் கருதுகிறேன்.
கேள்வி : தமிழக மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையில் இலக்கிய விடயத்தில் வேறுபாடு உண்டா? ஒற்றுமை உண்டா?
பதில் : எல்லாம் அந்தந்த மக்கள் வாழும் மண் சார்ந்த கலாசாரத்தில்தான் ஈடுபாடுகள் இருக்கின்றன. அந்த ஈடுபாட்டில் சில வேறுபாடுகளும் உண்டு. சில ஒற்றுமை கூறுகளும் உண்டு. வேறுபாடுகள் என்பது அவர்களுடைய புரிதல், அவர்கள் வாழக்கூடிய சூழல், வளர்ப்பு, கல்வி, ஆசிரியர்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டது. தமிழகம் என்பது மிகப் பரந்த நிலப்பரப்பை கொண்டுள்ளது. அவற்றில் பல்வேறு கூறான கலாச்சார கலப்பு என்பது தவிர்க்க முடியாதது. எது சிறந்தது எது தாழ்ந்தது அல்ல பிரச்சினை அவரவர்கள் அந்தந்த நிலையில் தன்னால் எந்தளவிற்கு சிறப்பாக பணியாற்ற முடியுமோ அப்படி பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.தமிழக மக்கள் மேடையில் பேசும் போது என்ன பேசுகிறார்கள் என்பதைத்தான் பார்க்கிறார்கள். இலங்கை மக்களைப் பார்க்கின்றபோது எப்படி பேசுகிறார்கள் என்பதை மட்டும் பார்க்காமல் யார் பேசுகிறார்கள் என்பதையும் சேர்த்துப் பார்க்கக்கூடிய நிலையை கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி : கலை இலக்கிய துறையில் தங்களின் எதிர்கால பணிகள் என்ன?
பதில்  : என்னுடைய பணிகள் ஆக்கப்பணிகளாகத்தான் இருக்க வேண்டும். இலக்கியப் பணியை இன்றும் செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் நான் நிறையக் கற்க வேண்டும். நிறைய எழுத வேண்டும்.நான் கற்பதையும் நான் எழுதியிருக்கின்றதையும் மக்கள் வரைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். நபிகள் நாயகம் சொன்னது போல கற்பவனாக இரு கற்பிப்பவனாக இரு கற்பதற்கு உதவி செய்பவனாக இரு என்பதுதான், இதன் ஒட்டு மொத்தமான முடிவு என்பது மனித நேயம்தான். அதற்கான பிரயாணத்தில்தான் நான் ஈடுபட்டுள்ளேன்.
கேள்வி : கம்பன் விழா 2008 பற்றியும் கம்பனில் உள்ள ஈடுபாடு என்ன என்பது பற்றியும் சொல்லுங்கள்?
பதில் : பாரதி என்னை சிந்திக்க தூண்டினான். கம்பன் என்னை பேசத்தூண்டினான். கம்பன் கழகத்தின் மூலம்தான் நான் பேசவே ஆரம்பித்தேன். இக்கழகம் மூலம்தான் நான் வளர்ந்தேன். என்னை எனக்கே அடையாளப்படுத்தி உலகத்தினுடைய ஜன்னல்களை எனக்குத் திறந்து கொடுத்த ஒருவாய்ப்பு கம்பன் கழகத்திற்கு உண்டு. அதனுடைய தலைவராக இருந்த மு.முஇஸ்மாயில் செயலாளர் பழபழனியப்பன் அவர்களும் செய்த இந்த விடயம் மிக முக்கியமான விடயம். அதன்பின் இலக்கிய சுடர் இராமலிங்கம் கம்பன் கழகத்தில் என்னை துணைச் செயலாளராக அறிமுகம் செய்தது இன்னொரு படிநிலையில் நான் உயர்ந்ததற்கு ஒரு விடயமாக இருந்தது. 2008 கம்பன் விழாவைப் பற்றி சொல்வதற்கு மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். காரணம் போர்க்காலச் சூழல் உள்ள நிலையில் அதையும் கடந்த நன்மைகள் நாட்டில் நடக்க வேண்டும் என்ற ஆசையோடு மிகப்பெரிய தொலைநோக்கோடு இந்த விழா நடந்து முடிந்துள்ளது. இலக்கியம் பேசப்பட்ட ஒரு மேடையில் அதை நடத்திக்கொண்டிருக்கக்கூடிய நீதியரசர் விக்னேஸ்வரன், தலைவர் ஈஸ்வரன், எல்லாவற்றிற்கும் சூத்திரதாரியாக இருந்து தன்னுடைய வாழ்க்கையே கழகத்திற்காக தியாகம் செய்து மக்கள் நல்வாழ்விற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் கம்பவாரிதி ஜெயராஜ் ஆகியோருக்கு நாங்கள் தமிழர்களாக நின்று நன்றி செலுத்துகிறோம். பாராட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும் எமக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
கேள்வி : கம்பனைப்பற்றி விரிவாக மேடைகளில் பேசிய மறைந்த நீதிபதி இஸ்மாயில் பற்றியும் அவரின் வாரிசாக நீங்கள் செயற்படுவீர்களாக என்பது பற்றியும் குறிப்பிடுங்கள்?
பதில் : நீதிபதி இஸ்மாயில் பற்றி நினைக்கின்றபோது வாழ்நாட்களை கழித்து இருந்து விட்டு போனவர் அல்ல. அவர் வாழ்ந்துவிட்டு போனதற்கான அடையாளமாக இந்த இலக்கியத்தைவிட்டு விட்டுச் சென்றுள்ளார். நான் சந்தித்த மிகப்பெரும் சவால்களை தகர்த்து எனக்கு பாதை போட்டுத் தந்துள்ளார். இஸ்மாயிலின் வாரிசு நான் என அறிவித்துக் கொள்வது மிகப்பெரிய அகங்காரமாக இருக்கும். அப்படி ஒரு அகங்கார செயலில் நான் ஈடுபட்டால் அவர் எனக்கு சொல்லிக் கொடுத்த விடயங்களுக்கும் அவர் கொடுத்த வாய்ப்புகளுக்கும் நன்றி செலுத்தியவர்களாக இருக்கமாட்டோம். அவர் காலத்தில் அவர் பணியை எவ்வளவு செம்மையாக செய்தாரோ அதேபோல செம்மையாக செய்வதற்கு மற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் வேலை செய்து கொண்டிருக்கிறேன். என்னை விட மிகப்பெரியவர்கள் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை எடுத்துக் கொண்டால் கம்பராமாயணம் பேசுவதற்காக வரக்கூடிய நிலையில் இன்றைக்கு கவிக்கோ அப்துல் ரகுமான், பேராசிரியர் அப்துல் காதர், பேராசிரியர் அப்துல் சமது மற்றும் பெண்பாலாரில் நானும் பேசுகிறேன். முஸ்லிம் சமூகத்தில் இருந்து பேச்சாளர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். நேரடியாக இஸ்மாயிலுடன் தொடர்பு கொண்டு அவர் தலைவராக இருக்கின்ற போது அவர் கையால் பரிசு பெற்றதும், அவர் கையால் பாராட்டு பெற்றதும், அவர் நாவினால் என் பெயர் உச்சரிக்கப்பட்டு இந்த குழந்தை நன்றாக வரவேண்டும் என்று வாழ்த்துப் பெற்றதும் என்னுடைய மிகப்பெரிய பேறு ஆகும்.
கேள்வி : இன்றைய நவீன வாழ்வில் கம்பனின் சிந்தனைகள் எவ்வளவு பொருத்தமானது?
பதில் : கம்பன் என்பவன் மானிட நேயத்திற்கு செய்தி சொன்ன ஒரு மகாகவி. எனவே, கம்பராமாயணம் ஒரு மதத்திற்கு உரிய நூல் அல்ல. அது இலக்கியச் செழுமை கொண்ட நீதிகளை சொல்லக்கூடிய நூல். அதனால்தான் கண்ணதாசன் சொன்னான்
“காலம் என்னும் மழையிலும்
காற்று மழை ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு
அவன் தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு”
என்று சொன்னான். உடன்பாட்டு முறையிலான பிரச்சினைகள் வாழ்க்கையில் வரும்போது சிறந்த முடிவை எடுப்பதற்கு கம்பராமாயணம் மிகப்பெரிய துணையாகும்.
கேள்வி : தமிழ் நாட்டில் பழைய இலக்கியங்களை படிப்பதில் புதிய சந்ததியினருக்கிடையில் உள்ள ஈடுபாடு ஆர்வம் எப்படி?
பதில் : தமிழ் நாடு அரசாங்கத்திடம் உள்ள 41 பழந்தமிழ் நூல்களை வெளியிடுவதற்காக செம்மொழி இயக்கம் தற்பொழுது முயற்சித்து வருகிறது. தமிழுக்கும் செம்மொழிக்கும் பர்வின் சுல்தானா என்ன செய்கிறேன் என்று சொன்னால், நான் பார்க்கர் என்ற தமிழியல் ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறேன் ((Parkar). இதில் நானும் என்னுடைய கணவரும் சேர்ந்து மு.அ. அருணாச்சலம் அவர்களுடன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரைக்கும் நூற்றாண்டு வõரியாக தமிழ் இலக்கிய வரலாற்றை பதிவு செய்திருக்கிறோம். அது 6000 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய பணியாகும். இன்னொரு விடயம் என்னவென்றால் வாசிப்புப் பழக்கம் என்பது குறைந்து வருகிறது. தொழில் நுட்பம் வளர்ந்துள்ள காரணத்தால் குறும் தகடுகளில் (CD) பழம் தமிழ் இலக்கியத்தின் மூல பனுவல்களை முழுக்க என்னுடைய குரலில் நான் பதிவு செய்கிறேன். அது ஒரு 60 சிடிக்களாக வருகின்றது. உதாரணத்திற்கு நெடுல்வாடை நூல் 14 நிமிடத்தில் சிடியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை காதில்போட்டு பத்து நாட்கள் திரும்பத்திரும்ப கேட்கும்போது அதுமனதில் பதிவாகிவிடும். அதனால் தொழில் நுட்பத்தில் தமிழ் இலக்கியத்தை கொண்டுவரக்கூடிய பணியை செய்கிறேன். 28 நூல்களுக்கான பணிகள் முடிவடைந்து விட்டன.
நன்றி : கலைகேசரி – சங்கமம் பேட்டி.
தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

Saturday, 7 February 2009

இலங்கையில் அனகொண்டா......

மனதிடமுள்ளவர்கள், பயப்பட விருப்பமுள்ளவர்கள் இதைப் படிக்கலாம்

இலங்கையின் முதல் அனகொன்டா என வர்ணிக்கப்படுமளவிற்குப் பெரியதொரு மலைப்பாம்பு இலங்கை, அநுராதபுரத்தில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. படங்களைக் கீழே காணலாம்.

என்ன நீங்கள் ராஜபட்சேவோட புகைப்படம் வருமென எதிர்பார்த்தீர்களா?

ராஜபட்சே இதை விட கொடுமையான விலங்கு.







Wednesday, 4 February 2009

நீங்கள் எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பது பற்றிய சிறப்பு பார்வை..

மனிதனுக்கு மட்டும் உள்ள சிறப்புத்தன்மை பேச்சு. இது வரை எவ்வளவோ நாம் பேசியிருப்போம், கேட்டும் இருப்போம். நம்மை சுற்றி எங்கும் பேச்சு தான் நிறைந்து இருக்கிறது. வகுப்பறையில் வாத்தியார் பேசியே தூங்கவைக்கிறார். ஆபீஸில் மேலதிகாரி பேசி கடுப்பேத்துகிறார், இரவு மனைவி காதருகே கிசுகிசுத்து பட்டுப் புடவை சம்பாதித்து விடுகிறாள். காதலர்கள் கைப்பேசியில் பொய் பேசியே டைம் பாஸ் பண்ணுகிறார்கள். டிவியை போட்டால் அங்கேயும் பேச்சு தான். நாலு பேர் கூடினாலே நாக்குக்குத் தான் வேலை. எல்லோரும் அலட்சியமாகக் கொட்டும் வார்த்தைகளில் சில பேரழிவு ஏற்படுத்தும், சில ஆளை காலியாக்கும், சில வழி கெடுக்கும், சில வழி காட்டும், சில நன்மை தரும், சில நோய் வாய்ப்படுத்தும, சில குணமாக்கும். எனவே கம்யூட்டருக்கு உள்ளது போல் நம் மூளக்கும் ஒரு ஃபயர்வால் தேவை. இல்லாவிட்டால் நச்சு வார்த்தைகள் நம்மை நாசம் செய்து விடும்.

மனதை தகர்க்கும் பேச்சு:
குழந்தைகள் கேட்க நேரும் வார்த்தைகள் ,டிவி,சினிமாக்களின் வசனங்கள் அவனை எப்படி எல்லாம் பாதிக்கும் என்று யார் கவலைப்படுகிறார்கள்.
"என் மகன் சாப்பிடுவதே இல்லை" என்று சொல்லி கவலைப்படும் அன்னயின் சிம்பதியை பெற வேண்டி அவன் சாப்பிட அடம் பிடிப்பான்.
"உன் தம்பியப் பாரு எவ்வளவு நல்லா படிக்கிறான் நீ என்னடா மக்கு, சோம்பேறி மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று ஒரு தாய் அடிக்கடி திட்டுவதே அவனை மக்கு பிள்ளையாக்கி விடும்.
"மூணு கண்ணன் வரான், பூச்சாண்டி வரான் சாப்பிடு" என்று பயப்படுத்துவது அவர்களை கோழையாக்கும்.
"அவன் பிடிவாதக்காரன்","தலை போனாலும் அவன் பால் சாப்பிட மாட்டான்","சோம்பேறி" ,"முட்டாள்,"தூங்கு மூஞ்சி" என்று திரும்பத் திரும்ப பிள்ளைகளை பார்த்து கூறினால். அவர்களும் அப்படியே ஆகி விடுவார்கள். எதிர் மறையான பேச்சுக்கள் தன்னம்பிக்கையை இழக்கச்செய்யும்.சுய மரியாதயை பலவீனமாக்கும்.

நோயாளியை பார்க்கப் போகும் போது..
"அட கடவுளே உனக்கா இப்படி வரவேண்டும்?"
"எதற்கும் ஸ்கேன் எடுத்துப் பாரு ப்ரெய்ன் ட்யூமராயிருக்கப் போகுது"
"இப்படித் தான் என் மாமனாரின் தம்பி பையனுக்கு லேசா வயித்து வலிதான் வந்தது, மூணாம் நாளே ரத்தம் ரத்தமா வாந்தி எடுத்து செத்துப் போனான், கேன்சராம்"
"நெஞ்சு வலி வந்தா இங்க்லீஸ் டாக்டரிடம் போனால் அறுத்து தைத்து விடுவான். பெரியப்பாவுக்கு அட்டாக் வந்தபோது நம்மூர் வைத்தியருகிட்ட ஒரு தடவை தான் கஷாயம் குடிச்சாரு அப்புறம் வரவே இல்லை"
தாயத்து கட்டிக்கோ, காத்து கருப்பு அடிச்சிருக்கும், சாமி குத்தம், அம்மன் விளையாட்டு என்று எத்தனையோ அபத்தங்களை உளறிக் கொட்டி நோயாளியின் BP எகிறச்செய்து குழியில் தள்ளி மண்ணை மூடுகிறார்கள்.
"என்ன உடம்புக்கு இளைச்சிருக்கே, அன்னிக்கு பாத்தப்போ நல்லாத் தானே இருந்தே"
"என்ன கலர் ட்ரெஸ் இது நல்லாவே இல்ல,எங்கெயிருந்து எடுத்தே விலை அதிகம்"
"இது பழைய மாடல் கார் உன் தலையிலே கட்டிட்டான்"
இனி தப்பாது , எழவு, நரகம், பிரயோஜனமில்லை, நடக்காது , சான்சே இல்லை. சுத்த வேஸ்ட். வீணா ட்ரை பண்றே ,அவளாவது உன்னப் பாக்கிறதாவது. இதப் பாருடா காமடியெ .பொளைக்கிறது கஸ்டம் தான். இது போன்ற வார்த்தைகள் முயற்சிக்கு முட்டுக் கட்டையிடும்

வளைந்த பேச்சுகள்:
என்னதான் நடுநிலை செய்தித் தாளானாலும் தொலைக் காட்சியானாலும் அதில் வரும் செய்திகள் பெரும்பாலும் மதம் அரசியல,மொழி இன சாயம் பூசித்தான் வரும். குறைந்த பட்சம் அந்த செய்தி ஆசிரியரின் கண்ணோட்டத்தில் தான் இருக்கும். செய்திகளில் அவர்களுக்கு ஏற்றபடி வார்த்தைகளை வளைத்து எழுதுவார்கள.சாதகமானதை கொட்டை எழுத்தில் முதல் பக்கத்திலும் பாதகமானதை மூலையில் பொடி எழுத்திலும் போடுவார்கள். சில செய்திகள் மத, இனக் கலவர நெருப்பை பற்ற வைக்கும், எண்ணெய் ஊற்றும். வளைத்து எழுதப்படும் வார்த்தைகளால் அரசியல்வாதிகள் தமக்குள் அடித்துக்கொள்ள நேரிடும். சில செய்திகள் பங்கு வர்த்தகத்தை பாதிக்கும். தவறான,கற்பனையான செய்திகள் உங்கள் நம்பிக்கைகளத் திசை திருப்பிவிடக் கூடும். கேட்கும் எதையும் அப்படியே நம்பி விடக்கூடாது. நாம் தான் அதன் உண்மையை சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
வானிலை அறிக்கை, தேர்தல் ஆரூடம், ராசிபலன் , வக்கீலின் வாதம் எல்லமே ரப்பர் பேச்சுகள் தான்.

நெருப்புப் பொறிகள்:
சில மாமியார் மருமகள் பேச்சு, தொழிலாளி முதலாளி பேச்சு, எல்லை தகராறு பற்றிய பேச்சு வார்த்தை முள் மேல் சேலை தான்.
"நான் என்ன அவனப் போய் பாக்குறது, அவன் வேணுமின்னா என்ன வந்து பாக்கட்டும்""என் குடும்ப மென்ன பாரம்பரியமென்ன" "அவர் முதல்ல பேசட்டும் அப்புறம் நாம பேசலாம்" போன்ற ஈகோ பேச்சுகளால் இழப்புகள் தான் உண்டாகும்.

சின்ன சின்ன வார்த்தைகளுக்கு விபரீத அர்த்த்ங்கள் எடுத்துக்கொண்டு "என்னை பார்த்து எப்படி அவன் அந்த வார்த்தையை சொல்லலாம்"."இதை குத்திக் காட்டத்தான் அப்படி பேசினான்" என்று மல்லுக்கு போவது. இது போல சில தீப்பொறி வார்த்த்தைகளால் பஞ்சு பொதிகள் பற்றிக்கொண்டு வெட்டு குத்து, கொலை, கோர்ட், கேஸ், ஆயுள் தண்டனை வரை போய் கடைசியில் அன்று அப்படி பேசாதிருந்தால் இன்று இப்படி களி தின்ன வேண்டி வருமா என்று தாமதமாக யோசிப்பார்கள். சிலர் அலட்சியமாக சிந்தும் வார்த்தைகளால் அன்னியோனியமாக பல வருடம் குடும்பம் நடத்திய கணவனும் மனைவியும் டைவோர்ஸ் கேட்டு கோர்ட் வாசலில் ஏறி இறங்குவார்கள். பிள்ளைகள் அனாதைகளாகும்.

பொறுப்பற்ற பேச்சு:
சில தலைவர்கள் விடும் பொறுப்பற்ற அறிக்கைகள் மக்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி விடும். அமெரிக்க அதிபரின் வார்த்தைகள் உலக பொருளாதாரத்தைப் பாதிக்கும். ஒபாமாவின் அறிக்கையால் நம்மூர் சந்தையில் காய்கறி விலை எகிறக்கூடும் .இந்திய அரசியலில் பேசிப் பேசி நாட்டைக் கெடுத்தவர்களும், பேசாமலேயே நாட்டைக் கெடுத்தவர்களும் உண்டு. சில தலைவர்களின் திமிர் பேச்சால் போர் ஏற்பட்டு நாடு அழியும். அவர்களும் அழிவார்கள்.

மோசடிப் பேச்சு:
சாமியார்கள், மத குருக்கள, ஜோசியக்காரர்கள் சொல்வதை கண்னை மூடிக்கொண்டு கேட்கலாம் ஆனால் அறிவை மூடிகொண்டு அல்ல.இது தான் சத்தியத்தின் பாதை என்று தவறாக வழி காட்டும் போலி ஆன்மீக வாதிகளின் கவர்ச்சி பேச்சுகளில் கற்பழிப்பின் லட்சியங்கள் மறைந்திருக்கலாம்.
சமயவாதிகளின், அரசியல் வாதிகளின் சாதுரியப் பேச்சுகள் இளைய சமுதாயத்தை பலிகடாக்களாக மாற்றக்கூடும் .மதங்கள் உருவாக்கும் பயத்தையும், பக்தியையும், சற்று ஒதுக்கி வைத்து விட்டு தர்க்க அறிவின் ஒளியில் பார்த்தால் எல்லா மதத்திலும் அடியில் பெரும் ஓட்டை தான் தெரியும்.

மந்திரவாதி "உனக்கு பக்கத்து வீட்டுக்காரன் சூனியம் வைத்திருக்கிறான் நாற்பது நாளில் கை கால் விளங்காமல் போவாய் ’என்று சொல்வதை நீங்கள் நம்பினால் உங்கள் மனம் அதை உண்மயாக்கும.

குடுகுடுப்பைக்காரன் " நீ ரத்தம் கககி சாவாய்" என்று சொன்னால் அவன் சொல்லுக்கு அந்த பவர் உண்டு என்று மனம் நம்பி விட்டால் பயத்தில் உடனே அட்ரீனலின் சுரக்கும் இதயத்துடிப்பு தாறு மாறாகும், இரத்த அழுத்தம் கூடும்,தாக்குப் பிடிக்காமல் ஏதோ ரத்தக்குழாய் வாய் பிளக்க அவன் வார்த்தை பலித்து விடும்.

சின்ன காஸ் ட்ரபுளை பல மருத்துவ வார்த்தைகளை சொல்லி பயமுறுத்தி ஹார்ட் அட்டாக்காக நம்ப வைத்து பணம் கறக்கும ஒருசில மருத்துவர்களின் வார்த்தைகள் அது போன்றது. ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு வாழ்கையை பாழக்குபவர்கள் எத்தனை பேர்கள். நம்பிக்கையை சிறிது மாற்றி வைத்து விட்டு சிறிது சிந்தித்துப் பார்த்தாலே தெரியும் அவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவே உங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று்.

நீர் குமிழிகள்:
குடிகாரன் பேச்சு, கடன் கேட்பவர்கள் பேச்சு, காதலன் பேச்சு, அரசியல்வாதியின் வாக்குறுதி, சீட்டுக்கம்பனி வாக்குறுதி எல்லாவற்றுக்கும் அற்ப அயுள் தான்.

உயர்வு நவிற்சி:
கல்யாணத் தரகரின் பேச்சு, வியாபாரியின் பேச்சு, சேல்ஸ் ரெப்பின் பேச்சு, ரசிகர்கள் பேச்சு, முகஸ்துதி பேச்சு, அடிவருடி பேச்சு ,மாப்பிள்ளை தந்தையின் பேச்சு ,பிள்ளைகளைப் பற்றி பெற்றோர்களின் பேச்சு, ரியல் எஸ்டேட் காரர்கள் பேச்சு எல்லாமே 70 mm ல் DTS effect உடன் இருக்கும். அப்படியே நம்புவோர்க்கு நாமம் தான்.

வஞ்சப் புகழ்சி: சிலர் தமாஷ் பண்ணுகிறேன் என்று கூட இருப்பவர்களையே குத்திக் காட்டுவார்கள். நையாண்டி அடிப்பார்கள் இந்த நகைச்சுவைத் திலகங்கள் நளை வாழ்வின் சறுக்குப்பாதையில் சறுக்கி கீழே போகும் போது அனாதைகளாக மற்றவர்களின் நைய்யாண்டிகளுக்கு கதா பாத்திரமாவார்கள்.

மூடப் பேச்சுகள்:பூனை குறுக்கே போனால்,விதவை எதிரே வந்தால் சகுனம் சரியில்லை.பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.போன்ற மூட நம்பிக்கைகளை தனிப் பதிவுதான் போட வேண்டும்.முன்னோர்களின் சாத்திர சம்பபிரதாயாங்கள் அவர்கள் காலத்தில் எதோ ஒரு தேவைக்கு உருவாக்கப்பட்டது,அதை கண்மூடி பின் பற்றாமல் ஏன் எதற்கு எப்படி என்று கேட்டு இப்போதும் அந்த தேவை உண்டா என் ஆய்ந்து அவற்றின் உண்மையான நோக்கமறிந்து செயல் படவேண்டும்.

காதல் பேச்சு:காதலிப்பதை சொல்லி கெட்டவர்களை விட சொல்லாமலேயே கெட்டவர்கள் அனேகம் ."உன்னை விட அழகி யாரும் இல்லை", "நீ தான் நான் பார்த்த முதல் பெண்", "உனக்காக உயிரையும் தருவேன்", நீயின்றி நான் இல்லை" இப்படி எத்தனை பொய்களில் காதலை கட்டி எழுப்புவார்கள், கல்யாணம் என்றால் காணாமல் போவார்கள். அப்படியே கல்யாணம் செய்து கொண்டால் பொய்கள் எல்லாம் சாயம் வெளுக்கும் போது காலம் கடந்திருக்கும்.

குதர்க்கப் பேச்சு: தர்க்கம் ஆரோக்கியமானது,ஆனால் முயலுக்கு மூணுகால் பார்ட்டிகளின் "அதான் அந்த இன்னொரு வாழைப்பழம்" டைப் குதர்கங்களை விட்டு விலகுவது நேரம் மிச்சப்படுத்தும்.

கோபப்பேச்சு: திருத்தும் நோக்கம் கொண்ட கோபம் தேவையானது, நல்லது. தன்னையும் பிறரையும் அழிக்கும் கோபம் தவறானது. கோபமாக பேசுபவர் நம் தவறை திருத்தும் நோக்கத்தில் உரிமை எடுத்துக் கொண்டு கோபப் படலாம். அப்படி ஒருவர் நம்மிடம் கோபமாக பேசும்போது அவரைப் பேச விடாமல் எதிர்த்து பேசக்கூடாது. அவர் நாம் அதிகமாக கோப பட்டு விட்டோமோ என கருதி நி்றுத்திய பின் உங்கள நியாயத்தை சொல்லிப்பாருங்கள். கோபம் பாசமாகிவிடும்.

சவால் பேச்சு: ஏதோ ஒரு வேகத்தில் பெரிய சவால்கள் விடும்போது அதை நிறைவேற்றும் சக்தி இருக்கிறதா என்று யோசிப்பதில்லை.பின்னர் பெரும் விலை கொடுத்து சவாலை ஜெயிப்பது அல்லது சவால் பிசு பிசுத்து முன்னை விடக் கேவலமாக உணர்வது தேவைதானா?

வசைப் பேச்சு: வசை பாடுவது, திட்டுவது எல்லாம் இயலமையை பறை சாற்றும் வார்த்தைகள்   

பொய் : எதெற்கெடுத்தாலும் பொய் பேசுபவர்கள் வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். பின்னர் அவர்களால் எங்கே யாரிடம் என்ன பொய் சொன்னோம் எனறு மறந்து பலரிடம் வகையாய் மாட்டிக்கொள்வார்கள். எல்லோரிடம் "பொய்யன்" என்று சர்டிஃபிகேட் வாங்கிய பின் தனிமைப் படுத்தப்பட்டு மதிப்பிழந்து சிறுமைப் படுவார்கள்.

அதிகமான கெட்ட பேச்சுகள் இருப்பதனால் பதிவு பெரிதாகி விட்டது மன்னிக்கவும். இன்னும் வாழ்வில் தவிர்க்க வேண்டிய பேச்சுகள் ஞாபகம் வந்தால் எழுதுவேன்.உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள். பேச வேண்டிய நல்ல விசயங்கள் பற்றி அப்புறம் சின்னதா ஒரு பதிவு போடலாம்.

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.