Wednesday, 25 February 2009

ரேபிஸ் வைரஸ் தாக்கி உயிரிழப்பு எப்படி ஏற்படுகிறது ? ஒரு விழிப்புணர்வு ஆய்வு...

ரேபிஸ் என்பது ஒரு விதமான வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளை யும், வீட்டு விலங்கான நாய் ஆகியவற்றையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், நேரடி யாக மனிதர்களை கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது. ரேபிஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடனேயே டாக்டரிடம் காட்டி உரிய சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக்  கூடியது. ரேபிஸ் நோயால் உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.இவற்றை பற்றி இங்கே விரிவாக பார்போம்!! 



நாய்கள், பூனைகள் மற்றும் வன உயிரினங்கள் மனிதனை கடித்தால், அவர்களின் உடலில் ரேபிஸ் வைரஸ் பரவுகிறது.நாய் வாய் வைத்த தண்ணீரை கொட்டச் சொல்கிறார்கள். அந்தப் பாத்திரத்தை பல தடவை தண்ணீராலும், மண்ணாலும் சுத்தம் செய்யச் சொல்கிறார்கள். 


நாய் வாய் வைத்தால் என்ன ? மண்ணை வைத்து ஏன் கழுக வேண்டும்? 

விஞ்ஞான அடிப்படையில் இறைத்தூதர்  முகமது நபியின் இந்தப் போதனை சரியானதுதானா? என்பது போன்ற பல கேள்விகள் நமக்கு எழுகின்றன.
 

நாயின் எச்சிலில் உள்ள ரேபிஸ் வைரஸ்கள் அளவில் கூற இயலாத அளவிற்கு மிகவும் நூண்ணியமானவை ஆகும். இந்த வைரஸ்கள் எவ்வளவு நூண்ணியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதனுடைய வீரியமும் இருக்கும். இந்த வைரஸ்களை அழிக்கக்கூடிய மூலங்கள் அதிகமாக மண்ணில் இருப்பதை நவீன விஞ்ஞானம் நிருபிக்கிறது.
 

பலவிதமான நோய்கிருமிகள் உடலில் உள்ள நிலையில் மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டபின் அந்த கிருமிகள் பூமியில் உயிரோடு இருப்பதில்லை. ஏனென்றால் மண்ணில் உள்ள சில மூலங்கள் அந்தக் கிருமிகளை அழித்து விடுகின்றன. இதனை பல முறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வு நிரூபித்துள்ளனர்.
 

கிருமிகளை அழிக்கக்கூடிய டெட்ரா சைக்ளின், டெட்ராலைட் ஆகிய இரண்டு மூலங்களும் மண்ணில் உள்ள புழுதிகளில் உள்ளன. சாக்பீஸ் துகள்கள் எவ்வாறு மையோடு கலந்து விடுகிறதோ அது போன்று இந்த மூலங்கள் பாத்திரத்தின் சுவர்களில் நன்றாக பரவி அந்த கிருமிகளை அழித்து பாத்திரத்தை சுத்தப்படுத்துகிறது.
 

நவீன காலத்தில் பல்லாண்டுகள் ஆய்வு செய்து விஞ்ஞானம் கூறக்கூடிய ஒரு செய்தியை, தேர்ந்த மருத்துவர்கள் பல்லாண்டுகள் கற்றறிந்து மக்களுக்கு கூறும் விஷயங்களையெல்லாம் எவ்வித விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் கூறியுள்ளார்கள்.


 

நாயின் உமிழ் நீர்...

நாயின் உமிழ் நீரில் உள்ள இந்த ரேபிஸ் வைரஸ்கள் நாய் வாய் வைத்த தண்ணீரை நாம் அருந்துவதின் மூலம் நம்முடைய உடலிற்குள் சென்று விடுகின்றது.

அல்லது நம்முடைய உடலில் காயம் பட்ட இடத்தில் நாயின் உமிழ் நீர் பட்டாலோ, அல்லது நாய் வாய் வைத்த தண்ணீரை வைத்து நம்முடைய உடலை சுத்தம் செய்யும் போது நம்முடைய உடலில் உள்ள காயங்களின் மூலம் இந்த வைரஸ் நம்முடைய உடலிற்குள் செல்கிறது.

இந்த கிருமி 30 நாட்களிலிருந்து 60 நாட்களுக்குள் கடித்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதுகடியின் ஆழத்தைப் பொறுத்து, தடுப்பூசியுடன், கடிபட்ட இடத்தைச் சுற்றி, 'இம்யுனோ குளோபுலின்' புரதமும் செலுத்த வேண்டும். சிலர், மருத்துவமனைக்கு வரும் போது, 'நாய் கடித்து விட்டது' என்று மட்டும் சொல்லி, 'ஆன்டிரேபிஸ்' தடுப்பூசி போடுவர். கடிபட்ட இடத்தை டாக்டரிடம் காண்பித்தால்தான், உரிய முறையில் சிகிச்சை அளிக்க முடியும்.


ரேபிஸ் ஏற்படுத்தும் பாதிப்பு

வெறி நாய் கடித்தவுடன் வைரஸ் கிருமி நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. மேலும் குரல் எழுப்பும் தசைகளையும் இறுக்குகிறது. இதனால் வெறிநாய் கடித்தவர்களின் குரல் நாய்கள் குரைப்பதை போல மாறிவிடுகிறது. அதோடு வலி, சோர்வு, பயம், தூக்கமின்மை, தண்ணீரைக் கண்டால் பயம் ஆகிய அறிகுறிகளும் காணப்படும். ரேபிஸ் நோய் முற்றினால் குணமாக்க மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.



இந்த ரேபிஸ் வைரஸ் காயம் பட்ட இடத்தில் படிந்தவுடன் தசை இழைகளில் பன்மடங்கு எண்ணிக்கையில் பெருகுகிறது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் வைரஸ் கடிபட்ட இடத்திலிருந்து நரம்பு வழியாக தன் இலக்கு உறுப்பான மூளையை நோக்கி நகர்கிறது. இவற்றின் பெருக்கக்காலம் என்பது பல காரணிகளைப் பொறுத்து வேறுபடுகிறது.

காயம் பட்ட இடம்..
 • காயம் பட்ட இடத்தில் பதியும் வைரஸின் அளவு
• வைரஸின் நோய் உண்டாக்கும் தீவிரத் தன்மை 
• பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்புத் தன்மையின் நிலை மூளைக்கு அருகில் அதாவது தலை கழுத்து, முகம் அல்லது அதிகளவு நரம்புகளைக் கொண்ட உடலின் எந்த ஒரு கடைப்பகுதியில் கடிபட்டாலும் இவ்வைரஸ் குறைந்த காலத்தில் பெருக்கம் அடையும்.

இந்த ரேபிஸ் கிருமிகள் மனித உடலிற்குள் சென்ற 30 லி 60 நாட்களுக்குள் வியாதி மனிதனிடம் வெளிப்படுகிறது. இந்த வைரஸ் மூளைக்குள் பரவி பல பகுதிகளைத் தாக்கி, நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. அதனால் உடலிலுள்ள பல தசைகளும் முறுக்கேறி இறுகுகின்றன. குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால் இவர்கள் குரல் நாய் குரைப்பதைப் போலிருக்கும். விழுங்கு தசைகள் இறுகுவதால் தண்ணீர் அருந்தமுடியாமல் போகிறது. முதல் அறிகுறி ரேபிஸ் பைரஸ் படிந்த இடத்தில் வலி ஏற்படுகிறது. அடுத்தபடியாக உளச் சோர்வு (Depression) பயம் (apprehension) தூக்கமின்மை தோன்றுகிறது. அதற்குப் பின் ஏதாவது பருக முயலும்போது தொண்டைச் சுருக்கம் (Spasm) ஏற்படுகிறது. உமிழ்நீர் கூட விழுங்க முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் வாந்தியும் உண்டாகும். தண்ணீரைக் கண்டால் பயம் (Hydrophobia) மாய கற்பனைத் தோற்றம் (Hallucinalions), தண்டுவடச் செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தி முடிவில் மரணத்தை ஏற்படுத்துகிறது.



நாய் கடி என்று ஊசி போட்டு அசட்டுதனமாக இருந்தால், உடனடியாக சிகிச்சை எடுக்க தவறினால் நோயாளிகள் இறக்க நேரிடும். இந்நோய்க்கான தடுப்பு மருந்துகளின் விலை அதிகம் என்பதால் வசதியில்லாதவர்கள் பலர் உரிய சிகிச்சை மேற்கொள்வதில்லை. அரசு மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகள் போதிய அளவில் இருப்பும் இருப்பதில்லைஇந்த இழப்புகள் ஏற்படுகிறது. விஞ்ஞான உலகில் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவது மக்களிடையே,உள்ள விழிப்புணர்வு இன்மையையே காட்டுகிறது.

 விழிப்புணர்வு..
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி வளர்ந்து வரும் நாடுகளில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ஆண்டுந்தோறும் 20 ஆயிரம் பேர் இறப்பதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது. சென்னையிலும் இதன் பாதிப்பு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முன்பெல்லாம் நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்துக்களில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். இதில் இப்போது தமிழக அரசு கவனம் செலுத்தாததால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெரு நாய்களை பிடித்துச் செல்ல மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

ரேபிஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும், அதை முற்றிலும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்., 28ம் தேதி சர்வதேச ரேபிஸ் தினம் கடைபிடிக்கப் படுகிறது.  ரேபிஸ் நோய்க்கு சரியான தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் இவற்றின் விலை அதிகமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. 

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment