கலந்தாய்வின் போது கட் ஆஃப் மார்க் அடிப்படையில் தான் சீட் ஒதுக்கபடும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். எனக்கு இந்த கட் ஆஃப் மார்க் பற்றிய ஞானம் இல்லை தயவு செய்து விளக்கம் அளிக்கவும்.
எதனை கொண்டு கட் ஆஃப் மார்க் கணக்கிடப்படுகின்றது.
பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வின் போது கட் ஆஃப்மதிப்பென்கள் அடிப்படையில் தான் சேர்க்கைகள் நடைபெறும் என்று நாம் அனைவரும்கேள்விபட்டு இருப்போம். அண்ணா பல்கலைகழகத்தில் சீட் கிடைக்க வேண்டும் என்றால்இவ்வளவு கட் ஆஃப் மார்க் எடுத்து இருக்க வேண்டும் அந்த கல்லூரியில் சேர்வது என்றால்இவ்வளவு கட் ஆஃப் மார்க் தேவை இந்த கல்லூரியில் சேர்வது என்றால் இவ்வளவு கட்ஆஃப் மார்க் வேண்டும் என்றேல்லாம் கூறுவதை நாம் கேட்டு இருப்போம். அனால் கட் ஆஃப்மார்க் என்றால் என்ன என்பதையும் அதை எப்படி கணக்கிடுவது என்பதையும் நம்மில்பலரும் அறிந்தது இல்லை.
அதை பற்றிய அறை குறை அறிவில் நாம் அதை எப்படி கணக்கிடுகின்றோம் என்றால் ஒருகுறிப்பிட்ட 3 பாடத்தில் நாம் எடுத்துள்ள மதிப்பென்களை கூட்டி 3 ஆல் வகுத்து வரும்விடையை தான் நாம்மில் பலர் கட் ஆஃப் என்று நினைத்து வைத்துள்ளோம்.
நாம் பொறியியல் கலந்தாய்விற்க்கு செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம் அதன்கட் ஆஃப் மார்க் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியலில் மாணவர்கள் எடுக்கும்மதிபென்கள் அடிப்படையில் கணக்கிடபடும். இதுவே மருத்துவ கலந்தாய்வாக இருந்தால்உயிரியல், வேதியல் மற்றும் இயற்பியலில் மாணவர்கள் எடுக்கும் மதிபென்கள்அடிப்படையில் கணக்கிடபடும்.
எப்படி கணக்கிடுவது?
நாம் பொறியியல் அல்லது மருத்துவ படிப்பில் சேர இருக்கின்றோம் கீழ் குறிப்பிட்டமதிப்பென்கள் தான் நாம் பெற்றுள்ளோம் என்று கருதி கொள்ளவும்.
பாடம்
|
மதிப்பென்
|
கணிதம்
|
189 / 200
|
வேதியல்
|
185 / 200
|
இயற்பியல்
|
180 / 200
|
உயிரியல்
|
190 / 200
|
இதனுடைய கட் ஆஃப் மார்க்கை எப்படி கணக்கிடுவது என்பதை நாம் அறிவோம்.
நாம் முன்பு குறிப்பிட்டது போல பொறியியல் கலந்தாய்வில் கணிதம், வேதியியல் மற்றும்இயற்பியலின் மதிப்பென்களை கொண்டே கட் ஆஃப் மார்க் கணகிடபடும்.
நம்முடைய கணக்கு மதிப்பென்னை 2 ஆல் வகுத்து இயற்பியல் மற்றும் வேதியியலின்மதிப்பென்களை தனித்தனியே 4 ஆல் வகுத்து வரும் விடைகளை கூட்டினால் நம்முடையகட் ஆஃப் மதிப்பென் வரும்.
கணக்கு : 189 / 2 = 94.5
இயற்பியல் : 180 / 4 = 45
வேதியல் : 185 / 4 = 46.2
கட் ஆஃப் மார்க் : 94.5 + 45 + 46.2 = 185.7
இதுவே மருத்துவ கலந்தாய்வாக இருந்தால் கணிதத்திற்க்கு பதில் உயிரியலை வைத்துகணக்கிட வேண்டும்.
உயிரியல் : 190 / 2 = 95.
இயற்பியல் : 180 / 4 = 45.
வேதியல் : 185 / 4 = 46.2
கட் ஆஃப் மார்க் : 95 + 45 + 46.2 = 186.2
தமிழக பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வு கட் ஆஃப் மதிப்பென்னைகணக்கிடுவது எப்படி என்று புரிந்து இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
இது தமிழகத்தில் நடத்தபடும் பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வு கட் ஆஃப்மதிப்பென் கணக்கிடும் முறை மற்ற தேர்வுகளுக்கும் கலந்தாய்வுகளுக்கும் கட் ஆஃப்மதிப்பென் கணகிடும் முறை மறுபடலாம்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்
No comments:
Post a Comment