Sunday, 5 February 2012

அவ்லியாக்கள் யார் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்?

அவ்லியாக்கள் யார்?
அவர்களின் இலக்கணம் என்ன?
அவர்களின் மீது நமது கடமைகள் என்ன?
என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இல்லையெனில் உண்மையான அவ்லியாக்களையும் போலியானவர்களையும் நாம் அடையாளம் தெரிந்து கொள்ளமுடியாது போய் விடும். அவ்வாறு இனம் கண்டு கொள்ளமுடியாததால் தான்அப்பாவி மக்கள் போலியானவர்களை அவ்லியாக்கள் என நம்பி ஏமாந்த விடுகின்றனர். அதனால் தடம் புரண்டு வழி கேட்டிற்கே சென்று விடுகின்றனர்.வல்லமையும் ஆற்றலும் மிக்க அல்லாஹ்விடம் வைக்கவேண்டிய நம்பிக்கையை அவ்லியாக்களிடம் வைத்து ஈமானையே இழந்து நிற்கின்ற பரிதாபமான நிலையைக் காணமுடிகிறது. அவ்லியாக்களை நம்புவது நமது நம்பிக்கையைச் சார்ந்தது தான். ஆயினும், அவர்களை நமது சமுதாயம் புரிந்து கொண்ட விதம் தான் தவறானது என்பதைத்
தெளிவுபடுத்துவதே நமது இந்ததலைப்பின் நோக்கமாகும்.
அல்லாஹ்வின் அவ்லியாக்கள் யார் என்பதை திருமறையின் பல்வேறு வசனங்கள்  நமக்குத்தெளிவுபடுத்துகின்றன.
அவ்லியாக்களின் இலக்கணத்தை இறைமைற பின்வருமாறு கூறுவதைப் பாருங்கள்:-
அலா இன்ன அவ்லியால்லாஹி……..
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை.அவர்கள் கவைலப்படவும் மாட்டார்கள்.அவர்கள் இறைவனை  நம்புவார்கள்.(அவனை) அஞ்சுவோராகவும் இருப்பார்கள். (அல்குர்ஆன்-10:62,63)
இந்த இறைவசனம் அவர்கள் :-
1) இறைவனைத்தவிர எவருக்கும் பயப்படமாட்டார்கள்.
2) எதைப்பற்றியும் கவைலப்படமாட்டார்கள்
3) இறைவனை உறுதியாக நம்புவார்கள்
4)  உள்ளும் புறமும் இறைவைன அஞ்சுவார்கள் (தக்வா உடன் இருப்பார்கள்.)
இந்த பண்புகளில் ஒருவர் உண்மையாகவும் உறுதியாகவும் இறைவைன நம்புகிறாரா? இறைவைன அஞ்சுகிறாரா? என்பதை எவராலும் அறிய முடியாது. ஏனெனில் ‘ஈமான், தக்வா’ என்னும் இரு தன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் மறைந்து இருப்பைவயாகும். இறைவைனத்தவிர எவரும் இதனை அறிந்து கொள்ள முடியாது. எனவே யார் ‘இறை நேசர்’ என்பதை இறைவன் ஒருவனே நன்கறிவான்.
மேலும் அவலியாவுக்குரிய இலக்கணத்தைப் பாருங்கள்:-
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள், ‘வலி என்பவர்,
1.அல் ஆலிமு பில்லாஹ் - இறைவைனப்பற்றி அறிந்தவராக இருப்பார்.
2.அல்முவாளிபு அலா தாஅத்திஹி - அவனது கட்டைளகைள சரியாகக்கடைபிடிப்பவராக இருப்பார்.
3.அல்முக்லிஸ் ஃபீ இபாததிஹி –  அவனை வணங்கி வழிபடுவதில் பரிசுத்தமானவராக இருப்பார’ என விளக்கமளிக்கிறார்கள்.
இமாம் ஷவ்கானி (ரஹ்) அவர்கள்,
இறைவேதத்தை முற்றிலும் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும்   பின்பற்றுபவராக இருப்பவரே  இறைநேசராக இருக்கமுடியும்’   எனக் கூறுகிறார்கள்.
இவ்வாறிருக்க, நாம் எவ்வாறு ஒருவரை ‘வலீ ‘ என்றும் ‘மஹான்’ என்றும் சான்றிதழ் வழங்க முடியும்?
இன்று நாம் அவ்லியாக்கள் எனக்கூறும்; எவைரப்பற்றியும் எதையும் நாம் அறிந்திருக்கவில்லை. அவர்களின் அகவாழ்வைப்பற்றியோ புறவாழ்வைப்பற்றியோ எதுவும் நமக்குத்தெரியாது. அவர்களின்
உண்மையான வரலாறும் நமக்குத் தெரியாது. அல்லாஹ்வோ, அவனது தூதரோ அவர்களைப்பற்றி அடையாளம் காட்டவும் இல்லை.
குர்ஆனில் இறைதூதர்களைப்பற்றிக் கூறப்படுகிறது. அவர்களையடுத்து இறைவனின் நேசத்தைப் பெற்ற மர்யம் (அலை), ஃபிர்வ்னின் மனைவி (ஆசியா), இம்ரான், லுக்மான், கிள்ரு, கிஜ்பீலு, ஹபீபுந்நஜ்ஜார், அஸ்ஹாபுல் கஹ்ஃபு,ஸைத் (ரலி),துல்கர்னைன் போன்ற நல்லடியார்களைப்பற்றியும்,
பத்ரு, உஹ்து, அஹ்ஸாப், ஹுனைன், அஸ்ஹாபுஷ்ஷஜரா போன்ற தியாகிகளையும்  குறிப்பிடுகிறான். இன்னும் பெயர் குறிப்பிடாமல் சிலரையும், பொதுவாக நபித்தோழர் தோழியர்  பற்றியும் குறிப்பிடுகிறான்.
அதைப்போல் நபி (ஸல்) அவர்களும், தமது காலத்தில் வாழ்ந்த நாயகத் தோழர்கள், தோழியர்கள் பலரையும் சுவர்க்கவாசிகள் என அடையாளம் காட்டியுள்ளார்கள். இவர்களை நாம் தைரியமாக
‘அவ்லியாக்கள்’ எனக் கூறலாம். மற்றவர்களைப்பற்றி  அல்லாஹ்வோ, அவனது தூதரோ அறிவிக்காத வரை நாம் யாரையும் அவ்லியாக்கள் எனக் கூறமுடியாது.
இறைவனை  உள்ளும் புறமும் அஞ்சி வாழ்ந்த அவனது நல்லடியார்கைளப்பற்றிக் குறிப்பிடும் போது,
رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ
‘ரளியல்லாஹு அன்ஹும் வரளூ அன்ஹும்’
‘அவர்கைள அல்லாஹ்வும் பொருந்திக்கொண்டான். அவர்களும் அவைனப்பொருந்திக்கொண்டார்கள்’ (அல்குர்ஆன் 98:8) என இறைமறை குறிப்பிடுகின்றது.
இதன்படி இறை நேசர்கள் என நாம் கூறுவோர் இறைவைனப் பொருந்திககொண்டிருக்கலாம். ஆனால் இறைவன் அவர்கைளப் பொருந்திக் கொண்டானா இல்லையா என்பைத நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்? இறைவனோ, இறை தூதரோ அறிவிக்காத ஒரு செய்தியை நாம் எவ்வாறு நம்ப முடியும்?
எனவே, எவரையும் நாமாக ‘வலி’ என்றோ ‘அவ்லியா’ என்றோ கூறவும் முடியாது, பட்டம் சூட்டவும் முடியாது. அவ்வாறு ஒருவர் தன்னை ‘அவ்லியா’ என்று கூறினால் அவர் பொய்யராகவே கருதப்படுவார்.
("வலி" என்றால் "இறைநேசர்", "அவ்லியா" என்றால் "இறைநேசர்கள்" என்பது பொருளாகும். ஒருமைக்கும் பன்மைக்கும் வேறு பாடு தெரியாமல் அவ்லியா என்றே மக்கள் கூறுகின்றனர். எனேவ வழக்கப்படியே நாம் அவ்லியா என்ற பன்மைச்சொல்லையே பயன்படுத்தியிருக்கிறோம் என்பதைக் கவனத்திற் கொள்க!)
இனி இந்த இலக்கணத்தை வைத்து நாம் கொண்டாடி வருபவர்களை அவ்லியாக்கள் எனக் கூறலாமா? என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவ்லியாக்களை நாம் எவ்வாறு மதிப்பது?
உண்மையான அவ்லியாக்கள் யார்? போலியானவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொண்டோம்.
இனி, அவ்லியாக்களைப் பற்றி மக்களிடையே நிலவி வரும் நம்பிக்கைகள், ஐயங்கள் குறித்தும்
அவற்றிற்கு மார்க்கம் கூறும் தீர்ப்புகள் என்ன? என்பதையும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நாம்
தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
கப்றுகளுக்கு கட்டிடங்கள் கட்டலாமா?
எவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே கியாமத் (மறுமை) நாள் வருகிறதோ அவர்களும்,
கப்றுகளை மஸ்ஜிதாக (வழிபடும் இடமாக) ஆக்கிக் கொண்டவர்களும் மக்களில் மிகவும்
கெட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினாhகள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி)
ஆதாரம் : முஸ்னத் அஹ்மத்)
அபிசீனிய நாட்டிற்குச் சென்று திரும்பிய உம்மு ஹபீபா(ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் தாம் கண்ட கிறித்தவக் கோயிலையும், அதில் பொறிக்கப்பட்டிருந்த உருவங்களையும் பற்றி; நபி (ஸல்)அவர்களிடம் தெரிவித்தார்கள்.
அப்போது நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர்களில் நல்லவர் மரணித்து விட்டால் அந்த நல்லவரின் மண்ணறை மீது கட்டிடங்கள் கட்டி அவர்களின் உருவங்களை அதில் வரைவார்கள். இவர்கள் தான் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷh (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தடைசெய்த இந்த அடாத செயலை இன்று மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தர்ஹாக்களைக்கட்டி
வழிபட்டு வருவதைக் காணுகிறொம். இதனால் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாகின்றனர்.
கப்றுகளை தரைமட்டத்திற்கு மேல் உயர்த்தலாமா?
கப்றுகள் பூசப்படுவதையும், அதன் மீத கட்டிடங்கள் கட்டுவதையும், அதனருகே உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக ஐhபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( ஆதாரம: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)
நபி (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். ‘தரை மட்டத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ள எந்த கப்றையும் நீ தரைமட்டமாக்காமல் விட்டுவிடாதே! எந்த உருவப்படத்தையும்,சிலைகளையும் அழிக்காமல் விட்டுவிடாதே’ என்று அலி (ரலி) அவர்கள் அபூ ஹய்யான் என்பவருக்குக் கூறினார்கள்.(ஆதாரம் முஸ்லிம்,திர்மிதி)
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் மதீனாவில் உயரமாக கட்டப்பட்ட சில கப்றுகளை இடித்துத் தரை மட்டமாக்கியதைத் தாம் கண்டதாக தமது வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள்.
மேலே கூறப்பட்ட நபிமொழிகள்  இன்று ஒவ்வொரு ஊரிலும் வானளாவ கப்றுகளை கட்டிக் கொண்டாடுவதை வன்மையாகக் கண்டிப்பதைக் காணலாம்.
அவ்லியாக்களுக்கு விழா எடுக்கலாமா?
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذَاتِ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ
‘கப்றுகளை ஸியாரத் செய்யும் பெண்களையும், அதன் மீது கட்டிடம் கட்டுபவர்களையும், அதில் விளக்கு எரிப்பவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்’.                                                                  (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அபூதாவூது, திர்மிதி,பைஹகீ: 7457)
நபி(ஸல்)அவர்கள் ‘எனது கப்றை விழா கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்’ என தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் எச்செரித்துளார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி), ஆதாரம்:அஹ்மத்,அபூதாவூது)கப்றுகளைக் கட்டுவது, விளக்கெரித்து அலங்கரிப்பது, பட்டு விரிப்பது, விழா எடுப்பது, கந்தூரி உரூஸ் கொண்டாடுவது போன்ற அனைத்து ஷிர்க், பித்அத்தானஅனாச்சாரங்களையெல்லாம் நபி(ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிப்பதைப் பாருங்கள்.
இவ்வாறு கட்டுவதற்கு மட்டும் மார்க்கத்தில் அனுமதி இருந்திருந்தால், எண்ணை                     வளங்கொழிக்கும் குபேர நாடான ஸவூதி அரேபியாவில் விண்ணைமுட்டுமளவுக்கு தங்கத்திலும்,வைரக்கற்களிலுமல்லவா சமாதிகளைக்கட்டி அமர்க்களப்படுத்தியிருப்பார்கள்.    மக்காவிற்கு ஹஜ்ஜுக்குச் செல்வோர் ஸியாரத்திற்காக மக்கா மதீனாவுக்குச் சென்று வருகிறார்கள்.அங்கே எங்கேனும் இவ்வாறு கப்றுகள் கட்டப்பட்டுள்ளனவா? என சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.
நபி (ஸல்)அவர்களுடையவும், நாற்பெரும் கலீபாக்களுடையவும், ஜன்னத்துல் பகீஃயில் அடக்கமாயிருக்கும் உம்முஹாத்துல் முஃமினீன்கள் (விசுவாசிகளின் அன்னையர்) எனப்படும்            நபி (ஸல்) அவர்களின் ஒன்பது மனைவியருடையவும், சுவர்க்கத்துத் தலைவி எனப் போற்றப்படும் பாத்திமா(ரலி)அவர்கள், அவர்களின் மூன்று சகோதரிகளான ஸைனப் (ரலி), ருகைய்யா(ரலி) உம்முகுல்தூம் (ரலி), அவர்களது சகோதரரரும் நபியின் மகனுமாகிய இப்றாஹீம்(ரலி)அவர்கள், இஸ்லாத்திற்காக தங்களின் உயிர்களை அர்ப்பணித்த பத்ரு, உஹுத் தியாகிகள், வலிமார்களுக்கெல்லாம் தலைவராகிய ஸையிதுஷ்ஷ{ஹதா(தியாகிகளின் தலைவர்)ஹம்ஸா(ரலி)
போன்றவர்களுக்கெல்லாம் சமாதிகள் கட்டிவிழாக்கள் எடுக்கிறார்களா? அவ்வாறு எடுக்காதபோது முகவரியும் வரலாறும் இல்லாத யார் யாருக்கோ நமது ஊர்களில் கட்டிடங்கள் கட்டி விழா எடுக்கிறார்களே இதற்கு மார்க்கத்தில்சிறிதேனும் அனுமதியிருக்கிறதா? அங்கீகாரம் இருக்கிறதா என்பதை நமது சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டும்.
கந்தூரி,உரூஸ்,யானை ஊர்வலங்கள் நடத்தலாமா?
பெருமானார்(ஸல்) அவர்களுக்கோ, அவர்களின் அடிவழுவாது வாழ்ந்த நாயத்தோழர்கள், இமாம்கள் ஆகிய எவருக்குமே விழாவோ, யானை,குதிரை ஊர்வலமோ நடந்;தாக எந்த வரலாறும் ஆதாரமும் இல்லை. அவ்வாறிருக்க அவ்லியாக்கள் என்ற பெயரால் சித்தரிக்கப்படும் மனிதர்களுக்கு எவ்வாறு விழாக்கள் எடுக்கமுடியும்? யானை, குதிரை ஊர்வலங்கள் நடத்த முடியும்?
‘எனது மண்ணறையை விழா கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்!’ என்ற எச்சரிக்கையையும் மீறி விழா ஊர்வலங்கள் நடத்தலாமா?
மாற்று மததத்தவர் நடத்தும் தேர்த்திருவிழாக்கள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள், காவடி மேள தாளங்கள் என அவர்களை அப்படியே காப்பி அடித்து நடத்தும் அனாச்சாரங்கள் இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமானவை. அவை இஸ்லாத்திலிருந்து மக்களை அப்புறப்புடுத்திவைக்கின்றன.
عَنْ عَائِشَةَ – رضى الله عنها – قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ – صلى الله عليه وسلم « مَنْ أَحْدَثَ فِى أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ
‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கினால் அது ஏற்றுக்காள்ளப்படமாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.                                                           (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) ஆதாரம்: புகாரி:2697முஸ்லிம்)
அவ்லியாக்கள் உயிரோடு இருக்கிறார்களா?
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
ஓவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரவேண்டும். (அல்குர்ஆன். 3:185,21:35,21:57)
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவர் சாதரண மனிதனாகட்டும், நல்லடியா ராகட்டும், மஹாhனாகட்டும், அவ்லியாவாகட்டும் யாராக இருப்பினும் மரணத்தைத் தழுவியே ஆகவேண்டும் என்பது இறை நியதியாகும். அதிலிருந்து எவரும் தப்பவே முடியாது.
ஆனால், இன்று மார்க்க மேதாவிகளில் சிலர் மண்ணறையில் அடக்கமாயிருக்கும் அல்லியாக்கள் மரணிக்கவில்லை.அவர்கள் உயிரோடு தானிருக்கிறார்கள் என வாதிடுகின்றனர்.
பாமர மக்களை நம்ப வைத்து, அவர்கள் கட்டிவைத்திருக்கும் கப்றுகள், தர்ஹாக்களுக்கு மேல்
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
(விசுவாசிகளே!) அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (குர்ஆன்:10:62)
وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء
அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக அவர்கள் உயிரோடு உள்ளனர். (குர்ஆன்: 2:154)
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ
அல்லாஹ்வின் பாதையில்; போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள்.( குர்ஆன் 3:169)
என்ற திருக்குர்ஆனின் மூன்று வசனங்களை எழுதிவைத்திருப்பதைப் பார்க்கலாம்.
10:62 என்னும் முதல் வசனத்தில் அல்லாஹ்வாலும் அவன் தூதராலும் சிறப்பிக்கப்பட்ட உண்மையான இறைநேசர்களைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் அவ்லியாவென கற்பனை செய்துகொண்டவர்களுக்கெல்லாம் இந்த மறைவசனத்தை தவறாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
இந்த வசனங்களை மக்கள் தவறாகவே புரிந்து வைத்துள்ளதைப் பார்ப்போம்.
நல்லடியார்களும், மஹான்களும் இறந்த பின்னரும் உயிரோடு உள்ளனர். எனவே, அவர்களை வழிபடலாம், அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பதற்கு இவ்வசனங்கள் ஆதாரமாக அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
1. இவ்வசனங்கள் நல்லடியார்கள்,மற்றும் மஹான்களைக் கொண்டாடவோ, அவர்களுக்கு வழிபாடு நடத்துவதை அனுமதிக்கவோ அருளப்படவில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்வதை ஊக்குவிக்கவே அருளப்பட்டன.
2. இந்த வசனங்கள் அருளப்பட்டபின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை அழைக்கவோ, பிரார்த்திக்கவோ இல்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
3. இவ்வசனங்களை கூர்;ந்து கவனித்தால் அவர்களின் விளக்கம் தவறு என்பதை அவர்களே புரிந்து கொள்வார்கள்.
2;:154 என்ற வசனத்தில் அவர்கள் உயிரோடு உள்ளனர் என்பதைத் தொடர்ந்து
وَلَٰكِن لَّا تَشْعُرُونَ
‘எனினும் நீங்கள் உணரமாட்டீர்கள்’ என்றும் கூறப்பட்டுள்ளது.
இப்போது 2:154 வது வசனத்தை முழுமையாகப்படியுங்கள்.

وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ ۚ بَلْ أَحْيَاءٌ وَلَٰكِن لَّا تَشْعُرُونَ
அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக அவர்கள் உயிரோடு உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள். (குர்ஆன்: 2:154)
இதில் வரும்; ‘நீங்கள் உணரமாட்டீர்கள்’ என்ற இறுதிப்புகுதியை எழுதுவதில்லை.
அவர்கள் ‘உயிரோடு இருப்பது’ நாம் புரிந்து வைத்திருக்கும் பொருளில் அல்ல. நம்மால்  உணர்ந்து கொள்ள முடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தையே இது தருகிறது.
3:169 வசனமும், அதைத் தொடர்ந்து வரும் 170,171,172,173 ஆகிய நான்கு வசனங்களும் இந்த கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
அடுத்து,
عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ
3:169-வது வசனதில் ‘ தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர் ‘ என்பதை விட்டுவிட்டு என்ற பகுதியை எழுதுகின்றனர்.

இப்போது 3:169 வது வசனத்தை முழுமையாகப்படியுங்கள்.
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ
அல்லாஹ்வின் பாதையில்; போரிட்டுக் கொல்லப்பட்டவாகளை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள். (அவர்கள்) தமது இறைவனிடத்தில் உயிரோடு இருக்கிறார்கள். (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (3:169)
3:169-வது வசனம் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட ஷஷஹீதுகள் என்னும் வீரத்தியாகிகளைக் குறித்து சொல்லப்படும் வசனம் என்பதையும் அறியாது அறைகுறையாகப் புரிந்து இந்த வசனத்தை எழுதி மக்களை திசை திருப்புகின்றனர்.
நம்மைப் பொறுத்தவரை அவர்கள் மரணித்துவிட்டாலும், இறைவனைப் பொறுத்த வரை அவர்கள் உயிருடன் உள்ளனர் எனத் தெரிவிக்கிறது. இவையனைத்தையும் விட இவ்வசனத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் தான் மிகவும் முக்கியமானது.
உயிருடன் இருக்கிறர்கள் என்றால் எப்படி? என நாங்கள் கேட்டபோது ‘அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும். அவை சுவர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் விளக்கம் அளித்தனர் என இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் முஸ்லிம் 3500)
நிச்சயமாக சுஹதாக்(கள் என்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர); களின் உயிர் பறவைகளின் உடல் கூட்டில் விடப்பட்டு, சுவர்க்கத்தில் தமது விருப்பத்திற்கேற்ப உலவிக் கொண்டிருக்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.) அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்)
உங்கள் சகோதரர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டபோது அல்லாஹ் அவர்களின் உயிர்களை பச்சைப் பறவையின் உடல் கூட்டில் அமைத்து விட்டான். அவை சுவர்க்கத்துடைய ஆறுகளில் தண்ணீர் அருந்திக் கொண்டும், சுவர்க்கத்தின் (மரங்களின்) பழங்களை புசித்துக் கொண்டுமிருக்கின்றன. (இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத்)
அல்லாஹ்வின் பாதையில் மரணமடைந்த ஷஹீத்களைப் பற்றி குர்ஆனின் வசனம் நல்லடியார்களான அவர்களை  மரணித்து விட்டார்கள் என்று நீங்கள் கூறாதீர்கள் என்று கூறிவிட்டு, எனினும் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். எனினும் நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.ஆகவே நாம் கற்பனை செய்வதுபோல் அவர்கள் தமது கப்ருகளில் உயிரோடு இருக்கிறார்கள்; என்பது தவறாகும். ஏனெனில் அவர்களின் நிலையைப்பற்றி நபி(ஸல்) அவர்களின் ஹதீஸிகளின் வாயிலாக நல்லடியார்கள் ‘சுவர்க்கத்தில் பறவை அமைப்பில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள’; என்று கூறியிருப்பதால் இதுவே உண்மை என்பது தெளிவாகிறது.
2:154,3:169) ஆகிய இருவசனங்களிலும் ஷஷஹீதுகளைக் குறித்து மட்டுமே குறிப்பாகக் கூறப்பட்டுள்ளன.
இவர்கள் யாராக இருந்தாலும் இறப்பைத் தழுவித்தான் ஆக வேண்டும். ஆனால் மக்களில் சிலர் அவ்லியாக்கள்  வெளி உலகத்துக்குத்தான் இறந்தவர்கள். உண்மையில் அவர்கள் கப்ருக்குள் உயிருடன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது என்பதை நமது சமுதாயம் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
விபரீதமான பொருள்
நபிமார்களோ, அவ்லியாக்களோ மரணித்து விட்டார்கள் என்று கூறப்பட்டால் அவர்கள் உணமையிலே மரணித்து விட்டார்கள் என்று தான் பொருள்.
1. அவர்கள் மரணித்த பிறகு உயிருடன் இருக்கிறார்கள் என்று சொன்னால்; உயிருடன் இருந்த ஒருவரை மக்கள் பூமிக்குள் புதைத்து கொலை செய்து விட்டார்கள் என்ற குற்றத்தை செய்ததாக ஆகிவிடும்.
2. அப்படி இவர்கள் மரணிக்கவில்லையென்றால் இவர்களின் சொத்துகளுக்கு யாரும் பங்குதாரராக முடியாது. இவர்களின் மனைவிகள் இத்தா இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று இஸ்லாம் தெளிவு படுத்தியிருக்கும்.
ஆகவே, மனித இனத்தில் மாபெரும் பதவிகளுடைய நபிமார்கள், ஷஹீத்கள், அவ்லியாக்கள் ஆகியோர் மரணித்து விட்டால், அவர்கள் மரணித்து விட்டார்கள் என்றே உறுதி செய்து அவர்களை கழுவி குளிப்பாட்டி கபனிட்டு ஜனாஸா தொழ வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்பதை முஸ்லிம்கள் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
‘அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா?
அல்லாஹ் அல்லாத எவரையும் அழைத்துப் பிரார்த்திப்பதும் உதவி தேடுவதும் இஸ்லாத்தில்; கூடவே கூடாது. அதற்கு இம்மியளவும் அனுமதியும் கிடையாது. இவற்றை எச்சரிக்கும் அல்லாஹ்வின் வேத வசனங்களைப் படியுங்கள்.
‘மறுமை நாள் வரை (அழைத்தபோதிலும் இறந்துபோன) அவர்கள் (உயிரோடுள்ள) மக்களுக்கு பதில் தரமாட்டார்கள். ஆகவே, அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களை விட மிகவும் வழி கெட்டவர்கள் யார்? இவர்கள் அழைப்பதைக்கூட அவர்கள் அறியமாட்டார்கள்’. (அல்குர்ஆன்-4:5)துயரத்தில் சிக்கித் துடித்துக் கொண்டிருப்போர் அபயமிட்டழைத்தால் அவர்களுக்கு பதில் கூறி அவர்களுடைய துயரங்களை நீக்குபவர் யார்? அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு எவருமில்லை. அவன் மட்டுமே துயரங்களை நீக்குவான்’. (அல்குர்ஆன்-27: 62).
‘உமக்கு (எவ்வித) நன்மையோ, தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாத எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம். அவ்வாறு செய்வீராயின், நீர் அநியாக்காரர்களில் ஒருவராகிவிடுவீர்!’  (அல்குர்ஆன்-10:106)
‘அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்கள். (அதுமட்டுமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்’. ( அல்குர்ஆன் 7:192)
‘நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும் (பார்க்கலாம்).’ (அல்-குர்ஆன்-7:194)
‘நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்கு பதில் தரமாட்டார்கள்.’ (அல்-குர்ஆன்- 35: 14)
‘(நபியே) நீர் கூறும். நான் பிரார்த்திப்பதெல்லாம் என் இறைவனைத்தான். அன்றியும், நான் அவனுக்கு (ஒருபோதும்) எவரையும் இணைவைக்கமாட்டேன்;.’ (அல்-குர்ஆன்- 72:20)
உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.உன்னிடமே உதவியும் தேடுகிறோம். (அல்-குர்ஆன்- 01:04)
மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் அல்லாஹ் ஒருவனையே அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும். அவனிடமே நம் தேவைகளைக் கேட்கவேண்டும். அவனிடமே உதவியும் தேடவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
இவ்வாறிருக்க நாம் இறந்து போன அவ்லியாக்களாகட்டும்; மகான்களாகட்டும் எவரிடமும் பிரார்த்திக்கவோ உதவிதேடவோ நம் தேவைகளைக் கேட்கவோ செய்யலாமா?
அடுத்து அவ்லியாக்களிடம் வஸீலா (உதவி) தேடலாம் என்று கூறுவோர் சொல்லும் ஆதாரத்தையும் அதன் மறுப்பையும், வஸீலாவின் உண்மையான பொருளையும் பார்ப்போம்.
அவ்லியாக்களிடம் வஸீலா  தேடலாமா?
ياأَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَابْتَغُواْ إِلَيهِ الْوَسِيلَةَ
மூமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன் பால் நெருங்குவதற்குரிய வழியைத் (வஸீலா) தேடிக்கொள்ளூங்கள்,  (அல்குர்ஆன் 5:35)
வஸீலா என்றால் அரபி அகராதியில் ஏணி, துணைச்சாதனம் என்ற பொருளைக் கொண்டிருக்கிறது. வல்ல அல்லாஹ் நமக்கு மூன்று வகையான வஸீலாக்களை அனுமதித்துள்ளான்.
1, இறைவனின் அழகிய திருநாமங்களைக் கொண்டு வஸீலா தேடுதல்.
2, நம்முடுடைய ஸாலிஹான நல்ல அமல்களைக்கொண்டு வஸீலா தேடுதல்
3, ஸாலிஹான செயல்களையுடைய அடியார்களிடம் அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது நமக்காக துஆ செய்யச் சொல்லி வஸீலா தேடுதல்.
وَلِلّهِ الأَسْمَاء الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُواْ الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَآئِهِ سَيُجْزَوْنَ مَا كَانُواْ يَعْمَلُونَ
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்.அவனுடய திரு நாமங்களில் தவறிழைப்போரை(புறக்கணித்து) விட்டு விடுங்கள். அவர்களுடைய  செயல்களுக்காக அவர்கள் தக்க கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 7:180)  மேற்சொன்ன வசனத்தின் வாயிலாக இறைவனது அழகிய திருநாமங்களைக் கூறி பிரார்த்தித்து “வஸீலா” தேடுவதற்கு அனுமதி இருப்பதை காணலாம்.
وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ 
நீங்கள் பொறுமையைக்கொண்டும், தொழுகையைக்கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். (அல்குர்ஆன் 2:45) பனூ இஸ்ரவேலர்  காலத்தில் நடந்த குகையில் அடைப்பட்ட மூன்று நபர்களின் சம்பவம் ஸாலிஹான நல் அமல்களைக் கொண்டு வஸீலா தேடுவதற்கு ஒரு சரியான எடுத்துக்கட்டாகும்.
கடுமையான  மழையின்  காரணமாக  மூவர்  ஒரு  குகையினுள்  ஒதுங்கிய  போது,  கடுங்காற்று  அத்துடன் வீசியதால் பெரிய கல் ஒன்று உருண்டு வந்து குகை வாயிலை அடைத்துக்கொண்டது. அங்கிருந்த கல்லை நகற்ற முடியாத அம்மூவரும் அவரவர்களின் நல்அமல்களை இறைவனிடம் முறையிட்டு வழி திறக்க துஆ செய்தார்கள். இது நீண்ட சம்பவத்தின் சுருக்கம் (புஹாரி,முஸ்லிம் ஹதீஸ் நூல்களில் காணலாம்) மேற்கண்ட நிகழ்ச்சியின் மூலம் நல் அமல்களைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதை அறிகிறோம்.
ஒரு நல்ல  அடியார் உயிருடன்  இருக்கும் பொழுது  நம்முடைய  தேவைகளுக்காக  துஆ செய்யச் சொல்லி وَسِيلَةَ “வஸீலா” தேடுவதற்கு உமர்(ரழி) அவர்கள் காலத்தில் நடந்த சம்பவம் ஒரு சிறப்பான எடுதுக்காட்டாகும். உமர்(ரழி) காலத்தில் மழை இல்லாமல் கடுமையியான பஞ்ஞம் ஏற்பட்டது. அப்பொழுது உமர்(ரழி) அவர்கள் அன்றைய கால கட்டத்தில் நல்லடியாராகக் கருதப்பட்ட நபி (ஸல்)  அவர்களின் சிரியதந்தையாகிய அப்பாஸ் (ரலி) அவர்களைக் கொண்டு மழைக்காக பிரார்தனை செய்யச்சொல்லி, மழை வந்து செழிப்புற்று பஞ்சம் நீங்கியது. (புஹாரி)
(Note : இந்த நிகழ்ச்சியில் நாம் நினைவில் கொள்ளவேண்டியது - உமர் (ரலி) அவர்கள் உயிருடன் இருந்த அப்பாஸ் (ரலி) அவர்களின் வாசீலவைத்தான்  தேடினார்களே தவிர இவ்வுலகைவிட்டு பிரிந்த நம் உயிரிலும்  மேலான நபி (ஸல்) அவர்களின் வாசீலாவைத் தேடவில்லை!!!)
வஸீலா தேடுவதற்குரிய வழிகளை இறைவனும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் இவ்வளவு தெளிவாக்கிய ஒரு விஷயத்தில், தவறான கருத்துக்களைப் புகுத்தி, மார்க்கதிற்க்கு முரணாக இறந்த நமது முன்னோர்களின் பொருட்டால் கேட்டு பலர் வழி தவறிக்கொண்டிருக்கின்றனர்.
இப்பொழுது நாமும் உயிருடன் விழித்த நிலையில் இருக்கும் ஸாலிஹான நல்லடியார் ஒருவரை அழைத்து துஆ செய்யச் சொல்லலாம். நமது தேவையைக் கேட்டுப் பெறலாம். ஆனால் சிறிய மெளத்தாகிய தூக்கத்தில் இருக்கும் ஒரு நல்லடியாரிடம் நமது தேவைகளைக் கேட்டால் பதில் அளிக்கமாட்டார். இந்நிலையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்து அடக்கமாகிவிட்டவர்களிடம் போய் கேட்டால் பதில் கிடைகுமா? கபுறுகளுக்குச் சென்று முறையிடும் நமது சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டாமா?
وَمَا يَسْتَوِى الاٌّحْيَآءُ وَلاَ الاٌّمْوَاتُ 
உயிருள்ளோரும்,  மரணித்தோரும்  சமமாக  மாட்டார்கள். (அல்குர்ஆன் 35:22) என்ற  தெளிவான  இவ்வசனத்தையும் கவனிக்க வேண்டாமா? இம்மாதிரி நல்லடியார்களிடம் முறையிடுவதை வல்ல அல்லாஹ் வன்மையாக கண்டிப்பதைப் பாருங்கள்.
أَفَحَسِبَ الَّذِينَ كَفَرُوا أَن يَتَّخِذُوا عِبَادِي مِن دُونِي أَوْلِيَاء إِنَّا أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ نُزُلًا
“இந்த காபிர்கள் அல்லாஹ்வாகிய நம்மை விட்டுவிட்டு நம்முடைய அடியார்களை தங்களுடைய அவுலியாக்களாக எடுத்துக் கொள்ளலாம் என எண்ணுகிறார்களா? நிச்சயமாக அப்படிப்பட்ட காபிர்களை உபசரிக்க நாம் நரகத்தை சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம். (அல் குர்ஆன் 18:102) மேலும் இறைவன்  இவர்களைப் பற்றி கூறுகிறான்.
قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا
தங்களுடைய அமல்களில் பெரிய நஷ்டம் அடைந்தவர்களை நாம் அறிவித்து தரட்டுமா (நபியே!) நீர் கேளூம் (அல்குர்ஆன் 18:103)
 الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا
அவர்கள் பாவமான கருமங்களைச் செய்து கொண்டு, மெய்யாகவே நாங்கள் மிக நல்ல காரியங்களைச் செய்வதாக எண்ணிக் கொள்வார்கள் .(அல்குர்ஆன் 18:104)  இவ்வுளவு தெளிவாக உள்ள இவ்விஷயத்தை உலக ஆதாயம் தேட முனையும் சிலர் பின் வரும் வசனத்தை காட்டி மக்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ 
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் இதை உண்ர்ந்து கொள்ளமாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:154)
இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி அல்லாஹ்வின் பாதையில்  இறந்த  நல்லடியார்கள்   இறக்கவில்லை உயிரோடு இருக்கிறார்கள் என்று இறைவன் கூறுகிறான். எனவே அவர்களிடம் உதவி கேட்கலாம், சிபாரிசு செய்யச் சொல்லாம் என வாதிடுகின்றனர். இதே வசன இறுதியில் அவர்கள் எப்படி உயிருள்ளவர்கள் என்பதை நீங்கள் உணரமாட்டீர்கள் என்று இறைவன் தெளிவாகக் கூறுவதை இவர்கள் உணரவில்லை.
மேலும் இவ்வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்)அவர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.  நல்லடியார்களின் உயிர்கள் பச்சை நிற பறவைகளின் உடலில் புகுத்தப்பட்டு சுவர்க்கத்தில் உலவி கொண்டுயிருப்பார்கள். அங்குள்ள கனிகளைப்புசித்து மகிழ்வார்கள். (நூல்: அபூதாவூத்)
எனவே நல்லடியார்கள் சுவர்கத்தில் உயிருடன் இருக்கிறார்கள்,  கபுறுகளில் உயிருடன் இல்லை. அல்லாஹ் கூறுவது போல் நம்மால் உணர முடியாத ஒரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்  என்பது தெளிவு. எனவே கண்ணியமிக்க இஸ்லாமிய சமுதாயத்தவர்களே! இறைவன் அனுமதித்த வழியில் இறைவனை நெருங்குவதற்குரிய வழியைத்தேட முற்பட்டு இம்மையிலும், மறுமையிலும் ஈடேற்றம் அடையுங்கள். வல்ல அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரையும் அவனது நேர் வழியில் நடத்தாட்டுவானாக!
நன்றி: ஜகராவ்
அவ்லியாக்கள் மறுமையில் ஷஃபாஅத் செய்வார்களா?

 ’அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குப் பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!)கூறுவீராக! அவைஎந்த சக்தியையும், அறிவையும் பெறாமலிருந்தாலுமா?பரிந்துரை பேசுதல் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.’ (அல்-குர்ஆன்- 39:43,44)

 ’ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த பரிந்துரையும் அவர்களுக்குப் பலனளிக்காது’. (அல்-குர்ஆன்- 72:20,74:48)
 ’தங்களுக்கு ஏதொரு நன்மையோ, தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை அவர்கள் வணங்குவார்கள்.மேலும், இவை எங்களுக்காக அல்லாஹ்விடம் (ஷஃபாஅத்) பரிந்து பேசும் என்றும்   கூறுகிறார்கள்.( அல்-குர்ஆன்- 10:18)
 ’அவன் யாருக்கு அனுமதியளிக்கின்றானோ அவருக்கே தவிர மற்றவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது.(அல்-குர்ஆன்-20:109,34:23)
 ’தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் அனுமதியளித்த பின்பே தவிர அவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது. (அல்-குர்ஆன்-53:26)

 மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய முடியுமா? என்பதில் மூன்று விதக் கருத்துக்கள் கூறப்படுகின்றன.

 1. அறவே பரிந்துரை கிடையாது.
 2. நல்லடியார்கள், நபிமார்கள் தாம் விரும்பியவருக்கு பரிந்துரை செய்வார்கள்.
 3. நிபந்தனையுடன் பரிந்துரை உண்டு.

 முதலிரண்டு கருத்துகளும் குர்ஆனைப்பற்றிய தெளிவான அறிவு இல்லாதவர்களின் கருத்தாகும்.
 அறவே பரிந்துரை கிடையாது என்போர் குர்ஆன் கூறும் பரிந்துரை பற்றிய ஏனைய வசனங்களை       அறியாதவர்கள். இரண்டும் தவறானவையாகும்.

குர்ஆனின் 2:48,2:123,2:254,6:51,6:70,6:94, 26:100,32:4,36:23,39:43,44, 74:48 ஆகிய வசனங்களைப் படிப்பவர்கள  மறுமையில் பரிந்துரை என்பதே கிடையாது. பரிந்துரை பயன் தராது எனவும் கூறுகின்றனர்.

 அவன் அனுமதி பெறாமல் யார் பரிந்துரைக்க முடியும்? (அல்-குர்ஆன்-2:255)
 அவன் அனுமதி பெறாமல் எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை.(அல்-குர்ஆன்-10,3)

 ஆகிய வசனங்கள் இறைவனிடம் அனுமதி பெறாமல் பரிந்துரை செய்ய முடியாது என்பதை அறியலாம்.  இறைவன் அனுமதியளிக்கமாட்டான் என்றால் இவ்வாறு இறைவன் கூறியிருக்கமாட்டான்.

அவன் பொருந்திக் கொண்டவர்களுக்கே தவிர அவர்கள் பரிந்துரை செய்யமாட்டார்கள் (அல்-குர்ஆன்-21:28)
 ரஹ்மானிடம் உடன்படிக்கை எடுத்தவர் தவிர மற்றவர்கள் பரிந்துரைக்கு உரிமையாளர்கள் அல்லர்.    (அல்-குர்ஆன்-19:87)

 என்ற வசனங்களின் படி சிலருக்கு பரிந்துரை செய்ய அனுமதியளிக்கப்படும் என்பதையும், அந்தப் பரிந்துரை  பயன் தரும் என்பதையும் இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

மறுமையில் அல்லாஹ் யாருக்கு அனுமதியளிப்பான் என்று எவருக்கும்; தெரியாது. ஆகவே, ‘அவ்லியாவே!   எனக்கு மறுமையில் பரிந்துரை செய்யுங்கள்!’ என்று இந்த உலகில் வாழும்போது நாம் கேட்பது கூடாது. அது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும்.

 மக்காவில் வாழ்ந்தவர்கள் இவ்வாறு பரிந்துரை வேண்டியதால் தான் ‘இணைவைப்போர்’ ஆனார்கள்.     (பார்க்க குர்ஆன் 10:18)
 யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் என்பதையும் அல்லாஹ்தான் தீர்மானிப்பான் என்பதையும் ஷஃபாஅத- பரிந்துரை யாரிடமும் வேண்டக் கூடாது.

நாம் அழைத்தால் அவர்களால் கேட்க முடியுமா?

(நபியே!) நிச்சயமாக நீர் இறந்தவர்களை செவியேற்கும்படி செய்ய முடியாது (குர்ஆன் 30:52)

இறைவன், நபியவர்களுக்கு ‘உம்மால் இறந்தவர்களைக் கேட்கச் செய்யமுடியாது என மிகத்தெளிவாகவே கூறிவிட்டான்.நமது உயிரினும் மேலான அகிலத்தின் அருட்கொடையான நபியவர்களால் கேட்கச் செய்ய முடியாத ஒரு காரியத்தை கப்றிலே அடக்கமாயிருக்கும் அவ்லியாக்கள் என நம்மால் சித்தரிக்கப்படுவோரால்  எவ்வாறு செவியேற்கச் செய்ய முடியும்?

இறந்தவர்களால் இந்த உலகில் நடைபெறுபவற்றைக் கேட்க முடியாது. அவர்கள் ‘ஃபர்ஸக்’ என்னும் திரையுலகில்  மறைவான வாழ்வில் இருக்கிறார்கள். அவர்களால் இறுதிநாள் வரை இந்த உலகுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்ய  முடியாது.எனவே நாம் கேட்பவற்றை இறந்தவர்கள் கேட்பார்கள் என்பது இறைவனின் சொல்லுக்கு மாற்றமாகும். இஸ்லாத்திற்கே எதிரானதாகும்.
 அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் ஒரு திரை (ஃபர்ஸக்) உள்ளது. (குர்ஆன்:23:100)
 ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும் இந்த உலகுக்கும் எவ்விதத்தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப்பின்னால் புலனுக்குத தெரியாத மிகப் பெரிய திரை போடப்பட்டு விடுகிறது. என்று இந்த வசனம் (23:100) கூறுகிறது.

 இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்தித்தல், இறந்தவர்களை வழிபடுதல், இறந்தவர்களிடம் கோரிக்கை வைத்தல், நேர்ச்சை செய்தல் போன்ற காரியங்களைச் செய்பவர்களுக்கு இவ்வசனம் சரியான மறுப்பாக அமைந்துள்ளது.

இறந்தவர்களுக்கும், இந்த உலகிற்கும் திரை போடப்படுகிறது என்று சொன்னால் இந்த உலகில் உள்ளவர்கள் செய்யும் எதையும் இறந்தவர்களால் அறிந்து கொள்ளவே முடியாது.

அறிந்து கொள்ளவே முடியாது எனும் போது அவர்களால் எதுவும் செய்யவும் முடியாது என்பதை நாம் மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

அவ்லியாக்களுக்கு நேர்ச்சை செய்யலாமா?

 பிரார்த்தித்தல், உதவி தேடுதல், நேர்ச்சை செய்தல், அறுத்துப்பலியிடுதல் போன்றவை இறைவனுக்குச் செய்யும் வணக்கங்களாகும். இறைவனுக்கு மட்டுமே செய்யும் வணக்கங்களை இறைவன் அல்லாதவர்களுக்குச் செய்வது கூடாது. அவை (ஷிர்க்) இணைவைப்பதாகும்.
இவர்கள் (தங்களின் இறைவனுக்குச் செய்த) நேர்ச்சைகளையும் நிறைவேற்றி வைத்தனர். நீண்ட வேதனையுடைய (இறுதி) நாளையும் பயந்து கொண்டிருந்தனர்.(அல்குர்ஆன்: 76:58)
 இம்ரானுடைய மனைவி (மர்யமின் தாயார்) ‘ நிச்சயமாக என் வயிற்றிலுள்ள குழந்தையை முற்றிலும் உனக்கு அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆகவே இந்த நேர்ச்சையை நீ அங்கீகரிப்பாயாக!’ எனப் பிரார்த்தித்தார்கள். ( அல்குர்ஆன்: 3:35)
 என்ற வசனங்கள் நேர்ச்சையை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே நிறைவேற்றவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றன

அவர்களுக்காக அறுத்துப் பலியிடலாமா?
அல்லாஹ் ஒருவனுக்கே அறுத்துப்பலியிடவேண்டும். அவ்லியாக்களுக்கோ, இறந்து போன பெரியார்கள் , மகான்கள் பெற்றோர், உற்றார்,உறவினர்களுக்கோ ஆடு,மாடு,கோழி போன்றவற்றை அறுத்துப் பலியிடுவது பெரும்பாவமாகும். இணைவைத்தலாகும். இன்று மீலாத் விழா, முஹ்யித்தீன் விழாக்களுக்காக ஆடுகள், கோழிகளை நேர்ச்சை நேர்ந்து கடைசி நாளன்று அவற்றை அறுத்து ஊர்முழுவதும் வழங்கி உண்டு மகிழ்வதைக் காணலாம். ஒரே நாளில் ஊர்மக்களெல்லாம் உண்டு மகிழ்வது ஒரு பெரும் பேறல்லவா? எனப் பெருமையாகப் பேசிக் கொள்வதைப்பார்க்கிறோம். இந்த உணவுகள் ஊரைக் கடந்தும், கடல் கடந்தும் வினியோகம் செய்யப்படுகிறது. ஹராமான- தடுக்கப்பட்ட-உணவை உண்பதில் மக்களின் ஆர்வத்தைப் பார்த்தீர்களா? உணவிலே நஞ்சூட்டப்பட்டிருந்தால் இவற்றை உண்பார்களா? சமுதாயம் சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வுக்காகவே அறுத்துப்பலியிடவேண்டும் என்று வரும் மறை வசனங்களைப் படியுங்கள்.
ஃபஸல்லி லிறப்பிக்க வன்ஹர். உங்கள் இறைவனைத் தொழுது (அவனுக்கே) அறுத்துப்பலியிடுவீராக! (குர்ஆன்: 108: 02)
(நபியே! நீர் கூறுவீராக! நிச்சயமாக எனது தொழுகை, தியாகம் (குர்பானி), வாழ்வு, மரணம் யாவும் உலகைப்படைத்துக் காக்கும் அல்லாஹ்வுக்கே உரியவை. (அல்குர்ஆன்: 6:162)
அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்துப்பலியிடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! ( அறிவிப்பவர் அலீ(ரலி), நூல்: முஸ்லிம்)
கப்று ஸியாரத் செய்யலாமா? அதன் நோக்கம் என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (முதலில்) கப்றுகளுக்கு ஸியாரத் செய்வதைத் தடுத்து வந்தேன். (இப்போது) ஸியாரத் செய்யுங்கள். அது மரணத்தை நினைவு படுத்தும். ( அறிவிப்பவர்: இப்னு புரைதா (ரலி), ஆதாரம்: அபூதாவூது-3237.
முன்னோர்கள் சமாதிகளுக்குச் சென்று வழிபாடு செய்யவும், தங்களது தேவைகளை அவர்களிடம் கேட்கவும் மக்கத்து மக்கள் செய்து வந்ததால் அதே பாவங்களை தமது மக்களும் செய்து விடக்கூடாதே என்னும் முன்னெச்செரிக்கையால் ‘சமாதிகளுக்குச் செல்வதை நபி (ஸல்) அவர்கள்
தடுத்து வந்தார்கள்’. பின்னர் கப்று ஸியாரத்தின் நோக்கத்தை மக்கள் புரியத் தொடங்கியதும்; அதற்கு அனுமதி வழங்லானார்கள்.ஆனால் அதற்காக ஒரு நிபந்தனையை விதிக்கவும் செய்தார்கள். ‘அவர்கள் தங்கள் தேவைகளை அவர்களிடம் கேட்பது கூடாது. அது மரணத்தை நினைவு படுத்துவதாக அமைய வேண்டும்’ அங்கு செல்வதால் ‘இதைப் போல் தமக்கும் மரணம் நிகழும்; என்பதை எண்ணி, இறைவனை பயந்து தமது வாழ்வை சீராக அமைத்துக் கொள்ளவேண்டும்’ என்ற உணர்வுகள் மக்களிடம் ஏற்படவேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் நபி (ஸல்) அனுமதித்தார்கள்.
இன்று கப்று ஸியாரத்தின் நோக்கமே மாறி தங்கள் கோரிக்கைகளை இறந்தவர்களிடம் முன்வைக்கவும், தமது தேவைகளை நிறைவேற்றித்தரவும், குழந்தை பாக்கியத்தை பெற்றுத்தரவும் வேண்டுகிறார்கள். இது வல்லமை மிக்க அல்லாஹ்வின் ஆற்றலை மறந்து செய்யும் கொடிய
பாவம் ஆகும். ஷிர்க் (இணைவைத்தல்) ஆகும்.
கப்ருகளுக்குச் சென்றால் எவ்வாறு ஸியாரத் செய்வது.? அங்கு என்ன செய்யவேண்டும் ? என்பதை நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு மிகத் தெளிவாகவே கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
ஃபாத்திஹா ஓதச் சொல்லவில்லை. யாஸீன் ஓதச் சொல்லவில்லை. இறந்தவர்களிடம் துஆ கேட்கச் சொல்லவில்லை. பின் என்ன சொன்னார்கள் ?
பின் வரும் துஆவை மட்டும் ஓதச் சொன்னார்கள்:-
‘அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியார் மினல் முஃமினீன வல் முஸ்லிமீன்! வ இன்னா இன்ஷா அல்லாஹூ பிக்கும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலக்குமுல் ஆஃபியா’ - ஈமான் கொண்டு முஸ்லிமாக வாழ்ந்து அடக்கமாகியிருக்கும் நல்லடியார்களே! நிச்சயமாக விரைவில் நாங்களும் (மரணமடைந்து) உங்களோடு சேரவிருக்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் நன்மையை வழங்க அல்லாஹ்வை வேண்டுகிறோம். ஆதாரம்: முஸ்லிம்.
இதைத்தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. பாத்திஹா ஓதுவதோ, யாஸீன் ஓதுவதோ, நேர்ச்சை நேருவதோ, இறந்தவர்களிடம் துஆ கேட்பதோ கூடாது.


by Dr. Ahmad Baqavi PhD.

நன்றி: http://albaqavi.com/home/?p=௧௫௦௧

Saturday, 4 February 2012

இம்மை வாழ்வு!


Post image for இம்மை வாழ்வு! 

உலகில் பிறந்த மனிதர் எல்லாருக்கும் இம்மை வாழ்வும் உண்டு. மறுமை வாழ்வும் உண்டு, இம்மையை விட மறுமையே மிக உயர்ந்ததாகும் என எல்லாம் வல்ல அல்லாஹ் பல இடங்களில் திருமறையிலே தெளிவுபடுத்திக் காட்டுகின்றான்.
“(மனிதர்களே!) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; உறுதியாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமும்தான். அன்றி (அது) உங்களுக்கிடையில் (வீண்) பொறாமையேற்படுத்துவதாகவும், பொருள்களிலும், சந்ததிகளிலும் போட்டியே ஏற்படுத்துவதாகவும் (இருக்கின்றது; இதன் உதாரணமாவது) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது, அதன் (உதவியால் முளைத்த) பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிக்குப் களிப்பையுண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றன. அது காய்ந்த பின்னர், மஞ்சனித்து விடுவதை நீர் காண்கின்றீர். பின்னர் அது சருகுகளாகி விடுகின்றது. (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கின்றது) மறுமையிலோ (அவர்களுள் பலருக்குக்) கொடிய வேதனையும் (சிலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் (சொற்ப) இன்பமேயன்றி வேறன்று” (அல்குர்ஆன் 57:20)
நீர்க்குமிழி போன்று தோன்றி மறையும் இவ்வுலக வாழ்வில்தான் மனிதர்களுக்குள் எத்தனைப் போட்டிகள்? பொறாமைகள்? அற்ப ஆசைக்காக, மனிதன் தன்னை மறந்த நிலையில் தன் வரம்பையே மீறியவனாகின்றான்.
அற்ப இவ்வுலக இன்பத்தை நுகர்தற் பொருட்டு, குறுக்கு வழிகளில் பணம் தேடி-மாட மாளிகைகளைக் கட்டி-ஆரணங்குகளின் அணைப்பில் பஞ்சணையில் புரளுவதையே நிலையான இன்பமாகக் கருதுகின்றான். காரணம் பெரும்பாலோர்க்கு நன்றியுணர்வும், சிந்தனை வலிமையும் குறைவு!
தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்ட மனிதன், அவனை மறந்த நிலையில், தான் தோன்றித் தனமாகவும், சிந்தித்துச் செயல்படுகின்ற வலிமை குன்றியும் செயல்படுகின்றான். இந்நிலையில் , அற்ப இன்பமே அவனுக்குப் பெரிதாகப்படுகின்றது. நிலையான பேரின்ப மறுமை வாழ்வைப்பற்றி, அவன் எண்ணிப் பார்க்காதது மட்டுமன்று! மறுமை வாழ்வு உண்டா? என்பதிலும் ஐயம் கொள்கின்றான்.
“வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வோம்” என்னும் அசட்டுத் துணிச்சல் உள்ள மனிதர்களிடத்து, நம்பிக்கையின்மை வியப்பானதன்று!
எவரேனும், இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும்(மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இ(வ்வுலகத்)திலேயே நாம் முழுமையாக அவர்களுக்குக் கொடுத்திடுவோம், அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 11: 15)
“(எனினும்) மறுமையிலோ, இத்தகையோருக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்றுமில்லை; அவர்கள் செய்தவை யாவும் இங்கு அழிந்துவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே”.(அல்குர்ஆன் 11: 16)
மேற்கூறிய இறைவசனங்கள் தெளிவாகவே நமக்கு அறிவித்து விட்டன. இம்மையை மட்டும் விரும்புவோர்க்கு விரும்பியவை யாவும் இங்கேயே கொடுக்கப்படும் என்றும், மறுமையில் எப்பயனும் அவர்களுக்கு இல்லை என்றும், இம்மையில் அவர்கள் செய்த – செய்கின்ற செய்யப் போகின்ற காரியங்கள் யாவும் அழிந்து விடக்கூடியவைகளே மேலும் வீணானவைகளே; என்பதும் வெள்ளிடை மலையாக விளங்கி விட்டது.
“எவன் மறுமையின் பயிரை விரும்புகிறானோ, அவனுடைய பயிரை(விளைச்சலை) நாம் அவனுக்காக அதிகப்படுத்துகிறோம்; எவன் இம்மையின் பயிரை (மட்டும்) விரும்புகின்றானோ; நாம் அவனுக்கு அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். எனினும், அவனுக்கு மறுமையில் யாதொரு பங்குமில்லை.” (அல்குர்ஆன் 42:20)
“மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்”. (அல்குர்ஆன் 87:17)
தெள்ளத் தெளிவான இவ்வசனங்களின் மூலம் நாம், மறுமை வாழ்வின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டோம்.
இவண், இன்னொன்றையும் நாம் நோக்க வேண்டும். மறுமையின் சுக வாழ்வைப் பெற, இம்மையில் இறை ஆணைக்குட்பட்டு – நபிவழி பேணி நற்செயல்களை நாம் மிகுதமாகவே புரிய வேண்டும். இம்மை விதைக்கும் இடம்; மறுமை அறுவடை செய்யும் இடம். பொல்லாங்கு தரும் போல் வாழ்க்கையைக் கண்டு இம்மையில் மயக்கம் கொள்ளாது அசலான – நிலையான வாழ்வைப் பெற, இம்மையில் இறைவன் இட்ட கட்டளைக்கிணங்க செயற்பட்டு, அமைதியான – அடக்கமான வாழ்வைப் பேண வேண்டும்.
இவ்வுலகில், நாம் செய்யும் ஆகுமான – ஹலாலான தொழிலால் ஈட்டுகின்ற செல்வங்களை நாம் – நம் குடும்பம் என்று மட்டும் அனுபவிக்காமல், உற்றார்-உறவினர், இல்லையென்று இரப்போர் முதலியோர்க்குரிய பங்கினையும் கொடுத்து இறைவனுக்கு அஞ்சி வாழ்தல் சிறப்புக்குரிய செயலாகும்.
‘மனிதன்’ என்பவன் மாண்புமிக்கவன்! சொல்லுக்கு ஏற்ற பொருளுடன் மனிதன் வாழ விரும்புதல் வேண்டும். இல்லையேல், மனிதஇனம் மாசுபடிந்த – கறை படிந்த இனமாகிவிடும்! மனிதன் பெற்ற பகுத்தறிவு பயனற்றதாகி, விலங்கினங்கள் மேன்மை பெற்றுவிடும்.
ஆம்! ‘சமூகம்” என்னும் சங்கமத்தில் அங்கம் வகிக்கும் மனிதர் ஒவ்வொருவரும் பகுத்தறிவுடன் சிறந்து விளங்க வேண்டாமா? இம்மையை மறுமைக்குரிய விளை நிலமாக்க முயற்சி செய்ய வேண்டாமா? 

Thanks To புலவர்செ. ஜஃபர் அலி, பி.லிட்., கும்பகோணம்

How to Have a Great Conversation with Anyone...

The art of conversation takes practice, and is not as hard as you might think. It will take some knowledge, practice, and patience, and you can learn to relax and enjoy a great conversation.
With these tips you will be well on your way to having a good, meaningful and entertaining conversation with anyone!

  1. Make a good first impression. Smile, ask questions that require more than a yes/no answer, and really listen. Maintain eye contact and keep as friendly and polite as possible.
  2. Listen. This is the most important part of any conversation. You might think a conversation is all about talking, but it will not go anywhere if the listener is too busy thinking of something to say next. Pay attention to what is being said. When you talk to the other person, injecting a thought or two, they will often not realize that it was they who did most of the talking, and you get the credit for being a good conversationalist – which of course, you are!
  3. Find out what the other person is interested in. You can even do some research in advance when you know you will have an opportunity to talk with a specific person. Complimenting them is a great place to start. Everyone likes sincere compliments, and that can be a great ice-breaker.
  4. Ask questions. What do they like to do? What sort of things have they done in their life? What is happening to them now? What did they do today or last weekend? Identify things about them that you might be interested in hearing about, and politely ask questions. Remember, there was a reason that you wanted to talk to them, so obviously there was something about them that you found interesting.
  5. Forget yourself. Dale Carnegie once said, “It’s much easier to become interested in others than it is to convince them to be interested in you.” If you are too busy thinking about yourself, what you look like, or what the other person might be thinking, you will never be able to relax. Introduce yourself, shake hands, then forget yourself and focus on them instead.
  6. Practice active listening skills. Part of listening is letting the other person know that you are listening. Make eye contact. Nod. Say “Yes,” “I see,” “That’s interesting,” or something similar to give them clues that you are paying attention and not thinking about something else – such as what you are going to say next.
  7. Ask clarifying questions. If the topic seems to be one they are interested in, ask them to clarify what they think or feel about it. If they are talking about an occupation or activity you do not understand, take the opportunity to learn from them. Everyone loves having a chance to teach another willing and interested person about their hobby or subject of expertise.
  8. Paraphrase back what you have heard, using your own words. This seems like an easy skill to learn, but takes some practice to master. Conversation happens in turns, each person taking a turn to listen and a turn to speak or to respond. It shows respect for the other person when you use your “speaking turn” to show you have been listening and not just to say something new. They then have a chance to correct your understanding, affirm it, or embellish on it.
  9. Consider your response before disagreeing. If the point was not important, ignore it rather than risk appearing argumentative. If you consider it important then politely point out your difference of opinion. Do not disagree merely to set yourself apart, but remember these points:
    • It is the differences in people–and their conversation–that make them interesting.
    • Agreeing with everything can kill a conversation just as easily as disagreeing with everything.
    • A person is interesting when they are different from you; a person is obnoxious when they can not agree with anything you say, or if they use the point to make themselves appear superior.
    • Try to omit the word “but” from your conversation when disagreeing as this word often puts people on the defensive. Instead, try substituting the word “and”, it has less of an antagonistic effect.
  10. Consider playing devil’s advocate – which requires care. If your conversation partner makes a point, you can keep the conversation going by bringing up the opposite point of view (introduce it with something like “I agree, and…”). If you overuse this technique, however, you could end up appearing disagreeable or even hostile.
  11. Do not panic over lulls. This is a point where you could easily inject your thoughts into the discussion. If the topic seems to have run out, use the pause to think for a moment and identify another conversation topic or question to ask them. Did something they said remind you of something else you have heard, something that happened to you, or bring up a question or topic in your mind? Mention it and you’ll transition smoothly into further conversation!
  12. Know when the conversation is over. Even the best conversations will eventually run out of steam or be ended by an interruption. Shake hands with the other person and be sure to tell them you enjoyed talking with them. Ending on a positive note will leave a good impression and likely bring them back later for more!

Warnings

  • Choose carefully when asking personal questions. You do not want to venture into overly personal issues. Even if the other person might be willing to talk about it, you may end up learning things that you really do not want to know. You certainly do not want the other person to think afterward that you coerced them into revealing personal information.
  • Be sincere! Compliments are great, but too much flattery is obvious and will reveal you as being insincere.
  • Beware of topics that can be inflammatory – such as religion and politics – and don’t venture into them unless you know the person has roughly the same convictions as you, or the circumstances otherwise allow for pleasant discussion. Again, it’s fine to disagree and can be nice to talk about differences, but it can also be a quick step toward an argument.
  • Try not to argue! You do not have to agree with everything someone says, but you do not have to tell them all about how you disagree. If you feel the need to explain an opposing viewpoint, express it simply and without putting the other person on the defensive. It is better to simply change the subject in a casual conversation than to get involved in an argument.
  • Try not to nod or respond with “Yes” and “I see” so much. It might make the person think you are bored and sometimes it may seem like you are rushing them along. Never say anything hurtful or offensive to the other person, this may project a bad feeling between you.
  • If it is a planned conversation, try listening to the news in case you run out of thing to say, it is always a good solution.
  • Also try not to cut the person off mid-sentence. It seems disrespectful and it makes it seem like what you have to say is more important than what the other person has to say. Let the person finish their thoughts and then continue on with thoughts of your own.
How to Speak Well and Confidently

Are you very shy when it comes to new surroundings, such as starting a new class or moving to a new area? Sometimes, it is necessary to overcome your shyness and speak confidently. By doing this, it can help you not only to share your ideas properly to others, but also to learn communicating with others. Here are a few steps to consider when speaking with confidence.

Steps

  1. Learn how to have conversations with people. Your ideas or opinions may not always be accepted by others, but this is nothing unusual. Open your mouth, express your beliefs! This will improve your courage.
  2. Don’t be afraid and speak loudly. If you speak in a low voice, not only will others not be able to hear what you say, but you will also portray a submissive demeanor, which suggests the opposite of a confident one.
  3. Make eye contact when you speak. For one thing, it is polite for others. Also, eye contact will help others to listen to your thinking carefully.
  4. Praise yourself everyday! This will promote your own confidence, which is important when you speak. With more confidence, people will take your thinking more seriously.

Tips

  • Don’t be nervous when you make mistakes. Human error is far from being a new concept — nobody is perfect! It is normal for everyone to make mistakes. Just calm down and keep speaking bravely.
  • Try and try again! This may be difficult for a shy person at first, but you need to force yourself to speak, and not seclude your thoughts. If you have some ideas, then try to speak out! Don’t just keep them in your head.
  • If you have self confidence issues, try to think that you are the only one who has sound knowledge about the topic. Then go ahead and impart your knowledge to the audience in an effective way.
  • Remember that there is a fine line between confidence and arrogance. Don’t portray an exaggerated amount of confidence, or you will come off as arrogant, believing that your ideas are better than the ideas of everyone else.

How to Start a Conversation with New People

Whether you are a host or a guest, there are many social situations that will call for interaction, even when you are stumped for some way to get it going. For example, you might want to help a friend’s new “significant other” feel comfortable. Or, you might see a stranger across a crowded room, and realize that this is your only chance to impress Mr. or Ms. Wonderful. Then, you realize that you’re not sure what to say.

  1. Start with a “hello,” and simply tell the new person your name then ask them theirs. Offer your hand to shake, upon his/her responding to you. (If you go to other countries, greet the person in tune with the particular culture). If you already know the person, skip this step and proceed to step.
  2. Look around. See if there is anything worth pointing out. Sure, talking about the weather is a cliche, but if there’s something unusual about it–bam!–you’ve got a great topic of conversation.
  3. Offer a compliment. Don’t lie and say you love someone’s hair when you think it’s revolting, but if you like his or her shoes, or a handbag, say so. A sincere compliment is a wonderful way to get someone to warm up to you. But be careful not to say something so personal that you scare the person off or make him or her feel uncomfortable. It is best not to compliment a person’s looks or body.
  4. Ask questions! Most people love to talk about themselves — get them going. “What classes are you taking this year?” “Have you seen (Insert-Something-Here)? What did you think of it?” Again, keep the questions light and not invasive. Do not ask too many questions if he or she is not responsive to them.
  5. Jump on any conversation-starters he or she might offer; take something he or she has said and run with it. Agree, disagree, ask a question about it, or offer an opinion, just don’t let it go by without notice.
  6. Look your newfound friend in the eye, it engenders trust (but don’t stare). Also, use the person’s name a time or two during the conversation; it will help you remember the name, and will draw the person’s attention to what you are talking about.
  7. Don’t forget to smile and have fun with your conversation!

Tips

  • Just relax. Chances are that whatever small-talk you’re making isn’t going to stick out in anyone’s mind a few months from now. Just say whatever comes into your head, so long as it’s not offensive or really weird. (Unless, of course, the person you’re attempting to converse with is into weird stuff.)
  • Remember, if you think of something in your head while you’re talking, it’s probably related.
  • It will help if you watch some TV, listen to radio shows, and/or read a lot — newspapers, magazines, and/or books. You need to have some idea of what is going on in the world. Also remember and plan to share anything you like, think is funny, or find intriguing. This is building up your own library of things that might be helpful to another person during a conversation someday. It will be amazing how you thread these interesting things when you least expect it, and make conversation an adventure instead of a dreadful task. If you take it to the next step and say things that you want the person to think of as adding value, and keep to yourself things that the person might not, you are actually honing your own personality to be appealing to the other person, and what is a greater act of kindness than that.
  • If you are shy, it will be helpful to have thought about a topic or two that you could talk about.
  • Follow the lead that your listener is expressing. If he or she appears interested, then continue. If he or she is looking at a clock or watch, or worse, looking for an escape strategy, then you have been going on for too long.
  • Interesting and funny quotes or facts can lighten things up, and make way for things to talk about. You could also use a set of conversation starter question cards for inspiration.
  • If talking over the phone, keep the person involved in the conversation at all costs. If you can’t come up with a good topic, try the “questions” game. Just keep asking them questions; random questions work just fine as long as they are appropriate. This technique can save a phone conversation. The questions should be open ended questions that do not require a yes or no answer. For example “How do you know the hosts?” This way you can ask questions about what they just said or follow up with how you know the hosts (for example) instead of acting as if the conversation is an interrogation.
  • Half of an effective conversation is the way you non-verbally communicate, and not necessarily what you say. Practice better non-verbal skills that are friendly and confident.
  • Read newspapers and magazines to increase your knowledge so you can have more interesting things to talk about

சூதாட்டம் (Gambling) என்பது மக்களை வழி கெடுப்பதற்காகவா ? ஒரு சமுதாய சிந்தனை !!


Post image for சூதாட்டம்


  சூதாட்டம் (Gambling) என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டு வகை ஆகும். இதன் அடிப்படை நோக்கம் பணயமாக வைக்கப்பட்ட பணம் அல்லது பொருளிலும் கூடிய பெறுமதியான பணத்தையோ, பொருளையோ அடைவதாகும். பொதுவாக இதன் பெறுபேற்றைக் குறுகிய காலத்துக்குள் அறியக்கூடியதாக இருக்கும். சில நாடுகளில் சூதாட்டம் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு சில நாடுகள் இதனைக் கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கின்றன.

பல சமூகங்களில் சூது ஒரு தீய பழக்கமாகவும், விலக்கி வைக்கவேண்டிய ஒன்றாகவும் கொள்ளப்படுகின்றது. கத்தோலிக்க, யூத மரபுகளில் சூதாட்டத்துக்காக குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் அவர்களுடைய மதங்கள் சூதாட்டத்தை ஏற்றுக்கொள்வதில்லை. சூதாட்டத்தினால் விரும்பத்தகாத பல சமூக விளைவுகள் ஏற்படுகின்றன. இதனாலேயே பல நாடுகள் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன. சில இஸ்லாமிய நாடுகளும், வேறு சில நாடுகளும் சூதாட்டத்துக்கு முற்றாகவே தடை விதித்துள்ளன.
இந்து சமய நூல்களும், தமிழில் தோன்றிய நீதி நூல்கள் பலவும் சூதாட்டத்தில் ஈடுபடாடாதிருக்கும்படி அறிவுறுத்துகின்றன. இந்தியாவின் பழைய நூல்களான மகாபாரதக் கதையும், நளன் கதையும் சூதினால் விளைந்த கேட்டையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை.
 மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப் பட்டவற்றையும், பரிசுத்த மானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் 2:168)
    கண்ணியமிக்க இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நமது ஊர்களில் பலர் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதிலும், அதனை வாங்குவதிலும் அதிக ஆர்வமுடையவர்களாக உள்ளனர் என்பது ஊரறிந்த உண்மை. இதிலும் குறிப்பாக இன்றைய இஸ்லாமிய தோற்றம் என்று நம்வர்களால் சிறப்பித்துச் சொல்லப்படும் ஜுப்பா தலைப்பாகை தொப்பியுடன் லாட்டரி சீட்டுக்கள் விற்பதையும் வாங்குவதையும்  காண்கிறோம். லாட்டரி சீட்டுகள் வாங்குபவர்களும், விற்பவர்களும், அதற்கு துணையாக இருப்பவர்களும் லாட்டரி சீட்டு வேறு, சூதாட்டம் வேறு என்று எண்ணிக் கொண்டார்கள் போலும்.

    பரிசுச் சீட்டு என்பது சூதாட்டத்தின் மறுபெயர். மக்களை வழி கெடுப்பதற்காக செய்த ஷைத்தானின் சூழ்ச்சியே இது. இதில் சில நன்மைகள் இருந்தாலும், தீமைகள் அதிகம் உள்ளது என்பதாலேயே வல்ல அல்லாஹ் இதை விட்டும் விலகியிருக்கச் சொல்கிறான். இதில் வேதனைப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அல்லாஹ்வுடைய பள்ளியை ஒட்டி உள்ள பள்ளிக்குச் சொந்தமான கடைகளில் கூட லாட்டரி விற்பனை.
    நாம் திருக்குர்ஆனை ஒரு எழுத்துக்கு 10 நன்மை கிடைக்கும் என்பதை அறிந்து ஓதி வருகிறோம். ஆனால் இது இம்மை மறுமைக்கு வழி காட்ட வந்த வேதம் என்பதால் பொருள் உணர்ந்து ஓதினோமா?. பொருள் உணராது ஓதியதால் மதுவும் – சூதும் ஒன்று என்றும், பெரும் பாவம் என்றும் இறைவன் தனது திருமறையில் தெளிவாகக் கூறியிருந்தும், நம்மிலே பலர் மிகச் சாதரணமாக விற்பனை செய்துகொண்டும், வாங்கி சந்தோஷித்துக் கொண்டும், பரிசு தனக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குர்ஆனுக்குள் பரிசு சீட்டை வைத்து இறைவனிடம் துஆச் செய்து கொண்டும் இருக்கிறார்கள். இதனைக் குறித்து சூரா பகராவில் இறைவன் மிகத் தெளிவாகக் கூறுகிறான்.
    (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது. (அல்குர்ஆன் 2: 219)
    மதுவும், சூதாட்டமும் இருமுகம் கொண்ட மத்தளங்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) நூல்: அபூதாவூத்
    மேற்கண்ட வசனத்தின் பொருளையும், ஹதீஸின் கருத்தையும் உணர்ந்த முஸ்லிம்கள் குடிகாரனும், லாட்டரி விற்பவனும், அதற்குத் துணை செய்பவனும் ஒரு தரத்தில் உள்ளவர்கள் என்பதை உணர வேண்டாமா? இதில் ஈடுபடுபவர்கள் இப்பெரும் பாவத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டாமா? முஸ்லிம்கள் இறைவனால் ஹராமாக்கப்பட்ட மதுவையையும் பன்றி மாமிசத்தையும் வெறுக்கும் அளவுக்கு லாட்டரி சூதாட்டத்தை வெறுக்கவில்லையே?…… இதிலும் அல்லாஹ்வுடைய கருத்துக்கு மாற்றமாக இவர்களுடைய சொந்தக் கருத்துக்களைப் புகுத்தி வித்தியாசம் கற்பித்து விட்டார்களா?…
    இறைவன் மது, சூதாட்டம், சிலை வணக்கம், ஜோதிடம் இந்நான்கையும் இணைத்து கூறி இவைகள் ஈமான் கொண்டவர்களைக் கெடுக்கச் செய்யும் ஷைத்தானின் சூழ்ச்சி என்று தெளிவாக கூறுவதை நாம் உணரவேண்டாமா?
    ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்து கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 5:90)
    நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும், உங்களிடையே பகமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?  (அல்குர்ஆன் 5:91) 
    (நபியே!) நிச்சயமாக நாம் மிகத் தெளிவான வசனங்களை உம்மீது இறக்கி வைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:99)
    மக்களுக்கு ஒரு காலம் வரும் அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா, ஹராமானதா, முறையானதா, முறையற்றதா என்பவனவற்றைப் பொருட்படுத்தாதுருப்பர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி
    எனவே எனதன்பு நடுநிலைச் சமுதாயத்தவர்களே! அல்லாஹ்வும் அவனது தூதரும் பெரும்பாவம் என எச்சரித்த இந்த தடுக்கப்பட்ட செயலில் ஈடுபட்டுள்ள நமது சகோதரர்களுக்கு இதன் தீமைகள் பற்றி நயமாக எடுத்துக்கூறி அனுமதிக்கப்பட்ட வழிகளில் தொழில் செய்து ஹராம், ஹலாலை பேணி நடக்கும் முஸ்லிம்களாக நாம் வாழ்வோமாக!

தொகுப்பு  மு.அஜ்மல் கான்.


புரோகிதர்களை புறக்கணிப்போம்!



Post image for புரோகிதர்களை புறக்கணிப்போம்!

புரோகிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சரி அவர்களின் ஒரே நோக்கம் உண்மையான மார்க்கத்தை மறைப்பது; அதன் மூலம் உலக ஆதாயம் அடைவது. அதற்காக எவர்மீது வேண்டுமானாலும், ஏன் இறைவன் மீதும் பொய் சொல்ல தயங்கமாட்டார்கள். இறைவேதங்களைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி இவ்வுலக வாழ்க்கை வசதிகளை தேடிக்கொண்டார்கள் யூத- கிருஸ்துவ புரோகிதர்கள். இஸ்லாத்தில் புகுந்துக் கொண்ட புரோகிதர்களுக்கு இது முடியவில்லை. காரணத்தை இறைவன் கூறுகிறான்.
“நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலானாகவும் இருக்கின்றோம்” (அல்குர்ஆன் 15:9) இறைவனே பாதுகாவலனாக இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. யோசித்தார்கள்; அணுக விட்டால் தானே அறிந்துக் கொள்வார்கள். நம் வியாபாரத்துக்கு வேட்டு வைத்து விடுவார்கள். ஆபத்தை உணர்ந்தார்கள். அரபி உங்களுக்கு விளங்காது. அதை விளங்க நாங்கள் மட்டுமே விஷேச பயிற்சி பெற்றவர்கள் என்றார்கள். ஒவ்வொரு வசனங்களுக்கும் பல அர்த்தங்கள் உள்ளன என்று பயமுறுத்தினார்கள். நீண்டகாலமாகவே குர்ஆனை மொழிபெயர்க்க முன் வராமல் இருந்தார்கள். இறைத்தூதரின் போதனைகளில் இடைசொருகலானவைகளையே அதிகம் அதிகம் பயன்படுத்திக் கொண்டார்கள்; விளைவு – மார்க்கம் மக்களுக்கு கஷ்டமானது.
நபி(ஸல்) கூறுகிறார்கள்: அல்லாஹ் என்னைக் கற்றுக் கொடுப்பவனாகவும் எளிதாக்குபவனாகவும் அனுப்பியிருக்கிறான். அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: முஸ்லிம்
இலகுவான மார்க்கத்தைக் கஷ்டமாக்கியதால் வியாபாரம் விறுவிறுப்பானது. போலி நபிமொழிகள் மூலம் புதிய அமல்கள் அறிமுகமாயின. ஐவேளை தொழுகையில்லாமல் அல்லாஹ்விடம் சொர்க்கம் பெற குறுக்கு வழி பார்த்தார்கள் மக்களுக்கு குறுமதி படைத்த புரோகிதர்கள் தர்காவுக்கு வழிகாட்டினார்கள். இதன் மூலம் ஷைத்தானின் சபதம் நிறைவேற சகல வழிகளிலும் உதவிச் செய்கிறார்கள். ஒன்றுபட்ட சமுதாயத்தை பிளவுபடுத்தி வழிகெடுத்து இருக்கிறார்கள். இதையெல்லாம் அறிந்துக் கொண்டே செய்கிறார்கள். ஆதாரம் அல்லாஹ் தருகிறான்.
“”அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப்போல் (இந்த உண்மையை)அறிவார்கள்.” (அல்குர்ஆன் 2:146) தானும் வழிகெட்டு, சமுதயாத்தையும் வழிகெடுக்கிறோமே. நாளை அல்லாஹ்விடத்தில் கேவலமான இழிநிலையை அடைய போகிறோமோ என்ற கவலையும் கிடையாது. “”அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம் ” (அல்குர்ஆன் 5:13)
 இறுகிப் போன இதயத்தில் ஈரம் எப்படி இருக்கும்? இறைவனைப் பற்றிப் பயம் எப்படி வரும்? இரக்க மில்லா பூசாரிகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் இந்தச் சமுதயாத்தை விடுவிக்க ஒவ்வொரு முஸ்லிமும் முன்வர வேண்டும்.
ஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட இந்த புரோகிதப் பூசாரிகளின் பிடியிலிருந்து பிளவுபட்ட சமுதாயத்தை விடுவித்து ஒன்றுபடுத்த ஒவ்வொரு முஸ்லிமும் இப்போதே செயலில் இறங்க வேண்டும். இதற்குச் சுலபமான வழி உண்டு. பள்ளியில் தினசரி சுபுஹு தொழுகைக்குப் பின்னால் சில நிமிடங்கள் நேரம் குர்ஆனை – ஹதீஸ் மொழி பெயர்ப்புகளைப் படிப்பது. அரபி ஓதத் தெரிந்தவர்கள் – தெரியாதவர்களுக்கு ஓதக் கற்றுக் கொடுப்பது. கற்றுக் கொடுக்கவும், கற்றுக் கொள்ளவும் அரபியை போல் ஒரு இலகுவான மொழி வேறு எதுவுமே இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இதை தினசரி கடமையாகச் செய்து வந்தால் மிக குறுகியக் காலத்தில் மகத்தான மார்க்க அறிவை நாம் பெற முடியும்.
“”முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்” (புகாரீ 58)
என்ற அடிப்படையில், வழிதவறி அரசியலிலும், இயக்கங்களிலும் சிக்கிக் கொண்டிருக்கும் நம் சகோதரர்களுக்கு அதன் தீமைகளை எடுத்துச் சொல்லி குர்ஆன் – ஹதீஸுக்கு அழைத்து வர வேண்டும். செயல்படுத்த இலகுவான மார்க்கம் என்பதை நம் செயல்கள் மூலம் காட்ட வேண்டும். இதே போல்
தொலைக்காட்சியில் நேரத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் நம் சகோதரிகள், மார்க்க கல்வியின் பக்கம் கவனத்தைத் திருப்ப வேண்டும் நபி(ஸல்) எச்சரிக்கையை மனதில் கொண்டு,
“நரகவாசிகளில் பெண்களையே அதிகமாக் கண்டேன்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்: புகாரி, 29, 1052
பெண்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அவர்கள் தானும் மார்கக் கல்வி கற்று, தங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுத் தரலாம். இதனால் அவர்கள் எதிர்காலத்தில் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்களாக வாழலாம். இப்படி நாம் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் மார்க்கத்தைக் கற்றுக் கொண்டால்தான் புரோகிதர்களைப் புறக்கணிக்க முடியவும்.
 (புரோகிதத்தை விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லும் சகோதரர்களுக்கு நம் நிறுவனங்களில், கடைகளில் அல்லது சுயமாகச் சம்பாதிக்க நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து, அவர்களும் நேர்வழி பெற உதவலாம்).
 மார்க்கத்தை மறைக்கிறார்கள் – மக்களை வழிக் கெடுக்கிறார்கள் என்று புரோகிதர்கள் மீது குறை மட்டும் சொல்வதில் பிரயோசனமில்லை. புரோகிதர்கள் தப்லீக்கில் இருந்தாலும் சரி, தவ்ஹீத்தில் இருந்தாலும் சரி சமூக ஒற்றுமைக்கும், மனித நேயத்திற்கும் முட்டுகட்டை. இந்த புரோகிதம் ஒழிந்தால் மட்டும் ஒன்றபட்ட சமுதாயம் உயரவும், மனித நேயம் மலரவும் முடியும். நாம் ஒவ்வொருவரும் மார்க்கம் கற்றுக் கொள்வதின் மூலமே புரோகிதர்களைப் புறக்கணிக்க முடியும்.
இறைவா! எனக்கு நீ கற்றுத் தந்தவைகள் மூலம் எனக்குப் பயனளிப்பாயாகா! பயனுள்ளவற்றையே எனக்குக் கற்றுத் தருவாயாக. கல்வியை எனக்கு அதிகமாக்குவாயாக! எல்லா நிலையிலும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறுபவர்களாக இருந்தார்கள் நபி(ஸல்). அறிவிப்பவர்:- அபூஹுரைரா(ரழி), நூல்: இப்னுமாஜ்ஜா(251), திர்மிதி
பயனுள்ள மார்க்க கல்வி கற்றுக் கொள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் அன்புடன் அழைக்கிறோம்.
“மேலும் எவர்(கள்) நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் நேர்வழியில் சேலுத்துகிறான்.” (அல்குர்ஆன் 19:76)

Thanks Mr.M.S. கமாலுத்தீன்

Thursday, 2 February 2012

குழந்தைங்க கவனிக்கலையா? பெற்றோர்களே எச்சரிக்கை!

குழந்தைங்க சரியாவே படிக்க மாட்டேங்கிறாங்க. எப்படி சொல்லிக் குடுத்தாலும் கவனிக்க மாட்டேங்கிறாங்க என்று புலம்பும் பெற்றோரா நீங்கள். கவலைப் படாதீர்கள். குழந்தைகளின் கவனிக்கும் திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களை அதற்கான விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும்.

கவனிக்கும் திறன்

சமவயதுடைய குழந்தைகளுடன் ஒப்பிடும்போது படிப்பது, எழுதுவது, தகவல் பரிமாற்றம், கவனிக்கும் திறன், ரீசனிங் மற்றும் கணிதம் தொடர்புடைய அம்சங்களில் பிரச்சினைகள் உள்ள குழந்தைகளை லேனிங் டிஸபிலிட்டி சில்ட்ரன்ஸ் என கூறுகிறார்கள்.

இந்த கல்வி கற்கும் குறைபாடானது படிப்பில் துவங்கி, படிப்படியாக மனக்குறைபாடு, தாழ்வு மனப்பான்மை, மனச்சோர்வு, சக மாணவர்களுடன் உறவுச் சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்களைக் கொண்டு செல்லும் தன்மையை கொண்டுள்ளது.

கற்றல் குறைபாடு பிரச்சினை தங்களின் குழந்தைகளுக்கு இருப்பதை பெற்றோர் உணரும்போது பிரச்சினையின் தன்மை, ஆழம் ஆகியவற்றை அறிவதுடன், இதில் நாம் எப்படி செயல்பட்டு குழந்தைக்கு உதவலாம் என்று யோசித்து செயல்பட வேண்டும் இதுபோன்ற குழந்தைகளிடம் பொறுமையாக இருப்பதன் மூலமாக மட்டும் இதை சரிசெய்ய முடியாது. குறைபாட்டின் முதல் கட்டத்திலேயே அதனை சரிசெய்யும் முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும். ஏனெனில் இதில் காட்டப்படும் லேசான அலட்சியம் கூட எதிர்காலத்தை பாதித்து விடும்.

சரியான கவனிப்பு

குழந்தைகளின் கவனிக்கும் தன்மையை அதிகரிக்க அதற்கான விளையாட்டுக்களின் ஈடுபடுத்தவேண்டும். எண் விளையாட்டுக்கள் போன்ற மூளைக்கு வேலை தரும் விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் கவனிக்கும் தன்மை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

5 முதல் 7 வயதுள்ள குழந்தைகளுக்கு அடிப்படை எழுத்துக்கள், எண்களை பிரித்து அறியும் திறன் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு தனித் தனியாக எண்களையும், எழுத்துக்களையும் அடையாளப்படுத்த வேண்டும். பொம்மைகளை வைத்தும் விளையாட்டு காட்டியும் கண்டுபிடிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யலாம்.

புரிந்து கொள்ளும் திறன்

7 முதல் 9 வயதுடைய குழந்தைகள் பாடத்தை கேட்டு, புரிந்துகொள்ள தெரிந்திருக்கவேண்டும். இதில் குறைபாடு வரும் பட்சத்தில் அவர்களை ஒரு இடத்தில் அமரவைத்து பெற்றோர்கள் கூடவே அமர்ந்து வீட்டுப்பாடங்களை செய்ய வைக்கவேண்டும். இதனால் அவர்களின் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

9 முதல் 12 வயதுடைய குழந்தைகளின் கல்வி கற்கும் திறனுக்கேற்ப மூளையானது முழு வளர்ச்சியடைந்திருக்கும். அவர்களாகவே சுதந்திரமாக தங்களின் பணிகளை செய்யத் தொடங்கிவிடுவர். ஆனால் அதில் குறைபாடு இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களின் இலக்கை அடையச் செய்யவேண்டும்.

குழந்தைகளுக்கு குறைபாடு உள்ளது உணரப்பட்டவுடன் பெற்றோர் சிறப்பு மருத்துவரின் உதவியை நாட வேண்டும். குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளுக்கான பிரத்யேகமான பள்ளிகள் உள்ளன. அதில் இந்த குழந்தைகளை சேர்ப்பதில் தயக்கமே கூடாது. இந்த குறைபாடுகள் ஒரு நோயல்ல என்பதையும் சரியான கவனிப்பின் மூலமாகவும் நமது உடனடி நடிவடிக்கைகளின் மூலமாகவும் இவற்றை களைந்து குழந்தையை மேம்படுத்தலாம் என்பதையும் பெற்றோர் உணர வேண்டும்.

நன்றி:tamil.boldsky.com

Monday, 30 January 2012

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் : பைபிள் இறை வேதமா ?

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும். மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த SAN அமைப்பினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.

பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாக பிரச்சாரங்கள் செய்கிற வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான்.

ஆனால், இந்த SAN அமைப்பினரும், அதன் தலைவரான திரு. ஜெர்ரி தாமஸ் அவர்களும் தங்கள் மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், பிற மதங்களை, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தை கடுமையாக விமர்சித்தும் சாடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சாகிர் நாயக் மதங்களை ஒப்பீட்டு நோக்கும் அறிவை (comparitive study ) பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து, சாகிர் நாயக்கை வீழ்த்த வேண்டும், அவரிடம் எந்த ஞானமும் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை போன்று நாங்களும் comparitive study செய்துள்ளோம், இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதை அவருடன் நேருக்கு நேரான விவாதம் மூலம் நிரூபிப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தனர்.

சாகிர் நாயகின் அமைப்பின் பிரிவுகளில் ஒன்றான IREF அமைப்பின் பொறுப்பாளர் ஒருவருடன் திரு. ஜெர்ரி தாமஸ் விவாதம் ஒன்றையும் நடத்தியுள்ளார். இந்த வகையில், தாங்கள் தான் சரியான கொள்கையை கொண்டுள்ளோம் என்றும், இஸ்லாமியர்கள் மத்தியில் மிகப்பெரிய அறிஞராக அவர்கள் எண்ணி வைத்துள்ள சாகிர் நாயகிடமே சவால் விடுத்துள்ளோம் என்றும் இறுமாப்புடன் பிரசாரம் செய்து வந்துள்ளனர் இந்த கூட்டத்தினர்.
கேரளா மாநிலத்தில், அதிகமான திருசபைகளை கொண்டவர்களாக தங்களை சொல்லிக்கொள்ளும் இவர்கள், கேரளா இஸ்லாமிய அமைப்புகள் மத்தியிலும் பல விவாதங்களை நிகழ்த்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் விவாதிக்க இவர்கள் ஆயத்தமானார்கள்.

எது இறை வேதம் என்கிற தலைப்பில் முதலில் விவாதிப்பது என்று, இவர்கள் இடையே நிகழ்ந்த முதல் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டது. எது இறை வேதம் , குர் ஆனா பைபிளா என்பதை ஒரே தலைப்பாக வைக்காமல், இரண்டையும் இரண்டு வெவ்வேறு தலைப்புகளாக மாற்றலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியது.

அந்த அடிப்படையில் , பைபிள் இறை வேதமா இல்லையா? என்கிற தலைப்பில் கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், குர் ஆன் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் வருகிற 28 , 29 ஆகிய தேதிகளிலும் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, இன்னும் ஆறு தலைப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்களில் இந்த விவாதம் முக்கியமான ஒரு வேறுபாட்டை கொண்டிருந்தது. தங்கள் வாதங்கள் ஒவ்வொன்றையும் தமிழில் சொல்வதுடன் அதை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்கிற விதி ஒப்பந்தத்தில் உள்ளது என்கிற வகையில், தவ்ஹீத் ஜமாஅத் அன்பர்களுக்கு இந்த விதி புதிய ஒன்று என்றாலும், சத்தியத்தை மேலோங்க செய்ய வேண்டும் என்கிற நோக்கில், ஆங்கில புலமை அதிகம் பெற்றிராத தவ்ஹீத் ஜமாத்தினர், அதற்கும் தயாரானார்கள்.


விவாதத்தை குறித்து அறிந்து வைத்துள்ள எவருக்கும் புரியக்கூடிய ஒரு அடிப்படையான விஷயம் - இந்த பைபிள் இறை வேதமா என்கிற விவாதம் என்றால், அதில் முஸ்லிம்கள் கேள்வி கேட்ககூடியவர்களாகவும், கிறிஸ்தவர்கள் பதில் சொல்லக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.

என்ன காரணதால் பைபிளை இறை வேதம் என்று சொல்கிறீர்கள்?
மனித கையாடல் பல, பைபிளில் இருப்பதாக ஆதாரங்கள் தந்திருக்கிறோமே, இவைகளுக்கு என்ன பதில்?
இவையெல்லாம் கடவுள் வார்த்தையாக இருக்க முடியுமா?


என்றெல்லாம் முஸ்லிம்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி, பைபிளை இறை வேதம் தான் என்று நிலைநாட்ட வேண்டிய கடமை கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இதற்கு ஏற்றார்ப்போல தான் தலைப்பையும் நாம் ஒப்பந்தத்தின் போது முடிவு செய்திருந்தோம்.


ஆனால், இந்த விவாதத்தின் துவக்கத்தில் இருந்தே, கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்த முறையானது, முஸ்லிம்களை மட்டுமல்லாது, அவர்கள் அழைத்து வந்த கிறிஸ்தவ பார்வையாளர்களையும் கூட வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

ஏனெனில், இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தில், துவக்கம் முதல் இறுதி அமர்வு வரை, இன்னின்ன காரணத்தால் தாங்கள் புனிதம் என்று கருதும் பைபிள் இறை வேதம் தான் என்பதை இவர்கள் சொல்லவேயில்லை!

ஒரே ஒரு காரணத்தை கூட சொல்லாமல், இரண்டு நாட்களையும் கடத்தினார்கள் என்பது, தங்கள் பரமபிதாவின் நாமத்தை போற்றுவார்கள் என்று யாரை நம்பி அந்த பார்வையாளர்கள் வந்தார்களோ, அவர்கள் அனைவரையும் மிகுந்த ஏமாற்றமடைய செய்தது என்பதற்கு, இரண்டாம் நாளில் அவர்கள் அணியில் காலியாகி விட்ட கிட்டத்தட்ட 85 இருக்கைகளே சாட்சி பகர்ந்தது !!

சரி, பைபிள் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் பேச வந்து விட்டு, பைபிள் இறை வேதம் தான் என்பதற்கு ஆதாரம் சொல்லாமல், இரண்டு நாட்கள் கடத்துவதற்கும் ஒரு திறமை வேண்டுமா இல்லையா? அந்த திறமையை அழகாக அவர்கள் காட்டினார்கள்.
எப்படி?

தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில், பைபிளில் இன்னின்ன வசனங்களில், அகோரமான, ஆபாசமான வார்த்தைகளும் கதைகளும் சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றனவே, இதை ஒரு மனிதன் சொன்னான் என்று சொன்னாலே எங்களை செருப்பால் அடிக்க வருவார்களே, நீங்கள் என்னவென்றால், இதை இறைவன் சொன்னான் என்று சொல்கிறீர்களே, உங்கள் இறைவன் இவ்வளவு மட்டரகமா? என்று அடுக்கடுக்காக பல கேள்விகளும் ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டது.

இவைகளுக்கு முறையான பதில்களை சொல்லி, இந்த வசனத்தில் நீங்கள் சொல்வது போல இல்லை என்றோ, அல்லது இந்த வசனம் இப்படி தான் சொல்கிறது, அதற்கு இன்ன விளக்கம் என்றோ சொல்லி, தங்கள் வேத நூலை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள், அதற்க்கெல்லாம் மூச்சு விடாமல், உங்கள் குர் ஆனிலும் தானே விந்து என்கிற வார்த்தை உள்ளது, உங்கள் குர் ஆனிலும் தான் விபச்சாரம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது, ஹதீஸிலும் தானே இப்படி உள்ளது என்று சிறு பிள்ளை விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர்.

அடப்பாவிகளா! உங்கள் பைபிளில், காம களியாட்டங்கள், பெண்களின் மார்புகளை மாதுளைபழங்கலாக ஒப்பீடு செய்யும் ஒப்பீடுகள், அண்ணன்-தங்கை தகாத உறவு, கள்ளக்காதல் கதைகள் என்று உங்கள் பைபிள் என்பது ஒரு முழு நீள காமக்கதை புத்தகத்தை ஒத்து இருக்கிறதே என்று கேட்டால், அதற்கு பதில் சொல்லி உங்கள் தூய்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், குர் ஆனிலும் தானே விந்து என்று வருகிறது, அதிலும் தானே விபச்சாரம் குறித்து பேசப்படுகிறது என்று சொல்கிறீர்களே, விந்து வந்தால் குளிப்பது கடமை, விந்து வந்தால் சுத்தம் செய்துக்கொள்ளாமல் தொழுகைக்கு வராதீர்கள், விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்று சொல்வது ஆபாசமா? இப்படி தான் பைபிளிலும் ஆபாசம் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோமா?

இதை கேட்டால் அதற்கும் பதில் இல்லை. சமாளித்து சமாளித்து பார்த்து ஒன்றும் வேலைக்காகாது என்றவுடன், குர் ஆனிலும் தானே அடிமைப்பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று உள்ளது என்று அடுத்து சொல்லலாயினர். பைபிளில் இத்தனை வண்டவாளங்கள் இருக்கின்றன என்று குற்றம் சுமத்தி உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு, பதிலை சொல்லாமல், குர் ஆனிலும் தானே இருக்கிறது என்று வறட்டு வாதம் புரிந்து கொண்டிருந்தனர் இந்த கிறிஸ்தவர் பாதிரிக்கூட்டம். இவ்வாறு சமாளிப்பீர்கள் என்று தெரிந்தே தான், குர் ஆன் இறை வேதமா இல்லையா என்பதை தனி தலைப்பாக விவாதிப்பதற்கு ஏதுவாக அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, அந்த விவாதத்தின் போது குர் ஆனை குறித்து கேளுங்கள், இப்போது பைபிளுக்கு பதில் சொல்லுங்கள் என்று ஒரே முடிவுடன் தவ்ஹீத் ஜமாஅத் இருந்தனர்.

இருப்பினும், ஓரிரு ஹதீஸ்களை அவர்களது மனம் போல திரிபு வேலை செய்து, வார்த்தைகளை மாற்றியமைத்து விவாதத்தில் சமர்ப்பித்த போது, வெகுண்டெழுந்த சகோ. பிஜே, இதற்குரிய மூல ஆதாரங்களை தர வேண்டும், இல்லையேல், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசப்பட்டார்.

ஹதீஸ் என்று எதை சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுக்கொண்டு வந்த பாதிரிக்கூட்டம், மார்க்க ஞானத்தில் உச்சாணிக்கொம்பில் இருக்கிற தவ்ஹீத் ஜமாஅத் ஆலிம்களிடம் இவர்களது திரிபு வேலை எடுபடாது என்று ஆனவுடன் செய்வதறியாது திகைத்தனர். பின்னர், சுதாரித்து, நாங்கள் ரஹ்மத் ட்ரஸ்டில் எடுத்தோம் என்று ஒரு ஆதாரத்தை தந்தனர்.

அந்த ஆதாரமாவது உண்மையா என்று பார்த்தல் இல்லை. விடாமல், சகோ. பிஜே, அது ரஹ்மத் ட்ரஸ்டில் இவர்கள் சொல்லும் பாகத்தில் இல்லை - பொய் சொல்கிறார்கள் என்றனர்.
பின்னர், இல்லை, நாங்கள் onlinepj தளத்தில் பார்த்தோம் என்றனர். onlinepj தளத்திலும் அவ்வாறு இல்லை, தற்போது நேரடி ஒளிபரப்பு ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால் இணையதளத்தை திறப்பது முடியாது , ஆகவே உங்களை அடுத்த வார தலைப்பின் போது கவனித்துக்கொள்கிறேன் என்று கூறி, இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் சகோ. பிஜே.

அடுத்து, பைபிள் இறை வேதம் தான் என்பதை தாங்கள் வைத்திருக்கிற பைபிளின் மூலமே நிரூபிக்க கடமைப்பட்டவர்கள், அதை செய்யாமல், உங்கள் குர் ஆனில் தவ்ராத்தை பற்றி சொல்லப்பட்டிருக்கிறதே, இன்ஜீலை குறித்து சொல்லப்பட்டிருக்கிறதே, அவை அனைத்தையும் அல்லாஹ் தான் ஈசா நபிக்கு (ஜீசுஸ்) கொடுத்ததாக சொல்கிறானே, அப்படியானால், இந்த கால பைபிளில் மனித கையாடல் உள்ளது என்று சொல்வது, அல்லாஹ், தவ்ராத்தையும் இன்ஜீலையும் பாதுகாக்கவில்லை என்று தானே ஆகிறது என்று கேள்வி வைத்தனர்.

ஆனால், இந்த வாதமாவது சரியா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை ! பைபிள் இறை வேதம் தான் என்பதை பைபிளை கொண்டே நிரூபிக்க வேண்டியவர்கள், அதை கூட குர் ஆனை கொண்டு நிரூபிக்கிற கட்டாயத்தில் தான் உள்ளனர் என்று ஒரு போடு போட்டார் சகோ. பிஜே.
மேலும், குர் ஆனில் அல்லாஹ் சொல்லியுள்ள தவ்ராத் மற்றும் இன்ஜீலுக்கும் இன்று உங்கள் கைகளில் இருக்கிற பைபிளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விளக்கினார்.

இது உங்கள் சுயக்கருத்து, இதற்க்கான ஆதாரத்தை தர முடியுமா என்று மறு வாதம் வைத்தவர்களை நோக்கி, எந்த குர் ஆனில் தவ்ராத்தையும் இன்ஜீலையும் குறித்து சொல்லப்பட்டிருக்கிறதோ, அதே குர் ஆனில் தான், ஈசா நபிக்கு வழங்கப்பட்ட இன்ஜீலுக்கான சில அடையாளங்களையும் சொல்லபட்டிருக்கிறது என்றார்.
ஈசா நபிக்கு வழங்கப்பட்ட அந்த இன்ஜீலில் இருப்பதாக ஓரிரு வசனங்களை அல்லாஹ் குர் ஆனில் மேற்கோள் காட்டுகிறான் என்று அதற்குரிய வசனங்களை வாசித்தார் சகோ. பிஜே.
இந்த வசனம், நீங்கள் வைத்திருக்கிற பைபிளில் இருக்கிறது என்று காட்டி விட்டால், அந்த கால தவ்ராத், இன்ஜீலும் இன்றைய பைபிளும் ஒன்று தான் என்பதை நானே ஒப்புக்கொள்கிறேன் என்று அறைகூவல் விடுத்தார்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத பாதிரிகள், மீண்டும் தலைப்பை திசை திருப்பி, சகோ, பிஜே எழுதிய இது தான் பைபிள் நூலில் அது தவறு, இது தவறு என்று சம்மந்தமில்லாமல் பேச துவங்கினர்.

முதல் நாளின் இறுதி அமர்வில், சகோ. அப்பாஸ் அலியும், சகோ. செய்து இப்ராஹீமும் பைபிளில் உள்ள ஆபாசங்களை ஒரு பக்கம் பட்டியல் இட, மற்றொரு பக்கம், சகோ. கலீல் ரசூல் அவர்கள், பைபிளின் மூலப்ப்ரதிகள் எவ்வாற இருந்தன, ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் அது எவ்வாறு மனித கையாடல்கள் மூலம் திருத்தப்பட்டன, எத்தனை எத்தனை முரண்பாடுகள் தோன்றின என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களுடனும், மூல பிரதிகளை ப்ரஜக்டரின் மூலம் காண்பித்தும் அழகிய முறையில் விளக்கினார்.

ஏற்கனவே இந்த பாதிரிகள் எதிர்க்கொண்ட விவாதங்களில் இப்படிப்பட்ட வாதங்களை எதிர் கொள்ளாததால், தவ்ஹீத் ஜமாத்தின் இந்த ஆழமான ஆதாரங்களை கண்டு குலை நடுங்க துவங்கினர் என்பது, விவாதத்தை கண்டு வந்த அனைவருக்கும் புரிய துவங்கியது .

எதற்கும் பதில் இல்லை என்று ஆனவுடன், இப்படியெல்லாம் ஆதாரம் என்ற பெயரில் சொல்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும், உங்களை விட எல்லாம் மிகப்பெரிய முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய "பைபிளில் நூறு தவறுகள்" போன்ற நூல்களுக்கு எல்லாம் பல மறுப்பு நூல்கள் இருக்கின்றன. அவைகளையும் கொண்டு தான் வந்துள்ளோம் என்றனர் பாதிரிகள்.

சரி, மறுப்பு நூல்களை தான் கொண்டு வந்திருக்கிறீர்களல்லவா? அப்படியானால், அந்த நூல்களில் இருந்து வாசித்து எங்களுக்கு மறுப்பு தர வேண்டியது தானே என்று தவ்ஹீத் ஜமாத்தினர் கேட்டனர். அதற்கும் பதில் இல்லை!

உங்கள் சுய சிந்தனையை உபயோகித்து தான் எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை , குறைந்த பட்சம், வேறு அறிஞர்கள் எழுதிய நூல்களில் இருந்தாவது மறுப்பு தர வேண்டியது தானே? அதையும் உங்களால் செய்ய இயலவில்லை என்றால் இதன் பொருள் ?, உங்களிடம் மறுப்பு இல்லை ! எந்த முஸ்லிம் அறிஞர்கள் பைபிளில் நூறு தவறுகள் என்று நூல் எழுதியதாக சொல்கிறேர்களோ, அந்த நூலில், நாங்கள் இப்போது காட்டியிருக்கிரோமே, அந்த குற்றச்சாட்டுகள் இல்லை ! அதனால் தான் எங்களின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் அறிஞர்களின் மறுப்பு நூல்களில் பதில் இல்லை, என்று ஆணித்தரமாக வாதம் வைத்தனர் தவ்ஹீத் ஜமாத்தினர்.

இரண்டாம் நாளின் இறுதியில், சரி, பைபிளில் இருந்து நீங்கள் தான் எந்த ஆதாரத்தையும் காட்டி அதை இறை வேதம் என்று நிரூபிக்கவில்லை, நானே same side goal போட்டு, உங்களுக்கு பாயின்ட் எடுத்து தருகிறேன் என்று துவங்கினார் சகோ. பிஜே.

என்ன வித்தியாசமாக சொல்கிறாரே என்று பார்த்தால்,

பைபிளில், எவருக்காவது கடுகளவு இறை நம்பிக்கை இருக்கிறதோ, அவர் பூ என்று ஊதினால் மலை பறந்து விடும், கொடிய விஷம் கொண்ட சர்ப்பம் (பாம்பு) தீண்டினாலும் சாக மாட்டார், கொடிய விஷயத்தை அருந்தினாலும் உயிர் பிழைத்த கொள்வார், என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கு வந்திருக்கிற அனைவருக்கும் கடுகளவாவது இறை நம்பிக்கை இருக்கும். எனக்கு மலையை எல்லாம் இங்கு கொண்டு வர முடியாது - இதோ இந்த பேப்பர் வெயிட் - இதை பூ என்று ஊதி தள்ளி விடுங்கள், நான் பைபிளை இறை வேதம் என்று ஒப்புக்கொள்கிறேன் என்றார்.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல், கையோடு ஒரு விஷ பாட்டில் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வந்த சகோ. பிஜே, இதை ஜெர்ரி தாமஸ் அணியினரிடம் கொடுத்து இதை அருந்தி விட்டு உயிருடன் இருந்து காட்டுங்கள் என்றார்.

இந்நேரம் வயிற்ரை கலக்கியிருக்கும் அவர்களுக்கு. ஆத்திரத்தில் எடுத்து குடித்தாலும் குடித்து விடுவார்கள் என்று தான் நாமும் எண்ணினோம். ஆனால், அவர்கள் வழக்கம் போல, உங்கள் குர் ஆனிலும் ஹதீஸிலும், நோய் ஏற்பட்டாலோ , எந்த விஷம் உடம்பில் ஏறினாலோ, இந்த பேரீச்சம் பழத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிட்டால் உயிர் பிழைப்பார் என்று இருக்கிறதே , நீங்களே இந்த விஷத்தையும் குடித்து இந்த பேரீச்சம் பழத்தையும் சாப்பிட்டு காட்டுங்கள் என்று திருப்பி கொடுத்தார்.

இதை ஏற்கனவே எதிர்பார்த்த தவ்ஹீத் ஜமாத்தினர், நீங்கள் ஹதீஸ் என்று எதை சொல்கிறீர்களோ, அது ஹதீஸ் அல்ல, அது பொய், கட்டுக்கதை ! இதை அடுத்த வார தலைப்பில் கேளுங்கள், அக்கு வேறு ஆணி வேறாக அன்றைக்கு விளக்குகிறோம். சரி, இது தான் உங்கள் வாதம் என்றால், நாங்கள் எப்படி இந்த ஹதீசை பொய் என்று அறிவிக்கிறோமோ, அதே போன்று பைபிளையும் பொய் என்று அறிவித்து விடுங்கள், பிரச்சனை இல்லை என்றனர் !

இதற்கு பதில் சொன்னவர்கள், பைபிளில், இயேசுவை யாரும் பரீட்சித்து பார்க்க கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது, ஆகவே நாங்கள் இதை பரீட்சைக்கு வர மாட்டோம் என்று பின் வாங்கினர்.

விடாமல் சுற்றி வளைத்த சகோ. பிஜே, இயேசுவை நாங்கள் பரீட்சிக்கவில்லை, உங்களை தான் பரீட்சிக்கிறோம், இது இயேசுவின் வார்த்தையா அல்லது நீஎங்கள் திரித்துள்ளீர்களா என்பதை தான் பரீட்சிக்கிறோம் என்று கூறினார்.
அதோடு, எந்த பைபிள் வசனத்தில், இயேசுவை பரீட்சித்து பார்க்க கூடாது என்று ஏசுவே சொல்கிறாரோ, அதே வசனத்தின் கடைசியில், இயேசு அந்த பரீட்சையில் கலந்து கொள்கிறார் என்று தான் வருகிறது என்பதையும் சகோ. பிஜே சுட்டிக்காட்டினார்.
அதாவது, என்னை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே, அந்த பரீட்சையில் கலந்து கொண்டுள்ளார் இயேசு. அதே போன்று, எங்களை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே அந்த விஷத்தை நீங்கள் அருந்தத்தான் வேண்டும், பைபிளும் அருந்த தான் சொல்கிறது என்று ஒரே போடாக போட்டார் பிஜே.

வெலெவெலெத்துப் போன பாதிரிகூட்டம், செய்வதறியாது திகைத நிலையிலேயே விவாதத்தின் இறுதி அமர்வு வந்தது.. இறுதியாக பேசிய சகோ. பிஜே, தலைப்பை நிலைநாட்ட வேண்டி ஒரே ஒரு ஆதாரத்தை கூட எதிர் அணி வைக்காமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக உள்ளது. நாங்கள் எதிர்க்கொண்ட விவாதங்களிலேயே இந்த விவாதம் தான் மிகவும் அதிசயமானது என்றார்.
பைபிளில் உள்ள ஆபாசங்கள் என்றும் முரண்பாடுகள், பொய்கள், கட்டுக்கதைகள் என்றும் எத்தனை விஷயங்களை அள்ளிப்போட்டோம், அவைகளுக்கெல்லாம் பதிலை சொல்லாமல் உங்கள் குர் ஆனிலும் தானே இப்படி உள்ளது, ஹதீஸிலும் தானே அப்படி உள்ளது என்று இப்படி சமாளிக்கிரீர்களே, குர் ஆன் குறித்தோ, ஹதீஸ் குறித்தோ கேட்பதாக இருந்தால் அடுத்த வாரம் வாருங்கள், இன்றைக்கு நீங்கள் தலை குனிந்து நிற்ப்பதை போன்று அன்று நாங்கள் தலை குனிந்து நிற்க மாட்டோம். ஆணித்தரமான பதில்களை நாங்கள் தருவோம் என்று கூறி முடித்தார்.

ஆங்கிலத்தில் Clean Sweep என்று சொல்கிற அளவிற்கு, முழுமையான வெற்றியை நமக்கு பெற்றுதந்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் !!

நன்றி : http://www.jesusinvites.com/content/content.aspx?i=9pDYdvZ9MnM=

டாக்டர் அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகை!! ஒரு சிறப்பு பார்வை ..

ப்துல் காலம் என்பவர் மிகப் பெரிய ஆளுமை,எத்தனையோ ஏழை இளைஞர்களுக்கு அவர் ஆதர்சனம்.இந்தியாவின் ஒரு மூலையில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்த  அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் எனும் பெயருடைய ஒரு ஏழைச் சிறுவன்,இந்தியாவின் அணு சக்தித் துறைக்கே தந்தை எனும் நிலையை அடைந்தான்  என்றால் அது incredible ,அப்துல் கலாம் தனது இன்றைய நிலையை அடைவதற்கு அவர் கடந்த நெருப்பாறுகள் அதிகம் .உண்மையில் அப்துல் கலாம் ஒரு ஜீனியஸ் ,எத்தனையோ கோடிக் கணக்கான இளைஞர்களின் ரோல் மாடல்.சில நாட்களுக்கு முன்பு I am Kalam எனும் ஒரு ஹிந்தி மூவி பார்த்தேன்,ராஜஸ்தான் பாலை வனத்தில் உள்ள ஒரு சிறிய தேநீர் கடையில் வேலை செய்யும் ஒரு ஏழைச் சிறுவன்  அப்துல் காலமைப் பற்றி அறிந்து அவர் போல ஆக வேண்டும் என நினைப்பது  தான் படத்தின் ஒன் லைன்,நான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் அதுவும் ஒன்று,அந்தப் படத்தில் வரும் சிறுவனைப் போல எத்தனையோ   இளைஞர்களை நான் பார்த்துள்ளேன். எனது ஒன்று விட்ட தம்பியின் நோட் புக்கை நான் ஒரு முறை பார்த்த போது அதில் அப்துல் கலாமின் சுய சரிதை ஆன அக்கினிச் சிறகுகளில் தனக்கு பிடித்த சுய ஆளுமை வசனங்களை குறித்து வைத்திருந்தான் அப்போது அவன் ஏழாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தான் , எனக்கும் மிக மிகப் பிடித்த முதல் ஜந்து புத்தகங்களில் அக்கினிச் சிறகுகளும் ஒன்று . பெங்களூரில் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான தருணுக்கு அப்துல் கலாம் தான் ஆதர்சனம்,வெட வெடக்கும் பெங்களுர் குளிரில் ஒவ்வொரு நாளும் காலை நான்கு மணிக்கு எழுந்து இருப்பான் கேட்டால் அப்துல் கலாம் நான்கு மணிக்கு எழுந்து இருப்பார் எனக் கூறுவான்,இந்தியாவின் வேறு ஒரு மூலையில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த எனது நண்பன் தருணுக்கு இந்தியாவின் இன்னொரு மூலையில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் ஆதர்சனம் என்றால் அப்துல் கலாம் எனும் மேதையைப் பற்றி நான் வார்த்தைகளால் விளங்கப்படுத்த முடியாது,அப்துல் கலாம் உண்மையில் ஒரு மாமனிதர் [அந்த மாமனிதர் அல்ல], அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகை எத்தனையோ இளைஞர்களின் சிந்தனைப் போக்கை மாற்றி இருக்கும் ஆராவது ஒருத்தனாவது அப்துல் கலாம் போல வர வேண்டும் என சபதம் பூண்டு இருப்பான்,அவ்வாறு  சபதம்  பூண்டு இருந்தால் மிக மிக வரவேற்கப் பட வேண்டிய விஜயம் ,அப்துல் கலாம் ஏன் புலிகள் ஆண்ட போது வர வில்லை என சிலர் லாஜிக் கேட்கிறார்கள் ,இந்தியாவின் பிரதமரைக் கொன்றவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் வர முடியாது என்பது நாலாம் கிளாஸ் படிச்சவனுக்கும் தெரியும் [இந்தியப் படைகள் ஈழத்தில் செய்த படுகொலைகள் எவ்வளவு தூரம் கண்டிக்கப்பட வேண்டியதோ அதே அளவுக்கு கண்டிக்கப்பட வேண்டியது ராஜீவ் காந்தியின் படு கொலை ],இதே போல ஒரு வாதம் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் வென்ற போதும் பரவியது , என்னுடன் பேசிய ஒரு அன்பர் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் மேடையில் விடுதலைப் புலிகளை ஆதரித்து கருத்து சொல்லி இருக்க வேண்டும் என க் கூறினார் , அப்படி கூறாத ஏ ஆர் ரகுமான் துரோகி எனவும் பொங்கி இருந்தார் , வெளி உலகத்தில் அதுவும் வெளி மேடையில் விடுதலைப் புலிகளை ஆதரித்து ஒருவனும் கருத்து சொல்ல முடியாது என்கிற அளவிற்கு தான்  விடுதலைப் புலிகளைப் பற்றியும் எமது போராட்டம் சார்ந்த உண்மையான நீதிகளையும் நாம் மிக கேவலமான முறையில் தான் வெளி உலகத்துக்கு கொண்டு சென்று உள்ளோம் ,எமது போராட்டம் தோற்றுப் போக மிக மிகப் பிரதான காரணமும் அது தான் ..

கூடங்குளம் அணு உலைக்கு அப்துல் கலாம் ஆதரவு தெரிவித்து இருந்தார் ,ஆகவே அப்துல் கலாம் ஒரு துரோகி என ஒரு அன்பர் எனக்கு கூறினார் ,மேலும் அப்துல் கலாம் காங்கிரஸின் அஜன்டாவிற்கு ஏற்ப செயற்படும் இத்தாலி அன்னையின் அடிவருடி எனவும் என்னிடம் கொந்தளித்து இருந்தார் ,அப்துல் கலாம் ஏதோ காங்கிரஸ் கேட்டுக் கொண்டதுக்கு ஏற்ப நேற்று திடீர் என முளைத்து அணுசக்தி மின்சாரத்தை ஆதரிக்கிறார் என கூறுவது அடி முட்டாள்  தனம் ,அப்துல் கலாமை சரியாக பின் பற்றுபவர்களுக்கு தெரியும் அப்துல் கலாம் எத்தனை ஆண்டுகளாக அணு சக்தியை ஆதரித்து வருகிறார் என்று , ஒரு அணு வி ஞ்ஞனி  அணு உலையை எதிர்த்தால் தான் அது அதிசயம் யாழ்ப்பாணத்தில் ஒரு கதை சொல்வார்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாக்கு சென்ற சிலர் இந்தியாவில் மாருதிக் காரைப்  பார்த்தவுடன் தங்களுக்குள் ஆச்சரியப்பட்டார்களாம் அட அட டே ..........இந்தியாவிலும் மாருதிக் கார் இருக்கு என்ன ...........? ,

ஏறத் தாள இதைப் போலத் தான் இருக்கிறது,அணு மின் விவகாரத்தில் அப்துல் கலாமை துரோகி என்பவர்களின் நிலையும், அப்துல் கலாம் இன்று நேற்று அல்ல ஆண்டு ஆண்டு காலமாக அணு சக்தியை ஆதரித்து வருகிறார் , நான்  பெர்சனலாக எனது அறிவுக்கு ஏற்ற படி அணு மின்சாரத்தை எதிர்கிறேன் [அணு சக்தி சம்பந்தமான எனது அறிவு பூச்சியம் என்பது வேறு விடயம்]
அணு சக்தி இந்தியர்களின் பிரச்னை அதை விடுத்து எமது மக்களின் பிரச்சனைக்கு வருவோம் ........

அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகையை யார் எதிர்கிறார்கள் என்று பார்த்தல் அவர்களில் பெரும் பாலானவர்கள் புலம் பெயர் தமிழர்கள்,இன்னும் சிலர் இந்தியாவில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்கள் , இந்தியாவில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்களை விடுவோம் அவர்களுக்கு சில விடயங்கள் இந்த உலகம் அழியும் வரை விளங்காது , விளங்கப்படுத்தவும் முடியாது,அவர்களில் பெரும் பாலானவர்கள் இன்னும் சேர சோழ பாண்டிய மன்னர்  காலங்களில் இருந்து கொண்டு தமிழ் தேசியம் பேசுகின்றனர் ,அவர்களுக்கு போரின் வலி தெரியாது அவர்களில் பெரும் பாலானவர்கள் போரை விஜயின் சுறா படம் போல நினைக்கிறார்கள்,ஆனால் பெரும் பாலான  புலம் பெயர் தமிழர்களுக்கு போரின் வலி தெரியும் ஆனால் அவர்கள் அதனை இலகுவாக மறந்து விடுகிறார்கள்,இவர்கள் ஈழத்தில் இன்னும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதனை மறந்து விடுகிறார்கள் ,அவர்களின் பாஷையில் சொன்னால் கொடிய அரக்கன் மகிந்தவின் ஆட்சியில் ஈழத்தில் இன்னும் லட்சக் கணக்கான தமிழர்கள் இருகிறார்கள் , ஈழத்திற்கு யாருமே போகக் கூடாது என்றால் என்ன  சார் நியாயம் ,ஈழத்துக்கு எவனுமே போகக் கூடாது என்ற ஒருவரிடம் அப்ப யாராம்  போறது என்று கேட்டதுக்கு நாங்கள் லீவில போவம் தானே ,அது போதாதா என்றார் .

சுருங்க சொன்னால் இன்றைய ஈழத்து இளம் சந்ததியின் போர்க் குணத்தை மாற்றும் எந்த விஜயத்தையும் புலம் பெயர் சில அன்பர்கள் விரும்புவது இல்லை,அவர்களுக்கு எமது இளம் சந்ததி எப்போதும் போர்க் குணத்துடன் தான் இருக்க வேண்டும் ,போராட வேண்டும் சாக வேண்டும் தாம் வளமாக வாழ வேண்டும் , அவர்களுக்கு தமது பாக்கெட்டை  நிரப்ப ஈழத்தில் போர் அவசியம். 


நாம் ஈழ தமிழர்கள் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் முற்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடிப்  பார்த்து விட்டோம் உலகின் அத் தனை துயரங்களும் ஈழத்தமிழனுக்கு தெரியும் நாம் மேற்கொண்ட நீதிக்கான  போர் எமது தவறாலும் சர்வதேசத்தின் தவறாலும் படு தோல்வியில் முடிந்துள்ளது,ஆம் ஈழத்தமிழர்கள் நாம் தோற்று விட்டோம் என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்,எமக்கு முன்னால் இப்போது இருக்கும் மிகப் பெரிய கேள்வி தான் 

அடுத்தது என்ன..............?

போராடிப் பார்த்தாகி விட்டது,முள்ளி வாய்கால் வரை எமது மக்கள் பார்த்து விட்டனர்,இனி ஒரு போராட்டம் எந்த விதத்திலும் சாத்தியம் இல்லை என்கிற உண்மை பெரும் பாலான ஈழத்தமிழனுக்கு விளங்கிவிட்டது,ஆனால் புலம் பெயர் சில புலிப் பினா மிகளுக்கும் இந்தியாவில் உள்ள சில அன்பர்களுக்கும் விளங்க வில்லை ,மாற்றிச்  சொன்னால் அவர்களுக்கு உண்மை நிலை விளங்கினால் அவர்களின் எதிர்காலம் இருண்டதாகி விடும்,ஈழத்தமிழனை முதலாக கொண்டு செய்து வரும் பிஸினெஸ் எல்லாம் என்ன ஆகும்,ஆகவே அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ "பிரபாகரன் திரும்பி வருவார்' "தமிழர் மானம்" "வீரம்" லொட்டு லொசுக்கு என்று கண்ட மேனிக்கு அடித்து வருகிறார்கள்,சில புலம் பெயர் தமிழர்களுக்கு எமது இளம் சந்ததியின் இர த்தம் இன்னும் கேட்கிறது தாம் பாதுகாப்பாக வெளி நாடுகளில் இருந்து கொண்டு எமது அப்பாவி இளைஞர்களை சாகடித்தது   போதாது என்று அவர்கள் இன்னும் மனித உடல்களை பலியாக கேட்கிறார்கள்,வெளிநாடுகளில் இருந்து கொண்டு தமிழ் ஈழம் அடையாமல் வெளிக்கிருக்க மாட்டாதவர்கள் வெளிக்கிருக்காமல் இருக்கட்டும்,இல்லை என்று இன்னும் முக்குபவர்களை போராட தமிழ் ஈழம் அன்போடு வரவேற்கிறது.....!
ஆனால் ஈழத்தில் உள்ள இன்றைய இளம் சந்ததி உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் ,இனியொரு போராட்டம் எம்மால் சாத்தியம், இல்லை ஆனாலும் நாம் போராட வேண்டும் அதுவும் முழு மூச்சாக , முன்னயதை விட தீவிரமாக,ஆனால் வேறு விதமாக 

எவ்வாறு.........?அந்தப் போராட்டம் கல்வியால் மாத்திரம் தான் முடியும்.. 

ஈழத்தமிழன் கல்விக்கு ஆசிர்வதிக்கப்பட்டவன் ,பொதுவாக எந்த இனத்தையும் விட ஈழத் தமிழர்களின் கல்வி அறிவு அசாதாரணம் ஆனது , எம்மில் பலர் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகிறார்கள் ,அவர்களை தடுக்க வேண்டும் என சிங்கள பேரினவாத அரசு கிரிமினலாக சிந்தித்து கொண்டு வந்த தரப்படுத்தல் தான் ஈழத்தில் போரை  ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது,இன்றும் கூட உலகின் எத்தனையோ  பெரும் பதவிகளில் ஈழத்தமிழர்கள் அசால்ட்டாக இருக்கிறார்கள்,இனி நாம் எடுக்க இருக்கும் போராட்டம் அல்லது எடுக்க இருக்கும் ஆயுதம் "கல்வி"யாக இருக்க வேண்டும்.குழந்தைப் போராளிகளை , தற்கொலைப் போராளிகளை உருவாக்கியதை விடுத்து நாம் இப்போது மேதைகளை  உருவாக்க வேண்டிய நிலையில் / கட்டாயத்தில் இருக்கிறோம்.எம்மால் எமது இழந்த பெருமையை மீண்டும் பெற கல்வியால் மாத்திரம் தான் முடியும் எமது அடுத்த சந்ததி தமக்கு இருக்கும் வரலாற்றுக் கடமையை உணர்த்து கல்வியில் முழு நாட்டம் செலுத்த வேண்டும்,எமது அடுத்த சந்ததியாவது சுயமாக சிந்திக்கக் கூடிய ,பிரச்சனைகளை சரியான முறையில் எதிர்கொள்ளக் கூடிய சந்ததியாக மாற வேண்டியது அல்லது மாற்ற வேண்டியது காலத்தின் அவசியம் அல்லது...இனிவரப் போகும் வரலாறுகளில் "ஈழத்தமிழர்கள் எனும் ஒரு இனக் குழுமம் இலங்கையில் இருந்தார்கள்" என பதியப் படப் போவதை யாராலும் தடுக்க முடியாது"........

நான் அப்துல் கலாமின் யாழ்ப்பாண விஜயத்தை அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வின் ஒரு படியாகத்தான் பார்க்கிறேன்,அப்துல் கலாமிற்கு எமது யாழ்ப்பாண இளைஞர்கள் கொடுத்த தடல் புடலான வரவேற்பை பார்க்கும் போது எமது இளம் சந்ததியின் மனம் சிறிதளவேனும் கல்வியின் பக்கமாக திரும்புகிறது என்பதை நினைக்க சந்தோசமாக உள்ளது,


மேதகு அப்துல் கலாமிற்கு யாழ்ப்பாணத்தின் தலை சிறந்த பாடசாலைகளில் ஒன்றான யாழ் இந்துக் கல்லூரியில் இளைஞர்கள் புடை சூழ வழங்கப்பட்ட தடல் புடல் வரவேற்பின் சிறு படத் தொகுப்பு..  














ஒரு அட்வைஸ் சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று சொல்வார்கள்,போரால் கெட்டு நொந்து சிக்கி சீரழிந்து உள்ள ஈழத்தமிழனுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லக் கூடிய தகுதி அப்துல் கலாம் எனும் பெரியவரிடம் மட்டும் தான் இருக்கிறது ஏன் என்றால் அப்துல் கலாம் தனது வாழ்வின் ஆரம்ப காலங்களில் போரை  சந்திக்கா விட்டாலும் போரின் விளைவுகள் என்று சொல்லக் கூடிய வறுமை தனிமை முதலிய அனைத்தையும் அனுபவித்து தான் இன்று அப்துல் காலமாக மிளிர்கிறார்,அப்துல் காலாமின் யாழ்ப்பாண வருகை எமது இளம் சந்ததியில் ஒருவரது மனத்தை மாற்றி ,அவனது போர்க் குணத்தை  மாற்றி அவனைக் கல்வியின் பக்கம் திருப்பி இருந்தால் அப்துல் கலாம் ஈழமக்களுக்கு நன்மை செய்த உத்தமர்களின் பட் டியலில் முதல் இடம் பிடிப்பார்

அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடுமா !!

அதிகமாக சாப்பிடுவதும், மாசடைந்த சுற்றுச் சூழலில் வசிப்பதும் மூளையை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்தை செயலிழக்கச் செய்பவைகள் பற்றி மூளை நரம்பியல் நிபுணர்கள் கூறியுள்ளவை உங்களுக்காக.

அதிகமா சாப்பிடாதீங்க

மிக அதிகமாக உணவு உண்பதால் மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். மேலும் அதிக அளவில் சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

கட்டாயம் காலை உணவு

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை பாதிப்பிற்கு காரணமாகும். மேலும் புகை பிடிப்பதால் மூளை சுருங்குகிறது இது அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

சுற்றுச் சூழல் சீர்கேடு

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும். நீண்ட நாட்களுக்கு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள் ஏனெனில் நன்றாக தூங்குவது நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். அதேபோல் தலையை மூடிக்கொண்டு தூங்குவதும் ஆபத்தானதாம். இதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரித்து சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. இதனால் மூளை பாதிப்படைகிறது.

ஓய்வு அவசியம்

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

மூளைக்கு வேலை தராமல் இருப்பதும் ஆபத்தானதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

நிறைய பேசுங்க

அதிகம் பேசாமல் இருப்பதும் மூளையை பாதிக்குமாம். எனவே அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

Friday, 27 January 2012

ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். .

இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.



” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது,
வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது.”

சரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167.
------------------ 


ஸ்பெயினில் இஸ்லாமிய சரித்திர விளக்க படதொகுப்பு.

இஸ்லாம் ஸ்பெயினில் பரவி 800 வருடங்கள் இஸ்லாமியஆட்சி
செய்து என்னென்ன சாதனைகள செய்தது?

இது ஒரு இஸ்லாமிய சரித்திர ஆவண விளக்க படதொகுப்பு.

அரேபிய மண்ணில் இஸ்லாம் தோன்றி
அது எவ்வாறு வையகமெங்கும்
எந்தெந்த காலகட்டங்களில் பரவியது.

ஐரோப்பியாவில் இஸ்லாம் எப்படி பரவியது.?

ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 1


ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 2



ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 3


ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 4


Iஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 5


ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 6



ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 7



ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 8


ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 9


ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 10

=========


ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன்னாட்சி முடிவுக்கு பின் ஸ்பெய்னில் இஸ்லாமியர்கள் ஐரோப்பியர்களால் மிக கொடுமையான இன அழிப்பு செய்யப்பட்டார்கள் .Muslims in Spain 1 ஐரோப்பியர்களால் இஸ்லாமிய இன அழிப்பு.


Muslims in Spain 2


=======================




Great Mosque of Cordoba, Spain - BBC World Wonders

The Cathedral and former Great Mosque of Córdoba, in ecclesiastical terms the Catedral de Nuestra Señora de la Asunción (English: Cathedral of Our Lady of the Assumption), and known by the inhabitants of Córdoba as the Mezquita-Catedral (English: Mosque--Cathedral), is today a World Heritage Site and the cathedral of the Diocese of Córdoba.

The site was originally a pagan temple, then a Visigothic Christian church, before the Umayyad Moors at first converted the building into a mosque and then built a new mosque on the site.

It is located in the Andalusian city of Córdoba, Spain. The Mezquita is regarded as perhaps the most accomplished monument of the Umayyad Caliphate of Córdoba. After the Spanish Reconquista, it once again became a Roman Catholic church, with a plateresque cathedral later inserted into the centre of the large Moorish building.

The Alhambra, Granada, Spain - BBC World Wonders




The Alhambra, the complete form of which was Calat Alhambra, is a palace and fortress complex constructed during the mid 14th century by the Moorish rulers of the Emirate of Granada in Al-Andalus, occupying the top of the hill of the Assabica on the southeastern border of the city of Granada in the Autonomous Community of Andalusia.

The Alhambra's Moorish palaces were built for the last Muslim Emirs in Spain and its court, of the Nasrid dynasty. After the Reconquista by the Reyes Católicos in 1492, some portions were used by the Christian rulers.