Wednesday, 15 February 2012

டான்செட் நுழைவுத் தேர்வுவிஷ்வபாரதி

தமிழகக் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளில் சேர டான்செட் தேர்வு எழுத வேண்டும். இந்த முதுநிலைப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் முதுநிலைப் படிப்புகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் எம்பிஏ, எம்சிஏ போன்ற படிப்புகளிலும் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இதன் அடிப்படையில்தான் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும்.

எம்.பி.ஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இளநிலைப் பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். அரசின் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, அதைத் தொடர்ந்து இளநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு படித்ததும் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ படித்து அதற்குப் பிறகு லேட்டரல் என்ட்ரி மூலம் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பார்ம்., படிப்புகளில் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

அசோசியேட் மெம்பர் ஆஃப் தி  இன்ஸ்டிடியூஷன் ஆஃப் என்ஜினீயர்ஸ் சான்றிதழ் பெற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அந்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் ஆசிரியராகவோ அல்லது நிறுவனங்களில் பணிபுரிந்தோ இருக்க வேண்டும்.

எம்.சி.ஏ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள்,  ஏற்கெனவே சொல்லியபடி ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ படித்து விட்டு கணிதப்பாடத்துடன் இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் இடம் பெறும் மாணவர்கள், 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

எம்.இ.,எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான்., போன்ற படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., அல்லது பி.பார்ம், பி.எஸ்சி (வேளாண்மை, வனம், தோட்டக்கலை, மீன்வளம்) படிப்புகள் அல்லது அறிவியல் படிப்புகளில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். பி.எஸ்சி. மூன்று ஆண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு மற்றும் இரண்டு ஆண்டு எம்.எஸ்சி. இன்பர்மேஷன் டெக்னாலஜி தொடர்பான படிப்புகளை படித்திருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதனுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தொழில்முறை அமைப்புகள் அல்லது சங்கங்களிடம் இருந்து ஏ மற்றும் பி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். அந்தச் சான்றிதழுடன் இரண்டு ஆண்டுகள் துறை சார்ந்த முன் அனுபவ சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

பி.இ., பி.டெக். படிப்புகள் தவிர்த்து லேட்டரல் என்ட்ரி மூலம் வேறு ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியாது. அதேபோல், பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., படிப்புகளில் வார  இறுதியில் நடைபெறும் வகுப்புகளில் படித்தவர்களும், பி.இ., பி.டெக். படிப்புகளில் தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்களுக்கும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியாது. இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

டான்செட் நுழைவுத் தேர்வு மொத்தம் இரண்டு மணி நேரம். நுழைவுத் தேர்வில் எம்.பி.ஏ. கேள்வித்தாளில் பிசினஸ் டிசைன், கணிதம், ஆங்கிலம், காம்ப்ரிஹென்சன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். இந்தக் கேள்வித்தாளுக்கான மொத்த மதிப்பெண்கள் 100. மொத்தக் கேள்விகள் 100. குவாண்டிடேட்டிவ் அபிலிட்டி, அனாலிட்டிக்கல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், கம்ப்யூட்டர் அவர்னஸ் போன்ற கேள்விகளும் அடிப்படை அறிவியல் குறித்து சில கேள்விகளும் உள்பட மொத்தம் 100 கேள்விகள் எம்.சி.ஏ. நுழைவுத்தேர்வு கேள்வித்தாளில் இடம்பெறும். அப்ஜெக்ட்டிவ் முறையில் உள்ள இந்தக் கேள்விகளுக்கான தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., உள்ளிட்ட படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வில் கேள்வித்தாள் மூன்று பகுதிகளைக் கொண்டது. இதில் முதல் இரண்டு பகுதிகளும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமானது. முதல் பகுதியில் 30 கேள்விகளுக்கும், இரண்டாம் பகுதியில் மொத்தம் 45 கேள்விகளுக்கும் மாணவர்கள் விடையளிக்க வேண்டியதிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா ஒரு மதிப்பெண். அனைத்துக் கேள்விகளும் அப்ஜக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். இரண்டாம் பகுதியில் உள்ள 45 கேள்விகளில் 30 கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளித்தால் போதும். பகுதி மூன்று மட்டும் மாணவர்கள் எடுத்துக்கொண்டசிறப்புத் துறைகளின் அடிப்படையில் கேள்விகள் அமைந்திருக்கும். இதில் மொத்தம் 40 கேள்விகள் இடம்பெறும். அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டியதிருக்கும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

எம்.பி.ஏ. படிப்பில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 31ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை நடைபெறும். எம்.சி.ஏ. படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 31ஆம் தேதி பிற்பகல் 2.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் முதல் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.
சென்னை, கோயமுத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் போன்ற 15 ஊர்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் எஸ்.சி. அருந்ததியர் மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 250. எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., போன்ற அனைத்துத் தேர்வுகளுக்கும் ஒரே விண்ணப்பம்தான். எனவே, மாணவர்கள் ஒரே விண்ணப்பத்தை மட்டும் பயன்படுத்தி இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்பட்சத்தில் தேர்வுக் கட்டணம் கூடுதலாக ரூ. 500 செலுத்த வேண்டியதிருக்கும். அதுபோன்ற நிலையில் எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி அருந்ததியர் மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. விண்ணப்பங்களை நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி உண்டு.
விண்ணப்பங்களை மற்ற மையங்களில் நேரடியாக மற்றும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யவேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 23.

விண்ணப்பங்கள் சென்னையில் நேரடியாக மற்றும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டிய கடைசிதேதி: பிப்ரவரி 25.
விவரங்களுக்கு : http://www.annauniv.edu/tancet2012

இஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்பல் !


நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான "பூஜா லாமா" சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார். பேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை "ஆம்னா ஃபாரூகி" என்று மாற்றிக் கொண்டதாக
கூறினார்.மேலும்"இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான் உலகுக்கு கூற விரும்புகிறேன்." என்பதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் "நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன் ,தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன்.இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியது நான் இப்பொழுது ஆபாசம்,மது ,புகை அகத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டு விட்டேன்.இஸ்லாத்தை பற்றி உலகம் கூறும் அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன்" என்றார் அவர்.
பூஜா லாமா என்ற தனது பழைய பெயரை கொண்டு தன் பழைய வாழ்கையை நினைவு படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இஸ்லாத்தை ஏற்ற பின் தனது நடிக்கும் தொழிலையும்,குடி,புகை போன்ற தீய பழக்கங்களை விட்டு விட்டார் ஆனால் இவர் ஆபாசமாக நடித்த படங்களைக்காட்டி இந்த பெண்ணின் மனதை நோகடித்துக் கொண்டிருக்கும் அவலமும் ஒரு புறம நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.அந்த பெண்ணிற்கு நேர் வழி காட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்.

ELECTRICITY pass through Flash light of the Digital camera to your body??? Yes it is 100% true..!


This is a true incidence reported of a boy aged 19, who was studying in 1st year of engineering, who died in Keshvani Hospital, Mumbai. He was admitted in the Hospital as a burned patient. Reason ??????

Thanks to Mr.ArunKumar.(Delim)
This boy had gone to Amravati (a place located in State of Maharashtra ) on a study tour, on their return they were waiting at the railway station to catch the train. Many of them started taking pictures of their friends using "Mobile Phones" and / or "Digital Camera". One of them complained that, he was unable to capture the full group of friends in one frame in the Digicam.

This boy moved away to a distance to get the whole group.
He failed to notice that at an angle above his head, 40,000 volts electrical line was passing through.
As soon as he clicked the digital camera? 40,000 volt current passed through the camera flash light to his camera and then from his camera to his fingers & to his body. All this happened within a fraction of a second. His body was half burned.
They arranged for an ambulance & his burned body was brought to Keshavani Hospital, Mumbai.
For one & half days or so he was conscious & talking. Doctors did not have much hopes as there was a lot of complex issues in his body. He passed away later.
Now how many of us are aware about these technical threats & dangers? Even if we are, how many of us are adhering??
Now should we call ourselves as educated and knowledgeable people?
▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼
* Please avoid mobile phones on petrol outlets.
* Please avoid talking on mobile phones while driving.
* Change that "Chalta Hai Yaar Attitude".
* Please avoid talking on mobile phones while kept in charging mode without disconnecting from wall socket.
* Please do not keep mobile phones on your bed while charging and / on wooden furniture.
* Avoid using mobile phones / Digital cameras near high voltage electrical lines like in railway stations and avoid using flash.

Tuesday, 14 February 2012

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு கோடைகால ஃபெல்லோஷிப்...

   என்ஜினீயரிங் மாணவர்களுக்கு கோடைகால ஃபெல்லோஷிப்வள்ளியூரான்
கோடைகால விடுமுறையில் சிறிய ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட விரும்பும் பொறியியல் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்துகிறது சென்னை  ஐ.ஐ.டி.
எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் உள்ள மாணவர்களுக்கு மேலும் கண்டுபிடிப்புத்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக கோடைகால ஃபெல்லோஷிப் பயிற்சியை வழங்குகிறது சென்னை ஐ.ஐ.டி. இந்த கோடைகால ஃபெல்லோஷிப் பயிற்சி மே 15 முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த இரண்டு மாதகாலப் பயிற்சியில் சேரும் மாணவர்கள் பொறியியல், மேனேஜ்மெண்ட், அறிவியல் போன்ற தங்கள் துறை சார்ந்த ஏதேனும் ஒரு சிறிய கண்டுபிடிப்பு ஆய்வை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பயிற்சியில் சேர தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு மாணவருக்கும், கோடைகாலப் பயிற்சியில் ஈடுபடும் ஒவ்வொரு மாதத்திற்கும் தலா ரூ.6,500 வீதம்  ஃபெல்லோஷிப் வழங்கப்படும். இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு காலத்தில் தேர்வில் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்கள், படிப்புக்காலத்தில் மாணவர்கள் உருவாக்கிய ஆய்வுக் கட்டுரைகள், ஏதேனும் புதுமையான வடிவமைப்பு, டிசைன் போட்டிகளில் பங்கெடுப்பு, கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் மாணவர்களின் பங்களிப்பைப் பொருத்து இந்த ஃபெல்லோஷிப் பயிற்சியில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
பி.இ., பி.டெக்., பி.எஸ்சி.(என்ஜினீயரிங்), ஒருங்கிணைந்த எம்.இ., எம்.டெக்.,படிப்புகளில்  மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள்  இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., எம்.ஏ., எம்.பி.ஏ. போன்றப் படிப்புகளில் முதலாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த ஃபெல்லோஷிப் பயிற்சியில் விண்ணப்பிக்கலாம்.
மேனேஜ்மெண்ட் படிப்பு, கலைப்புலம் மற்றும் சமூக அறிவியல் (ஹியூமானிட்டிஸ் அண்ட் சோஷியல் சயின்ஸஸ்), அறிவியல் துறையைப் பொருத்தவரை இயற்பியல், வேதியியல், கணிதம், பொறியியல் துறையைப் பொருத்தவரையில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங், அப்ளைடு பிசிக்ஸ், பயோ டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், என்ஜினீயரிங் டிசைன், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஓசன், மெட்டலர்ஜிக்கல் அண்ட் மெட்டீரியல் என்ஜினீயரிங்  படிப்புகளை மேற்கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த கோடைகால  ஃபெல்லோஷிப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். ஐ.ஐ.டி. கல்வி நிலைய வளாகத்தில் படிக்கும் மாணவர்கள் இந்த ஃபெல்லோஷிப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பங்களை ஆன்லைன்  மூலமே விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 17.விவரங்களுக்கு : http://www.iitm.ac.in/

Monday, 13 February 2012

Google தேடியந்திரதினால் மனித மூளை பாதிக்கப்படுகிறது--அதிர்ச்சி தகவல்

கணினி உபயோகிப்பாளர்கள் பலர் Google-ஐ தான் உபயோகம் செய்கின்றனர். Google நம் அறிவை வளர்க்க உதவுகிறது என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் Google தேடியந்திரதினால் மனித மூளையில் ஞாபக சக்தியும், யோசிக்கும் திறனும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவல் Columbia University, Wisconsin-Madison University, Harvard University உள்ள உளவியல் பேராசிரியர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.இணையத்தில் ஏதோ ஒரு தகவலை Google-ல் பார்த்து படித்து தகவலை அறிந்து கொள்கிறார்கள். அதே தகவல் மீண்டும் தேவைப்பட்டாலும் திரும்பவும் Google சென்று தான் தேடுகிறார்களே தவிர மாறாக முன்பு பார்த்ததை ஞாபகம் வைத்து கொள்வதோ, அது என்ன தகவல் என யோசித்துப் பார்ப்பதோ இல்லை. Google-ல் கொடுத்தால் நொடிப்பொழுதில் தகவலை அறிந்து கொள்ளலாம் அதற்கு ஏன் யோசித்து நேரத்தை வீனடிக்கணும் என்ற மன நிலையினால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமில்லாமல் மக்கள் ஒரு தகவல் சரியாக தெரிந்திருப்பினும் அதை மற்றவர்களிடத்தில் தைரியமாக கூறாமல் எதற்கும் Google-ல் தேடி சரியா என பார்த்து கொள்ளலாம் என்று தான் பலபேரின் மனநிலை உள்ளதாம். இதனால் அவர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 
Google மட்டுமல்ல மனித வாழ்க்கையில் இயந்திரங்களின் பங்கு அதிகமாகி விட்டதால் மக்களின் மூளை சோம்பேறியாக மாறிவருகிறது. அதற்கு சிறிய உதாரணம் சிறிய கணக்குகளுக்கும் கணினியையும், கால்குலேட்டரையும் தேடும் இன்றைய தலைமுறை சற்றே பின்னோக்கி நம் முந்தைய தலைமுறையை பாருங்கள் மனதிற்குள்ளேயே கணக்கு போட்டு ஒரே வினாடியில் பதிலை சொல்வார்கள். இது போல நிறைய உதாரணங்கள் இருக்கு.

ஆகவே இனிமேல் நாம் மூளையை பயன்படுத்தி சிறிய கணக்குகளையும் மற்றும் எளிதான தகவல்களையும் நியாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் நாம் மூளை பதிக்கப்படாது.

Sunday, 12 February 2012

மாணவர்களை மயக்கும் மருத்துவப் படிப்பு



வெள்ளை அங்கியை அணிந்துகொண்டு, ஸ்டெதஸ்கோப்புடன் பவனிவரும் டாக்டர் என்ற அந்தஸ்து மீதான ஆவல், மாணவர் பருவத்திலிருந்தே பலருக்கும் உருவாக்கப்படுகிறது.

நாட்டில் பல லட்சக்கணக்கான மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர ஒவ்வொரு வருடமும் ஆசைப்பட்டாலும், 50 ஆயிரத்துக்கும் குறைவான மாணவர்களே, ஒவ்வொரு வருடமும் மருத்துவ கல்லூரிகளில் இடம் பெறுகிறார்கள்.
நாட்டின் முக்கிய மாநிலங்களிலுள்ள மருத்துவ இடங்களின் எண்ணிக்கை:மராட்டியம் - 4410, கர்நாடகம் - 4255, ஆந்திரம் - 3675, தமிழகம் - 2865, கேரளா - 1850, உத்திரப் பிரதேசம் - 1662, குஜராத் - 1655, மேற்கு வங்கம் - 1105, மத்தியப் பிரதேசம் - 970, ராஜஸ்தான் - 850, புதுச்சேரி - 775, பஞ்சாப் - 670, டெல்லி - 560, பீகார் - 510, ஒரிசா - 464, அசாம் - 391, ஹரியானா - 350, ஜம்மு-காஷ்மீர் - 350, உத்ரகாண்ட் - 300, சத்தீஷ்கர் - 250, திரிபுரா - 200, ஜார்க்கண்ட் - 190, இமாச்சல் பிரதேஷ் - 115.
மருத்துவக் கல்லூரிகளில் இடம்:
மாநில மருத்துவக் கல்லூரிகள் அளவில் சற்று பெரியவை என்பதால், வருடத்திற்கு 150-200 மாணவர்களை சேர்க்கின்றன. மேலும், சில தனியார் கல்லூரிகளைத் தவிர்த்து, AIIMS, ஜிப்மர் மற்றும் CMS-Vellore போன்ற பல மத்திய மற்றும் டிரஸ்ட் நிதியுதவி பெறும் கல்லூரிகள், 50-75 இடங்களையே வழங்குகின்றன. எனவே, இந்த புகழ்பெற்ற கல்லூரிகளில், மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான போட்டி மிக அதிகமாகவே உள்ளது.
மேலும், அதிகளவிலான வெளிநாட்டு மாணவர்களும், மருத்துவம் படிக்க இதுபோன்ற கல்லூரிகளுக்கு வருவதால், உள்நாட்டு மாணவர்களுக்கு இன்னும் நெருக்கடி அதிகரிக்கிறது. உதாரணமாக, கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 1953ம் ஆண்டு நிறுவப்பட்ட கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, தனது மாணவர் எண்ணிக்கையில் 3ல் 2 பங்கு மாணவர்களை வெளிநாடுகளிலிருந்து எடுத்துக் கொள்கிறது.
அதேபோன்று, தமிழகம், மராட்டியம், ஆந்திரம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலுள்ள சில கல்லூரிகளும் அதிக வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதோடு, அதிக கட்டணங்களுக்கு, தங்களுடைய இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளை வழங்குகின்றன.
மருத்துவ படிப்பு:
மொத்தம் 4.5 வருடங்களைக் கொண்ட மருத்துவப் படிப்பானது, 3 பகுதிகளாகவும், 9 செமஸ்டர்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செமஸ்டரும், 120 கற்பித்தல் நாட்களைக் கொண்டவை. இந்திய மருத்துவக் கவுன்சிலின்(MCI) விதிப்படி, மருத்துவ படிப்பு பயிற்சியானது, அடிப்படை அறிவியல் மற்றும் கிளீனிக் நிலைக்கு முந்தையப் பாடங்களை 1 வருடமும், துணை மருத்துவ அறிவியல் பாடங்களை 1.5 வருடங்களும், கிளீனிக்கல் பாடங்களை 2 வருடங்களும் கொண்டதாக இருக்கும்.
1 வருட கட்டாய சுழற்சி இன்டர்ன்ஷிப் -க்கு பிறகு பதிவை பெறலாம். பல மருத்துவக் கல்லூரிகளில், அடிப்படை அறிவியலுடன், கிளீனிக்கல் பாடங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மிக சிறியளவிலேயே மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மாணவர்களின், செயல்பாடு, தகவல்தொடர்பு அல்லது நடத்தை மாற்றங்கள் குறித்து மிக சிறிதளவே கவனம் செலுத்தப்படுகிறது.

இன்டர்ன்ஷிப்:
இறுதி MBBS தேர்வை முடித்தப்பிறகு, முழு பதிவு மற்றும் MBBS பட்டத்தைப் பெறுவதற்கு ஒரு மாணவர், 12 மாதங்களுக்கு கட்டாய ரொட்டேஷனல் இன்டர்ன்ஷிப் செல்ல வேண்டும். இதன்மூலம் ஒருவர் தனது பணியின் நடைமுறை தன்மையை கற்றுக்கொள்ள முடிகிறது.
இந்த 12 மாதங்கள் இன்டர்ன்ஷிப்பில் 6 மாதங்கள், ஒருவர் படிக்கும் கல்லூரி மருத்துவமனை அல்லது மாவட்ட மருத்துவமனையிலும், 3 மாதங்கள் சிறியளவிலான மாவட்ட/தாலுகா/சமூக சுகாதார மையங்களிலும், 3 மாதங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணிபுரிய வேண்டும்.

Saturday, 11 February 2012

பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?


 


உங்கள் முன் ஒரு பிரச்சனை வந்துள்ளது. முதலில் அது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

ஓடி ஒளிய வேண்டாம்! நெஞ்சை நிமிர்த்தி வீரமாக அதனை அணுகுங்கள்!
'அச்சமில்லை, அச்சமில்லை.. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' என்ற மகாகவியின் பாடலை நினைவு படுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் சிறிது கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஆனாலும், 'சரி நடந்தது நடந்து விட்டது. நடந்ததை மாற்ற முடியாது. அதனை நினைத்து அப்படி செய்திருக்கலாம், இப்படி நடந்திருக்கலாம் என குழம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. இப்போது நாம் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்று தான். என்னவென்றால் இந்த பிரச்சனையில் இந்த சமயத்திலும் நமக்கு சில சாதகமான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அவற்றை கண்டுபிடித்து அவற்றை உபயோகித்து இந்த பிரச்சனையை இருந்த இடம் தெரியாமல் வெற்றி கொள்ள முடியும்' என்ற உறுதி ஏற்க வேண்டும்.

பிரச்சனையில் ஜெயிப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் துணிவுடன் எதிர் கொண்டு ஜெயிப்பதில் தான் மனிதனின் வீரம் உள்ளது.
'இப்படி நடந்திருக்கலாம்..அப்படி பண்ணியிருக்கலாம்' என இறந்த காலத்தையே நினைத்து வருந்துவது கோழைகளின் செயல்!
நடந்தது நடந்து விட்டது. இப்போது நிகழ்காலத்தில் அதனை அலசி ஆராய்ந்து நாம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தான் பிரச்சனையை போக்கும். குறைந்த பட்சம் இப்போது என்னென்ன செய்யலாம் என்று முடிவு எடுக்க வேண்டும். நல்ல வேளை பிரச்சனையை தீர்க்க இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை நினைத்து கவலையை போக்கிக் கொள்ள வேண்டும்.

முடிவெடுக்காமல் நடந்ததையே நினைத்து கோழையாய் வருந்துவது நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தடுக்கும். பிரச்சனையை மேலும் அதிகப் படுத்தும்.
முக்கியமான விஷயமென்னவென்றால் தவறான முடிவுகள் மட்டும் தோல்விக்கு காரணமல்ல. முடிவெடுக்காத தன்மையும் தான்!
ஆனால் நாம் தைரியமாக எடுக்கும் முடிவுகள் கூட நமது தன்னம்பிக்கையை அதிகரித்து பிரச்சனையின் வீரியத்தை குறைப்பதற்கு உதவும்.
ஆனால் பயந்து கொண்டு எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் நாம் மனதின் ஆழத்தில் அந்த பிரச்சனையை பார்த்து பயந்து அப்படி ஆகி விடுவோமோ, இப்படி ஆகி விடுவோமோ என்று பயப்படுகிறோம் என்று அர்த்தம். அந்த ஆழ்மன பயமே நாம் விரும்பத்தகாத விளைவுகளை அழைத்து வரலாம்.

ஆக பிரச்சனை வந்து விட்டால் துணிந்து அதனை எதிர் கொள்ள வேண்டும்.
'இந்த பிரச்சனைக்கு நாம் விரும்பும் முடிவு என்ன? இந்த முடிவு நமக்கும், மற்றவர்களுக்கும் இப்போதும், வருங்காலத்திலும் என்னென்ன முடிவுகளை ஏற்படுத்தும்' என நன்கு ஆழமாக அலசி எண்ணி பார்க்க வேண்டும்.
முடிவுகளின் விளைவுகளை நமது அனுபவத்தை வைத்தும், நண்பர்களின் ஆலோசனையை கேட்டும் கணித்து முடிவு எடுக்க வேண்டும்.
சிறிய முடிவுகள் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தவை என்பதை உணர்ந்து நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
அதற்காக பயந்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது இன்னும் பிரச்சனையை கொடுமையாக்கும்.


மேலும் அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பது சரியான முடிவு எடுப்பதற்கு மட்டும் உதவாமல், நாளை நாம் எடுக்கும் முடிவு எந்த விளைவை ஏற்படுத்தினாலும் ' நாம் ஒன்றும் ஒற்றையா ரெட்டையா போட்டு முடிவெடுக்கவில்லை..நன்கு அலசி ஆராய்ந்து தான் எடுத்தோம் என்று மனம் சமாதானமாகும்.

அடுத்தது நமது முடிவை அடைய, செயல்படுத்த தற்போது என்னென்ன வழிகள் உள்ளன என்று ஆராய வேண்டும்.

கண்டிப்பாக பிரச்சனையை ஆராய்ந்தால் நமக்கு சாதகமான ஆயிரம் வழிகள் இருக்கும்! அவற்றை ஒரு தாளில் எழுத வேண்டும். இதற்கு நமது படைப்பு ஆற்றலை உபயோகப்படுத்தினால் வித விதமான யோசனைகள் வரும்.


அடுத்தது தைரியமாக அவற்றை ஒவ்வொன்றாக செயல் படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்தால் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போவதை கண் கூடாக பார்க்கலாம்.

மேலும் இந்த பிரச்சனையை அணுகும் செயல்பாடுகள் முழுவதிலும் நமது மனோபாவம் நேர்மறையாகவும், வெற்றியை எதிர் நோக்கி இருப்பதாகவும் இருக்க வேண்டும்.

ஒரு கப்பல் மாலுமியின் மனக் கண்ணில் சென்று சேர வேண்டிய இடம் குறிக்கோளாக இருப்பது போல் வெற்றி நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அது நமக்கு சரியான யோசனைகளையும், சரியான சூழ்நிலைலைகளையும் நம்முடன் இணைத்து விடும். வெற்றியை தேடித்தரும்.
நன்றி : தமிழ் தாயகத்திற்காக S. சவிதா

Friday, 10 February 2012

அஜினா மோட்டோ! அறிந்ததும் அறியாததும் ?


அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும்.

இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டா சேர்த்தால் தலைவலி, நெஞ்சு வலி, குமட்டல், கை கால் மரத்துப் போதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புளளது.

இது போன்ற பல்வேறு காரணங்களால் உணவுப் பொருட்களில் அஜினா மோட்டா சேர்ப்பது சுகாதாரக் கேட்டை உண்டாக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 51 வகையான உணவுப் பொருட்களில் அஜினாமோட்டா சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ருசிக்காக உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்.


Read more: http://dinaex.blogspot.com/2012/02/blog-post_10.html#ixzz1mYKprfMq

Thursday, 9 February 2012

கொசுவிரட்டி தயாரிப்பு(சிறு தொழில்கள்)

புதிய தொடர் ஆரம்பம்!!!

அன்பு நண்பர்களே!
பல நண்பர்கள் இன்று வெளி நாட்டில் தங்களின் எதிர் காலம் பற்றியக் கேள்விக் குறியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் தாய் நாட்டுக்குத் திரும்ப வந்தால்(என்றாவது ஒரு நாள் வந்து தானே ஆக வேண்டும்) என்ன தொழில் செய்யலாம் என ஆலோசனைகள் கேட்ட வன்ணம் உள்ளனர். அவர்களுக்காக சிறு தொழில்கள் சிலவற்றைப் பற்றி இத் தொடரில் விளக்கங்கள் தரலாம் என எண்ணி இத் தொடரினை ஆரம்பம் செய்கிறேன். உங்களுக்கு இது ஒரளவுக்கு உதவியாக இருக்கலாம் என நம்புகிறேன். அந்த வகையில் முதலில் கொசு விரட்டி(Liquid) தயாரிப்பதெப்படி என்பது பற்றி இங்கு தருகிறேன்.
இதற்காக இதை தயாரித்து விற்பனை செய்யும் Mr..ராம நாதன் என்பவர் கோவை,குனியமுத்தூரில் இருப்பதை அறிந்து அவரை நேரில் சென்று விளக்கம் கேட்கலாம் என்ற நோக்கத்தில் சில நாட்களுக்கு முன் அங்கு சென்று அவரை சந்தித்தேன்.
கோவையில், சுய தொழிலாக,குடும்பத்தோடு, நேர்மையான முறையில்,உழைப்பை செலுத்தி, ஒரு மூலிகை கொசு விரட்டியை தயாரித்து, தமிழகம் முழுதும் சந்தைபடுத்தி வருகிறார்,Mr..ராமநாதன்.
ராஜா நைட்ஸ் எனும் அடையாளப் பெயரில்,இவரது மூலிகை கொசு விரட்டி கோவையில் பிரபலமான மருத்துவர்கள்,பேராசிரியர்கள் என்று பலரையும் கவர்ந்துள்ளது. கோவை வேளாண்மை பல்கலை கழகம், போன்றவைகள் அளித்த பல சான்றுகள் இவரது உழைப்பிற்கு சான்று பகிர்கின்றன.
கடந்த 8 ஆண்டுகளாக தீவீர முயற்சியில்,இவர் மூலிகை ஆராய்ச்சி மூலம் சுயமாக கண்டுபிடித்தவை இவரது தயாரிப்புகள். இயற்கை நறுமண ரூம் பிரஸ்னர், நறுமணம் கலந்த கொசு விரட்டி, வெறும் கொசு விரட்டி என 3 வகைகள் பிரதான உற்பத்தியாக  தயார் செய்து சந்தை படுத்தி வருகிறார்.
சென்னை,பாண்டி,தஞ்சாவூர்,கோவை போன்ற இடங்களில் இவரது முயற்சிக்கு மிகுந்த வரவேற்புள்ளது.
செய்முறை விளக்கங்களை நேரில் தெரிந்து வரலாம் என்று அங்கு சென்றேன். ஆனால் அவரோ தற்போது தொழிலினை பாலக்காட்டுக்கு அருகிலுள்ள அவரது கிராமத்தில் செய்வதாகவும், தற்போது(நான் சென்ற வேளை), உற்பத்தியை நிறுத்தி , தேவைப் படும் போது மட்டும் செய்து வருவதாகவும்  கூறினார். அங்கு மூலிகை திரவத்தை தயார் செய்து கோவையில் அவரது வீட்டில்  வைத்து பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருகிறார். பொருளாதார சிக்கல்களினால் குறைந்த அளவில் செய்து வருகிறாராம். சரி, நீங்கள் ஏன் இதில் விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது? என வினவியதற்கு அதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. தொழில் ரகசியம் என நினைக்கிறேன். இது போக கடந்த 25 வருடங்களாக, கொசு வத்திச் சுருள், ஊது வத்தியில் கொசுவத்தி, நரை முடித் தைலம் போன்றவைகளையும் தயாரித்து விற்பனை செய்திருக்கிறார். பட்டம் பெற்றவர். மனிதரிடம் இதே போன்று பல அரிய கண்டுபிடிப்புகள் மண்டிக் கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக, Ultra sound மூலம் Washing m/c தயாரிக்கும் Idea வும் உள்ளது.எந்தவித சலவைத் தூள்களுமின்றி,வெறும் தண்ணீரைக் கொண்டு ultra sound எனும் மின்னியல் மூலம் துணிகளை துவைக்க முடியும் என்கிறார். சில தொழில் நுட்ப காரணங்களாலும், பொருளாதார சிக்கல்களாலும் இன்னும் செயல் வடிவில் கொண்டு வர முடியாமல் இருக்கிறார். கொசு விரட்டி தொழில் செய்யலாம் என நினைப்பவர்கள் மேலதிக விவரங்களுக்கு அவரை அணுகவும். அவரது செல் நம்பர்:0091-9382307952.
Mr.Ramanathan.
7/1 P&T Layout
Palakat main Road,
Kuniamuthur,Coimbatore-8

M-0091-9382307952




நன்றி-Engr.Sulthan

கொசு விரட்டி தயாரிப்பு



தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும், இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொசுக்களை விரட்ட, நாங்கள் தயாரிக்கும் மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்’ என்கிறார் கோவை குனியமுத்தூரில் பெஸ்ட் நேச்சுரல் அண்ட் கம்பெனி நடத்திவரும் ஜெயந்தி. அவர் கூறியதாவது: விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண் ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதன் வாசனை கொசு, பூச்சிகளை அண்ட விடாது. சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை புகை மூட்டம் போன்றவையும் கொசுகளை விரட்டும். இதை அடிப்படையாக வைத்து, கடந்த 5 ஆண்டாக கொசு விரட்டி மூலிகை லிக்விட் தயாரித்து விற்கிறோம்.
இது பாரம்பரியமும், நவீனமும் கலந்தது. மின்சார விளக்கில் பொருத்தி பயன்படுத்தலாம். ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளை கொசுவிரட்டி பாதிக்கக் கூடாது. இயற்கை முறையில் தயாரிப்பதால், இவை நோயாளிகளை பாதிப்பதில்லை.  வரும் காலத்தில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் பயன்பாடு அதிகரிக்கும். கோவை வேளாண் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கண்காட்சிகளில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் இடம்பெற்றுள்ளது. பலர் எங்கள் தயாரிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.  இவ்வாறு ஜெயந்தி கூறினார்.

விற்பனை வாய்ப்பு
மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், சர்வோதய சங்கம், காதி கிராப்ட் விற்பனையகங்கள், நாட்டு மருந்து கடைகள், மருந்து கடைகள் ஆகியவற்றில் மூலிகை கொசுவிரட்டி லிக்யுட் விற்கப்படுகிறது. அங்கு நேரடியாக சப்ளை செய்யலாம். தினசரி கடைக்கு 5 பாட்டில் வீதம் 20 கடைகளுக்கு ஒரு நாள் உற்பத்தியான 4 லிட்டர் லிக்யுட்டை (100 பாட்டில்) எளிதில் விற்கலாம். இவ்வாறு சுழற்சி முறையில் வெவ்வேறு கடைகளில் சப்ளை செய்யலாம். தெரிந்தவர்களுக்கும், அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் நேரடியாகவும் விற்கலாம். தரம் மிகவும் முக்கியம். நல்ல தரத்தோடு விலையும் ஏற்றதாக இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். விற்பனையும் அதிகரிக்கும்.
கட்டமைப்பு : மூலிகை லிக்யுட் காய்ச்ச வீட்டு சமையலறை, மூலிகைகளை காய வைக்க திறந்தவெளி. தளவாட சாமான்கள்: வர்த்தக கேஸ் சிலிண்டர் அடுப்பு, 15 லிட்டர் குக்கர், 30 அடி நீள பைப், அகன்ற பாத்திரம், 10 லிட்டர் பாத்திரம், 40 மி.லி காலி பெட் கன்டெய்னர்கள், லேபிள், பேப்பர் பேக்கிங் பாக்ஸ். இவற்றுக்கு செலவு ரூ.15 ஆயிரம்.

தேவைப்படும் பொருட்கள்: வேப்பிலை, துளசி, நொச்சி இலை, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை. நாட்டு மருந்து கடைகளில் மற்ற மூலிகை பொருட்கள் கிடைக்கின்றன. சோற்று கற்றாழையை வீட்டில் வளர்க்கலாம். பெட் கன்டெய்னர் பாட்டில்கள் கோவை, மும்பை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கின்றன.

உற்பத்தி செலவு(மாதத்துக்கு): வேப்பிலை 500 கிராம் ரூ.10, துளசி 500 கிராம் ரூ.25, நொச்சி இலை 700 கிராம் ரூ.70, மஞ்சள் 100 கிராம் ரூ.10, சாம்பிராணி 150 கிராம் ரூ.40, குங்குலியம் 150 கிராம் ரூ.30, தும்பை 50 கிராம் ரூ.10, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை 1 கிலோ ரூ.20, 4 லிட்டர் மூலிகை கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் தயாரிக்க தேவையான மூலிகை பொருட்கள் செலவு ரூ.250, பேக்கிங் மெட்டீரியல் செலவு ரூ.50, உழைப்பு கூலி 2 நபருக்கு ரூ.300 வீதம் ரூ.600, இதர செலவுகள் ரூ.100 என தினசரி 1000 ரூபாய் செலவாகும். ஒரு மாதத்தில் 25 நாள் உற்பத்திக்கு ரூ.25 ஆயிரம் தேவை.
வருவாய்: உற்பத்தி செய்யப்படும் லிக்யுட் 40 மி.லி அளவுகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. ஒரு பாட்டில் ரூ.25க்கு கடைகளுக்கு விற்கப்படுகிறது. அவர்கள் ரூ.40 வரை விலை வைத்து விற்கிறார்கள். இவ்வாறு தினசரி உற்பத்தியாகும் 4 லிட்டர் லிக்யுட்டை 100 பாட்டில்களில் அடைத்து விற்பதன் மூலம் ரூ.2,500 கிடைக்கும். செலவு போக தினசரி லாபமாக ரூ.1,500 கிடைக்கும். இதுவே மாதத்தில் 25 நாட்களில் லாபம் ரூ.37,500.

தயாரிப்பது எப்படி?
வேப்பிலை, துளசி தலா 500 கிராம், நொச்சி 700 கிராம், மஞ்சள் 100 கிராம், சாம்பிராணி, குங்குலியம் தலா 150 கிராம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை தலா 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை ஒரு கிலோ எடுத்து கசப்பு நீங்கும்வரை கழுவ வேண்டும். மூலிகை பொடிகளையும், சோற்று கற்றாழை ஜெல்லையும் 10 லிட்டர் தண்ணீரில் போட்டு, குறைந்தது 6 நாள் முதல் 10 நாள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றை குக்கரில் போட்டு மூடி மிதமான தீயில் வைக்க வேண்டும் (வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி வரை).  குக்கரில் ஆவியை வெளியேற்ற விசில் போடும் இடத்தில், விசிலுக்கு பதிலாக 30 அடி நீள பைப்பை செருக வேண்டும். குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி, பைப் வழியாக வரும். அந்த பைப்பை தண்ணீர் நிரப்பப்பட்ட அகன்ற பாத்திரத்தில் மூழ்கியவாறு வைக்க வேண்டும்.
பைப் வழியாக வரும் ஆவி குளிர்ந்து தண்ணீரும், எண்ணெயும் கலந்தவாறு சொட்டு சொட்டாக வெளியேறும். பாத்திரத்தின் கீழ் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரும், மேல் பகுதியில் 3 லிட்டர் எண்ணெயும் மிதக்கும். மேலே மிதக்கும் எண்ணெய் தான் கொசு விரட்டி மூலிகை லிக்யுட். இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும். அதற்குள் குக்கரில் உள்ள தண்ணீர் வற்றி விடும். பிறகு தீயை அணைத்து விட வேண்டும். தண்ணீரும், எண்ணெயும் கலந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெயை மேலோட்டமாக வடித்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஏர் பில்லர் மூலம் உறிஞ்சி எடுக்கலாம்.

எண்ணெய் வடித்தது போக பாத்திரத்தில் மிஞ்சிய 4 லிட்டர் தண்ணீரை மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும். ஏற்கனவே குக்கரில் மூலிகை பொருட்கள் மசாலா போல் தங்கியிருக்கும். இதில் தண்ணீர் கலந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் வேக வைத்து, ஆவி வெளியேறி, அதன் மூலம் மேலும் ஒரு லிட்டர் லிக்யுட் கிடைக்கும். இவ்வாறு ஒரு நாளில் ஒரு முறை 4 லிட்டர் கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் கிடைக்கும். சேகரித்த தைலத்தை பெட் கன்டெய்னர் பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்தால் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் விற்பனைக்கு தயாராகி விடும். தினசரி 4 லிட்டர் தயாரிக்க, 10 நாளுக்கு முன்பே மூலிகை பொருட்களை தண்ணீரில் ஊறப் போட வேண்டும்.

நன்றி:தமிழ்முரசு

 கொசுறு செய்தி:
இது வியாபாரத்திற்காக அல்ல...கொசுவோடு போராடும் நமக்காக...

கற்பூரம் இயற்கையான கொசு விரட்டி.
படத்தில் காட்டியுள்ளபடி ரேபெல்லேண்டில் கற்பூரத்தை வைத்து பிளக் பாயிண்ட்டில் மாட்ட வேண்டும். பின்பு switch on செய்தால்
கொசுக்கள் ஓடி விடும்.
கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களில் கற்பூரத்தை போட்டு வைத்தால் கொசுக்கள் அங்கு தங்காது.

முயற்சி செய்து பாருங்கள்.நம்புவோம்! நம்பிக்கை தான் வாழ்க்கை!!
அப்படியும் கொசு ஓடாவிட்டால் நாம் அதனிடம் தோற்று விட்டோம் என்று தோல்வியை ஒப்புக் கொள்வோம்.
திரும்பி வரும் போது நானும் 12 கொசு விரட்டி Liquid பாட்டில்கள் (மொத்த விலைக்கு வாங்கினால்பாட்டில் ரூ.25 என தர முடியுமாம்.. கடையில் இதன் விலை ரூ.40-45) வாங்கிக் கொண்டு சென்னைக்கு நடையை(sorry ரயிலில்) கட்டினேன்.
கீழே அவர் மனைவிபத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியை இணைத்திருக்கிறேன். இனி உங்கள் பாடு அவர் பாடு. ஆரம்பித்து வைத்து விட்டேன். அவ்வளவே!
தொடர்ந்து இன்னும் மற்ற சிறு தொழில்கள் பற்றி படிப்படியாகத் தருகிறேன். உங்கள் நண்பர்களுக்கும் முடிந்தளவு Forward செய்யுங்கள்.

ஹோட்டல் மேனேஜ்மெண்ட்....

மத்திய சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க விரும்பும் மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வை எழுதவேண்டும்.


மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் கல்வி நிலையம் சென்னை தரமணியில் செயல்படுகிறது. பெங்களூரு, போபால், புவனேஸ்வரம், பூசா (புதுதில்லி), சண்டீகர், காந்திநகர், கோவா, குருதாஸ்பூர், குவாஹாத்தி, குவாலியர், ஹாஜிப்பூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் இந்தக் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பி.எஸ்சி. ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பட்டப் படிப்பைப் படிக்கலாம். பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்த மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள், ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். தற்போது பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு மாணவர்களுக்கும், ஓபிசி பிரிவு மாணவர்களுக்கும் வயது வரம்பு 22. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு வயது வரம்பு 25. தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பிசிக்கல் பிட்னஸ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும்.
நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி அமைப்பு இந்த நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்த நுழைவுத் தேர்வு ஏப்ரல் 28ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை மூன்று மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியூமரிக்கல் எபிலிட்டி அண்ட் சயின்டிபிக் ஆப்டிட்யூட், ரீசனிங் அண்ட் லாஜிக்கல் டிடக்ஷன், ஜெனரல் நாலெட்ஜ் அண்ட் கரண்ட் அபையர்ஸ், ஆங்கில மொழி, ஆப்டிட்யூட் ஃபார் சர்வீஸ் செக்டர் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 200 கேள்விகள் கேட்க்கப்படும். இத்தேர்வில் ஆங்கில மொழிப் பாடத்தில் மட்டும் 60 கேள்விகளும் ஆப்டிட்யூட் ஃபார் சர்வீஸ் செக்டர் பிரிவின் கீழ் 50 கேள்விகளும் கேட்கப்படும். மற்ற பிரிவுகளில் தலா 30 கேள்விகள் வீதம் கேட்கப்படும். வினாத்தாள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இருக்கும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. இந்தத் தேர்வின் மூலம் தகுதி படைத்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிளஸ் டூ தேர்வில் கலை, அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் மாநில அளவில் முதல் ரேங்க் பெற்ற மாணவர்கள் இந்தப் படிப்பில் நேரடியாகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இங்கு சேரும் சிறந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. நுழைவுத் தேர்வு ரேங்க் பட்டியலின் அடிப்படையில் கவுன்சலிங் மூலம் மாணவர்கள் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் கல்வி நிலையங்களில் சேர்க்கப்படுகிறார்கள்.
பி.எஸ்சி. ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ஃபுட் புரடக்ஷன், ஃபுட் அண்ட் பெவரேஜ் சர்வீஸ், ஃபிரண்ட் ஆபீஸ் ஆபரேஷன், ஹவுஸ் கீப்பிங், ஹோட்டல் அக்கவுண்டிங், ஃபுட் சேப்டி அண்ட் குவாலிட்டி, ஹூயூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், பெசிலிட்டி பிளானிங், ஃபைனான்சியல் மேனேஜ்மெண்ட், ஸ்டேரட்டஜிக் மேனேஜ்மெண்ட், டூரிஸம் மார்க்கெட்டிங், டூரிஸம் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் கற்றுத் தரப்படும். வகுப்பறைப் பாடங்களுக்குக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், செயல்முறை பயிற்சிக்கும் அளிக்கப்படும். இந்த மூன்று ஆண்டு செமஸ்ட்டர் முறையில் நடைபெறும் இந்தப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும். இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் கல்வி நிலையங்கள் தவிர, குறிப்பிட்ட சில மாநில அரசுகள் நடத்தும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனங்களும் சில தனியார் நிறுவனங்களும் இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்கின்றன.

ஹோட்டல் துறை வளர்ந்து வரும் முக்கியத்துறை. சுற்றுலா துறை வளர்ந்து வருவதால் புதிய நட்சத்திர ஹோட்டல்களும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள நடுத்தர ஹோட்டல்களும் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. மேனேஜ்மெண்ட் ட்ரெயினி, கஸ்டமர் ரிலேஷன்ஷிப் எக்ஸ்கியூட்டிவ், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், கிச்சன் மேனேஜ்மெண்ட், ஹவுஸ் கீப்பிங் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் ஆபீஸர் போன்ற பல்வேறு பணிகளில் சேரலாம். நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், ஹெல்த்கேர் நிறுவனங்கள், ரிசாட்டுகள், காபி பார்கள், சுற்றுலா கப்பல்கள், விமானங்கள், சுற்றுலா துறை விடுதிகள் போன்ற பல்வேறு துறைகளிலும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. இங்கு படிக்கும் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நல்ல வேலைவாய்ப்புக் கிடைத்து விடுகிறது. சென்னை மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் படித்து முடித்த அனைத்து மாணவர்களுக்கும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்துள்ளது. எனவே, அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கல்வி நிறுவனங்களில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளில் சேர்ந்து படிப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களும் தகவல் குறிப்புகளும் வருகிற ஏப்ரல் 9ம் தேதி வரை வழங்கப்படும். குறிப்பிட்ட சில வங்கிகளில் பணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.900. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.450. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதுகுறித்த விவரங்களை இணைய தளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.


விவரங்களுக்கு: www.nchmct.org