Wednesday, 2 January 2013

DTH "விஸ்வரூபம்-300 கோடி வசூல்!! ஒரு சிறப்பு பார்வை....


நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம்  ஜன. 10-ல் டி.டி.ஹெச். மூலம் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பிவிட்டு ஜன. 11-ஆம் தேதி திரையரங்குகளின் மூலம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம். ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம், இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி, தமிழ் சினிமாவை ஏன் உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளை கடக்க வைக்கும் முயற்சி என்று ‌என்னை பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி.
 டி.டி.எச்-ற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஆனால் ஒரு சிலர் மட்டும் நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது. 

இந்த டி.டி.எச். என்பது என்ன எல்லோர் வீட்டிலும் இருக்கும் டி.வி. பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள், அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.
 சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த டி.டி.எச்., இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது.  இதைவிடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததை சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சாட்சி.
என்படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்க பலர் பெரிய விலைகளை சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி.
 முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்து சொல்லி கறுப்பு பண விளையாட்டை குறைத்து கொண்டால் 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும். 

ஒரேநாளில் விஸ்வரூபத்தின் இசை, இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு விஸ்வரூபம் வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?
டி.டி.எச்-ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்யேகக் காட்சி முடியும் போது படம் டி.டி.எச். கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு.  காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய் கிடைக்காது. விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத்தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது டி.வி-ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல. 
டி.டி.எச். வசதி தமிழக ஜனத்தொகையில் 3 சதவீதம் வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் ஒன்றரை சதவீதம் வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம். 7.5 கோடியில் ஒரு சதவீதம் படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50 சதவீதத்தை கள்ள டி.வி.டி., வியாபாரி கொண்டு போவ‌தை தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள டி.வி.டி-க் காரர்களுடன் கூட்டு சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டுவிட்டு நேர்மையான வியாபாரத்தை தடுப்பது கண்டிக்கத்தக்கது. 

திருடனுக்கு 50 சதவீதத்தை கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம். இந்த வாதத்தால் தியேட்டரில் வியாபாரம் குறையாது. வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்கு போவதைக் குறைத்து கொண்டதாய் தெரியவில்லை.
ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று நினைத்து பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும், நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன..? பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ளவே ஒரு சின்ன விளக்கம். 

முடிவாக இந்தப்படம் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சில முஸ்லிம் அமைப்புகள் சந்தேகப்படுகின்றனர். அவர்கள் இந்தப்படத்தை பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் வருந்தினால் மட்டும் போதாது,
 சகோதரனை சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லீம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அவ்வளவு பிரியா‌ணியையும் நான் ஒரு ஆளாக சாப்பிட முடியாது.
ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு கமல் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

திருட்டு விசிடி படம் வெளி வந்த உடனே சில சமயங்களில் படம் வெளிவரும் முன்னரே [ஜக்குபாய் ]வந்து விடுகிறது.30 ரூபாய் சிடியை போட்டு எத்தனை பேர்கள் பார்க்கிறார்கள்.அதில் வரும் கூ ட்டத்தைவிடவா டிடி ஹெச் இல் 1000 ரூபாயில் போடப்படும் படத்துக்கு திரையரங்குக்கு வரும்  தடம் குறைந்து விடும்?


புதிய படங்கள் அனைத்தும் இரண்டாம் நாளிலேயே உள்ளூர் சானல்களில் அரசு தொலைக் காட்சியில் மாற்றி போடுகிறார்களே அதில் கூ ட்டம் குறையவில்லையா? எப்படித்தான் தொலை காட்சிகலில் படம் பார்த்தாலும் திரையரங்கு அனுபவத்திற்கு வருபவர்கள் வரத்தான் செய்வார்கள்.
இன்று கமலை கையை கட்டி வைத்து விட்டாலும் நாளை இந்த தொழில் நுட்பத்தை யாராவது கொண்டு வரத்தான்   செய்வார்கள்.இப்போது மன்சூர் அலிகான் தயாராக உள்ளார்.
திருட்டு விசிடி அதிகமாகி விடும் என்று ஒரு ஆய்வாளர் கூ றியுள்ளார். இப்போது ஒரு பக்கமும் சிடி கிடைக்காது என்று கண்ணாடி ஏசி அறையில் இருந்து கொண்டு ஆய்வு செய்துள்ளார்.
தெருக்கு -தெரு திருட்டு விசிடிகள் படம் வந்த நாள் அன்றே கிடைப்பதும்.அதுவும் வெறும் 30-40 க்கு .
அந்த சிடியை வைத்தே உள்ளூர் தொலைகாட்சி நடத்துபவர்கள் தினமும் ஒரு சானலில் படம் காட்டுவதையும் அவர் அறிய மாட்டார் போலிருக்கிறது.







ராஜ்கமல் நிறுவனத்தின் டி.டி.எச்., முயற்சியையும் புரிதல் இல்லாததால் புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம் என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன.









உண்மையில் இன்றுவரை கமலுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றவர்கள் இப்போது உண்மை நிலை அறிந்து மனதில் பிரமிப்பு அடைந்திருப்பார்கள்.

இத்துடன் உலக நாயகன் கமல்ஹாசன் ஓய்ந்தான் என்று மனதில்  எண்ணியவர்களூக்கு இது ஒரு சோகம் தரும் செய்திதான்.

கீழே உள்ள தகவல் உலகநாயகனின் "விஸ்பரூபத்தின்" ரிலீஸ் ஆகாத நிலையிலான வசூல் பற்றி ஃபேஸ்புக்கில் நான் படித்த செய்தியொன்று.

300 கோடி ரூபாய்கள்3 மணி நேரத்தில் - என்னா காமெடி என்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கு இதன் சூத்திரம். ஆம் இது தான் உலக சினிமாக்களின் முதன் ஃபார்முலா - None other by - நம்ம வசூல்ராஜாவின் சாதனை. 

நேற்று ஏர்டெல் மட்டும் அறிவித்திருந்தது 30 லட்சம் பேர் முன் பதிவு என்று முப்பது லட்சம் X 1000 ரூபாயை பெருக்கினால் 300 கோடி ரூபாய்கள் இது ஒரு டி டி ஹெச் தான் இது மாதிரி இன்னும் ஜாம்பவான்களின் புக்கிங்கை சேர்த்து கூட்டி கழிச்சி பாருங்கள்300 கோடி நான் குறிபிட்டது கொசுறு தான். இந்தியாவின் 10% சதவிகத மக்கள் டி டி ஹெச்சுக்கு மாறியாச்சுனு இந்த புள்ளி விவரம் நன்கு வெந்த குழாய் புட்டு போல புட்டு புட்டு வச்சிருக்கேன். இது தான் உண்மை.

1000 
ருபாயான்னு கேக்குறவங்களுக்கு - எந்த புது படம் வந்தாலும் தியேட்டர் காரர்கள் செய்யும் முதல் வேலை " 300 காம்போ பேக்கஜ் தான் நாளைக்கு" அதாவது 120 டிக்கட் மிச்சம் 180க்கு காஞ்சு போன பாப்கானும்ம் கருப்பு கலர் பாண டின் தான் காம்போ பாக்கேஜ். இதில் 120 மட்டும் தான் வினியோகஸ்தர் மட்டும் த்யாரிப்பாளர்களின் கணக்கு. மூச்சுன்டை ஒரு முன்னுரு ரூவா. பார்க்கிங் ஒரு 120 ரூபாய். மூனு லிட்டர் பெட்ரோல் 210. மூனு பேர் படம் பார்த்தா கூட 1500 ரூபாய் பனால். இதை விட குடும்ப மொத்தமும் பார்த்தான் மொத்தம 1000 ரூபாய் செய்கூலி இல்லை சேதாரமும் இல்லை - வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசனுக்கு கவுரவம் செய்யும் உண்மையான ப்ரீமியர் ஷோ. தனிக்காட்டு ராஜாக்கள் ஒன்றாக சேர்ந்தால் நல்ல ஆர் ஓ ஐ(ROI) . இல்லைனா மறு நாள் தியேட்டர் காம்போ பாக்குடன் தான் பாக்கியம்.

நேற்று வரை கமலுக்கு காசு தேறாதுனு சொன்னவங்க 30 லட்சம் புக்கிங்னு அஃபிஷியல் தகவல் வந்த உடன் என் மீசையில் மண் ஒட்டலை ஆனாலும் ஆவான்னாலும்னு முகாரி ராகம் பாட ஆரம்பிச்சுட்டாங்க. என்னை பொறுத்த வரை 50லட்சன் பேர் பார்த்தா கூட 500 கோடி ரூபாய் மணி நேரத்தில். 2000 பிரின்ட் பந்தா இல்லைபர பர சொறி சொறி வெற்றினு பில்டப் இல்லைபீராபிஷேகம் இல்லை,பீத்தல் இன்டர்வியு உங்கள் அபிமான தொல்லைக்காட்சியில் இல்லை ஆனா அத்தனை வீடுகளிலும் விஸ்வரூபம் ....... கரென்ட் மேட்டர்(EB) தான் ஒன்னும் சொல்ல முடியாத விஷயம்.......
..

தமிழகத்தில் திரையரங்குகளை நம்பி சுமார் 30 லட்சம் குடும்பங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 3,000 திரையரங்குகள் இருந்த இடத்தில் இப்போது வெறும் 1,500 திரையரங்குகள்தான்.

கமலின் இந்த விஸ்வரூபம் ஹாலிவுட் கம்பெனி வரை பரவும் வருடம் 2013.

திரையரங்கு காரர்களுக்கும் கைபிடித்தம் வராத வகையில் அனைத்து திரையரங்குகளிலும் ராஜ் கமல் நிறுவனமே விகிதாச்சார வகையில் படத்தை வெளியிடுகிறது.நட்ட வந்தாலும் அது ராஜ் கமலைத்தான் சீரும்.திரையரங்கைப் பாதிக்காது. பின்னரும் திரையரங்குக்காரர்கள் ஏன் பயத்தில் இருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.?

கமல்ஹாசனுக்கு சிக்கல்கள் வரும்போது அதை மகிழ்வுடன் முதல் பக்கத்தில் வெளியிட்டு அரிப்பை தீர்த்துக்கொள்ளும் தமிழ் ஊடகங்கள்  இது போன்ற கமலின் சாதனை செய்திகளை மட்டும் வெளியிடாமல்  கண்ணை மூடிக்கொண்டிருப்பது வழக்கம் என்றாலும் இதுவரை வெளியிட்ட செய்திகளின் தொடர்ச்சியாக வெளியிடலாமே.ஏன் இந்த செய்திகளை வெளியிடவில்லை.இதுதான் தமிழகப் பத்திரிக்கை தர்மம்..

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் என்ற நட்சத்திர ஓட்டலில் படத்தின் வெளியீடு குறித்து முறைப்படி அறிவிக்கிறார் கமல்


இந்த நிகழ்ச்சியில் திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திசேகர், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பெப்சி தலைவர் அமீர், இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி திரையரங்க உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள்திருப்பூர் சுப்பிரமணியம் போன்றோர்  கலந்து கொண்டு கமலுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கிறார்கள். 

தொகுப்பு : மு.அஜ்மல்  கான்.

Tuesday, 1 January 2013

10 X 10 is the New Year Resolutions for 2013...

“Everything that is created in the universe is here already. We are not really creators as much as we are re-combiners of everything.” “All of us have the capacity to attract to ourselves what seems to be missing in our lives.” “If you think about shortages, you’re going to attract more shortage! If you think about what’s missing, you’re going to attract more of what’s missing in your life.” 


Wayne Dyer Let me start with an example of what Wayne Dyer is speaking of in his last quote above, as this is a very important concept to grasp. A few months ago I woke up feeling shear dread about going to the office. I felt I could not go in and face the day. I said to myself “If I were sick with a cold or flu I wouldn’t have to go to work.”

What do you know! Five minutes later I was displaying symptoms of the flu. I was coughing, sneezing and a headache and nausea had set in. Going to work was out of the question. This is how powerful intention setting can be. Even though it had a negative outcome it still gave me the result I wanted at that time. We each have the power to manifest into our lives the things we want and need. The only puzzle piece that is missing, in most cases, is the strength of the belief that we can.
 Like in my story above I really believed that I would be better off sick than going to work healthy. By now we have all heard the phrase “It is not about seeing and then believing, it is about believing and then seeing.” The ability to manifest is innate in our being. We have the connection to source. Like a golfer we just need to hone our skill through practice. We always receive some result to any intention we set. However, in many cases the person awaiting the result can miss the actual realization of their desire altogether. They just do not see the manifestation of the intention because they may be looking in the wrong place or just not seeing at all because they are expecting something different.


For example, someone has set the intention to have a new “perfect” love interest come into their life. They set all the parameters of the person and no one shows up. Yet the person can be someone they are already in some sort of relationship with at the present time. Someone who was not available prior or they didn’t see the individual for who they truly are and they miss the opportunity altogether.


One example I like to use that really explains this well is when I was in the market for a new, previously owned, vehicle. I shopped around on car lots. I browsed the regular spots online. I even read through the car sales magazines. Finally after many weeks of searching I finally found the vehicle I was looking for. It was just missing a couple of features that I wanted. So I purchased the car.


The second person I showed my new car to let me know very quickly that a friend at the office just sold the exact same vehicle except it had all the features I had been looking for and at a better price. What is worse is she had actually told me about it two weeks prior. I just had not been paying attention. So I have given you examples of both positive manifestation and negative as well. The question you are probably asking at this point is “How is it done?” “What is system that I find works?”


It is very simple:

1. Choose something for yourself that would be for your greater good . Remember that what you intend to manifest will come to fruition. As the old adage goes “Be careful what you ask for. You may just receive it.”


2. Be very clear about what you want to manifest. Write it down. Make it reasonable though. The more unbelievable the description the harder it will be for you yourself to truly belief it. Example: I am 5 foot 3 inches tall and my intention is that I am 5 foot 10 inches tall. Probably not going to happen!


3. State the intention in a positive way. No no’s or not’s. Negatives are not recognized by the Universe. For instance “I don’t want my husband to leave his socks on the living room floor” could rather read “My husband picks up his clothes from the living room floor and puts them away.”

4. State it in the present , as if it has already occurred or you have received it as in the example above.

5. Set it in emotions . Feel that you have already received fulfillment. Be happy about. Celebrate !

6. Send it out to the Universe with thanks and appreciation .


7. Be thankful !!! Be grateful !!!


8. Let it go so that the universe can bring it back to you fully formed . If you hang on, especially with expectations of how it must come to you, you will be placing limits on how the Universe can deliver it.

9. Share your intention with other positive individuals that will support you with their thought. You can even start an intention circle that has like minded people get together on a regular basis to share your intentions and most importantly verbally support each other.

10. Every morning re-visit your intentions and gratitudes . This is important. Keep your intentions somewhere you can see them.


You can even make a vision board that pictorially represents your intentions and keep it in a prominent place in your home. As mentioned above revisiting your intentions does not mean hanging on to them. Let them go and manifest themselves. If you try to keep control of the manifestation process guess what, you will be in control and where has that gotten you so far. I have found that all the best manifestations that have occurred in my life were when I followed the above process and then completely letting go of any control whatsoever.


Amazing things happened.  I know, without a shadow of a doubt that setting intentions works and it can for everyone. If you truly believe and are willing to see it when it arrives then you too can have your dreams come true.


 I will come to the Point..


When it comes to New Year resolution, every one of us is unsure whether he or she can keep it up for too long or not. Still people make New Year resolutions and try to make them succeed. While making a New Year resolution, we often forget about our capabilities and this is one of the major reasons, why we fail again and again. It is advised to make the resolutions for New Year in a practical way, with which you can stick.

Given below are the top 10 New Year Resolutions, Which people commonly make:
1.   Spend more and more time with family
2.   Control obesity
3.   Quitting smoking and drinking
4.   Motivate more on your well being
5.   Get rid of all debts
6.   Help others in need
7.   Will be merciful
8.   Will get more organized
9.   Will obey the elders
10.       Will do homework in time

I Wish in 2013
God gives You…
12 Month of Happiness,
52 Weeks of Fun,
365 Days Success,
8760 Hours Good Health,
52600 Minutes Good Luck,
3153600 Seconds of Joy and that’s all! Years come and go, but this year I specially wish for you a double dose of health n happiness topped with loads of good fortune. Have a gr8 year ahead! Happy New Year.

By.M.Ajmal Khan.




2012 தமிழ் திரையுலகம் - ஓர் கண்ணோட்ட பார்வை...!


2012 - Tamil cinema - Special Review
தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு, இயக்குனர் சங்கத்தில் மோதல், பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்னை என எண்ணற்ற சிக்கல்களில் சிக்கி தவித்தாலும் டிசம்பர் 31ம் தேதியுடன் கடந்து போகும் 2012-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சற்று சாதகமான ஆண்டாகவே திகழ்ந்தது என்று சொல்லி ஆக வேண்டும். இல்லையென்றால் சுமார் 145 நேரடி தமிழ்படங்கள், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இருந்து வந்த டப்பிங் படங்கள் 65 இவைத்தவிர நடிகர் திலகம் சிவாஜியின் கர்ணன், ரஜினியின் சிவாஜி 3டி உள்ளிட்ட ரீ-மேக் கம் ரீ-ரிலீஸ் படங்கள் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் குடியிருந்த கோயில், உலகம் சுற்றும் வாலிபன், மாட்டுக்காரவேலன் உள்ளிட்ட ரீ-ரிலீஸ் படங்கள் என சுமார் 200 முதல் 225 படங்கள் நேரடி ரிலீஸ், டப்பிங் ரிலீஸ், ரீ-மேக் ரிலீஸ், ரீ-ரிலீஸ் என தமிழ் சினிமா ரசிகர்களை 2012ம் ஆண்டில் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளன என்றால் மிகையல்ல!

2012-ல் வெளிவந்த நேரடி படங்கள் - டப்பிங் படங்களின் பட்டியல்கள் வருமாறு:

* நேரடித் தமிழ் படங்கள்


விநாயகா, மதுவும் மைதிலியும், நண்பன், வேட்டை, கொள்ளைக்காரன், மேதை, அன்புள்ள துரோகி, தேனி மாவட்டம், சேட்டை தனம், மெரீனா, செங்காத்து பூமியிலே, வாச்சாந்தி, ஒரு நடிகையின் வாக்குமூலம், தோனி, சூழ்நிலை, விளையாடவா, உடும்பன், முப்பொழுதும் உன் கற்பனையில், அம்புலி, காதல் பாதை, விருதுநகர் சந்திப்பு, ஒரு மழை நான்கு சாரல், காட்டுப்புலி, சங்கர் ஊர் ராஜபாளையம், கொண்டான் கொடுத்தான், அரவான், நாங்க, சேவற்கொடி, மாசி, கழுகு, காதலில் சொதப்புவது எப்படி, மகாவம்சம், விண்மீன்கள், காதல் பிசாசே, நந்தா நந்திதா, மீராவுடன் கிருஷ்ணா, முதல்வர் மகாத்மா, காதலிச்சிப்பார், சூரிய நகரம், 3, ஒத்தவீடு, ஒத்தகுதிரை, மழைக்காலம், அஸ்தமனம், நண்டு பாஸ்கி, வருடங்கள்-20, பச்சை என்கிற காத்து, மை, அடுத்தது, ஒரு கல் ஒரு கண்ணாடி, ஊலலலா, அதிநாராயணா, மாட்டுத்தாவணி, லீலை, பரமகுரு, வழக்கு எண் 18/9, காந்தம், கலகலப்பு, ராட்டினம், கண்டதும் காணாததும், இஷ்டம், கொஞ்சும் மைனாக்களே, உருமி, மனம் கொத்திப் பறவை, கிருஷ்ணவேணி பஞ்சாலை, மயங்கினேன் தயங்கினேன், தடையறத் தாக்க, இதயம் திரையரங்கம், பொற்கொடி பத்தாம் வகுப்பு, தூதுவன், மறுபடியும் ஒரு காதல், முரட்டுக்காளை, சகுனி, நான் ஈ, நாளை உனது நாள், பில்லா 2, மாலைப் பொழுதில் மயக்கத்திலே, சுழல், ஆசாமி, அட்டக்கத்தி, யுகம், மதுபானக்கடை, மிரட்டல், தூயா, அதிசய உலகம், ஸ்ரீராமகிருஷ்ணர் தரிசனம், பாளையங்கோட்டை, பனித்துளி, எப்படி மனசுக்குள் வந்தாய், நான், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், ஆச்சர்யங்கள், பூலம்பட்டி, ஏதோ செய்தாய் என்னை, 18 வயசு, பெருமான், அவன் அப்படித்தான், அணில், முகமூடி, அரக்கோணம், கள்ளப்பருந்து, மன்னாரு, பாகன், சுந்தரபாண்டியன், துள்ளி எழுந்தது காதல், நெல்லை சந்திப்பு, சாருலதா, சாட்டை, தாண்டவம், இங்கிலீஷ் விங்கிலீஷ், செம்பட்டை, புதிய காவியம், சௌந்தர்யா, மாற்றான், அமிர்தயோகம், கோயம்பேடு பேருந்து நிலையம், திருத்தணி, பீட்சா, வவ்வால் பசங்க, மயிலு, சக்ரவர்த்தி திருமகன், ஆரோகணம், யாருக்குத் தெரியும், அசைவம், அஜந்தா, போடா போடி, துப்பாக்கி, காசிக்குப்பம், ம்மாவின் கைப்பேசி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நீர்ப்பறவை, கை, கும்கி, நீதானே என் பொன்வசந்தம், கள்ளத்துப்பாக்கி, ஹிட்லிஸ்ட், லொல்லுதாதா பராக் பராக், சட்டம் ஒரு இருட்டறை, கண்டுபுடிச்சிட்டேன், நானே வருவேன், பயபுள்ள, பாரசீக மன்னன், பத்தாயிரம் கோடி

* தமிழ் பேசிய ஆங்கிலப் படங்கள்

பாதாள உலகம், போதிதர்மன், குரு-2, ருத்ரபூமி, கால பைரவன், தி உமன் இன் பிளாக், மம்மி வெர்சஸ் சிந்துபாத், மர்மதேசம் 2, க்ராஸ் பாயிண்ட், பேட்டில் ஷிப் அவெஞ்சர்ஸ், ப்ளாக் டிராகன், தி ரெய்ட், ப்ரோமிதியோஸ், கோஸ்ட் சன், பிராண 2, டோட்டல் ரீகால், ஸ்ட்ரீட் டான்ஸ், வாம்பையர் ஹண்டர், பேட்மேன் 3, தற்காப்பு படையும் கூலிப்படையும், ஐஸ் ஏஜ் 4, எக்ஸ்பெண்டபிள் 2, ஸ்கைபால், லைப் ஆப் பை, இவன் நினைத்ததை முடிப்பவன், தி அமேஸிங் ஸ்பைடர்மேன், கமாண்டோஸ் ஏகே 47

* தமிழுக்கு வந்த இந்தி படங்கள்


மன்மத ராணி, மாதுரி, சீக்ரெட் கேர்ள், காட்டுப்புலி, விவகாரம், கிளிக் 123, கோகுலத்தில் கண்ணன் (அனிமேஷன்), பேய் நிலா.

* தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தவை

மகாராணி, சினம், எங்கடா உங்க மந்திரி, ரகளை, யார், ஜக்கம்மா, சிங்க மகன், ராம ராஜ்யம், திருடன் திருடி, ஸ்ரீதர், அப்பு பப்பு, டைகர் விஷ்வா, சிறுத்தைப்புலி, வீரய்யா, அடங்காதவன், சிவாங்கி, சந்திரமவுலி, புல்லட் ராஜா, முரட்டு சிங்கம், பிசினஸ்மேன்.

* தமிழ் பேசிய மலையாள படங்கள்


அன்வர், ரதி நிர்வேதம், ராஜா போக்கிரிராஜா, நரசிம்மன் ஐ.பி.எஸ்., தில் தில் மனதில், புதுவை மாநகரம், செல்லத்தம்பி

* ஒரே ஒரு கன்னட படம்


கொருக்குப்பேட்டை கூலி

இப்படி சுமார் 145 நேரடி படங்கள், கிட்டத்தட்ட 65 டப்பிங் படங்களும் தமிழ் திரையுலகில் வெளிவந்திருந்தாலும், நடுவுலகொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, நண்பன், கலகலப்பு, வழக்கு எண் 18/9, நான் ஈ, சுந்தர பாண்டியன், துப்பாக்கி, கும்கி உள்ளிட்ட ஒரு டஜனுக்கு குறைவான படங்களே வசூல் ரீதியாக வெற்றி பெற்றவை என்பது கவனிக்கத்தக்க செய்தி மட்டுமல்ல... கவலைக்குரிய செய்தியும் ஆகும்!

யார் அதிகம்...?!

2012ம் ஆண்டில் அதிக படங்களில் நடித்த கதாநாயகர் எனும் பெருமையை ஜீவாவும், அதிக படங்களில் நடித்த நடிகைகள் எனும் பெருமையை அமலாபாலும், சுனைனாவும் தட்டி சென்றிருக்கின்றனர். அதேமாதிரி காமெடி நடிகர்களில் சந்தானம் 11 படங்களில் நடித்து முதல் இடத்தில் இருக்கிறார். 2012ம் அதிக படங்களுக்கு இசையமைத்தவர் எனும் பெயரை இசைஞானி இளையராஜா தட்டிச்சென்றிருக்கிறார். 

அதிகப்பட நடிகர் நடிகைகள், காமெடியன்கள், இசையமைப்பாளர்கள் விவரம் வருமாறு:

நடிகர்கள்


* ஜீவா - மூன்று படம் (நண்பன், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம்)

* விஜய் - இரண்டு படம் (நண்பன், துப்பாக்கி), ஸ்ரீகாந்த் - இரண்டு படம் (நண்பன், பாகன்), விமல் - இரண்டு படம் (இஷ்டம், கலகலப்பு), சிவகார்த்திகேயன் - இரண்டு படம் (மெரீனா, மனம் கொத்தி பறவை), விஜய் சேதுபதி - இரண்டு படம் (பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்)

நடிகைகள்

* அமலாபால் - மூன்று படம் (வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் என் கற்பனைகள்)

* சுனைனா - மூன்று படம் (பாண்டி ஒலி பெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை), காஜல் அகர்வால் - இரண்டு படம் (மாற்றான், துப்பாக்கி), ஓவியா இரண்டு படம் (மெரினா, கலகலப்பு), லட்சுமி மேனன் - இரண்டு படம் (சுந்தரபாண்டியன், கும்கி), பிந்து மாதவி - இரண்டு படம் (கழுகு, சட்டம் ஒரு இருட்டறை)


காமெடியன்கள்


* சந்தானம் - 11படம்

* பரோட்டா சூரி - 8 படம்

* எம்.எஸ்.பாஸ்கர் - 3 படம்

* சத்யன் - 2 படம்


இசையமைப்பாளர்கள்


* இளையராஜா - 5 படம் (செங்காத்து பூமியிலே, மயிலு, அஜந்தா, நீதானே என் பொன்வசந்தம்)

* ஹாரிஸ் ஜெயராஜ் - 4 படம் (நண்பன், ஒரு கல் ஒரு கண்ணாடி, மாற்றான், துப்பாக்கி)

* யுவன் சங்கர் ராஜா - 3படம் (வேட்டை, பில்லா-2, கழுகு)


திரையுலக திருமணங்கள்

2012-ல் சுமார் 25 திரையுலக ஜோடிகளுக்கு கெட்டி மேள சத்தம் கேட்டிருக்கிறது. அதன் விபரம் வருமாறு:

ஜன-30 - எங்கேயும் எப்போதும் டைரக்டர் சரவணன் திருமணம்

பிப்-3 - நடிகை ஜெனிலியா - ரித்தேஷ் தேஷ்முக் திருமணம்

மார்-11 - நடிகை ரீமாசென் - ஷிவ்கரண் சிங் திருமணம்

மே-11 - பிரசன்னா - சினேகா திருமணம்

மே-16 - நடிகை உதயதாரா - ஜூபின் ஜோசப் திருமணம்

மே-23 - வெயில் பிரியங்கா - டைரக்டர் லாரன்ஸ் ராம் திருமணம்

ஜூன்-4 - ராம்சரண் - உபாசனா திருமணம்

ஜூன்-16 - நடிகை சாயாசிங் - அனந்தபுரத்து வீடு கிருஷ்ணா திருமணம்

அக்-24 - நடிகை உதய்கிரண் - விஷிதா திருமணம்

அக்-27 - நான் ஈ நானி - அஞ்சனா திருமணம்

நவ-15 - தமிழ்படம் சிவா-ப்ரியா திருமணம்

டிச-14 - நடிகை வித்யாபாலன் - சித்தார்த் ராய் கபூர் திருமணம்


தமிழ் திரையுலக இழப்புகள்! இறப்புகள்!!

ஜன-1 - அன்னக்கிளி டைரக்டர் எஸ்.தேவராஜ் (81 வயது)

ஜன-30 - காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் (72 வயது)

பிப்-20 - பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி (84 வயது)

பிப்-22 - வாளமீன் பாடல் புகழ் முத்துராஜ் (34 வயது)

ஏப்-2 - பழம்பெரும் நடிகை சரோஜா (79 வயது)

மே-1 - பழம்பெரும் நடிகை சண்முகசுந்தரி (75 வயது)

ஜூன்-14 - பழம்பெரும் நடிகர் காகா ராதா கிருஷ்ணன் (86 வயது)

ஜூன்-19 - தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. (74 வயது)

ஆக-7 - காமெடி நடிகர் என்னத்த கண்ணையா (87 வயது)

செ-10 - தயாரிப்பாளர் ஏ.வி.எம்.முருகன் (77 வயது)

செ-16 - காமெடி நடிகர் லூஸ் மோகன் (84 வயது)

செ-18 - குணச்சித்திர நடிகர் பெரியகருப்பு தேவர் (75 வயது)

செ-23 - பொண்டாட்டி தேவை நடிகை அஸ்வனி (43 வயது)

செ-24 - மலையாளர் நடிகர் திலகன் (77 வயது)

அக்-12 - செம்பட்டை பட நாயகன் திலீபன் (32 வயது)

அக்-23 - மாலைப்பொழுதின் மயக்கத்திலே நடிகை சுபா புட்லோ (21 வயது)

என எண்ணற்ற கலைஞர்களின் இறப்புகளையும், இழப்புகளையும் 2012-ல் தமிழ் திரையுலகம் சந்தித்துள்ளது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.


தேசிய விருதுகள் - பிற விருதுகள்


* சிறந்த பொழுதுபோ்கு படத்திற்கான தேசிய விருதினை அழகர்சாமியின் குதிரை பெற்றது. அதேமாதிரி சிறந்த பிராந்திய மொழி திரைப்பட விருதினை வாகை சூட வா திரைப்படம் பெற்றது.

* சிறந்த துணை நடிகர் விருதினை நடிகர் அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை படத்திற்காக பெற்றார்.

* சிறந்த அறிமுக இயக்குனர் விருதினை ஆரண்யகாண்டம் திரைப்படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவும், அதே தமிழ்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதினை எடிட்டர் பிரவீனும் பெற்றுக்கொண்டனர். இதே நேரத்தில் டர்ட்டி பிக்சர்ஸ் இந்தி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை தமிழ்நடிகை வித்யாபாலன் பெற்று கொண்டதும் விசேஷம்!

* தேசிய விருதுகள் தவிர ஜப்பானில் நடந்த ஒசாகா படவிழாவில் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் சிறந்த படத்துக்கான விருதை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


2012-ல் தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வுகள்!

* 2012-ல் ஜனவரி மாதத்தில் 1 1/2 கோடி கடன் பாக்கி பிரச்னையில் நடிகை புவனேஸ்வரி மீது வழக்குபதிவு- ஐகோர்ட் உத்தரவு, சேவை வரிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை, தானே புயல் நிவாரணப்போராட்டம் - தங்கர் பச்சான் கைது, விஜய்யின் நண்பன் படத்திற்கு இந்திய ஜனநாயக கட்சி எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம்.

* 2012-ல் பிப்ரவரி மாதம் நடிகர் கமல் முதல்வர் ஜெயலலிதாவிடம் ரூ.15 லட்சம் நிவாரணம், கேப்டன் விஜயகாந்தின் நண்பரும், பிரபல படஅதிபருமான இப்ராஹிம் ராவுத்தர் அதிமுக.வில் இணைந்தது, நயன்தாரா தானே புயல் நிவாரணமாக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியது. மத்திய அரசின் சேவை வரிவிதிப்புக்கு இந்தியா முழுவதும் திரையுலகினர் ஆர்ப்பாட்டம், தொழிலதிபர் ஆஞ்சநேயன் மீது நடிகை அனன்யாவின் தந்தை திருமண புகார் செய்தது உள்ளிட்டவை பிப்ரவரி ஹைலைட்!

* மார்ச் 2012-ல் தமி்ழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் மோதல், நடிகை அல்போன்சாவின் காதலர் வின‌ோத்குமார் தற்கொலை உள்ளிட்டவைகள் மார்ச் மாதத்தில் நடந்‌தவை.

* ஏப்ரல் 2012-ல் திரைப்பட தொழிலாளர்கள் - தயாரிப்பாளர்கள் பேச்சு, உயர்மட்டக்குழு அமைப்பு! பிலிம் சேம்பர் புதிய கட்டடம் முதல்வர் திறப்பு!

* மே - 2012-ல் காஞ்சி சங்கராச்சாரியர் மீது நித்தியானந்தா புகழ் நடிகை ரஞ்சிதா வழக்கு, நடிகர் சங்கதலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு!

ஜூன் - 2012-ல் பெப்சி தொழிலாளர் அமைப்பில் இயக்குனர் அமீர் தலைவரானார்.

ஜூலை - 2012-ல் நடிகர் சங்க இடக்குத்தகை தொடர்பாக அதன் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு கோர்ட்ட நோட்டீஸ்! நடிகர் மகத் - மோகன் பாபுவின் வாரிசு மனோஜ் மஞ்சு மது விருந்தில் மோதல், நடிகை ஊர்வசியின் சகோதரியும், காமெடி நடிகையுமான கல்பனா விவாகரத்து மனு தாக்கல்!

* ஆகஸ்ட் - 2012-ல் தாண்டவம் தடை தள்ளுபடி! மோசடி வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது, நடிகை சுஜிபாலா தற்கொலை முய‌ற்சி!

* செப்டம்பர் - 2012-ல் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் மீது பணமோசடி வழக்கு மற்றும் கைது, வனயுத்தம் படத்தை வீரப்பன் மனைவி முத்துலெட்சுமிக்கு காட்ட கோர்ட் உத்தரவு!

* அக்டோபர் - 2012-ல் சம்பளபாக்கி திருத்தணி பட அதிபர் மீது நடிகர் ராஜ்கிரண் வழக்கு, நடிகர் கமல் தலைமையில் சென்னையில் 3நாட்கள் பிக்கி மாநாடு, நடிகர் சங்கத்திற்கு எதிராக சிவில் வழக்கு தொடர கோர்ட் அனுமதி.

* நவம்பர் - 2012-ல் மனஅழுத்த நோய் காரணமாக நடிகை பானுப்ரியா மருத்துவமனையில் அனுமதி, துப்பாக்கி பட விவகாரம், விஜய் வீட்டு முன்பு முஸ்லீம் அமைப்புகள் போராட்டம், துப்பாக்கி - இஸ்லாமிய சர்ச்சை காட்சிகள் நீக்கம், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு - வேலைக்காரி கைது, நடிகை ஸ்வேதா மேனன் பிரசவ காட்சி படப்பிடிப்பு - ஒளிப்பதிவாளர், இயக்குனர் மீது வழக்கு!

* டிசம்பர் - 2012-ல் விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழா மதுரை, கோவை, சென்னை நகரங்களில் ஒரே நாளில் கமல் ஆஜர், விஸ்வரூபம் டி.டி.எச்.-ல் திரையிட கமல் முடிவு, அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்புகள். சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.50 லட்சம் நிதியுதவி, சென்னை திரைப்பட விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப், பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் தற்கொலை, விஸ்வரூபம் டி.டி.எச்., விவகாரம் கமல்-உரிமைக்குரல், உறுதிக்குரல்!

இப்படி 2012ம் ஆண்டின் தமிழ்த்திரையுலகம் வம்பு வழக்குகளிலும், தடை-தாமதங்களிலும், இறப்புகள்-இழப்புகளிலும் சிக்கி தவித்து இருந்தாலும், சாதனைகளுக்கும், மகிழ்ச்சிக்கும் குறை ஏதும் இல்லாமல் முடிந்தது. 2013-ம் ஆண்டில் தமிழ்த்திரையுலகில் சாதனைகளும், சந்தோஷங்களும் மட்டுமே நிரம்பி இருக்க தமிழ் சினிமா ரசிகர்களுடன் வாழ்த்தும் தினமலர்.

உலகின் உள்ள பல நாடுகளின் புது வருடம்!! ஒரு பார்வை....










உலகின் ஒவ்வொரு பகுதியிலும் புது வருடம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகின்றன. ஜனவரி 1 புது வருடம் என்பது கிரிகேரியன் காலண்டர்படி உலகம் முழுவதும் வெகு பிரபலமாகக் கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே! கிறிஸ்து பிறந்து எட்டாவது நாளாக வரும் ஜனவரி 1 அன்று தான் அவருக்கு நாமகரணம் சூட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. மேற்கத்திய நாடுகளிலேயே, வரலாற்றில் பல தினங்கள் - டிசம்பர் 25, மார்ச் 1, செப்டம்பர் 1 - என புது வருடம் பின்பற்றப் பட்டு வந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால் நவீன கால கட்டத்தில் ஜனவரி 1 புது வருடம். அதேபோல் கொண்டாட்ட முறைகளும், புது வருட சம்பிரதாயங்களும் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகிறது.















பிரிட்டனில் புது வருடம்




ஜனவரி 1 நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு முதன் முதல் வீட்டுக்கு வரும் ஆண்தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார் என்று நம்புகிறார்கள். அந்த ஆண் வரும் பொழுது பணம், ப்ரெட் என்று அந்தக் குடும்பத்துக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொண்டு வருவார். அப்படிக் கொண்டு வந்தால், அந்த வருடம் முழுவதும் அந்தக் குடும்பத்துக்கு எல்லா வளமும் கிட்டும் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் ஒரு பெண்ணோ, செம்பட்டை முடிக்காரரோ அச்சமயத்தில் வந்தால், அதைக் கெட்ட சகுனமாகக் கருதுகின்றனர்




சீனாவில் புது வருடம்நமது நவராத்திரியைப் போல் சீனர்கள் புது வருடத்தை ஒன்பது நாட்கள் கொண்டாடுகிறார்கள். சீனப் புது வருடம் - யுவான் டான் - ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20க்குள் வரும். நமது ஊரில் இருப்பது போன்று அங்கும் சந்திரனின் சுழற்சியைக் கொண்டு கணக்கிடுவதால், குறிப்பிட்ட ஆங்கிலத் தேதியில் வரும் என்பதற்கில்லை. புது வருடம் அதிர்ஷ்டம், சந்தோஷம், செல்வம் என அனைத்தையும் கொணரும் என்றே சீனாவிலும் நம்புகிறார்கள். அன்றைய தினம் பெரிய அளவில் பேரணி, அணிவகுப்புகள் சாலைகளில் நடக்கும். அதை லட்சக்கணக்கான மக்கள் நின்று கண்டுகளிப்பார்கள். சீனாவைப் பொறுத்தவரை சிங்கமும், ட்ராகன் என்றழைக்கப்படும் கடல் நாகமும்தான் முக்கிய இடம் பெறும். புது வருடத்திலும் இந்த விலங்குகள் கொண்ட தோரணமும், ஆடை அலங்காரமுமே எங்கும் நிறைந்திருக்கும்.




கடல் நாகம் தங்களுக்கு நீண்ட ஆயுளையும், செல்வத்தையும் வழங்குவதாக அவர்களது நம்பிக்கை. அரக்கர்களுக்கு சப்தம் பிடிக்காது என்பதால், அவர்களை விரட்டியடிப்பதற்காக சீனாவெங்கும் பட்டாசு வெடித்துப் பட்டையைக் கிளப்புவார்கள். நமது ஊரில் இருக்கும் மஞ்சள் செடியைப் போன்று கடைவீதியிலிருந்து எல்லாரும் கும்காட் மரத்தை, புது வருடத்தன்று வீட்டுக்கு வாங்கி வந்து அலங்கரிப்பார்கள். பெரியவர்கள் சிவப்பு கவரில் பணம் வைத்து, சிறியவர்களுக்குக் கொடுத்து ஆசி வழங்குவார்கள்


ஜெர்மனியில் புது வருடம்ஜெர்மானியர்கள் ஜனவரி 1 அன்றே புது வருடத்தை கொண்டாடுகிறார்கள். இவர்கள் வீடுகளில் உருக்கிய ஈயத்தை, தண்ணீரில் விட்டு அது என்ன வடிவத்துக்கு மாறுகிறதோ அதைக் கொண்டு அந்த வருடத்திய பலனைச் சொல்வார்கள். உதாரணத்துக்கு அது இதய வடிவத்துக்கோ அல்லது வட்டமான மோதிர வடிவத்துக்கோ மாறினால், அந்த வீட்டில் கெட்டி மேளம் நிச்சயம். கப்பல் வடிவமென்றால் பிரயாணம் உண்டு, பன்றி உருவம் என்றால் சாப்பாட்டுக்கு அந்த வருடம் முழுவதும் பஞ்சம் இருக்காது இத்யாதி இத்யாதி. அன்று சாப்பாட்டில் கெண்டை மீன் கண்டிப்பாக இருக்கும். சாப்பிட்ட பிறகு ஒவ்வொருவரும் தங்கள் தட்டுகளில் சாப்பாட்டை நள்ளிரவு வரை கொஞ்சம் மிச்சம் வைப்பார்கள். அதனால் அந்த வீட்டில் சாப்பாடு நன்றாகத் தங்கும் என்று ஐதிகம்.




கிரேக்கர்களின் புது வருடம்ஜனவரி 1 அன்று புது வருடத்துடன் புனித பேஸில் அவர்களின் நினைவு தினத்தையும் கிரேக்கர்கள் கொண்டாடுகிறார்கள். புனித பேஸில் ஏழைகளுக்கு உதவிய மகான், இரக்க குணமுடையவர். இவர்கள் கேக் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். கேக்கை சாப்பிடும்பொழுது மட்டும் கெடுபிடியான விதிமுறைகள் இருக்கும். அதாவது முதல் துண்டு புனித பேஸிலுக்கு, இரண்டாவது துண்டு வீட்டுக்கு, மூன்றாவது முதியவர்களுக்கு, பிறகு குழந்தைகளுக்கு, அதன்பின் வர முடியாதவர்களுக்கு என்று முறைப்படி கொடுத்து உண்பார்கள். அதே போல் வீட்டு செல்லப் பிராணிகளுக்கும் சில துண்டுகள் ஒதுக்கப்படும். அதிர்ஷ்டம், செல்வம், நீண்ட ஆயுள் என எல்லாவற்றையும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் வருகையை வைத்துக் கணிக்கிறார்கள்.




ஜப்பானில் புது வருடம்

ஜப்பானியர்கள் தங்கள் புது வருடத்தை - ஓஷாகட்சூ - ஜனவரி 1 அன்றே கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கென்று இருக்கும் புது வருட சம்பிரதாயத்தையே பின்பற்றுகிறார்கள். அரக்கனை விரட்ட புது வருடத்தன்று வைக்கோலை வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிடுகிறார்கள். எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பார்களாம். 108 திவ்யதேசம் மாதிரி, ஜப்பான் கோயில்களில் 108 முறை டணால் டணால் என்று மணியை ஓங்கி அடிப்பார்களாம்.




இந்த மாதிரி சம்பிரதாயங்களால் சந்தோஷம் குடிகொள்ளும் என்று ஒரு நம்பிக்கை. அதேபோல் கடல் நண்டு பொம்மைகள் செய்து வீட்டை அலங்கரிப்பார்கள். நண்டின் வளைந்த முதுகு முதுமையைக் குறிக்கும். நீண்ட ஆயுள் வேண்டுமென்று புத்த பகவானை வேண்டிக் கொள்வார்கள்.




ஆக, உலகம் முழுவதும் மக்களுக்கு நீண்ட ஆயுள், செல்வம், மகிழ்ச்சி ஆகியவைதான் புது வருட பிரார்த்தனைகளில் பிரதான இடத்தைப் பிடிக்கின்றன.

பொருளாதாரச் சரிவு இல்லாமல், போர் இல்லாமல், பசி, பிணி இல்லாமல் சுபிட்சமான வாழ்வு 2013ல் அமையும் என்பது பல நாட்டு ஜோசியர்களின் கணிப்பு!











தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Get your Job in India Through Top Job Search Engines....

Are you Searching for Jobs ? Tired of current Job ? You ar just a click away from getting job of you choice. Gone are the days when you need to read 2 pages in news paper to read job information. No today in the Internet world , you just register on various Job Search Engines , upload your resume , find job listings , etc. There are 100 job portals in india and international jobs portals where you can search jobs and get job information. Here on this blog In order to get you JOB. Here are the links to famous Job Search Engines of india. / Job portals India.



Job Search Engine / portal 1 : Naukri 
www.Naukri.com Naukri is the Hindi word for JOB . Naukri.com is India's No.1 Job portal website.
 

Job Search Engine / portal 2 : Linked Job

http://www.linkedzone.com/ 

Job Search Engine / portal 3 : Times Jobs

http://www.timesjobs.com/ 

Job Search Engine / portal 4 : Jobs Ahead

http://www.jobsahead.com/ 

Job Search Engine / portal 5 : Placement India

http://www.placementindia.com/ 

Job Search Engine / portal 6 : Monster India

http://www.monsterindia.com/

Job Search Engine / portal 7 : Job street India
http://in.jobstreet.com/ 

Job Search Engine / portal 8 : Yahoo India Jobs
 
http://in.jobs.yahoo.com/
 

Job Search Engine / portal 9 : Career India

http://www.careerindia.com/ 

Job Search Engine / portal 10 : Rediff Job
Search http://jobsearch.rediff.com/



Job Search Engine / portal 11 : Shine Job
Search http://www.shine.com/

Job Search Engine / portal 12 : Jobtex Job
Search http://www.jobext.com

Job Search Engine / portal 13 : Faayda Job
Search http://www.faayda.com/

Job Search Engine / portal 14 : Bixee Job
Search http://www.bixee.com/


Job Search Engine / portal 15 : Ebharatjobs
Search http://www.ebharatjobs.com/


Job Search Engine / portal 16 : india.recruit.net Job
Search http://india.recruit.net/


Job Search Engine / portal 17 : Careerjet Job
Search http://www.careerjet.co.in


Job Search Engine / portal 18 : Indeed Job
Search http://www.indeed.co.in/


Please follow the Useful Links for Resume Writing Tips( PPT's) 

Occupational Wellness: Resume Writing Tips
Click Here to download Free Writing Resume Tips PPT

Resume Writing for Technical Majors PPT
Click Here to download Free Writing Resume Tips PPT

Resume Writing Guidelines PPT
Click Here to download Free Writing Resume Tips PPT

Learn HOW TO WRITE A RESUME ppt
Click Here to download Free Writing Resume Tips PPT

Resume Writing Tips. Make your resume stand out
Click Here to download Free Writing Resume Tips PPT

Resume Writing Techniques & Strategies
Click Here to download Free Writing Resume Tips PPT

Free Tips about Developing Your Resume to get the right job - Power Point File
Click Here to download Free Writing Resume Tips PPT

Basic CV AND RESUME WRITING Guide
Click Here to download Free Writing Resume Tips PPT

Know Basic Resume Writing Skills to get screened for interview round
Click Here to download Free Writing Resume Tips PPT

Resume Writing Techniques to get selected
Click Here to download Free Writing Resume Tips PPT

Your Resume The Road to Success How to Prepare an Effective Resume to get the right job
Click Here to download Free Writing Resume Tips PPT

Writing a Curriculum Vitae & Converting your C.V. to a Resume Power Point File
Click Here to download Free Writing Resume Tips PPT

PPT on Writing an Effective Resume
Click Here to download Free Writing Resume Tips PPT

RESUME WRITING Presenting Yourself on Paper
Click Here to download Free Writing Resume Tips PPT

Resume Writing for Young Professionals
Click Here to download Free Writing Resume Tips PPT

Free tips and tricks about Writing a Great Resume ppt
Click Here to download Free Writing Resume Tips PPT

Tips for Writing a High Impact Resume to get interview call
Click Here to download Free Writing Resume Tips PPT





By: M.Ajmal Khan.

ஆங்கில மாதம் VS தமிழ் மாதம் பிறந்தது எப்படி? ஒரு சிறப்பு பார்வை...


2013 new calendar in english Stock Photo - 14211799
ஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி,பிப்ரவரி என துவங்குகின்றன.தமிழ் மாதம் என்பது சித்திரை,வைகாசி எனத் துவங்குகின்றன.இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.
ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் ஒரு காரண பெயர் சுட்டும் விளக்கம் உள்ளது. அதைப்பற்றி இங்கு கீழே காண்போம். 


ஜனவரி: லத்தீன் மொழியில் `ஜனஸ்’ என்றால் கடவுள் என்று அர்த்தம். இதிலிருந்து உருவாகியதுதான் ஜனவரி. கடவுளுக்குரிய மாதம் என்பது இதன் பொருள்.

பிப்ரவரி: லத்தீன் சொல்லான பெப்ருவேரியஸ் என்ற சொல்லில் இருந்து பிப்ரவரி தோன்றியது. பெப்ருவர் என்றால் `பரிவுத்தன்மை’ என்று அர்த்தம்.

மார்ச்: மார்ஸ் என்ற ரோமானிய போர்க் கடவுளின் பெயரைக் கொண்டு மார்ச் மாதம் தோன்றியது.

ஏப்ரல்: ஏப்ரலிஸ் என்ற லத்தீன் சொல்லில் இருந்து ஏப்ரல் தோன்றியது. ஏப்ரலிஸ் என்பதற்கு `புதிய ஆரம்பம்’ என்று பொருள்.

மே: ரோமானிய கடவுளான மெர்குரியின் தாயாரான மேயா (விணீவீணீ) என்ற பெயரில் இருந்து மே வந்தது. மேயா என்றால் செழிப்பிற்கான தேவதை என்று பொருள் சொல்லலாம்.

ஜுன்: ஜுனோ என்ற ரோமானிய இளமைக் கடவுளின் பெயரில் இருந்து ஜுன் வந்தது.

ஜுலை: ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தில் பிறந்ததால் இந்த பெயர் வந்தது.

ஆகஸ்டு: ரோமானிய சக்கரவர்த்தி அகஸ்டஸ் சீசர் என்பவரை பெருமைப்படுத்த இந்த பெயர் சூட்டப்பட்டது.

செப்டம்பர்: ரோமானிய காலண்டர்படி மார்ச் மாதத்தில்தான் ஆண்டு ஆரம்பமானது. அந்த கணக்குப்படி பார்த்தால் `செப்ட்’ என்றால் ஏழு என்று அர்த்தம். 7-வது மாதமாக இது உள்ளதால் செப்டம்பர் என்று ஆனது.

அக்டோபர்: ரோமானிய கால்ண்டர்படி இது 8-வது மாதம். அக்டோ என்றால் லத்தீனில் 8 என்று அர்த்தம் ஆவதால் அக்டோபர் என்று பெயர் வந்தது.

நவம்பர்: லத்தீன் மொழியில் நவம் என்றால் 9 என்று பொருள். இதனால் இப்பெயர் வந்தது.

டிசம்பர்: ரோமானிய காலண்டர்படி இது 10-வது மாதம். டிசெட் என்றால் லத்தீன் மொழியில் 10 என்று அர்த்தம் ஆகும்.

சூரியன் செல்லும் ஆகாயப்பாதையை சமமாக 30 பாகைகள் கொண்ட 12 பாகங்களாகப்பிரித்து அவற்றிற்கு இராசிகள் என்று பெயரிட்டுள்ளோம். ஆரம்பமாக 0 பாகையைக்கொண்டு மேடம்இடபம்மிதுனம்கடகம்கன்னிதுலாம்விருச்சிகம்,தனுமகரம்கும்பம்மீனம் என்று பன்னிரண்டு இராசிகளும் தொடர்ந்து 360 பாகையுள்ள நீள்வட்டமாக முடியும் இடத்தில் மீண்டும் மேட இராசி தொடங்கும். ஒரு இராசியில் சூரியன் சஞ்சரிக்கும் கால அளவை ஒரு தமிழ் மாதம் ஆகும்.

அப்படியென்றால் ஏன் எல்லா தமிழ் மாதங்களும் ஒரே அளவு நாட்களைக்கொண்டதாக இல்லை என்று கேட்கிறீர்களா?
சூரியன் சந்திரன் சஞ்சரிக்கும் இந்த பாதை விண்வெளிப்பாதை (Zodiacal Path) என்று அழைக்கப்படுகின்றது. இதன் நடுவில் இருப்பது விண்வெளி மத்திய ரேகை (Celestial Equator)ஆகும். இந்தப்பாதையை சூரியன் வடக்கு நோக்கிக் கடக்கும் காலம்உத்தராயண காலம் என்ற ஆறு மாதங்களாகும். இதே போல தெற்கு நோக்கிக்கடக்கின்ற காலம் தட்சிணாயன காலம்என்ற ஆறு மாதங்காளாகும். ஆடிப்பிறப்புடன் ஆரம்பமாகும் தட்சிணாயனம் தைப்பொங்கலில் முடிவடைகின்றது. இவ்வாறு தைப்பொங்கலில் தொடங்கும் உத்தராயணம் அடுத்த ஆடிப்பிறப்பில் முடிவடைகின்றது.

 எங்களுடைய தமிழ்ப் பண்டிகைகளுக்கு எவ்வளவு வானியல் விஞ்ஞான அடிப்படை உள்ளது பார்த்தீர்களா?
தமிழ் மாதங்களின் கால அளவு சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரத்தையும் இவற்றில் ஏற்படும் வேறுபாடுகளையும் பொறுத்தது. சூரியனை பூமி சுற்றி வரும் பாதை ஒரு செவ்வையான வட்டப்பாதை அல்ல. இது ஒரு நீள்வட்டமான பாதை. இதனால் எப்போதும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரமும் ஒரே அளவாக இருப்பதில்லை. மார்கழி மாதத்தில் மிகவும் கிட்ட இருக்கும் சூரியன் ஆடியில் அதிக தூரத்துக்கு தள்ளிப்போய்விடும். அதிக பட்ச தூரத்தை பெரிஹீலியன்(perihelion) என்றும், குறைந்த பட்ச தூரத்தை அப்போகீலியன் (Apohelion)  என்றும் வானியல் விஞ்ஞானத்தில் கூறவார்கள். 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள இடைவெளி குறைந்த காலங்களில் பூமியின் வட்டப்பாதையில் உள்ள 30 பாகையைக் கடக்கும் நீளமும் குறையும். அத்தோடு சூரியனின் ஈர்ப்புச்சக்தியின் தாக்கத்தாலும், பூமியின் மையநோக்க இழுவையில் (Centripetal force) ஏற்படும் மாற்றத்தாலும் பூமியின் வேகமும் அதிகரிக்கும். இவ்வாறு குறைந்த தூரத்தை அதிக வேகத்தில் கடக்கும்போது அதற்காக பூமி எடுத்துக்கொள்ளும் கால அளவும் குறையும்.

இதேபோல சூரியனிலிருந்து பூமியின் தூரம் அதிகரிக்கும்போது இந்த 30 பாகையைக் கடக்கும் தூரமும் கூடும். அதேபோல பூமியின் மையநோக்க இழுவையும் குறைந்து பூமியின் வேகமும் குறையும். அப்பொழுது சூரியன் அந்தக் குறிப்பிட்ட இராசியைக் கடக்கும் தூரமும் அதிகரிக்க, அதற்கான கால அளவும் அதிகரிக்கும்.





இதனால்தான் தமிழ் வருடங்களில் வெவ்வேறு மாதங்கள் வெவ்வேறு அளவான நாட்களைக் கொண்டதாக இருக்கின்றன. இவையெல்லாம் வெறுமனே எழுந்தமானமான கணிப்புகள் அல்ல. இவற்றைக் கணிப்பதற்கென்றே பிரத்தியேகமான வானியற் கணிப்பு முறைகள் சைவ ஆகம நூல்களில் விரிவாக உள்ளன. தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றின் பெயரும்கூட எழுந்தமானமாக இல்லாமல் காரணப் பெயராக வானியல் விஞ்ஞானரீதியில் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. இந்த மாதங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த மாதங்களில் வரும் பௌர்ணமி முழு நிலவு தொடர்புறும் நட்சத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.

1. தை மாதம் என்னும் பௌஷ்ய மாதம் - பூச நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மகர இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 29 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

 2. மாசி மாதம்: என்னும் மக மாதம்- மக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கும்ப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

 3. பங்குனி மாதம் என்னும் பல்குணி மாதம்-பல்குணி என்னும் அத்த நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மீன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப் பகுதியாகும்.

4. சித்திரை மாதம் என்னும் சைத்ரா மாதம்- சித்திரை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மேட இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

 5. வைகாசி மாதம் என்னும் வைசாக மாதம் - விசாக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் இடப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

6. ஆனி மாதம் என்னும் ஜேஷ்டா மாதம் - கேட்டை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மிதுன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

7. ஆடி மாதம் என்னும் ஆஷாட மாதம்- அவிட்ட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற  மாதம். இது சூரியன் கடக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

8. ஆவணி மாதம் என்னும் சிரவண மாதம்- திருவோண நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் சிம்ம இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

9. புரட்டாதி மாதம் என்னும் பத்ரபாத மாதம்- உத்திரட்டாதி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற  மாதம். இது சூரியன் கன்னி இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

10. ஐப்பசி மாதம் என்னும் அசுவினி மாதம்- அசுவினி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் துலா இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

11. காரத்திகை மாதம் என்னும் கிருத்திகா மாதம்- கார்த்திகை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் விருச்சிக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

12. மார்கழி மாதம் என்னும் மார்கசீர மாதம்- மிருகசீரிட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் தனு இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். 

பெரும்பாலும் ஒரு மாதத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவேஅந்த மாசத்தின் பெயராக இருக்கும்.அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும்.

அனேகமாக சித்ரா நக்ஷத்திரத்தன்றுதான் சித்திரை மாசத்தில் பௌர்ணமி வரும்.அதனால் சித்திரை மாசம் என்றானது.
விசாக சம்மந்தமானது வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி.மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.
அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ.அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் ஆனுஷீமாசம்.தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.
ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு.பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின்.பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம்.இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி.இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.
ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும்.முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம்.அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம்.அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும்.இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.
ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு.பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று.அஷ்ட என்பது அட்ட என திரிந்தது.உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று.இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது எப்படியோ திரிந்து புரட்டாசி ஆயிற்று.
ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம்.அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.
க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்திகை.இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.
மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று.இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.
புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம்.புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.
மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமிய வருவதால் மாகி என்றாயிற்று.இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.
பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம்.இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும.அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.
இப்படி சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாதப்பெயர்களாக அமைந்துள்ளன.